Thursday, April 30, 2009

வழக்கம் போல இந்த வாரக்கடைசி செய்க்கிரம் வந்துவிட்டது, இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. வழக்கமாக வார இறுதியில் பதிவு எழுவது ல்லை, அதற்க்கு மாற்றாக இந்த வாரம் எழுதலாம் என்று இருக்கிறேன்.. இந்த வாரம் பட்டியலில் இருக்கும் வேலைகளை முடிக்க வேண்டும். எப்பயும் சோம்பேறியாக இருந்து வீடு முழுக்க குப்பை ஆகிவிட்டது, இனி அதை மாற்ற வேண்டும்.

வாரக்கடைசி என்கிறது வெளியே செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தோம் எங்கு செல்வது?? எனக்கு தெரியவில்லை அனால் சென்னையிலேயே இருந்தால் பைத்தியம் புடித்துவிடும்.
ஏலகிரி செல்லலாமா என்று யோசிக்கிறேன் ஆனால் இந்த வெயில் காலத்தில் அங்கு ஒன்றும் பெரிதாக இருந்துவிடப்போவதுமில்லை.
இந்த சென்னை ஒரு மொக்கையான ஊர், எங்காவது இரண்டு நாள் விடுமுறைக்கு வெளியே செல்லலாம் என்றால் பெரிதாங்க எந்த இடமும் இல்லை,

நண்பன் பாண்டிச்சேரி கூப்பிடுகிறான் எனக்கு போவதற்கு விருப்பம் இல்லை.
பேசாமல் வீட்டிலேயே இருந்து நல்ல படங்களை பார்த்துக்கொண்டு பொழுது போக்கிற்கு need for speed most wanted விளையாண்டுகொண்டு இருக்கலாம்.
சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு எதாவது உருப்படியாய் செய்யலாம் என்று இருக்கிறேன். கார் வேறு சரி செய்ய வேண்டும், பேசாமல் மூன்று நாட்களும் மேக்காநிக்கே கதி என்று கிடந்தது கற்றுக்கொள்ளலாமா?
இந்திய பொழுது மிக நீண்டு கொண்டே செல்கிறது, அலுவலக வேலைகள் முடியவில்லை.

மூன்று நாட்களை வெள்ளிக்கிழமை பசங்க படம் போலாம் என்று இருக்கிறேன், வருபவர்கள் இரவுக்காட்சிக்கு வரலாம்.
சனிக்கிழமை நண்பர்களுடன் மரியாதையாய் ஒரு படம் பார்க்க போகலாம் என்று இருக்கிறோம். நிறைய சிரித்து நெகு நாட்கள் ஆகின்றன.

பெண்களை பற்றிய என்னுடைய எண்ணம்

பெண்களை பற்றிய ஆண்களின் எண்ணங்களை பதிவெழுதிய எனக்கு மறுபடியும் இதே தலைப்பில் எழுத வேண்டிய ஒரு நிலைமை.

பொதுவாக பெண்களை பற்றி நினைக்கும் போதே முதலில் ஒவ்வொருவர் நினைப்பில் வருவது பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலிமையற்றவர்கள், அமைதியானவர்கள், போன்ற மென்மையான, சிறுபான்மையான எண்ணங்களே தோன்றுகின்றன. ஆண்களின் மனதில் மட்டுமல்ல பெண்களின் மனதில் கூட இதே நிலைமை தான்.

பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடுகின்றனர், நல்ல செய்தி அவர்களும் வாழ்வில் மேலே வர வேண்டும் என்று ஆனால் நம்மில் எத்தனை பெண்கள் அவர்களுக்கு என்று இருக்கின்ற உரிமைகளை சரியாக பயன்படுத்துகின்றனர்? எங்கும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டே வருகிறது.

பேருந்தில் பெண்களுக்கு என்று தனியாக இருக்கைகள் ஆண்களின் இருக்கையில் அவர்கள் அமரலாம் ஆனால் இடம் காலியாக இருந்தாலும் பெண்களின் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் உடனே பெண்ணுரிமை எண்ணம் தோன்றிவிடும் சிலருக்கு.

வரிசையில் கூட பெண்களுக்கு என்று தனி வரிசை, ஆண்களுடன் சேர்ந்து நிற்க கூடாதாம், இல்லை நிற்க விருப்பம் இல்லையாம்.

கல்லூரிகள், பள்ளிகள் பெண்களுக்கென்று தனி ஏனென்றால் பெண்களுக்கு என்று தனி கல்விக்கூடங்கள் இருந்தால் மட்டுமே அவர்களால் மேல் எழும்பி வர முடியும்.நன்றாக் படிக்க முடியும், இப்படி வளரும்போதே இருபாளர் மனதில் இப்படி ஒரு பிரிவு எண்ணத்தை வளர்த்தால் எப்படி??

மகளிர் தினம் என்று வேறு கொண்டாட்டங்கள்.பெண்கள் சிறப்பிதழ்கள், மங்கையர் மலர், அவள் என்று தனி புத்தகங்கள்.

சாலையில் ஒரு பெண் அடிபட்டுவிட்டால் உடனே மக்கள் கருணை பொங்கி விடும். பெண்களும் சளைத்தவர்கள் இல்லை அவர்கள் எங்கெல்லாம் பெண்கள் என்ற பெயரை உபயோகிக்க முடியுமோ அங்கே எல்லாம் உபயோகித்து விடுவார்கள். எனக்கு தெரிந்து சிறு வயதில் சினிமா டிக்கெட் எடுக்க பெண்களால் மட்டுமே எளிதாக முடியும்.

இப்பொது விசயத்துக்கு வருகிறேன், ஏங்க இப்படி நீங்களே பெண்கள் என்றால் இலக்காரமானவர்கள், மென்மையானவர்கள் சில வேலைகளுக்கு முன்வர மாட்டார்கள், இல்லை சில வேலைகள் பெண்களுக்கானது அல்ல என்று வரையருத்துக்கொள்கின்றீர்கள்.
என்னைப்பொறுத்தவரை பெண்களை பிரித்து பார்க்கவில்லை, சமுதாயத்தில் பெண்கள் என்றால் பெண்கள் அவ்வளவுதான், அவர்களுக்கென்று எந்த சலுகையும் இருக்கக்கூடாது, பெண்கள் என்றால் அவர்கள் எடுத்துக்கொள்ளும் சிறு சிறு சலுகைகளால் மனதளவில் எல்லா ஆண்களுக்கும் ஒரு எண்ணம் வந்துவிடுகிறது. பெண்ணாக இருந்தால் எல்லாம் எளிதில் கிடைத்துவிடும், போன்ற எண்ணங்கள்.

சிறிய நிகழ்ச்சி, அலுவலக பேருந்தில் கடைசி வரிசையில் அமர்ந்ந்தால் முதுகு வலி வருகிறது என்று சில நாட்களாக (மூன்று நாட்களாக) முதல் வரிசையில் அமர்ந்து பயணம் செய்கிறோம், இன்று காலையில் பேருந்துக்கு என்று பொதுவாக உள்ள மேற்பார்வையாளர் கூப்பிட்டு நீங்கள் பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள் முன் இருக்கைகள் பெண்களுக்கு என்று கூறினார்கள். ஏன் என்றால் முன் இரண்டு இருக்கைகள் பெண்களுக்கானதாம். அவர்களுக்கு வேண்டும் என்று பயணம் செய்யும் பெண்கள் மெயில் அனுப்பி எங்களை உட்க்கார வேண்டாம் என்றார்களாம். எனக்கு சிரிப்பை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஏங்கடா எந்த காலத்தில் இருக்கிறீர்கள், பேருந்தில் எங்கு அமர்ந்தால் என்ன என்று கேட்டால் பதில் இல்லை. அவ்வாறு மெயில் அனுப்பிய யுவதிகளை நன்கு தெரியும், என் மனதில் அவர்களை பற்றி இருந்த உயர்வான எண்ணம் தகர்ந்தது. பின்னே என்னை பொறுத்தவரையில் எங்கள் பேருந்தில் வரும் பெண்களில் சுயமான சிந்தனையுடன், சுதந்திரமான பெண்கள் என்று நினைத்திருந்த இருவர் தான் அவ்வாறு கேட்டுள்ளனர்.

ஒரே ஒரு கேள்வி, இதே பெண்கள் சில காலங்களுக்கு முன் வழக்கமாக நாங்கள் அமரும் பின் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர் அப்போது நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அவரவர் விருப்பம் எங்கு வேண்டுமோ அங்கு அமரலாம். எனக்கும் கூட முன் இருக்கையில் அமரலாம் என்று எண்ணம் இல்லை அதென்ன பெண்கள் என்பதால் நாங்க விட்டுக்கொடுக்க வேண்டுமா? அப்படியே அவர்களுக்கு அசவுகரியமாக இருந்தால் எங்களிடம் சொல்லி இருக்கலாம். தெளிவாக சொல்லிவிட்டேன் அலுவலகத்தில் இருந்து எனக்குதனியாக எதுவும் அறிவிப்பு வரவில்லை, நான் எங்கு உட்க்கார வேண்டும் என்பது நான் முடிவு செய்ய வேண்டும். இல்லை அதை மற்றவர் முடிவெடுத்தால் அதை பின்னர் பார்க்கலாம் என்று கூறினேன்.

அப்புறம் இந்த மகளிர் தினம் பெண்களுக்கு என்று ஒரு தினம், அன்று பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த என்னை போன்ற ஆண்கள் எல்லோரும் எதாவது செய்ய வேண்டும் என்று, இல்லை ஒரு மொக்கை பதிவு எழுதி வாழ்த்து செய்ய வேண்டும்.

சில தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கும். அவை என்ன என்றால் கோலப்போட்டி, சமையல் சிறப்பு நிகழ்ச்சி, சிறப்பு பட்டி மன்றம் இன்று இந்த காலத்தில் வீட்டை பராமரிப்பது எப்படி போன்ற மொக்கையான நிகழ்ச்சிகள். இவர்களே பெண்கள் என்றால் இவ்வளவுதான் சமையல் நிகழ்ச்சி,கோலப்போட்டி, அழகுப்போட்டி, மேக் அப் செய்வது எப்படி போன்ற மிக சிறந்த நிகழ்ச்சிகள் மட்டுமே தர வேண்டும் என்று எப்படி நினைக்கலாம். பெண்களுக்கு என்று எதற்கு தனியாக நிகழ்ச்சிகள்? தனியான சமையல் நிகழ்ச்சி போன்று ஒதுக்கி கொடுப்பது எதற்கு யார் இதை முடிவெடுப்பது?? முதலில் இப்படி இவர்களே தனியாக பிரித்துக்கொள்வதை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் பொதுவாக கவனிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பெண்கள் மலர் என்றால் அதில் பெண்களுக்கென்று செய்திகள் இருக்க வேண்டும். சரி ஆனால் அவை எல்லாம் சமையல், அழகு சாதனைகள், கோலங்கள், இவை தவிர்த்து வேறு எதுவும் ஏன் இருப்பது இல்லை, இவைகள்தான் பெண்களுக்கென்று எதற்கு ஒரு வரைமுறை?
எல்லோரையும் குறை சொல்லவில்லை ஆனால் சராசரி பெண்கள் மனதில் சுய உரிமை என்றால் ஆண்களை எதிர்த்து பேசுவது, பெண்கள் குழு அமைப்பது என்ற எண்ணங்களை தவிர்த்து எல்லோரும் சாதாரணம் பாகுபாடுஇல்லை என்ற நினைப்பை எப்போது வளர்ப்பது?

பெண்களை பற்றி தவறாக என்னும் ஆண்கள் அதிகமுள்ள இந்த ஊரில் பெண்களை பற்றி பெண்களே தவறாக எண்ணும் நிலைமையும் இருக்கின்றது, இவர்களே ஒரு வேலி அமைத்துக்கொண்டு அதில் வெளியே வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்.பெண்களே தயவு செய்துகுருகிய வட்டத்தில் இருந்து வெளியே வாருங்கள், ஆண்களே அவ்வாறு வெளியே வரும் பெண்களை வரவேற்க தயாராக இருங்கள் ஆனால் தயவு செய்து மறுபடியும் அவர்களை வட்டத்துக்குள்ளே தள்ள முயற்சி செய்யாதீர்கள்.

இந்த பதிவு எழுதப்பட்ட நோக்கம் யாரையும் குறை கூறுவதற்கு அல்ல மேலாக குறைகளை தெரிந்து மேலே வருவதற்கு. சொல்ல வந்த முறையில் சொல்ல வந்த கருத்துகளை சரிவர கொண்டு சேர்க்கவில்லை என்றால் மன்னிக்கவும். எனக்கு தோன்றும் கருத்துகளை வெளிப்படுத்த மட்டுமே இந்த பதிவு, யாரையும் புண்படுத்தவோ இகழ்ந்து பேசவோ அல்ல.

மேற்கூறிய நிகழ்வுதான் என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. மிக சிறிய நிகழ்வு ஆனால் என்னுள் இவை எழுப்பிய கேள்விகள் எத்தனை? பெண்கள் என்றால் முன்னாள் உட்க்கார வேண்டும் என்று முடிவு செய்வது செய்தது யார்?

ஆண்கள் என்றால் பின்னால் உட்க்கார வேண்டும், பெண்கள் சொன்னால் உடனே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்க சொன்னது யார்?
எதற்கு பெண்களுக்கு சலுகைகள்?

அவர்களும்படிக்கிறார்கள் வேலை செய்கிறார்கள் ஆனால் சிறப்பு சலுகைகள்.

வருமானத்தில் கூட வரி பிடிப்பதில் சலுகைகள்.
சமையல் என்றால் பெண்கள் செய்ய வேண்டும் என்பது யார் முடிவெடுத்தது??
கேள்விகள் ஆயிரம் பதில் ஏதும் இல்லை.

ஒரு சுய புலம்பல் போன்ற பதிவு இது, முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அளவுக்கு பெருசா ஒன்னும் இல்லை

Wednesday, April 29, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.-2

பகுதி 1
மனதுக்குள் ஒரு சந்தோஷ நெருப்பூற்று வழிந்து ஓடியது . யோசித்தான், பதில் அனுப்பலாமா? வேண்டாமா?

அனுப்பினா வழிகிறான் என்று நினைத்துக்கொள்வாளோ? அனுப்பனும் என்று மனசு சொல்லுது, வேணாம் என்று அறிவு சொல்லுது எத கேக்கறதுன்னு தெரியாம முழித்தான்.

பதில் அனுப்பலாம் என்றாலும் என்ன அனுப்புவது, மொக்கைய அனுப்பவும்கூடாது. forward msg அனுப்பலாம் என்றாலும் இவன்கிட்ட அப்படி ஒரு sms இருக்கவே இருக்காது. forward msg அனுப்பி பழக்கம் இருந்தாலும் எதாவது ஒன்னு ரெண்டு இவனுக்கும் வரும்.

நெகு நேரம் sms டைப் செய்து அழித்து என்று யோசித்தான். கொஞ்ச வருஷம் முன்னாடிலாம் லவ் லெட்டர் எழுதுவது மாதிரி சினிமால காட்டும்போது ஒரே குப்பையா நாயகனை சுத்தி கிடக்கும், நல்ல வேலை cellphone இருக்கறதால பேப்பர் செலவு மிச்சம் என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு வழியா 'dis s nt the 1st time im getting ths kinda trt msg' னு அனுப்பி வச்சான். அனுப்பிச்சுட்டு ஐயோ அப்ப நமக்கு நிறைய பொண்ணுங்க பிரண்ட்ஸ் இருக்காங்க என்று நெனச்சுகிட்டா? என்று நினைத்து கடுப்பானான்.எதையுமே உறுப்படியா பண்ணாதடா என்று மனதுக்குள் திட்டிக்கொண்டான்.


அவன் அனுப்பிய குறுஞ்செய்தி அவளை கோபப்படுத்தியது.அவள் கேள்விப்பட்டவரை அவன் ஒரு விதமான சீரியஸ் டைப் என்று. இவன் என்னடா என்றால் நம்ம நக்கலடிக்கறான் என்று நினைத்து. ஆமா இந்த சுதா எத்தன தடவ அவனுக்கு treat தரேன்னு சொல்லி ஏமாத்தி இருக்கா , இவகூட இருக்க நம்ம எப்படி அவன் ஒழுங்கா நெனைப்பான் என்று நினைத்தாள். அடுத்த வாரம் கண்டிப்பா treat குடுக்கணும் என்றும் நினைத்தாள்.

ths s d 1st time im sendng dis kinda msg என்று பதில் வந்தது, கதிருக்கு ஏண்டா இப்படி அனுப்பினோம் பாரு இப்ப அவ நாம நெனச்ச மாதிரியே நினைத்துருக்கா என்று கடுப்பானான்.

sry i jus kiddng, i knw am gonna get a gr8 tr8 :) but its true wat i sent, even u can chk with ur frn என்று பதில் அனுப்பினான்,நாளைக்கு சுதாக்கு தெரிந்தாலும் தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்து.

its k but its tru frm dis side 2, also nthg 2 confrm coz i alrdy knw the fact என்று பதில் வந்தது,

ஆக நம்ம பத்தி தெரிஞ்சு வச்சுதான் இருருக்கா போல. மனதுக்குள் ஒரு இசை நிகழ்ச்சியே நடத்தி முடித்திருந்தான், ஆகா நானும் ஒரு பொண்ணுக்கு SMS அனுப்பிட்டு இருக்கேன் என்று மகிழ்ச்சியாய் இருந்தான். முழித்துக்கொண்டே கனவுகண்டான், நண்பர்கள் அனைவரும் சாப்பிட போவது போலவும், அவளும் அவனும் நன்றாக நெருங்கிய நண்பர்களை இருப்பது போலவும், இன்னும் என்ன என்ன கனவுகளோ. அப்படியே தூங்கியும் போனான்.

k gud ngt nd thx 4 d helps again என்று ஒரு குறுஞ்செய்தியை பாத்துவிட்டு ஐயோ gud night சொல்லாம கூட தூங்கிட்டேனே என்று வருந்தினான். உனக்கு பொண்ணுங்க கூட பேசவே தெரியல அப்புறம் எப்படிடா நீ மத்தவங்கள மாதிரி இருக்கா போற, எப்பயும் பொரம பட்டுகிட்டே இருக்கத்தான் லாயக்கு என்று அவனை அவனே திட்டிக்கொண்டான்.

காலங்காத்தால msg அனுப்பினா எதும் நெனசுக்குவா அப்புறம் office போயிட்டு அனுப்பலாம் என்று நினைத்து கிளம்பினான்.

அலுவலகத்தில் அன்று ஏனோ தெரியவில்லை சுதாவை காபி குடிக்க கூப்பிட்டன் அதிசயமாய். அவளிடம் என்ன பேசுவது தெரியவில்லை, எதோ பேசிக்கொண்டு இருந்துவிட்டு, பின்னர் ஒழுங்கா உன் பிரண்டிடம் treat வாங்கி கொடுத்துடு, நாங்க சும்மாலாம் உதவி செய்ய மாட்டோம் என்று கூறினான்.

உனக்கு வேணும்னா நீ போய் கேட்டுக்க என்று கோவமாய் சொல்லிவிட்டு சென்ற சுதாவை பார்த்து அதிர்ந்து நின்றான். என்ன ஆச்சு நேத்து msg பண்ணினது இவளுக்கு புடிக்கலையோ? இல்ல இவட்ட சொல்லலைனு கோவம் வந்துடுச்சா என்று நினைத்து குழம்பினான்.
கூப்பிட்டான் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இவங்க கிட்ட மட்டும் தான் பேசணும் நு நெனைப்பாங்க அனா இவங்க மட்டும் எல்லோரிடமும் பேசுவாங்களாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கைக்கு வந்தான்.

தொடரும்...

Tuesday, April 28, 2009

கடை புதுப்பிக்கப்படுகிறது

பதிவுலகம் வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிப்போச்சு ஆனாலும் நம்ம கடைய பார்த்த ஏதூ பேருக்கு கடை வச்சுட்டு விக்க தெரியாம இருக்க மாதிரி இருக்கு.
ஆமா இன்னிக்கு நேத்து வந்தவங்க எல்லோரும் அவங்க கடைய நிறைய அலங்கரிச்சு வச்சுருக்காங்க அனா நமக்கு அப்படி எதுவுமே தெரிய மாட்டேங்குது. இந்த blog counter கூட சமீபத்துல இன்னொருத்தர் கடைல இருந்து சுட்டு போட்டு வச்சுருக்கேன்.


எனவே மக்களே நம்ம கடைய renovate பண்ணலாம் என்று இருக்கேன், தங்களால முடிஞ்ச உதவிய செஞ்சு நம்ம கடைய அலங்கரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்போதைக்கு என் கடைல என்ன என்ன மாத்தனும், இன்னும் என்ன என்ன விசயங்கள சேத்துக்கலாம், இந்த அலங்காரம் செய்யற ஐட்டம் எல்லாம் எங்க எப்படி சேர்க்கணும்னு யாராவது டியுசன் எடுத்தா நல்ல இருக்கும்.

எதோ நாம நட்டு ஸ்பானர் புடிச்சு வளந்தாலும் கம்பியுடரையும் கத்துகிட்டு போலப ஓட்டறோம், அத ஒழுங்கா ஊட்ட வேணாம்??
மக்களே வாங்க உங்க அறிவுரைய, அனுபவத்த, முயற்சிய எதனாலும் சொல்லுங்க. இன்னிய பதிவ எப்படியோ போட்டுட்டோம் அப்பாடா :)

Friday, April 24, 2009

ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரு ஆடுகள் மறுபடியும் சேர்ந்தன (கண்டிப்பாக பிரியாணிக்காக அல்ல)

ஒரு மகிழ்ச்சியில் உடன் இருக்காத நிலையில் நண்பனை விட்டு சிறிது காலம் விலகி இருந்தேன் ஆனால் எனக்கு தெரிந்த வரையில் எங்கள் இருவருக்கும் உள்ளான நட்பு ஒரு வித்தியாசமானது மற்றவர்கள் பார்வைக்கு.

மூன்று வருடத்தில் நான்கு முறை பிரிந்து ஒட்டிய எங்கள் நட்பு, என்ன விசேசம் என்றால் எப்போது பிரிந்தாலும் அதற்கு எதுவும் சண்டை காரணமாக இருக்காது. இரு முறை எங்கள் இருவரின் நலன் கருதியே பிரிந்தோம்,ஒரு முறை பிரிந்தால் மட்டுமே எங்கள் நட்பு பலப்படும் என்பதால் பிரிந்தோம், ஒரு முறை காரணமே இல்லாமல் பிரிந்தோம். சேரும்போது எங்களுக்குள் எந்தவிதமான சங்கடங்களோ கேள்விகளோ இல்லாமல் முன்பு பிரிவதற்கு முன் எப்படி இருந்தோமோ அப்படியே சேருவோம். இப்போதும் அப்படித்தான். என்னிடம் இருந்து அவன் எதை கற்றானோ இல்லையோ அவனிடம் இருந்து நான் கற்றது நிறைய. நல்லதோ கெட்டதோ அந்த தைரியத்தை, தன்னம்பிக்கையை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு என்னுள் விதைத்தவன்.

எனக்கு கஷ்டம் வரும் வேளையில் எல்லாம் நீ என்னுடன் இருந்தாய், இப்போதும் கூட, எனக்கு தெரியும் நீ கண்டிப்பாக கணித்திருப்பாய் எனக்கு உன் அருகாமையும் நட்பும் இப்போது தேவை என்று. உனக்கு நன்றி என்று சொல்லி அந்த சொல்லையும் அதற்க்கு உள்ள மரியாதையையும் காயப்படுத்தவில்லை.

எங்கள் இருவரையும் சேர்த்து பார்த்தால் கண்டிப்பாக சிலருக்கு ஆற்றாமையும் கோபமும் வரும் அதற்க்கு நாங்கள் பொறுப்பல்ல. எதிர்ப்புகள் இருந்தால்தான் முன்னேற்றம் சாத்தியம். எதிர்ப்புகளை எதிர்க்க சேர்ந்து வருகிறோம். தடைகள் எப்போதும் எங்களுள் ஒரு விவாதப்போருளே, அதை தாண்ட எத்தகைய பயணங்கள் தேவை என்பதை தீர்மானிக்க என்றுமே நாங்கள் தயங்கியது இல்லை. இருவருக்கும் குறிக்கோள் ஒன்றாக இருப்பினும் அதை அடையும் பாதை வேறாக உள்ளது.அதற்காக என்றுமே நாங்கள் கவலைப்பட்டது இல்லை, அவரவர் பாதை அவரவர்க்கு.

Wednesday, April 22, 2009

நானும் இந்த கதையில் இருக்கிறேன்- பேருந்து சிவாவிடம் சொன்னது (சங்கமம் போட்டிக்காக)

சிவா கந்தசாமி அண்ணனுடன் சேர்ந்து ஊருக்கு போவது என்று முடிவெடுத்து விட்டான், இனியுமிங்கு வேலை செய்வது என்பது ரொம்ப கஷ்டம் என்று நினைத்தான்.என்ன இவர்கள் நாம் படிக்க வில்லை என்பதாலேயே இவர்கள் இப்படி நடத்துகிறார்கள், ஆனால் எனக்கு படிக்க பிடிக்கவில்லை என்பதே உண்மை. கந்தசாமி அண்ணன் கம்பனியிலேயே சூப்பர்வைசர் வேலை இருக்கிறதாம் அதில் சேர்த்துவிடுவதாக சொல்லியிருந்தார்.

சிறு வயதில் இருந்தே அவனுக்கு பாடத்தில் கவனம் செல்ல வில்லை, படிப்பான் ஒரு அம்பது அறுவது மதிப்பெண் எடுத்து தேறுவான், சில சமயம் பெயில் ஆகி விடுவான். கணக்கு என்பது அவனுக்கு வரவே வராதது. எப்படியோ 12 வகுப்பு வரை வந்துவிட்டான். தேர்வு முடித்து காத்திருந்தவனுக்கு பேரிடி வந்தது ஆமாம் அவன் தந்தையும் மாமாவும் பேருந்து விபத்தில் பலி ஆயினர்.

குடும்பத்தையே புரட்டி போட்ட நிகழ்வு அது, அதுவும் இரண்டு குடும்பத்தை, அன்றில் இருந்து சிவா ஏதாவது வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தான், கல்லூரி கல்வியை தொலைதூர கல்வியில் கற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து அருகில் இருந்த கடைக்கு வேளையில் சேர்ந்தான், கணக்கு எழுதும் வேலை, வரவுசெலவு கணக்கு எல்லாம் இல்லை ஒரு ஸ்டோர் கீபர் வேலை போல. அது பிடிக்காமல் பின்னர் ஒரு இரு சக்கர வாகனம் சரி செய்யும் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை செய்தான், என்றோ படித்து வைத்த கம்பியுட்டர் வேலை தேடி கொடுத்தது.

அவனுக்கு சர்வீசுக்கு வரும் வாகனத்தை என்ட்ரி போடும் வேலை. என்ட்ரி போட்டு பின்னர் சூப்பர் விசர் சொல்லுவதை சோப் கார்டில் என்டி போடா வேண்டும், பின்னர் மெக்கானிக் எழுதி வைக்கும் பொருட்களை என்ட்ரி போட்டு ஸ்டோருக்கு அனுப்ப வேண்டும்.
சாதாரண வேலை என்றாலும் அவனுக்கு பிடித்தமான வேலை, ஆமாம் மதியமே எல்லா என்ட்ரி வேலையும் முடிந்துவிடும் மதியத்துக்கு பிறகு மற்றவரிடம் பேசி அவர்கள் வேலை செய்வதை பார்ப்பான். பிடித்து போய்விடும். இப்படியே போகும்போது சிறிது சிறிதாக அவனும் வேலை கற்றுக்கொண்டுவிட்டன் ஆனால் அப்போது அவனுக்கு முன்னேற வேண்டும் என்று வெறி இருந்தது அதனால் அவன் அடுத்து ஒரு கார் சர்வீஸ் ஸ்டேஷனில் வேலை சேர்ந்தான், அப்போதுதான் அவனுக்கு இந்த வேலை பிடிக்காமல் இருந்தநேரம் வேலை அதிகம் குறைந்த சம்பளம், அங்கு சர்வீஸ் கொண்டு வரும் கார் diraivargalukku அவனை விட சம்பளம் அதிகம்.

ஒரு நாள் வேலையை முடித்து வெளியே சென்று பேருந்தை பிடித்து வீட்டுக்கு செல்ல நினைத்து பேருந்தில் நின்று கொண்டு இருக்கையில் ஒரு லாரி அவனது பேருந்தை இடிக்கும் போல வந்து நின்றது, பயணியர் அலறிவிட்டனர், இரண்டு ஓட்டுனருக்கும் சண்டை முற்றி பேச்சு தடித்தது.

'ஏண்டா உன் வண்டி அடிபட்டா ரெண்டு உசுருதான் அதிலும் ஒன்னு எப்படியும் எட்டி குதிச்சு ஓடிரும், அறிவிருக்கா இங்க அம்பது உசுரு இருக்குடா, பாத்து வரமாட்டியா' என்று இவனும் பேருந்து ஓட்டுனருக்கு ஆதரவாய் குரல் கொடுத்தான். யாரும் உதவிக்கு வராத நிலையில் பேருந்து ஓட்டுனருக்கு இவன் குரல் பிடித்து போய்விட அவனிடம் பேசி பழக ஆரம்பித்தார். தினமும் அந்த பேருந்திலேயே கிளம்பி வீடு திரும்பும் அளவுக்கு நட்பு வலுத்தது.

ஒரு விடுமுறை நாளில் வெளியூர் சுற்றுலா செல்ல அவர் ஓட்டுனராக நியமிக்கப்பட்டார்.தனியாக செல்வதால் அவனையும் அவர் அழைக்க இவனும் கிளம்பினான். குற்றாலம் சுற்றுலா சென்ற பேருந்து, கல்லூரி மாணவ மாணவியர் இருந்தனர்.

அந்த காலகட்டத்தில் அவன் பேருந்தை பற்றி ஓரளவிற்கு அறிந்திருந்தான், அங்கு அந்த பேருந்தில் சில மாற்றங்களை செய்து அழகு படுதியிருந்தான்.சிவாவிற்கு இதெல்லாம் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. முன்னால் உள்ள கிரில்லில் கயிறை மாற்றி மாற்றி கட்டுவது, லைட்டை அங்கங்கு மாடி அழகு பார்ப்பது என்று அழகு படுத்துவான். பேருந்து பயணமும் அவனுக்கு பிடித்த பயணம் ஆகியது, எப்போதும் ஒரு பரபரப்பாக இருக்கும்.

ஒவ்வொரு பயணமும் வித வித மனிதர்களை கொண்டு இருக்கும் , ரயில் பயணங்களை போல இலாமல் ஒரே மாதிரியான பயணிகள் ஏறியவுடன் படுத்து தூங்குவது, கீழ் படுக்கைக்கு சண்டை போடுவது என்று இல்லாமல். எப்போதும் வெளியே வேடிக்கை பார்க்கலாம், இரவிலும் பார்க்கலாம், ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் பேருந்து பயணங்களில். ஜன்னலில் அழும் குழந்தைகள், ஊருக்கு செல்லும் மனைவிகள், வெளியூர் செல்லும் மாணவர்கள் என்று எலோருக்கும் பேருந்து பயணம் என்பது பிடித்தமான ஒன்று. அதுவும் நல்ல ஓட்டுனரும் பேருந்தும் கிடைத்து விட்டால்.

அன்று அப்படியே அந்த கல்லூரி மாணவ மாணவியரை அழைத்து சென்று திரும்பிக்கொண்டு இருந்தனர். ஹ்ம்ம் சிவாவிற்கு தானும் படித்திருந்தால் இப்படி தானும் வந்திருப்போம் என்று நினைத்தான். தவிர்க்க முடியாமல் அவனுக்கு தந்தையின் நினைவும், பேருந்து விபத்தும் நினைவுக்கு வந்தது. மனதே சரி இல்லை.அப்போதுதான் அவன் தந்தை அடிபட்ட விபத்து நினைவுக்கு வந்தது.இதுபோல ஒரு சுற்றுலா பேருந்துதான், வேண்டும் என்றே தவறாக வந்து தந்தை பயணம் செய்த வண்டியின்மேல் இடித்து விட்டது. அவன் அன்றிலிருந்து பேருந்து விபத்துகளை பார்த்தாலே ஒரு வித பதட்டத்துக்கு உள்ளாவான்.தந்தைமேல் கோவம் வரும் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி ஊராரின் பேச்சுக்கு இடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக சென்று விட்டார் என்று.

அன்றும் அப்படியேதான் திரும்பி வந்தனர்.மாணவ மாணவியர் சந்தோசமாக இருந்தனர், அவனுக்கு தெரிந்து அந்த பேருந்தில் மூன்று காதல் ஜோடிகளும் இருந்தனர். கந்தசாமி அண்ணனிடம் சொல்லியிருந்தான். இதில் 'எத்தனை ஒன்னு சேர போவுதுன்னு யாருக்கு தெரியும்' என்று சிரித்தார் அவர். பேருந்து ஊரை நெருங்கி இருந்தது, ஒரு சிலர் அவரிடம் பேசிக்கொண்டே வந்தனர்,அப்படி ஒருவன் பேசும்போது அடுத்து வரும் ஆளில்லா பகுதியில் நிருந்துங்க அண்ணே வெளியே போகணும் என்று கேட்டான். அவரும் சரி என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த கும்பல் வழிமறித்தது. பேருந்தை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்க அவர்கள் அடுத்த ஊரில் கலவரம் நடக்குது அதனால் இந்த வழியா போங்க என்று வேறு வழி காட்டினர். அதன் வழியே செல்லும்போதுதான் சிவாவிற்கு உரைத்தது, இந்த வழி அவன் அப்பா இறந்து போன சாலை. கந்தசாமி அண்ணனிடம் அவன் அப்பா இறந்த இடத்தை கூறி அந்த வளைவில் பார்த்து போங்க வண்டி வந்தால் தெரியாது என்றான். அதுபோல அந்த இடமும் வந்தது அவரும் பார்த்துதான் சென்றார்,எதிரே அதுபோலவே ஒரு இரு சக்கர வாகனம். நல்ல வேலை ஒரு விபத்து தவிர்க்கப்பட்டது. சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாவதை தடுத்து விட்டோம் என்று.

சிறிது தூரம் சென்றிருப்பார்கள் ஒரு பாலத்தின் அருகே வண்டியை நிறுத்தி இயற்கை உபாதையை கழிக்க அந்த பையன் இறங்கினான். சிவாவும் இறங்கி நின்று கொண்டிருக்க, அவர்களை கடந்து ஒரு இஸ்கார்பியொ சென்றது. கந்தசாமி அண்ணனிடம் சொன்னான், ஒரு நாள் அரசியல்வாதி ஆகி இந்த காரை வாங்க வேண்டும் என்று கூறி முடிக்கும் முன், டொம் என்ற சத்தம், அந்த கார் அப்படியே உருண்டது. பாலத்தில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்து அவ்வழியே சென்ற அரசியல்வாதி கார் சேதம். இருவர் உயிர் இழந்தனர்.

ஒரு வருடத்தில் நடந்தது: அன்று அந்த காரை பார்த்து சிவா ஓடியிருக்க அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை தூக்கி பின்னால் வந்த காரில் எடுத்து போட்டு அசுர வேகத்தில் சென்று ரத்தம் கொடுத்து காப்பாற்றினான். பின்னர் அப்பழக்கம் அவரிடம் அவனை வேலைக்கு சேர்த்தது, அவனும் சேர்ந்தான், அவரின் வலதுகை ஆகிவிட்டான். அரசியல்வாதியாக இருக்கும் அவர் அவனை அரசியல் வாரிசு என்று அழைக்கும் அளவுக்கு நெருங்கி விட்டான். ஆமாம் அவனும் அரசியல் வாதி இன்று, அதே காரை வாங்கி விட்டான். இந்த வருடம் தேர்தலில் நிற்கிறான். இந்த நாள் நினைத்து பார்க்கிறான், வீட்டுக்கு வரும் வழியில் அவன் பண்ணை வீட்டை சென்று பார்க்கிறான் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த அந்த பேருந்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டான். அது இல்லை எனில் அவன் இல்லை இன்று.

சராசரி அரசியல்வாதி ஆகிவிட்ட அவனுக்குள் அவ்வப்போது அந்த சம்பவம் வந்து மனத்தை உறுத்தும், ஆமாம் அன்று பாலத்திற்கு குண்டு வைத்தது அந்த வண்டியில் வந்த இருவர்தான். அவர்களின்மேல் பேருந்தை ஏற்றாமல் தடுத்த சிவா நினைத்துக்கொண்டான் இன்னொரு சிவா உருவாகாம தடுத்துவிட்டோம் என்று, இன்றும் அதே நினைத்துகொண்டான் இன்னொரு சிவா உருவாக வேண்டாம் என்று.அவனுக்கும் கொஞ்சூண்டு மனசாட்சி இருக்கும் போல. இன்னும் எவ்வளவு நாளைக்கோ என்று அந்த பேருந்து அவனை பார்த்து சிரித்தது போல இருந்தது அவனுக்கு.

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.

கதிரவன் அழுதுகொண்டு இருந்தான் எல்லாமே வெறுத்து போனது போல இருந்தது, வாழ்க்கையில் எபோதுமே அழக்கூடாது என்று அம்மா சொன்னது நியாபகத்தில் வந்தது ஆனாலும் அழுவதை நிறுத்தவில்லை... மனது துயரத்தில் இருந்தாலும் ஏதேதோ யோசித்தது. கடந்த ஆறு மாதமாக இனித்த வாழ்க்கை ஏன் இப்போது இவ்வளவு நரகம் ஆகிற்று??

அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை ஆனால் கடவுள் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்,

தன்னை மாற்ற வந்தவளாக அவளை அவன் எண்ணவில்லை, அவளை முதலில் ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை, அவளும் கூட இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். சுதாவின் தோழியாக அறிமுகம் செய்யப்பட்டாள் அவள், இரு முறை வணக்கம் சொல்லி சிரித்து இருக்கிறான்.அலுவலகத்தில் அவ்வப்போது சுதாவுடன் பேசுவது வழக்கம், ஒரு நாள் சனிக்கிழமை எதோ வேலைக்காக வெளியே செல்லவேண்டி இருந்தும், என்ன வேலை என்று நினைவில்லை, நேற்று சுதாவிடம் பேசியபோது முடிந்தால் அவள் விடுதிபக்கம் வர சொல்லியிருந்தாள், எங்கோ வெளியே செல்கிறார்களாம் முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். கதிரவனுக்கு இப்படி எல்லாம் சென்று பழக்கம் இல்லை. கல்லூரி முடிக்கும் வரை அவனுக்கென்று எந்த ஒரு நெருங்கிய பெண் தோழி இல்லை, சில பேரிடம் பேசுவான் எப்போதும் யாரையாது ஓட்டிக்கொண்டு இருப்பான் நெருங்கிய தோழர்கள் என்றும் பெரிதாக இல்லை. எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.

முதல் முறையாக சுதாவை பார்க்கலாம் என்ற நினைப்பில் வண்டியை செலுத்தினான், விடுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே அவன் வருவதாக sms அனுப்பிவிட்டு சென்றான். அவன் செல்லவும் அவள் வெளிவரவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் 'இருடா கதிரா' என்று சொல்லிவிட்டு திரும்பினாள், அவளின் தோழிகள் வந்திருந்தனர். அவனிடம் 'கதிரா இது எல்லாம் என் பிரண்ட்ஸ்' என்று சொல்லி அறிமுகம் நடந்தது. நான்கு பெண்கள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் அசிங்கப்படுதிவிடுவார்கள் என்று சொல்லி உடனே விடை பெற்றான். என்னவோ தெரியவில்லை கிளம்பி மறையும்போது திடிரென்று திரும்பி பார்க்கையில் அவள் அவனை பார்த்தது அவனுக்கு தெரிந்தது.

பின்னர் ஒரு நாள் எதோ பேசிக்கொண்டு இருக்கையில் சுதாவிடம் இந்த வாரம் சினிமாவிர்க்கு போவதை கூறினான். இந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொண்டிருப்பான் கதிரவன். ஆமாம் அப்போதுதான் அவள் எங்களுக்கு டிக்கெட் செய்து தா நாங்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். செய்தும் கொடுத்தான்.

அந்த வா(வ)ரமும் வந்தது. இவன் நண்பர்களிடம் அலுவலகத்தில் வேலை இருக்கிறது சென்று விட்டு நேராக படம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தான்.

நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என்று அண்ணாநகருக்கு வண்டியை விரட்டினான். அண்ணாநகரை நெருங்கிய சமயம் அவளை எங்கோ பார்த்தோமே என்று நினைத்து யோசிப்பதற்குள் சுதாவின் தோழி. ஏன் இங்கு கையை பிசைந்துகொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.. பிறகு வேறு ஏதாவது வேலையாக வந்தாளோ என்று தெரியவில்லை எதுக்கு வம்பு வீணா வந்து கடலை போடுறான் என்று நினைத்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து வண்டியை செலுத்தினான். சிறிது தூரம் சென்றிருப்பான் ஏதோ தெரியவில்லை வண்டியை திருப்பி அவளிடம் சென்று என்ன ஆச்சு ஏன் இங்கே என்று கேட்டான். கேட்டுக்கொண்டே இருக்கும்போது அவள் சுதா சொல்லிவிட்டாளா என்று கேட்டாள். அதே நேரம் சுதாவிடம் இருந்து போனே வந்தது. 'கதிரா நீ எங்கருக்க எனக்கொரு உதவி வேண்டும்' என்று இவள் விடிதியில் இருந்து குடும்ப நண்பரை பார்க்க சென்றதாகவும் பேருந்து மாறி ஏறி எங்கோ சென்று விட்டதாகவும் ஆட்டோ பிடித்து திரும்பலாம் என்றால் கைப்பையில் இருந்த பணம் எல்லாம் தொலைந்து விட்டதாகவும் கூறினாள். சரி நான் பாத்துக்கொள்கிறேன் என்றுவிட்டு அவளிடம் திரும்பினான். 'உங்கள விடுதில விட்டுவிடவா' என்றேன் அதற்கு அவள் சரி என்று குழம்பி அவனை பார்த்தாள். அதற்குள் இன்னொரு வண்டி வந்து நின்றது. மற்றொருவன் அதிலிருந்து இறங்கி இங்க நிற்கரியா என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், சுரேஷ் இது கதிரவன் சுதாவின் நண்பன் என்று. சிரித்து கை கொடுத்தேன், மனதில் அவனை பற்றி நல்ல உருவம் இல்லை, சரி வா நான் கொண்டு விடுகிறேன் என்று கூறி வண்டியை கிளப்பினான்.

வண்டியை கிளப்பிவிட்டு நண்பனை பார்க்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான், சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது புது நம்பரில் இருந்து, நன்றி என்று கூறி. ஒருவேளை அவளாக இருக்குமோ என்றுநினைத்து, யாரென்று கேட்கலாமா? அவளாக இருந்து நீ யார் என்றுகேட்டால் தப்பா நினைத்து விடுவாளோ என்று யோசித்தான். மறுபடியும் சுதாவிடமிருந்து போன் கதிர மறுபடியும் ஒரு உதவிடா, என்று சொலிவிட்டு அந்த சுரேஷ் நண்பனுக்கு வண்டி தேவையாம் அதனால் அவன் கிளம்புறான், நீ அவளை நேராக படத்துக்கு கூட்டி வந்துவிடு என்று. சரி என்று சொலிவிட்டு அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு சுரேஷ் நம்பரை வாங்கி அவனிடம் எங்கிருக்கிறான் என்று பேசி அறிந்து கிளம்பினான். அவன் செல்லவும் சுரேஷ் கிளம்பவும் சரியாக இருந்தது. திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அதில் நேராக சத்யம் தியேட்டர் அனுப்பிவிட்டு பைக்கில் பின்னால் சென்றான்.

நண்பர்களுடன் படம் பார்த்தவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவளையும் பர்ர்த்தான். அவளின் தோழிகளை அடைந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்து சிரித்தான். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒரு sms.
மறுபடியும் நன்றி, உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன் என்று. அவனுக்கு அது யார் என்று தெரிந்தாலும் நன்றி எல்லாம் தேவை இல்லை treat வேணும் என்று பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவன் செங்கல் அவனுக்கு அந்த செய்தியை காட்டியது. சரி தருகிறேன் கண்டிப்பாக என்று.

தொடரும்....

பகுதி 2

பி. கு: ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன் எதோ எழுதியுள்ளேன், அடுத்த பகுதியில் முடிக்கிறேன்