Wednesday, April 22, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்.

கதிரவன் அழுதுகொண்டு இருந்தான் எல்லாமே வெறுத்து போனது போல இருந்தது, வாழ்க்கையில் எபோதுமே அழக்கூடாது என்று அம்மா சொன்னது நியாபகத்தில் வந்தது ஆனாலும் அழுவதை நிறுத்தவில்லை... மனது துயரத்தில் இருந்தாலும் ஏதேதோ யோசித்தது. கடந்த ஆறு மாதமாக இனித்த வாழ்க்கை ஏன் இப்போது இவ்வளவு நரகம் ஆகிற்று??

அவளை சந்திக்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை ஆனால் கடவுள் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்,

தன்னை மாற்ற வந்தவளாக அவளை அவன் எண்ணவில்லை, அவளை முதலில் ஒரு பொருட்டாக எண்ணவும் இல்லை, அவளும் கூட இவனை அப்படித்தான் நினைத்திருப்பாள். சுதாவின் தோழியாக அறிமுகம் செய்யப்பட்டாள் அவள், இரு முறை வணக்கம் சொல்லி சிரித்து இருக்கிறான்.அலுவலகத்தில் அவ்வப்போது சுதாவுடன் பேசுவது வழக்கம், ஒரு நாள் சனிக்கிழமை எதோ வேலைக்காக வெளியே செல்லவேண்டி இருந்தும், என்ன வேலை என்று நினைவில்லை, நேற்று சுதாவிடம் பேசியபோது முடிந்தால் அவள் விடுதிபக்கம் வர சொல்லியிருந்தாள், எங்கோ வெளியே செல்கிறார்களாம் முடிந்தால் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தாள். கதிரவனுக்கு இப்படி எல்லாம் சென்று பழக்கம் இல்லை. கல்லூரி முடிக்கும் வரை அவனுக்கென்று எந்த ஒரு நெருங்கிய பெண் தோழி இல்லை, சில பேரிடம் பேசுவான் எப்போதும் யாரையாது ஓட்டிக்கொண்டு இருப்பான் நெருங்கிய தோழர்கள் என்றும் பெரிதாக இல்லை. எல்லோரிடமும் நன்றாக பழகுவான்.

முதல் முறையாக சுதாவை பார்க்கலாம் என்ற நினைப்பில் வண்டியை செலுத்தினான், விடுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்திலேயே அவன் வருவதாக sms அனுப்பிவிட்டு சென்றான். அவன் செல்லவும் அவள் வெளிவரவும் சரியாக இருந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்புகையில் 'இருடா கதிரா' என்று சொல்லிவிட்டு திரும்பினாள், அவளின் தோழிகள் வந்திருந்தனர். அவனிடம் 'கதிரா இது எல்லாம் என் பிரண்ட்ஸ்' என்று சொல்லி அறிமுகம் நடந்தது. நான்கு பெண்கள் இருக்குமிடத்தில் நாம் இருந்தால் அசிங்கப்படுதிவிடுவார்கள் என்று சொல்லி உடனே விடை பெற்றான். என்னவோ தெரியவில்லை கிளம்பி மறையும்போது திடிரென்று திரும்பி பார்க்கையில் அவள் அவனை பார்த்தது அவனுக்கு தெரிந்தது.

பின்னர் ஒரு நாள் எதோ பேசிக்கொண்டு இருக்கையில் சுதாவிடம் இந்த வாரம் சினிமாவிர்க்கு போவதை கூறினான். இந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொண்டிருப்பான் கதிரவன். ஆமாம் அப்போதுதான் அவள் எங்களுக்கு டிக்கெட் செய்து தா நாங்களும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினாள். செய்தும் கொடுத்தான்.

அந்த வா(வ)ரமும் வந்தது. இவன் நண்பர்களிடம் அலுவலகத்தில் வேலை இருக்கிறது சென்று விட்டு நேராக படம் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு அலுவலகம் வந்தான்.

நண்பனை பார்த்துவிட்டு அலுவலகம் செல்லலாம் என்று அண்ணாநகருக்கு வண்டியை விரட்டினான். அண்ணாநகரை நெருங்கிய சமயம் அவளை எங்கோ பார்த்தோமே என்று நினைத்து யோசிப்பதற்குள் சுதாவின் தோழி. ஏன் இங்கு கையை பிசைந்துகொண்டு நிற்கிறாள் என்று நினைத்து அருகே சென்று கேட்கலாமா என்று யோசித்தான்.. பிறகு வேறு ஏதாவது வேலையாக வந்தாளோ என்று தெரியவில்லை எதுக்கு வம்பு வீணா வந்து கடலை போடுறான் என்று நினைத்துவிட்டால் என்ன ஆவது என்று நினைத்து வண்டியை செலுத்தினான். சிறிது தூரம் சென்றிருப்பான் ஏதோ தெரியவில்லை வண்டியை திருப்பி அவளிடம் சென்று என்ன ஆச்சு ஏன் இங்கே என்று கேட்டான். கேட்டுக்கொண்டே இருக்கும்போது அவள் சுதா சொல்லிவிட்டாளா என்று கேட்டாள். அதே நேரம் சுதாவிடம் இருந்து போனே வந்தது. 'கதிரா நீ எங்கருக்க எனக்கொரு உதவி வேண்டும்' என்று இவள் விடிதியில் இருந்து குடும்ப நண்பரை பார்க்க சென்றதாகவும் பேருந்து மாறி ஏறி எங்கோ சென்று விட்டதாகவும் ஆட்டோ பிடித்து திரும்பலாம் என்றால் கைப்பையில் இருந்த பணம் எல்லாம் தொலைந்து விட்டதாகவும் கூறினாள். சரி நான் பாத்துக்கொள்கிறேன் என்றுவிட்டு அவளிடம் திரும்பினான். 'உங்கள விடுதில விட்டுவிடவா' என்றேன் அதற்கு அவள் சரி என்று குழம்பி அவனை பார்த்தாள். அதற்குள் இன்னொரு வண்டி வந்து நின்றது. மற்றொருவன் அதிலிருந்து இறங்கி இங்க நிற்கரியா என்று கேட்டுவிட்டு சிரித்தான். அவனை என்னிடம் அறிமுகப்படுத்தினாள், சுரேஷ் இது கதிரவன் சுதாவின் நண்பன் என்று. சிரித்து கை கொடுத்தேன், மனதில் அவனை பற்றி நல்ல உருவம் இல்லை, சரி வா நான் கொண்டு விடுகிறேன் என்று கூறி வண்டியை கிளப்பினான்.

வண்டியை கிளப்பிவிட்டு நண்பனை பார்க்காமல் அலுவலகம் வந்து சேர்ந்தான், சிறிது நேரத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது புது நம்பரில் இருந்து, நன்றி என்று கூறி. ஒருவேளை அவளாக இருக்குமோ என்றுநினைத்து, யாரென்று கேட்கலாமா? அவளாக இருந்து நீ யார் என்றுகேட்டால் தப்பா நினைத்து விடுவாளோ என்று யோசித்தான். மறுபடியும் சுதாவிடமிருந்து போன் கதிர மறுபடியும் ஒரு உதவிடா, என்று சொலிவிட்டு அந்த சுரேஷ் நண்பனுக்கு வண்டி தேவையாம் அதனால் அவன் கிளம்புறான், நீ அவளை நேராக படத்துக்கு கூட்டி வந்துவிடு என்று. சரி என்று சொலிவிட்டு அவள் எங்கிருக்கிறாள் என்ற தகவலையும் வாங்கிக்கொண்டு சுரேஷ் நம்பரை வாங்கி அவனிடம் எங்கிருக்கிறான் என்று பேசி அறிந்து கிளம்பினான். அவன் செல்லவும் சுரேஷ் கிளம்பவும் சரியாக இருந்தது. திரு திரு என்று முழித்துக்கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அதில் நேராக சத்யம் தியேட்டர் அனுப்பிவிட்டு பைக்கில் பின்னால் சென்றான்.

நண்பர்களுடன் படம் பார்த்தவன் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவளையும் பர்ர்த்தான். அவளின் தோழிகளை அடைந்தவுடன் அவள் முகம் பிரகாசமாக இருந்ததை பார்த்து சிரித்தான். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒரு sms.
மறுபடியும் நன்றி, உங்களை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன் என்று. அவனுக்கு அது யார் என்று தெரிந்தாலும் நன்றி எல்லாம் தேவை இல்லை treat வேணும் என்று பதில் அனுப்பினான். சிறிது நேரத்தில் அவன் செங்கல் அவனுக்கு அந்த செய்தியை காட்டியது. சரி தருகிறேன் கண்டிப்பாக என்று.

தொடரும்....

பகுதி 2

பி. கு: ஒரு கதை எழுதலாம் என்று நினைத்தேன் எதோ எழுதியுள்ளேன், அடுத்த பகுதியில் முடிக்கிறேன்

2 comments:

Karthik said...

ஹையா, காதலியை தேவதை என்று வர்ணிக்காத காதல் கதை. ரொம்ப சந்தோஷம். தொடருங்க. :)

n btw, brilliant title. :)

DHANS said...

ஹ்ம்ம் நான் கூட இதை கவனிக்கல, அதான் யூத்க்கும் யூத் மாதிரிக்கும் உள்ள வித்தியாசம் போல :)

தலைப்பு கடைசி நேரத்தில் வைத்தேன், நன்றி தங்கள் பாராட்டுக்கு