Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Tuesday, December 28, 2010

ஊட்டி பயணத்திற்கு ஆலோசனை தேவை


திடீரென வரும் வெள்ளி அன்று ஊட்டி செல்லலாம் என முடிவெடுத்துள்ளோம்,வழக்கம் போல் எல்லோரும் செல்லும் இடங்களுக்கு செல்லாமல் இந்த முறை சிறிது வேறு இடங்களுக்கும் செல்லலாம் என நினைத்துள்ளோம், 

அவலாஞ்சி, சென்று அங்கிருந்து அப்பர் பவானி வரை சென்று மறுபடியும் திரும்ப முடிவெடுத்துள்ளோம் இதற்கு வன இலாகாவிடம் அனுமதி பெற வேண்டும், ஊட்டி சென்று அனுமதி கூறலாம் என நினைக்கிறோம், பதிவர்கள் எவரும் இதற்கு முன்னால் இங்கு சென்று வந்திருந்தால், அவர்களது ஆலோசனை தேவைப்படுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்திற்கு நண்பன் ஒருவன் துணையுடன் சென்று வந்தோம் அப்போது அவன் அனுமதி பெற்றுதந்தான். தற்போது அவன் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அவனிடம் உடனடியாக உதவி கேட்க முடியவில்லை. ஊட்டியில் வேறேதும் வித்தியாசமான அனைவரும் போகாத நல்ல இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.

சென்னையில் இருந்து காரில் வியாழன் காலை கிளம்புகிறோம், வெள்ளி சனி இரண்டு நாளும் ஊட்டியில்  இருக்க திட்டமிட்டுள்ளோம். 

வன இலாகா அனுமதிக்கு வேறு எதுவும் செய்ய வேண்டுமா என தெரியவில்லை, எங்கள் விருப்பம் இயற்க்கை காட்சிகளை பார்த்துவிட்டு திரும்பி விடுதல் மட்டுமே. வேறு எதுவும் ஆலோசனை இருந்தாலும் தெரிவிக்கவும். ஆலோசனை அளிக்க விரும்புபவர்கள் என்னை 9940685415  என்ற எண்ணிலும் dhans4all@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். 

Wednesday, December 22, 2010

பேருந்துப்பயணம்

கடந்த சில வாரங்களாக அடிக்கடி ஊருக்கு சென்று வந்ததால் பேருந்துப்பயணம் சாத்தியமாகியது. உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் முதலில் ஒரு வாரம் தனியார் ஆம்னி பேருந்தில் திருச்சி சென்று அங்கிருந்து கரூருக்கு மறுபடியும் பேருந்து மாறி சென்றேன்.  பத்து மணிக்கு கத்திப்பாராவில் அந்த நேரத்துக்கு வந்த பேருந்தில் எதில் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்ததோ அதில் ஏறினேன். அவர்களே தாம்பரத்தில் கொஞ்ச நேரம், பெருங்களத்தூரில்  வெகுநேரம் என நிறுத்தி பதினொன்றுக்கு கிளப்பினர். பெருங்களத்தூரில் கிளம்பும்போதே கோயம்பேட்டில் ஏறிய ஒருவர் சண்டை போட ஆரம்பித்தார், கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் வர அவர்கள் எடுத்தொக்கொண்ட நேரம் மூன்று மணிநேரம்  மேலும் அவர் கொடுத்தது ரூபாய் 300  ஆனால் நான் கொடுத்தது ரூபாய் 250  எனக்கப்புறம் தாம்பரத்தில் ஏறியவர்கள் இன்னும் இருபது குறைத்து கொடுத்தனர்.  கோயம்பேட்டில் ஏறினவன் கடுப்பாக மாட்டானா?  திருச்சி ஒரு வழியாக கலை ஐந்து மணிக்கு கொண்டு சேர்த்தனர், பேருந்தும் நம்ம அரசுப்பேருந்து போலத்தான் இருந்தது கொஞ்சம் அத விட பரவாயில்லை. திருச்சி வரை சாலை நன்றாக இருப்பதால் எந்த பேருந்தா இருந்தாலும் செல்லலாம் அசவுகரியமா இருக்காது.

திருச்சியில் இருந்து கரூருக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கிய உடனே பேருந்து கிடைத்தது, இரண்டு பேர் அமரும் இருக்கையில் முன் படிக்கட்டுக்கு அடுத்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தேன். நான் ஒரு முழுக்கை சட்டையும் அதன் மேல் ஒரு ஜெர்கினும் அணிந்திருந்ததால் குளிர் அடிக்கவில்லை தலைக்கு குல்லா வேறு. அங்கு அமர்ந்தால் தான் யாரும் அருகில் அமர மாட்டார்கள் ஏனென்றால் குளிர் காற்று பேருந்து வேகத்தில் மோசமாக அடிக்கும். கரூர் பேருந்து நிலையத்தில் அடையும் முன்னே வயிறு கலக்கியது. திருச்சி கரூர் சாலை (சாலை என்பதே கிடையாது) குளித்தலைக்கு பிறகு ஓரளவு இருக்கிறது. இவளவு மோசமான சாலை இன்னும் உள்ளதா என யோசிக்க வைத்தது. கரூர் பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்லும் நகர பேருந்தில் ஏறினேன். தனியார் சிற்றுந்து தான், உறுமி உறுமி கிளப்பவே பத்து நிமிடம் ஆகியது அடுத்த இரண்டாவது நிமிடத்தில் எனது வீட்டு பேருந்து நிறுத்தத்தில் இருந்தேன். டிக்கெட் வாங்கும்போது நன் இரண்டு  ரூபாய் கொடுக்க "மூணு ரூபா கொடு" என்றார் நடத்துனர். நான் இரண்டு ரூபாய் தான என கேட்க "அதெல்லாம் ஏத்தியாச்சு பிரைவேட் பஸ்ல மூணு ரூபா தான்" என சொல்ல அதற்குள் நான் இறங்கும் இடம் வந்ததால் கொடுத்துவிட்டு வந்தேன். 

அடுத்த முறை திரும்பி சென்னை வர அதுபோலவே பேருந்துப்பயணம். கரூர் திருச்சி அரசுப்பேருந்து கோயம்புத்தூரில் இருந்து வரும் பேருந்து அதனால் விரைவில் செல்லலாம் என நினைத்து நான் செல்ல ஓட்டுனர் உருட்டு உருட்டு என உருட்டினார். மூன்று மணி நேரமாக சென்று திருச்சியை அடைந்து இறங்கி சென்னை பேருந்தை தேடினேன். அந்த நேரம் பார்த்து தனியார் பேருந்து எல்லாம் முன்னூற்று ஐம்பது ரூபாய் கேட்க அரசுப்பேருந்து ஒன்று தான் நமக்கு வழி என பேருந்தை தேடினேன். அந்த நேரம் பார்த்து அரசு ஏசி வோல்வோ பேருந்து (நம்ம சென்னை வோல்வோ பேருந்து தான் ) வந்தது டிக்கெட்  பயண நேரம் ஐந்தரை  மணி நேரம் என எழுதியதை நம்பி நானும் அட்ஜஸ்ட் செய்து  அமர்ந்து சென்று விடலாம் என நினைத்து கிளம்ப. படு பாவி ஆறரை மணி நேரம் உருட்டினார்கள். இதுக்கு சாதாரண டீலக்ஸ் பேருந்தில் ஏறி இருக்கலாம் அவர்களே இதே நேரத்தில் தான் வருகிறார்கள்.  ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து . கத்திப்பாராவில் இருந்து வேளச்சேரிக்கு திருச்சி செல்ல கொடுத்த தொகையை விட அதிகமா ஆட்டோ கேட்கிறார்கள். ஒரு வழியாக வழியே சென்ற ஆட்டோவில் நூறு ரூபாய் கொடுத்து வந்து சேர்ந்தேன்.

அடுத்த முறை நேரடியாக கரூர் பேருந்தில் ஏறி விடலாம் என நினைத்து ஏறி அமர்ந்தால் பாதி தூரத்தில் நிறுத்தி எதோ லோட் லோட் என தட்டிக்கொண்டு இருந்தனர், ஒரு இரண்டு மணி நேர தட்டல்க்கு பிறகு ஒரு வழியாக கிளம்பி காலை ஏட்டு மணிக்கு கரூர் வந்து சேர்ந்தேன், என்ன கிளம்பினது இரவு எட்டு மணிக்கு. காரில் வந்தா ஐந்தரை மணி நேரமும், திருச்சி வழியாக தனியார் பேருந்தில் வந்தால் ஏழு மணிநேரமும் ஆகும் ஊருக்கு பனிரெண்டு மணிநேரப்பயணம்.  மறுபடியும் சிற்றுந்து அவர்களும் மூன்று ரூபாய் கேட்க ஏரிச்சலானது.  மறுபடியும் சென்னை வர அரசுப்பேருந்து இவர்கள் பரவாயில்லை பத்தரை மணிநேரம் சென்றனர். (வழியில் சின்ன லோட் லோட் தட்டல் மட்டுமே) ஆனால் அரசுப்பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றி உயிரை எடுக்கிறார்கள். துறையூரில் இருந்து எவ்வளவு பயணிகளை ஏற்ற முடியுமோ அவ்வளவு பயணிகளை இரண்டு சீட்டுக்கு நடுவில் உள்ள இடத்தில அமர வைத்து கல்லா கட்டுகிறார்கள். கைய கால நகத்த முடியல கொஞ்சம் மேல பட்டாலும் உடனேகீழ உட்கார்ந்து இருக்கவன் ஏன் மேல இடிக்கற என நம்மையே ஏசுகிறான். இந்த கொடுமையை எல்லாம்  சகித்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தா ஆட்டோகாரங்க கொள்ளை ஐயோ.

கரூருக்கு கடந்த மூணு தடவை அரசுப்பேருந்தில் சென்றேன் மூன்று தடவையும் பாதி வழியில் வண்டி நின்றுவிட "லோட் லோட் தட்டல்கள்" இரண்டு மணிநேரம் சகஜம். தனியார் நகர பேருந்தில் குறைந்த பட்ச கட்டணம் மூன்று ரூபாய். கேட்டால் வேனும்ன இறங்கிக்கோ என பதில்.  தனியார் ஆம்னி பேருந்தில் கொள்ளை. இதெல்லாம் வேணாம் என காரில் போலாம் என்றால் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் விலை ஏற்றம்.
பேருந்து நிலைமை ரொம்ப கவலைக்கிடம், கஷ்டப்பட்டு ஏறி உட்கார்ந்தா வெள்ளை சட்டை மட்டும் போட்டு போயிருந்தா அவ்வளவுதான் இறங்கும்போது உங்க வீட்ல காறி துப்புவாங்க. மூட்டபூச்சி எல்லாம் உங்க கூட ஏறி விழுந்து கடிச்சு விளையாடும். அதுவே அரசு எசி  பஸ் என்றால் ஒரு கம்பளி கொடுப்பாங்க  (அதக்கூட கேட்டுத்தான் வாங்கணும்) அத மட்டும் முகத்த மூடுற மாதிரி போர்த்திடாதீங்க அவ்வளவுதான் அப்புறம் நீங்க குளிர்ல நடுங்கினாலும் பரவல என்று நினைப்பீர்கள். துவைப்பது என்றால் என்ன என கேட்கும் அளவுக்கு சுத்தம்.




பந்த பாசம் எல்லாத்தையும் குறைத்து எதற்கும் கவலைப்படதவனாக தனியாக வாழ விரும்பும் என்னை இந்த அரசாங்கமும் உடன் சேர்ந்து பந்தம் பாசம் இல்லா மனிதனாக மாற்ற எல்லா முயற்சிகளை செய்கிறது. இனிஊருக்கு போவதற்கு நன்கு யோசித்து அவசியம் என்றால் மட்டுமே செல்கிறேன். போனில் பேசுவதையும் ஏர் டெல் முயற்சியால் குறைத்துவிட்டேன்.
நம்ம மாதிரி இன்னொருவரும் அனுபவப்பட்டு இருக்கிறார் இதைக்கூட படிங்க.... ஆகா நான் மட்டும் இல்லை என நினைக்கும்போது ஒரு அல்ப சந்தோசம்

இந்த குறைகளை எல்லாம் எங்கு புகார் கொடுக்க வேண்டும் என்ற விவரமும் தெரியவில்லை. என்ன பண்ண வெங்காயம் விலை ஏறிப்போச்சு என நினைத்த நம்ம பிரதமரே இப்போ கடிதம் எழுதும் வேலைய செய்ய ஆரம்பித்துவிட்டார், கடிதம் எழுதும்பழக்கம் நம்ம ஊரில் இருந்து டெல்லி வரை சென்றுவிட்டது. நாமும் முகவரி இல்லாம ஒரு கடிதத்தில் எல்லா குறைகளையும் எழுதி தபால் பெட்டில போட்டுடலாம். நம்ம மாதிரியே அதுவும் அட்ரெஸ் இல்லாம சுத்திகிட்டு இருக்கும்.  தேர்தலுக்காக வெய்டிங் தலைவரே. நீங்க குடுத்த டிவிலதான் நாங்க உங்கள பத்தின ஊழல் செய்திகள பாத்துகிட்டு இருக்கோம். அடுத்த முறை எல் சி டி  டிவி யா அப்கிரேட் பண்ணிக்கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும் 

Tuesday, November 9, 2010

மறுபடியும் ஒரு பயணம்

மறுபடியும் ஒரு பயணம் 

இந்த முறை கொல்கத்தாவை நோக்கி, வழக்கம் போல அலுவலக பயணம், மிக நெருக்கமாக திட்டமிடப்பட்ட ஒரு பயணம், ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் எல்லா பகலும் அலுவலக வேலையாகவும் எல்லா இரவிலும் பயணமாகவும் இருக்கப்போகின்றது.

என்றுமே நான் பயணத்தை வெறுப்பது இல்லை அனால் சமீப காலமாக அலுவலகப்பயணம் என்றால் ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்கிறது. ஆனாலும் ஒரு வித்தியாசமான பயணத்துக்கு என்னை தயார் படுத்திகொண்டு உள்ளேன். இந்தியும் தெரியாது, நாள்முழுக்க பயனப்படவேண்டும், ஒரு வாரத்துக்கு இணையம் கூட கிடையாது, பார்ப்போம் எப்படி போகின்றது என்று.

கடந்த இரண்டு வாரமாக சில பதிவுகளை எழுத வேண்டும் என்று நினைத்தாலும் சோம்பேறித்தனம் அதை அழித்துவிடுகிறது, இனியாது சோம்பேறியாய் இல்லாமல் அடிக்கடி பதிவெழுத முயற்சி செய்கிறேன்.

நாளை கொல்கத்தா சென்று நாளை மறுநாள் பர்கர் ( நீங்க  KFC  ல சாபிடுற பர்கர் இல்ல, இது  Bargarh  என்ற ஊர்) செல்ல வேண்டும். அன்று மாலையே கிளம்பி ஜம்செட்புர் செல்ல வேண்டும் இரண்டு நாளில் மறுபடியும் கொல்கத்தா, துர்காபூர் மறுபடியும் கொல்கத்தா நிறைவாய் சென்னை. எட்டுநாளில் ஏழு நாள் பயணப்பட வேண்டும்.

இன்னும் துணி காயவில்லை, அலுவகத்தில் எதையும் எடுத்து வைக்கவில்லை, பயணத்துக்கு வேண்டிய பெட்டி இல்லை, போதாதா காலத்துக்கு மொபைல் வேறு தண்ணியில் குதித்து தற்கொலை செய்துவிட்டதால் எல்லா தொலைபேசி எண்களும் தூக்கத்தில் உள்ளன. 

ஆரம்பமே அட்டகாசமாய் இருக்கிறதே, சூப்பர் பயணமாய் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

நண்பர்களே மறுபடியும் சந்திக்கிறேன் 

Wednesday, June 23, 2010

முதல் நாள் இன்று

இன்று சத்னா வந்து சேர்ந்தேன், ஒரு வழியாக முப்பது  மணி நேரம் பயணம் செய்து  இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன், இறங்கியவுடன் வெயில் என்னை ஊர் போய் சேர் என விரட்டியது, ஒரு வழியாக ஹோட்டல் வந்து சேந்து சபாட மூச்சு ஒரு தூக்கமும் போட்டு எழுந்தாச்சு.

ரயிலில் கூட வந்தது ஒரு தமிழ் குடும்பம், அந்த குட்டி பையன் போட்ட சாதத்துல எப்பட இறங்கலாம் என தோன்றியது,  எனக்கு பசங்க 
சத்தம் போட்ட புடிக்கும் ஆனா இந்த மாதிரி சதம் போதுமடா சாமி. ரயில் பயணம் என்றாலே புடிப்பது இல்லை, ரயில் என்றாலே எனக்கு புடிக்காதது நாதம் புடிச்ச கழிவறை. எந்த வகுப்பு என்றாலும் கழிவறை நிலை ஒரே  மாதிரி தான். லல்லு முதல் மம்தா வரை வந்தாலும் இந்த நிலை மாறாது. 

CNN IBN  ல இப்ப தமிழ் இந்தி என ஒரு கலந்துரையால் நடந்துகொண்டு இருக்கிறது இவங்க பேசறது எல்லாம் என்னமோ தமிழ் ஏலம் ஒரு மொழியே இல, இந்திதான் எல்லாம் பேசறாங்க. கடுப்பா வருது ஆனாலும் இந்தி தெரியாம இப நான் படர கசடத நினைக்கும் பூத்து என்ன பண்ண தெர்ல. 

இராவணன் படம் முதல் நாளே மாயாஜாலில் 220  ரூபாய் கௌது பார்த்தேன், மணி சார் உங்களுக்கு சொந்தமா கதை பண்ண தெரியாதா? ராமாயணம் எடுத்தா பரவால ஆனா   அதுக்காக எல்லா கதாபாத்திரத்தையும் இவங்க தான் இவங்கன்னு சப் டைட்டில் போட்டு சொல்லி இருக்கலாம் அதவிட கேவலமா இருதது நீங்க வச்சுருந்த சீன்ஸ்.

இரண்டு நாள் பயணத்தில் பாக்காம  வச்சு இருந்த பாம் ஏலம் பார்த்தேன்,  The saint  படம், ஜாக்கி அண்ணன் எழுதிருந்தார் இத பத்தி, பார்க்க நல்ல தான் இருந்துச்சு, ஆனா அண்ணன் சொன்ன மாதிரி அந்த லவ் எபிசொட் ஒன்னும் எனக்கு புடிக்கல.

அப்புறம் தி identity படம், நாம பலமுறை பார்த்த மல்டிபிள் பர்சனாலிட்டி படம் தான் ஆனா நல்ல தான் இருந்துச்சு, நம்ம தமிழ் படம் சிந்தனை செய், இது கூட நல்ல வந்திருக்க வேண்டிய படம் ஆனா ஹீரோவ ஏன் ஆண்மை இல்லாதவனு காடனும் நு தெர்ல.  படம் பார்க்கலாம், அந்த பார் பையனா நடிக்கும் தம்பிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

 வேற என்ன எழுத என்று தெரியவில்லை , இந்தி தெரியாம முதல் இரண்டு நாளை கழித்து விட்டேன், நாளை அலுவலக வேலை பார்ப்போம். 

Friday, March 12, 2010

சென்னை முதல் சென்னை வரை கொல்லம், திருவனந்தபுரம் வழியாக இரண்டு நாளில்....

சில வாரங்களுக்கு முன்பு அலுவலக நண்பர்களுடன் கேரளா சென்று வந்தேன். சென்னையில் இருந்து திருச்சி மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றோம்.
வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி காரிலேயே சென்றுவிட்டு வருவதாக ஏற்பாடு. இதுவரை நெடுந்தூரம் காரில் சென்று இருந்தாலும் 760km  செல்வது இது தான் முதன் முறையாக அதுவும் நான் மட்டுமே கார் ஓட்ட வேண்டும். ஆனால் ஓட்டிவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம். வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல நண்பர்கள் சொதப்பியதால் எட்டு மணிக்கு கிளம்பி சென்றோம்.  தாம்பரம் தாண்டி சென்று எல்லோரும் ஒரு கோவிலில் சாமிகும்பிடுவார்களே அங்கு நிறுத்தி கடவுள இ கும்பிட்டு வண்டியை கிளப்பினோம். சிறிது நேரத்திலேயே டாஸ்மாக் போர்டை பார்த்து வண்டியை ஓரம் கட்டினர். 

சரக்கும் சைடு டிஷும் வாங்கிக்கொண்டு வண்டி கிளம்பு ஒரு மணி நேரம் ஆனது. மதுராந்தகம் சென்ற உடன் வண்டி நிறுத்தப்பட்டது,சரக்கு கிளம்ப ஆரம்பித்தது, மூன்று மணிக்கு திருச்சி தாண்டி வண்டி சென்றது, அங்கிருந்த ஒரு கடையில்  வண்டியை நிறுத்தி நான் தூங்க ஆரம்பித்தேன் ஆறு மணி வரை தூங்கி எழுந்திருக்கும் போது எனக்கு மட்டும் மோசமாக விடிந்தது. நண்பன் ஒருவன் மப்பு அதிகமாக ஏறி ரொம்ப அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருந்தான். எப்படியோ ஏற்றிக்கொண்டு கிளம்பி பாதி தூரம் கடப்பதற்குள் வாந்தி...
மதுரையை தாண்டி செல்லும் போது இடையில் இரண்டு முறை வண்டி நிறுத்தப்பட்டது. எப்படியோ கொல்லம் சென்று சேர மதியம் 11.45 ஆனது. இயற்கையை ரசித்து வண்டி ஓட்ட முடியவில்லை, கேரளாவின் இயற்கையை ரசிப்பதற்கு பதில் எப்படி மறுபடியும் சென்னை சென்று சேருவது என யோசித்து மனதை குழப்பிக்கொண்டு இருந்தேன்.

இரண்டு நாட்கள் நன்றாக சென்றன, கேரளா பச்சை பச்சையாய் இருந்தது ஆனால் குளு குளு என இல்லை, வெயில் காட்டு காட்டு என காட்டியது.  நன்றாக என்ஜாய் செய்தோம். எனது கார் கப்பலில் போனது, இதெல்லாம் இங்கு மட்டுமே சாத்தியம். ஞாயிறு அன்று காலை திருவனத்தபுரம் சென்றோம், அங்கு சென்றுவிட்டு மாலை நானும் இரண்டு நண்பர்களும் சென்னை கிளம்புவதாக பிளான். பத்மநாப கோவிலுக்கு சென்று விட்டு நண்பரின் அண்ணன் வீட்டுக்கு செல்லுவதாக திட்டம், தோழி ஒருத்தி அங்கு இருப்பதால் அவ்வளவு தூரம் வந்து அவளிடம் பேசாமல் கூட சென்றால் நன்றாக இருக்காது என்பதால் தொலை பேசினேன், அதுதான் தப்பு, வீட்டிற்கு வரவில்லை என கோவம் அவருக்கு.

நண்பர்கள் இருவர் கோவளம் செல்வதாக திட்டம் போகும் வழியில் அவர்களை இறக்கி விட்டு செல்லலாம் என சென்றால் இன்னொரு காரில் என்னுடன் வர வேண்டிய ஒருவர், அந்த சார் நேராக கடற்கரை சென்றது, எனக்கோ மாலை மணி 3  ஆகிவிட்டது இப்போ கிளம்பினாத்தான் காலை 4 மணிக்கு சென்னை செல்ல முடியும் என கவலை. கடைசியில் யாவரும் அங்கு தங்கவில்லை. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பி அங்கிருந்து நகர் கோவில் திருநெல்வேலி மதுரை திருச்சி வழியாக சென்னை வரவேண்டும். நான்கு மணிக்கு கிளம்பினோம், நண்பர் வேறு சரக்கு கேட்டுக்கொண்டே வந்தார், வண்டியில் இருந்த ஹாப் பாட்டிலை எடுத்து குடுத்தோம், நாகர்கோவில் தாண்டி ஒரு கோட்டரை முடித்து விட்டார்.

நாகர் கோவில் தாண்டி திருநெல்வேலி செலும்போது சாலைகள் நன்றாக இருந்தன, ஆனால் ஒரு இடத்தில  take diversion  போட்டு ஒரு போர்ட் இருந்தது, அதை கடந்து மறுபடியும் சாலைக்கு வந்தோம் கொஞ்ச தூரம் வந்தால் தன தெரிந்தது சாலையில் எங்களை தவிர யாருமில்லை, ஒரு பாலத்தில் ஏறிக்கொண்டு இருந்தோம் உச்சிக்கு சென்றபோது பார்த்தல் பலத்தை நடுவில் காணூம். நல்லவேளை மெதுவாக சென்றேன் இல்லாவிடில் ஐந்து பெரும் அரோகரா தான். நெடுஞ்சாலை துறை நன்றாக வேலை செய்கின்றனர், அந்த புறவழிச்சாலை முடியவில்லை ஆனால் அதற்கு ஒரு அறிவிப்பும் இல்லை, எப்படியோ கஷ்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்து சேர்ந்தோம். பின்னர் வண்டி நிற்காமல் கிளம்பியது. நண்பர் மட்டும் சரக்கு கேட்டார், வண்டியை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தார் நான் நிறுத்தவில்லை. 

கலையில் ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம், பயனத்தி ரசிக்காமல் வெறுத்து வந்து சேர்ந்தேன், என்னைத்தவிர நான்கு பெரும் நன்றாக ரசித்தனர். இப்பொது தெரிகிறது சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று.


பயணத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்கள் அடுத்த பதிவில்


சில புகைப்படங்கள் உங்களுக்காக 


Thursday, January 28, 2010

திருமணத்தில் முடிந்த பயணக்கட்டுரை- எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ??


புது வருடம் முடிந்தது பொங்கலும் முடிந்தது ஆயிரத்தில் ஒருவன் படமும் முடிந்தது ஆனால்  இந்த வருடத்தின் முதல் அதிவே ஒரு வரி பதிவாக போய்விட்டபடியால் இன்று நிறைய எழுதலாம் என்று இருக்கிறேன்.

நேற்று இரவு கிளம்பி காலை கரூர் வந்து சேர்ந்தேன் ஏற்கனவே முடிவு செய்தபடி காரில் தான் வந்தேன், வரும்போது நண்பனை அழைத்து வந்தேன். சென்னையில் இருந்து வேலூர்  கிரிஷ்ணகிரி தொப்பூர், மேட்டூர் வழியாக ஈரோடு  வந்து  நண்பனை விட்டுவிட்டு கரூர் வந்தேன். எதிர்பார்த்ததை போல இல்லாமல் நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் . ஸ்ரீபெரும்புதூர் தாண்டி  வருவதற்கே 3 மணிநேரம் ஆகிவிட்டது. முன்தினம் சரியாக தூங்கததாலும் அலுவலக வேலையாலும் கொஞ்சம் கவனமாக ஓட்ட வேண்டி இருந்தது.



இரவு நெடுந்தூரம் வண்டி ஓட்ட எப்போதும் ஆசை தான் இந்த தடவை நண்பனுடன் இன்னொருவர் வந்தார் மூன்று பேராக இருந்தாலும் அவர்கள் இருவரும் தூங்கி விட்டனர். வழக்கம் போல ஒரு சில லாரி ஓட்டுனர்கள் கண்டபடி ஓட்டினர் , வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி  விடவில்லை.



காலையில்  6 மணிக்கு  ஈரோட்டில் இருந்து கரூர் வந்தேன், பணிமூட்டதுக்கு  இடையில் வயல்வெளி, சிவப்பாக மேலெழும் சூரியன். இவை எல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? இந்த இயற்கை எல்லாம் எவ்வளவு நாளைக்கோ??


இப்பவே எல்லா இடத்தையும் மனை போட்டு விற்றுக்கொண்டு இருகிறார்கள்.


நாளை நாமக்கல் பக்கம் உள்ள புன்னி மரத்து சாமி கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொல்லியுள்ளனர்.  


வேண்டினது எல்லாம் நடக்குமாம், போயிட்டு வேண்டுதல் எல்லாம் முடிச்சுட்டு வந்துருக்கேன் வந்த அடுத்த நாளே நம்ம வேண்டினது நடக்கறதுக்கு ரொம்ப தூரம் என்று புரிஞ்சு போச்சு. நமக்கு மட்டும் ஏன் எந்த சாமியும் துணை நிக்க மாட்டேன்குது (ஆமா பின்ன எப்பவும் நம்பிக்கை இல்லாம வேண்டும்போது மட்டும் வந்து உன்ன யார் கண்டுப்பா என்று  மனசு சொல்லுது )

ரொம்ப நாலா யோசித்து நாமளும் இனி குதிசுடலாம் என முடிவு பண்ணிட்டேன் வீட்லயும் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தாங்க, நானும் கல்யாணத்துக்கு சரி என்று சொலிட்டு கனவு காண ஆரம்பிச்ச அடுத்த நாளே நம்ம விதி ஜோசியக்காரன் ரூபத்துல விளையாடுது.




போனமாசம் பார்த்த இடத்துல ஒரு ஜோசியர் பையனுக்கு தை மாசத்துல இருந்து பொண்ணு பாருங்க என சொல்லி ஒரு அமௌண்ட வாங்கிட்டு . அனுப்பி இருக்கிறார் , போன வார இறுதில இன்னொருத்தன் பையனுக்கு அது இருக்கு இது இருக்குனு சொல்லி மே மாசம் பாருங்க அது வரை வேணாம்  சொலிட்டு இவனும் ஒரு அமௌண்ட புடுங்கிட்டு அம்மாவ அனுப்பி அனுப்பி இருக்கான். இவங்க குழப்பராங்கனு இன்னொருத்தன் கிட்ட போய் இந்த வாரம் கேக்கிறேன் என சொல்றாங்க. என் கல்யாணத்த  எவனோ முடிவு பண்றாங்க பாருங்க.

 ஆனா வஞ்சன  இல்லாம பேருமே பெரிய லிஸ்ட குடுத்து பையனுக்கு இது பண்ணுங்க அந்த கோவில்ல அத பண்ணுங்க என சொல்லி அனுப்பி உள்ளனர். என்னங்கடா நெனசுகிற்றுகீங்க? ?


ஊருக்கு போன காரியம் ஓரளவுக்கு முடிஞ்சுது, இபோதைக்கு சொந்தம் சுற்றம் நண்பர்கள் என தெரிந்த வட்டார தகவல் மூலம் தேடலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நான் சரி சொல்லவில்லை என்றாலும் அவங்க தேடப்போவது உறுதி என நம்பக்கூடிய வட்டாரத்துல தகவல் வந்ததால் சரி சொல்லி என் மரியாதையை நானே காப்பாற்றிக்கொண்டேன்.

திரும்பி வரும்போது கொஞ்சம் வேகமாகவே வந்தேன், சாலை காலியாக இருந்தது, நானும் நண்பன் மட்டுமே. வழக்கம் போல கிரிஷ்ணகிரி தாண்டினவுடன் இரண்டு கார்கள் துணைக்கு வந்தன, வேகமான பயணம், உடன் வந்த wagon -R கார் ஓட்டுனர் கண்டபடி ஊட்டினார் , 120 கி மீ வேகத்தில் தான் வந்தார்,இடப்புறம் முந்துவது, ஆபத்தான வளைவுகளில் வேகமாக முந்துவது என என்னை பயமுறுத்தினார், நீண்ட சாலைகளில் நான் அவரை முந்தினால் உடனே அவரது ஈகோ அவரை விடவில்லை போல, உடனே வேகத்தை கூட்டி எங்கு குறைக்க வேண்டுமோ அங்கே குறைக்காமல், ஆபத்தான நேரத்தில் என்னை முந்தினார்.

 அவருடன் போட்டி போட விருப்பம் இல்லாததால் சிறிது நேரத்தில் முன்னே சென்று விட்டேன். மறுபடியும் பின்னால் வந்து தன வேலையை காட்டினார். எங்கு வளைந்து நெளிந்து செல்லும் சாலை வருமென காத்திருந்து இரண்டு காரையும் முந்தி சென்றேன், ஒரு வளைவில் வலது ஓரத்தில் இருந்த lane இல் சென்ற அவர் இடது ஓரத்துக்கு சென்று விட்டார் control இல்லாமல். அந்த வளைவில் எளிதாக நான் முன்னே சென்றுவிட, ஒரு உணவகத்தில் சாப்பிட நிற்கும்போது வந்து நிறுத்தினார். என்னை பார்த்து ஒரு முறைப்பு வேற, இதுக்கு நான் சிரிக்காமலே இருந்து இருக்கலாம்.


எப்படியோ இந்த ஆரோக்கியமான போட்டி எளிதாக எங்களை சென்னை கொண்டு வந்து சேர்த்தது, ஆனால் அவர் உடன் நண்பர்கள் வந்து இருந்தனர், என் கணிப்புப்படி போதையில் இருந்து இருக்கலாம் இல்லை என்றால் புதிதாக கார் வாங்கி புதிதாக நெடுஞ்சாலையில் ஊட்டி இருக்கலாம், அனுபவம் இன்னும் தேவை அவர்க்கு. மற்றொரு கார் honda city நன்றாக ஓட்டினார். தேவைப்படும் இடத்தில எனக்கு வழி விட்டு தேவையான இடத்தில அவர் முன்னே சென்று கண்டிப்பாக நெடுஞ்சாலையில் அதிக அனுபவமிருக்க வேண்டும்.

இந்த பயணத்துடன் எனது நெடுஞ்சாலை அனுபவம் 20000 கிமீ ஆனது. அதைக்கொண்டாட வேண்டும். இந்த 20000 கிமீ தூரத்தில் நான் கற்றுகொண்டது நிறைய, முக்கியமாக பொறுமையை, தேவையான நிதானத்தை, அடுத்த வாகன ஓட்டி என்ன செஈயலாம் என கணிக்கும் வித்தையை. நெடுஞ்சாலை வாகனம் ஓடுவது என்பது அவ்வளவு எளிதல்ல, சிறிது கவனம் பிசகினாலும் ஆபதுநிச்சயம் ஆனால் நகரத்தை போல இடையில் வந்து சொருகும் இரு சக்கர வாகனங்கள், எரிச்சலை தூண்டும் வாகன ஓட்டிகள் அதிகமில்லாமல் இருக்கும் . நான் பெரும்பாலும் இரவில் பயணிப்பதால் இரு சக்கர வாகன தொல்லை இருக்காது. குறுகிய தூரம் ஓடும் லாரி ஓட்டுனர்கள் தான்னேடுஞ்சாலையில் ஆபத்தை விளைவிப்பவர்கள், பொதுவான விதிகளை கடைபிடிக்க மாட்டார்கள், வேகமாக வரும் வாகனங்கள் அவர்களை முந்த முற்படும்போது அவர்கள் முன்னே செல்லும் லாரியை முந்த முயற்சிப்பார்கள்.பத்து நிமிடம் அவர்கள் நேரம் எடுத்து முந்தி பின்னர் நாம் வழி பார்த்து அவர்களை முந்த வேண்டும். பலமுறை அவர்களை திட்டி சென்றுள்ளேன், ஆனால் நெடுந்தூரம் செல்லும் ஓட்டுனர்கள் இவ்வாறு செய்வது இல்லை. எதிலும் விதிவிலக்கு உண்டு அதை ஒத்துக்கொள்ள வேண்டும் .



சென்னை வந்து அலுவலகம் சேர்ந்து வழக்கமான வேலைகளை செய்ய துவங்கியாயிற்று. பயணத்தில் எடுத்த புகைப்படங்களை பிறகு இணைக்கிறேன்.
 
பின்குறிப்பு: ஈரோடு பதிவர்களை சந்திக்கலாம் என நினைத்து அவர்கள் தொலைபேசி எங்களை குறித்து வைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. நான் இதுவரை பதிவர்கள் யாரையும் சந்தித்தது இல்லை. நண்பர் தராசு அவர்களை தவிர, பார்ப்போம் எப்போது சந்தர்ப்பம் அமைகிறது என்று.
 
கரூரில் இருந்து அருட்பெருங்கோவை தவிர யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா? நண்பன் அருட்பெருங்கோ கல்யாணம் பண்ணுகிறான் வாழ்த்துக்கள்.


அப்பா தலைப்புக்கு சம்பந்தமா ஒரு விசயத்த எழுதியாச்சு :)

Friday, August 21, 2009

ஈரம் மற்றும் ஆதவன் பாடல்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஈரம் படத்தின் பாடல்கள் கேட்டேன். நண்பனிடமிருந்து குறுந்தட்டை வாங்கி ஒரு வாரம் கழித்து ஒரு நேரத்தில் சும்மாகேட்டு பார்ப்போமே என்று கேட்டேன்.முதல் பாட்டு சுசித்ரா பாடி இருக்கிறார் ஆனால் அவர் குரல் சிறிது மாற்றத்துடன் இருக்கிறது. " தரை இறங்கிய பறவை போலவே " என்று ஆரம்பிக்கும் பாடல் ..
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கேட்ட நிமிடத்திலேயே பிடித்து விட்டது
இன்னொரு பாட்டு மழை மழை என்று, அதுவும் மிக அருமையாக இருந்தது. மொத்தம் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு theme மியூசிக்.
மொத்தத்தில் அருமையான இசை மற்றும் பாடல்கள்.


நேற்று ஆதவன் பாடல்கள் கேட்டேன். சிறிது நேரமே கேட்டாலும் அப்படி ஒன்றும் உடனே பிடிக்க வில்லை, வழக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கேட்ட உடனே கண்டு பிடித்து விட முடிகிறது.
பாடல்கள் என்னை பொறுத்தவரை என்னை impress பண்ணவில்லை. கார்கி சொன்னதற்காக மறுபடியும் காரில் கேட்டு பார்க்கிறேன்.


அடுத்த மாதத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்காவது செல்லலாம் எங்கு இருக்கிறேன். ஆனால் எங்கு செல்வது?? நீண்ட பயணம் மேற்க்கொள்ளலாம் என்று முடிவு பதிவர்கள் யாருக்கேனும் யோசனை இருந்தால் கூறவும்.

மனதில் திடீரென்று எண்ணம், நாம் ஏன் ஒரு நாள் எந்த இலக்கு ம் இல்லாமல் கிளம்பி ஒரு வாரம் பயணித்து வரக்கூடாது என்று, பார்ப்போம் என்னமுடிவு எடுக்கிறேன் என்று.

இன்று கந்தசாமி பார்க்கலாம் என்று இருக்கிறேன், பார்ப்போம் இரவு காட்சி மாயஜாலில் கிடைத்தால் செல்லலாம். படம் நன்றாக இருப்பதாக நண்பன் கூறுகிறான். வடிவேலு வரும் காட்சிகள் கொஞ்சம் இல்லை ரொம்பவே bore அடிக்குதாம். சற்று முன் கிடைத்த தகவல் படி.

Friday, March 20, 2009

நான் பள்ளி சென்ற கதை

காலையில் கிளம்பும்போது அந்த பள்ளிச்சிறுமியை தினமும்பார்ப்பேன், இன்று எதோ ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டு இருந்தாள். ஒவ்வொரு நாளும் ஓவொரு முக பாவனையுடன் வித விதமான பேச்சில். அமைதியாய், ஆச்சரியமாய், மகிழ்ச்சியாய், அழுகையுடன் என்று வித விதமான செய்கைகள் பேச்சுகள் என்று. இன்று புதிதாய் பள்ளி வாகனம் மாற்றப்பட்டு உள்ளதாம் அதை பற்றி பேசும்போதே என்னுள் எனது கடந்த கால பள்ளி செல்லும் நினைவுகள் வந்தது.

அப்பா பதிவுக்கு ஒரு தலைப்பும் விசயமும் கிடைத்தது என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.

நான் பள்ளியில் சேர்க்கப்படும்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் இருந்தோம். கரூருக்கு அருகில் இருந்த கிராமம் எங்களுது. பள்ளிக்கு செல்ல அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றால் அங்கிருந்து பள்ளி பேருந்து வரும். நான் பள்ளிக்கு செல்வது என்பது இன்றும் உறவினர்களால் கேலி செய்யப்படும் ஒரு நிகழ்வு, பின்ன சும்மாவா என் தாத்தாவுடன் சென்று பள்ளி பேருந்தை பிடிக்க வேண்டும். அவர் சைக்கிளுக்கு நான்தான் ஆஸ்த்தான பயணி. என்னை அவ்வளவு பாதுகாப்பா கூட்டி செல்வார் . அவர் சைக்கிளில் பின்னால் ஒரு பெரிய பலகை வைத்திருப்பார் அதில் முதலில் என் அண்ணாவின் புத்தகப்பை அடுத்து என்னை உட்கார வைப்பார், அதன் பின்னர் எனது புத்தகப்பை என் பின்னால். இதுல என்ன இருக்கு??? இருங்க இருங்க, அப்புறம் ஒரு கயிறு எடுத்து புத்தகப்பை மற்றும் என்னை சேர்த்து கட்டுவார். கட்டிவிட்டு பின்னை நன்றாக புடித்துக்கொள்ள சொல்லுவார். டாடா கூட காட்டக்கூடாது. அப்படியே சென்று பள்ளி பேருந்தில் ஏற்றி விடுவார். பின்னால் இவன் ஒரு பெரிய மேதையாவன் பாதுகாப்பா கொண்டு செல்லனும் என்று அப்போதே அவருக்கு தெரிந்து இருக்கிறது பாருங்களேன்.

இரண்டு வருடங்கள் கழித்து எங்கள் ஊரிலேயே ஒரு அண்ணன் பள்ளிக்கு ஆட்டோ ஓட்டுவது தெரிந்து எங்களை அதில் அனுப்பி வைத்தனர். அப்போது பள்ளிக்கு ஆட்டோவில் போவது ஒரு முக்கியமான நிகழ்வு, ஆட்டோ என்றால் நன்றாக இருக்கும். அங்கேயும் ஆட்டோவில் முன்னாள் நிற்பதற்கு தகுதி சிறு வயதாக இருக்க வேண்டும். ஓட்டுனருக்கு இரு புறமும் நின்று கொண்டு வர பெரிய பையனாக இருக்க வேண்டும். நான் தான் ரெண்டும் இல்லை மேலும் எங்கள் வீட்டில் இருந்தே ஏறி விடுவதால் பின்னால் சீட்டில் நடுவில் தான் உட்கார வேண்டும். அதிலும் பக்கத்து ஊரில் ஒரு சிறுவன் (நானே அப்போது சிறுவன் தான் ஆனாலும் 1 ஒன்றாம் வகுப்பு படித்தேன்) ஏறினான், முன்னாள் நிற்கும் இடம் அவனுக்கு போயிற்று. ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் என் அண்ணன் நின்று கொள்வார்.



இதில் தான் எத்தனை அனுபவங்கள் , பள்ளி முடிந்து திரும்பும்போது சில நாட்கள் நாவல் மரத்தின் அடியில் ஆட்டோவை நிறுத்தி உதிர்ந்த நாவல் பழம் எடுத்து சாப்பிடுவோம். ஸ்டார்ட் ஆகாத ஆட்டோவை தள்ளுவது. எங்க ஆட்டோதான் எப்பவுமே பள்ளியில் இருந்து கடைசியாக கிளம்பும், எனக்கு தெரிந்து இரண்டு முறை தான் மற்ற ஆட்டோவை முந்தியுள்ளது.

மூன்று வருடம் இப்படியே பயணம் செய்து பின்னர் ஓட்டுனர் அருகில் நிற்கும் தகுதி வந்த வேளையில் நாங்கள் கரூருக்கு வீடு மாறி வந்தோம். பின்னர் மறுபடியும் பள்ளி பேருந்து. அப்போது எங்கள் வீட்டில் குடியிருந்தவரின் பெண் எங்கள் பள்ளியில் படித்தார், அவரும் பள்ளி பேருந்தில் செல்வதால் அவருடன் அனுப்பி வைப்பார்கள். பேருந்தில் அப்போதெல்லாம் உட்கார இடம் இருக்காது. அடைத்துதான் செல்வார்கள். சின்ன பசங்க எல்லாம் சீட்டில் சாய்வதற்கும் உட்காருவதர்க்கும் உள்ள பலகைக்கு இடையில் ஒரு இடைவெளி இருக்கே அதில் காலை வைத்து சாயும் பலகையை நோக்கி முகம் பார்த்து உட்கார வேண்டும். மற்றவர்கள் எங்களுக்கு பின்னால் இருக்கும் இடத்தில் முன்னோக்கி அமருவார்கள். எங்கள் பேருந்து வேறு நாய் வண்டி போல இருக்கும். சிறிது காலத்தில் பேருந்து மாறியது. அப்போது அந்த அக்காவும் என்னை அவர் அருகிலே உட்க்கார வைத்துக்கொண்டனர்.

ஒன்றரை வருடங்கள் அப்படியே ஓடியது. பின்னர் அரசு பேருந்தில் செல்ல துவங்கினேன், தினமும் வீட்டில் இருந்து காலையில் கிளம்பி ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். இரண்டு பேருந்துகளே பள்ளிக்கு செல்லும். கால் மணி நேர வித்தியாசத்தில் இருக்கும் இரண்டும். இரண்டாவதாக வரும் பேருந்தில் சென்றால் கூட்டம் அதிகம், மணி அடிக்கும்போது உள்ளே செல்லும் நிலை இருக்கும் ஆதலாம் முடிந்த வரை முதல் பேருந்தில் செல்வேன். எல்லாமே கூட்டமாக வரும், பத்தாவது முதல் +2 வரை படிக்கும் மாணவர் அரசு பேருந்தில் தான் வருவார்கள். அப்போதெல்லாம் நினைப்பேன் ஏன் இவர்கள் அழகா சைக்கிளில் வராமல் பேருந்தில் கூட்டமாக வருகிறார்கள் என்று, பின்னர் நான் அந்த வகுப்பு வரும்போது தான் புரிந்தது, பின்னே அந்த பேருந்து எங்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னாள் இரண்டு பெண்கள் பள்ளியை கடந்து வரும்.

ஆறாவது பாதியிலேயே நான் சைக்கிளில் செல்ல துவங்கிவிட்டேன், வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும் பள்ளிக்கு ஏழு கிலோமீட்டர் சுற்றி செல்வோம் (கூட்டம் இல்லாமல் செல்லும் வழி அது, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று செல்வோம்) பத்தாவது வரை சைக்கிள்தான் எங்கு சென்றாலும் சைக்கிள்தான் துணை, சில நாட்கள் வீட்டிற்கு அருகில் பை பாஸ் சாலைக்கு அருகே உள்ள வயல் வெளிகளுக்கு சென்று தனியாய் அமைந்து விடுவேன், ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் திரும்பும்போது மன அமைதி இருக்கும்.

11ம் வகுப்பு பள்ளி மாறிவிட்டேன், வீட்டில் இருந்து 15 நிமிடபயணம் . மதிய சாப்பாடு வீடிற்கு வந்து சாப்பிடுவேன் பெரும்பாலும் பள்ளி நடக்காது அப்படி நடந்தாலும் நாங்கள் போக மாட்டோம். 9 மணிக்கு பள்ளி ஆரம்பித்தால் பத்து மணிக்கு பாதி பேர் வெளியே சென்று விடுவார்கள்.பெரும்பாலும் விளையாடவும் சிலர் சினிமாவுக்கும் செல்வார்கள், என்னைமாதிரி பயந்த பையன்கள் வீட்டிற்கு சென்று விடுவோம், நன்றாக தூங்கிவிட்டு பின்னர் சாப்பிட்டுவிட்டு இரண்டு மணிக்கு பள்ளி வந்து சிறிதுநேரம் அரட்டை அடித்துவிட்டு மீண்டும் டியுசன் சென்று விடுவோம்.

பதினொன்றாம் வகுப்பு பாதியில் நண்பன் ஒரு TVS-50 இல் பள்ளிக்கு வரத்துவங்கினான். அவனுடம் சேர்ந்து வரத்துவங்கியதால் எனது சைக்கிள் ஓய்வு எடுத்தது. அவ்வப்போது தேவைப்படும்போது எடுப்பேன் மற்றபடி அதிகம் சென்றது நண்பனுடன் வண்டியில். அப்போது ரொம்ப முக்கிய தேவை எனில் வீட்டில் எப்படியாவது கேட்டு எனது தந்தையின் TVS-50 யை எடுத்து செல்வேன் அப்போது அதுவே பெரிய சாதனை பள்ளிக்கு வண்டியில் வருவது.

கல்லூரி வந்தவுடன் ஹாஸ்டல் வாழ்க்கை, ஈரோட்டிற்கு சென்று வர கல்லூரி பேருந்து 7 B மறக்க முடியாத பேருந்து. பல காதல்களையும் சில மோதல்களையும் ஒன்று சேர சுமந்த பேருந்து, இதில் அதிகம் பயணித்ததுஇல்லை எப்போதும் கீழே இறங்கி மூன்றாம் நம்பர் பேருந்தை பிடிப்பதுதான் எங்கள் வழக்கம்.

இவ்வாறெல்லாம் இனிய பயன்களை கடந்த நான் இப்போதெல்லாம் அலுவலக பேருந்தை ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விட்டேன், சமீப காலமாக அவ்வப்போது வெளியே எட்டிப்பார்த்து பயணத்தை அனுபவிக்கிறேன்.

பயணங்கள் எப்போதும் இனிமையானவை.. இப்போது கூட...

Monday, December 15, 2008

இரண்டு மணி நேர பயணம் அலுவலகத்திற்கு

நேற்று ஒரு திருமணத்திற்காக பாண்டி சென்று இரவு திரும்ப நேரமானதால் இன்று காலை ஒரு மணி நேர தாமதமாக அலுவலகம் செல்லலாம் என்று தீர்மானித்து தூங்கி விட்டேன்.சரியாக கிளம்பி எட்டு மணிக்கு காரை கிளப்பி வேளச்சேரியில் இருந்து பழைய மஹாபலிபுரம் சாலை அடைந்து பார்த்தல் life line மருத்துவமனை அருகே சாலையில் ஒரே வாகன கூட்டம்.

அட இன்று முதல் இந்த சாலையில் பணம் வாங்குகிறார்களே என்று நொந்துகொண்டு வாகனத்தை செலுத்தினேன், நமதுமக்கள் படித்தவர் படிக்காதவர் என்று பாகுபாடு இல்லாமல் சாலை விதிகளை பின்பற்றாமல் அவசர குடுக்கை தனமாக வாகனத்தை ஓட்டி ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு இருந்தனர், ஐந்து வரிசையாக செல்ல வேண்டிய இடத்தில் ஒன்பது வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அந்த இடத்தை கடந்து வர சரியாக ஒரு மணி நேரம் பிடித்தது .

இதில் அங்கே பணம் வாங்குபவரிடம் திரும்பி வருவதற்கும் சேர்த்து ரசீது கொடுங்கள் என்று கேட்டால் அவர் அது எல்லாம் இங்கு கிடையாது ஒவ்வொரு முறையும் நீங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார். விதியை நொந்துகொண்டு இனி இந்த சாலையில் வர கூடாது மாலை திரும்பும்போது கிழக்கு கடற்க்கரை சாலையில் வந்து விட வேண்டும் என்று தீர்மானித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், மணி அப்போது சரியாங்க ஒன்பது நாற்பத்து ஐந்து.

சில குளறுபடிகள்: மொத்தமாக ஒரு நாளைக்கு என்று பணம் வசூலிக்கும் முறை இல்லை, ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டும் அல்லது மொத்தமாக 50 முறை பயணிக்க 100 முறை பயணிக்க என்று வாங்கி வைத்து கொள்ள வேண்டும், மாற்ற சாலைகளில் இருப்பது போல ஒரே நாளில் திரும்பி வந்துவிடும் சீட்டு, ஒரு நாளைக்கு முழுவதையும் உபயோகிக்கும் முறை எல்லாம் இல்லை.

இதில் பாவப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு வாகனம் ஓடுபவர்கள் தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 தடவை அந்த சாலைகளை பயன்படுத்துகின்றனர், ஒவ்வொரு முறைக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், மொத்தத்தில் பெரிய தொகை.

இன்னும் சில மாதங்களுக்கு பெரிய போராட்டத்திற்கு பின்னரே வீடு செல்வோம் என்று நினைக்கிறேன்.

நேற்று இரவு சென்னை திரும்புகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவன்மியுரை நெருங்கும்போது போலீசார் வழிமறித்தனர், எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று எல்லாம் கேட்டுவிட்டு எதற்கு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டனர், நான் வந்தது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம், நான் இரவு இரண்டு மணிக்கு இந்த வேகத்தில் செல்லவில்லை என்றால் நாளைக்கு அலுவலகம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு வந்தேன்.

இருந்தாலும் அவர்கல்பணி மிக சிறந்தது.இரவு இரண்டு மணிக்கும் சாலையில் நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Wednesday, July 16, 2008

பயணம்

சமிபத்தில் இரண்டு முறை அரசுப்பேருந்தில் சென்னையிலிருந்து கரூர் பயணம் செய்தேன். இதில் நான் கவனித்து அறிந்தது. வெள்ளிகிழமைகளில் அனைத்து பேருந்தும் நிரம்பி வழிந்தது.

தனியார் பேருந்துகள் அரசுப்பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்சென்றனர், கேட்பதற்கு யாருமில்லை, கேட்டலும் அவர்கள் மதிப்பதாக இல்லை.

முதல் பயணம், நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துப்பயணம் அதுவும் அரசு விரைவுப்பேருந்து- டிலக்ஸ் பேருந்து. எனக்காக முதல் வரிசை இருக்கை வழக்கம்போல ஒதுக்கப்பட்டு இருந்தது (காரணம் முதல் வரிசையில் கால்களை நன்றாக நீட்டிக்கொள்ளலாம்) பேருந்தில் ஏறியவுடன் நான் அறிந்தது, அரசு பேருந்துக்கு எவ்வளவு விலை உயர்ந்த பேருந்தை குடுத்தாலும் பராமரிக்காமல் மிக விரைவில் மோசமக்கிவிடுவார்கள் என்று.

மிக அழுக்காக இருந்தது பேருந்து, இருக்கைகளும் அப்படியே, அதிசயமாக மின் விசிறிகள் ஓடின. சத்தம் வரவில்லை (ஆச்சரியம்) மொத்தத்தில் நல்ல பேருந்தை சீரழித்து வைத்திருந்தனர். அடுத்து பயணிகள், நடத்துனர் என்னிடம் பேசியபோதே இருவர், பயணசீட்டில் சினிமாக்கு காசு குடுத்தோம் ஏன் படம் போடலை என்று விவாதம் செய்தனர். அவரும் டிவி சரியாக தெரியவில்லை, நிறங்கள் மாறி வருகின்றன, சிறிது நேரத்தில் பாடல் போடப்படும் என்றார். அவர்கள் கேட்பதாய் இல்லை, நடத்துனர் மிக கடுப்பாகி, படமா கேட்கறீங்க, இதோ இருங்க என்ற படியே ஒரு படம் போட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்து முழுவதும் தூங்கியது. போடப்பட்ட படம் "நெஞ்சம் மறப்பதில்லை"

பின்னர் சிறிது நேரத்தில் படத்தை நிறுத்தி விட்டு இனிமயான ராஜா பாடல்கள் போடப்பட்டது. மிக மெல்லிய சத்தத்தில் இனிமையாகவே இருந்தது பயணம். அரசு விரைவுப்பேருந்து என்று பெயர் அனால் நான் பார்த்த வரை பேருந்து விரைவாய் செல்லவில்லை. பின்னால் வந்த அனைத்து பேருந்துகளும் முந்தி சென்றது, ஆனாலும் பயணம் எந்த அதிர்வுகளும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அப்போது நினைத்தேன் இதுவே மற்ற அரசு பேருந்துகளாக (விரைவு பேருந்து தவிர திருச்சி கிளை பேருந்துகள் ) இருந்தால் விரைவாக செல்வார்கள், பேருந்து பராமரிப்பு சிறப்பாக இருக்கும் என்று.

நடுவில் சாப்பிட நிறுத்தினர், வழக்கம் போல மிக மட்டமான ஒரு உணவகம். இறங்கும்போதே அங்கிருந்தவனிடம் சண்டை. குடிநீர் வாங்கலாம் என்று இறங்கினால் நம்மை பிடித்து அங்கிருந்த மிக மட்டமான கழிவறைக்கு கொண்டு சென்று விட்டு விடுவார்கள் போல. சண்டை ஆரம்பிக்கும் போதே நடத்துனர் தயவால் நிறுத்தப்பட்டது. ஒரு லிட்டர் தண்ணீர் 18 ரூபாய். அநியாய கொள்ளை.

சாலைகள் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது வழி நெடுக. காலை 6.30 கரூர் சென்றடைந்தேன்.

சென்னைக்கு திரும்ப விரைவு பேருந்தில் சென்றால் தாமதம் ஆகும் என்று திருச்சி கிளை பேருந்துக்கு போக வற்புறுத்தினார் என் தந்தை. சாதரண பேருந்து (சாய்வு இருக்கை இருந்தாலும் 41 இருக்கை பேருந்து ) அழகிய தமிழ் மகன் படத்துடன் கிளம்பியது, வேகம் இருந்தாலும் பயணம் பாடாய் படுத்தியது. இருக்கைகள் நன்றாக சுத்தமாக இருந்தது ஆனால் சிறிது நேரத்தில் முதுகு வலி எடுத்தது, பேருந்து சத்தம், படத்தின் சத்தம் மிக அதிகம். ஏன் படம் போட்டால் இவ்வளவு சத்தம் ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையில் காலை 5 மணிக்கு கொண்டு வந்து விட்டனர். இந்த பயணம் மிக அசவுகரியமாக இருந்தது. நன்றாக பராமரிக்கப்பட்ட பேருந்து ஆனாலும் சரியான இருக்கைகள் இல்லை, சத்தம் அதிகம், பேருந்தில் போடப்பட்ட படத்தின் சத்தம் அதிகம், படம் ஓடி முடித்து மறுபடியும் முதலில் இருந்து ஓடியது. கூப்பிட்டு சொல்லி நிறுத்தப்பட்டது (ஏற்க்கனவே ஒரு முறை கள்ளழகர் படத்தை இரண்டு முறை பார்த்த அனுபவம்)

இரண்டு பயணத்துக்கும் இருந்த வித்தியாசம்- விரைவு பேருந்து விரைவாய் செல்லாது ஆனால் சவுகரியமாய் இருக்கும், திருட்டு டிவிடி போடப்படுவது இல்லை முடிந்த வரை பாடல்களை மட்டுமே போடுகின்றனர்.
வேக குறைவிற்கு காரணம், டிசல் பம்பை வேலை செய்து வேகம் அதிகம் போகாதவாறு செய்துள்ளனர், டிசல் சிக்கனமாம். அப்புறம் எதற்கு விரைவு பேருந்து என்று பெயர் ????

அரசு பேருந்து- திருச்சி பராமரிப்பு நன்று ஆனால் பயணம் அசவுகரியம், தாரளமாக திருட்டு டிவிடி போடப்படும். சத்தம் அதிகம் வைத்து காதை பிளக்கும் (இரண்டாவது முறை திருச்சி கிளையின் டிலக்ஸ் பேருந்தில் வந்தேன் அதற்க்கு விரைவு பேருந்தே தேவலை அவளவு மோசமான பராமரிப்பு). இவர்களுக்கு வேக கட்டுப்பாடு இல்லை, ஆனால் இருக்கைகளை தவிர நின்று கொண்டே செல்லவும் பயணிகளை ஏற்றி விடுகின்றனர் இதனால் அனைவருக்கும் சிரமம்.

அரசு விரைவு பேருந்து லாபமில்லையாம், கடந்த மாதம் சம்பளமே பத்து நாட்கள் கழித்து குடுத்தனராம். மற்ற கிளைகள் லாபத்தில் ஓடினாலும் இவை அப்படி இல்லை காரணம் பகலில் ஓடும் பேருந்துகள் காலியாக ஓடுகின்றனவாம் மேலும் அதிக அதிகாரிகள், நிர்வாக சீர்கேடு என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

Friday, July 4, 2008

வழக்கமான விதிமீறல்

அன்று இரவு நண்பனை கூட்டிவர வண்டியை எடுத்துக்கிளம்பினேன், எல்லாம் நன்றாகத்தான் சென்றது, கத்திபாரவிலிருந்து ஏர்போர்ட் செல்லுமிடத்தில் முன் சென்று கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார் இடதுபுறத்தில் 2 வீலரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை இடித்துச்சென்றது. அருகிலிருந்த நபர்கள் மற்றும் வண்டிக்கு பின்னால் வந்தவர்கள் அவருக்கு உதவச்செல்லவே, நான் நிற்காமல் சென்ற அந்த வண்டியைத்துரத்த முயன்றேன் நீண்ட தூரம் துரத்தி ஒருமுறை அருகில் செல்லும்போது வண்டியை நிருத்தச்சொன்னேன். அந்த ஓட்டுநரோ எதற்கு என்று கேட்க, ஒரு விபத்தை செய்துவிட்டு நிற்காமல் வருகிறாயே என்று கூறினேன். அதற்க்கு அவர் "நீயும் அடிபட்டு சாக வேண்டுமா" என்று கூறியபடியே நிற்காமல் செல்லவே நான் அடுத்து வரும் சிக்னலில் இருக்கும் காவலரிடம் கூறலாம் என்று நினைத்துச்சென்றால் ஏர்போர்ட் வரை சாலையில் எந்த காவலருமில்லை.

ஏர்போர்ட் சென்ற பொது அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் நடந்ததை கூறி என்ன செய்வது என்று கேட்க. அவர்கள் விபத்து மிகப்பெரியதா? ஆளுக்கு அடியா? வண்டிக்கு பெரிய சேதமா? என்று கேள்வி கேட்டனர். எனக்கு அதையெல்லாம் பார்க்க நேரமில்லை ஏனெனில் அடித்த வண்டி நிற்கவில்லை அதை தொடர முடிவு செய்து தொடர்ந்தேன் என்று கூற. அதற்க்கு அவர்கள் அடிபட்டவர் புகார் குடுக்காமல் எதுவும் செய்ய முடியாது தம்பி, நீங்கள் வேண்டுமென்றால் திரும்பி போகும்போது கத்திப்பாராவில் சென்று அங்கு இருக்கும் அதிகாரியிடம் கேளுங்கள் எவரேனும் புகார் குடுத்து இருந்தால் அவரிடம் வண்டி நம்பரை தெரிவியுங்கள் என்றார். அதில் அவர் எனக்கு நன்றி சொன்னது மிகவும் ஆச்சரியம் எதற்க்காக எனக்கு நன்றி கூறினார் என்று தெரியவில்லை.

திரும்பி அவ்வழியே செல்லும்போது அங்குள்ள காவலரிடம் ஏதும் விபத்து பற்றி புகார் வந்திருக்கிறதா என்று நான் கேட்க, அவர் அப்படி ஏதும் புகார் இல்லை என்று கூறிவிட்டார். நான் குறித்து வைத்த வண்டி எண் TN 01 P 7275 எந்தவித உபயோகத்திற்கும் இல்லாமல் சென்றது.

நேற்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருக்கும்போது வலது ஓரத்தில் சென்ற அரசுப்பேருந்து திடீரென்று இடதுபுறம் திரும்ப பக்கவாட்டில் சென்ற ஆட்டோ இடதுபுறம் சென்று அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மோதியது. அடி பலமில்லை இருந்தாலும் இது தவிர்க்கபட்டிருக்கலாம். இதில் தப்பு யார் மீது? அந்த பேருந்து ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் திருப்பியதாலா? இல்லை ஆட்டோ அவர் பாதையில் விட்டு இடதுபுறம் சென்றதாலா?

சமீபத்தில் எதிலோ ஒரு நாளிதழில் படித்தது, சென்னையில் ஏற்ப்படும் சாலைவிதி மீறலில் பெரும்பான்மை சதவிகிதம் அரசுப்பேருந்து ஓட்டுனர் செய்வதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். தினசரி வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் செயல் இது, என்னைப்பொறுத்தவரை 90 சதவிகித மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் சாலை விதிமீறலில் ஈடுபடுகின்றனர். எனக்கு இவ்வாறு செய்யும் ஓட்டுனர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற கோவம் வருகிறது. எனது தந்தையும் ஒரு அரசுப்பேருந்து ஓட்டுனர் அனால் அவர் தொலைதூர வண்டி இயக்குவதால் இந்த தவறை செய்கிறாரா என்று தெரியவில்லை, எனக்கு சாலை விதிமுறைகளையும், பேருந்து ஓட்டுனர்களின் மனநிலையையும் சொல்லிக்குடுத்தது அவர் மட்டுமே. இன்றும் அவர் சொல்லிக்குடுத்ததை மட்டுமே நம்பி நான் வண்டி ஓட்டிக்கொண்டு உள்ளேன்.

அடுத்து வருவது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், இவர்களை பற்றி என்ன சொல்ல? அனைவருக்கும் தெரியும். அடுத்து பைக் ஓட்டுபவர்கள், சந்து கிடைத்தால் போதும் பின்னால் வருபவர் என்ன அனாலும் பரவாயிலை அவர் மட்டும் சென்றால் போதும் என்று செல்வது. இந்த வேன் ஓட்டுனர்கள் கதவை திறந்து வைத்துத்தான் ஓட்டுவார்கள்.

கடைசியாக நடந்து செல்பவர்கள், சாலையை கடக்க அதற்கான பாதையை உபயோகிப்பது இவர்களுக்கு பிடிக்காது, நாடு சாலையில் திடீரென்று குதிப்பார்கள், வரும் வாகனங்கள் இவர்களை இடிக்காமல் செல்ல வேண்டி வேறெங்காவது செல்ல வேண்டும்.

இந்த கணக்கில் மென்பொருள் அலுவலக பேருந்துகளையும், கார்களையும், கல்வி நிறுவன பேருந்துகளையும், நான் மறக்கவில்லை.

சில எளிதான அறிவுரைகள்: சென்னையில் மாநகர பேருந்திற்கு பின் செல்லும்போது அந்த பேருந்து எங்கு செல்கிறது, வெள்ளை நிற அறிவிப்பு பலகையா என்று பார்த்து அதன்படி நகர்ந்து செல்லுங்கள். சில பேருந்துகள் திடீரென்று திரும்பும் இடத்தை யூகிக்க முடியும்.

எந்த காரணத்தைக்கொண்டும் ஆட்டோவின் பின்னால் செல்ல வேண்டாம்.

யார் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் நீங்கள் விதிகளை மதியுங்கள், ஏனென்றால் ஏதேனும் விபத்து நடக்கும்பட்சத்தில் உங்கள் மீது தப்பு சொல்ல முடியாது.

தேவையற்ற இடத்தில் தேவையற்ற வேகம் வேண்டாம், இடமறிந்து வேகத்தை கூட்ட வேண்டும்.

முன் செல்லும் வாகனம் எவ்வாறு பயணப்படும் என்று மனக்கணக்கு எப்போதும் அவசியம்.

வலதுபுறம் வரும் வண்டியை கவனிக்காமல் எப்போது முந்துதல் கூடாது.

நகரின் வெளியில், நெடுஞ்சாலையில் செல்லும்போது எக்காரணத்தைக்கொண்டும் சாலையை விட்டு இறங்க வேண்டாம்.