இன்னும் மூன்று மாதத்தில் நீங்கள் இல்லை என்றால் என்ன எல்லாம் செய்வீர்கள் என்று ஒரு todo லிஸ்ட் போட்டால் எப்படி இருக்கும். இந்த கேள்வியை இன்று பார்த்த இந்த வலைப்பூவில் பார்த்தேன் அதை பார்த்து எழுதிய பதிவு
கடந்த மாதம் இந்த கேள்வி கேட்கப்பட்டு இருந்தால் என்னலன்ன பதில்.
1. Ford Mustang கார் வாங்க வேண்டும்
2. எதாவது ஒருகம்பனிக்கு MD ஆகவேண்டும்
3.குடும்பத்தோடு ஒரு வாரம் ஊர் சுற்ற வேண்டும்
4.ஒரு நெடுந்தூர பயணம் மேற்க்கொள்ள வேண்டும் எனது காரில், அதில் தாஜ் மகாலை பார்க்க வேண்டும்
5.கல்லூரி நண்பர்களை ஒன்றிணைத்து சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
6. Australia மற்றும் Denmark செல்ல வேண்டும் ( டென்மார்க்கில் உள்ள எனது நண்பருடன் ஒரு நாளை கழிக்க வேண்டும் )
7. ஒரு முறையேனும் காதல் பண்ண வேண்டும்
8. ஒரு மாதமேனும் ஏதாவது ஒரு கல்லூரியில் MBA படிக்க வேண்டும்
9. எதாவது ஒரு வாலிபருக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது சாதிக்க சிறு துரும்பையோ கிள்ளி போட வேண்டும்
10. எனது வாழ்வில் என்னால்மறக்க முடியாத அளவுக்கு பணத்துக்காகவும் சொத்துக்க்காகவும் எங்களை துன்பப்படுத்தின எனது ஒரு உறவினரை எனது காலில் விழ வைக்க வேண்டும்
இதுவே இப்போது கேட்டால்
மூன்று மாதத்திற்கு அப்புறமும் இருக்க போராட வேண்டும் என்று பத்து முறை சொல்வேன். ஆமாம் எனது தேவை எனது குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் எப்போதும் தேவை. இந்த போராட்டத்திலேயே மேற்கொண்ட பத்து செயல்களையும் அடைந்து அதையும் மீறி பல செயல்களை அடையலாம் ஏன்று நினைக்கிறேன் .