Tuesday, September 15, 2009

வழக்கம்போல ஒரு நாள்

கலையில் அலாரம் அடிக்கும்போதே இன்னிக்கு லீவு போட்டுவிடலாமா என்ற எண்ணத்துடனேயே கண்ணை திறந்தான் ஜெய். திங்கள் கிழமை கலையில் ஆறு மணிக்கே எழுந்திருக்கனுமா என்ன வாழ்க்கைட, பேசாம வேற கம்பெனி பாது வேலைய மாத்திக்கணும் என்ற நினைப்பிலேயே, அடுத்த அரை மணிநேரம் அலாரத்தை மாதி மாதி வைத்து படுத்தான். ஒழுங்கா சிக்கிரமே தூங்கி இருக்கலாம் ஒரு கேம் என்று சொல்லி சொல்லி கடசில 2 மணி வரை வீடியோ கேம் விளையாண்டா?

எழும்போதே காலையில் உள்ள மீட்டிங் நியாபகத்துக்கு வந்தது, குளித்து கிளம்பும்போது தோன்றியது பேசாம லீவ் போட்டு விடலாமா என்று, வேண்டாம் அடிக்கடி லீவ் போடுகிறோம் அப்புறம் அடுத்த வாரம் வெளியே போலாம் என்று இருக்கும் பிளானுக்கு லீவ் கிடைக்காது.


கிளம்பி வெளியே வந்தான், வெளியே வந்தவுடன் அவன் உலகம் மாறிப்போனது,என்னதான் தூக்க கலக்கம் இருந்தாலும் பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கையில் வழக்கமாக வரும் அவளை எங்கே காணோம் என்று தேடிப்பார்த்தான், பின்னால் வந்துகொண்டு இருந்தால். அவளுக்காக மெதுவாக நடந்தால் பேருந்து போய்விடும் நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் வேகமாக நடக்க ஆரம்பித்தான். தெரு திரும்புகையில் வழக்கமாக எதிர்த்து வரும் அந்த பெண், இவனும் அவளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான், இவனை பார்த்தால் சிரிக்கலாம் என்று மூன்று மாதமாய் முயற்சித்தும் இவனை ஒரு பார்வை கூட பார்க்காமல் போகிறாளே??
மெயின் ரூட்டை தாண்டியதும் எதோ ஒரு IT கம்பெனி பசங்க பொண்ணுங்க கலை கலராய் நின்று கொண்டு இருந்தனர், சனியனுங்க திங்க கிழமை காலைல கூட கடலையா என்று நினைத்துக்கொண்டு அவன் பேருந்துக்காக சற்று தில்லி காத்திருந்தான். நாதாரிங்க பஸ் ஸ்டாப் பக்கத்துல மாத்த சொன்ன கேட்க மாட்டேன்கறாங்க, ஒரு தேவாங்குக்காக நான் இங்க வந்து நிக்கணுமாம். அது கூட நம்மள திரும்பி பார்க்க பிகு பனிக்குது.
ச எப்படி இவங்க எல்லாம் இப்படி கரெக்ட் பண்றாங்க நமக்கு தெரிய மாட்டேங்குது. அதுக்காக பொண்ணுங்க கிட்ட போய் பேசி நம்ம கெத்த குறைச்சுக்க கூடாது என்ற நினைப்பில் நிற்க பேருந்து வந்தது.


திங்கள் கிழமை கலையில்பெருந்து லேட் அக வந்து அவன் தேவதை போகும் பேருந்துக்கு பின்னால் வந்தது. வர வர நம்ம பஸ் டைம் சரி இல்ல எப்பவுமே அந்த காலேஜ் பஸ்கு பின்னாடி வரான். அடுத்த நிறுத்தத்தில் கல்லூரி பெண் ஒன்னு ஏறும் அது இப்பதான் இவனை பார்த்து சிறிதாக புன்னகை செய்து வருகிறது ஆனால் வாரத்துல இரண்டு நாள் அந்த பேருந்துக்கு பின்னால் வரதால பார்க்க முடியறது இல்ல.


அட என்ன ஆச்சரியம் அந்த பொண்ணு இன்னும் நிக்குது, ஹே நான் இங்க இருக்கேன் என்ன ஆச்சு தெரியலையே, பஸ்ஸ விட்டுடுச்சா? இனிக்கு பார்த்து பஸ்ல வந்துட்டேனே வண்டில வந்திருக்கலாமோ? ஏதேதோ தோன்றி அவளை வண்டியில் கூடி போவதைபோல நினைத்துப்பாற்கும்போதே சடாரெண்டு வந்து நின்றது ஒரு பைக் . உடனே ஏறி அமர்ந்தாள், வண்டி கிளம்பியது. அட இனிக்கு ரூம்ல இருக்க மீதி சரக்க தனியாதான் அடிக்கணும் என்று நினைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான். வழக்கம்போல ஒரு திங்கள் கிழமை துவங்கியது அவனுக்கு.