Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, April 5, 2012

முடிவு


இந்த ஒரு வார்த்தை பலரின் வாழ்க்கையில் பல திருப்பத்தை ஏற்படுத்தியது, ஒருவர் எடுக்கும் எந்த ஒரு முடிவும் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிடும்.



சிறு வயதில் இருந்தே எனக்கு இந்த முடிவு எடுப்பதில் சரியான அனுபவம் கிடையாது, நான் எடுத்த சில முடிவுகள் சரியாக அமைந்தாலும் பல முடிவுகள் தவறாகவே அமைந்தது. என் வாழ்க்கையின் சில முக்கிய முடிவுகள்



பள்ளியில் படிக்கும்போது ஐந்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன் பள்ளி ஆசிரியர் எனது இடது கை பழக்கத்தை விட்டொழிக்க எடுத்த முயற்சிகளால் ஓரளவு வெற்றி பெற்று என்னை வலது கையில் எழுத வைத்து இருந்தார்.  எக்காரணத்தை கொண்டும் இடது கையில் எழுதுவதை மறக்கக்கூடாது என்று முடிவெடுத்து இன்று வரை இரு கையிலும் எழுதும் திறமை பெற்றுள்ளேன். அன்று எடுத்த அந்த முடிவு இன்றும் என்னை ஒரு தனித்துவம் வாய்ந்த ஒருவனாக அடையாளப்படுத்துகிறது.




சிறுவயதில் மிகவும் தன்னம்பிக்கை வைத்த சிறுவனாக இருந்த நாட்களில் நீச்சல் கற்றுக்கொள்ள செல்லும்போது, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் தாத்தா ஊரில் இருந்து எங்க ஊருக்கு செல்ல வேண்டும், நான் நீச்சல் கற்றுக்கொள்வது என முடிவெடுத்தது பிற்காலத்தில் என்னை காப்பாற்றியது.

 
தமிழ் மீடியத்தில் நன்றாக புரிந்து படித்துக்கொண்டு இருந்தவனை கல்லூரிகாலத்தில் எளிதாக இருக்கும் என்று ஆறாம் வகுப்பில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் சேர்க்க நினைத்தபோது, புரியாமல் ஆங்கிலத்தில் படிப்பதை விட புரிந்து தமிழில் படிக்கிறேன் என்று முடிவெடுத்தேன்.



பின்னர் எட்டாம் வகுப்பில் மறுபடியும் மூளை சலவை செய்யப்பட்டு டைக்கும் ஷூக்கும் ஆசைப்பட்டு ஆங்கில வழிக்கல்வியில் மாறினேன்.



தமிழ் மீடியத்தில் இருக்கும் வரை மிக மிக நல்ல பையன், ஆங்கில மீடியமே எனக்கு பலவற்றை கற்றுக்கொடுத்தது, பொய் சொல்ல, மனப்பாடம் செய்து படிக்க, பிட் அடிக்க, ஏமாற்ற, கெட்ட வார்த்தை பேச என்று ஆனால் எளிதில் இரண்டே வருடத்தில் ஆங்கில வழி கல்வியில் ஒன்றிவிட்டேன் , சுமாரான மாணவனாக மாறி மனப்பாடத்திலேயே படிக்க கற்றுவிட்டேன், மேற்கூறிய இரண்டு முடிவுகளிலும் என்னால் எதுசரி எது தவறு என அறுதியிட்டு கூற முடியவில்லை.



பத்தாம் வகுப்பிற்கு பிறகு எந்த குரூப் எடுப்பது என்று வந்தபோது என் சுயமான முடிவெடுக்கும் நிலைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்தது, ஆமாம் வீட்டில் இருந்த சகோதர சகோதரி இரண்டு பெரும் முதல் குரூப் ஆகையால் முதல் குரூப் தவிர வேறு எதுவும் எனக்கு ஆப்சன் ஆகக்கூட கொடுக்கப்படவில்லை, அதிலும் உயிரியல் குரூப் தான்.


மேல்நிலைப்பள்ளியில் அதிக சுதந்திரம் காரணமாக மேலும் பள்ளியை கட் அடித்து, ஊர் சுற்றி படிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும் கவலை இல்லாத எனக்கான வாழ்க்கையை வாழ்ந்தேன். மருத்துவம் என்பதை கண்டிப்பாக படிக்கக்கூடாது என்று முடிவெடுத்து பொறியியல் படிக்க மட்டுமே முயற்சித்தேன்.


பொறியியல் படிக்க முயற்சி செய்தாலும் மதிப்பெண் பத்தாததால் ஒரு வருடம் மறுபடியும் படிக்கவா இல்லை ஏதும் கலை கல்லூரியில் படிக்கவா என்று வந்த போது மறுபடியும் ஒரு வருடம் படிக்க என முடிவெடுக்கப்பட்டு படித்தேன்,




தனித்தேர்வருக்கான பயிற்சிப்பளியில் சேரவா இல்லை நானே படிக்கவா என வந்தபோது நானே படிக்க என நிர்பந்திக்கப்பட்டு ஒரு வழியாக கஷ்ட்டப்பட்டு பொறியியல் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கும்வரை வந்தேன்.


கல்லூரியில் எந்த துறை எடுப்பது கணிப்பொறியியல் அல்லது ஆட்டோமொபைல் என முடிவெடுத்தபோது இயந்திரவியல் என நிர்பந்திக்கப்பட்டேன்.


இயந்திரவியலை புடிக்காமல் படிக்கும்போது 5 பேப்பர் அரியர் வச்சு பின்னர் புத்தருக்கு போதி மரத்தடியில் வந்தது போல எனக்கு மொட்டைமாடியில் நியாநோதயம் வந்து பின்னர் ஒரு வழியாக புடிக்காவிட்டாலும் படித்து முடித்தேன்.


கணினி துறையில் வேலைக்கு முயற்சி செய்யலாம் என நினைத்திருக்க இயந்திரவியல் துறையில் சேர நிர்பந்திக்கப்பட்டு சேர்ந்தேன், வேலையிலும் வாழ்க்கையில் எது பிடிக்காத ஒரு வேலையோ அதை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதையும் பின்பற்றி அதிலும் ஓரளவிற்கு வெற்றி பெற்று இருக்கிறேன்.


வாழ்க்கையில் எல்லோரையும் போல வாழ்ந்து முடிவெடுத்து இது வரை வந்த எனக்கு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான  முடிவைமட்டும் நானோ என்னை சார்ந்தவர்களோ எடுக்காமல் எந்த ஒரு ஜோசியக்காரனோ எடுக்கிறான் எனும்போது எனது வருத்தத்தை பதிவு செய்ய இது ஒரு வழி.


என்ன செய்ய வாழ்க்கை எனபது நீ உனக்காக நீயே முடிவெடுத்து வாழ்வது ஒரு வகை, மற்றவர்கள் உனக்காக முடிவெடுத்து நீ வாழ்வது மற்றொரு வகை. இதில் நான் இரண்டாம் வகையில் வாழ நிர்பந்திக்கப்பட்டு உள்ளேன்.


ஆனாலும் எந்த நாதாரியோ நான் ஜோசியக்காரன் என சொல்லி அவன் பொழைப்பை தேட எத்தனையோ பேர் பொழைப்பை கெடுக்கிறான்.

Monday, January 23, 2012

அரசு போக்குவரத்துக் கழகம்

சென்னையில் இருந்து கரூருக்கு நான் சென்ற அனுபவம், கடந்த மாதம் திடிரென்று ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்து வழக்கம் போல ஒரு நாள் முன்னாடி டிக்கெட் பார்த்தால் எந்த பேருந்திலும் டிக்கெட் இல்லை. சென்னையில் இருந்து கரூருக்கு கேபிஎன், விவேகம், ராயல் இப்போ புதுசா பாலாஜி என 4 நான் ஏசி பேருந்துகளும் பர்வீண் மற்றும் திருச்சி கரூர் வழியாக கோவை செல்லும் எஸ்ஆர் என்ற ஏசி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு அல்ட்ரா டிலக்ஸ் பேருந்துகளும் அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இரண்டு டிலக்ஸ் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் கரூரில் அரசு விரைவுப்போக்குவரத்து கழகத்தின் டிப்போ இருந்தபோது ஒரு நாளைக்கு பகலில் 5 பேருந்தும் இரவில் 5 பேருந்தும் சென்னைக்கு இயக்கப்பட்டன  ஆனால் இன்று இரண்டு பேருந்து மட்டுமே.


இதில் எஸ் ஆர் பேருந்து சமீபத்தில் ஆரம்பித்தது, இவர்கள் வழித்தடமும் கட்டணமும் மிக அருமை. எக்மோரில் கிளம்பி திருவான்ம்யூர் வந்து வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம் வழியாக தாம்பரம் வந்து அங்கிருந்து திருச்சி கரூர் வழியாக கோவை செல்கின்றனர். இதனால் வேளச்சேரி, திருவான்ம்யூர் மேடவாக்கம் வழித்தடத்தில் உள்ள பலர் பயன் பெறுகின்றனர், பேருந்தில் பாதிபேர் வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதியில் ஏறுகின்றனர். வெள்ளி இரவு தவிர மற்ற நாள்களில் சென்னை டு கரூர் டிக்கெட் ரூபாய் நானூறு. ஏசி பேருந்து. அரசு பேருந்திலேயே முநூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய் டிக்கெட் அதுக்கு கோயம்பேடு போக அடித்து பிடித்து போகணும், நேரமாகிட்டா ஆட்டோக்கு தண்டம் அழுகனும் அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. வெள்ளிகிழமை ஐநூறு. கேபிஎன் எப்பவுமே சரியான நேரத்துக்கு செல்ல மாட்டார்கள், சமீப காலமாக சர்வீஸ் மோசம், விவேகமும் அதே போலத்தான், ராயல் சர்வீஸ் பரவாயில்லை, பாலாஜி புதுசு இனிதான் எப்படி என்று தெரிய வேண்டும். அரசுப்பேருந்து கும்பகோணம் டிலக்ஸ் வண்டி நேரம் சரியாக போய்விடுவர் ஆனால் வண்டி மோசம், வசதியாக இருக்காது, மேலும் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டும் பயணிகள் காலுக்கு கீழே கூட உட்கார வைத்து எல்லோருக்கும் அசவுகரியத்தை கொடுப்பார். அரசு விரைவுபோக்குவரத்து கழகம் அதிக ஆட்களை ஏற்ற மாட்டார்கள் , மித வேகம் சொகுசாகவும் இருக்கும் சுத்தம் கொஞ்சம் கம்மியாக இருக்கும் (கேபிஎன் மற்றும் விவேகம் பேருந்தும் இது போலத்தான்)நேரம் கூட ஓரளவுக்கு சரியாக செல்வர் என்ன எப்போதாவது வண்டி பாதியில்  நின்றுவிட்டால் தாமதம் ஆகும்.


இதை விடுங்க, அன்று எந்த தனியார் பேருந்திலும் டிக்கெட் இல்லை, அரசுப்பேருந்தில் விரைவுப்போக்குவரத்து கழக பேருந்திலும் இல்லை அடுத்து டிலக்ஸ் பேருந்தில் இருந்தது,தற்போது ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்பதால் நண்பனை அழைத்து பதிவு செய்ய சொன்னேன். என்னுடைய பான் கார்டு கொடுத்து பதிவு செய்தாயிற்று. வெள்ளிக்கிழமை 8 . 45 மணிக்கு பேருந்து, வேளச்சேரியில் இருந்து D 70 பேருந்துக்கு காத்திருந்தால் ஏகப்பட்ட கூட்டம்.  பெரிய பையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என ஆட்டோ ஒன்றை பிடித்தேன், சிறிது நேரம் பேரம் பேசி ஏறினேன், ஏறும்போது ஆட்டோ ஓட்டுனர் மேல் சரியாக கோவம் அதிகம் கேட்கிறார் என்று, ஒரு மணிநேர பயணத்தில் அவரிடம் பேச்சு கொடுத்து வந்ததில் அவரின் நியாயமும் புரிந்தது. காதல் திருமணம் புரிந்து கொண்டு வந்து ஆட்டோ ஓட்டி சம்பாதிப்பதாகவும் முன்பு போல் இப்போது வருமானம் இல்லையம். இப்போது குட்டியானை (டாட்டா ஏஸ்) ஷேர் ஆட்டோ வந்துவிட்டதால் நிறைய பேர் அதில் சென்று விடுகிறார்கள், மேலும் இந்த மாதிரி நீண்ட தூர சவாரி எதுவும் வருவதில்லை,  உள்ளிருந்து பேருந்து நிலையம் வரும் சவாரிகள் அதிகமாக வருகின்றன அதில் ஒரு சவாரிக்கு நாற்பது ரூபாய் சம்பாதிக்க முடியும் ஒரு நாளில் நானூறு முதல் ஐநூறு ரூபாய் வரும் அதில் ஆட்டோ ஓனருக்கு 150 மேலும் சாப்பாட்டு செலவு 50 போக வீட்டுக்கு 300 கொடுப்பேன். பையன் பள்ளி செலவு போக கஷ்ட ஜீவனம் என்று சொன்னார். மேலும் தன்னைப்போல ஒரு சாரரும் ஆட்டோ ஓட்டுனராக இருந்து நேர்மையாக சம்பாதிப்பதாகவும் ஆனால் ஒரு சாரார் அநியாயத்துக்கு  கேட்டு மொத்த ஓட்டுனருக்கும் கெட்ட பெயர் வாங்கித்தருகின்றனர் என கூறினார். எப்படியோ சரியாக 8 .35 க்கு கோயம்பேட்டில் விட்டு விட்டார், பேருந்தை கண்டுபிடித்து செல்வதற்கு 5 நிமிடம், அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு திருச்சி பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் உரக்க என்னை கூப்பிடவே நான் திரும்பல ஏனென்றால் நான் என் பேருந்தை கண்டுபிடித்துவிட்டேன் அதானல் கவனிக்கவில்லை. அவர்கள் மறுபடியும் என்னவோ ஏலக்கடையில் ஏலம் விடுவது போல நீல சட்ட வா என ஒருமையில் அழைக்க கடுப்புடன் சென்றேன், எந்த பேருந்து என கேட்டுக்கொண்டே கையில் இருந்த பிரிண்ட் அவுட்டை பிடுங்கினார்கள் பின்னர் அவர்கள் எதோ உதவி செய்வதை போல அந்த பேருந்துதான் போ என நன் ஏற்கனவே கண்டுபிடித்து சென்ற பேருந்தை காட்டினார்கள். நான் கடுப்போடு அய்யா நான் ஏற்கனவே கண்டுபிடித்து போனேன் என்னை ஏலம் விடுவது போல கூப்பிட்டு எதுக்கு இது, உங்ககிட்ட உதவி கேட்ட மட்டும் செய்யுங்க என்று சொல்லி எனது பேருந்துக்கு வந்தேன்.

பேருந்தில் ஏறும்போதே நடத்துனர் எந்த சீட் என்றார், எனது இருக்கை எண் 10 , சொன்ன உடன் ஆன்லைனா எப்போ வரதுன்னு தெரியாதா? இவனுக பாட்டுக்கு ஆன்லைன் டிக்கெட் ஆப்சன் புதுசா போட்டுட்டாங்க அவன் அவன் செய்துவிட்டு வந்து நம்ம தாலிய அறுக்கானுங்க என்று கூறி போய் உட்கார் என்று (மறுபடியும் ஒருமை).பேருந்து கிளம்பும் நேரத்துக்கு இரண்டு நிமிடமிருக்கும்போது நடத்துனரின் புலம்பல் அதிகரித்தது, ஓட்டுனர் கிளம்பலாமா என கேட்க இன்னும் இரண்டு ********ங்க இன்னும் வரல இருங்க போலாம் என கூறினார், பின்னர் ஒரு ஐந்து நிமிடம் பொருத்து இருந்து வண்டியை கிளப்பினர். அதுவரை படியில் நின்றுகொண்டு இருந்தவரிடம் எனக்கு பக்கத்துக்கு இருக்கையில் அமர சொன்னார் நடத்துனர். அவரும் என் அருகில் அமர்ந்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தார், பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வர முயற்சி செய்து கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் செல்போனில் பேசினார், நல்ல வேலை சீட் கிடைச்சுருச்சு என மகிழ்ச்சியாய் பேச, அருகில் இருந்த பெண் கூட செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார் ஆனால் அவர் தலையாட்டலும் அவரின் பார்வையும் இவரைப்பார்த்து இருந்தது, நமக்கு எதுக்கு இந்த புலன் விசாரணை என்று தூங்க முயற்சி செய்தேன்.
பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது, ஒருவர் ஓடி வந்து வண்டியை நிறுத்தினார். அவர் இதில் டிக்கெட் பதிவு செய்து இருப்பதாகவும் சிறிது நேரம் ஆகிவிட்டதாகவும் கூறினார், நடத்துனர் நாங்கள் சிறிது நேரம் வெயிட் செய்து பார்த்தோம் நீங்க உங்க இஷ்டத்துக்கு வந்தா நாங்க என்ன பண்ண, வேற ஒருவருக்கு சீட் கொடுத்தாச்சு இப்ப என்ன பண்ணுவது? என்னால் ஒன்னும் செய்ய முடியாது என்றவர் வண்டியை கிளம்ப சொன்னார். பின்னர் அந்த பயணி நான் ஆர்ஐ பையன் என சொல்ல வண்டி சடன் ஸ்டாப். உடனே அவரை ஏற்றிக்கொண்டு கிளம்பியது, என் அருகில் இருந்தவரை வேறு ஒரு இருக்கைக்கு மாற்றிக்கொண்டு அதில் அந்த பையனை அமர வைத்தார். பின்னர் அவரிடம் அப்பாக்கு டிரான்ஸ்பார் வந்தாச்சா, என்ன பண்றீங்க என கதை பேசிவிட்டு சிறிதுநேரத்தில் என்னிடம் டிக்கெட் கேட்டார். அப்போது தான் ஆரம்பித்தது என்னுடைய நல்ல நேரம்.

டிக்கெட் பிரிண்ட் அவுட் கொடுத்தேன் உடனே என்னுடைய பான் கார்டு கேட்டார், நானும் எடுத்து கொடுத்தேன், பின்னர் பான் கார்டை என்னிடம் கொடுத்துவிட்டு உடனே ஒரு நிமிடம் உங்க பான் கார்டு கொடுங்க என்றார், நானும் திருப்பிக்கொடுக்கவே அவர் இதில் உங்க பேர் மாற்றி இருக்கு என்றார், நான் பார்த்தபோது டிக்கெட் பூக்செய்த நண்பன் எனது பேரில் ஒரு எழுத்தை மறந்து விட்டு இருந்தான். நான் டிக்கெட்டிலும் பான் கார்டிலும் ஒரே பான் நம்பர் தான் இருக்கு மேலும் பெயர் எழுதும்போது தவறாக ஒரு எழுத்தை மறந்து இருப்பார்கள் என்றேன். உடனே அதெல்லாம் எனக்கு தெரியாது டிக்கெட்டில் இருக்கும் பேர்க்கு மட்டுமே நீங்க சான்று கட்டனும் இரண்டும் வேராக இருந்தால் இறங்கிகோங்க, நான் பெருங்களத்தூரில் இறக்கிவிட்டுவிடுகிறேன் என கூறினார். நான் முடியாது எந்த விதத்தில் இறக்கி விடுவீர்கள் டிக்கெட் பதிவு செய்தபோது ஒரு எழுத்து விடுபட்டாலும் எனது பெயர் மாறவில்லையே ( தனராஜ் என்பதற்கு பதில் தன்ராஜ் ) என கூறினேன், உடனே ஒருமையில் இறங்கினார். இந்த பேச்சல்லாம் என்கிட்டே வச்சுக்காத, நான் ரூல்ஸ் படித்தான் செய்யறேன் வேணும் என்றால் போய் கம்ப்ளைன் செய்துக்கோ என்றார். நான் கம்ப்ளைன் செய்யத்தான் போகிறேன் ஆனா அதுக்கு உங்க பெயரும் பணி எண்ணையும் கொடுங்க என்றேன், அவர் அதுக்கு பஸ் ரூட் சொல்லு அவங்களுக்கு தெரியும் என்றார். அவர் பெயர் பாட்ஜ் அணிந்து இருக்கவில்லை. என்னால் இறங்க முடியாது அப்படி நான் இறங்க வேண்டும் என்றால் நீங்கள் என்னிடம் எழுதி கொடுங்கள் இந்த தவறால் பயணி பயணிக்க முடியாது என்று நான் மேற்கொண்டு பார்த்துகொள்கிறேன் என கூறினேன். டிக்கெட்டை தப்பா பதிவு செய்துவிட்டு என்கிட்ட நியாயம் பேசறியா? என மறுபடியும் ஆரம்பிக்க, அருகில் இருந்த அந்த பையன் " அண்ணா பாவம் அண்ணா விட்ருங்க" என சிபாரிசு செய்தான், எனக்கு வந்த கோபத்தில் அவனிடம் நீங்க எனகொன்றும் சிபாரிசு செய்ய தேவை இல்லை உங்க வேலையை பார்த்துக்கொண்டு இருந்தால் போதும் என கூறவே நடத்துனருக்கு மறுபடியும் கோபம் வந்தது. சக ஊழியரின் பையனை அதுவும் அவர்க்கு மேல் உள்ள ஊழியரின் பையனை இப்படி சொன்னால்? இதற்காகவே உன்னை பேருந்தில் இருந்து இறக்கி விடலாம் தெரியுமா என கூறினார். நான் உங்களால் முடிந்தால் செய்யுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறிவிட்டு அவரிடம் என் பான் கார்டை வாங்கிக்கொண்டு அமர்ந்தேன்.

பெருங்களத்தூரில் இன்னொரு நபர் ஏறவில்லை அதனால் முதலில் ஏற்றிய நபரிடம் அந்த இருக்கையில் அமர சொல்லிவிட்டு, நல்ல வேலை இவன் வரல இல்லன்ன ஒரு பஞ்சாயத்து ஆகிருக்கும் போல என ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு என்னை பார்த்து முறைத்துவிட்டு அமர்ந்தார். சரி இத்தோடு முடிந்தது என நினைத்து பயணத்தை தொடர்ந்தேன்.
காலையில் கரூர் சென்று இறங்கும்போது இதே போல வேற யாரிடமாது செய்து ஒரு நாள் வாங்க போறான் பாரு என்று என் காதுபட கூறினார். நான் கடைசி படியில் நின்று இறங்காமல் அவரை பார்த்து முறைத்தேன். என்ன முறைக்கற அதான் ஊரு வந்துட்டல்ல இறங்கி போ என்றார். நீங்க தேவை இல்லாம பேசறீங்க,நேற்று இரவு நடந்தது அதோட முடிந்தது மறுபடியும் ஆரம்பிக்கணும்னா நான் ரெடி என்றேன், உடனே அவர் என்ன உங்க ஊர் என்று துள்ளுரியா இந்த வேலை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே என சொல்ல, நான் எந்த ஊரா இருந்தாலும் பாத்துக்குவேன் அதும் இது என் ஊரு இங்கயே என்கிட்ட பேசினா நல்லா இருக்காது என்றேன், நம்ம ஊரில் நம்மகிட்ட இப்படி பேசுகிறாரே என கோவத்தில்.
இருவரும் கீழே இறங்கி வார்த்தைகள் தடிக்க ஓட்டுனர் விடுங்க தம்பி வீட்டுக்கு போங்க என்று என்னை சமாதானப்படுத்தினார். நான் எனது சகோதரரை அழைத்து ஒரு சிறிய பிரச்சனை பேருந்தில் என கூற அவர் உடனே வருகிறேன் என்று கூறினார். அதற்குள் என்ன ஆள் கூப்பிடுரியா எனக்கும் தெரியும், அரசு ஊழியரிடம் வம்பு செய்தால் உனக்கு தான் பிரச்சன ஒழுங்கா ஓடிடு என்று கூறவே. அது அரசு ஊழியருக்கு நீங்க தான் உங்க வேலைய ஒழுங்கா செய்யலியே அப்புறம் எப்படி ஊழியர் அவீங்க என சொல்லி சிரித்தேன். அதற்குள் சத்தம் கேட்டு அரசு விரைவுப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்தவர் வந்தார். ( பேருந்து நின்றது அந்த அலுவலகத்துக்கு அருகில் ) மேலும் அங்கு புத்தக கடை வைத்திருப்பவரும் வந்தார். வந்த இருவரும் என்னதம்பி என்ன பிரச்சனை என்று என்னை பார்த்து கேட்க, இவர்தான் நேற்றில் இருந்து பிரச்சனை செய்கிறார் என்று நடந்தவற்றை கூறினேன்.
இடையில் அவரும் ஸ்டாப் கிட்ட வம்பு பண்றான் என்னனு கேளு என்று சொல்ல, அருகில் இருந்த ஒருவர் இவர் எல்லாம் மரியாதையா தான் பேசினார் நடத்துனர்தான் கொஞ்சம் ஓவரா பேசினார் என்றார். அரசு விரைவுப்போக்குவரத்து அலுவலர் ஏன்பா நம்ம வண்டில வர வேண்டியதான என்று கூறிவிட்டு, நடத்துனரிடம் நீங்க ஏன் எல்லோரிடமும் சண்டை போடுகிறீர்கள் அதுவும் நம்ம ஸ்டாப் பையனிடம் கூடவா? என்று கேட்க அவர் கொஞ்சம் திகைத்தார்.


நான் அவங்க ஜி எம் கிட்ட புகார் கொடுக்கபோறேன் என்று கூறினேன். ரொம்ப ஓவரா பேசிட்டார் உன்னால முடிஞ்சத பண்ணு சொல்லிட்டார் அதனால் நான் என்னால என்ன பண்ண முடியும் என காட்றேன் என்று கூறவே. என் அப்பாவின் நண்பர் விடுப்பா என்று கூறி, நடத்துனரிடம் மறுபடியும் சமாதனம் பேசினார். சின்ன விசயத்த பெருசாக்காத என்று கூறி சமாதனம் செய்ய, அதற்குள் என் அண்ணனிடம் இருந்து போன் வந்தது கிளம்பிவிட்டதாகவும் ஏதும் பிரச்னை என்றால் அரசு விரைவுப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருக்க சொன்னார். பின்னர் அப்பாவின் நண்பர் ஏன் தம்பி பிரச்னையை பெருசாக்கறீங்க என்று என்னிடம் கூறி விட்டு நடத்துனரிடம் நீ செய்த வேலைக்கு இப்போ உனக்கு தான் பிரச்னை, பையன் பெரிய அளவுக்கு கொண்டு போறேன், ஜிஎம்க்கு மேல போகும் ஒழுங்கா விட்டுவிடு என சொல்லி அவர்க்கு புரிய வைத்தார். உடனே அவர் ஆளே மாறிப்போய் இருந்தார், என்ன தம்பி இத நேற்றே சொல்லி இருந்தீங்க என்றால் இந்த பேச்சே வந்து இருக்காதே என்று கூறினார். நீங்க வெயிட் செய்தது எல்லாம் சரி ஆனால் பேச்சில் மரியாதையை இல்லாவிட்டால் எவனும் அரசுப்பேருந்தில் ஏற மாட்டான் இனிமேலாவது மாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி சென்றேன்.

அரசுப்பேருந்தின் நன்மைகள் என்னவென்றால் கிளம்பும் முன் சிறிது நேரம் காத்திருப்பார்கள், பேருந்து ஏதும் பிரச்னை என்றாலும் சிரமம் பார்க்காமல் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அதி வேகம் செல்ல மாட்டார்கள், அதனால் விபத்தில் உயிரிழப்புகள் தனியார் பேருந்தை விட கம்மி என்பது என் கருத்து.ஆனால் இவர்கள் போல பேருந்துக்கு தாங்கள்தான் ஓனர் என்ற நினைத்துக்கொண்டு இருந்தால் எவ்வளவு கட்டணம் ஏறினாலும் பேருந்து லாபத்தில் நடக்காது.






Tuesday, October 26, 2010

ஒரு நட்பு, ஒரு ஷாப்பிங், ஒரு டின்னர், ஒரு காதல் (?) பின்னர் ஒரு விபத்து

ஞாயிறு நல்லாத்தான் போச்சு சோம்பேரித்தனமா, மாலை தோழியிடம் தொலைபேசினேன்,  அவர் மற்றும் ஒரு நண்பர் வருவதால் அவருக்கு ஷாப்பிங் செய்ய போவதாக சொல்ல, நானும் சோம்பேறி என்ற அவப்பெயரை துடைக்க கிளம்பிபோவதாக முடிவு.

அவர்களுக்கு சொல்லாமல் நண்பன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றேன். அடையாரில் உள்ள style one  என்ற கடைக்கு. ஏற்கனவே அங்கு சென்ற அனுபவம் இருப்பதால் நன் எதையும் வாங்கும் எண்ணத்துடன் போகவில்லை. நண்பன் மட்டும் ஷாப்பிங் செய்ய நான் சும்மா வேடிக்கை பார்த்தேன்.

எல்லாமே விலை அதிகம் மேலும் அங்கு தோழி வாடிக்கையாளர் சலுகை அட்டை வைத்திருந்தாலும் அதில் இரண்டு சதவிகிதம் மட்டுமே தள்ளுபடி, என்னிடம் உள்ள rex  வாடிக்கையாள அட்டையில் பத்து சதவிகிதம் தள்ளுபடி. மேலும் விலையும் இதைவிட குறைவு.  ஷாப்பிங் முடித்து கிளம்பும்போது பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஒரு பெண்மணி எங்களை கேவலமாக பார்த்தார். ஆமா நாங்க அடித்த கமெண்ட் ஏலத்தையும் கேட்ட அவர்  இதுங்கல்லாம் எங்க உருப்பட போகுது என்று நினைத்திருக்கலாம். அதும் குறிப்பாக ஒரு செர்வானி ஒன்றை பார்த்து அதன் விலையை கேட்டவுடன் நான் இதை வாங்கணும் என்றால் நல்ல வசதியான மாமனாரத்தான் தேடனும் என்று சொல்லியபோது அவர் பார்வை கேவலமாய் இருந்தது. ( அவர் என்னைத்தான் கேவலமாய் பார்த்தார் என சொலவும் வேண்டுமா? அவர்க்கு கண்டிப்பாய் ஒரு பெண் இருக்க வேண்டும்.)


கடையை விட்டு வெளியே வந்து KFC யில் கொஞ்சம் கொறித்துவிட்டு கிளம்பலாம் என்று சென்றோம். அங்கு ஒரு பையன் அஞ்சு பொண்ணுங்களுடன் சும்மா வறுத்துகிட்டு இருந்தான். பின்னர் தெரிந்தது அவன் பெயர் சதீசாம், மானாட மயிலாடல டான்ஸ் ஆடி இருக்கானாம். நடத்துப்பா நடத்து.

தோழியை விட்டுவிட்டு மத்திய கைலாசில் இருந்து டைடல் பார்க் வழியாக வேளச்சேரி செல்லலாம் என்று இடப்புறம் திரும்பினேன். சாலை காலியாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள், இரவு நேரம், மெல்லிய சில்லென்ற காத்து, அனுபவித்து வண்டியை விரட்ட. 


கொஞ்ச தூரத்தில் என்னை விட அதிகமா ரசிக்க வேண்டிய, ரசித்துக்கொண்டு இருந்த ஒரு ஜோடி பைக்கில் எனக்கு முன்னாடி. வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும், கண்டிப்பா ஒருநாள் நாமும் இப்படி செல்ல வேண்டும் என நினைத்துகொண்டு அவர்களை முந்தி செல்ல முயன்றேன்.

அவர்களை கடக்கும்போது அந்தப்பெண் திடிரென்று தனது ரசனை அதிகமாக, இரண்டு கையையும் விரித்து லேசாக எழுந்து நின்று ரசிக்க முயல, நான் அவர்களை முந்த முயல. அவரின் கை என் கழுத்தை பதம் பார்த்தது. அனிச்சையாக நான் வலப்புறம் உடம்பை நெளித்து வண்டியை திருப்ப, ஒரு வழியாக பாலன்ஸ் செய்து நிறுத்தும்போது பின்னால் வந்த காரைப்பற்றி நினைத்தேன். நினைத்துகொண்டு திரும்பி பார்த்தால், பின்னால் வந்த கார் பிரேக் போட்டு வழுக்கிக்கொண்டு எனக்கு பின்னல் வேகமாக வந்தது. உயிர் பயம் இரண்டாவதுமுறையாக வந்தது எனக்கு.(முதன்முறை வேறொரு இடத்தில் வேறொரு ரோபத்தில் அதை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்) இன்றுகதை முடிந்தது என நினைத்து கண்ணை மூடும் முன்னர் அந்த கார் வலப்புறம் திரும்பி நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் முட்டியது.

என்ன செய்ய என நான் திகைத்து நிறைக்க, அந்த ஜோடியும் வண்டியை நிறுத்தி என்னை பார்க்க, கார் அப்படியே நிற்க. என் பின்னால் வந்தவர் அந்த ஜோடியை திட்டினார், நன் அவர்களை பார்த்து நிற்க சொல்லும் முன் அவர்கள் கிளம்பி விட்டனர். நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு காரை நெருங்கி பார்த்தேன். ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் திகைத்து பயந்து அமர்ந்திருந்தார். அவர்க்கு அடி இல்லை என உறுதி செய்துகொண்டு மெல்ல வண்டியை ஓரங்கட்டினோம். எனது நன்றியை அவர்க்கு தெரிவித்தேன். அவர் மட்டும் வண்டியை நிறுத்த வில்லை எனில் இன்று இந்தப்பதிவு இல்லை. அவர் வருத்ததுடன் என்னைப்பார்த்து "நல்ல வேலைங்க நான் பயந்துட்டேன் இனி வண்டிய வேகமா ஓட்ட மாட்டேன்" என கூறினார்.
 
காருக்கு சேதம் அதிகம், பம்பர், ஹெட் லைட், வலது புறம் கொஞ்சம் என அடி அதிகம். எனது தொலைபேசி எண்ணைக்கொடுத்து, எனது கார் இன்சூரன்சில் கிளைம் செய்துகொள்ள சொன்னேன் அவரிடம். அவர் மறுத்து விட்டார், ஏதும் உதவி வேண்டும் எனில் என்னை தொடர்பு கொள்வதாகவும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டார்.

அந்த பன்னாடை ஜோடி இளம்பி சென்று விட்டனர், அவள் மட்டும் நின்று இருந்தா அவ்வளவுதான், அம்மா உங்க காதலுக்கு எவன் சாவது? காதலுக்கு கண் இல்லை,  காதல் ஒரு உயிர்க்கொல்லி என இப்பொது தெரிந்தது. அசிங்க அசிங்கமாய் வருது,இதுக்கு மேல எழுதினா அப்புறம் அண்ணன் ஜாக்கி போல கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதுதான் நமக்கும் வேலை வெட்டி இருக்குதுல்ல. (எப்படி பதிவுலக அரசியல கோர்த்துட்டோமல) 

பைக் வாங்கும் கனவில் இருந்தேன் இதற்குப்பிறகு பைக்கை எடுக்கவே கூடாது என முடிவு செய்துவிட்டேன். கடந்த இரு மாதத்தில் அலுவலக நண்பர்கள் இருவரை விபத்தில் ஏற்கனவே இழந்தாயிற்று, இன்னொரு எண்ணிக்கை கூட வேண்டியது எப்படியோ தப்பி விட்டது. எப்போதும் காரில் போவதால் அன்றைக்கு பைக்கில் போகலாம் என சென்றேன், இனி எவ்வளவு செலவானாலும் கார் மட்டுமே.

நண்பர்களே தயவு செய்து பைக்கில் செல்லும்போது மெதுவாக கவனமுடன் செல்லவும், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

Friday, March 12, 2010

பசி

பசி வந்தால் பத்தும் பறந்து போகும், உண்மைதான் 

இருபத்து ஏழு வருட அனுபவம் இருந்தும் உபயோகமில்லை...........எப்போது கற்றுக்கொள்வது வாழ்க்கையை?

Thursday, March 11, 2010

பட்டப்பெயர்கள்


பட்டப்பெயர்கள் இதைப்பற்றி நினைத்தாலே மனதில் எல்லோருக்கும் கோவமும் சிரிப்பும் சேர்ந்து வரும். தன்னை அழைக்கும்போது வந்த கோவம் காலப்போக்கில் சிரிப்பாகவும் மாறிவிடும்.ஒருவரது இயலாமையை வைத்து அழைக்கப்படும் பட்டப்பெயர்கள் கண்டிப்பா அவங்கள காலம் முழுவதும் வருத்திக்கொண்டே இருக்கும், ஆனால் அவர்களது திறமையையோ அல்லது தனிதன்மையையோ வைத்து அழைக்கப்படும்போது ஒரு பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.

என்னைப்போல சிலர் இரண்டையும் அனுபவித்திருப்பார்கள், சின்ன வயதில் இருந்து எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களை இங்கு பார்க்கலாம்.



எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களையும் நான் வைத்த பெயர்களையும் பற்றி எழுதலாம் என தோன்றியது, தோன்றினால் உடனே செயல்படுத்த வேண்டுமே, அதான் இந்த பதிவு, நேத்து கொஞ்சம் சீரியஸ் பதிவு எழுதியதால் இன்று ஒரு மொக்கை, 

எனக்கு பட்டப்பெயரை பெற்றோரே முதன் முதலில் துவக்கி வைத்தனர், 

சின்னத்தம்பி :
தனராஜ் என பெயர் வைத்து ஆனால் அந்தப்பெயரில் கூப்பிடாமல் சின்னத்தம்பி என அழைக்க ஆரம்பித்து ஊரில் சொந்தக்காரர்கள் எல்லோரும் அவ்வாறே இன்று வரை அழைக்கின்றனர். எனது அண்ணன் பெரிய தம்பி நான் சின்னத்தம்பி. சின்னத்தம்பி பெரிய தம்பி படம் பார்க்கும்போது அதில் பிரபு தான் சின்னத்தம்பி, அவர்தான் நதியாவை கல்யாணம் பண்ணுவார், அதை வைத்து ஊரில் சிலர் ஓட்டியபோது அந்தப்பெயர் பிடிக்காமல் போனது.

சின்னவா:
அப்பாவின் நண்பர் வீட்டில் எனக்கு வைத்த பெயர், அவர்கள் வீட்டில் இன்று வரை சின்னவா என்றுதான் அழைக்கின்றனர், அவர்கள் வீட்டில் இந்த பெயரை வைத்தது யாரென்று தெரியவில்லை ஆனால் சிறுவயதிலேயே வைத்துவிட்டனர், அண்ணாவை வழக்கம் போல பெரியவன் என அழைத்தனர். பிடிக்காமல் போக காரணம் இல்லை பிடிக்கவும் காரணம் இல்லை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

தன்ராஜ்:
எனக்கு விவரம் தேஞ்ச நாளில் இருந்து அரசு பதிவேடு, பள்ளி பதிவேடு என எல்லா இடத்திலும் எனது பெயர் தனராஜ் ஆனால் என்னை யாருமே தனராஜ் என அழைப்பது இல்லை, தன்ராஜ் என்றே அனைவரும் அழைத்தனர், இதுவும் பிடித்திருந்ததால் அப்படியே இன்று வரை தொடர்கிறது.

தன்ஸ்:
எனக்கு விவரம் தெரிஞ்சு எனக்கு வைக்கப்பட்ட முதல் பட்டப்பெயர். எனது நண்பன் பிரபாகரன் மற்றும் அவனது தம்பிகள் சேர்ந்து எனக்கு என்று பட்டபெயர் என்று ஒன்றும் இல்லாததால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது "தன்ஸ்" என வைத்தனர், அதுவே இன்று வரை நிலைத்து நிற்கும் பெயராகவும், வித்தியாசமாக என்னையும் புண்படுத்தாமல் இருப்பதால் நானும் அதையே பின்பற்றுகிறேன். பள்ளி கல்லூரியில் ஒரே தன்ஸ் அதுவும் நானே. சில தனசேகர்கள் தன்ஸ் என்ற பெயருக்கு முதலில் முயற்சித்தனர் ஆனால் என்னுடைய பெயரே நிலைத்தது. இன்றும் எனக்கு பிடிக்கிறது, என்னுடைய லுவலக நண்பர்கள் இன்றும் என்னை தன்ஸ் என்றே அழைக்கின்றனர், உலகம் முழுக்க 
பரவிவிட்டதால் இதையே நானும் தொடர்கிறேன்.

லொட்டை:
என் வாழ்வில் வைக்கப்பட்ட இன்னுமொரு பட்டபெயர், வைக்கப்பட்டபோது எனக்கு பிடிக்காமல் நிறைய முறை சண்டைபோட்டுள்ளேன் ஆனால் இப்போது அப்படி இல்லை. என் தனித்தனிமை காரணமாக வைக்கப்பட்ட பெயர், பள்ளி நண்பன் பூபதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வைத்த பெயர். நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் என்பதால் என்னை ஓட்டுவதற்காக வைத்தான், இடதுகை என்றாலே ஒரு வித கெட்ட எண்ணத்தை நமது சமுதாயம் எல்லோரிடமும் ஊட்டி வளர்த்து இருப்பதால் முதலில் எனக்கு பிடிக்காமல் போனது, ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்து பதினொன்றாம் வகுப்பிலேயே மறைந்து பனிரெண்டாம் வகுப்போடு முடிந்தது  இந்தப்பெயர். கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து ஒரு நாள் கல்லூரியில் எல்லோரும் எழுதிக்கொடுத்த ஆடோகிராப் நோட்டை புரட்டுகையில் எல்லோருக்கும் வித்தியாசமான பட்டப்பெயர்கள் இருக்க நமக்கு மட்டும் 'தன்ஸ்' என்று ஒன்று மட்டுமே இருக்கே என யோசித்து, இந்த பெயரும் போர் அடிக்க துவங்கி விட்டது என்று தோன்றியது,  அப்போது தான் எனக்கு வைக்கப்பட்ட "லொட்டை" என்ற   பெயர் மறுபடியும் நியாபகம் வந்தது, அந்த பெயரையும் வைத்து என்னை ஒரு சிலராவது இன்றும் கூப்பிட்டு இருக்கலாமோ எனவும் தோன்றி இனி யாரும் அவ்வாறு அழைக்கப்போவது  இல்லை என்று முடிவு செய்தேன். வெகு சமீபத்தில் எனது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழியால் ஒரு நாள் லொட்டை என அழைக்கப்பட்டேன், மனதில் ஒரே சந்தோசம் ஆனால் அவரும் ஓரிரு முறைக்கு பிறகு அவ்வாறு அழைப்பதை விட்டுவிட்டார்.

கண்ணாடி, சோடாபுட்டி:
 கண் குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் இருக்கின்ற இந்த பெயர், இதை எவரும் ரசிப்பது இல்லை அழைப்பவரை தவிர ஆனாலும் தவிர்க்க முடியாத பெயராகிவிட்டது. ஆசிரியர் துவங்கி நண்பர்கள் முதல் எதிரிகள் வரை அனைவரும் இந்த பெயரை வைத்து அழைப்பார்கள். கடந்த வாரம் கூட நண்பர் ஒருவர் விளையாட்டுக்காக இவ்வாறு அழைத்து என் மனதை புண்படுத்தினார், இவ்வாறு அழைப்பவர்களிடம் உடனே சொல்லிவிடுவேன் இது எனக்கு புடிக்காது என்று மரோப்டியும் நான் விளையாட்டுக்கு தான சொனேன் அதுக்கு ஏன் கோவப்படுகிறாய் என்று கூறினால் அவ்வளவுதான் அவர்கள் முகம் சுருங்க ஏதும் சொல்லிவிடுவேன். சிறுவயதிலேயே கோவக்காரனாக வளர்ந்த நான் இந்த பெயரால் இன்னும் அதிகமாக கோவப்பட்டேன். சிறுவயதிலேயே ஒருவனை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளிவிடும் இப்படிப்பட்ட பெயர்களை துளியும் சங்கடம் இல்லாமல் அழைக்கும் மக்களை என்னவென்று சொல்ல, நாளை அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இதில் அவதிப்பட்டு புண்படும்போது தெரியக்கூடும்.  என் வாழ்வில் மிகப்பிடிக்காத பட்டப்பெயர்.


அணில் :
எனது கல்லூரியில் உடன் படித்த தோழிகள் எனக்கு வைத்த பெயர், பெயர்க்காரணம் தெரியவில்லை ஆனால் அவர்கள் அவ்வாறே அழைத்தனர். அலுவலகத்திலும் இருவர் எனக்கு இந்த பெயரை வைத்திருந்தனர். இந்த பெயரும் பிடிக்காமல் இருக்க காரணம் இல்லை பிடிக்கவும் இல்லை. யாரும் இந்த பெயரில் அழைப்பதும் இல்லை.

விஜய்:
எங்கள் கல்லூரி பெண்கள் விடுதியில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று எனக்கு என் தோழி கூறினாள். அப்போது சந்தோசமாக இருதது, நல்ல வேலை இன்று ஒருவரை தவிர மற்றவர் மறந்துவிட்டனரா இல்லை எனக்கு யாரிடமும் தொடர்பு இல்லாததாலோ இந்த பெயர் மறைந்து விட்டது.  




பார்ட்னர்:
மூன்றாம் வருடம் படிக்கும்போது நண்பர்கள் நான்குபேர் நாம் படிப்பு முடித்துவிட்டு ஒருவேளையில் செட்டில் ஆகி நன்றாக தோழி கத்துக்கொண்டு கம்பனி ஆரம்பிப்போம் என பேச ஆரம்பித்து, அலுவலகத்துக்கு பெயர் வைத்து அன்றே நாங்கள் பார்ட்னர் ஆகிவிட்டோம் இன்றும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ட்னர் என்றே அழைத்துக்கொள்கிறோம். இந்த பெயர் என்னுள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்ததால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடலை மன்னன்:
சென்னை வந்து செட்டில் ஆனதுக்கபுறம் எனது அறைத்தோழன் அண்ணன் சாலைக்குமார் அவர்கள் வைத்த பெயர், நான் அவருக்கு வைக்கும் முன் அவர் முந்திக்கொண்டு எனக்கு வைத்துவிட்டார், உண்மையில் அவருக்கு வைக்க வேண்டிய பெயர், ரிங் டோன் வைத்து பிகர் மடக்கும் வித்தை தெரிந்தவர், கல்யாணம் ஆனாலும் கடலையை விடாதவர். 


நான் வைத்த பெயர்கள்:

நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே ஆருக்காவது பட்டப்பெயர் வைக்கணும் என்று முடிவு செய்தேன், சில முயற்சிகள் தோற்றாலும் கல்லூரி முதல் வருடத்தில் என் முதல் வெற்றி கிட்டியது.

குழந்தை: 
என் நண்பன் பாலகுரு இன்று கல்லூரி நண்பர்கள் முழுக்க குழந்தை என அழைக்கப்படுவதற்கு நானே காரணம். சில மதங்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்காக தேனி சென்று அவன் வீட்டிற்கு சென்றபோது அவன் பெற்றோரிடன் எனக்கு குழந்தை என பெயர் வைத்தவன் யார் என கேட்டீர்களே அது இவன்தான் என அறிமுகப்படுத்தினான்.  எனக்கு சந்தோசமாக இருந்தது, அவர்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன், நல்ல வேலை அவர்கள் என்னை திட்டவில்லை மாறாக பொருத்தமான பெயர்தான் என அங்கீகரித்தனர். 

ஐஸ்வர்யா:
கல்லூரி முதல் வருட விடுதியில் இருத்த ஒரு நாய்க்குட்டிக்கு நான் வைத்த பெயர், அழகாக இருந்ததால் அப்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைவாக வைத்தேன். இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது, யாரது சொல்லிடாதீங்க. வேறு எந்த பெயரில் அழைத்தாலும் திரும்பாத அந்த குட்டி இந்த பெயருக்கு மட்டுமே திரும்பும். 



பார்ட்னர்:
இந்த பெயரையும் நானே தேர்ந்தெடுத்து அழைத்ததால் இதற்கும் கிரெடிட் நானே எடுத்துக்கொள்கிறேன், எங்களைப்பின்பற்றி சிலரும் இவ்வாறே அழைத்துக்கொனனர் ஆனால் நிலைக்கவில்லை. 


அதுக்கப்புறம் சில ஆசிரியர்கள் பட்டப்பெயரால் அழைக்கப்படுவார்கள், எல்லோரையும் போல நானும் அவர்களை அந்த பெயரிலேயே நண்பர்களுடன் பேசுகையில் குறிப்பிடுவேன். தவறு என்றாலும் அப்போது அதெல்லாம் நமக்கு எங்க புரியப்போகுது.

இவ்ளோ நேரம் இந்த மொக்கையை படித்திருந்த உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்...... 

Tuesday, March 9, 2010

கதையல்ல நிசமா?? கற்பனையா ??




நிஜ முகம்-

இதை நான் கொஞ்ச நாட்களாகவே எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், நாம் எழுதுவதால் என்ன பயன் என நினைத்து எழுதாமல் இருந்தேன். 
என்வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி,  இதைப்பற்றி ஏற்க்கனவே ஒரு நெடிய பதிவு எழுதி பதியும்போது கணினி பழுதடைந்து எல்லாமே அழிந்துவிட்டது.

எல்லோரும் மீடியா மீடியா என்றால் ஓடியா ஓடியா என்று ஓடி வருகிறார்கள் காரணம் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் மீடியா தயவிருந்தால். விளம்பரம் என்பது ஒவ்வொரு மனிதனையும் எதோ ஒரு வகையில் கவர்ந்து விடுகிறது. நானும் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் இருந்த காலத்தில், மீடியா சொல்வதெலாம் உண்மை என்று மனசார அறிந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது.

2003 ஆம் வருடம், தமிழகத்தில் புதிய டிவி ஒன்று ஓரளவுக்கு பெயரெடுக்க நல்ல நிகழ்ச்சிகளை அளிக்க ஆரம்பித்த காலகட்டம், அப்போது ஒருநிகழ்ச்சி பிரபல நடிகை அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு தமிழக மக்களுக்கு பல உண்மைகளை சொல்லி வந்தது. அதில் பலருக்கு நடந்த கொடுமைகள் அதில் போலீஸ், ஆளும் கட்சியினர் செய்த அக்கிரமங்கள் போன்றவற்றை காட்டி மக்களுக்கு உண்மைகளை தெரியவைத்தனர்.  நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முடித்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை நானும் பார்ப்பேன். மனது பதைபதைக்கும் கோவம் வரும் நடந்ததை கேள்விப்பட்டால். டி ஆர் பி என்றும் ஒன்றை குறிவைத்து நடக்கும் நாடகமாக இல்லாமல் உண்மையான நாட்டு நடப்பை பேசவந்த நிகழ்ச்சி.

இதே நிகழ்ச்சி உண்மைக்கு புறம்பான தவறான தகவலை உண்மை என நம்பவைக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வை அளிக்கும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை

எங்கள் கல்லூரியில் நடந்த ஒருநிகழ்வு தவறாக ஒளிபரப்பப்பட்டது, நான் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது எங்களுடன் படித்த ஒரு மாணவன் விடுதியில் உடன் படிக்கும் மாணவர்களின் பணத்தை நெடு நாட்களாக திருடி வந்து இருந்தான். ஒரு மாணவர் கூட்டம் அவன் மேல் சந்தேகம் கொண்டு அவனை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். அவனும் எடுத்ததை ஒத்துக்கொண்டான். இதுநடந்தது ஒரு மாலை நேரம், அடுத்த நாள் கலையில் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அவன் இரவோடு இரவாக விடுதியை விட்டு ஓடி விட்டான். சிறு வயதில் எல்லோரும் பெரிய அறிவாளி போல அவனிடம் எழுதி வாங்குவது, விசாரணை மேற்கொள்வது என இருந்தனர்.

அடுத்த நாள் காலையில் ஆளைக்காணாமல் பிடித்த குழு முழித்தது, கல்லூரியில் தெரிவிக்கப்பட்டது, பையனின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது, காவல் துறையிலும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை ஆரம்பம் ஆனது காவல் துறையினர் எல்லோரிடமும் விசாரணையினை மேற்கொண்டனர். அவன் ஓடிப்போனதாகவே விசாரணை மேற்கொண்டு இருந்தது. திடிரென்று ஒருநாள் காவல் துறையினரின் பார்வை மாறியது, மாணவர்கள் அவனை பிடித்து அடித்து கொலை செய்து எங்கோ புதைத்து விட்டது போல ஒருகோணம் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக இது நடக்கவில்லை. ஆனால் அந்த மாணவனின் தந்தை மேலிடத்து உதவியுடன் விசாரணையை இந்த விதத்தில் மேற்கொள்ள வைத்தார்.

இதில் மாட்டிக்கொண்டது அவனுடன் படித்த, உடன் இருந்து பணத்தையும் இழந்த நண்பர்கள், அவனை பிடித்த மாணவர் குழு வெகுவாக கழண்டு கொள்ள இவர்கள் அவனுடன் பழகிய காரணத்துக்காக விசாரணையினை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.கிட்டத்தட்ட ஒரு வருடம் விசாரணை நடந்து மாணவர்கள் பாசமாக, ஆபாசமாக, அசிங்கமாக, மிரட்டி என்று எல்லா விதத்திலும் விசாரிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் எல்லோரும் சலித்துப்போன ஒரு நாளில் இந்த விஷயம் கதையல்ல நிஜத்தில் வந்தது.

மாணவனின் தந்தை இதை அங்கு கொண்டு வந்துள்ளார் என நினைக்கிறேன், நிகழ்ச்சி முழுக்க மாணவனை மற்ற மாணவர்கள் சேர்ந்து கொன்று விட்டனர், அதை மறைத்து நாடகம் ஆடுகின்றனர் என்ற கோணத்திலேயே கொண்டு செல்லப்பட்டது. நாணயத்துக்கு கூட இரண்டு பக்கம் உண்டு ஆனால் இந்த நிகழ்ச்சியில் மறுபக்கத்தை அவர்கள் தொடக்கூட இல்லை அதாவது உண்மையின் பக்கத்தை. அவன் ஓடிப்போனது அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் உறுதியாய் தெரிந்த நிலையில், தொலைபேசியில் அதை தெரிவித்தும் நிகழ்ச்சியை அவர்கள் கோணமாகிய கொலை என்றே கொண்டு சென்று முடித்தனர்.

அந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரும் இன்று வரை அந்த மாணவனை அடித்து கொன்று அல்லது எதோ செய்து மறைத்துவிட்டனர் என்றே நினைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால் நடந்த உண்மை அந்தநிகழ்ச்சி முடிந்த சில வாரங்களில் ஓடிப்போன அந்த மாணவன் விசாரணையில் இருந்த அவன் அறைத் தோழனுக்கு கடிதம் போட, விசாரணை மறுபடியும் முழு வீச்சில் ஆரம்பித்தது, கடிதத்தில் அவன் கல்லூரியின் தொலைபேசிக்கு ஒரு ஞாயிறு மாலையில் பேசுவதாக தெரிவிக்க, இதற்கு இடையில் கல்லூரி தொலைபேசி எண்கள் மாற்றப்பட்டிருந்தது. தொலைப்பேசி நிறுவனத்தின் உதவியுடன் பழைய எண்கள் உபயோகத்தில் வைக்கப்பட்டு,அவனிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் பேசுகையில் எங்கிருந்து பேசுகிறான் என கண்டு பிடித்து அடுத்த இரண்டு நாளில் அவனை காவல்துறை பிடித்துவிட்டனர். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளான். கிட்டத்தட்ட ஒரு வருடம் எல்லோருக்கும் தண்ணி காட்டி இருந்தான்.

இரண்டுநாளில் கோர்டில் ஒப்படைக்கப்பட்டு கல்லூரிக்கு வந்து தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டான், அவனால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கிட்டத்தட்ட பத்து மாணவர்கள். இதுநடந்து முடிந்ததும் சம்பந்தப்பட்ட டிவிக்கு தெரியப்படுத்தினால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அது ஒரு தயாரிப்பாளர் நிகழ்ச்சி நாங்கள் இப்பொது ஏதும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். உண்மை வெளியே தெரியாமல் பொய் மட்டுமே மக்களிடம் கண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருவன் செய்த தப்பினால் அவனைத்தவிர பலர் அவனது ஆசிரியர் நண்பர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அந்த மாணவன் இன்று சென்னையிலோ இல்லை வேறு எங்க இருக்கலாம், இந்தப்பதிவை படித்துக்கொண்டும் இருக்கலாம் ஆனால் அவனும் அவன் தந்தையும் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுதான் உலகமோ? 


கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒரு த்ரில்லர் கிரைம் படம் போல நடந்த நிகழ்வுகள் இது, இதை வைத்து ஒரு சினிமா கண்டிப்பா எடுக்கலாம், அந்த அளவுக்கு நடந்தது. அந்த மாணவர்களுக்கு எவ்வளவு அவமானங்கள், உடன் படித்தவர்களே, அவனை பிடித்த மாணவர் குழுவே அவர்களை உங்களுக்கு என்னடா ஜாலியா விசாரணை ன்று வகுப்பை கட் அடித்துவிட்டு செல்கிறீர்கள் என கேலி செய்தனர்.  பிடித்தவர் ஒருவர் அகப்பட்டவர் ஒருவர், காவல்துறை மேல்டத்தின் பிரசர் காரணமாக கோணத்தை எப்படி எல்லாம் மாற்ற வேண்டி இருந்தது, விசாரணையில் காவல்துறையின் சில நல்லவர்களையும்  கண்டுகொண்டனர். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து அவர்கள் படிப்பை முடித்து இன்று நல்ல நிலையில் தானுள்ளனர் ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நிகழ்வுடன்உடன் படித்த மாணவ மாணவிகளே இவர்களை தவறாக, விசாரணைக்கு போகும்போது இகழ்ச்சியாக படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியினால் பிரிந்து இருந்த அந்த ஓடிப்போன மாணவனின் தந்தையும் தாயும் சேர்ந்தனர் இது மட்டுமே ஒரு நல்ல நிகழ்வு. கெட்டதிலும் ஒரு நல்லது போல.


இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது இல்லை, சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

Wednesday, March 3, 2010

கடந்த வாரம்

பத்து நாட்களாக அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இவு எடுத்தேன், ஓயவே வேணாம் எனும் அளவுக்கு ஓய்வு எடுத்தாயிற்று மறுபடியும் நாளை முதல் அலுவலகம். நினைக்கும்போதே சிறிது சந்தோசமாக உள்ளது.

என்னடா கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பரபப்பான செய்திகளே வரலையே என்று நினைத்தேன், நினைத்து ஒரு நாளில் நம்ம நித்தியானந்த சுவாமிகள் திருவிளையாடல். எனக்கு ஒன்னு மட்டும் புரியல, சன் டிவி ஏன் இப்படி எல்லாம் காட்றாங்க? அண்ணாமலை பல்கலை கழகத்தில நான்கு மாணவர் பலி, மற்றும் பென்னாகரம் இடை தேர்தல் பிரச்சனை என்று நிறைய வரும்போது இந்த செய்தி வந்ததால் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.
அவர் படுக்கை அறையில் அவர் யாரிடமோ சந்தூசம இருக்கிறார் என்னவோ பண்ணுகிறார், அதை பாம் பிடித்து காட்ட இவர்கள் யார்? சாமியார் என்றால் இப்படிதான் இருக்கணுமோ? அவர் சொல்லும் உபதேசமோ என்னமோ நல்ல இருந்த கேட்டுகோங்க அதுக்காக அவரை நீங்க உங்க வரையறைக்குள் வாழ் என்று சொல்லாதீங்க.  சாமியார் என்றாலே பிரச்சனை தான்.

சச்சின்  200 அடிச்சாலும்  அடிச்சார்  பாவம் விட்ருங்க என்று அவரே கேட்டாலும் விடாத அளவுக்கு அவர் புகழ் பாடுகின்றனர் இந்த மீடியா. இதே மீடியா தான் கொஞ்ச நாளைக்கு முன்பு சச்சின் எதுக்கு இன்னும் இருக்கிறார் கிளம்பு வேண்டியது தான என்று கேட்டன. இவர்களுக்கு பணம் பண்ண எந்த செய்திய இருந்தாலும் போடுவார். பத்திரிக்கை தர்மம் என்று எல்லாம் நாம் மட்டும் நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

கொஞ்ச நாள் முன்னாடி திருநெல்வேலில போலீஸ் காரர் ஒருத்தர் செத்தாரே அத மீடியா என்ன பணிச்சு, அப்படியே மறந்துட்டாங்க இப்படிதான் எல்லாமே. 

மாருதி இந்தியா மற்றும் ஆட்டோ கார் பத்திரிகை இணைத்து நடத்தும்  young driver  எனும் பூட்டி ஆரம்பம் ஆகிவிட்டது. சும்மா எழுதுவம் என ஆன்லைன் தேர்வு எழுதினால் நீ தேர்வாகிவிட்டாய் என்று சொல்லிடாங்க, இனிக்கு பொய் அடுத்த கட்ட தேர்வையும் முடித்தாயிற்று. சிமுலதியன் முறையிலும், நேரடி வாகனம் ஓட்டும்   முறையிலும் தேர்வு . சிமுலதியன்  சரியாய் பணிட்டாலும்  நேரடி ஒட்டுதலில் சிறிய தவறு செய்துவிட்டேன். பியட் வாகனம் ஓட்டிவிட்டு மாருதி எடுக்கையில் வரும் வித்தியாசம் காலை வாரிவிட்டது.  பக்கத்துல வேற ஒரு பொண்ணு என்னடா இப்படி தடுமாறுகிறாய் என்று  பாத்து கேலியா சிரிச்சுடுச்சு. ( ஆனா நான் ஸ்கார்பியோ ஓட்டிக்கிட்டு இருக்கேன்  என பீலா விட்டு பயங்கர காமெடி பண்ணியது அது ஓட்டும்போது).பார்போம் இதில் ஜெயித்தால் டெல்லியில் இறுதி போட்டி. நமக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, போட்டி முடித்துவிட்டு என் காரை எடுத்தால் எனக்கே வித்தியாசமா இருக்கு.

கடந்த பதினைந்து நாட்களில் எப்படியும் ஒரு இருபது படங்கள் பாத்திருப்பேன், எல்லாவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனா பதிவுலகில் படித்து தேர்வு செய்த படங்கள் தான் ஏற்கனவே எல்லோரும் எழுதிட்டாங்க. விண்ணைத்தாண்டி வருவாயா, எல்லோரும் எழுதி கிழித்து தோரணம் கட்டிடாங்க ஆனா எனக்கு படம் புடிக்கல, ஒரு பழைய படத்துல மோகன் மட்டும் ஒரு நடிகை நடித்து இதே கதை வரும் அதில் கூட இருவரும் செத்து ஒன்னு சேருவாங்க. வருண் சொன்னது போல முப்பது வருடத்தில் நாம் ஜாதிக்காக காதலை விட்டுகொடுக்கும் அளவுக்கு மாறியுள்ளோம். கவலை அளிக்கும் போக்கு. ஆனால் படத்தை ரகுமான் இல்லாமல் நினைத்து  பார்த்தால்  தேறுவது ரொம்ப கஷ்டம். கவுதம் மேனன் சார் அடுத்த தலை படத்தையாது  ஒழுங்கா எடுங்க.


நியாபகம் இருகிறதா டயனோரா??

ஒரு காலத்தில் கிரிகெட் விளையாட்டின் நடுவே இந்த விளம்பரத்தை பார்த்தாலே கோவம் வரும் ஆனால் இன்று? 

எங்கள் ஊரிலேயே ஒரு வீட்டில் தான் டிவி இருந்தது அப்போது, நான் மிக சின்ன பையன், ஒன்றாம் வகுப்போ, யு கே ஜியோ  படித்துக்கொண்டு இருந்தேன். நாங்கள் அந்த வீட்டில் போய் டிவி பார்க்கிறோம் என எங்க அப்பா ஒரு டிவி வாங்கிக்கொண்டு வந்தார். ஊரின் இரண்டாவது டிவி ஆனால் அதை கொண்டு போய் எங்க பாட்டி ஊரில் வைத்துவிட்டு வந்துவிட்டார். அக்காவும் அண்ணாவும் படிக்கிறார்களாம் டிவி பார்த்து படிப்பை கோட்டை விட்டுடுவாங்க என்று. 

அப்போது வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை படமும் தான் நிகழ்ச்சி இந்த ரெண்டு நிகழ்ச்சில படிப்ப கோட்டை விடுவாங்க என்றால் இன்று?? இன்றைய தொலைக்காட்சி யுத்தத்தை எங்க அப்பாவெல்லாம் கனவுல கூட நெனச்சு பார்த்து இருக்க மாட்டார்.

எனக்கு ஓரளவுக்கு சந்தோசம், பின்ன நான் மட்டும் தான் பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு அடிக்கடி போவேன். நம்ம டிவி ராஜ்யம் அங்கதான் ஆரம்பம் ஆயிற்று. அந்த ஊரில் முதல் டிவி எங்களுடையது.  வாங்கிய சிறிது நாளில் அந்த ஊரில் இருத்த பெரிய வீட்டில் டிவி வாங்கினார்கள் (இதுக்கெல்லாம் ஒரு ஈகோ யுத்தம் ). ஆனால் அதுவரை என்னுடைய யுத்தம் பெரிதாக நடந்தது.

என்ன அநியாயம் பண்ணுவேன் டிவி பார்க்க வருவோரிடம். நான் தான் முன்னாடி உட்க்காருவேன், அடிக்கடி ஆப் பண்ணி வைத்து விடுவேன், கொஞ்ச காலம் எல்லோரும் டிவி பார்க்க வருவது பெருமையா இருந்தாலும் என்னுடைய தனிமை (  privacy)  கெடுவது  அப்பட்டமாக தெரிந்தது. தெரிய தெரிய கோவம் அதிகமானது, டிவி பார்ப்பதற்காகவே ஊரில் எனக்கு நண்பர்கள் ஆனவர் நிறைய. என்னுடைய விளையாட்டை டிவி பறித்தது, ஊருக்கு பள்ளி விடுமுறையில் மட்டுமே போவேன் அதிலும் விளையாட மட்டுமே நான் ஊருக்கு போவது. ஆனாலும் அந்த நாட்கள் மறக்க  முடியாதவை. மாநில  மொழி திரைப்படம், சித்ரகார், அளிப் லைலா, ஜன்கில்  புக் மோக்ளி, இன்னும் நிறைய. டிவி வர வர பக்கத்துக்கு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கதை பேசும் நேரம் குறைந்தது, எனக்கு பிடித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக குறைந்து இன்று ஊருக்கு போகலாம் என்றாலே வெறுப்பை இருக்கிறது. ஒரு கிராமத்து வாழ்வின் இயல்பை குலைத்த வருத்தம் துளியும் இல்லாமல் புன்னகைத்துக்கோடு இருக்கிறது அந்த டிவி. 

என்ன இருந்தாலும் முதன் முதலில் வாங்கிய டயனோரா டிவி மறக்க முடியாதது.இந்த விளம்பரத்தை தேடி கண்டுபுடிக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்வு. அந்த விளம்பரத்தில் வரும் பாடலை தானாக பிரித்து வைத்து கேட்க வேண்டும் பல இருக்கிறது.  இதில் பார்த்த படங்கள், நாடகங்கள்,கிரிக்கெட் மாட்சுகள் எல்லாமே மனதை வருடி செல்கின்றன. 

Thursday, January 28, 2010

திருமணத்தில் முடிந்த பயணக்கட்டுரை- எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ??


புது வருடம் முடிந்தது பொங்கலும் முடிந்தது ஆயிரத்தில் ஒருவன் படமும் முடிந்தது ஆனால்  இந்த வருடத்தின் முதல் அதிவே ஒரு வரி பதிவாக போய்விட்டபடியால் இன்று நிறைய எழுதலாம் என்று இருக்கிறேன்.

நேற்று இரவு கிளம்பி காலை கரூர் வந்து சேர்ந்தேன் ஏற்கனவே முடிவு செய்தபடி காரில் தான் வந்தேன், வரும்போது நண்பனை அழைத்து வந்தேன். சென்னையில் இருந்து வேலூர்  கிரிஷ்ணகிரி தொப்பூர், மேட்டூர் வழியாக ஈரோடு  வந்து  நண்பனை விட்டுவிட்டு கரூர் வந்தேன். எதிர்பார்த்ததை போல இல்லாமல் நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் . ஸ்ரீபெரும்புதூர் தாண்டி  வருவதற்கே 3 மணிநேரம் ஆகிவிட்டது. முன்தினம் சரியாக தூங்கததாலும் அலுவலக வேலையாலும் கொஞ்சம் கவனமாக ஓட்ட வேண்டி இருந்தது.



இரவு நெடுந்தூரம் வண்டி ஓட்ட எப்போதும் ஆசை தான் இந்த தடவை நண்பனுடன் இன்னொருவர் வந்தார் மூன்று பேராக இருந்தாலும் அவர்கள் இருவரும் தூங்கி விட்டனர். வழக்கம் போல ஒரு சில லாரி ஓட்டுனர்கள் கண்டபடி ஓட்டினர் , வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி  விடவில்லை.



காலையில்  6 மணிக்கு  ஈரோட்டில் இருந்து கரூர் வந்தேன், பணிமூட்டதுக்கு  இடையில் வயல்வெளி, சிவப்பாக மேலெழும் சூரியன். இவை எல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? இந்த இயற்கை எல்லாம் எவ்வளவு நாளைக்கோ??


இப்பவே எல்லா இடத்தையும் மனை போட்டு விற்றுக்கொண்டு இருகிறார்கள்.


நாளை நாமக்கல் பக்கம் உள்ள புன்னி மரத்து சாமி கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொல்லியுள்ளனர்.  


வேண்டினது எல்லாம் நடக்குமாம், போயிட்டு வேண்டுதல் எல்லாம் முடிச்சுட்டு வந்துருக்கேன் வந்த அடுத்த நாளே நம்ம வேண்டினது நடக்கறதுக்கு ரொம்ப தூரம் என்று புரிஞ்சு போச்சு. நமக்கு மட்டும் ஏன் எந்த சாமியும் துணை நிக்க மாட்டேன்குது (ஆமா பின்ன எப்பவும் நம்பிக்கை இல்லாம வேண்டும்போது மட்டும் வந்து உன்ன யார் கண்டுப்பா என்று  மனசு சொல்லுது )

ரொம்ப நாலா யோசித்து நாமளும் இனி குதிசுடலாம் என முடிவு பண்ணிட்டேன் வீட்லயும் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தாங்க, நானும் கல்யாணத்துக்கு சரி என்று சொலிட்டு கனவு காண ஆரம்பிச்ச அடுத்த நாளே நம்ம விதி ஜோசியக்காரன் ரூபத்துல விளையாடுது.




போனமாசம் பார்த்த இடத்துல ஒரு ஜோசியர் பையனுக்கு தை மாசத்துல இருந்து பொண்ணு பாருங்க என சொல்லி ஒரு அமௌண்ட வாங்கிட்டு . அனுப்பி இருக்கிறார் , போன வார இறுதில இன்னொருத்தன் பையனுக்கு அது இருக்கு இது இருக்குனு சொல்லி மே மாசம் பாருங்க அது வரை வேணாம்  சொலிட்டு இவனும் ஒரு அமௌண்ட புடுங்கிட்டு அம்மாவ அனுப்பி அனுப்பி இருக்கான். இவங்க குழப்பராங்கனு இன்னொருத்தன் கிட்ட போய் இந்த வாரம் கேக்கிறேன் என சொல்றாங்க. என் கல்யாணத்த  எவனோ முடிவு பண்றாங்க பாருங்க.

 ஆனா வஞ்சன  இல்லாம பேருமே பெரிய லிஸ்ட குடுத்து பையனுக்கு இது பண்ணுங்க அந்த கோவில்ல அத பண்ணுங்க என சொல்லி அனுப்பி உள்ளனர். என்னங்கடா நெனசுகிற்றுகீங்க? ?


ஊருக்கு போன காரியம் ஓரளவுக்கு முடிஞ்சுது, இபோதைக்கு சொந்தம் சுற்றம் நண்பர்கள் என தெரிந்த வட்டார தகவல் மூலம் தேடலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நான் சரி சொல்லவில்லை என்றாலும் அவங்க தேடப்போவது உறுதி என நம்பக்கூடிய வட்டாரத்துல தகவல் வந்ததால் சரி சொல்லி என் மரியாதையை நானே காப்பாற்றிக்கொண்டேன்.

திரும்பி வரும்போது கொஞ்சம் வேகமாகவே வந்தேன், சாலை காலியாக இருந்தது, நானும் நண்பன் மட்டுமே. வழக்கம் போல கிரிஷ்ணகிரி தாண்டினவுடன் இரண்டு கார்கள் துணைக்கு வந்தன, வேகமான பயணம், உடன் வந்த wagon -R கார் ஓட்டுனர் கண்டபடி ஊட்டினார் , 120 கி மீ வேகத்தில் தான் வந்தார்,இடப்புறம் முந்துவது, ஆபத்தான வளைவுகளில் வேகமாக முந்துவது என என்னை பயமுறுத்தினார், நீண்ட சாலைகளில் நான் அவரை முந்தினால் உடனே அவரது ஈகோ அவரை விடவில்லை போல, உடனே வேகத்தை கூட்டி எங்கு குறைக்க வேண்டுமோ அங்கே குறைக்காமல், ஆபத்தான நேரத்தில் என்னை முந்தினார்.

 அவருடன் போட்டி போட விருப்பம் இல்லாததால் சிறிது நேரத்தில் முன்னே சென்று விட்டேன். மறுபடியும் பின்னால் வந்து தன வேலையை காட்டினார். எங்கு வளைந்து நெளிந்து செல்லும் சாலை வருமென காத்திருந்து இரண்டு காரையும் முந்தி சென்றேன், ஒரு வளைவில் வலது ஓரத்தில் இருந்த lane இல் சென்ற அவர் இடது ஓரத்துக்கு சென்று விட்டார் control இல்லாமல். அந்த வளைவில் எளிதாக நான் முன்னே சென்றுவிட, ஒரு உணவகத்தில் சாப்பிட நிற்கும்போது வந்து நிறுத்தினார். என்னை பார்த்து ஒரு முறைப்பு வேற, இதுக்கு நான் சிரிக்காமலே இருந்து இருக்கலாம்.


எப்படியோ இந்த ஆரோக்கியமான போட்டி எளிதாக எங்களை சென்னை கொண்டு வந்து சேர்த்தது, ஆனால் அவர் உடன் நண்பர்கள் வந்து இருந்தனர், என் கணிப்புப்படி போதையில் இருந்து இருக்கலாம் இல்லை என்றால் புதிதாக கார் வாங்கி புதிதாக நெடுஞ்சாலையில் ஊட்டி இருக்கலாம், அனுபவம் இன்னும் தேவை அவர்க்கு. மற்றொரு கார் honda city நன்றாக ஓட்டினார். தேவைப்படும் இடத்தில எனக்கு வழி விட்டு தேவையான இடத்தில அவர் முன்னே சென்று கண்டிப்பாக நெடுஞ்சாலையில் அதிக அனுபவமிருக்க வேண்டும்.

இந்த பயணத்துடன் எனது நெடுஞ்சாலை அனுபவம் 20000 கிமீ ஆனது. அதைக்கொண்டாட வேண்டும். இந்த 20000 கிமீ தூரத்தில் நான் கற்றுகொண்டது நிறைய, முக்கியமாக பொறுமையை, தேவையான நிதானத்தை, அடுத்த வாகன ஓட்டி என்ன செஈயலாம் என கணிக்கும் வித்தையை. நெடுஞ்சாலை வாகனம் ஓடுவது என்பது அவ்வளவு எளிதல்ல, சிறிது கவனம் பிசகினாலும் ஆபதுநிச்சயம் ஆனால் நகரத்தை போல இடையில் வந்து சொருகும் இரு சக்கர வாகனங்கள், எரிச்சலை தூண்டும் வாகன ஓட்டிகள் அதிகமில்லாமல் இருக்கும் . நான் பெரும்பாலும் இரவில் பயணிப்பதால் இரு சக்கர வாகன தொல்லை இருக்காது. குறுகிய தூரம் ஓடும் லாரி ஓட்டுனர்கள் தான்னேடுஞ்சாலையில் ஆபத்தை விளைவிப்பவர்கள், பொதுவான விதிகளை கடைபிடிக்க மாட்டார்கள், வேகமாக வரும் வாகனங்கள் அவர்களை முந்த முற்படும்போது அவர்கள் முன்னே செல்லும் லாரியை முந்த முயற்சிப்பார்கள்.பத்து நிமிடம் அவர்கள் நேரம் எடுத்து முந்தி பின்னர் நாம் வழி பார்த்து அவர்களை முந்த வேண்டும். பலமுறை அவர்களை திட்டி சென்றுள்ளேன், ஆனால் நெடுந்தூரம் செல்லும் ஓட்டுனர்கள் இவ்வாறு செய்வது இல்லை. எதிலும் விதிவிலக்கு உண்டு அதை ஒத்துக்கொள்ள வேண்டும் .



சென்னை வந்து அலுவலகம் சேர்ந்து வழக்கமான வேலைகளை செய்ய துவங்கியாயிற்று. பயணத்தில் எடுத்த புகைப்படங்களை பிறகு இணைக்கிறேன்.
 
பின்குறிப்பு: ஈரோடு பதிவர்களை சந்திக்கலாம் என நினைத்து அவர்கள் தொலைபேசி எங்களை குறித்து வைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. நான் இதுவரை பதிவர்கள் யாரையும் சந்தித்தது இல்லை. நண்பர் தராசு அவர்களை தவிர, பார்ப்போம் எப்போது சந்தர்ப்பம் அமைகிறது என்று.
 
கரூரில் இருந்து அருட்பெருங்கோவை தவிர யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா? நண்பன் அருட்பெருங்கோ கல்யாணம் பண்ணுகிறான் வாழ்த்துக்கள்.


அப்பா தலைப்புக்கு சம்பந்தமா ஒரு விசயத்த எழுதியாச்சு :)

Monday, November 30, 2009

வார இறுதி

நானும் ஷாப்பிங்கும் ரொம்ப தூரம் போல நேற்று அக்காவுடன் டி நகருக்கு சென்றேன், ஷாப்பிங் தான், சென்னையில் இவ்வளவு வருசமா இருக்க டி நகருக்கு வந்தது இல்ல என்று சொல்றியே என முதல் அடி விழுந்தது எனக்கு, ஆமாம் நான் டி நகருக்கு போனதே இது வரை ஒரு மூன்று முறை இருக்கும்.


பார்க்கிங் தேட ரொம்ப கஷ்டமாய் போய்விட்டது, பனகல் பார்க் பகுதியை ஒரு நான்கு முறை ரவுண்டு அடித்தும் கரை நிறுத்த இடம் கிடைக்கவில்லை. ஆரம்பமே மோசமாய் இருகுதேட என நனைத்து, எல்லோரையும் இறக்கி விட்டு பின்னர் என் நண்பன் வீட்டிற்க்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றேன்.

அதென்னங்க நானா தனிய எங்க போனாலும் ஒரு பொண்ணு எதிர்த்த மாதிரி வரதில்ல, நம்ம பாக்கறது இல்ல ஆனா அக்கா, அம்மா கூட போனா மட்டும் நிறைய பொண்ணுங்க வராங்க , சில சமயம் நம்மை குறு குறு என்று பாக்குறாங்க???

 ஆர் எம் கே வீ , எஸ் கே சி, மற்றும் பல பல குட்டி கடைகள் என முடிக்க நான்கு மணி நேரம் ஆனது. ஆனாலும் மனதிற்கு பிடித்த மாதிரி பொருட்கள் வாங்கினோம்.


டி நகரில் எதுவும் பண்ண முடியாது, முக்கியமாய் ஷாப்பிங். வீட்டில் பொண்ணு பாகரங்க முதல் கண்டிஷன் : பொண்ணு ஷாப்பிங் கூடி போக சொல்ல கூடாது, அதுலயும் டி நகர் பக்கம் கூட்டி போக சொல்ல கூடாது.



அடுத்த ஞாயிறு காலை சென்னையில் ஒரு குரூப் மீட் இருக்கு. சென்னையில் உள்ள பியட் பாலியோ ( FIAT PALIO USERS) உபயோகிப்பாளர்கள் எல்லோரும் மீட் பண்ணுகிறோம். yahoo groups ல இதற்கென்று ஒரு குரூப் இருக்கு. இந்தியாவில் கார் உபயோகிப்பாளர் என்று ஒரு குறிப்பிட மாடலுக்கு ஆரம்பிக்க பட்ட முதல் குரூப். மிகவும் உபயோகமான குரூப். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களுடன் புது நண்பர்களும் கிடைப்பார்கள்.

பதிவுலகில் யாரேனும் பியட் பாலியோ உபயோகிப்பாளர்கள் இருந்தால் பயனடையலாம். பியட் கார்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அணுகலாம். என்னவோ தெரியவில்லை எனக்கு தெரிந்து எத்தனையோ கார்கள் இப்பொது இருக்கின்றன ஆனாலும் அதை வாங்க நிறைய ஆட்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் காரின் மீது ஒரு விதமான emotional attachment வைத்திருப்பது இல்லை. எனக்கு தெரிந்து பியட் கார் உபயோகிப்பாளர்கள் இதில் விதிவிலக்கு.
இந்த வாரமும் எந்த படமும் பார்க்கவில்லை, நண்பன் பாவமாய் யோகி பார்க்க போயுள்ளான். பாவம் புள்ளை தப்பிச்சோம் என்று வந்துள்ளது.
 
நண்பர் பிரேம் குமார் மறுபடியும் பதிவுலகிற்கு வந்துள்ளார் மேலும் டிவிட்டருக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளார் அவருக்கு இந்த வார வரவேற்பு
 
மேலும் ஒரு வரவேற்ப்பு, நமது ரூம்மேட் நண்பர் செண்பக ராஜன். பதிவுலகில் புதிதாக அடி எடுத்து வைத்துள்ளார், அவரின் பதிவுகளை இங்கு காணலாம் . இவரை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.


வார இறுதி இவ்வளவு வேகமாய் சென்றது கஷ்டமாய் உள்ளது. காலையில் நெகு நேரம் தூங்க முடியவில்லை, சனிக்கிழமை கலையில் அண்ணா வருவதை இருந்ததால் ஐந்து மணிக்கு எழுந்து கத்திபாரா சென்று கூட்டி வந்தேன், ஞாயிறு காலை நண்பன் பெங்களூரில் இருந்து வந்தான், நான்கு மணிக்கு சென்று அழைத்து வந்து, எனதுகாலை தூக்கம் எங்கோ சென்றது.

Wednesday, November 18, 2009

இதோ வந்துவிட்டேன்

வழக்கம் போல நம்ம ஊரு ரயில்வே இணைய தளம் சண்டித்தனம் பண்ணுகிறது. மூணு மாசம் முன்னாடி டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை. இவங்களே கொள்ளை அடிக்க பயன் படுத்தும் தத்கால் வசதி கூட கிடைப்பதில்லை. கடந்த ஆறு மாதத்தில் நான் முயற்சி செய்த ஒரு முறை கூட சரியாக வேலை செய்தது இல்லை. அதிக பயனாளிகள் வருகிறார்கள் என்றால் அதற்கு தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டாமா? சர்வீஸ் கட்டணம் மட்டும் வாங்குகிறார்களே? இது இந்தியா இப்படித்தான் எல்லாமே.

கடந்த மாதத்தில் பத்து நாட்கள் வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்தேன். தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. ரயில் பயணம் அலுத்து விட்டது.

பதிவு உலகத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆறு மாதம் ஆகின்றது இப்போதுதான் கவனித்தேன் நூறு பதிவுகளை என்றோ தாண்டிவிட்டேன். எனக்கே தெரியாமல் இருந்து இருகின்றது. சமீப கலங்கலாக பதிவு எழுத முடியாமல் பல தடங்கல்கள், சோம்பேறித்தனம் எல்லாவற்றையும் முறியடித்து மறுபடியும் எழுத துவங்கி உள்ளேன். உங்கள் ஆதரவு தேவை.

சச்சின் டெண்டுல்கர் மீது மறுபடியும் ஒரு சர்ச்சை, இந்த முறை அனைவரும் சச்சின் பக்கம். ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியே சிலர் இருக்கிறார்கள். வெறுப்பாக இருக்கிறது.

சமீப காலமாக பதிவுலகத்தில் சுவாரசியமான பதிவுகள் குறைந்து வருகின்றன, ஏன் என்று தெரியவில்லை, என்னை போலவே எல்லோரும் எழுதுவதை நிறுத்தி விட்டனரா தெரியவில்லை.

இந்த பதிவுலகத்தை பத்தி கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறன். நான் பதிவு உலகத்திற்கு வந்தது ஒரு விபத்து எதையோ தேடி கூகுளில் துலாவியபோது சில பதிவுகள் வந்தன, அதில் ஒன்று கிட்டத்தட்ட என்னுடைய பள்ளி பருவத்து நினைவுகள் போலவே இருக்க எழுதியது யார் என்று பார்த்தேன். கடைசியாக நம்ம அருட்பெருங்கோ, என்னுடன் பள்ளியில் படித்த நண்பர். பின்னர் தேன்கூடு தமிழ்மணம் அறிமுகம் எல்லாம் கிடைத்து பல பதிவுகளை படித்து நாமும் எழுதலாம் என்ற எண்ணம் வந்தது.

நமக்கு என்று வலைபூ துவங்கி எழுதவும் ஆரம்பித்து ஒரு வருடம் மேல் ஆகின்றது. ஆனாலும் நமக்கு இந்த பதிவுலகம் புடிபடவே மாட்டேன் என்கிறது. சில பல சந்தேகங்கள். சில நண்பர்கள் என்று வாழ்க்கை ஓடுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பு பதிவர்கள் சந்திப்பு என்று சொல்கிறார்கள் ஆனால் அது எப்போது நடக்கிறது எங்கு நடக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை. வார வாரம் யாராவது இதை பற்றி எழுதுகிறார்கள். சில சமயம் என்னடா நாமும் எழுதுகிறோம் ஆனால் நமக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேன் என்கிறதே என்று இருக்கும்.

அப்புறம் இந்த வலைப்பூவை அழகு படுத்துவது. template மாற்றுவது எதனை பேர் நம்மை பார்க்கின்றனர் என்று பார்ப்பது என்று நானும் பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் ஆனால் பலன் மட்டும் ஹி ஹி ஹி.

நமக்கும் பலர் பின்தொடர்வது சந்தோசத்தை கொடுத்தாலும் என்னதான் எழுதினாலும் பின்னூட்டம் வருவது மட்டும் ஏன் இல்லை என்று தெரியவில்லை.

பதிவர்களில் பலர் புதிதாக பதிவுலகத்திற்கு வந்தாலும் விரைவில் பெரிய லெவலில் தங்கள் வலைப்பூவை மாற்றிவிடுகின்றனர், மிக அழகாக வைத்திருக்கின்றனர். நமக்கு மட்டும் ஒன்னும் வேலைக்கு ஆகமாட்டேன் என்கிறது.

இதையும் மீறி பதிவுலகில் நான் கற்றுகொண்டது ஏராளம், புது முயற்சிகள், புது நம்பிக்கைகள்,புது நண்பர்கள் என்று என்னை வாழ்வில் ஒரு படி மேலேற்றி விட்டுள்ளது என்று கூறலாம்.

அன்றொருநாள் யோசிக்கையில் நிறைய தோன்றியது பதிவுலகத்தை பற்றி எழுத ஆனால் இன்று எல்லாம் மறந்துவிட்டது. மறுபடியும் தோன்றும்போது எழுதுகிறேன்.

Monday, June 22, 2009

வாரக்கடைசி- நானும் எழுதுவேன்ல

வாரக்கடைசி எப்பவும் போல இல்லாமல் கொஞ்சம் புதுசாகவும் பழைய நிலைமைக்கு திரும்பியது போலவும் இருந்தது எனக்கு.

வெள்ளிக்கிழமை நண்பனது திருமண வரவேற்ப்பு பல்லாவரத்தில், வர வர பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களது திருமண நிகழ்ச்சியில் உடன் படித்தவர்கள் கலந்து கொள்வது மிக குறைந்து விட்டது. கண்டிப்பாக எனது நிகழ்ச்சியில் இருவர் வருவதே அதிசயம் என்று நினைக்கிறேன்.


நண்பனின் மனைவி எனது அலுவலக ஊழியரின் தங்கை என்பதால் அலுவலகத்தில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை பின்ன அவர்கள் அனைவரும் அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி துறையை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்ல.


மணப்பெண் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் என்னையே பார்ப்பது போல தோன்றியது, அட ஆமாம் என்னைக்கூட ஒரு பெண் பார்க்கிறதே, ஒரு மணிநேரம் இந்த பார்வைகள் சந்தித்துக்கொண்டன, மின்னலே படத்தில் வருவது போல நண்பனிடம் மேடையில் சென்று விசாரித்தேன், அவன் மனைவியின் தங்கையின் தோழியாம், பின்னர் விசாரித்து சொல்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளான். இவனல்லவோ நண்பன். அதுவரைக்கும் மனசுக்குள் பட்டாம்பூசி பறக்கட்டும். நெஜமா பட்டாம்பூச்சி பறக்கற பீலிங்க்ஸ் நல்லாத்தான் இருக்கு :)


சனிக்கிழமை மெதுவாக விடிந்தது, எழுந்து கலையில் நண்பர் ஒருவருடன் ஸ்ரீபெரும்புதூர் போவதாக ஏற்ப்பாடு. போய்விட்டு வந்தோம். எனது மாமா எப்போதோ வாங்கிய நிலத்தை எங்கே இருக்கிறது என்று பார்க்க சென்று வந்தோம். வல்லகொட்டை முருகன் கோவிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அடுத்த முறை பார்க்க போகும்போது முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.


போய்விட்டு வந்து மதியம் வழக்கம் போல காருக்கு சிறிய வேலைகளை செய்ய நண்பரது வொர்க் ஷாப் சென்றேன். பாவம் அவர் எனது கார் அவரை பாடாய் படுத்துகிறது. பின்னர் அவரது அடகு வைக்கப்பட்ட நகையை மீட்க அடையாறு KVB பாங்க்குக்கு சென்றோம். போகும்போதே தொலைபேசியில் அழைத்து வரலாமா என்று உறுதி செய்துவிட்டே சென்றேன், போனவுடன் கணக்கை சரி பார்த்து எல்லாம் செட்டில் செய்ய சொல்லி பணம் காட்ட சென்றால் இன்று உங்களை யார் வர சொன்னா என்று பணம் வாங்கும் இடத்தில அமர்ந்து இருந்தவர் கூறினார். இவனுக இன்னும் திருந்தவே இல்ல போல, எனக்கு KVB பங்கில் இரண்டாவது மோசமான அனுபவம், கண்டிப்பாக இனி இவர்களுடன் எந்த விதமான உறவும் வைக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். பேனாவை மறந்து காரில் வைத்து விட்டு வந்ததால் ஒரு பேனாவை கேட்டோம், எழுதிக்கொண்டு இருக்கும்போது அருகில் இருந்த பெண் என்னங்க பேனாவை கேட்க்காமலே எடுக்கறீங்க என்றார், பாவம் அவர் விளையாட்டாய் கேட்டார், காசாளரிடம் இருந்த கோவத்தை அவரிடம் காட்டிவிட்டேன்.


சனிகிழமை இப்படியே போனது, இரவு வீடிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்தோம், அடுத்தநாள் காலை 9.30, ௦ எழுந்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நண்பன் தேனிர் குடிக்கலாம் என்று அழைத்தான். சென்று குடித்துவிட்டு வரும்போது வீடிற்கு அருகில் வரும்போது துணி துவைக்கும் மிஷன் வாங்கலாம் என்று யோசித்தோம், உடனே வண்டியை திருப்பு, நேராக வேளச்சேரி வசந்த் & கோ சென்றோம், கடைகுஉள்ளே நுழைந்து 5 நிமிடம் வரை ஒருவரும் வரவில்லை,அவரவர் அவரவர் வேளையில் இருந்தனர், சரி இது எதோ சூப்பர் மார்க்கெட் போல, நமக்கு வேனும்கரத செலேக்ட் பண்ணி சொன்னா குடுதுவிடுவாங்க என்று நெனைச்சு, அப்புறம் ஒருத்தரை கூப்பிட்டு கேட்டால் மேல முதல் மாடி போங்க என்றார்.


இவர்களிடம் போராடி விபரம் கேட்டு பின்னர் வேண்டாம் என்று முடிவு பண்ணி அருகில் உள்ள கடையில் விசாரித்தோம், சின்ன கடை, வாடிக்கையாளர் சேவை நன்றாக இருந்தது அனால் விலை மற்றும் விரும்பிய வகை அங்கு இல்லை, வீட்டிற்கு திரும்புகையில் நாம் ஏன் திநகர் செல்லக்கூடாது என்று யோசித்து வண்டியை திருப்பினோம். போகும்போதே நண்பன் அவனது நண்பர்கள் சமீபத்தில் வாசின் மிஷன் வாங்கினதால் எங்கு வாங்கினார்கள் என்று விசாரித்தான், புது சரவணா ஸ்டோர் என்றுபதில் வந்தது.


நேராக வண்டி அங்கு சென்று நின்றது, பார்க்கிங் செய்ய இருபது ரூபாய் வாங்கினார்கள், கடைக்குஉள்ளே செல்லும்போது முன்னாலேயே ஒரு பத்து பெண்கள் கையில் தட்டை வைத்துக்கொண்டு நின்றுகொண்டு இருந்தனர், யாரையோ எதிர்பார்த்து வரவேற்க நின்றுகொண்டு இருக்கின்றனர் போல. அடுத்த வரிசையிஇல் ஒரு பத்து ஆண்கள் நின்று கொண்டு இருந்தனர், கையில் எந்த எந்த பொருட்கள் எங்கு உள்ளன என்று அட்டை வைத்திருந்தனர், நாங்கள் சென்று அவர்கள் கையிலிருந்து புடுங்காத அளவிற்கு கேட்ட உடன்கொடுத்தனர், ஒருவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. அப்பவே திரும்பலாம் என்றேன் நண்பனின் நச்சரிப்பால் ஏழாவது மாடி சென்றோம். எப்படி?? லிபிட்க்கு காத்திருந்த கூடத்தில் சென்று ஒரு வழியாய் லிபிட்க்குள் நுழைந்தோம்.


ஏங்கம்மா பெண்களே உங்களுக்கு ரோட்டில் நடக்கும் பொது தெரியாமல் இடிசுட்டாலும் , பேருந்தில் தெரியாமல் மோதினாலும் வரும் கோவம் ஏனுங்க நீங்க shopping செய்யும்போது மட்டும் எந்த நசுங்கு நசுங்கினாலும் வர மாட்டேன் என்கிறது. பாவம் அவர்கள் ...


கடைசியாய் ஏழாவது மாடியில் சென்று விசாரித்தால் அங்கு வாசின் மெசின் எல்லாம் இல்லையாம். கடுப்புடன் நண்பனை பார்க்க அவன் போனை எடுத்து விசாரித்த நண்பனை கடுப்படித்தான், பைக்குக்கு கொடுத்த இருபது ரூபாவை இரண்டு டம்ளர் வாங்கிக்கொண்டு வந்தால் இந்த பக்கம் போ அந்த பக்கம் போ என்று சிலர் விரட்டுகின்றனர். ஒரு வழியாக பில்போட்டுகொண்டு வந்தால் பொருளை பாலிதீன் பேப்பரில் தான் தருவேன் என்று சொல்கின்றனர். வேண்டாம் கையில் எடுத்து செல்கிறோம் என்றாலும் கேட்க்கவில்லை, ஒரு வழியாக அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் கொடுத்த பையை அவர்களிடம் கொடுத்துவிட்டு கீழே இறங்க கடைசி மாடியில்பையை கொடுத்து அனுப்பினர். நா பாலிதீன் பை உபயோகப்படுத்துவது இல்லை என்று கூறினாலும் கேட்பதாய் இல்லை. கீழே வரும்போது அந்தபையை வெளியே நின்றுகொண்டு இருந்த ஒரு ஊழியரிடம்கொடுத்துவிட்டு வந்தேன். சரவணா ஸ்டோர் அவர்கள் பங்குக்கு சுற்று சூழலை பேணி காக்கின்றனர். நண்பர்களே இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பது.


எப்படியோ ஒரு வழியா எல்லாம் வாங்கி முடிச்சாச்சு. டீ குடிக்க போலாம் என்று தி நகர் சென்று டம்ளர் வங்கி குடித்திருக்கிறோம் .


மதியம் தோழி வீட்டில் சாப்பாடு. நண்டு மீன் என்று வெளுத்து கட்டினேன். இரவு behind the enemy lines 2 படம்பார்த்தேன், நல்ல படம் ஆனால் முதல் பகுதி போல் இல்லை, திரைக்கதையில் ஒரு வேகம் இருந்தது ஆனால் பரபரப்பு இல்லை.

இதற்க்கு இடையில் சில பல வேலைகளை செய்திருந்ததால் நன்றாக சென்றது வாரக்கடைசி... சென்ற பதிவில் கூறியது போல Fiat punto பற்றி பதிவு எழுத முடியவில்லை காரணம் என்னால் test drive செய்ய முடியவில்லை.

Monday, May 25, 2009

ஒரு வாரத்தில் நடந்தவை

சில நாட்களாக பதிவு எழுதவில்லை, எழுத தோன்ற வில்லை இன்று எதாவது எழுத வேண்டும் என தோன்றியது எழுதுகிறேன்.

முதலில் என்னைப்பற்றி:
சில நாட்களாக நான் என் நிலையில் இல்லை என தோன்றுகிறது, ஆராய்ந்து பார்த்ததில் எனக்குள் எதோ ஒரு மாற்றம், இனம்புரியாத ஒன்று என்னை மாற்றிக்கொண்டு உள்ளது. என்னால் முயன்றவரை அது என்ன என்று கண்டுபுடிக்க முடியவில்லை, என் சோம்பேறித்தனம் அதிகமாகி உள்ளது. எந்த வேலையையும் செய்யாமல் காலம் தாழ்த்துதல், எதிலும் முழுமையாக கவனம் செலுத்தாமல் இருத்தல் போன்ற செயல்கள் அதிகமாகி உள்ளன.

காரணம் என்னவென்று தெரியவில்லை, பணக்கஷ்டம் வந்தாலே மனக்கஷ்டம் வந்துவிடும் அனால் அதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்தால் அதை தீர்க்க காரணங்களை யோசிக்க மறந்து விடுவோம். அனுபவித்து புரிந்து மறுபடியும் அனுபவித்து சொல்கிறேன் வாழ்வில் கடன் கொடுக்காதீர்/ வாங்காதீர் அதிலும் நண்பர்களுக்குள். இரவல் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது மிக நலம்

சில காலங்களாக ஈழத்தமிழர் பிரச்சனை பதிவுலகில் அதிகம் எழுதப்படுகிறது, பிரச்சினையின் ஆழம் புரிந்தாலும் செய்திகளை அறியவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதிகமான உண்மை தெரியாத பதிவுகளால் எதையும்படிப்பதில்லை என முடிவெடுத்து உள்ளேன். என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்துகொண்டு புலம்பியும் மற்றவரை திட்டியும் என்ன ஆகப்போகின்றது? மனத்தால் என்னை நானே திட்டிக்கொண்டு அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி நகர்கிறேன். என்றோ ஒருநாள் விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில்.

நேற்று வெகு நாட்களுக்கு பிறகு watchmen என்ற ஆங்கில படத்திற்கு போனேன். மூன்று வருடங்களுக்கு பிறகு சத்யம் சினிமாஸ். அடேங்கப்பா என்ன மாற்றம். சத்யம் சினிமாஸ் உன்னை மூன்று வருடங்களாக தவறவிட்டு விட்டேன். என்ன மாயாஜால் எப்பவுமே நமக்கு பிடித்த இடமாயினும் அங்கு இருக்கும் வேலையாட்களுக்கும் சத்யம் வேலையாட்களுக்கும் நிறைய வித்தியாசம். வேலையாட்களில் மட்டும் இல்லை எல்லாவற்றிலும். இவ்வளவு அழகான திரை அரங்கில் மறுபடியும் அடுத்த ரவுண்டை ஆரம்பிக்க இப்படி ஒரு மொக்கை படம்தான கிடைத்தது?? படம் மரண மொக்கை. பின்னணி இசை மிக அற்ப்புதம் ஆனால் படம் மொக்கை.


நெடு நாட்களுக்கு பிறகு எனது கல்லூரி நண்பர்களை சந்தித்தேன், பெசென்ட் நகர் கடற்கரையில் சில நேரம் பேசிவிட்டு பின்னர் அங்குள்ள அஞ்சப்பர் உணவகத்தில் உணவு அருந்தினோம் ஐயோ என்ன விலை விக்கிறார்கள்? மற்றபடி உணவு மிக அருமை ஆனால் விலையோ மிக அதிகம் :)

********************************************************************************************************************

கார் வாங்கினதில் இருந்து செலவு அதிகம் ஆகிறது இருந்தும் மனது சன்தூசாம் அடைகிறது. எனது கார் பராமரிப்பில் என்னை விட எனது நண்பர்/ மெக்கானிக் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வது மனதை நெருடுகிறது. எனக்கு தெரிந்து மிக சிறப்பான வேலை செய்கிறார். தொழிலில் மிகுந்த அனுபவம் இருந்தும் இன்னும் நிறைய முன்னேற வேண்டி இருக்கிறது இவருக்கு. தனியாக ஒரு மெக்கானிக் ஷெட் வைத்திருக்கிறார், கூடிய விரைவில் சென்னையில் ஒரு சிறந்த மகிழுந்து பராமரிப்பு ஆளாக வருவார்.

மறுபடியும் பழைய சுறுசுறுப்பான நிலைக்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் ஏற்ப்பட்டு அதற்க்காக முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன்.

Friday, May 8, 2009

பசங்களும் நானும்

பசங்க படம் பார்த்தீன் சில நாட்களுக்கு முன்னாள்
என்னுடைய பள்ளிக்கால நாட்கள் நினைவுக்கு வந்ததை மறக்க முடியாது.

அந்த ஓட்டை டவுசரும், சட்டையை இன் செய்து போவது போன்ற நினைப்பும், சைக்கிள் வாங்க வேண்டும் என்ற கனவும், கோஸ்டி சேர்த்து பூட்டி போடுவதும் என்று மறக்க முடியா நினைவுகள்.

வகுப்பு கரும்பலகையில் பெயர் எழுதும் வகுப்பு தலைவன் : இந்த கதாபாத்திரத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்ன அப்போதெல்லாம் வகுப்புக்கு தேர்தல் கிடையாது, வெறும் ஆசிரியர் யாரை சொல்கிறாரோ அவர்தான், நன்றாக படித்ததால் நான் மட்டுமே அந்த போஸ்ட்டுக்கு அன்னப்போஸ்ட்டாக வந்துகொண்டு இருந்தேன்.

பேர் எழுதும் பொது எல்லாம் பெண்கள் பெயரை எழுதாமல் விடும் வழக்கம் என்னிடம் இல்லை, ஆமா நான் படிச்சது ஆண்கள் பள்ளி. ஆனால் பின்னால் கடைசி வரிசைல இருக்கும் யார் பெயரும் வராது.
மாலையில் மக்கள் கடையில் கரம் வாங்கி தருவது அவர்கள் மட்டுமே :)

எனக்கும் போட்டிக்கென்று ஒருத்தன் வந்தான் முதல் மூன்று ரேங்க் எடுக்கும் எனக்கு போட்டியாக வந்தது செந்தில் நாதன், ஆமாம் முதல் தடவை அவனை சாதாரணமாக நினைத்து முதல் ராங்க்கை அவனிடம் இழந்தேன், அடுத்த முறை எட்டாவது ரேங்க் தள்ளப்பட்டேன், அப்போதுதான் இந்த உலகில் போட்டி என்பது உள்ளது என்று புரிந்துகொண்டேன். அய்ந்தாவது வரை எப்போதும் முதல் ரேங்க் எடுத்தவனுக்கு போட்டி என்பது ஒன்று உண்டு அதற்க்கு உன்னை தகுதிபடுத்தி தயார் படுத்த வந்தவன்தான் அவன் என்று புரிந்துகொள்ள நான் எட்டாவது ரேங்க் போக வேண்டியது அவசியமாயிற்று. என் வாழ்க்கையிலேயே மிக மோசமாக அழுதது அன்றுதான் எப்படி ரேங்க் சீட்டை வீட்டில் காட்டுவது என்றும், இப்படி படிக்காமல் போய்ட்டோமே என்றும் இன்னும் என்னனமோ எண்ணங்கள். நம்மை சாதாரணமாக ஜெயித்துவிட்டனே என்ற வன்மமும் தலை தூக்கியது.

அப்புறம் அடுத்தமுறை இரண்டு மார்க்கில் அவனை ஜெயித்து மீண்டும் பெயரை நிலைநாட்டினேன். அடுத்த ஒரு வருசத்துக்கு எங்களுக்குள் பலமான போட்டி அந்த போட்டியில் இன்னும் சிலர் சேர்ந்துகொள்ள அப்போதுதான் போட்டியைப்பற்றிய பயம் என்னுள் வந்தது. நம்ம கூடவும் சில கதாபாத்திரங்கள் பசங்க படம் போல இருந்தனர், அவன் அதை பண்றான் நீ என்ன பண்ற என்று சொல்லி காட்டி உசுப்பு ஏற்றிவிட.

அப்புறம் என்ன அடுத்த ஒரு வருடத்துக்கு என்று சொல்லும்போதே தெரிந்து இருக்கணும் இரண்டு பேரில் ஒருவர் வேறு பள்ளிக்கு சென்றிருக்க வேண்டும் , அது நான் தான், எட்டாவதில் பள்ளி மாறினேன், அன்றுடன் முடிந்தது என்னுடைய ரேங்க் சகாப்தம், அப்புறம் கடைசி பத்து ரேங்க் மட்டுமே நம்ம ஏரியா , தமிழ்மீடியம் பள்ளியில் இருந்து ஆங்கில மீடியம் பள்ளிக்கு மாறுவது என்பது மிகப்பெரிய ரிஸ்க் அதை அப்போது தைரியமாக என்னை எடுக்க வைத்து தள்ளி விட்டனர் என் அண்ணனும் அப்பாவும் (நன்றி அண்ணா).

அப்போது எனக்கிருந்த மனநிலையை காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். முதல் இடைத்தேர்வு தேர்வுத்தாளை எடுத்துக்கொண்டு ஆங்கில வழியிலே படித்த பையனின் தேர்வுத்தாளையும் எடுத்து பக்கத்துக்கு மாணவரிடம் கொடுத்து என் தேர்வுத்தாளில் பிழை இல்லாத எழுத்துக்களை எண்ணி சொல்ல சொன்னார், அந்த பையனின் தாளில் பிழை உள்ள எழுத்துக்களை எழுத சொன்னார். நம்முது எட்டு அந்த பையனுது ஐந்து. அதுல கூட நம்ம தான் அதிகம் ஆனாலும் அத வெளிய சொல்லி அந்த பையன அவமானபடுத்திட்டார் எங்க சோசியல் சைன்ஸ் ஆசிரியர், அதுக்கு பதிலாக அவர் பாடத்தில் பத்தாவதில் பதினேழு மதிப்பெண் வாங்கி அவரை நான் அவமானப்படுத்தினது தனி கதை, நன்றி சுலக்சனா டீச்சர்.


அடுத்த வகுப்பு தமிழ் வகுப்பு அந்த ஆசிரியை இதே போல இன்னொரு கேள்வி கேட்டு என்னை அசிங்க படுத்தினார், தமிழ் வழியில் இருந்து வந்து எந்த பாடத்திலும் தோல்வி அடையாதவன் இவன், முதல் வகுப்பில் இருந்து ஆங்கில வழியில் படித்து பெயில் ஆனவர்கள் எண்ணிக்கை எத்தனை என்பதை கூறி அசிங்கப்படுத்திவிட்டார் அதற்கும் பதிலடி பத்தாவதில் அவர் பாடத்தில் பள்ளியில் முதல் மூன்று இடத்தில வந்தேன். நன்றி லக்ஷ்மி டீச்சர்.

படத்தை பார்த்து அதை விமர்சனம் பண்ணலாம் என்றுலாம் எழுதலை ஆனாலும் அதை பற்றி எழுதப்போய் என்னைப்பற்றி வந்துவிட்டது, என்ன இருந்தாலும் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள். செந்தில்நாதா நீ எதோ ஒரு பொட்டி தட்டும் வேளையில் இருக்கிறாய் என்று கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி, என் வாழ்விலும் போட்டியை கொண்டு வந்ததுக்கு.

முதல் ரேங்க் வாங்கி கற்றுக்கொள்ளாததை கடைசி ரேங்க் வங்கி கற்றுக்கொண்டேன், வாழ்க்கையை அதன் போக்கை எல்லாவற்றையும் அந்த கடைசி பத்து ரேங்க் மட்டுமே கற்றுக்கொடுத்தது.

என்னைப்பொறுத்தவரை நான் படிப்பில் முதல்பத்து இடத்திலும் கடைசி பத்து இடத்திலும் இருந்து இருக்கிறேன், கண்டிப்பாக முதல் பத்து இடம் என்பது வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே, வெறும் உலகம் தெரியாதவனாக உலகத்தை நடத்தும் மிகப்பெரிய கூடத்தில் முறையை புரியாமல் இருக்க மட்டுமே லாயக்கு, கடைசி பத்து என்பது உலகத்தை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு, எப்போதும் ஒரு வித போட்டியும், தயாரிப்பும் தேவைப்படும் இடங்கள். உன்னை எப்போதும் ஒரு விதமான தகுதிக்கு தயார் படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் அந்த இடத்தில் அதனால் நீ அடையும்பயன் பின்னாளில் உனக்கு தெரியும்.

தமிழ் வழியில் படித்த அனைவருக்கும் பசங்க படத்தை பார்த்தவுடன் அவர்கள் பள்ளி நியாபகம் வருவது தவிர்க்க முடியாதது

Friday, April 24, 2009

ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் மறுபடியும் சேர்ந்தன (கண்டிப்பாக பிரியாணிக்காக அல்ல)

ஒரு மகிழ்ச்சியில் உடன் இருக்காத நிலையில் நண்பனை விட்டு சிறிது காலம் விலகி இருந்தேன் ஆனால் எனக்கு தெரிந்த வரையில் எங்கள் இருவருக்கும் உள்ளான நட்பு ஒரு வித்தியாசமானது மற்றவர்கள் பார்வைக்கு.

மூன்று வருடத்தில் நான்கு முறை பிரிந்து ஒட்டிய எங்கள் நட்பு, என்ன விசேசம் என்றால் எப்போது பிரிந்தாலும் அதற்கு எதுவும் சண்டை காரணமாக இருக்காது. இரு முறை எங்கள் இருவரின் நலன் கருதியே பிரிந்தோம்,ஒரு முறை பிரிந்தால் மட்டுமே எங்கள் நட்பு பலப்படும் என்பதால் பிரிந்தோம், ஒரு முறை காரணமே இல்லாமல் பிரிந்தோம். சேரும்போது எங்களுக்குள் எந்தவிதமான சங்கடங்களோ கேள்விகளோ இல்லாமல் முன்பு பிரிவதற்கு முன் எப்படி இருந்தோமோ அப்படியே சேருவோம். இப்போதும் அப்படித்தான். என்னிடம் இருந்து அவன் எதை கற்றானோ இல்லையோ அவனிடம் இருந்து நான் கற்றது நிறைய. நல்லதோ கெட்டதோ அந்த தைரியத்தை, தன்னம்பிக்கையை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு என்னுள் விதைத்தவன்.

எனக்கு கஷ்டம் வரும் வேளையில் எல்லாம் நீ என்னுடன் இருந்தாய், இப்போதும் கூட, எனக்கு தெரியும் நீ கண்டிப்பாக கணித்திருப்பாய் எனக்கு உன் அருகாமையும் நட்பும் இப்போது தேவை என்று. உனக்கு நன்றி என்று சொல்லி அந்த சொல்லையும் அதற்க்கு உள்ள மரியாதையையும் காயப்படுத்தவில்லை.

எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தால் கண்டிப்பாக சிலருக்கு ஆற்றாமையும் கோபமும் வரும் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எதிர்ப்புகள் இருந்தால்தான் முன்னேற்றம் சாத்தியம். எதிர்ப்புகளை எதிர்க்க சேர்ந்து வருகிறோம். தடைகள் எப்போதும் எங்களுள் ஒரு விவாதப்போருளே, அதை தாண்ட எத்தகைய பயணங்கள் தேவை என்பதை தீர்மானிக்க என்றுமே நாங்கள் தயங்கியது இல்லை. இருவருக்கும் குறிக்கோள் ஒன்றாக இருப்பினும் அதை அடையும் பாதை வேறாக உள்ளது.அதற்காக என்றுமே நாங்கள் கவலைப்பட்டது இல்லை, அவரவர் பாதை அவரவர்க்கு.