Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Thursday, March 11, 2010

பட்டப்பெயர்கள்


பட்டப்பெயர்கள் இதைப்பற்றி நினைத்தாலே மனதில் எல்லோருக்கும் கோவமும் சிரிப்பும் சேர்ந்து வரும். தன்னை அழைக்கும்போது வந்த கோவம் காலப்போக்கில் சிரிப்பாகவும் மாறிவிடும்.ஒருவரது இயலாமையை வைத்து அழைக்கப்படும் பட்டப்பெயர்கள் கண்டிப்பா அவங்கள காலம் முழுவதும் வருத்திக்கொண்டே இருக்கும், ஆனால் அவர்களது திறமையையோ அல்லது தனிதன்மையையோ வைத்து அழைக்கப்படும்போது ஒரு பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.

என்னைப்போல சிலர் இரண்டையும் அனுபவித்திருப்பார்கள், சின்ன வயதில் இருந்து எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களை இங்கு பார்க்கலாம்.



எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களையும் நான் வைத்த பெயர்களையும் பற்றி எழுதலாம் என தோன்றியது, தோன்றினால் உடனே செயல்படுத்த வேண்டுமே, அதான் இந்த பதிவு, நேத்து கொஞ்சம் சீரியஸ் பதிவு எழுதியதால் இன்று ஒரு மொக்கை, 

எனக்கு பட்டப்பெயரை பெற்றோரே முதன் முதலில் துவக்கி வைத்தனர், 

சின்னத்தம்பி :
தனராஜ் என பெயர் வைத்து ஆனால் அந்தப்பெயரில் கூப்பிடாமல் சின்னத்தம்பி என அழைக்க ஆரம்பித்து ஊரில் சொந்தக்காரர்கள் எல்லோரும் அவ்வாறே இன்று வரை அழைக்கின்றனர். எனது அண்ணன் பெரிய தம்பி நான் சின்னத்தம்பி. சின்னத்தம்பி பெரிய தம்பி படம் பார்க்கும்போது அதில் பிரபு தான் சின்னத்தம்பி, அவர்தான் நதியாவை கல்யாணம் பண்ணுவார், அதை வைத்து ஊரில் சிலர் ஓட்டியபோது அந்தப்பெயர் பிடிக்காமல் போனது.

சின்னவா:
அப்பாவின் நண்பர் வீட்டில் எனக்கு வைத்த பெயர், அவர்கள் வீட்டில் இன்று வரை சின்னவா என்றுதான் அழைக்கின்றனர், அவர்கள் வீட்டில் இந்த பெயரை வைத்தது யாரென்று தெரியவில்லை ஆனால் சிறுவயதிலேயே வைத்துவிட்டனர், அண்ணாவை வழக்கம் போல பெரியவன் என அழைத்தனர். பிடிக்காமல் போக காரணம் இல்லை பிடிக்கவும் காரணம் இல்லை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

தன்ராஜ்:
எனக்கு விவரம் தேஞ்ச நாளில் இருந்து அரசு பதிவேடு, பள்ளி பதிவேடு என எல்லா இடத்திலும் எனது பெயர் தனராஜ் ஆனால் என்னை யாருமே தனராஜ் என அழைப்பது இல்லை, தன்ராஜ் என்றே அனைவரும் அழைத்தனர், இதுவும் பிடித்திருந்ததால் அப்படியே இன்று வரை தொடர்கிறது.

தன்ஸ்:
எனக்கு விவரம் தெரிஞ்சு எனக்கு வைக்கப்பட்ட முதல் பட்டப்பெயர். எனது நண்பன் பிரபாகரன் மற்றும் அவனது தம்பிகள் சேர்ந்து எனக்கு என்று பட்டபெயர் என்று ஒன்றும் இல்லாததால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது "தன்ஸ்" என வைத்தனர், அதுவே இன்று வரை நிலைத்து நிற்கும் பெயராகவும், வித்தியாசமாக என்னையும் புண்படுத்தாமல் இருப்பதால் நானும் அதையே பின்பற்றுகிறேன். பள்ளி கல்லூரியில் ஒரே தன்ஸ் அதுவும் நானே. சில தனசேகர்கள் தன்ஸ் என்ற பெயருக்கு முதலில் முயற்சித்தனர் ஆனால் என்னுடைய பெயரே நிலைத்தது. இன்றும் எனக்கு பிடிக்கிறது, என்னுடைய லுவலக நண்பர்கள் இன்றும் என்னை தன்ஸ் என்றே அழைக்கின்றனர், உலகம் முழுக்க 
பரவிவிட்டதால் இதையே நானும் தொடர்கிறேன்.

லொட்டை:
என் வாழ்வில் வைக்கப்பட்ட இன்னுமொரு பட்டபெயர், வைக்கப்பட்டபோது எனக்கு பிடிக்காமல் நிறைய முறை சண்டைபோட்டுள்ளேன் ஆனால் இப்போது அப்படி இல்லை. என் தனித்தனிமை காரணமாக வைக்கப்பட்ட பெயர், பள்ளி நண்பன் பூபதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வைத்த பெயர். நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் என்பதால் என்னை ஓட்டுவதற்காக வைத்தான், இடதுகை என்றாலே ஒரு வித கெட்ட எண்ணத்தை நமது சமுதாயம் எல்லோரிடமும் ஊட்டி வளர்த்து இருப்பதால் முதலில் எனக்கு பிடிக்காமல் போனது, ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்து பதினொன்றாம் வகுப்பிலேயே மறைந்து பனிரெண்டாம் வகுப்போடு முடிந்தது  இந்தப்பெயர். கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து ஒரு நாள் கல்லூரியில் எல்லோரும் எழுதிக்கொடுத்த ஆடோகிராப் நோட்டை புரட்டுகையில் எல்லோருக்கும் வித்தியாசமான பட்டப்பெயர்கள் இருக்க நமக்கு மட்டும் 'தன்ஸ்' என்று ஒன்று மட்டுமே இருக்கே என யோசித்து, இந்த பெயரும் போர் அடிக்க துவங்கி விட்டது என்று தோன்றியது,  அப்போது தான் எனக்கு வைக்கப்பட்ட "லொட்டை" என்ற   பெயர் மறுபடியும் நியாபகம் வந்தது, அந்த பெயரையும் வைத்து என்னை ஒரு சிலராவது இன்றும் கூப்பிட்டு இருக்கலாமோ எனவும் தோன்றி இனி யாரும் அவ்வாறு அழைக்கப்போவது  இல்லை என்று முடிவு செய்தேன். வெகு சமீபத்தில் எனது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழியால் ஒரு நாள் லொட்டை என அழைக்கப்பட்டேன், மனதில் ஒரே சந்தோசம் ஆனால் அவரும் ஓரிரு முறைக்கு பிறகு அவ்வாறு அழைப்பதை விட்டுவிட்டார்.

கண்ணாடி, சோடாபுட்டி:
 கண் குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் இருக்கின்ற இந்த பெயர், இதை எவரும் ரசிப்பது இல்லை அழைப்பவரை தவிர ஆனாலும் தவிர்க்க முடியாத பெயராகிவிட்டது. ஆசிரியர் துவங்கி நண்பர்கள் முதல் எதிரிகள் வரை அனைவரும் இந்த பெயரை வைத்து அழைப்பார்கள். கடந்த வாரம் கூட நண்பர் ஒருவர் விளையாட்டுக்காக இவ்வாறு அழைத்து என் மனதை புண்படுத்தினார், இவ்வாறு அழைப்பவர்களிடம் உடனே சொல்லிவிடுவேன் இது எனக்கு புடிக்காது என்று மரோப்டியும் நான் விளையாட்டுக்கு தான சொனேன் அதுக்கு ஏன் கோவப்படுகிறாய் என்று கூறினால் அவ்வளவுதான் அவர்கள் முகம் சுருங்க ஏதும் சொல்லிவிடுவேன். சிறுவயதிலேயே கோவக்காரனாக வளர்ந்த நான் இந்த பெயரால் இன்னும் அதிகமாக கோவப்பட்டேன். சிறுவயதிலேயே ஒருவனை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளிவிடும் இப்படிப்பட்ட பெயர்களை துளியும் சங்கடம் இல்லாமல் அழைக்கும் மக்களை என்னவென்று சொல்ல, நாளை அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இதில் அவதிப்பட்டு புண்படும்போது தெரியக்கூடும்.  என் வாழ்வில் மிகப்பிடிக்காத பட்டப்பெயர்.


அணில் :
எனது கல்லூரியில் உடன் படித்த தோழிகள் எனக்கு வைத்த பெயர், பெயர்க்காரணம் தெரியவில்லை ஆனால் அவர்கள் அவ்வாறே அழைத்தனர். அலுவலகத்திலும் இருவர் எனக்கு இந்த பெயரை வைத்திருந்தனர். இந்த பெயரும் பிடிக்காமல் இருக்க காரணம் இல்லை பிடிக்கவும் இல்லை. யாரும் இந்த பெயரில் அழைப்பதும் இல்லை.

விஜய்:
எங்கள் கல்லூரி பெண்கள் விடுதியில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று எனக்கு என் தோழி கூறினாள். அப்போது சந்தோசமாக இருதது, நல்ல வேலை இன்று ஒருவரை தவிர மற்றவர் மறந்துவிட்டனரா இல்லை எனக்கு யாரிடமும் தொடர்பு இல்லாததாலோ இந்த பெயர் மறைந்து விட்டது.  




பார்ட்னர்:
மூன்றாம் வருடம் படிக்கும்போது நண்பர்கள் நான்குபேர் நாம் படிப்பு முடித்துவிட்டு ஒருவேளையில் செட்டில் ஆகி நன்றாக தோழி கத்துக்கொண்டு கம்பனி ஆரம்பிப்போம் என பேச ஆரம்பித்து, அலுவலகத்துக்கு பெயர் வைத்து அன்றே நாங்கள் பார்ட்னர் ஆகிவிட்டோம் இன்றும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ட்னர் என்றே அழைத்துக்கொள்கிறோம். இந்த பெயர் என்னுள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்ததால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடலை மன்னன்:
சென்னை வந்து செட்டில் ஆனதுக்கபுறம் எனது அறைத்தோழன் அண்ணன் சாலைக்குமார் அவர்கள் வைத்த பெயர், நான் அவருக்கு வைக்கும் முன் அவர் முந்திக்கொண்டு எனக்கு வைத்துவிட்டார், உண்மையில் அவருக்கு வைக்க வேண்டிய பெயர், ரிங் டோன் வைத்து பிகர் மடக்கும் வித்தை தெரிந்தவர், கல்யாணம் ஆனாலும் கடலையை விடாதவர். 


நான் வைத்த பெயர்கள்:

நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே ஆருக்காவது பட்டப்பெயர் வைக்கணும் என்று முடிவு செய்தேன், சில முயற்சிகள் தோற்றாலும் கல்லூரி முதல் வருடத்தில் என் முதல் வெற்றி கிட்டியது.

குழந்தை: 
என் நண்பன் பாலகுரு இன்று கல்லூரி நண்பர்கள் முழுக்க குழந்தை என அழைக்கப்படுவதற்கு நானே காரணம். சில மதங்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்காக தேனி சென்று அவன் வீட்டிற்கு சென்றபோது அவன் பெற்றோரிடன் எனக்கு குழந்தை என பெயர் வைத்தவன் யார் என கேட்டீர்களே அது இவன்தான் என அறிமுகப்படுத்தினான்.  எனக்கு சந்தோசமாக இருந்தது, அவர்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன், நல்ல வேலை அவர்கள் என்னை திட்டவில்லை மாறாக பொருத்தமான பெயர்தான் என அங்கீகரித்தனர். 

ஐஸ்வர்யா:
கல்லூரி முதல் வருட விடுதியில் இருத்த ஒரு நாய்க்குட்டிக்கு நான் வைத்த பெயர், அழகாக இருந்ததால் அப்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைவாக வைத்தேன். இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது, யாரது சொல்லிடாதீங்க. வேறு எந்த பெயரில் அழைத்தாலும் திரும்பாத அந்த குட்டி இந்த பெயருக்கு மட்டுமே திரும்பும். 



பார்ட்னர்:
இந்த பெயரையும் நானே தேர்ந்தெடுத்து அழைத்ததால் இதற்கும் கிரெடிட் நானே எடுத்துக்கொள்கிறேன், எங்களைப்பின்பற்றி சிலரும் இவ்வாறே அழைத்துக்கொனனர் ஆனால் நிலைக்கவில்லை. 


அதுக்கப்புறம் சில ஆசிரியர்கள் பட்டப்பெயரால் அழைக்கப்படுவார்கள், எல்லோரையும் போல நானும் அவர்களை அந்த பெயரிலேயே நண்பர்களுடன் பேசுகையில் குறிப்பிடுவேன். தவறு என்றாலும் அப்போது அதெல்லாம் நமக்கு எங்க புரியப்போகுது.

இவ்ளோ நேரம் இந்த மொக்கையை படித்திருந்த உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்...... 

Saturday, January 30, 2010

இன்றும் ஒரு பதிவு

சனிக்கிழமை வந்து ஆபிசில் ஆணி புடுங்கலாம் என்றால் நம்ம நேரம் எதுவுமே வேலை செய்ய மாட்டேன்குது. வந்தது தான் வந்துட்டோம் ஒரு பதிவு போட்டு போய்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன்.


ஆபிசில் யாருமே இல்லை, தனியா உட்கார்ந்து இருக்க கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நண்பர்கள் போய்வந்த கோவா மற்றும் தமிழ் படம்பற்றிய விமர்சனங்கள் பலர் எழுதிவிடுவதால் நான் அதை ஒதுக்கிவிடுகிறேன்.


வார இறுதி எப்ப வரும் என இருக்கிறது வந்தால் உடனே முடிந்து விடுகிறது, என்னைய நியாயம் இது, அஞ்சு நாள் வேலை செஞ்ச ரெண்டு நாள் தான் லீவு தராங்க, இத கேட்க மட்டேன்கரான்கப்பா


இப்பலாம் சினிமாக்கு போகவே புடிக்கல, போன எல்லாம் ஜோடி ஜோடிய வராங்க நமக்கு உள்ள ஒருத்தன் கேட்கறான் ஏண்டா நீ இப்படி தனிய வந்து வயிறு எரிச்சல் பட்டு போற என்று. இனி எங்க நம்ம போய் பொண்ணு பார்த்து தேடி காதலிச்சு, எல்லாம் வேலைக்கு ஆகாது, வீட்ல பாக்கற பொண்ண கட்டிக்கிட்டு ஜோடிய வர வேண்டியதான். நிச்சியம் பாணின ஒரு ஆறு மாசம் இடைவெளி கொடுத்தாங்கன நாமளும் லவ் பண்லாம்.


வேளச்சேரி பக்கம் வந்தா புதுசா ஆரம்பிச்சு இருக்க ஹோட்சிப்ஸ் கடைதான் எல்லோருக்கும் தெரியும் போல, எப்ப பர்தாளும்கூடமவே இருக்கு, வேளச்சேரில எந்த கடை ஆரம்பித்தாலும் கூடமைடுது, பசங்க எத பத்தியும்கவலபடாம ஜோடிய வந்து சாப்பிடறாங்க. குடுபத்தோட கூட வராங்க. ஏங்க நான் கேட்கறேன் நீங்க யாருமே வீட்ல சமைக்க மாட்டீங்களா ?, எப்ப பார்த்தாலும் ஹோட்டல்க்கு போன கூட்டம் வெயிட் பண்ணி சாப்பிடவேண்டி இருக்கு, எங்கள மாதிரி பாச்சலர்ஸ் எங்க போறது??


நண்பர்கள் எனக்கு அறிவுரை வேற சொல்றாங்க நீ கார்க்கு நிறைய செலவு பண்ற என்று, அவங்க தன காதலிக்கு செலவு பண்றதும், குடிக்கு செலவு பண்றதும் விட நன் குறைவாதான் பண்றேன், இத ஏலம் சொல்ல முடியல, சில மதங்களுகுமுன்னடி எதுக்கோ பார்ட்டி என அயிந்து பேர் சென்று ரூபாய் 6000க்கு குடித்துவிட்டு வந்தனர், ஆனால் நான் 2000 செலவு செஞ்சு ஊருக்கு போனால் எனக்கு அட்வைஸ். நன் என் காரை காதலிக்கறேன் அதற்கு செலவு பண்றேன் அட்லீஸ்ட் அதாவது நான் சொல்றத கேட்குதே :)


நண்பர் பிரேம்குமார் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகுது ஏன்னு தெர்ல, யாரது சொல்லி எழுதவச்ச நல்லா இருக்கும்.


விட்டு போன தொடர்களை எல்லாம் மறுபடியும் எழுதலாம் எனநினைக்கிறேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் மறுபடியும்

Tuesday, December 15, 2009

பதிவு எழுதினாலே மொக்கை பதிவாகவே வருகிறது

இந்த வார கடைசி மற்றுமொரு வாரமாக இல்லாமல் கொஞ்சம் நன்றாக இருந்தது. வெள்ளிகிழமை இரவு எதாவது சினிமாவிற்கு போகலாம் என்று முடிவு செய்தோம் வழக்கம் போல பார்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் போகவில்லை. ஆர்யா 2 போகலாம் என்று நினைத்தோம் அனால் தியேட்டரில் எப்படியும் தெலுங்கு பையன்கள் தான் இருப்பார்கள் அங்கே  பார்க்க ஒரு சங்கடம்.



இந்த வாரத்தில் மூன்று படம் பார்த்தேன், சா பூ த்ரீ, சொல்ல சொல்ல இனிக்கும் மற்றும் the Tournament. முதல் இரண்டு படத்தையும் என் தோழர்கள் மொக்கை படம் என்று ஒதுக்கியதால் தனியாக பார்க்கும் பாக்கியம் பெற்றேன். அப்படி ஒன்றும் மொக்கை படம் இல்லை, எதையும் ரசித்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்கு இது ஒரு சான்று. இரண்டு படமும் ஜாலியா பார்க்கலாம். அடுத்த ஆங்கில படம் the tournament, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வந்த the condemed படம் போலவே இருந்தது. உலகில் உள்ள திறம் நிறைந்த கொலைகாரகளை கொண்டு ஒரு போட்டி ஆரம்பிக்கபடுகிறது. அதில் எல்லோரையும் கொன்று கடைசியாக உயிரோடு இருக்கும் ஒருவற்கு பத்து மில்லியன் டாலர் கொடுக்கிறார்களாம். இதில் தெரியாதனமாக ஒரு சர்ச் பாதர் வந்து மாட்டிக்கொள்கிறார். இதில் யார் ஜெயித்தார் என்பதுதான் கதை. வழக்கம் போல அடுத்து என்ன என்று எதிர்பார்த்தாலும் விறுவிறுப்பாக சென்றது. படம் முழுக்க ரத்தம் ரத்தம் ரத்தம்.




போன வாரம் ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்து எழுதி முடித்து அதை publish செய்யும் போது error வந்தது அதற்கு மேல் மறுபடியும் எழுத புடிக்காமல் விட்டுவிட்டேன்.



WWE: TLC நேற்று முடிந்து இருக்கும் இன்று இரவு எப்படியும் பார்த்து விட வேண்டும் சின்ன பையனாக இருந்த பொது பார்க்க ஆரம்பித்தது இடையில் சில நாட்கள் விட்டு மறுபடியும் பார்க்க ஆரம்பித்துள்ளேன்.







சென்னையில் OMR சாலையில் வாகனம் ஓடுவோர் தினமும் பாதுகாப்பாக வந்து சேருவது ஏதாவது கடவுளின் புண்ணியம் என்று சொல்லலாம். சென்னையில் வாகனம் ஓட்டி பாருங்கள், உயிர் பயம் என்றால் என்ன என்று தெரியும். காலையில் கிளம்பி அலுவலகதிரு வருவதற்குள் எத்தனை ம உரை கடவுளை வேண்டுவது. சாலையில் ஒழுங்காக வாகனம் ஓடுவது என்பது கொடுமையான விஷயம் போல உள்ளது. தனியார் அலுவலக பேருந்துகள் தொண்ணூறு சதவிகிதம் சாலை விதிகளைமதிப்பது இல்லை. சாலை அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல வாகனத்தை ஓடுகின்றனர். மேலும் அழ்ரசாங்க பேருந்துகள் , இவங்கள சொல்லவே வேண்டாம் திட்ட முதலில் தயங்குவேன் இப்போதெலாம் மனதில் மிக மோசமான முறையில் திட்டுகிறேன். எனது தந்தையும் அரசுப்பேருந்து ஓட்டுனராக இருந்தவர் என்பதால் முதலில் திட்ட தயக்கமாக இருக்கும். இரு சக்கர வாகன ஓட்டிகள், எந்த பக்கம் வருகிறார்கள் என்றே தெரியாது இடது புறத்தில் முந்தி சென்று உடனே பிறகே போட்டு வலது புறம் வருவார்கள், அவர்கல்முந்தி சென்ற வாகனம் எந்த வேகத்தில் வருகிறது என்றெல்லாம் கவலை இல்லை. அடிபட்டால் இந்தியாவில் உள்ள விதிப்படி பெரிய வண்டி தான் தவறு. வண்டி எடுத்து பத்திரமாக திரும்பி வருவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது.


நாளுக்கு நாள் இந்த சமுதாயத்தின் மேல் கேள்விகளை விட கோவம் அதிகமாக வருகிறது. மிகப்பெரிய சுயநல வாதிகளாகி விட்டார்கள் அனைவரும் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். வீட்டை விட்டு வெளிவரும்போதே நான் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கின்றது. ஒரு பொருள் ஓசியில் கிடைக்கிறது என்றால் அதை நான் தான் முதலில் வாங்க வேண்டும் அதனால் மற்றவர்க்கு எந்த இடைஞ்சல் வந்தாலும் கவலை இல்லை போன்ற மனது. எதுவும் ஒருவித விளிம்பு எல்லைக்கு சென்று மறுபடியும் துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும், இந்த சமுதாயமும் விதிவிலக்கு இல்லை என்று தோன்றுகிறது.




நேற்று நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருந்தபோது தோன்றியது. தமிழ்நாடு நன்றாக வளர்ந்து வருகிறது, ஏகப்பட்ட அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று என நண்பன் கூற அனால் அங்கு தமிழர்கள் வேலை செய்வது மிக கம்மி என்றேன்நான். உதாரணத்திற்கு சென்னையில் இருக்கும் எனது எழுவலகத்தில் எனது குழுவில் கூட மிக குறைந்த சதவிகிதமே தமிழர்கள் உள்ளனர் என்றேன், மற்றொரு நண்பனும் அதை ஆமோதித்தான், ஆக இவ்வளவு தொழிற்சாலைகள் வந்தாலும் அலுவலகங்கள் வந்தாலும் ஏன் தமிழர்கள் வேலை செய்வது குறைந்து இருக்கிறது? எல்லோரும் எங்கு இருக்கின்றனர்? அண்டை மாநிலத்திலா?? வேறு நாடுகளிலா?? தெரியவில்லை, ஆனால் தமிழ் நாடு என்பது கூடிய விரைவில் பெயரளவில் தான் . இதை நான் எதிர்க்கவில்லை, அனைவருக்கும் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் வேலை செய்ய உரிமை உள்ளது.தமிழர்கள் எங்கே உள்ளனர் என்பதுதான் என் கேள்வி....


வேட்டைக்காரனை நினைத்தால் சிரிப்பு வராமல் வருத்தம் தான் வருகிறது இப்போதெலாம், பாவம் அவர் விட்ருங்க எல்லோரும் போட்டு ஏன் இப்படி ஓட்றீங்க??


வர வர பதிவு எழுதினாலே மொக்கை பதிவாகவே வருகிறது :(


Wednesday, December 31, 2008

வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்

வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்

ரொம்ப முக்கியமாக எட்டு மாதங்களில் அறுபது பதிவு, எல்லாம் மொக்கை பதிவுகள் என்பது மிகப்பெரிய விஷயம். பதிவு எழுத வந்த கதை பற்றி இப்போது பார்ப்போம்,

இந்த வருடத்தின் (2008) முதல் மாதத்தில் நான் இருந்தது டென்மார்க்கில், இந்த வருடம் இனிமையாக துவங்கியது முதல் இரு மாதங்கள் மிக நன்றாக சென்றது, வேலையும் அதிகம் இருக்கவில்லை.

முதல் இரு மாதங்களில் இரண்டு மிக பெரிய ஆர்டர்கள் பெற்றேன், ஒன்றின் மதிப்பு சுமார் இருபது லட்சம் யுரோ. மகிழ்ச்சியான தருணம்.

மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தேன், வரும்போதே சிறிய குழப்பம், கடந்த நவம்பரில் நடந்த அபுரைசலில் நிறைய புளுகினானே நமது டேமேஜர் ஒண்ணுமே பண்ணவில்லையே என்று.

எனக்கு தரப்பட்ட வாக்குறுதி என்னவென்றால் பிரெஞ்சு பேசும் நாடுகளின் விற்பனை உதவி வேலைகளை எனக்கு கீழ்கொண்டு வரப்போவதாகவும் மேலும் அலுவலகத்திலேயே பிரஞ்சு மொழி கற்றுத்தர போவதாகவும் கூறினர்.

சொல்லி மூன்று மாதம் ஆனது மூன்று மாதத்தில் இந்தியாவிலிருக்கும் டேமேஜர் என்னுடம் கொண்டிருந்த சுமூக உறவை சிறிது சிறிதாக கைவிடுவதயுனர்ந்தேன்,அவனைப்பற்றி நன்றாக தெரியும் ஆதலால் கண்டுகொள்ளவில்லை.இந்தியா வந்து சேர்ந்தவுடன் இதைப்பற்றி பேசலாம் என்று அவனிடம் சென்றால் மீடிங்கில் பேசுவோம் என்றான்.

என்னடா என்று குழம்பி பின்னர் தனியாக பேசினால் சொல்கிறான் நீ சொல்றமாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று, அப்புறம் எதுக்கு அப்போது சொல்லி ஒத்துகொண்டாய் என்றுகேட்க எதுவும்பதில் இல்லை. பின்னர் ஒரு பதில் சோனான்,இதையெல்லாம் செய்ய எனக்கு நேரம் இல்லை என்று, அத்துடன் எழுந்து வெளியே வந்துவிட்டேன், பின்னர் ஆரம்பித்தது அவனுடைய வேலைகள், எனக்கு மட்டும் வேலை குடுப்பது இல்லை, டீமில் உள்ள அனைவரும் ஒரு வாரத்திற்கு இருபது என்கொயரி பார்த்தால் எனக்கு இரண்டு மட்டுமே.

நானும் விடவில்லை நீ என்னவேணும் என்றாலும் செய் ஆனால் நான் விட்டுகொடுக்க மாட்டேன் என்று, நேற்று சேர்ந்த பயிற்சி பொறியாளர் என்னிடம் வேலை வாங்கும் அதிகாரம் பெற்றான்.

எனது மேலதிகாரியிடம் இந்த பிரிவில் இருந்து விலகி வேறு பிரிவிற்கு மாறும்படி கோரிக்கைவைத்தேன், இவை அனைத்தும் ஏப்ரலில் நடந்தது, அபோதுதான் வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் நிறைய பதிவுகளை படித்தேன், பின்னர் நானும் பதிவு எழுதினால் என்ன என்ற கேள்வி முளைத்தது, பின்னர் நெடு நாளைக்கு பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி முதற்பதிவை எழுதினேன்.

எனது வாழ்கையின் மிக மோசமான நேரத்தில் நான் பதிவு எழுத ஆரம்பித்தேன், இந்த பதிவுகள்தான் என்னை மேம்படுத்தின இல்லை என்னை அந்த மோசமான நேரங்களில் இருந்து காத்தன என்று சொல்லலாம்.
எனது நேரத்தை பதிவுகளில் செலுத்தினேன் சிறிது நாட்களிலேயே எனக்கும் நல்ல நேரம் வந்தது ஆம், நான் அலுவலகத்தில் வேறு பிரிவுக்குமாற்றப்படேன். அதிலிருந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. அவ்வப்போது பதிவுகளை படித்தும் சில நேரங்களில் எழுதியும் வருகிறேன்.

பிறந்த நாளுக்கு நானே எனக்கு பரிசு வாங்கிக்கொண்டேன் ஆம் நான் கார்வாங்கியது இந்த வருடம் தான்.

எனது சகோதரரின் திருமணம்

எனது காரில் எனது உறவினருக்கு ஏற்பட்ட சிறிய விபத்து

பாட்டியின் மரணம் புதிய

பழைய நண்பர்களின் முகமூடி என்று பல தரப்பட்ட அனுபவங்களையும் அவை கொடுத்த வருத்தத்தையும் வைத்து மோசமான வருடம் என்று கூற மனம் வரவில்லை,

பல சோகங்களை கொண்டு வந்தாலும் அத்தகைய அனுபவங்களை கொடுத்ததால் மிக சிறந்த வருடம் என்று சொல்வேன் இதை.

இந்த பதிவு எழுதும்போதே அடுத்த சில பதிவுக்கு கரு கிடைத்து விட்டது, ஏன் எனது தேமேஜருடனான அனுபவங்களை பதிவாக எழுதக்கூடாது என்று தோன்றுகிறது, எழுதாலம் கண்டிப்பாக

விரைவில் எதிர்பாருங்கள்

நீங்களும் மேனேஜர் ஆவது எப்படி???

Tuesday, October 14, 2008

மொக்கை

தீபாவளிக்கு ஊருக்கு போக வேண்டாம் என்று நேற்று முடிவு செய்துவிட்டேன், பல காரணங்கள்.

முதலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, கடைசி நாளில் கண்டிப்பாக பேருந்திலோ இல்லை ரயிலிலோ கிடைக்காது என்பது தம்மாதூண்டு போடுசுக்கு கூட தெரியும். நமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பேருந்தில் டிக்கெட் வாங்கலாம் அனால் அன்று பேருந்தில் செல்வது போல பெரிய கொடுமை இருக்காது. இருக்கைக்குமேல பலரை ஏற்றுவார்கள் அவர்கள் அனைவரும் காலுக்கு அடியில் அமர்ந்து பயணம் செய்வார்கள், நமக்கும் தொந்தரவு மற்றவர்க்கும் தொந்தரவு.

இரண்டாவது காரணம் மின்சாரம் துண்டிப்பு, கரூரில் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது, இதுல ஊருக்கு போய் என்ன செய்வது, நிம்மதியாக தூங்க முடியாது, சிறப்பு திரைப்படம் பார்க்க முடியாது, வெட்டியா உட்கார்ந்து இருக்க இங்கயே இருக்கலாம்ல.

இப்போது ஊர்பக்கம் ஒரே பேச்சு உங்க வீட்ல யு பி எஸ் போட்டாச்சா? என்பதுதான், ஒரு மதத்திற்கு முன்புவரை இல்லை என்றால் இளக்காரமான பார்வை பதிலாக கிடைத்தது அனா இப்போ 15000 ரூபாய் போட்டு அதை மாட்டியவர்கள் இப்போது அதை சார்ஜ் செய்ய மின்சாரம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். இப்போதைக்கு சூரிய ஒளியில் மின்சார விளக்கு பற்றி யோசித்து கொண்டு உள்ளேன். அதுக்கு கொஞ்சம் அதிக செலவு பிடிக்கும் என்று நினைக்கிறேன் அனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

தீபாவளி விடுமுறையிலாவது நிம்மதியாக வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால் மாமாவிடம் தொலைபேசி அழைப்பு வந்தது, திருப்பதிக்கு செல்லலாம் தீபாவளி விடுமுறைக்கு என்று; மறுக்கவும் முடியாது அனாலும் நமக்கு கூட்டம் என்றால் ஒத்துக்கொள்ளாது, என்ன செய்ய ஏதோ தலை ஆட்டி வைத்திருக்கிறேன். அக்காவிடம் பேசும்போது நல்ல மாட்டிகொண்டாயா என்று சிரிக்கிறார் பின்ன, அவர்கள் கூபிடும்போது எனக்கும் கூட்டத்திற்கும் ஒத்துகொள்ளது என்று பலமுறை தவிர்த்திருக்கிறேன். இப்போது அதற்க்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமாம், கடவுளை தரிசிக்க கூட முன்பதிவா? அங்கும் இடமில்லை என்று சொல்கிறார்கள்.

இனி இன்னும் இரண்டுமாதத்திற்கு விடுமுறையே கிடையாது, ரொம்ப கொடுமை.

Friday, September 26, 2008

நீண்ட நாட்களுக்கு பிறகு

பதிவெழுதி நெடுநாட்கள் ஆகின்றன, அதனால் இன்று எப்படியும் எழுதிவிடுதல் என்று முடிவெடுத்துவிட்டேன்.
எதைப்பற்றி எழுத? என்னை பாதித்த நெருங்கிய இருவர் பற்றி எழுதலாம்...
நீங்கள் இருவரும் என் வாழ்க்கையில் எதோ ஒரு வகையில் என்னை மிக அருகில் இருந்து கவனிதுவிடீர்கள்
முதலில் நீ, என் முதல் மாற்றத்திற்கு விதிட்டவகையில் உனக்கு எப்பவுமே என்னில் தனி இடம் உண்டு, என்னை மாற்றிய காரணத்தினால் உனக்கு எப்பவுமே முன்னுரிமை குடுத்து வந்துள்ளேன் இன்னமும் குடுப்பேன் அனால் சமீப காலமாக உன்னில் தெரியும் மாற்றங்கள் என்னை கலக்கமடைய செய்கின்றன. நமக்குள்ள இடைவெளி அதிகரித்து வந்தது தெரிந்ததே ஆனாலும் இப்போது அது அடுத்தகட்டத்தை போய்விட்டது என்று நினைக்கிறேன்.
நீ என்னைப்பற்றி கவலைப்பட்ட நாட்கள் முடிந்து பல வருடங்கள் அஹின்றன, என் முடிவுகளில் பெரும்பன்ங் ஆற்றிய நீ ஏன் இப்போதெல்லாம் ஒதுங்கி செல்கிறாய்?இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாக என்னில் பி விளைவுகளை ஏற்படுத்திவிட்டன. அமாமிப்போது நானும் உன்னைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை, பெரிய முடிவுகளை உன்னில் கலந்து யோசிக்காமல் எடுக்க துவங்கிவிட்டேன். இது என்னைஒருவகயிலும் பாதிக்காது அனால் உன்னை பதித்தால் அதற்க்கு நான் போருபக மாட்டேன்.
இரண்டாவது நீ முதலில் நீ ஒன்றை புரிந்துகொள்ள், என்றும் நான் என்னை தாழ்ந்த வகையில் நினைத்த் பேசுபவர்களிடம் பேச மாட்டேன் நீ விதிவலக்கை இருந்தாய், உன் சின்ன சின்ன கோவங்கள், பிடிவாதங்கள் பிடிக்கும், என்னை அதிகம் மாரம் செய்ய தூண்டினாய் அனால் இறுதியில் சிற்சில பிடிவாதங்களால் என்னிடமுள்ள மரியாதையை இழக்கிறாய், இலங்துவிட்டை என்றே சொல்ல வேண்டும்.
சரியான சுயநலவாதியாய் இருக்கும் நீ என்னிடம் எதிர்பார்ப்பது எல்லாமே உனக்கு வேலை செய்வதுதானே? நிஜமாக நான் எதையோ இழந்து அதை மறக்குன்னிடம் வந்து கடைசியில் உன்னிடமும் என் சுயமரியாதையை இழக்க விரும்பவில்லை. இதற்க்கு நான் கோவக்காரனாய் இருந்துவிடலாம், யாவரும் வெறுக்கும் வகையில் மற்றவர்களிடமிருந்த கொஞ்ச மரியாதையையும் பெரிய புடுங்கி என்ற நினைப்பில் நான் உன்னிடம் சேர்ந்து கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை, நேற்று இருந்த கோவத்தை விட உன்னை பற்றி எழுதும்போது அதிகம் வருகின்றது.ஒரே ஒரு அறிவுரை உன் லட்சியங்கள் மிக நன்று அனால் அதை அடைய இன்னும் அதிக முயற்சி தேவை, நீ தற்போது போதும் என்று நினைக்கும் தகுதியெல்லாம் பத்து, மேலும் உயர்சிக்க வாழ்த்துக்கள்.
நான் முதலில் எழுத நினைத்த தலைப்பு நான் கோவப்பட்ட தருணங்கள் அனால் அப்போது அதை எழுத நான் யார் மீதும் கொவப்படவில்லை இப்போது எழுதும்போது இவரைப்பற்றிநினைக்கயிலேயே கோவம் வருகிறது.மன்னிக்கவும்

Friday, July 11, 2008

கார் வாங்கியாச்சு

ரொம்ப நாளா சொல்லிகிட்டிருந்த கார் வாங்கும் படலம் இபோதுதான் முடிந்துள்ளது. தீவிரமா தேடி எனக்கு பிடித்த பாலியோ காரை நேற்று கண்டுபிடித்தேன். இதற்கு முன்னால் மூன்று கார்களைப்பார்த்தேன். அனைத்துமே இணையத்தில் தேடி கண்டு பிடித்ததுதான்.

முதல் கார், மிக குறைவான விலை குறிப்பிடிருந்தனர், சரி பார்க்கலாம் என்று நினைத்து சென்றோம். அதற்க்கு முன்னாடியே பலமுறை தொலைப்பேசியில் அழைத்து உறுதி செய்தனர். அரஞ்சு கலர் பார்க்க நன்றாக பளபளப்பாக இருந்தது. ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. அனைத்தும் ஓகே. இருந்தாலும் ஒரு மெக்கானிக் வைத்து அறிந்துவிடலாம் என்று நண்பரின் உதவியுடன் மெக்கானிக் கண்டுபிடித்து அறிந்தோம்.

காரின் வண்ணம் இரண்டாம் முறை பூசப்பட்டிருந்தது, சர்விஸ் செய்ததற்க்கான வரலாற்றை கூறவில்லை, இஞ்சின் பிரச்சனை இருந்தது. இதை வாங்குவது என்பது ரிஸ்க் என்று முடிவானது.அதனால் இந்த வண்டி இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.

அடுத்து மற்றொன்று, இதுவும் நல்ல வண்டி ஆனால் டீசல் வண்டி, விலையும் நம்ம தகுதிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தது. அதற்குமேல் அதில் வழக்கம் போல உள்ள டீசல் பம்ப் பிரச்சனை இருதது கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது

மூன்றாவதாக பேப்பரில் பார்த்த வண்டிக்கு அழைத்து நேரில் சென்று பார்க்க சென்றோம். பார்க்கும்போதே தெரிந்தது நன்றாக பராமரிக்கப்பட்ட வண்டி என்று.முதல் உரிமையாளர், வண்டியை ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. திருப்திகரமான வண்டி, ஆனால் கேட்ட விலை மயக்கம் வந்து விட்டது பின்னர் ஒரு வழியாக பேசி முடித்தாயிற்று. (மாதிரி புகைப்படம்)

முன் பணம் குடுத்து விட்டு இப்பொது வங்கி கடனுக்காக காத்துகொண்டு உள்ளேன். திங்கட்கிழமை கிடைத்து விடும் என்று நம்புகிறேன். வீட்டிலும் பெரிய எதிர்ப்பு இல்லை. நெடுநாள் ஆசை அதனால் எதுவும் சொல்லவில்லை ஆனாலும் எதோ ஒரு குற்ற உணர்ச்சி இருக்கின்றது, தேவை இல்லாமல் செலவு செய்து விட்டோமா என்று. பார்ப்போம் பல்சர் வாங்கியபோதும் இப்படித்தான் தோன்றியது. பின்னர் வீட்டில் சகஜமாக எடுத்துக்கொள்ள அது மறைந்தது.

எப்படியோ இந்த பிறந்தநாள் நன்றாக நல்ல செய்திகளை கொண்டு வருகின்றது. பத்து நாட்களுக்குள் மூன்று நல்ல செய்தி.நான் கார் வாங்கியது, மிக எதிர்பார்த்த துறை மாற்றம் எனது அலுவலகத்தில், அண்ணனின் திருமணம் மற்றும் சம்பள உயர்வு .. மகிழ்ச்சியான தருணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்.

இத்தருணத்தில் புறக்கணிப்பின் வலியிலிருந்து மீண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் புறப்படுகிறேன் புதிய உலகை நோக்கி. புறக்கணிப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களில் பல என்னை பக்குவபடுத்தியது போலத்தெரிகிறது. மிக கொடியதுதான் இது, நீ என்னுடன் பேசியது பின்னர் என்னிலுள்ள சிறிய தவறு என் நட்பை துளைத்து பின்னர் என்னையே துளைக்கும் அளவிற்கு வந்து, நண்பர்களை பிரித்து, எதிரிகளை கூட பிரித்து என்னை தனிமைச்சிறையில் அடைத்த தருனகள் என் வாழ்வில் கொடிய தருணங்கள். கண்முன்னே சிரித்து பழகிய நண்பர்கள் என்னிடம் பொய் சொல்லி தனியே சென்று களிக்கின்றனர். காரணம் எனக்கு தெரிந்தால் நான் துன்பப்படுவேனோ, இல்லை என்னை விள்ளக்க அவர்களாக எடுத்த முடிவோ என்னவோ மேலும் என்னை அழைக்க முடியாது என்பதாலோ. அவர்களே அடுத்த நாளில் என்னிடம் தெரியப்படுத்துகின்றனர் எவ்வாறு கழித்தோம் நேற்றைய நாளை என்று.

கண்முன்னே எனது நண்பர்களால் புறக்கணிக்கப்படுவது தெரிந்தும் ஊமைச்சிரிப்பு சிரித்துகொண்டு ஏன் இருக்க வேண்டும் நான்? அதற்காக வருத்தப்பட்டு மெலிந்து போவதும் கூடாது, என்னுள் இருந்த "நான்" என்ற சுயமரியாதை தலை தூக்கியது. போராட்டத்தை தனியாளாக நின்று ஏற்க்கத்துவங்கினேன், பல தோல்விகள் மிகச்சில வெற்றிகள், சிற்சில சந்தோசங்கள் என்று முடிந்த கடந்த வருடமும், நல்ல செய்திகளுடன் துவங்கும் இந்த வருடமும் எனக்குள் விதைத்த அனுபவங்களுக்கு நன்றி.

எதோ எழுதப்போய் எதோ எழுதிட்டேன், ஊருக்கு சென்றுவிட்டு வந்து அடுத்து அலப்பரைய ஆரம்பிக்க வேண்டியதுதான். நம்ம அலப்பரைய அப்புறம் சொல்றேன்...

இ புகைப்படம்

Wednesday, July 2, 2008

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

விலைவாசிலாம் கண்ணா பின்னாவென்று ஏறுகிறது, எப்படிடா காலத்த ஓட்டறது?

ஆபிசில வேற புது வேலைலாம் டல்லா இருக்கு, இந்த வருஷம் அப்பரைசல் எப்படியும் ஒன்னும் போட மாட்டாங்க. வேற வேலையும் சுலபமா கிடைக்க மாட்டேன்குது.

வீட்டு ஓனர் வேற வாடகைய எப்படா ஏத்தலாம்னு பாத்துகிட்டு இருக்கான்.
வயசு வேற ஆச்சு, நம்ம கூட படிச்ச பசங்கள்ளாம் கல்யாணம் பண்றாங்க, இத பாத்தாலே நமக்கும் வயசாச்சுன்னு ஒரு பீலிங்கு.

இதுல கூட இருக்கவன்லாம் வீட்ல பொண்ணு பாக்கறாங்கன்னு சொல்லி இன்னும் பெட்ரோல ஊத்தறான்.

வீட்டுல கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கு, நமக்காக அண்ணன் என்ற ஒரு கேட் இருக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் கிடைக்கும்.

அதுக்குள்ள ஒரு வீடு வாங்கிடணும்னு இருந்த கனவு எல்லாம் கனவாவே போய் ரொம்ப நாள் ஆச்சு.

ஏதோ மென்பொருள் துறைல வேலை பாதவாவது ஏதாவது வேற கம்பனிக்கு ஜும்ப் பண்ணி சம்பளத்த ஏத்திக்கலாம் அதுக்கும் வழி இல்ல

கல்யாணம் பண்ணினா வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கணும் எப்படியும் ஒரு லட்சம் தேவை முதல்ல அதுக்கு சேத்து வைக்கணும்.

வீடுதான் வாங்கல நம்ம கெத்த மேயின்டின் பண்ண ஒரு கார் வாங்கி உருட்டுவோம், எப்படியும் நமக்கு யாராது பொண்ண குடுப்பாங்க என்று நம்பி.

வீட்லயே இருக்க பொண்ண வேணாம்ன்னு ஏற்கனவே முடிவு பண்ணினது வசதியா போச்சு.

எப்படியும் இதெல்லாம் சேர்க்க இரண்டு வருசமாது ஆகும் அதுக்கு இடைல யாரது நல்ல மாமனாரா கிடைச்சா செட்டில் ஆகிடலாம்.

மூணு வருசமா வேல செஞ்சு என்னாத்த சேத்து வச்சன்னு பார்த்த ஒரு மண்ணும் இல்ல, ஊதாரிக்கு அர்த்தம் இப்பதான் தெரியுது.

பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் அகிடலாமா? அப்படியே சரின்னாலும் எவன் பொண்ணு குடுப்பான் நல்ல பேருக்கெல்லாம் எவனும் பொண்ணு குடுக்கறது இல்ல எவ்ளோ சேத்து வச்சுருக்க அதுக்குத்தான் பொண்ணு.

காதல் பண்ணலாம்னாலும் நமக்கு இருக்க நண்பர்கள் வட்டாரம் நம்மள முதல்ல வெளிய விடனும் அதும் நடக்காது.

ஐயோ எனக்கும் பொறுப்பு வந்துடுச்சு போலருக்கு, இப்படிலாம் பதிவு எழுதறோம்.

அதான பார்த்தேன், இத எழுதும்போதே நண்பன் ஒருத்தன் வெளிய போகனும்னு கடன் கேட்க்கறான் குடுத்து குடுத்து சிவந்த கையால ஒரு ஆயிரத்த டிரான்ஸ்பர் பண்ணிடோம்ல, திரும்பி வரதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்றதுல ஒரு திருப்தி.

டேய் போதும்டா இந்த மொக்க பதிவு, செய்க்கிரம் போய் கொட்டிக்கோ சாப்பாடு தீந்துடும் என்று மனச்சாட்சி சொல்றதால விடறேன்.
இந்த கால இளைஞன் என்னலாம் யோசிக்கறான் பாருங்க.

இதுல வஞ்ச புகழ்ச்சி அணி எல்லாம் இல்ல, அங்கங்க தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும். படிப்போம் மறப்போம்.