சதீஸ் மனது கனத்தது, மனது முழுவதும் கோவம், மற்றவர்கள் காயப்படுத்திய கோவம் இல்லை, மனது முழுவதும் காரணமில்லா கோவம், மற்றவர்களை எப்படியும் காயப்படுத்தும் கோவம். ஏன் எதற்கு என்றால் சிறு வயதுக்கு செல்ல வேண்டும். அவனுக்குகேட்டது கிடைத்தது சிறு வயது முதலே அனால் முதல் தடவை கேட்கும் போது கிடைக்காது. கேட்டால் முடியாது, இல்லை என்ற பதிலும் பிறகு கிடைக்காது என தெரிந்து ஆசை விட்ட போது அவனுக்கு கிடைக்கும் ஆனால் அதில் அவனுக்கு நாட்டமிருக்காது.
சிறு வயதில் பொம்மையில் இருந்து படிப்பு வரை, MBA படிக்க வேண்டும் என்பது அவன் ஆசை ஆனால் பொறியியல் படித்து வேலைக்கு செல்லல வேண்டிய குடும்ப சூழல். தயங்கவில்லை இந்த வயதில் அவன் மற்றவர்கை விட யோசித்து செயல்பட்டான். வேலைக்கு சென்றான் அதுவும் அவனுக்கு பிடித்த வேலையை காத்திருந்து தேடாமல் பெற்றோருக்காக பிடிக்காத வேலையை உடனே தேடிகொண்டான். சமுதாயத்தில் அவன் மதிப்பு உயர உயர சமுதாயத்தின் மேல் அவனுக்குள்ள கோவமும் உயர்ந்தது சாதாரணமா இல்லாமல் இரண்டு மடங்காக.
காதல் என்றால் முகம் சுழிப்பவன், தன்னை எந்த பெண் வந்து நன் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்கிறது அந்த பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னவன், எந்த பெண்ணை பார்த்தாலும் காதலிக்கும் எண்ணம் வராதவன் அதுக்குக சினிமாவில் கடும் ஹீரோ போல எல்லாம் இல்லை சாதாரண பையன் தான் அவனுக்கும் தன ஒரு ஸ்பெஷல் என தோன்றியது இல்லை. அனல் அவளை பார்த்த முதல் நிமிடத்திலேயே தோன்றியது அவனுக்கு இவள் சம்திங் ஸ்பெஷல் என ஆனால் அதற்காக அவள் பின்னால் அலையாமல் படித்தான். அதற்கடுத்த சந்திப்புகள் அவனது மதிப்பை அவளிடமும் அவளைப்பற்றிய ஆவலை அவனிடமும் உயர்த்தின. எதிர்பார்க்க நேரத்தில் எதிர்பார்க்க நிமிடத்தில் அவனுக்கு தோழி ஆனால் அவள்.
நட்பு வளர்ந்தது கூடவே சமுதாயத்தின் மேலான ஒரு பயமும் சேர்ந்து.
என்னவோ தெரியவில்லை அவன் நண்பர்கள் அவனை வைத்திருந்த உயரத்துக்கும் அவன் மனதில் அவர்கள் தன்னை எவிததில் வைத்திருகின்றனர் என்ற நினைப்பிற்கும் சம்பந்தமே இருக்காது. எவரிடமும் நெருங்கி பழக மாட்டான் அனால் எலோரிடமும் உயிரை விட்டு பழகுவான். யாரையும் வீட்டிற்கு சேர்க்க மாட்டான் சிலர் விதிவிலக்கு ஆனால் அவர்களும் மற்றவர்களை போல மட்டுமே. பள்ளி முதல் கல்லூரி வரை ஒரு சிலரை தவிர எவருமே அவனியம் நெருங்கியது இல்லை. கார்த்திக் மட்டும் விதி விளக்கு மிக நெருக்கம்.
படிப்பை முடித்து வேலையை தேடினான், தோழியும் உடனிருக்க அவளை பார்த்தான், அவன் நினைத்தது நடந்தது, அவனிடம் காதலை அவளே சொன்னால் ஏற்றுக்கொள்ள தயங்கினான் மனதிற்குள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டது அவன் மனதுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. சில விசயங்களை அவளிடம் தெளிவு படுத்தி, பதில் பெற்று தொடங்கிய காதல் மூன்று வருடத்தில் முடிந்தது. கரணங்கள் தேவையில்லை மூண்டு வருடத்தில் வாழ்வில் சந்தோஷமான தருணங்களும் இருந்தன.
சாதரணமாக இருத்த சதீஸ் இன்று தன்னில் ஒரு ஹீரோ இருப்பதாய் உணர்ந்தான், தனக்கு உண்மையாய் இருக்கும்போது இருந்த சமுதாய பயம் தனக்கு பிடிக்காத வாழ்க்கையை தேர்ந்து எடுக்கும் போது கோவமாய் மாறி இருந்தது. முறிந்த காதல் முரிந்ததுதான் அதன் பின்னல் அவன் வாழ்க்கையை அவனுக்கு பிடித்தமாய் மாறி அவனுக்கு பிடிக்காத செயல்களை செய்து வாழும்போது மனது வலித்தது. இது அல்ல அவன் வாழ்க்கை ஆனால் அதை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம் என தெரியும் அவனுக்கு. தன்னை ஒரு சராசரி மனிதன் போல வள ச்ல்கிறார் எனும் போது சமுதாயத்தின் மேல் உள்ள கோவத்தை காட்ட வழியில்லாமல் தவிக்கிறான். கட்டு படுத்த ஆள் இல்லை, தன மனது மட்டுமே தன்னை கட்டுபடுத்துகிறது என நம்புகிறான்.
மனதின் கோவத்துக்கு பதில் தெரியாமல் மற்றுமொரு ஹீரோ உருவாகிறான், அவனுக்கு தெரியும் அவன் கேட்டது கிடைக்கும் ஆனால் காலம் தாழ்த்தி என்று ஆனால் அதற்க்கு காரணமான சமுதாயத்தை என்ன செய்ய?
தரம் தாழ்ந்து பிறந்தது அவன் தவறா? தரம் தாழ்ந்த அவனது தந்தை அவன் தவறா? சமுதாயத்தின் தரதிருக்கு வழாது அவன் தரத்திற்கு வாழ்வது அவன் தவறா? தரம் என்று ஒன்றை எதை வைத்து முடிவு செய்கின்றனர், தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லாத ஒன்று தரம் என்ற ஒன்றினால் தனக்கு நியமாய் கிடைக்க வேண்டியதை அடைய விடமால் தடுக்கும் போது சமுதாயத்தின் மேலும் அதை சார்ந்தவர் மேலும் கோவம் வந்தால் அதை புறிந்து கொள்ளாமல் ஏன் உனக்கு கோவம் வருகிறது என அனைவரும் கேட்க்கிறார்கள். கண்டிப்பாக இவனும் ஒரு ஹீரோதான்.......
தரம் என்று ஒன்று மட்டும் நிர்ணயிக்கப்படாமல் இருத்தல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹீரோ இவன் மட்டுமே......... அதைப்பற்றி கவலை இல்லாமல் தனது அடுத்த இலக்கு என்ன என யோசித்துக்கொண்டு இருக்கும் இவன்