Showing posts with label இதோ வந்துட்டேன். Show all posts
Showing posts with label இதோ வந்துட்டேன். Show all posts

Monday, June 14, 2010

இதோ வந்துட்டேன் மறுபடியும் வலையுலகத்துக்கு

இதோ வந்துட்டேன் மறுபடியும் வலையுலகத்துக்கு

அப்பப்ப கொஞ்சம் இடைவெளி விட வேண்டியது போய்டுது காரணம் எதுவும் இல்லீங்கோ எல்லாம் ஒரு சோம்பேறித்தனம்.  இவளவு நாள்ல பெருசா எதையும் பண்ணிடல, சில பல  நட்புகள் சில பல பிரிவுகள் கொஞ்சம் வேலை நிறைய செலவு என  வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு.

இனிக்கும் பெருசா எழுதி கிழிக்க போறது இல்லை சும்மா அள்ளி தெளிச்ச மாதிரி தோன்றாத எழுதறேன்.

இந்த வாரம் ஜாக்கி நடிச்ச (நம்ம ஜாக்கி இல்ல நம்ம ஜாக்கியோட தலை ஜாக்கி சான்) நடிச்ச கராத்தே கிட் படம் போனேன். தேவி தியேட்டர் கு பல நாள் கழிச்சு போனேன். தியேட்டர் மாறிடுச்சு ஆனாலும் நமக்கு செட் ஆகாது போல. படம் கொஞ்சம் மெதுவா போன மாதிரி இருந்தாலும் சூப்பரா இருந்துச்சு. வான் டாம் நடிச்ச ஒரு படம் நியாபகம் வந்துச்சு. பையன் அப்பன போலவே பின்னி பெடலெடுத்து இருக்கான்.
அந்த  attitude  சீன் ல ஒரு சிரிப்பு சிரிப்பான் பாருங்க சூப்பர். கதாநாயகிக்கு ஒரு கிச் கொடுத்துபுட்டு அப்புறம் பிரண்ட் என்று சொல்லிடறான். இதுவே தமிழ் படமா இருந்த ஒரு குத்து சாங் போட்டு  கடசில அவன் அம்மாவையும் ஜாகியையும் சேர்த்து வச்சுருபாங்க.

படம் முடிச்சு வேலைய வந்த ஒரு தம்மாதூண்டு  சந்துல வெளிய அனுபிச்சுடாங்க அங்க இருந்து வெளிய வரதுக்குள்ள போதும் போதும் என  ஆகிபோச்சு

இனிக்கு இது போதும் மீண்டும் நாளை பார்க்கலாம்