Showing posts with label வார இறுதி. Show all posts
Showing posts with label வார இறுதி. Show all posts

Monday, November 30, 2009

வார இறுதி

நானும் ஷாப்பிங்கும் ரொம்ப தூரம் போல நேற்று அக்காவுடன் டி நகருக்கு சென்றேன், ஷாப்பிங் தான், சென்னையில் இவ்வளவு வருசமா இருக்க டி நகருக்கு வந்தது இல்ல என்று சொல்றியே என முதல் அடி விழுந்தது எனக்கு, ஆமாம் நான் டி நகருக்கு போனதே இது வரை ஒரு மூன்று முறை இருக்கும்.


பார்க்கிங் தேட ரொம்ப கஷ்டமாய் போய்விட்டது, பனகல் பார்க் பகுதியை ஒரு நான்கு முறை ரவுண்டு அடித்தும் கரை நிறுத்த இடம் கிடைக்கவில்லை. ஆரம்பமே மோசமாய் இருகுதேட என நனைத்து, எல்லோரையும் இறக்கி விட்டு பின்னர் என் நண்பன் வீட்டிற்க்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றேன்.

அதென்னங்க நானா தனிய எங்க போனாலும் ஒரு பொண்ணு எதிர்த்த மாதிரி வரதில்ல, நம்ம பாக்கறது இல்ல ஆனா அக்கா, அம்மா கூட போனா மட்டும் நிறைய பொண்ணுங்க வராங்க , சில சமயம் நம்மை குறு குறு என்று பாக்குறாங்க???

 ஆர் எம் கே வீ , எஸ் கே சி, மற்றும் பல பல குட்டி கடைகள் என முடிக்க நான்கு மணி நேரம் ஆனது. ஆனாலும் மனதிற்கு பிடித்த மாதிரி பொருட்கள் வாங்கினோம்.


டி நகரில் எதுவும் பண்ண முடியாது, முக்கியமாய் ஷாப்பிங். வீட்டில் பொண்ணு பாகரங்க முதல் கண்டிஷன் : பொண்ணு ஷாப்பிங் கூடி போக சொல்ல கூடாது, அதுலயும் டி நகர் பக்கம் கூட்டி போக சொல்ல கூடாது.



அடுத்த ஞாயிறு காலை சென்னையில் ஒரு குரூப் மீட் இருக்கு. சென்னையில் உள்ள பியட் பாலியோ ( FIAT PALIO USERS) உபயோகிப்பாளர்கள் எல்லோரும் மீட் பண்ணுகிறோம். yahoo groups ல இதற்கென்று ஒரு குரூப் இருக்கு. இந்தியாவில் கார் உபயோகிப்பாளர் என்று ஒரு குறிப்பிட மாடலுக்கு ஆரம்பிக்க பட்ட முதல் குரூப். மிகவும் உபயோகமான குரூப். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களுடன் புது நண்பர்களும் கிடைப்பார்கள்.

பதிவுலகில் யாரேனும் பியட் பாலியோ உபயோகிப்பாளர்கள் இருந்தால் பயனடையலாம். பியட் கார்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அணுகலாம். என்னவோ தெரியவில்லை எனக்கு தெரிந்து எத்தனையோ கார்கள் இப்பொது இருக்கின்றன ஆனாலும் அதை வாங்க நிறைய ஆட்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் காரின் மீது ஒரு விதமான emotional attachment வைத்திருப்பது இல்லை. எனக்கு தெரிந்து பியட் கார் உபயோகிப்பாளர்கள் இதில் விதிவிலக்கு.
இந்த வாரமும் எந்த படமும் பார்க்கவில்லை, நண்பன் பாவமாய் யோகி பார்க்க போயுள்ளான். பாவம் புள்ளை தப்பிச்சோம் என்று வந்துள்ளது.
 
நண்பர் பிரேம் குமார் மறுபடியும் பதிவுலகிற்கு வந்துள்ளார் மேலும் டிவிட்டருக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளார் அவருக்கு இந்த வார வரவேற்பு
 
மேலும் ஒரு வரவேற்ப்பு, நமது ரூம்மேட் நண்பர் செண்பக ராஜன். பதிவுலகில் புதிதாக அடி எடுத்து வைத்துள்ளார், அவரின் பதிவுகளை இங்கு காணலாம் . இவரை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.


வார இறுதி இவ்வளவு வேகமாய் சென்றது கஷ்டமாய் உள்ளது. காலையில் நெகு நேரம் தூங்க முடியவில்லை, சனிக்கிழமை கலையில் அண்ணா வருவதை இருந்ததால் ஐந்து மணிக்கு எழுந்து கத்திபாரா சென்று கூட்டி வந்தேன், ஞாயிறு காலை நண்பன் பெங்களூரில் இருந்து வந்தான், நான்கு மணிக்கு சென்று அழைத்து வந்து, எனதுகாலை தூக்கம் எங்கோ சென்றது.

Monday, April 13, 2009

வார இறுதி

இந்த வார இறுதியில் மூன்று படங்களை பார்த்தேன்.

முதலில் fast and furious 4 : இந்த பட வரிசையில் நான்காவது படம். முதல் மூன்றைபோல இல்லை. படம் முழுவதும் செண்டிமெண்ட் காட்சிகளும் பாதி படத்துக்கு வசனங்களும் மட்டுமே வருகின்றன. அடிப்படை கார் வெறியனான எனக்கு கார்கள் வரும் காட்சிகளோ, சேசிங் காட்சிகளோ அதிக இல்லாதது குறை. முதலில் வரும் கடத்தல் காட்சி மிக அருமை.. மூன்றாம் பகுதியே அவ்வளவாக இல்லாமல் இருந்தது நான்காம் பகுதி ஏமாற்றம் அளித்தது. vin diesel மட்டும் மின்னுகிறார் அதுவும் அவர் அந்த muscle காரில் பண்ணும் வீலிங் அருமை.

தற்போது நண்பரின் maruti esteemஐ ரெடி பண்ணிக்கொண்டு இருக்கிறோம் அதற்கு ஏற்ற கலர் இந்த படத்தில் கிடைத்துவிட்டது. மற்றேபட்ட படி சொல்லிகொள்ளும்படி ஒன்னும் இல்லை.

இந்த படம் தந்த ஏமாற்றத்தில் வீட்டுக்கு வந்து இதன் இரண்டாம் பாகமான 2fast anf 2 furious படத்தை பார்த்தேன். இதை பார்த்து முடித்ததும் தான் படம்பார்த்த ஒரு நிறைவு வந்தது. அந்த கார்களின் custom டிசைனும் அதை டியூன் செய்திருந்த விதமும் அட்டகாசம். அதிலும் முதலில் வரும் ரேசில் அந்த பாலத்தில் பறக்கும் காட்சி. ஹ்ம்ம் அப்பப்ப இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டும். நான்காம் பாகம் போகும்போது நண்பருடைய இரவல் காரில் சென்றிருந்ததால் பத்திரமாக ஓட்டி வந்து சேர்க்கும் வண்ணம் மெதுவாக வந்தோம். பெட்ரோல் வேறு இல்லை அந்த வண்டியில்.

வழக்கம் போல என்னுடைய காருக்கு சில உதிரி பாகங்களை மாற்றி வண்டியை இன்னும் டியூன் செய்யலாம் என்று இருக்கையில் நண்பனின் அவசரத்தால் அடிபட்டு விட்டது, இப்போது அந்த செலவை வண்டியை சரி செய்ய செய்தாகிவிட்டது. எல்லோருக்கும் ஒரு விண்ணப்பம் வண்டியை ஓசி மட்டும் எப்போதும் கொடுக்காதீர் மன(பண) கஷ்டம் வரும்.


சரி நாமும் நல்ல படம் பார்ப்போம் என்று நேற்று shawshank redemption படம்பர்த்தேன், அற்புதமான படம், ஆரம்ப காட்சியில் கோர்ட்டில் நடக்கும் காட்சியை வைத்து படம் ஒரு விசாரணை படம் போல என்று நினைத்தேன் ஆனால் என் எண்ணத்தை முற்றிலும் ஒளித்துக்கட்டியது. பின்னர் நடக்கும் ஜெயில் காட்சிகள் எல்லாம் நன்றாக இருந்தாலும் அடுத்து நடக்கப்போவதை மனதுக்குள் அடிக்கடி நினைவு வந்துவிட்டது. . சுரங்கம் அமைத்து தப்பிப்பது பற்றி நினைக்க வில்லை, ஆனால் அந்த சினிமா நடிகை படத்துக்கு பின்னால் என்னமோ இருக்கும் என்று நினைத்தேன். படம் தந்த பாடம் எப்போதும் நம்பிக்கையை இழக்காதீர். என்ன அற்புதமான செய்தி. மிக நல்ல படம், எப்போதும் நண்பர்களுக்கு சிபாரிசு செய்யும் அளவிற்க்கு நல்ல படம்.

படத்தில் வரும் ஒரு நல்ல வசனம் "நான் நேர்மையான வங்கி அதிகாரி ஜெயிலுக்கு வரும் முன்னர், அனைத்து திருட்டு தனத்தையும் ஜெயிலுக்கு வந்த பிறகே செய்கிறேன்".

"நான் ஏன் ஜெயிலுக்கு வந்தேன்?? வக்கீல் சரியில்லாததால், இங்கு வந்த அனைவரும் அப்பாவிகள்"