Wednesday, December 31, 2008

வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்

வருடத்தின் கடைசி பதிவு இதுவாக இருக்கலாம்

ரொம்ப முக்கியமாக எட்டு மாதங்களில் அறுபது பதிவு, எல்லாம் மொக்கை பதிவுகள் என்பது மிகப்பெரிய விஷயம். பதிவு எழுத வந்த கதை பற்றி இப்போது பார்ப்போம்,

இந்த வருடத்தின் (2008) முதல் மாதத்தில் நான் இருந்தது டென்மார்க்கில், இந்த வருடம் இனிமையாக துவங்கியது முதல் இரு மாதங்கள் மிக நன்றாக சென்றது, வேலையும் அதிகம் இருக்கவில்லை.

முதல் இரு மாதங்களில் இரண்டு மிக பெரிய ஆர்டர்கள் பெற்றேன், ஒன்றின் மதிப்பு சுமார் இருபது லட்சம் யுரோ. மகிழ்ச்சியான தருணம்.

மார்ச் மாதம் இந்தியா வந்து சேர்ந்தேன், வரும்போதே சிறிய குழப்பம், கடந்த நவம்பரில் நடந்த அபுரைசலில் நிறைய புளுகினானே நமது டேமேஜர் ஒண்ணுமே பண்ணவில்லையே என்று.

எனக்கு தரப்பட்ட வாக்குறுதி என்னவென்றால் பிரெஞ்சு பேசும் நாடுகளின் விற்பனை உதவி வேலைகளை எனக்கு கீழ்கொண்டு வரப்போவதாகவும் மேலும் அலுவலகத்திலேயே பிரஞ்சு மொழி கற்றுத்தர போவதாகவும் கூறினர்.

சொல்லி மூன்று மாதம் ஆனது மூன்று மாதத்தில் இந்தியாவிலிருக்கும் டேமேஜர் என்னுடம் கொண்டிருந்த சுமூக உறவை சிறிது சிறிதாக கைவிடுவதயுனர்ந்தேன்,அவனைப்பற்றி நன்றாக தெரியும் ஆதலால் கண்டுகொள்ளவில்லை.இந்தியா வந்து சேர்ந்தவுடன் இதைப்பற்றி பேசலாம் என்று அவனிடம் சென்றால் மீடிங்கில் பேசுவோம் என்றான்.

என்னடா என்று குழம்பி பின்னர் தனியாக பேசினால் சொல்கிறான் நீ சொல்றமாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று, அப்புறம் எதுக்கு அப்போது சொல்லி ஒத்துகொண்டாய் என்றுகேட்க எதுவும்பதில் இல்லை. பின்னர் ஒரு பதில் சோனான்,இதையெல்லாம் செய்ய எனக்கு நேரம் இல்லை என்று, அத்துடன் எழுந்து வெளியே வந்துவிட்டேன், பின்னர் ஆரம்பித்தது அவனுடைய வேலைகள், எனக்கு மட்டும் வேலை குடுப்பது இல்லை, டீமில் உள்ள அனைவரும் ஒரு வாரத்திற்கு இருபது என்கொயரி பார்த்தால் எனக்கு இரண்டு மட்டுமே.

நானும் விடவில்லை நீ என்னவேணும் என்றாலும் செய் ஆனால் நான் விட்டுகொடுக்க மாட்டேன் என்று, நேற்று சேர்ந்த பயிற்சி பொறியாளர் என்னிடம் வேலை வாங்கும் அதிகாரம் பெற்றான்.

எனது மேலதிகாரியிடம் இந்த பிரிவில் இருந்து விலகி வேறு பிரிவிற்கு மாறும்படி கோரிக்கைவைத்தேன், இவை அனைத்தும் ஏப்ரலில் நடந்தது, அபோதுதான் வேலை இல்லாமல் இருக்கும் நேரத்தில் நிறைய பதிவுகளை படித்தேன், பின்னர் நானும் பதிவு எழுதினால் என்ன என்ற கேள்வி முளைத்தது, பின்னர் நெடு நாளைக்கு பின்னர் மே மாதம் 15 ஆம் தேதி முதற்பதிவை எழுதினேன்.

எனது வாழ்கையின் மிக மோசமான நேரத்தில் நான் பதிவு எழுத ஆரம்பித்தேன், இந்த பதிவுகள்தான் என்னை மேம்படுத்தின இல்லை என்னை அந்த மோசமான நேரங்களில் இருந்து காத்தன என்று சொல்லலாம்.
எனது நேரத்தை பதிவுகளில் செலுத்தினேன் சிறிது நாட்களிலேயே எனக்கும் நல்ல நேரம் வந்தது ஆம், நான் அலுவலகத்தில் வேறு பிரிவுக்குமாற்றப்படேன். அதிலிருந்து எழுத நேரம் கிடைக்கவில்லை. அவ்வப்போது பதிவுகளை படித்தும் சில நேரங்களில் எழுதியும் வருகிறேன்.

பிறந்த நாளுக்கு நானே எனக்கு பரிசு வாங்கிக்கொண்டேன் ஆம் நான் கார்வாங்கியது இந்த வருடம் தான்.

எனது சகோதரரின் திருமணம்

எனது காரில் எனது உறவினருக்கு ஏற்பட்ட சிறிய விபத்து

பாட்டியின் மரணம் புதிய

பழைய நண்பர்களின் முகமூடி என்று பல தரப்பட்ட அனுபவங்களையும் அவை கொடுத்த வருத்தத்தையும் வைத்து மோசமான வருடம் என்று கூற மனம் வரவில்லை,

பல சோகங்களை கொண்டு வந்தாலும் அத்தகைய அனுபவங்களை கொடுத்ததால் மிக சிறந்த வருடம் என்று சொல்வேன் இதை.

இந்த பதிவு எழுதும்போதே அடுத்த சில பதிவுக்கு கரு கிடைத்து விட்டது, ஏன் எனது தேமேஜருடனான அனுபவங்களை பதிவாக எழுதக்கூடாது என்று தோன்றுகிறது, எழுதாலம் கண்டிப்பாக

விரைவில் எதிர்பாருங்கள்

நீங்களும் மேனேஜர் ஆவது எப்படி???

Wednesday, December 24, 2008

கஜினி வெளியாகுமா நம்மூரில்?

இந்தி கஜினி படம் பெருத்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது, அமிர்கான் நடிப்பில் நம்ம முருகதாஸ் இந்தியில் முதலில் இயக்கம் படம், மேலும் அசினுக்கும் இந்தியில் முதல்படம். அமிருக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் அமீர் படம் என்றால் எப்படியும் நல்ல இருக்கும் என்ற நினைப்பு எல்லாம் இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் கூட பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.


நேற்று வீடிற்கு சென்று செய்திகளை பார்க்கையில் இந்த படம் தமிழ்நாட்டில் வெளியாக தடை என்று சொல்லப்பட்டது, எதுவுமே புரியவில்லை, காரணம் இந்த படத்தை தமிழில் தயாரித்தவர் நீதி மன்றத்தில் தன்னிடம் உரிமம் வாங்க வில்லை என்று வழக்கு போட்டுள்ளார் . நீதிமன்றம் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதித்து உள்ளது

என்னடா நாளைய விடுமுறையை ஒரு நல்ல படம் பார்த்து களிக்கலாம் என்றால் இப்படி நடந்துபோச்சே என்று நினைத்தபோது என் மனதில் பல கேள்விகள் எழுந்தன.

இந்த படத்தை கடந்த ஒரு வருடகாலமாக இந்தியில் எடுத்து வருகின்றனர், இதை பற்றிய செய்திகளும் எல்லா பத்திரிக்கையிலும் வெளிவந்தது கொண்டு உள்ளது. இப்படி இருக்க திடீரென்று படம் வெளியாகும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக வழக்கு போட என்ன காரணம்?

படத்தை தயாரித்தவர் என்னிடம் உரிமை வாங்கவில்லை என்று வழக்கு போட என்ன உரிமை இருக்கிறது?

படத்தின் கதை முருகதாசுக்கு சொந்தம் அவரின் கதையை இந்தியில் எடுக்க அவர் உபயோகபடுத்தி இருக்கிறார், இந்த தமிழ் படத்தை தயாரித்தவர் இந்த கதையை தயாரித்தாலே கதை அவருக்கு சொந்தம் ஆகுமா? எனக்கு தெரியவில்லை தெரிந்தவர் சொல்லுங்களேன்?

கடைசி நேரத்தில் பிரச்சனை பண்ணினால் பணம் கறக்கலாம் என்ற எண்ணம்தானே இதற்க்கு காரணம்??

இப்படி செயல்பட்டால் தமிழரை பற்றி மற்றவர் என்ன நினைப்பர், முன்னரே இத்தகைய வழக்கினை போட்டு பிரச்சனையை முடித்துக்கொள்ள வேண்டியதுதான ?

Thursday, December 18, 2008

நமது நாட்டு சுற்றுலா பாதுகாப்பானதா?

வெளிநாட்டு சுற்றுலா வாசிகளை நாம் எப்படி நடத்துகிறோம்?? இந்த கேள்வி எனக்குள் பலமுறை ஏற்பட்டது உண்டு, இரண்டு வாரங்களுக்கு முன்பு பாண்டியில் எனது அலுவலக நண்பருக்கு நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள சென்றேன். அலுவலகத்தில் இருந்து 8 பேர் செல்லும்படி திட்டம் அதனால் இரண்டு கார்களில் செல்ல திட்டமிட்டு கடைசி நேரத்தி எண்ணிக்கை ஆறாக குறைந்தது. மாலை கிளம்பி கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது எங்களது அலுவலக நண்பர் போனில் அழைத்தார், நாங்கள் அவர் மதியமே கிளம்பிவிட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கும் வேளையில் தான் மாமல்லபுரத்தில் நிற்பதாகவும் அதனால் போகும்போது கூடிசெல்லுமாறு கூறினார். இரண்டு கார்களில் வருகிறோம் என்று தெரிந்தவுடன் ஒருஉதவிகேடார், என்னுடன் இரண்டு ஜேர்மனிய நாட்டு சுற்றுலா பயணிகள் இருக்கிறார்கள் அவர்களை பாண்டியில் விட்டுவிட முடியுமா என்று கேட்டார். நமதுவண்டியில் இடம் இருகிறதே என்று சரிசொல்லிவிடோம்.

மாமல்லபுரத்தில் அவர்களை சென்று அடையும்போது மணி ஏழு. மூன்று மணிநேரமாக நிற்கும் அந்த பெண்களுக்கு பேருந்து கிடைக்கவே இல்லை பாண்டி செல்ல, அவர்களை ஏற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கும்போது அவர்களிடம் இருந்த சுமைகளை பார்த்து மலைத்து போய்விட்டோம் , இரண்டு பெரிய சுமைகளும் எப்படியும் நூறு கிலோ இருக்கும், எப்படியோ இரண்டு வண்டிகளிலும் ஏற்றி கிளம்பினோம்.

பயணத்தின்போது தெரிந்தது அவர்கள் சுற்றுலாவிற்காக இந்தியா வந்துள்ளனர், இருவரும் தனியாக வந்து மும்பையில் சந்தித்துக்கொண்டு உள்ளனர். கடந்த மூன்று மாதமாக இந்தியாவில் பல இடங்களை கடந்து தமிழ்நாடு வந்துள்ளனர். படிப்பை முடித்து கொஞ்சம் வேலைபார்த்து பணம் சம்பாதித்து இந்தியாவை பார்க்க வேண்டும் என்று வந்ததாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் கிளம்பு வேண்டும் என்றும்கூறினார்.

பாண்டியில் எங்கு தங்க போகிறீர்கள் என்றதற்கு இனிதான் இடம் பார்க்க வேண்டும் என்றும், பேருந்துக்கு நான்கு மணிநேரம் காத்திருந்ததால் என்ன பண என்று தெரியவில்லை என்று கூறினார், பாண்டி
செல்லவே மணி ஒன்பது, பின்னர் அவர்களை எங்கு இறக்கி விடுவது என்ற கவலை. அவர்களுக்கோ சிறிது பயம் கொள்ள தொடங்கியது பின்னர் நண்பர்கள் உதவியுடன் ஒரு தங்குமிடத்தை கண்டுபிடித்தோம். அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியாது மிக குறித்த அளவில் இடம் வேண்டும் என்பதால் மிக பாதுகாப்பான இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட தேடுதல் நடத்தி கண்டுபிடித்தோம்.

அப்போது தெரிந்தது, வெளிநாட்டினர் நமது நாட்டில் வந்து செல்ல எந்தளவுக்கு பாதுகாப்புக்கு உள்ளது என்று, பணம் இருப்பவர்கள் சரி இல்லாதவர்கள்?? எளிமையான சுற்றுலா இந்தியாவில் என்பது பாதுகாப்பானதாக இல்லையோ என்று தோன்றுகிறது.


அன்று ஒரு நாள் மட்டுமே அந்த இடமும் கிடைத்தால் வேறு வழியில்லாமல் அவர்களையே அடுத்த நாள் தேடிக்கொள்ள கூறி கிளம்பினோம், அதற்குபிறகு குறுஞ்செய்தியில் மிக கஷ்டப்பட்டு தங்குமிடத்தை தேடி கண்டுபிடித்ததாகவும் எங்களை மறுபடி தொடர்பு கொள்ள தயங்கியதாகவும் கூறினார்.


எனது ஐரோப்பிய நாட்களில் எந்த நாட்டுக்கும் எந்த பயத்துடன் சென்றது இல்லை, அங்கு சுற்றுலா பயணிகள் எந்த அளவிற்கு சுதந்திரமாக பயமின்றி செல்ல முடிகிறது என்று அனுபவித்து அறிதேன். இந்தியாவில் மட்டும் சுற்றுலாவை பிரபலப்படுதினால் எந்த அளவிற்கு வருமானம் வரும் என்பதை வெளிநாடுகளில் சுற்றுலா சென்று அங்கு உள்ள மியுசியங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். அவர்கள் சுற்றுலாவை எவ்வாறு பிரபலபடுதுகின்றனர், எப்படி வசதி செய்து கொடுக்கின்றனர் என்று பார்த்தால் அதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம்.

நேற்று அந்த நண்பர்கள் அனுப்பிய மின் மடலில் இருந்த செய்தி என்னை மிக மிக பாதித்தது. ஏன் நமது சகோதரர்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தவறான நோக்கத்தில் மட்டும் அணுகி வருகின்றனர் என்று தெரியவில்லை.

அந்த மின்மடலில் இருந்த சில வரிகளை காணுங்கள்.

** when I was talking about the cultural differences. I know that there are not a lot of differences between the young, modern and educated people in India and the people in germany for example.**


**Here, often I don’t know a lot of things. By the time I made a good experience I transfer it to another situation, but the situation respectively the person is totally different. And especially the Indian men can be so different. Sometimes I feel like a touristical attraction: It would not be the first time that a group of Indian men were standing around me, eyeballing at me. Or that they were talking about how much I would cost, cause they could not imagine that I only wanted to talk to a men. But as I already said, I think between the young, modern and educated people there are often no differences between India and Germany. It’s difficult for me to explain you in english, what I really mean. I hope you understood**

** You don’t have to feel sorry about the trouble I/we faced in India. In spite of everything I like India a lot. I think I have to take it in the end with humour, though it does not feel like this in the situation. It could happen in every country**

மேற்கூறிய வரிகள் எண்ணி மிகவும் பாதித்தன, நாம் எந்த அளவிற்கு மற்றவரி மதிப்பு அளிக்கின்றோமோ அதே அளவிற்குத்தான் அவர்களிடமும் நமக்கு மரியாதையை கிடைக்கும்.

இந்த பதிவு நமது நாட்டை எந்த விதத்திலும் குறை கூறுவதற்கோ, வெளிநாட்டை உயர்த்தி சொல்லுவதர்க்கோ எந்த வித சுய தம்பட்டதிற்கோ எழுதப்பட்டது அல்ல, எந்த விதத்திலும் நமது நாடு குறைந்தது இல்லை, வந்தவர்களை வரவேற்கும் தமிழ்நாட்டில் வரவேற்புக்கும் , உபசரிப்புக்கும் எந்த பாதிப்பும் இருந்ததாக கேள்விப்பட்டது இல்லை.இருந்தாலும் சிலர் பண்ணும் தவறுகளால் மொத்த நாட்டின் பெயரும் சிதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.

சுற்றுலாவாசிகளை (வெளிநாடு /உள்நாடு) மதிக்கவும் மரியாதை செய்யவும் கற்றுக்கொள்ளவேண்டி எழுதியுள்ளேன். காந்தி சொன்னது போல நமதுநாட்டில் பெண் தனியாக பனிரெண்டு மணிக்கு சுதந்திரமாக செல்லும்போதுதான் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்பது உண்மை.

இப்போது பகலிலேயே தனியாக செல்ல முடிவது இல்ல, இதில் எங்கே இரவில்...

எதாவது நடந்தாலும் நமது ஊடகங்களும் உடனே எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களுக்கு பணம் பெற்று தரும்படி இருந்தால் கதறிக்கொண்டு வரும் , ஒரு வாரத்திற்கு கத்துவார்கள் பின்னர் மறந்துவிடுவார்கள்.

Wednesday, December 17, 2008

விவசாயம் ஏன் செய்யக்கூடாது??

கல்லூரி படிப்பை முடித்து வேலையில் சேர்ந்ததும் சிறிது காலத்தில் எனக்கு தோன்றியது எதாவது தொழில் செய்ய வேண்டும் என்பது. இன்று வரை அந்த எண்ணம் இருக்கின்றது ஆனால் என்ன தொழில் செய்வது? எந்த தொழில் செய்தாலும் அதில் ஏற்கனவே இருக்கும் நிறுவனகள் பல, எதாவது புது ஐடியா (இதுக்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் தோன்ற வில்லை) கிடைத்தாலும் நல்ல இருக்கும் எதுவும் கிடைக்க வில்லை.

எனது தந்தை வேறு ஓட்டுனராக பணிபுரிகிறார், அவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே விருப்ப ஓய்வு குடுத்துவிட்டு வர சொல்லிக்கொண்டு இருக்கிறேன் அவரும் வந்தபாடு இல்லை, ஓய்வு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் என்ன வேலை செய்வது என்று கேள்வி. நான் தயங்காமல் சொன்னது விவசாயம், அடிப்படையில் விவசாயக்குடும்பம் எங்களது குடும்பம், எனக்கு நினைவு தெரிந்த நாள் வரையில் விவசாயம் செய்து வந்தோம், எங்களது படிப்பை முன்னிட்டு சொந்த ஊரில் இருந்து நகருக்கு குடி வந்து பின்னர் விவசாயத்தை கைவிடும் நிலைமை ஏற்ப்பட்டது. அது வரையிலும் எனது தாயார் எல்லா வேலைகளையும் செய்து வந்தார்.

சிறு வயதில் எனது தாத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பை காரணம் காட்டி இன்று வரை வயலில் இறங்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர் எனது தந்தை. படிப்படியாக லாபம் குறைந்து பின்னர் நட்டம் வரும்படி ஆனதால் விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டது. இப்போது வீட்டில் எல்லோரும் நல்ல நிலைமைக்கு வந்து விட்டதால் எனது தந்தையை வேலையை விட்டுவிட்டு விவசாயம் பார்க்கும்படி அழைக்கிறேன்.

பரம்பரை தொழிலை சிறிது காலமெனும் நடத்த வேண்டும் என்று ஒரு ஆசை மற்றும் என்னவோ தெரியவில்லை விவசாயதிலொரு நாட்டம் இன்னமும் இருக்கிறது. மற்ற ஊர் பெரியவர்கள் (அவ்வாறுதான் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் ஊர் மந்தையில் தினசரி தாயம் விளையாண்டுகொண்டு உள்ளது, எந்த வேலையும் செய்யாமல்) போல எனது தந்தையையும் தினமும் தோட்டத்திற்கு சென்று மேற்ப்பார்வை பார்த்துவிட்டு வெட்டி நியாயம் அடித்துக்கொண்டு வரும்படி சொன்னால் கேட்க்க மாட்டேன் என்று சொல்கிறார். அவருக்கு பிடிக்கவில்லையாம்,பிள்ளைகள் வளர்ந்து நன்றாக இருக்கும்போது இன்னும் ஏன் கஷ்டப்படவேண்டும்?? அவர் காலில் அவர் நிக்க வேண்டும் என்பது சரி அதற்காக கஷ்டப்பட வேண்டும் என்று இல்லை, அவர்க்கென்று ஒரு தொழில் ஏற்படுத்தி தருகிறோம் கவனியுங்கள் என்றால் வறட்டு சண்டையை நினைத்து மாட்டேன் என்கிறார்.

விவசாயத்திற்கு வருவோம், நமது நாட்டில் விவசாயம் என்பது செத்துக்கொண்டு வருகிறது, எனக்கு தெரிந்து விவசாயக்குடும்பத்தில் இருந்து என்னுடன் படிக்க வந்த எந்த மாணவரும் இன்று மறுபடியும் விவசாயத்தை பொழுதுபோக்காக செய்யகூட தயங்குகின்றனர். விவசாயிக்கு நமது நாட்டில் மரியாதையுமில்லை, எங்கு சென்றாலும் அவமானமும், நட்டமும் கிடைகின்றதால் எவரும் தம் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்பவில்லை.

விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் வசதி நமதுநாட்டில் இல்லாதவரை விவசாயிகள் கண்டிப்பாக ஒழிந்து போவார்கள், எனது மனதில் தோன்றுவது இனும் பத்து ஆண்டுகளில் விவசாயத்திற்கு மீண்டும் பெரிய வரவேற்பு இருக்கிறது, ஏனெனில் விவசாய பொருளுக்கு டிமாண்டு அதிகம் வரும் ஆனால் அதற்கான உற்பத்தி கண்டிப்பாக இருக்காது. அப்போது எளிதில் கிடைக்காத பொருளுக்கு விலை ஏற்றம் என்பது நடக்கும் அனால் அதுவரை நமது குறுநில விவசாயிகள் தாக்குபிடிப்பார்களா என்பது தெரியவில்லை.

விவசாயத்திற்கு பயன்படும் வகையிஒல் பல கருவிகள் இயந்திரங்கள் வந்துள்ளன ஆனால் அவற்றை பயன்படுத்த பெரிய நிலப்பரப்பு வேண்டும், குறுநில விவசாயிகள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலைமையில் அவ்வசதிகள் கண்டிப்பாக அவர்களுக்கு பயன்படுத்த கிடைக்காது, வேண்டும் என்றால் சில குறுநில விவசாயிகள் ஒன்று சேர்ந்து கூட்டாக விவசாயம் செய்து அத்தகைய இயந்திரங்களை பயன்படுத்த முயற்சி செய்யலாம் ஆனாலும் அதை தடுக்க நமதுநாட்டில் சாதி என்று ஒன்றை உருவாக்கி உணவளித்து வைத்துள்ளனர்.

இன்றைய இளைஞர்கள் ஏன் விவசாயத்தில் ஈடுபடக்கூடாது, தமது தந்தையரை மற்றும் உறவினர்களை வைத்து தமக்கு தெரிந்த புதிய தொழில்நுட்பங்களை வைத்து ஏன் முயற்சி செய்யக்கூடாது இதில் ஓரளவிற்கு லாபம் கிடைத்தால் பின்னர் பெரிய அளவில் செய்யலாமே?

விவசாயத்தில் ஈடுபட்டு பணம் ஈட்டினால் நன்றாக வருமானம் ஏற்படுத்தினாலும் சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அவமானத்தால் எவரும் ஈடுபட தயங்குகின்றனர். எனக்கு தெரிந்த நண்பரின் உறவினர் மாதம் விவசாயத்தில் மட்டும் நாற்பது ஆயிரங்கள் சம்பாதிக்கிறார் ஆனாலும் அவருக்கு ஐந்து வருடங்களாக பெண் தேடிக்கொண்டு இருந்து பின்னர் சொந்தத்தில் திருமணம் செய்தனர். எவரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.
இந்நிலைமாறினால் கண்டிப்பாக நமது சமுதாயத்தில் மாற்றம் வரும்.

Tuesday, December 16, 2008

எனது 2008 இன் சிறந்த தருணங்கள்

வருடத்தின் முதல் நாளில் எனது அயல்நாட்டு மேலதிகாரியின் வீட்டில் கொண்டாடிய புத்தாண்டு.

ஊரை விட்டு தனியே வந்திருப்பதனால் நான் தனிமையில் இருக்க கூடாது என்று என்னையும் அவர்களுடன் வந்து புத்தாண்டை கொண்டாட அழைத்த அவரும் அவர் துணைவியும் என்னால் மறக்க இயலாதவர்கள், என் பிறந்தநாளை நானே மறந்து விட்டபோது தனியாய் இருப்பாய் எங்களுடன் வந்து பிறந்த நாளை கொண்டாடு என்று அழைத்து என்னை எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருந்தனர்.

முதல் இரண்டு மாதங்கள் நன்றாக சென்று பின்னர் இந்தியா வந்து சென்னை அலுவலகத்திற்கு வந்த முதல் நாளில் இருந்து ஆரம்பித்த சனி ஆகஸ்டு ஒன்றாம் தேதியுடன் முடிந்தது. ஆம் அன்று முதல் அலுவலகத்தில் வேறு துறையில் மாற்றப்பட்டேன். என் வேண்டுகோளுக்கு இணங்கி என்னை மாற்றிய துறை தலைவர் என்னால் மறக்க முடியாதவர்.
2008 நான் பதிவு எழுத ஆரம்பித்த வருடம், 50 பதிவுகளை எழுதிவிட்டேன் என்று நினைத்துப்பார்த்தால் அதிசயமாய் உள்ளது. இருந்தாலும் எழுத்துப்பிழைகளும் வருகின்றன.

முதன் முதலாக கார் வாங்கினேன் எனது பிறந்த நாளுக்கான என் பரிசாய்

எனது சகோதரரின் திருமணம்.

என் சகோதரிக்கு பிறந்த பெண் குழந்தை.

சந்தோசமாக குடும்பத்துடன் பேசி மகிழ்ந்த நாட்கள் என்று இந்த மோசமான ஆண்டின் நல்லதொரு மறுபக்கம்.

இவை அனைத்தும் நான் இழந்த நட்பு மட்டுமே என்னிடம் இருந்து பிரித்தது, அதற்காக வருத்தப்படாத நாட்களே இல்லை என்ற நிலைமையில் எதற்காக வருத்தப்பட வேண்டும் என்று யோசிக்கிறேன்.

இந்த வருடம் இவ்வளவு மகிழ்ச்சியை நமக்கு கொடுத்தும் இது மோசமான வருடம் என்று இரண்டு கசப்பான நிகழ்வுகளை மட்டும் நினைத்து வருந்தியுள்ளேன் என்று நினைத்து வெட்கப்படுகிறேன் இந்த ஆண்டு இறுதியில்தான்.

என்னைப்பொருத்தவரை அதிக துயரை கொடுத்த நிகழ்வு இரண்டு இருந்தாலும் அவை ஏற்ப்படுத்திய மகிழ்ச்சியான தருணம் பல என்பதால் மிக நன்றாக இருந்தது, இருந்துகொண்டு உள்ளது

கல்வி நமது நாட்டில்

கல்வி நமதுநாட்டில் வியாபாரம் ஆகி பல நாட்கள் ஆகின்றன
இவற்றின் விளைவுகளை நாம் என்றாவது நினைத்து பார்த்தூமா?
இந்திய சூழலில் நகரத்தில் இருக்கும் பள்ளிகளில் பெரும்பான்மை தனியார் பள்ளிகளே.

ஒருவர் தமது மகனையோ மகளையோ முதன் முதலில் பள்ளியில் சேர்க்க என்னென்ன செய்ய வேண்டி உள்ளது.

முதலில் மிக சிறந்த பள்ளி என்று சொல்லப்படும் பள்ளிகளில் விண்ணப்பம் வாங்க நாள் முழுக்க நிக்க வேண்டும், பின்னர் அதற்க்கு சிபாரிசு பிடித்து நன்கொடை குடுத்து இடம்பிடிக்க வவேண்டும், ஒரு சாமானியனால் அதை செய்ய கண்டிப்பாக முடியாது .நன்கொடை என்று சொல்வது எல் கே ஜி க்கு லட்சகணக்கில். நினைக்கவே பயமாய் உள்ளது.

நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நிலைமை இதுதான், என்ன நன்கொடை என்பது அளவில் மாறும் லட்சத்தில் தொடங்கி ஆயிரத்தில் முடிகிறது இந்த லட்சிய கல்வி.

பள்ளிகளின் மார்கெட்டை பொருத்து நன்கொடை மாறும்.
பள்ளிக்கே இவ்வளவு தொகை செலவு செய்தால் பின்னர் மேற்படிப்பன கல்லூரிக்கு எவ்வளவு என்று தெரிந்துகொள்ளுங்கள், பொறியியல் கல்லூரியில் படித்து வெளியே வர பல லட்சங்கள் செலவு ஆகும்.
இவாறெல்லாம் செலவு செய்து படித்து வருபவர் செலவுசெய்த பணத்தை எடுக்க முயற்சி செய்யாமல் இருபாரா? நன்றாக படிக்கும் மாணவருக்கே இவ்வளவு செலவு என்றால் சிறிது குறைவான மதிப்பெண் எடுத்திருந்தால் அவ்வளவுதான் அவங்க அப்பா கொள்ளை அடித்து தான் பணம் காட்ட வேண்டும்.

படித்து முடித்த பின்னர் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்துவிடுகிறது ஆனாலும் குடும்ப கஷ்டம் தீர மூன்று ஆண்டுகள் சம்பாதித்து கடனை அடைத்தால் அடுத்த ஆண்டில் திருமணம் செய்ய வேண்டிவரும். அதற்க்கு கையில் சல்லி காசு இருக்காது கடன் வாங்கி செய்ய வேண்டும் பின்னர் சம்பாதித்து அதை அடைக்க வேண்டும், பின்னர் குழந்தை என்று வந்தால் பள்ளியில் சேர்க்க செலவு என்று அரம்பிக்கும்பாருங்கள்.

ஏன் நமது அரசாங்க பள்ளிகள் தரம் குறைந்து செயல் இழந்து காணப்படுகின்றன? நேர்மையான அதிகாரிகள் ஆசிரியர்கள் என்று எவருமே காணப்படுவது இல்லையா? மக்கள் நம்பிக்கை வைத்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று ஒரு முறை ஒரு அலுவலர் கூறினார்.

நம்பிக்கை வைத்து அனுப்பும் அளவிற்கு பள்ளி இருக்கிறதா? தகுந்த வசதிகளுடன் பள்ளி இருந்து மக்கள் அனுப்பவில்லை என்றால் கேள்வி கேட்கலாம் , எந்த வசதியும் இல்லாமல் எப்படி அனுப்ப?

மொத்தத்தில் நமது நாட்டின் கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று மாற்றப்பட்டு வருகின்றது. பின்னர் எப்படி பின்தங்கி உள்ள மாணவன் முன்னேறுவான்? அவனுக்கு ஆரம்பத்திலேயே முறையான கல்வி கிடைக்க வில்லை அப்படி கிடைத்தாலும் படிக்க முடியாத வரு பணம் தடையாக உள்ளது. சும்மா கல்வியில் முன்னேறி உள்ளது என்று சொல்லிகொண்டாலும் கடந்த பத்து வருடத்தில் எத்தனை அரசாங்க பொறியியல் கல்லூரி தொண்டங்கப்பட்டது நமது மாநிலத்தில்? தனியார் கல்லூரிகள் ஏற்க்கனவே நிறைய உள்ளன அவர்களுடன் கெஞ்ச வேண்டிஉள்ளது ஒவ்வொரு வருடமும் இத்தனை இடங்களை அரசாங்கத்திற்கு கொடுங்கள் என்று.
தகுந்த கல்வி கொடுக்க கூடிய தரமான அரசாங்க கல்லூரிகளை உருவாக்கினால் தாமாக தரமான கல்வி மற்றும் குறைவான தங்குந்த கட்டணத்தில் தனியார் கல்லூரிகள் கல்வி அளிக்க வரமாட்டார்களா?
என்னை பொறுத்தவரை திருமணம் செய்யும் முன்னரே திருமணத்திற்கு பின்னர் வரும் செலவுகளை நினைத்து பயம் கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது.

இன்னும் நாம் வானளாவிய கட்டிடங்களையும், நிலாவிற்கு ஆள் அனுப்பினாலும் ஏழை மக்கள் சாலையோரத்தில் vaala இடம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

நான் படித்தது அரசு பள்ளியில் ஆனாலும் அதற்கு தனிப்பாடம் சென்றுதான் படிக்க முடிந்தது . இருந்தாலும் படிக்கிற மாணவன் எங்கு இருந்தாலும் படிப்பான் என்ற கொள்கை இப்போதெல்லாம் உடைபடுகிறது.

தீர்வு:
கல்வியை அரசு மட்டுமே செயல் படுத்த வேண்டும், இதை செய்ய இப்போதைக்கு முடியாது.

அப்படி என்றால் கல்வி கொள்கைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு.

பள்ளிகளின் தரத்தை உயர்த்தி எந்த ஒரு மாணவனும் இருக்கும் இடத்திற்கு 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என்ற விதி வேண்டும்.

கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு தரும் உதவி தொகையினை தகுதி வாய்ந்தவர்களுக்கு அவர்களின் நிலைமையை பொருத்து மாற்றி அமைக்க வேண்டும்.

அனைவருக்கும் சமசீரான கல்வி வேண்டும்.

இதெல்லாம் நடந்தால்?? என்ன அதற்குள் உங்கள் தூக்கம் கலைந்துவிடும்

Monday, December 15, 2008

இரண்டு மணி நேர பயணம் அலுவலகத்திற்கு

நேற்று ஒரு திருமணத்திற்காக பாண்டி சென்று இரவு திரும்ப நேரமானதால் இன்று காலை ஒரு மணி நேர தாமதமாக அலுவலகம் செல்லலாம் என்று தீர்மானித்து தூங்கி விட்டேன்.சரியாக கிளம்பி எட்டு மணிக்கு காரை கிளப்பி வேளச்சேரியில் இருந்து பழைய மஹாபலிபுரம் சாலை அடைந்து பார்த்தல் life line மருத்துவமனை அருகே சாலையில் ஒரே வாகன கூட்டம்.

அட இன்று முதல் இந்த சாலையில் பணம் வாங்குகிறார்களே என்று நொந்துகொண்டு வாகனத்தை செலுத்தினேன், நமதுமக்கள் படித்தவர் படிக்காதவர் என்று பாகுபாடு இல்லாமல் சாலை விதிகளை பின்பற்றாமல் அவசர குடுக்கை தனமாக வாகனத்தை ஓட்டி ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு இருந்தனர், ஐந்து வரிசையாக செல்ல வேண்டிய இடத்தில் ஒன்பது வரிசையில் நின்று கொண்டு இருந்தனர். அந்த இடத்தை கடந்து வர சரியாக ஒரு மணி நேரம் பிடித்தது .

இதில் அங்கே பணம் வாங்குபவரிடம் திரும்பி வருவதற்கும் சேர்த்து ரசீது கொடுங்கள் என்று கேட்டால் அவர் அது எல்லாம் இங்கு கிடையாது ஒவ்வொரு முறையும் நீங்கள் வாங்க வேண்டும் என்று கூறினார். விதியை நொந்துகொண்டு இனி இந்த சாலையில் வர கூடாது மாலை திரும்பும்போது கிழக்கு கடற்க்கரை சாலையில் வந்து விட வேண்டும் என்று தீர்மானித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், மணி அப்போது சரியாங்க ஒன்பது நாற்பத்து ஐந்து.

சில குளறுபடிகள்: மொத்தமாக ஒரு நாளைக்கு என்று பணம் வசூலிக்கும் முறை இல்லை, ஒவ்வொரு முறையும் பணம் செலுத்த வேண்டும் அல்லது மொத்தமாக 50 முறை பயணிக்க 100 முறை பயணிக்க என்று வாங்கி வைத்து கொள்ள வேண்டும், மாற்ற சாலைகளில் இருப்பது போல ஒரே நாளில் திரும்பி வந்துவிடும் சீட்டு, ஒரு நாளைக்கு முழுவதையும் உபயோகிக்கும் முறை எல்லாம் இல்லை.

இதில் பாவப்பட்டவர்கள் அலுவலகத்திற்கு வாகனம் ஓடுபவர்கள் தான். அவர்கள் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 தடவை அந்த சாலைகளை பயன்படுத்துகின்றனர், ஒவ்வொரு முறைக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும், மொத்தத்தில் பெரிய தொகை.

இன்னும் சில மாதங்களுக்கு பெரிய போராட்டத்திற்கு பின்னரே வீடு செல்வோம் என்று நினைக்கிறேன்.

நேற்று இரவு சென்னை திரும்புகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவன்மியுரை நெருங்கும்போது போலீசார் வழிமறித்தனர், எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று எல்லாம் கேட்டுவிட்டு எதற்கு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்டனர், நான் வந்தது மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம், நான் இரவு இரண்டு மணிக்கு இந்த வேகத்தில் செல்லவில்லை என்றால் நாளைக்கு அலுவலகம் செல்ல முடியாது என்று கூறிவிட்டு வந்தேன்.

இருந்தாலும் அவர்கல்பணி மிக சிறந்தது.இரவு இரண்டு மணிக்கும் சாலையில் நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Thursday, December 11, 2008

மனதில் பட்டவை

இன்று பதிவு எழுவது என்று முடிவெடுத்துவிட்டேன், என்ன எழுவது என்று தெரியவில்லை
சமீப காலங்களாக என் மனது வெறுமையாக உள்ளது
------------------------------
பெட்ரோல் விலையை அரசு குறைத்து உள்ளது ஆனாலும் எதிர்பார்த்த அளவு விலை குறைப்பு இல்லை, சாதாரண மக்களே எளிமையாய் கணக்கு போடுகின்றனர்.
விலை 70 டாலராக இருந்த பொது இங்கு 48 ரூபாய் , பின்னர் 147 டாலராக ஏறியது 5 ரூபாய் ஏத்தினார்கள் மறுபடியும் விலை 45 டாலராக குறைந்து விட்டது ஆனால் விலை குறைப்பு 5 ரூபாய் (ஆக விலை குறைப்பு 70 டாலராக இருந்த நிலைக்கு மட்டுமே )
எனக்கென்னமோ தேர்தலுக்கு முன் ஜனவரியிலோ இல்லை மார்ச் மாதத்திலோ ஒரு விலைகுறைப்பு இருக்கும். தேர்தலில் பிச்சை எடுக்க ஒரு பரிதாப காரணம் வேண்டும் அல்ல.
சென்னை ஆட்டோகாரங்க ரொம்ப நல்லவங்க பெட்ரோல் விலை குறைந்தாலும் கட்டணத்தை கொஞ்சம் கூட குறைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் இதற்க்கு பேசாமல் காரிலேயே வெளியே சென்று விடலாம் போல இருக்கிறது, செலவு ஒன்றும் பெரிய அளவிற்கு வித்தியாசமில்லை.
பகல் கொள்ளைகாரர்கள்
---------------------------
சட்ட கல்லூரி பிரச்சனை, மும்பை பிரச்சனை எல்லாம் மறந்து விட்டு போகும் நேரம் இது, இந்த ஊடகங்கள் அவர்கள் மீது சுமற்றப்பட்ட கேள்விகளுக்கும் தவறுகளுக்கும் எந்த பதிலையும் சொல்லவில்லை, ஒரு வருத்தம் கூட சொல்லவில்லை,இந்த ஊடகங்களை நாம் மதிக்க வேண்டுமா? சில நாட்களுக்கு முன்பு times now சானலில் ஒரு செய்தி காட்டினர், இந்திய நகரங்களில் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு எல்லாம் மீறுகின்றனர் என்று, இதற்க்கு தீர்வு என்ன என்று எல்லாம் கேட்டனர் அடுத்த நாள் காலையில் அலுவலகம் வரும்போது என்னை முந்தி சென்ற ஒரு வாகனம் தாறுமாறாக சென்றது, எந்த ஒரு பூகுவரத்து விதிகளையும் மதிக்க வில்லை, இரு சக்கர வாகனங்களில் செல்பவரை மிரட்டிவிட்டு செல்லும் வகையில் செலுத்தப்பட்டது, நன்றாக கவனிக்கையில் அது Times of India பத்திரிக்கையின் அலுவலர்களை கொண்டு வந்து விடும் வாகனம், அவர்களே இவ்வாறு இருந்துகொண்டு இவர்கள் மற்றவர்களை சொல்கிறார்களாம், ---------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களுக்கு முன்ன்பு சென்னை ரயில் நிலையம் சென்றேன், ஒரு நண்பரை வரவேற்க, அங்கு நிறுத்தியிருந்த காவல் படையினர் மற்றும் சோதனை எல்லாம் நன்றாக இருதது உள்ளே சென்ற பின்பு என் வாழ்வில் முதல் முறையாக ஒரு பொது இடத்தில் செல்லும்போது தீவிரவாதிகள் தாக்கிவிட்டால் என்ன ஆவது என்ற பயம் வந்தது, இவ்வளவு நாட்களில் நடந்த எந்த தாக்குதலுக்கு பின்பும் தோன்றாத பயம் இப்போது தோன்றுகிறது என்பதால் கண்டிப்பாக நமது உள்நாட்டு பாதுகாப்பு எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது
---------------------------------------------------------------------
எது கூறினாலும் குறை கூறுபவர் என்று எப்போதும் நமக்கு அருகிலேயே இருகிறார்கள் நாம் என்னதான் ஒரு விசயத்தை நன்றாக அலசி நன்மை இருக்கிறது என்று கூறினாலும் அதில் ஒரு குறை இல்லை என்றால் அந்த விஷயம் முற்றிலும் தவறு என்று கூறுபவர் என் அருகில் இருக்கிறார். நல்ல மனிதர் ஆனாலும் தற்போது அவரின் மறுத்தல்கள் எல்லாமும் கடுப்படிக்கிறது எனக்கு, எது சொன்னாலும் அது தவறு நான் சொல்வது தான் சரி என்று வாதிடுகிறார், என்ன சொல்ல இவர்களை விட்டு சற்று தள்ளியே இருக்க வேண்டும் என்று முயன்று கொண்டு இருக்கிறேன்
-----------------------------------------------------------
தனிமை இப்போதெல்லாம் நன்றாக இருக்கிறது, அதை அனுபவிக்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆனாலும் என்னை இது சோம்பேறி ஆக்கிவிடும் போல பயமாய் உள்ளது, நண்பர்களை அழைத்தால் எவனும் மதிப்பளிக்க மாட்டேன் என்கிறான், அவனவன் அவனவன் காதலியுடன் வார இறுதியில் காலத்தை கழிக்க விரும்புகிறான், என்னைப்போல காதலி இல்லாத மூன்று நண்பர்கள் அவ்வப்போது கூடுகிறோம், பின்னர் வேறு என்ன பாட்டிலை திறக்கும் வேலையத்தான் செய்கிரூம், நான் என் தனித்துவத்தை மறந்து தண்ணிதுவம் கண்டுவிடுவேனோ என்ற பயத்தில் பேசாமல் திருமணம் செய்துகொல்லாலாம் என்று நினைக்கிறேன், வீட்டில் ஒரு வருடம் கழித்து என்று சொல்கின்றனர். என்னதான் நடக்கிறது என்று பொருத்து பார்க்கலாம்.---------------------------------------------------

Thursday, November 27, 2008

எங்கே போகின்றன நமது செய்தி ஊடகங்கள்

எங்கே போகின்றன நமது செய்தி ஊடகங்கள்,

நேற்று இரவு மும்பை பயங்கரவாதத்தை அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டினர், அப்போது ஒரு தொலைக்காட்சி நமது ராணுவ வீரர்கள் விடுதியின் உள்ளே செல்வதை காட்டினர், அப்போது நடந்த உரையாடல்
செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து கேட்கிறார்கள், நீங்கள் எங்கு நின்று கொண்டு உள்ளீர்கள், விடுதியின் அருகில் செல்ல தடை விதிக்க படுகின்றதா?

பதில்: நாங்கள் விடுதியின் அருகில் இல்லை, எங்களை விலகி செல்லும்படி சொல்லிவிட்டனர் நாங்கள் ஒரு 500 மீடர் தள்ளி உள்ளோம்,
அலுவலகத்தில் இருந்து: ராணுவ வீரர்களை சிறுது அருகில் காட்டும்படி கேமராமேனிடம் கூறுங்கள்.

அவரும் காட்டுகிறார் அப்போது செய்தியாளர், எங்களை எந்த வீரர்களையும் வெளியே நடப்பதையும் நேரடியாக காட்டவேண்டாம் என்று இராணுவம் கேட்டுக்கொண்டு உள்ளது, விடுதியினுள்ளே தொலைக்காட்சி இருக்கலாம் தீவிரவாதிகள் அதிலிருந்து செய்திகளையும் காட்சிகளையும் பார்த்துக்கொண்டு இருந்தால் இருந்தால் நல்லது இல்லை என்று கூறுகிறார்
ஆனாலும் அந்த தொலைக்காட்சி அதையும் வீரர்கள் உள்ளே செல்வத்தையும் காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

இவர்களுக்கு இதனால் பெயர் மட்டும் பணம் சம்பாதிப்பது மட்டுமே இவர்களுக்கு வேண்டுமா??

Tuesday, November 25, 2008

இடது கை பழக்கம்

இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிருபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் எத்தனை அவஸ்தைகள்? எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே தயாராகிறது, இடது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைக்காமல் தயாரிக்கின்றனர்.

பொதுவான இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷ்டப்படும் பொருட்கள் இவை கத்தரிகோல் - எனக்கு தெரிந்து மிக மிக பொதுவான பொருள் இது, இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் கத்தரி இதுவரை நான் இந்தியாவில் பார்த்து இல்லை, தேடி பார்த்துவிட்டேன் இங்கு கிடைப்பதும் இல்லை.

ஹாக்கி மட்டை- இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கான மட்டை இந்த விளையாட்டில் கிடையாது.

கிடார்- வாரணம் ஆயிரம் படத்திற்கு அப்புறம் தெரிகிறது, கிடார் கூட இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு எளிதாக கிடைப்பது இல்லை என்று.

பள்ளியில் இருக்கையுடன் அமர்ந்து இணைக்க பட்டு இருக்கும் மேசை, இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது.

உணவு மேசையில் ஏற்க்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே இருக்கும்.

மேசை நாகரீகம் என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களை தவறாக நினைக்க உதவுகிறது.

சீட்டுக்கட்டு விளையாடும்போதும் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் பிடிக்கும் விதம் அவர்களுக்கு அருகில் உள்ளவர் எளிதாக பார்க்கும் வண்ணம் அமைந்து விடுகிறது.

நமது வீடுகளில் எதாவது விசேச நாட்களில் சாப்பாடு பரிமாறும் வேலை வந்துவிட்டாள் இடது கை பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்த்து விடுகின்றனர், இல்லை எனில் மற்றவர்கள் பேச்சுக்கு ஆளாக வேண்டும்.
இத்தனைக்கும் நடுவில் அவர்கள் சந்தோசமாக இருக்க காரணம் எல்லோரும் இடதுகை பழக்கம் உள்ளவராக இருப்பதில்லையே

Tuesday, November 18, 2008

வாரணம் ஆயிரம் எனக்கு வைத்தது நானூறு ரூபாய் ஆப்பு.

வெள்ளி அன்றே மாயாஜாலில் பார்த்தாயிற்று அனாலும் ஞாயிற்றுகிழமை ஏற்கனவே முடிவு பண்ணியபடி கல்லூரி நண்பர்களுடன் போவது உறுதியாயிற்று.

வெள்ளிக்கிழமை இரவே படம் பார்த்தோம், மொத்தம் சரியாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது. முதல் பாதி கலகலப்பாக சென்றது இருந்தாலும் ஏன் இன்னும் இடைவேளை வரவில்லை என்ற கேள்வி மனதில் வந்து தொலைத்தது. இடைவேளைக்கு பின்னர் படம் கொஞ்சம் நீளம், கெளதம் பேட்டில எல்லாம் சொன்ன மாதிரி இந்த படம் பார்த்த அப்பாவ என்னவோ எவ்வளவு மிஸ் பண்ணினூம் அவர போய் கட்டி பிடிக்கணும் என்றுலாம் எனக்கு தோணல. ஆனாலும் மனசு முழுக்க பையன் சூர்யா இருந்தார்.

இந்த படத்தில் கெளதம் மேனன் தெரியல, அனா சூர்யா படம்முழுக்க தெரியறார். நல்ல நடிச்சு இருக்கிறார்.

அப்பாவ பையன் வி ஆர் எஸ் வாங்க சொல்றார் அப்புறம் அமெரிக்க போறார், நானும் எங்கப்பாவ வி ஆர் எஸ் வாங்க சொல்லி இருக்கேன் பார்ப்போம் யாரையது தேடி நானும் அமேரிக்கா போறேனானு. இந்த காரணத்த சொன்ன விசா குடுக்க மாட்டான் கண்டிப்பா.
மொத்ததுல படம் பார்த்துட்டு வரும்போது மறுபடியும் ஒருதடவ பையன் சுர்யாக்காக பார்க்கணும் என்று தோணிச்சு (இல்லைனாலும் பார்க்கத்தான் போறேன் என்பது வேற விஷயம்)

ஞாயிறு காலை வழக்கம் போல கிளம்பி நண்பர்களை அழைத்துக்கொண்டு ஓஎம்ஆர் சாலையில் சென்று கொண்டு இருந்தேன், காரப்பாக்கம் அருகே செல்லும்போது முன்னால் சென்ற தேள் வண்டி (அதாங்க ஸ்கார்பியோ ) வழி விடாம ஆமை வேகத்தில போனாங்க, திடிர்னு வழி விட்டானே என்று நம்பி வேகமா போன புடிச்சாங்க போலிசு, அதி வேகமா வண்டி ஓட்டினேன் என்று. அதெப்படியோ கண்டிப்பா அவங்க இதையெல்லாம் ஞாயிற்று கிழமை மட்டும் தான் பண்ணுவாங்க ஏன்ன அப்பத்தான் போக்குவரத்து கம்மியா இருக்கும், சாலை எல்லாம் காலியா இருக்கும் நிறைய மாட்டுவாங்க என்று.

வண்டியை தூரமாக நிறுத்தி விட்டு பேப்பர் எல்லாம் எடுத்துக்கொண்டு போய் நிறுத்தியவரை பார்த்தேன், நீங்க நிறுத்துவீங்க என்று எதிர்பார்க்கவில்லை என்று சொல்லி உங்க வண்டிய நிறுத்த சொல்லி அடுத்த செக் போஸ்ட்ல சொல்லி விட்டோம் என்றார்.

பின்னர் அதி வேகத்துக்கு கட்டணம் 300 ரூபாய் ரசீது குடுப்போம் என்றார்.சரி என்று கட்ட 300 ரூபாய் எடுத்து குடுத்தேன், ரசீது கொடுக்க சிறிது நேரம் ஆகும், நீங்கள் எங்கு போகிறீர்கள் என்றார், மாயாஜால் போகிறேன் என்றேன், வாரணம் ஆயிரம் படமா என்று அவர் கேட்க ஆமாம் என்றேன், படத்திற்கு நேரமாச்சு என்றால் எதாவது பார்த்து செய்து விட்டு போங்கள் என்றார். எவ்வளவு நேரம் ஆனாலும் ரசீது வாங்கி செல்கிறேன் என்றேன் 5 நிமிடத்தில் ரசீது குடுத்தார், கிளம்பும்போது உங்கள் காட்சிக்கு நேரம் ஆகிவிட்டால் சொல்லுங்கள் அடுத்த காட்சிக்கி டிக்கெட் வாங்கி தருகிறேன் என்று கூறி அசத்தி விட்டார், ஆனாலும் கிளம்பி நேரத்துக்கு சென்று விட்டோம்.

இந்த முறை ஆபரேடர் எடிட்டிங் வேலையை சரியாக செய்து இருந்தார், படம் சரியாக இரண்டு மணி நேரம் முப்பது நிமிடம் ஓடியது. இரண்டாம் முறை பார்க்கும்போது சில காட்சிகளை தவிர மற்றவை எல்லாம் நன்றாக இருந்தது.
திரும்பி வரும்போது சிக்னல் மீறி விட்டதற்க்காக ஒரு நூறு கட்டியது மனதை உறுத்தியது, ஆக வாரணம் ஆயிரம் எனக்கு வைத்தது நானூறு ரூபாய் ஆப்பு.

கடைசி செய்தி, தியேட்டர் காரங்க எல்லாம் வெவரமா விலை எத்திவிடாங்க, மாயஜாலில் டிக்கெட் 120 ரூபாய் ஆனால் அவர்கள் பாக்கேஜ் டிக்கெட் ஆக மட்டுமே தருவார்களாம், ஒரு டின் பெப்சி மற்றும் சோள பொறி நூறு ரூபாய்,கண்டிப்பாக அதையும் சேர்த்து 220 ரூபாய்க்கு வாங்க வேண்டுமாம். இதை தடுக்க புகார் சொல்ல எங்கு செல்வது தெரியவில்லை

Friday, November 14, 2008

மாணவர்கள் இல்லை ரவுடிகள்

சட்ட கல்லூரி வன்முறையை பற்றி நேற்று பதிவுகளை பார்த்து மட்டுமே தெரிந்துகொண்டேன். இன்று காலையில் நண்பன் அனுப்பிய வீடியோ பார்த்து அதிர்ந்து போனேன்.

மாணவர்களுக்குள் அடிதடி சகஜம் அனால் இது அப்படி இல்லை ஒரு கொலை வெறி தாக்குதல், இந்த பரதேசிகள் எல்லாம் சட்ட கல்லூரி மாணவர்களாம் , இவர்கள் நாளைக்கு வக்கீல்கள், நீதிபதிகள். நிலைமை மோசமாகிக்கொண்டே போகின்றது.

எனக்கு தெரிந்து சட்டக்கல்லூரி மாணவர்கள் எல்லோருமே ரவுடிகள் மற்ற கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், மற்றும் பள்ளியிலேயே பொறுக்கிகள் மாட்டுமே இங்கு வந்து படிப்பார்கள், எனது நண்பனின் சகோதரி சட்ட கல்லூரியில் படித்தார் ஆனால் ஆண்டில் பாதி நாட்கள் அவர் வீட்டில் மட்டுமே இருப்பார் ஏன் என்றால் கல்லூரியில் எதாவது ஒரு பிரச்சனை விடுமுறை என்று பதில் சொல்வார்.

அப்போதே தெரியும், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, கீழ்பக்கம் மருத்துவ கல்லூரி விழாவில் இரண்டு சட்ட கல்லூரி மாணவர்கள் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டு அடி வாங்கி சென்றனர், அப்போது அங்கிருந்த காவல் அதிகாரிகள், இவர்களை மாணவர்கள் என்று யார் சொன்னது, எல்லோரும் ரவுடிகள், சந்தர்பத்திற்காக காத்திருக்கிறோம், கிடைத்தால் புளிந்து எடுத்து விடுவோம் என்றனர்,

நேற்று இவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்க வில்லையா? ஏன்யா உன் கண்ணு முன்னாடி ஒருதானை அப்படி அடிக்கிறார்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கொஞ்சம் கூட உங்களுக்கு மனச்சாட்சி இல்லை? இப்படி அடிக்க எப்படி மனசு வருகிறது, ஏண்டா 20 பேர் சேர்ந்து ஒருத்தனை அதுவும் மயங்கி விழுந்தவனை அடிப்பது என்னடா வீரம் .

இதெல்லாம் பண்ணினால்தான் நாளைக்கு வக்கீல் தொழிலில் கட்ட பஞ்சாயத்து பண்ண வசதியாய் இருக்கும் போல. காவல் துறை கண்டிப்பாக இவர்களில் சிலரை கைதுசெய்யும் ஆனாலும் வழக்கம் போல கடுமையான நடவடிக்கை இருக்காது, பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.
வெட்ககேடு,

Friday, October 24, 2008

கோரிக்கை

யாருக்காவது ஆறாம் வகுப்பில் படித்த "i Know a Face " என்ற ஆங்கில poem முழுவதும் தெரிந்தால் பின்னூட்டத்தில் பதிவிடவும்.

Tuesday, October 14, 2008

மொக்கை

தீபாவளிக்கு ஊருக்கு போக வேண்டாம் என்று நேற்று முடிவு செய்துவிட்டேன், பல காரணங்கள்.

முதலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, கடைசி நாளில் கண்டிப்பாக பேருந்திலோ இல்லை ரயிலிலோ கிடைக்காது என்பது தம்மாதூண்டு போடுசுக்கு கூட தெரியும். நமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பேருந்தில் டிக்கெட் வாங்கலாம் அனால் அன்று பேருந்தில் செல்வது போல பெரிய கொடுமை இருக்காது. இருக்கைக்குமேல பலரை ஏற்றுவார்கள் அவர்கள் அனைவரும் காலுக்கு அடியில் அமர்ந்து பயணம் செய்வார்கள், நமக்கும் தொந்தரவு மற்றவர்க்கும் தொந்தரவு.

இரண்டாவது காரணம் மின்சாரம் துண்டிப்பு, கரூரில் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது, இதுல ஊருக்கு போய் என்ன செய்வது, நிம்மதியாக தூங்க முடியாது, சிறப்பு திரைப்படம் பார்க்க முடியாது, வெட்டியா உட்கார்ந்து இருக்க இங்கயே இருக்கலாம்ல.

இப்போது ஊர்பக்கம் ஒரே பேச்சு உங்க வீட்ல யு பி எஸ் போட்டாச்சா? என்பதுதான், ஒரு மதத்திற்கு முன்புவரை இல்லை என்றால் இளக்காரமான பார்வை பதிலாக கிடைத்தது அனா இப்போ 15000 ரூபாய் போட்டு அதை மாட்டியவர்கள் இப்போது அதை சார்ஜ் செய்ய மின்சாரம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். இப்போதைக்கு சூரிய ஒளியில் மின்சார விளக்கு பற்றி யோசித்து கொண்டு உள்ளேன். அதுக்கு கொஞ்சம் அதிக செலவு பிடிக்கும் என்று நினைக்கிறேன் அனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

தீபாவளி விடுமுறையிலாவது நிம்மதியாக வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால் மாமாவிடம் தொலைபேசி அழைப்பு வந்தது, திருப்பதிக்கு செல்லலாம் தீபாவளி விடுமுறைக்கு என்று; மறுக்கவும் முடியாது அனாலும் நமக்கு கூட்டம் என்றால் ஒத்துக்கொள்ளாது, என்ன செய்ய ஏதோ தலை ஆட்டி வைத்திருக்கிறேன். அக்காவிடம் பேசும்போது நல்ல மாட்டிகொண்டாயா என்று சிரிக்கிறார் பின்ன, அவர்கள் கூபிடும்போது எனக்கும் கூட்டத்திற்கும் ஒத்துகொள்ளது என்று பலமுறை தவிர்த்திருக்கிறேன். இப்போது அதற்க்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமாம், கடவுளை தரிசிக்க கூட முன்பதிவா? அங்கும் இடமில்லை என்று சொல்கிறார்கள்.

இனி இன்னும் இரண்டுமாதத்திற்கு விடுமுறையே கிடையாது, ரொம்ப கொடுமை.

Friday, October 3, 2008

மனசு சந்தோசமா இருக்கு

மனசு சந்தோசமா இருக்கு, எனக்கு அரசியல்ல பெருசா ஆர்வம் இல்லை, எந்த அரசியல்வாதியையும் புடிக்காது

அனால் அன்புமணி ராமதாஸ்க்கு ஒரு நன்றி, புகை பிடிக்க கூடாது என்று ஒரு தடை, எனது அலுவலகத்தில் மதியம் உணவுக்கு பின்னர் என்னுடன் வருபவர்கள் புகைபிடிப்பார், சிலரைத்தவிர, நாங்கள் எவ்வளவோ சொல்லியும் விட மாட்டாமல், மேலும் எங்களையும் தொந்தரவு செய்தனர் அவர்கள் புகையால்.

இன்று முதல் எங்கள் அலுவலகத்தில் புகை பிடிக்க தடை அனைவரும் பல்லு புடுங்கப்பட்ட பாம்பு போல ஆனார்கள், அலுவலகத்தை விட்டு வெளியே சென்று பிடித்தனர் அனாலும் எங்களை குப்பிடவில்லை, குப்பிட்ட சிலரையும் நாங்கள் ஒதுக்கி விட்டோம்.
நிம்மதி
நண்பன் ஒருவன் மிக அதிகமாக புகை பிடிப்பவன் எவ்வளவோ சொல்லியும் திருந்தாத அவன் இப்போது அடிக்கடி புகை பிடிக்க முடியாமல் தவித்து பின்னர் பான்பராக் போட மாறிவிட்டான் இன்றிலிருந்து.எதோ பண்ணட்டும் எங்களை தொந்தரவு செய்யாதவரை.

புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்யாமல் இருக்கலாம் முடிந்தவரை அனால் அத பண்ண முடியாது.

எனக்கு தெரிந்தவரை பூடான் மட்டுமே புகையிலை தயாரிப்புகள் தடை செய்யப்பட்ட நாடு.

ராமன் தேடிய சீதை-பாத்துபுட்டோம்ல

ராமன் தேடிய சீதை
எனக்கு படத்திற்கு விமர்சனம் எழுதவெல்லாம் தெரியாது அனால் இந்த படத்தை பார்த்தபோது தோன்றியவை இங்கே.

ஒரு ஆணின் பார்வையில் இருந்து பெண் பார்க்கும் படலம் மற்றும் திருமணம் பற்றிய பார்வை.

இந்த படத்தில் நிறைய இடத்தில் இந்த பெண் பார்க்கும் படலத்தை பழைய சினிமா தனமாக எடுத்துள்ளனர். போன், இணையம் என்று வந்து அனைவரும் இந்த வசதிகளை உபயோகிக்க துவங்கிய பிறகும் நேரில் சென்று பெண் பார்த்து முடிவு பண்ணுகிறோம் என்று சொல்வது கொஞ்சம் நெருடல்.
இவரிடம் இருக்கும்குறைகளை பார்ப்பதற்கு முன்னரே தெரிவித்து சம்மதம் வாங்கலாமே?

அனால் படத்தில் திருமண வயதை கடந்து பெண் கிடைக்காமல் இருக்கும் ஆண்களைப்பற்றி அவர்களின் உணர்வுகளை தெளிவாக காட்டியுள்ளார் சேரன்.

பசுபதி இன்னும் நன்றாக செய்திருக்கலாம், பாவம் சேரன் குருடன், திருடனுக்கேலாம் பெண் கிடைக்கிறது அனால் இவருக்கு கிடைக்க வில்லை.
நவ்யா நாயரை பார்க்கும் முன்னரே ஒரு காட்சியில் மணிவண்ணன் நான் வேணும் என்றால் அந்த ஆஸ்பிடல் பொண்ணுகிட்ட பேசறேன் என்பார் சேரன் வேணாம் என்று மறுத்து விடுவார்.

அப்பவே சரி என்று சொல்லி இருந்தால்படத்தில் இருபது நிமிடங்களையும் நிஜத்தில் சில லகரங்களை மிச்சம் பிடித்திருக்கலாம்.

நாயகனுக்கு வேலையே வார இறுதியில் பெண் பார்க்க போவது பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டுவிட்டு எனக்கு பைத்தியம் என்று சொல்வது, இப்படியே பொழுதை ஊட்டி இருக்கிறார். அப்பத்தான் அந்த பெண் இவரை வேணாம் என்று சொல்லும் அடுத்த வீட்டில் பஜ்ஜி சாப்பிடலாம். (யாரையம் இது புண்படுத்த அல்ல, பார்க்கும் பொது நண்பர்கள் அடித்த கமன்ட் )
போலீசில் அடி வாங்குவது செம சீன். மொத்தத்தில் இரண்டரை மணி நேரமும் நன்றாக சிரித்து பார்த்த படம் இது, சீரியஸ் படமாக எடுத்தாலும் நண்பர்களுடன் பார்கையில் சிரிப்பு படமாக போய்விட்டது,

இதற்கு முன்னர் பார்த்த சத்யம் படத்திற்கு இது எவ்வளவோ தேவலை. அவர் போலீசு என்று நினைத்தாலே சிரிப்பு வருது இதுல மிரட்டற இடத்துல எல்லாம் கெஞ்சிகிட்டு இருக்காபுல. உபேந்திர வரும் சீன்கள் நன்றாக இருந்தன.

தயவு செஞ்சு இனி எப்படி போலீசு கேரக்டரில் நடிக்க கூடாது என்று இந்தப்படத்தை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

ராமன் தேடிய சீதை- இந்த படத்திற்கு இரண்டு டிக்கட் எடுத்து அப்பா அம்மாவை பார்க்க சொல்லி அனுப்ப வேண்டும், பின்ன ஒழுங்கா இப்பவே பெண் பார்க்காமல் விட்டுவிட்ட பின்னர் இப்படித்தான் நானும் அலையனும் என்று தெரிஞ்சுக்க வேணாமா?

அனைத்து பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் :)

Saturday, September 27, 2008

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு பதிவு

நேத்து ஒரு மொக்கை பதிவு போட்டேன், எழுத்துப்பிழை நிறைந்த அதை எனக்கே படிக்க சகிக்கலை

அலுவலகத்தில் புதிய துறைக்கு மாறியதில் இருந்து வேலை அதிகரித்துவிட்டது, பதிவிட நேரம் கிடைக்கவில்லை, அதற்குள்ளாகவே அண்ணன் திருமணம், மற்றும் சில நிகழ்ச்சிகள் என்னை பதிவுலகில் இருந்து வெளியே இருக்கும்படி அமைத்துவிட்டது. இன்றும் பெரிதாக எழுத எதுவும் இல்லை அனாலும் எனக்கு தோன்றியவைகளை எழுதப்போகின்றேன்
சென்னையில் வாகனம் இல்லாமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது, அமாம், அண்ணன் திருமணத்திற்காக எனது காரை ஊருக்கு கொண்டு சென்றேன், அங்கு சிறு விபத்தில் மாட்டி இப்போது வேலைக்காக நின்று கொண்டு உள்ளது, எனது RX-135 திருமணத்திற்கு கிளம்பும் முன்னரே கண்டபடி சத்தம் போட்டு நின்றுவிட்டது, இஞ்சினில் கோளாறு என்று தெரிகிறது, rebore பண்ணி சரி பண்ண வேண்டும் தற்போதைய நிதிநிலைமையில் காரை சரி செய்துவிட்டு வண்டியை சரி செய்யலாம் என்று விட்டுவிட்டேன். எந்த வாகன வசதியும் இல்லாமல் சென்னையில் வெளியே செல்வது மிக கடினம், ஆட்டோ என்ற பணம் தின்னும் இயந்திரம் சென்னையில் உள்ளது அதற்கும் கால் டாக்ஸி என்னும் இயந்திரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. என்ன பின்னர் வருவது ரசீது கொடுத்து பணம் வாங்கும் ,முன்னர் வருவது எதுவும் குடுக்காமல் பணம் வாங்குவது. கூடிய விரைவில் எதாவது வாகனத்தை சரி செய்து விட வேண்டும்.

ஒரு வரமாக அலுவலகத்திற்கு ஒரு சொகுசான பயணம், அலுவலக பேருந்து எங்கள் வழித்தடத்திற்கு மட்டும் மாற்றி மாற்றி வந்தது, பின்னர் அந்த ஒப்பந்தக்காரர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை பத்து நாட்களாக குளிர்சாதன பேருந்தை இயக்கிக்கொண்டு உள்ளனர். சக நண்பர்கள் வயிற்றில் பொறாமை தீ எழுவது நன்றாக தெரிகிறது, இருந்தாலும் சொகுசான பயணம் மிக விரைவில், சிறுசேரியில் இருந்து வேளச்சேரிக்கு 45 நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.

அண்ணன் திருமணம் முடிந்துவிட்டது, அந்த திருமணத்திலேயே அடுத்த திருமணத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர் அனைவரும், குடும்பத்தில் எஞ்சி நிம்மதியாய் இருப்பது நான் மட்டுமே அதையும் விட மாட்டார்கள் போலிருக்கிறது, தைபோதைக்கு அவகாசம் கேட்டு பிழைத்து உள்ளேன். இந்த திருமணத்திலேயே செலவைப்பற்றி ஒரு அபிப்பராயம் வந்துவிட்டது, குறைந்தது 5 லட்சங்கள் இருந்தால் மட்டுமே எதுவும் முடியும் என்ற நிலை வந்துவிட்டது. திருமண செலவுப்பட்டியல் இதோ -புகைப்படம் மற்றும் video - 40000 ரூபாய், சமையல் ஆள்- 30000 மணவறை மற்றும் மற்ற அலங்காரம் 40000 மளிகை- 100000 (இது ஒரு இரவிற்கு செய்ததற்கு மட்டும்) இதுவே திருமனமாய் வைத்தால் 3 வேலைகள் செய்ய வேண்டும் இன்னும் சிலஆயிரங்கள் கூடும். போக்குவரத்து செலவு 25000 ( தங்குமிடம் , பேருந்து எல்லாம் சேர்த்து ) இதையெல்லாம் முடித்து சென்னையில் வீடு புடித்து தங்க வேண்டும் என்றால் குறைந்தது 60000 வேண்டும் வீட்டிற்க்கு அட்வான்ஸ் குடுக்க, இது இல்லாமல் மணப்பெண்ணிற்கு நகைசெய்ய புடவை எடுக்க மற்றவர்களுக்கு துணி எடுக்க என்று மிகப்பெரிய தொகை சென்று விடுகிறது. இதெல்லாம் பார்க்கையில் இன்னும் கொஞ்சம் சம்பாதித்து இதைப்பற்றி யோசிக்கலாம் என்று தோன்றுகிறது.

சமீபத்தில் பார்த்த படம் பொய் சொல்ல போறோம், நன்றாக உள்ளது, நில ஆக்கிரமிப்பு மோசடி பற்றி அழகாக நகைச்சுவையாக கூறியுள்ளனர். லகே ரகோ முன்னா பாய்க்கு அப்புறம் தற்செயலாக ஒரு இந்திப்படம் பார்க்க நேரிட்டது ROCKON இந்தியே தெரியவில்லை என்றாலும் நன்றாக புரிந்தது, ஏனோ தெரியவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை பாதித்த ஒரு படமாக அமைந்துவிட்டது. அதில் நடித்தவர் எவெரும் எனக்கு தெரியாது, ஒருநாள் மனது மிக கனமாக இருந்தது, வீட்டில் நண்பர்கள் இந்தப்படத்திற்கு சென்றனர், கடைசி நேரத்தில் நான் ஒட்டிக்கொண்டு சென்றாலும் தனியாகத்தான் இருக்கை கிடைத்தது, இருந்தாலும் அந்த நண்பர்களுக்கு ஒரு நன்றி இப்படி ஒரு படத்தை காட்டியதற்கு.

புதுப்பேட்டைக்கு சென்றால் உதிரி பாகங்களாக ஒரு காரையே வாங்கலாம் போல, எனது காருக்கு பாகங்கள் வாங்க சென்றபோது தெரிந்தது புதுப்பேட்டையின் வீரியம், என்ன வேண்டும் என்றாலும் கிடைக்கிறது, விலை உங்கள் பேச்சு சாமர்த்தியம், எதோ பொறியியல் வல்லுனராக விற்பனை பிரிவில் இருப்பதால் பேசி இரண்டு கதவுகளை 5500 ரூபாய்க்கு வாங்க முடிந்தது, புதுசாக வாங்கினால் ஒரு கதவு 9000 ரூபாய், இந்த காரை வாங்கும்போதே சொன்னார்கள் உதிரி பாகங்கள் விலை மிக அதிகம் என்று இருந்தாலும் பாதுகாப்புக்கு கருதி வாங்கினேன், வாங்கியது குறை போகவில்லை, வண்டியை சரி செய்ய எடுத்து செல்லும்போது அங்குள்ள மெக்கானிக் சொன்னது இந்த வண்டியாக இல்லாவிடில் கண்டிப்பாக உள்ளே இருந்தவர்களுக்கு அடிபட்டிருக்கும் என்று. நன்றி எனது பியட் பாலியோக்கு இனி இதை எப்போதும் விற்கும் எண்ணம் இல்லை.

Friday, September 26, 2008

நீண்ட நாட்களுக்கு பிறகு

பதிவெழுதி நெடுநாட்கள் ஆகின்றன, அதனால் இன்று எப்படியும் எழுதிவிடுதல் என்று முடிவெடுத்துவிட்டேன்.
எதைப்பற்றி எழுத? என்னை பாதித்த நெருங்கிய இருவர் பற்றி எழுதலாம்...
நீங்கள் இருவரும் என் வாழ்க்கையில் எதோ ஒரு வகையில் என்னை மிக அருகில் இருந்து கவனிதுவிடீர்கள்
முதலில் நீ, என் முதல் மாற்றத்திற்கு விதிட்டவகையில் உனக்கு எப்பவுமே என்னில் தனி இடம் உண்டு, என்னை மாற்றிய காரணத்தினால் உனக்கு எப்பவுமே முன்னுரிமை குடுத்து வந்துள்ளேன் இன்னமும் குடுப்பேன் அனால் சமீப காலமாக உன்னில் தெரியும் மாற்றங்கள் என்னை கலக்கமடைய செய்கின்றன. நமக்குள்ள இடைவெளி அதிகரித்து வந்தது தெரிந்ததே ஆனாலும் இப்போது அது அடுத்தகட்டத்தை போய்விட்டது என்று நினைக்கிறேன்.
நீ என்னைப்பற்றி கவலைப்பட்ட நாட்கள் முடிந்து பல வருடங்கள் அஹின்றன, என் முடிவுகளில் பெரும்பன்ங் ஆற்றிய நீ ஏன் இப்போதெல்லாம் ஒதுங்கி செல்கிறாய்?இத்தகைய நிகழ்வுகள் கண்டிப்பாக என்னில் பி விளைவுகளை ஏற்படுத்திவிட்டன. அமாமிப்போது நானும் உன்னைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை, பெரிய முடிவுகளை உன்னில் கலந்து யோசிக்காமல் எடுக்க துவங்கிவிட்டேன். இது என்னைஒருவகயிலும் பாதிக்காது அனால் உன்னை பதித்தால் அதற்க்கு நான் போருபக மாட்டேன்.
இரண்டாவது நீ முதலில் நீ ஒன்றை புரிந்துகொள்ள், என்றும் நான் என்னை தாழ்ந்த வகையில் நினைத்த் பேசுபவர்களிடம் பேச மாட்டேன் நீ விதிவலக்கை இருந்தாய், உன் சின்ன சின்ன கோவங்கள், பிடிவாதங்கள் பிடிக்கும், என்னை அதிகம் மாரம் செய்ய தூண்டினாய் அனால் இறுதியில் சிற்சில பிடிவாதங்களால் என்னிடமுள்ள மரியாதையை இழக்கிறாய், இலங்துவிட்டை என்றே சொல்ல வேண்டும்.
சரியான சுயநலவாதியாய் இருக்கும் நீ என்னிடம் எதிர்பார்ப்பது எல்லாமே உனக்கு வேலை செய்வதுதானே? நிஜமாக நான் எதையோ இழந்து அதை மறக்குன்னிடம் வந்து கடைசியில் உன்னிடமும் என் சுயமரியாதையை இழக்க விரும்பவில்லை. இதற்க்கு நான் கோவக்காரனாய் இருந்துவிடலாம், யாவரும் வெறுக்கும் வகையில் மற்றவர்களிடமிருந்த கொஞ்ச மரியாதையையும் பெரிய புடுங்கி என்ற நினைப்பில் நான் உன்னிடம் சேர்ந்து கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை, நேற்று இருந்த கோவத்தை விட உன்னை பற்றி எழுதும்போது அதிகம் வருகின்றது.ஒரே ஒரு அறிவுரை உன் லட்சியங்கள் மிக நன்று அனால் அதை அடைய இன்னும் அதிக முயற்சி தேவை, நீ தற்போது போதும் என்று நினைக்கும் தகுதியெல்லாம் பத்து, மேலும் உயர்சிக்க வாழ்த்துக்கள்.
நான் முதலில் எழுத நினைத்த தலைப்பு நான் கோவப்பட்ட தருணங்கள் அனால் அப்போது அதை எழுத நான் யார் மீதும் கொவப்படவில்லை இப்போது எழுதும்போது இவரைப்பற்றிநினைக்கயிலேயே கோவம் வருகிறது.மன்னிக்கவும்

Thursday, August 14, 2008

இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்

இந்திய கால்பந்தாட்ட அணிக்கு எனது வாழ்த்துக்கள்


நேற்று நடந்த AFC challenge கோப்பைக்கான இறுதி போட்டியில் கஜகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்திய கால்பந்தாட்ட அணி. எப்போதும் கிரிக்கெட் கிரிகெட் என்று அதை மட்டுமே பார்க்கும் நாம் ஏன் நமது கால்பந்தாட்ட அணியை ஆதரித்து வாழ்த்தக்கூடாது?. இந்த ஆட்டம் கடந்த வருடத்தின் மிக சிறந்த ஆட்டத்தில் ஒன்று என்று கூறப்படுகின்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த வருடம் பெற்ற நேரு கோப்பை வெற்றிக்கு பிறகு மிகப்பாரிய வெற்றி இது, வெற்றி பெற்ற அணிக்கு எனது வாழ்த்துக்கள்

குழப்பம்

எல்லோருக்கும் வணக்கம்,

வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.

நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.

நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.

சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்

Monday, August 4, 2008

விபத்து

நமது வலையுலக நண்பர் ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி தப்பி வந்தது பற்றி இந்த பதிவை எழுதியுள்ளார், இன்று எப்பாடுபட்டாவது ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தபோது இந்த பதிவு கண்ணில் பட்டது. நான் எழுத இருந்த பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சிறிதளவு சம்பந்தம் உள்ளது.

நேற்று முன்தினம் எனது உறவினர் பையன், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பவன் தன் நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்தான். இவன் பின்னால் உட்கார்ந்து சென்று கொண்டு இருக்க எதிரே வந்த மினி டோர் ஆடோ சாலையின் இடது புறம் சென்று கொண்டிருந்த இவர்களை நோக்கி வந்து எதிர்பாராத விதமாக இவர்களை இடித்து விட்டது.

இடித்த பின் வாகனத்தை விட்டு இறங்கவில்லை அந்த ஓட்டுனர், மக்கள் கூடி பார்க்கையில் அவர் மிக அதிக போதையில் இருந்துள்ளார், எனது உறவினர் பின்னால் உட்கார்ந்து சென்றுள்ளார், வண்டி ஓட்டி சென்ற பையனுக்கு இடது கையில் சதை கிழிந்துவிட்டது அனால் இவருக்கோ இடது கையில் எலும்பு முறிவு, தொடை எலும்புமுறிவு, முழங்காலுக்கு கீழே எலும்பு முறிவு. internal bleeding அதிகமாக இருந்துள்ளது, நல்ல வேளையாக விபத்து நடந்த இடமும் எனது உறவினர் வேலை செய்யும் அரசாங்க மருத்துவமனையும் அருகில் இருந்தது, முதற்கட்ட சிகிச்சை முடிந்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டு கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போதைய நிலவரம் கையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு விட்டது, காலுக்கு சிகிச்சை செய்ய இனும் நான்கு நாட்கள் ஆகும், காலின் எலும்பு முறிவு காயத்துடன் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி தோலின் தன்மை சோதித்து விட்டு செய்ய வேண்டுமாம். பின்னர் அறுவை சிகிச்சை க்கு பின் உள்ள நாட்களில் infection ஆகாமல் பாத்துக்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பின் அவர்க்கென ஒதுக்கப்பட்ட அறையில் உடன் வந்த உறவினர்கள் நோயாளியின் பெட்டில் ஏறிப்படுத்து விட்டனர், நாங்கள் அவர்களை அழைத்து கண்டிகையில் எங்களிடம் சண்டை, காலையில் அவரை கொண்டு வருவார்கள் அதுவரை என்ன என்று, நாங்கள் எவ்வாறு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை, பின்னர் உறவினரின் பெற்றோரை அழைத்து கூறி ஒரு வழியாக சரி செய்தோம். கடைசி வரை உடனிருந்து பார்த்துக்கொள்ள முடியாத நிலைமை எங்களுக்கு, இருந்தும் பெற்றோரிடம் கடினமாக கூறி வந்துளோம், மிக பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று. நோயாளியை பார்க்க வரும் உறவினர் தயவு செய்து இதையெல்லாம் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது காவல்துறையில் புகார் செய்வது பற்றி, அந்த புகாரில் அந்த ஓட்டுனர் குடித்துவிட்டு வந்தது பற்றி ஒரு வார்த்தை இல்லை, அதை விட ஆச்சரியம் ஓட்டுனர் பெயரே மாறி இருந்ததுதான், அந்த வாகனத்தின் வசதிக்காக இவ்வாறு மாற்றி விட்டனர், இவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்திற்கு விபத்து காப்பீடு இல்லை, ஒட்டிய பையனுக்கு உரிமம் இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றதால் கோர்ட்டில் நட்ட ஈடு கேட்க்க வழி உள்ளது. காவல் துறையினரிடம் பின்னர் பேசியபோது தெரிந்தது ஓட்டுனர் மாற்றப்பட்டார், காரணம் அவர்க்கு உரிமம் இல்லை என்று.
குடித்து விட்டு வாகனத்தை ஓடியதால் இப்போது யாருக்கு நட்டம்? பாவம் ஒரு பையனின் ஒரு வருட வாழ்க்கை.

ஓட்டிய பையனுக்கு அடி இல்லை, பின்னால் உட்கார்ந்து சென்றவருக்குபலத்த அடி.

இடித்த வண்டியின் உரிமையாளர் நேற்று வந்து பார்த்துவிட்டு சிகிச்சைக்கு ஆகும் செலவை குடுத்து விடுகிறேன் சமாதானமாக செல்லலாம் என்றார், அவரிடம் சிகிச்சைக்கு இரண்டு லட்சங்கள் ஆகும் என்று கூறுகையில் வேறு மருத்துவமனையில் வைத்து குறைந்த செலவில் குடுக்கிறாராம் ஆனால் புகார் வேண்டாமாம். தற்ப்போது நாங்கள் புகார் குடுத்து கோர்ட் மூலமாகவே செல்ல விருப்பம் என்று கூறி விட்டோம்.

தயவு செய்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டதீர் நண்பர்களே, இன்றில்லை என்றாவது சிறிது நேர தவறில் எதிர்காலம் பாழாகும் வாய்ப்பு எதற்கு குடுக்க வேண்டும்.

Friday, August 1, 2008

புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??

புறக்கணிப்பின் முடிவு தோல்வியா??

நேற்றிரவு வீட்டுக்கு செல்ல சிறிது நேரம் ஆனது, இரவு பாத்து மணிக்கு சென்று வழக்கம் போல செய்திகள் வரும் தொலைக்காட்சியை போட்டா ஒருத்தர் எதோ மன்னிப்பு கேட்டுக்கறேன் நான் செஞ்ச தப்பு தெரிஞ்சுடுச்சு அப்படி இப்படின்னு பேசிகிட்டு இருந்தார்.

எல்லா ஆங்கில செய்தி சேனல்களும் அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் அவர் படம் பக்கத்து மாநிலத்தில் இனி தடை இல்லாமல் வெளியிடப்படும் என்று கூறினார் அனால் ஒருவர் கூட அதைப்பத்தி நம்ம ஊர்க்காரன் என்ன நினைக்கிறான் என்று கேட்டு வெளியிடவில்லை. சரி அத விடுங்க கேட்டாலும் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்வார்கள் நம்ம ஆளுங்க..

நம்ம கூட ஒரு நண்பன் வீட்டில் தங்கி உள்ளான், அவன் அவரின் ரசிகன், என்று நினைத்து இருந்தேன், இருந்தாலும் என் அதிருப்தியை தெரிவித்துவிட்டு அவனிடம் வாதாடி என் பக்கத்து உண்மையை கூறி.. அவர் என்ன வேண்டும் என்றாலும் கேட்கட்டும் என் பழக்கம் அவர் படங்களை பார்ப்பதில்லை.. இதுவரை எந்த படத்தையும் திரை அரங்கிலோ இல்லை தொலைக்காட்சியிலோ பார்த்து கிடையாது அவ்வபோது தொலைக்காட்சியில் போடும் சிறிது நேர காட்சிகளே போதும் படத்தை பற்றி தெரிந்துகொள்ள என்று கூறிவிட்டு அவன் புரிந்து கொள்வான் என்று நம்பி தூங்கினேன்.

காலையில் நேரமே எழுந்து கொள்ளும் நான் வழக்கம் போல எழுந்து அலுவலகத்துக்கு கிளம்புகையில் என்னுடன் வந்து தங்கின அலுவலக நண்பன் பற்பசையை கேட்டான். தேடினால் இல்லை, அப்போதுதான் கவனித்தேன் அந்த ரசிகன் வெகு நேரத்தில் எழுந்து குளித்துக்கொண்டு இருந்தான். அவன் இந்த நேரத்தில் எழுந்து நான் இன்றுதான் பார்க்கிறேன். வந்து கிளம்பிக்கொண்டு இருந்தவனிடம் என்னடா இன்று அலுவலகத்தில் வேலை அதிகமா என்றதற்கு சிரித்துக்கொண்டே..
"அலுவலகத்திற்கு எவன் போவான் இனிக்கு தலைவர் படம் அதன் லீவ் எடுத்துவிட்டு படம் பாக்க செல்கிறேன் என்றான்".~!@#%!~#

பதில் சொல்லாமல் புன்னகையை மட்டும் சிந்திவிட்டது வந்துவிட்டேன்.சம்பளம் வாங்கும் நாளில் இந்த பதிலை எதிர்பாக்கவில்லை...

வழக்கம்
போல இதையும் படத்தை புறக்கணிப்போம் என்று இருந்த நான் கண்டிப்பாக மற்றவரிடமும் புறக்கணிக்க சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

Monday, July 28, 2008

நீ

நான் விலக்கப்படேனா? இத்தகவலை நண்பர்களுக்கு தெரிவித்த உன்னை கண்டிப்பாக வாழ்த்தவேண்டும் அனால் எல்லா புகழுக்கும் நீயே பொறுப்பு என்ற ஒரு கொள்கை உன்னிடம் இருக்கும்போது என் வாழ்த்துக்கள் உனக்கு எப்போதும் தேவை இல்லாதவை. உன்னைப்பற்றி நீயே மற்றவர்களுக்கு புரியவைத்த நிகழ்ச்சி என்னை எதிலும் பாதிக்கவில்லை. மேலும் என்னதான் சுற்றமும் சூழமும் மகிழ்ச்சியாய் இருந்தாலும் மிக்க மகிழ்ச்சி குடுக்கக்கூடிய எந்தவித மாற்றமும் ஏற்பட வண்ணம் பார்த்துக்கொண்ட நீ கவனத்தை சிறிது மற்ற வழிகளிலும் காட்டியிருக்கலாம்.

எந்த பாதிப்பும் மனதிற்கு ஏற்றா நான் சில காலங்களால் மனத்தால் மட்டுமே பாதிப்படைந்த குற்றத்திற்கு காரணம் நீ. உன்னை போற்றுவர்கள் இருக்கும்வரை எந்தவொரு சுடும் உண்மையும் உன்னை நெருங்காது. நெருங்கும் உண்மைகளும் உன்னை பொறாமை என்ற பெயரில் வந்து சேரும். என்னாலான உதவிகளை செய்யாதபோது கூட அதற்கான காரணத்தை சுயநலத்தின் பாதிப்பில் மாற்றிகொண்டாய் அதற்க்கு என்றுமே நான் வருத்தப்பட போவது இல்லை.

உலகம் தவறு செய்தவரைக்கூட மன்னிக்கும் ஆனால் துரோகம் செய்தவரை மன்னித்தாலும் இகழ்ந்துவிடும், நீ தவறுகள் பல செய்தாலும் உன்னை மன்னிக்கதவாறு துரோகமும் செய்துள்ளாய். எனக்கு மட்டும் அவ்வாறு செய்திருந்தால் மற்றவர்கள் மன்னிக்கலாம், மற்றவர் அறியாமலே நீ அவர்களுக்கும் துரோகம் செய்திருப்பதால் உன்னை யாரும் மன்னிக்க போவது இல்லை. ரகசியங்கள் காக்கப்படுவதால் உனக்கு வழங்கப்படும் மன்னிப்புகள் வெற்றியடையும் என்று நம்பிவிடாதே. என்றோ ஒருநாள் கண்டிப்பாக எங்கிருந்தோ உண்மைகள் வெளிப்படும் அன்று உன்னை காப்பாற்ற நான் இருக்க மாட்டேன்.

உனக்கு என்னால் முடிந்த ஒன்று நன்றி சொல்வது, தனிமையின் இன்பத்தை அனுபவிக்க காட்டிய உனக்கு நன்றி என்று எவ்வாறு கூறுவது, நீ கற்றுகொடுத்தது தனிமை மட்டுமல்ல, எனக்கென்று உள்ள உலகத்தையும்.

அனுபவம் மட்டுமே பக்குவத்தை கொடுக்கும், எனக்கு அனுபவத்தை கொடுத்தாய் ஆனால் நீ பக்குவத்தை மட்டும் கற்றுக்கொள்ள மறுத்துவிட்டாய், பாதிப்படைந்த பயனாளிகள் வரிசையில் நீயும்.

இன்று முதல் பதிவு எழுத நேரமிருக்காது என்று நினைத்தேன் அனால் அதற்க்கு சிறிது காலம் நேரம் நீடித்து கொடுத்த உன்னை என்னவென்று சொல்ல, நீ எனக்காக செய்யும் ஒவ்வொரு தடை முயற்சியும் எனக்கான முன்னேற்றம் என்று எடுத்துக்கொள்வதா?இல்லை உனக்காக நீயா போட்டுக்கொண்ட கடினப்பாதை என்று சொல்வதா? எதுவாக இருந்தாலும் சரி இனி எனக்குண்டான பாதையில் பயணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது

Friday, July 25, 2008

விடுமுறை

நீண்ட நாட்களாக காத்திருந்த துறை மாறுதல் திங்கட்கிழமை முதல் கிடைப்பதால் இனி வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் மாறப்போகும் துறையில் முழு முயற்சியுடன் ஆணி புடுங்க வேண்டும் என்று நினைப்பதால் சிறிது காலம் பதிவுலகப்பக்கம் வர நேரம் கிடைக்காது. வீட்டில் இணைய இணைப்பு வாங்கும் வரை பதிவுலகத்தில் இருந்து விலகி இருக்கவேண்டி வரும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் பதிவுலகில் இருந்து தற்காலிக விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்.

Thursday, July 24, 2008

வாகனம் ஓட்டுவது எப்படி?

வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்த பதிவு.

இந்திய வாகன ஓட்டுனர்களுக்கு சில அடிப்படை விதிகள் எப்பவுமே தெரிந்திருக்க வாய்ப்பு மிக கம்மி, இத்தனை ஆண்டுகளில் அரசும் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வழியில் அடிப்படை சாலை விதிகளை அளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் மேய்ந்துகொண்டு இருக்கும்போது இந்த பதிவை பார்த்தேன். இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு மிக உதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.இதில் அடிப்படை சாலை விதிகளை பின்பற்றுதல், மேலும் எப்படி வாகனத்தை எடுக்க வேண்டும், எப்படி நிறுத்த வேண்டும் சமின்கைகள் இடைவெளி போன்றவற்றை தெளிவாக கூறியுள்ளனர்.

இந்த வலைபூவிற்கு (http://driving-india.blogspot.com) சென்று பாருங்கள்நான் என்ன செய்ய?? -முடிவு

நான் என்ன செய்ய என்று ஒரு தலைப்பில் கடந்த வாரம் ஒரு முடிவெடுக்க இந்த பதிவை எழுதியிருந்தேன். முடிவு எடுத்துவிட்டேன்

முதலில் பேசி முன் பணம் செலுத்திய காரை மட்டுமே வாங்கினேன், சில ஆயிரங்கள் நட்டம் என்றாலும் மன நிறைவு. என்னவோ தெரியவில்லை இது போன்ற விசயங்களில் இன்னும் எனது மனம் இப்படியே இருக்கின்றது. முறைப்படி வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று உறுதி செய்ததால் பாத்து நாட்கள் ஆகியும் எனக்காக வேறு ஒருவரிடமும் விற்காமல் விலை பேசாமல் வண்டியை வைத்திருந்த அவர்கள் நேர்மையிடம் தோற்றுபோக விரும்பவில்லை.

மேலும் பலனாக வண்டியின் பெயர் மாற்றம், சராசரி பராமரிப்பு, காப்பீடு அனைத்தையும் அவர்களே செய்து கொடுப்பதாக உறுதி கொடுத்து உள்ளனர். இவை அனைத்தையும் நானே செய்தால் இனும் சில ஆயிரங்கள் செலவாகும்.
மன நிறைவுடன் செய்த உறுதியை நிறைவேற்றிவிட்டேன்.

Tuesday, July 22, 2008

அவன்

வஞ்சித்தலும் வஞ்சிக்கப்படுதலும் என் வாழ்வின் அங்கமாகிவிட்டது சமீபகாலங்களில். மனசோர்வு அதிகமாகி போன இந்நாளில் என்ன செய்வதென்றே தெரியாமல் தனிமையில் இருக்க பயந்து என்னை நானே வஞ்சித்துக்கொண்டேன். ஆம் இப்போதெல்லாம் தனிமை பயமாய் இருக்கிறது, அதற்கு காரணமும் உண்டு.

தன்னம்பிக்கை இழந்து, என் நம்பிக்கையும் குறைந்து சோர்ந்து போய் உள்ளேன், மனதில் எங்கோ ஒரு சிறிய இடத்தில் மீண்டு வருவேன் என்ற தீ எரிந்து கொண்டு உள்ளது, அதை நம்பியே எனது தனிமையை களிக்கின்றேன்.
எதற்கும் யாருக்கும் தவறிழைக்க கூடாதென்ற நினைப்புடன் இருப்பவனை எவரும் எளிதாக பலவீனப்படுத்திவிடலாம். உன்னை பதிலுக்கு சீண்டுவதை கூட கேவலமாக நினைக்கும் என்னிடம் விளையாண்டு கொண்டு உள்ளாய், உன்னிடம் சரி நிகராக சண்டையிட உனக்கு தகுதி இல்லை. அதற்காக பலவீனப்பட்டு உன்னிடமிருந்து ஓடி விடுவேன் என்று மட்டும் நினைக்காதே, மீண்டு வருவேன், இன்னிடத்தில் இருந்தே உனக்கு புரிய வைப்பேன், என் சக்தி என்னவென்று எனக்கு தெரியாத நிலைமையை ஏற்படுத்திய உனக்கு நன்றி.

எத்தகைய நினைப்பு உனக்கு என்மீது, என் வரலாறு எனகூட்டும் நம்பிக்கையில் சொல்கிறேன், தயவு செய்து என்னுடைய எதிர்ப்புகுரிய நபர்களின் பட்டியலில் வந்துவிடாதே, இழப்பு உனக்குத்தான் அதிகமாய் இருக்கும் வரும் நாட்களில்.நீ இந்த பதிவை படிக்கபோவது இல்லை என்று எனக்கு தெரியும் அனால் அடிக்கடி நான் படிப்பேன், இது உன்னை பலவீனப்படுத்த இல்லை என்னைப்பலப்படுத்த. தற்போதைய இடம் உனக்கு என்னை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்தி ஒதுக்கி, புறக்கணித்து கொடுமைப்படுத்த வேண்டும் என்பதே, அனால் எனக்கென்று ஒரு தனி வாழ்க்கை உண்டு, எனது தனிமை என்னை எப்போதும் தாலாட்டும் என்பது உனக்கு தெரியாது.

நான் தற்ப்போது பலவீனப்பட்டு உள்ளேன் என்பது உண்மை, அனால் இது தற்காலிகமானது ----------. உன்னை சொல்லி அழைக்க உறவுகளே இல்லை, எந்த பெயருக்கும் உனக்கு தகுதி இல்லாமல் போய்விட்டாயே என்று வருத்தப்படுகிறேன். எனது எதிரிகளுக்கு கூட எதிரிகள் என்ற உறவு உண்டு ஆனால் உனக்கு????

தெரிகின்றது நாட்கள் நெருங்கிக்கொண்டு உள்ளன என்று எனக்கா? உனக்கா?பொறுத்திருந்த பார்ப்போம். உன் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிந்ததால்தானே இன்னும் என்னைபலவீனப்படுத்த முயல்கிறாய், உனக்கு தெரியாது உனக்கிறுப்பது உன் சுற்றத்தில் ஒரு போலி மரியாதையை என்று. என்னால் மட்டுமே உன் ரகசியங்கள் காக்கப்படும் ஆனால் மற்றவரால்??

மேலும் எழுத மனது துடிக்கிறது ஆனால் உன்னை மையமாக வைத்து எழுத என் புத்தி மறுக்கிறது. மன்னிக்ககூட தகுதி இல்லாத உனக்கு இபோதைக்கு இப்பதிவு கூட தகுதி இல்லை.

Thursday, July 17, 2008

நான் என்ன செய்ய??

முன்பே சொன்ன படி நான் கார் வாங்கி விட்டேன், விட்டேன் என்றால் முன் பணம் செலுத்தி விட்டேன், இன்னும் வங்கி கடன் வரத்தால் இரண்டு நாளில் வண்டியை எடுக்க போகிறேன். அவர்களிடம் ஒரு தொகைக்கு பேசி முன்பணம் செலுத்தி உள்ளேன்.

நேற்று எனது மற்றொரு நண்பர் நான் வாங்கிய அதே மாடல் வண்டி வியாளிக்கு வந்துள்ளதாகவும் விலை கணிசமான அளவு குறைவாகவும் இருப்பதாக கூறி எனை அழைத்தார். அவர் அழைப்பை மறுக்க முடியாமல் நானும் சென்று பர்தீன், ஊடிப்பர்ததில் வண்டி நன்றாக உள்ளது. நான் ஏற்க்கனவே முடித்த வண்டிக்கும் இந்த வண்டிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அனால் இந்த வண்டி கணிசமான அளவு குறைவான விலைக்கு கிடைக்கின்றது.

இப்போது நான் என்ன செய்வது? இரண்டுமே பழைய கார் , ஒரே வருடம், ஒரே அளவு ஓடியுள்ளன. வித்தியாசம் எதுவுமில்லை விலையை தவிர.

பழைய காருக்கு முன்பணம் செய்து உறுதி செய்ததால் நாணயமாக அதையே எடுத்துக்கொள்வதா?

இல்லை சில ஆயிரங்களை சேமிக்க இந்த இரண்டாவது காரை எடுத்துக்கொள்வதா?

தொழில் நேர்மை என்னை முதல் முடிவிர்ற்கு செல்ல தூண்டுகிறது இருந்தாலும் சேமிப்பு இரண்டாவதுமுடிவுக்கு இழுக்கிறது.

நண்பர்களே முடிந்தால் முடிவெடுக்க உதவி செய்யுங்கள்

வகுப்பறையில் ஒருநாள் - தேர்வு

ஒன்பதாவது வகுப்பு, மாதாந்திர தேர்வு- சமூக அறிவியல். நமக்கு தான் இந்த பாடம் ரொம்ப புடித்த பாடமே என்று ரொம்பநல்லா படிச்சுட்டு போய் எழுத உட்க்கார்ந்தேன். ஆசிரியை எல்லோரையும் உட்க்காரவைத்து கேள்வித்தாளை விநியோகிக்க தொடங்கினார். கேள்வித்தாள் தீந்து போகவே, பாதியில் வெளியே சென்று பக்கத்து வகுப்பில் வாங்கி வந்து விநியோகித்தார்.

எனக்கும் ஒரு கேள்வித்தாள் வந்து சேர்ந்தது, நானும் பயபக்தியோடு வாங்கிவிட்டு , பரீட்சை பேப்பரில் கோடு போட்டு , முருகன் துணை எழுதி விட்டு கேள்வித்தாளை எடுத்து படித்தேன். அப்பவே நினைத்தேன் கேள்விகள் மிக கடினம் என்று.

வழக்கமாக நான் கேள்வித்தாளை ஒரு முறை புரட்டி பார்த்து சில கேள்விகளுக்கு நேரடி விடை மனப்பாடமாக இருக்கும், சில கேள்விகளுக்கு ஓரளவிற்கு தெரியும் மீதியை எப்படியோ எழுதி ஒப்பேற்றிவிடலாம், சில கேள்விகளுக்கு சுத்தமாக தெரியாது எதாவது கதை எழுதி ஒப்பேற்றவேண்டும் என்று பிரித்து வைத்து இருப்பேன்.

இந்த கேள்வித்தாள் மிக கடின வகை, எந்த கோடிட்ட இடத்தை நிரப்பு கேள்விகளுக்கும் சரியான விடை தெரியவில்லை, இரண்டு மதிப்பெண் கேள்விகள் ஏதோ தெரிந்தது போல இருந்தது, ஐந்து மதிப்பெண் கேள்விகள் சில பாதி தெரிந்தது, மீதி ஒன்றுமே தெரியாது. பத்து மதிப்பெண் கேள்விகள் அனைத்தும் மிக கடினம். சரி வழக்கம் போல தெரிந்ததா பாத்து எழுதிவிட்டு வருவோம் என்று எழுத தேவையான கேள்விகளை எல்லாம் குறித்து எழுத தொடங்கி விட்டு ஒண்ணுமே புரியாமல் உட்க்கார்ந்து இருந்தேன்.

எதோ நியாபகத்தில் கேள்வித்தாளை மறுபடியும் பார்த்தேன் "பகிர்" என்று இருந்தது. ஆமாம் அது பத்தாம் வகுப்பு கேள்வித்தாள். வசமாக மாடிக்கொண்டோம் என்று நினைத்து மணியை பார்த்தால் கேள்வித்தாள் குடுத்து அரை மணி ஆகி இருந்தது.பின்னர் என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்தேன், கேள்வித்தாள் மாறிவிட்டது என்று சொன்னால் அரைமணி நேரமா என்ன பண்ணின என்று கேட்டு அசிங்கமா போய்விடும். இல்லை என்றால் பத்தாவது தேர்வுக்கு ஒன்பதாவது பையன் என்ன எழுதுவது என்று தெரியவில்லை.நீண்ட நேரம் யோசித்து என்ன செய்ய என்று தெரியவில்லை, ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

பின்னர் தெரிந்ததை எழுதுவது கடைசியாக பேப்பரை குடுக்காமல் வந்துவிட முயற்சி செய்யலாம் என்று முடிவு, இல்லை என்றால் குடுத்து கடைசியில் திருத்தி வரும்போது அடி வாங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். என் நல்ல நேரம் கடைசியில் பேப்பர் வாங்கும்போது அது வரை இருந்த ஆசிரியை எதோ வேலையை வெளியே போய்விட புதிதாய் வந்தவர் அனைவரின் விடைத்தாளையும் ஒன்றாக வங்கி குடுக்குமாறு கூறிவிட்டார், கஷ்ட்டப்பட்டு பேப்பர் குடுக்காமல் வந்துவிட்டேன்.

பேப்பர் திருத்தி வரும்போது என் பேப்பர் மட்டும் காணமல் போய்விட அந்த ஆசிரியை வேறு வழி இல்லாமல் அந்த வகுப்பின் முதல் மதிப்பெண்ணை எனக்கும் வழங்கி விட்டார். அவர் வழங்கிய 91 மதிப்பெண்தான் நான் சமூக அறிவியலில் இதுவரை எடுத்த அதிக மதிப்பெண்

Wednesday, July 16, 2008

குழப்பம்

கடிவாளம் இல்லாத குதிரை போல கண்டபடி ஓடுகிறது மனம், எல்லாம் நல்ல படியாக நடக்கும் போது குதூகலிக்கும் மனம் சிறிது தாமதத்திற்கும் கோபப்படுவது ஏனோ? சிறு வயதிலிருந்தே இந்த தாமதம் என்ற ஒன்று மட்டும் எப்போதும் என்னை கோபப்பட செய்கின்றது. முன்கோபி என்ற பெயரை எனக்கு சூட்ட இந்த தாமதம் ஒரு காரணி.

வாக்குறுதியை மீறும்போது தாமதம் ஏற்ப்படுகிறது, அதனால் ஒருவர் அவரது பணியில் அலட்சியமாக இருக்கிறார் இதை எதிர்ப்பவன் முன்கோபி கூலாக இருக்க கத்துக்கொள் என்றெல்லாம் எனக்கு அறிவுரை. எவனும் அலட்சியக்காரனுக்கு புத்தி சொல்ல தயாராக இல்லை, எப்படி சொல்வான் அவனும் ஒரு அலட்சியக்காரனாக இருக்கும் பட்சத்தில்.

தெரியவில்லை மகிழ்ச்சி காலங்கள் மறுபடியும் வருமோ இல்லை புயலுக்கு முன் அமைதி என்றபடி புயலடிக்குமோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை செல்கிறது. கூடவே நானும்....

இன்றிரவு என்ன செய்யலாம் என்ற கருத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது வரை இந்த பத்து நிமிடத்தில் ஓடி மறைந்துள்ளது.

பிரச்சனைகளை ஆலோசிக்க துணை தேடினால் அதை அவர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்.

கடந்த வருடங்களை பார்க்கும்போது காலம் என்னுள் ஏற்ப்படுத்திய மாற்றங்கள் திகைப்பை ஏற்ப்படுத்துகின்றன, இன்பத்தை தேடி வாழ்க்கையில் இன்னும் சென்று கொண்டிருக்கும் நான் இதுவரை என்னுள் இருந்த மகிழ்ச்சியை மறந்து விட்டேன் என்று யோசிக்கவே இல்லை.

இப்போது எனக்கு என்ன தேவை???? உண்மை நேர்மை என்று கிடைக்காத பல தேவைப்படுகின்றது.... கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டுள்ளேன்.

பயணம்

சமிபத்தில் இரண்டு முறை அரசுப்பேருந்தில் சென்னையிலிருந்து கரூர் பயணம் செய்தேன். இதில் நான் கவனித்து அறிந்தது. வெள்ளிகிழமைகளில் அனைத்து பேருந்தும் நிரம்பி வழிந்தது.

தனியார் பேருந்துகள் அரசுப்பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்சென்றனர், கேட்பதற்கு யாருமில்லை, கேட்டலும் அவர்கள் மதிப்பதாக இல்லை.

முதல் பயணம், நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துப்பயணம் அதுவும் அரசு விரைவுப்பேருந்து- டிலக்ஸ் பேருந்து. எனக்காக முதல் வரிசை இருக்கை வழக்கம்போல ஒதுக்கப்பட்டு இருந்தது (காரணம் முதல் வரிசையில் கால்களை நன்றாக நீட்டிக்கொள்ளலாம்) பேருந்தில் ஏறியவுடன் நான் அறிந்தது, அரசு பேருந்துக்கு எவ்வளவு விலை உயர்ந்த பேருந்தை குடுத்தாலும் பராமரிக்காமல் மிக விரைவில் மோசமக்கிவிடுவார்கள் என்று.

மிக அழுக்காக இருந்தது பேருந்து, இருக்கைகளும் அப்படியே, அதிசயமாக மின் விசிறிகள் ஓடின. சத்தம் வரவில்லை (ஆச்சரியம்) மொத்தத்தில் நல்ல பேருந்தை சீரழித்து வைத்திருந்தனர். அடுத்து பயணிகள், நடத்துனர் என்னிடம் பேசியபோதே இருவர், பயணசீட்டில் சினிமாக்கு காசு குடுத்தோம் ஏன் படம் போடலை என்று விவாதம் செய்தனர். அவரும் டிவி சரியாக தெரியவில்லை, நிறங்கள் மாறி வருகின்றன, சிறிது நேரத்தில் பாடல் போடப்படும் என்றார். அவர்கள் கேட்பதாய் இல்லை, நடத்துனர் மிக கடுப்பாகி, படமா கேட்கறீங்க, இதோ இருங்க என்ற படியே ஒரு படம் போட்டார். அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்து முழுவதும் தூங்கியது. போடப்பட்ட படம் "நெஞ்சம் மறப்பதில்லை"

பின்னர் சிறிது நேரத்தில் படத்தை நிறுத்தி விட்டு இனிமயான ராஜா பாடல்கள் போடப்பட்டது. மிக மெல்லிய சத்தத்தில் இனிமையாகவே இருந்தது பயணம். அரசு விரைவுப்பேருந்து என்று பெயர் அனால் நான் பார்த்த வரை பேருந்து விரைவாய் செல்லவில்லை. பின்னால் வந்த அனைத்து பேருந்துகளும் முந்தி சென்றது, ஆனாலும் பயணம் எந்த அதிர்வுகளும் இல்லாமல் நன்றாகவே இருந்தது. அப்போது நினைத்தேன் இதுவே மற்ற அரசு பேருந்துகளாக (விரைவு பேருந்து தவிர திருச்சி கிளை பேருந்துகள் ) இருந்தால் விரைவாக செல்வார்கள், பேருந்து பராமரிப்பு சிறப்பாக இருக்கும் என்று.

நடுவில் சாப்பிட நிறுத்தினர், வழக்கம் போல மிக மட்டமான ஒரு உணவகம். இறங்கும்போதே அங்கிருந்தவனிடம் சண்டை. குடிநீர் வாங்கலாம் என்று இறங்கினால் நம்மை பிடித்து அங்கிருந்த மிக மட்டமான கழிவறைக்கு கொண்டு சென்று விட்டு விடுவார்கள் போல. சண்டை ஆரம்பிக்கும் போதே நடத்துனர் தயவால் நிறுத்தப்பட்டது. ஒரு லிட்டர் தண்ணீர் 18 ரூபாய். அநியாய கொள்ளை.

சாலைகள் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது வழி நெடுக. காலை 6.30 கரூர் சென்றடைந்தேன்.

சென்னைக்கு திரும்ப விரைவு பேருந்தில் சென்றால் தாமதம் ஆகும் என்று திருச்சி கிளை பேருந்துக்கு போக வற்புறுத்தினார் என் தந்தை. சாதரண பேருந்து (சாய்வு இருக்கை இருந்தாலும் 41 இருக்கை பேருந்து ) அழகிய தமிழ் மகன் படத்துடன் கிளம்பியது, வேகம் இருந்தாலும் பயணம் பாடாய் படுத்தியது. இருக்கைகள் நன்றாக சுத்தமாக இருந்தது ஆனால் சிறிது நேரத்தில் முதுகு வலி எடுத்தது, பேருந்து சத்தம், படத்தின் சத்தம் மிக அதிகம். ஏன் படம் போட்டால் இவ்வளவு சத்தம் ஏன் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

சென்னையில் காலை 5 மணிக்கு கொண்டு வந்து விட்டனர். இந்த பயணம் மிக அசவுகரியமாக இருந்தது. நன்றாக பராமரிக்கப்பட்ட பேருந்து ஆனாலும் சரியான இருக்கைகள் இல்லை, சத்தம் அதிகம், பேருந்தில் போடப்பட்ட படத்தின் சத்தம் அதிகம், படம் ஓடி முடித்து மறுபடியும் முதலில் இருந்து ஓடியது. கூப்பிட்டு சொல்லி நிறுத்தப்பட்டது (ஏற்க்கனவே ஒரு முறை கள்ளழகர் படத்தை இரண்டு முறை பார்த்த அனுபவம்)

இரண்டு பயணத்துக்கும் இருந்த வித்தியாசம்- விரைவு பேருந்து விரைவாய் செல்லாது ஆனால் சவுகரியமாய் இருக்கும், திருட்டு டிவிடி போடப்படுவது இல்லை முடிந்த வரை பாடல்களை மட்டுமே போடுகின்றனர்.
வேக குறைவிற்கு காரணம், டிசல் பம்பை வேலை செய்து வேகம் அதிகம் போகாதவாறு செய்துள்ளனர், டிசல் சிக்கனமாம். அப்புறம் எதற்கு விரைவு பேருந்து என்று பெயர் ????

அரசு பேருந்து- திருச்சி பராமரிப்பு நன்று ஆனால் பயணம் அசவுகரியம், தாரளமாக திருட்டு டிவிடி போடப்படும். சத்தம் அதிகம் வைத்து காதை பிளக்கும் (இரண்டாவது முறை திருச்சி கிளையின் டிலக்ஸ் பேருந்தில் வந்தேன் அதற்க்கு விரைவு பேருந்தே தேவலை அவளவு மோசமான பராமரிப்பு). இவர்களுக்கு வேக கட்டுப்பாடு இல்லை, ஆனால் இருக்கைகளை தவிர நின்று கொண்டே செல்லவும் பயணிகளை ஏற்றி விடுகின்றனர் இதனால் அனைவருக்கும் சிரமம்.

அரசு விரைவு பேருந்து லாபமில்லையாம், கடந்த மாதம் சம்பளமே பத்து நாட்கள் கழித்து குடுத்தனராம். மற்ற கிளைகள் லாபத்தில் ஓடினாலும் இவை அப்படி இல்லை காரணம் பகலில் ஓடும் பேருந்துகள் காலியாக ஓடுகின்றனவாம் மேலும் அதிக அதிகாரிகள், நிர்வாக சீர்கேடு என்று சொல்லப்படுகிறது. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

Friday, July 11, 2008

கார் வாங்கியாச்சு

ரொம்ப நாளா சொல்லிகிட்டிருந்த கார் வாங்கும் படலம் இபோதுதான் முடிந்துள்ளது. தீவிரமா தேடி எனக்கு பிடித்த பாலியோ காரை நேற்று கண்டுபிடித்தேன். இதற்கு முன்னால் மூன்று கார்களைப்பார்த்தேன். அனைத்துமே இணையத்தில் தேடி கண்டு பிடித்ததுதான்.

முதல் கார், மிக குறைவான விலை குறிப்பிடிருந்தனர், சரி பார்க்கலாம் என்று நினைத்து சென்றோம். அதற்க்கு முன்னாடியே பலமுறை தொலைப்பேசியில் அழைத்து உறுதி செய்தனர். அரஞ்சு கலர் பார்க்க நன்றாக பளபளப்பாக இருந்தது. ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. அனைத்தும் ஓகே. இருந்தாலும் ஒரு மெக்கானிக் வைத்து அறிந்துவிடலாம் என்று நண்பரின் உதவியுடன் மெக்கானிக் கண்டுபிடித்து அறிந்தோம்.

காரின் வண்ணம் இரண்டாம் முறை பூசப்பட்டிருந்தது, சர்விஸ் செய்ததற்க்கான வரலாற்றை கூறவில்லை, இஞ்சின் பிரச்சனை இருந்தது. இதை வாங்குவது என்பது ரிஸ்க் என்று முடிவானது.அதனால் இந்த வண்டி இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.

அடுத்து மற்றொன்று, இதுவும் நல்ல வண்டி ஆனால் டீசல் வண்டி, விலையும் நம்ம தகுதிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தது. அதற்குமேல் அதில் வழக்கம் போல உள்ள டீசல் பம்ப் பிரச்சனை இருதது கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது

மூன்றாவதாக பேப்பரில் பார்த்த வண்டிக்கு அழைத்து நேரில் சென்று பார்க்க சென்றோம். பார்க்கும்போதே தெரிந்தது நன்றாக பராமரிக்கப்பட்ட வண்டி என்று.முதல் உரிமையாளர், வண்டியை ஓட்டிப்பார்த்தோம் நன்றாக இருந்தது. திருப்திகரமான வண்டி, ஆனால் கேட்ட விலை மயக்கம் வந்து விட்டது பின்னர் ஒரு வழியாக பேசி முடித்தாயிற்று. (மாதிரி புகைப்படம்)

முன் பணம் குடுத்து விட்டு இப்பொது வங்கி கடனுக்காக காத்துகொண்டு உள்ளேன். திங்கட்கிழமை கிடைத்து விடும் என்று நம்புகிறேன். வீட்டிலும் பெரிய எதிர்ப்பு இல்லை. நெடுநாள் ஆசை அதனால் எதுவும் சொல்லவில்லை ஆனாலும் எதோ ஒரு குற்ற உணர்ச்சி இருக்கின்றது, தேவை இல்லாமல் செலவு செய்து விட்டோமா என்று. பார்ப்போம் பல்சர் வாங்கியபோதும் இப்படித்தான் தோன்றியது. பின்னர் வீட்டில் சகஜமாக எடுத்துக்கொள்ள அது மறைந்தது.

எப்படியோ இந்த பிறந்தநாள் நன்றாக நல்ல செய்திகளை கொண்டு வருகின்றது. பத்து நாட்களுக்குள் மூன்று நல்ல செய்தி.நான் கார் வாங்கியது, மிக எதிர்பார்த்த துறை மாற்றம் எனது அலுவலகத்தில், அண்ணனின் திருமணம் மற்றும் சம்பள உயர்வு .. மகிழ்ச்சியான தருணத்தில் இப்பதிவை எழுதுகிறேன்.

இத்தருணத்தில் புறக்கணிப்பின் வலியிலிருந்து மீண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் புறப்படுகிறேன் புதிய உலகை நோக்கி. புறக்கணிப்பு என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களில் பல என்னை பக்குவபடுத்தியது போலத்தெரிகிறது. மிக கொடியதுதான் இது, நீ என்னுடன் பேசியது பின்னர் என்னிலுள்ள சிறிய தவறு என் நட்பை துளைத்து பின்னர் என்னையே துளைக்கும் அளவிற்கு வந்து, நண்பர்களை பிரித்து, எதிரிகளை கூட பிரித்து என்னை தனிமைச்சிறையில் அடைத்த தருனகள் என் வாழ்வில் கொடிய தருணங்கள். கண்முன்னே சிரித்து பழகிய நண்பர்கள் என்னிடம் பொய் சொல்லி தனியே சென்று களிக்கின்றனர். காரணம் எனக்கு தெரிந்தால் நான் துன்பப்படுவேனோ, இல்லை என்னை விள்ளக்க அவர்களாக எடுத்த முடிவோ என்னவோ மேலும் என்னை அழைக்க முடியாது என்பதாலோ. அவர்களே அடுத்த நாளில் என்னிடம் தெரியப்படுத்துகின்றனர் எவ்வாறு கழித்தோம் நேற்றைய நாளை என்று.

கண்முன்னே எனது நண்பர்களால் புறக்கணிக்கப்படுவது தெரிந்தும் ஊமைச்சிரிப்பு சிரித்துகொண்டு ஏன் இருக்க வேண்டும் நான்? அதற்காக வருத்தப்பட்டு மெலிந்து போவதும் கூடாது, என்னுள் இருந்த "நான்" என்ற சுயமரியாதை தலை தூக்கியது. போராட்டத்தை தனியாளாக நின்று ஏற்க்கத்துவங்கினேன், பல தோல்விகள் மிகச்சில வெற்றிகள், சிற்சில சந்தோசங்கள் என்று முடிந்த கடந்த வருடமும், நல்ல செய்திகளுடன் துவங்கும் இந்த வருடமும் எனக்குள் விதைத்த அனுபவங்களுக்கு நன்றி.

எதோ எழுதப்போய் எதோ எழுதிட்டேன், ஊருக்கு சென்றுவிட்டு வந்து அடுத்து அலப்பரைய ஆரம்பிக்க வேண்டியதுதான். நம்ம அலப்பரைய அப்புறம் சொல்றேன்...

இ புகைப்படம்

Friday, July 4, 2008

வழக்கமான விதிமீறல்

அன்று இரவு நண்பனை கூட்டிவர வண்டியை எடுத்துக்கிளம்பினேன், எல்லாம் நன்றாகத்தான் சென்றது, கத்திபாரவிலிருந்து ஏர்போர்ட் செல்லுமிடத்தில் முன் சென்று கொண்டிருந்த ஒரு அம்பசிடர் கார் இடதுபுறத்தில் 2 வீலரில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை இடித்துச்சென்றது. அருகிலிருந்த நபர்கள் மற்றும் வண்டிக்கு பின்னால் வந்தவர்கள் அவருக்கு உதவச்செல்லவே, நான் நிற்காமல் சென்ற அந்த வண்டியைத்துரத்த முயன்றேன் நீண்ட தூரம் துரத்தி ஒருமுறை அருகில் செல்லும்போது வண்டியை நிருத்தச்சொன்னேன். அந்த ஓட்டுநரோ எதற்கு என்று கேட்க, ஒரு விபத்தை செய்துவிட்டு நிற்காமல் வருகிறாயே என்று கூறினேன். அதற்க்கு அவர் "நீயும் அடிபட்டு சாக வேண்டுமா" என்று கூறியபடியே நிற்காமல் செல்லவே நான் அடுத்து வரும் சிக்னலில் இருக்கும் காவலரிடம் கூறலாம் என்று நினைத்துச்சென்றால் ஏர்போர்ட் வரை சாலையில் எந்த காவலருமில்லை.

ஏர்போர்ட் சென்ற பொது அங்கிருந்த போக்குவரத்து காவலரிடம் நடந்ததை கூறி என்ன செய்வது என்று கேட்க. அவர்கள் விபத்து மிகப்பெரியதா? ஆளுக்கு அடியா? வண்டிக்கு பெரிய சேதமா? என்று கேள்வி கேட்டனர். எனக்கு அதையெல்லாம் பார்க்க நேரமில்லை ஏனெனில் அடித்த வண்டி நிற்கவில்லை அதை தொடர முடிவு செய்து தொடர்ந்தேன் என்று கூற. அதற்க்கு அவர்கள் அடிபட்டவர் புகார் குடுக்காமல் எதுவும் செய்ய முடியாது தம்பி, நீங்கள் வேண்டுமென்றால் திரும்பி போகும்போது கத்திப்பாராவில் சென்று அங்கு இருக்கும் அதிகாரியிடம் கேளுங்கள் எவரேனும் புகார் குடுத்து இருந்தால் அவரிடம் வண்டி நம்பரை தெரிவியுங்கள் என்றார். அதில் அவர் எனக்கு நன்றி சொன்னது மிகவும் ஆச்சரியம் எதற்க்காக எனக்கு நன்றி கூறினார் என்று தெரியவில்லை.

திரும்பி அவ்வழியே செல்லும்போது அங்குள்ள காவலரிடம் ஏதும் விபத்து பற்றி புகார் வந்திருக்கிறதா என்று நான் கேட்க, அவர் அப்படி ஏதும் புகார் இல்லை என்று கூறிவிட்டார். நான் குறித்து வைத்த வண்டி எண் TN 01 P 7275 எந்தவித உபயோகத்திற்கும் இல்லாமல் சென்றது.

நேற்று அண்ணா சாலையில் சென்று கொண்டிருக்கும்போது வலது ஓரத்தில் சென்ற அரசுப்பேருந்து திடீரென்று இடதுபுறம் திரும்ப பக்கவாட்டில் சென்ற ஆட்டோ இடதுபுறம் சென்று அங்கு சாலையில் சென்றுகொண்டிருந்த இருவர் மீது மோதியது. அடி பலமில்லை இருந்தாலும் இது தவிர்க்கபட்டிருக்கலாம். இதில் தப்பு யார் மீது? அந்த பேருந்து ஓட்டுனர் எந்தவித முன்னறிவிப்புமில்லாமல் திருப்பியதாலா? இல்லை ஆட்டோ அவர் பாதையில் விட்டு இடதுபுறம் சென்றதாலா?

சமீபத்தில் எதிலோ ஒரு நாளிதழில் படித்தது, சென்னையில் ஏற்ப்படும் சாலைவிதி மீறலில் பெரும்பான்மை சதவிகிதம் அரசுப்பேருந்து ஓட்டுனர் செய்வதாக போக்குவரத்து காவல்துறையினர் கூறியுள்ளனர். தினசரி வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் செயல் இது, என்னைப்பொறுத்தவரை 90 சதவிகித மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் சாலை விதிமீறலில் ஈடுபடுகின்றனர். எனக்கு இவ்வாறு செய்யும் ஓட்டுனர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்ற கோவம் வருகிறது. எனது தந்தையும் ஒரு அரசுப்பேருந்து ஓட்டுனர் அனால் அவர் தொலைதூர வண்டி இயக்குவதால் இந்த தவறை செய்கிறாரா என்று தெரியவில்லை, எனக்கு சாலை விதிமுறைகளையும், பேருந்து ஓட்டுனர்களின் மனநிலையையும் சொல்லிக்குடுத்தது அவர் மட்டுமே. இன்றும் அவர் சொல்லிக்குடுத்ததை மட்டுமே நம்பி நான் வண்டி ஓட்டிக்கொண்டு உள்ளேன்.

அடுத்து வருவது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள், இவர்களை பற்றி என்ன சொல்ல? அனைவருக்கும் தெரியும். அடுத்து பைக் ஓட்டுபவர்கள், சந்து கிடைத்தால் போதும் பின்னால் வருபவர் என்ன அனாலும் பரவாயிலை அவர் மட்டும் சென்றால் போதும் என்று செல்வது. இந்த வேன் ஓட்டுனர்கள் கதவை திறந்து வைத்துத்தான் ஓட்டுவார்கள்.

கடைசியாக நடந்து செல்பவர்கள், சாலையை கடக்க அதற்கான பாதையை உபயோகிப்பது இவர்களுக்கு பிடிக்காது, நாடு சாலையில் திடீரென்று குதிப்பார்கள், வரும் வாகனங்கள் இவர்களை இடிக்காமல் செல்ல வேண்டி வேறெங்காவது செல்ல வேண்டும்.

இந்த கணக்கில் மென்பொருள் அலுவலக பேருந்துகளையும், கார்களையும், கல்வி நிறுவன பேருந்துகளையும், நான் மறக்கவில்லை.

சில எளிதான அறிவுரைகள்: சென்னையில் மாநகர பேருந்திற்கு பின் செல்லும்போது அந்த பேருந்து எங்கு செல்கிறது, வெள்ளை நிற அறிவிப்பு பலகையா என்று பார்த்து அதன்படி நகர்ந்து செல்லுங்கள். சில பேருந்துகள் திடீரென்று திரும்பும் இடத்தை யூகிக்க முடியும்.

எந்த காரணத்தைக்கொண்டும் ஆட்டோவின் பின்னால் செல்ல வேண்டாம்.

யார் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் நீங்கள் விதிகளை மதியுங்கள், ஏனென்றால் ஏதேனும் விபத்து நடக்கும்பட்சத்தில் உங்கள் மீது தப்பு சொல்ல முடியாது.

தேவையற்ற இடத்தில் தேவையற்ற வேகம் வேண்டாம், இடமறிந்து வேகத்தை கூட்ட வேண்டும்.

முன் செல்லும் வாகனம் எவ்வாறு பயணப்படும் என்று மனக்கணக்கு எப்போதும் அவசியம்.

வலதுபுறம் வரும் வண்டியை கவனிக்காமல் எப்போது முந்துதல் கூடாது.

நகரின் வெளியில், நெடுஞ்சாலையில் செல்லும்போது எக்காரணத்தைக்கொண்டும் சாலையை விட்டு இறங்க வேண்டாம்.

Wednesday, July 2, 2008

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

இன்றைய இளைஞனின் எண்ணங்கள்

விலைவாசிலாம் கண்ணா பின்னாவென்று ஏறுகிறது, எப்படிடா காலத்த ஓட்டறது?

ஆபிசில வேற புது வேலைலாம் டல்லா இருக்கு, இந்த வருஷம் அப்பரைசல் எப்படியும் ஒன்னும் போட மாட்டாங்க. வேற வேலையும் சுலபமா கிடைக்க மாட்டேன்குது.

வீட்டு ஓனர் வேற வாடகைய எப்படா ஏத்தலாம்னு பாத்துகிட்டு இருக்கான்.
வயசு வேற ஆச்சு, நம்ம கூட படிச்ச பசங்கள்ளாம் கல்யாணம் பண்றாங்க, இத பாத்தாலே நமக்கும் வயசாச்சுன்னு ஒரு பீலிங்கு.

இதுல கூட இருக்கவன்லாம் வீட்ல பொண்ணு பாக்கறாங்கன்னு சொல்லி இன்னும் பெட்ரோல ஊத்தறான்.

வீட்டுல கல்யாண பேச்ச எடுக்க ஆரம்பிக்க இன்னும் டைம் இருக்கு, நமக்காக அண்ணன் என்ற ஒரு கேட் இருக்கு இன்னும் ஒரு வருஷம் டைம் கிடைக்கும்.

அதுக்குள்ள ஒரு வீடு வாங்கிடணும்னு இருந்த கனவு எல்லாம் கனவாவே போய் ரொம்ப நாள் ஆச்சு.

ஏதோ மென்பொருள் துறைல வேலை பாதவாவது ஏதாவது வேற கம்பனிக்கு ஜும்ப் பண்ணி சம்பளத்த ஏத்திக்கலாம் அதுக்கும் வழி இல்ல

கல்யாணம் பண்ணினா வீட்டுக்கு அட்வான்ஸ் குடுக்கணும் எப்படியும் ஒரு லட்சம் தேவை முதல்ல அதுக்கு சேத்து வைக்கணும்.

வீடுதான் வாங்கல நம்ம கெத்த மேயின்டின் பண்ண ஒரு கார் வாங்கி உருட்டுவோம், எப்படியும் நமக்கு யாராது பொண்ண குடுப்பாங்க என்று நம்பி.

வீட்லயே இருக்க பொண்ண வேணாம்ன்னு ஏற்கனவே முடிவு பண்ணினது வசதியா போச்சு.

எப்படியும் இதெல்லாம் சேர்க்க இரண்டு வருசமாது ஆகும் அதுக்கு இடைல யாரது நல்ல மாமனாரா கிடைச்சா செட்டில் ஆகிடலாம்.

மூணு வருசமா வேல செஞ்சு என்னாத்த சேத்து வச்சன்னு பார்த்த ஒரு மண்ணும் இல்ல, ஊதாரிக்கு அர்த்தம் இப்பதான் தெரியுது.

பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் அகிடலாமா? அப்படியே சரின்னாலும் எவன் பொண்ணு குடுப்பான் நல்ல பேருக்கெல்லாம் எவனும் பொண்ணு குடுக்கறது இல்ல எவ்ளோ சேத்து வச்சுருக்க அதுக்குத்தான் பொண்ணு.

காதல் பண்ணலாம்னாலும் நமக்கு இருக்க நண்பர்கள் வட்டாரம் நம்மள முதல்ல வெளிய விடனும் அதும் நடக்காது.

ஐயோ எனக்கும் பொறுப்பு வந்துடுச்சு போலருக்கு, இப்படிலாம் பதிவு எழுதறோம்.

அதான பார்த்தேன், இத எழுதும்போதே நண்பன் ஒருத்தன் வெளிய போகனும்னு கடன் கேட்க்கறான் குடுத்து குடுத்து சிவந்த கையால ஒரு ஆயிரத்த டிரான்ஸ்பர் பண்ணிடோம்ல, திரும்பி வரதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்றதுல ஒரு திருப்தி.

டேய் போதும்டா இந்த மொக்க பதிவு, செய்க்கிரம் போய் கொட்டிக்கோ சாப்பாடு தீந்துடும் என்று மனச்சாட்சி சொல்றதால விடறேன்.
இந்த கால இளைஞன் என்னலாம் யோசிக்கறான் பாருங்க.

இதுல வஞ்ச புகழ்ச்சி அணி எல்லாம் இல்ல, அங்கங்க தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும். படிப்போம் மறப்போம்.

நேற்றிரவு

நேற்று இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு படுக்கப்போகும் முன் நண்பன் வாடா காலாற நடந்துவிட்டு வரலாம் என்று அழைக்க எதோ குருட்டு யோசனையுடன் சரி என்று நடக்க ஆரம்பித்தோம். எங்க தெருவில் வீட்டுக்கு முன்னாள் கார் நிறுத்துபவர்கள் இப்போது பயந்து போயுள்ளனர். பின்ன அன்று ஒரு நாள் நிறுத்தியிருந்த காரை இரவில் வேகமாகச்செல்லும் மணல் லாரிகள் இடித்துவிட்டு சென்றிருக்க, அடுத்த சில நாட்களில் இன்னொரு கரையும் காலி பண்ணி இருந்தனர்.

கிளம்பும்போதே பக்கத்து வீட்டுக்காரர் ஒரு லாரி ஓட்டுனருடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தார், வீட்டு வேலைக்கு மணல் கொட்டுகிறேன் என்று அவர் வீட்டு சுற்றுச்சுவர் முழுவதையும் மூடி இருந்தனர். நாங்களும் பார்த்தோம், இருபது அடி ரோடு இப்ப ஒத்தையடிப்பதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்படியே வேளச்சேரி - தரமணி மெயின் ரோட்டுக்கு வந்தோம், கொஞ்ச நேரம் நடந்திருப்போம். இரண்டு பேர் பைக்கில் வந்து விஜயநகர் எது என்றனர், இதுதான் என்று சொல்ல, இல்ல இங்க எங்க இருக்கு விஜயநகர் என்றுகேட்டனர். அவங்களுக்கு ஒருவழியா வலி (வழிதான்) சொல்லி அனுப்பினோம். மெதுவாக சுற்றி வீட்டுக்கு வரும் வழியில் காவல்த்துறை ரோந்து,எங்கப்பா போயிட்டு வரீங்க என்று அவர்கள் கேட்க. வாக்கிங் போயிட்டு வரோம் என்று சொலிட்டு அவங்கள பாக்க, நைட் 12 மணிக்கு எவனாது வாக்கிங் போவனா? என்று எங்களை பார்த்து சிரித்தார்.

அவங்கள சமாளிச்சு வீட்டுக்கு வந்தா எதுத்த வீட்டுக்கு முன்னாடி ஒருத்தர் கார நிறுத்திட்டு கைய பிசஞ்சுகிட்டு இருந்தார். கிட்ட போய் என்னனு பார்த்தா, கார் சாவிய உள்ள வச்சுட்டு கதவ பூட்டிட்டார். அப்புறம் நாங்களும் கொஞ்சநேரம் என்ன பண்ண என்று யோசித்தோம். வழியே வந்த ஒரு வாடகை வண்டியை நிறுத்தி உதவி கேட்க, அவரும் உதவினார். நாங்களும் கதவில்லுள்ள இடைவெளியில் ஒரு scale விட்டு அழுத்தினால் திறந்துவிடும் என்று நினைத்து கஷ்டப்பட்டு அந்த கண்ணாடியை மூடி இருக்கும் ரப்பரை பிரிக்க இப்போதுதான் சோதனை. ஆமா scale இல்ல, அதுபோல ஆயுதங்களை தேடினா கிடைத்தது பெரிய கரண்டி எங்க வீட்டிலிருந்து, அவர் வீட்ல பெரிய கரண்டி 2, பரீட்சை அட்டை 1, நீண்ட கம்பி 1, ரப்பர் பட்டை , சின்ன கட்டை.நமக்கு ஆயுதம் செய்வோம் என்ற படம் நியாபகம் வந்தது.

திடீரென்று ஒரு யோசனை,சரி என்று just dial நம்பர்க்கு அழைத்து 24 மணிநேர சர்வீஸ் நம்பரை கண்டுபிடித்து ஒரு ஆளை அழைத்தால் அவர் இன்னொரு நம்பர் குடுக்க அதிலிருந்து இன்னொரு நம்பர் என்று நான்காவது நம்பரில் ஒருவர் கிடைத்தார். அவர் ஆளனுப்பி அவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆனது. காலையில்தான் அவர் பெட்ரோல் போட்டுள்ளார் போல, இரண்டு மணி நேரமாக வண்டி ஓடிக்கொண்டு இருந்தது.இதுக்கு இடைல அவங்க வீட்டிலிருந்து mirinda வேற. கடைசியில் வந்து சரி செய்யும்போது மணி இரண்டு. அந்த நேரத்தில அவங்க காபி வேற குடுத்தனர்.

இவ்ளோ நடந்ததுல கிடைத்த தகவல்கள்

அந்த வீட்டுக்கு 15000 வாடகை குடுக்கிறார் (ஆகா நம்ம ஒப்பந்தம் அடுத்த மாசம் காலாவதி ஆகிறது, ஓனர் ஒரு ஆயிரம் ரூபாய் வாடகை ஏத்துவார் என்று நினைத்தால் இவர் சொல்வதை வைத்து பார்த்தால் சுமார் 6000 ரூபாய் ஏற்றப்படும் என்று நினைக்கிறேன்)

வாடகை வண்டிகள் உதவி செய்வது மகிழ்ச்சி.

வண்டிக்கு இத்தகைய சோதனை வரும்போது உதவி செய்யும் நபர்கள் வண்டியின் அசல் பதிவுப்புத்தகத்தை சரி பார்க்கின்றனர்.

அவர்களை அனுப்பியவர் மறுபடியும் அழைத்து சரி செய்யப்பட்டது என்று உறுதி செய்கிறார் ( My TVS Guindy ). இருபது நிமிட தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

சரி செய்ய வந்தவர்களை தேனிர் அருந்தி செல்லலாம் என்று அழைக்க அவர்கள் நீங்க கூப்பிட்டதே போதும், நாங்க பார்த்து இதுவரை எங்களை இப்படிகேட்டதே இல்லை என்று சொல்லி சென்றனர்.

இனி வண்டியை விட்டு இறங்கும்போது சாவி கையில் இல்லாமல் இறங்க கூடாது என்று நாங்கள் பாடம் கற்றோம்.

காலையில் கிளம்பும்போது பார்த்தேன், மணல் கொட்டுகிறேன் என்று பக்கத்து வீட்டு காரை பாதி மூடி வைத்திருந்தனர். (இன்னிக்கு மறுபடியும் பெரிய சண்டை இருக்குடா )

இனி வாக்கிங் கிளம்புனா சீக்கிரம் கிளம்பனும்.

Friday, June 27, 2008

வகுப்பறையில் ஒரு நாள்-ஹாக்கி

வகுப்பறையில் ஒரு நாள்

எட்டாவது சேந்து சில நாட்களில் உடற்கல்வி ஆசிரியர் வந்து மாணவர் அனைவரையும் அழைத்து நமது பள்ளியில் ஹாக்கி அணித்தேர்வு செய்யப்போகிறோம், விருப்பமுள்ளவர்கள் வந்து சேரலாம் என்று கூறினார். நம்ம மனசு ஆஹா கிரிக்கெட் என்றால் அத்தன பெரும் வருவாங்க இதுக்கு எப்படியும் ரொம்ப கம்மியாதான் பசங்க வருவாங்க அதனால நாம இதவே விளையாடலாம், அதுவுமில்லாம இது நம்ம தேசிய விளையாட்டு என்று நினைத்தது. அதுமாதிரி நெறைய பசங்கலாம் வரல ஒரு இருபதுபேர் இருந்தோம்.

அப்பவே மைல்டா ஒரு கேள்வி மனசுல இருந்துச்சு,, எதுக்குடா இத்தன பேரையும் இந்த மைதானத்த இரண்டு ரவுண்டு அடிக்க சொல்றாருன்னு, கஷ்ட்டப்பட்டு அடிச்சு முடிச்சா, சரி எல்லோரும் மட்டைய எடுத்துகிட்டு வாங்கடா சொல்லித்தாரேன் என்று சொல்லி கூட்டிப்போனார், அடடா நம்ம இவளவு எளிதாக தேர்வு செய்யப்படுவோம் என்று நினைக்கவில்லையே சந்தோசப்பட்டேன். நானும் ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு சென்றேன்.
எல்லோருக்கும் பந்தை அடிக்க சொல்லிகொடுத்தார், எனக்கும்தான், சரி என்று நானும் அடிக்க, அடுத்த அடி எனக்கு விழுந்தது, மட்டையின் எந்தப்பக்கம் அடிக்க சொன்னா நீ எந்தப்பக்கம் அடிக்கற என்று, அப்புறம் அவர் சொன்னமாதிரி அடிக்க முயற்சி செய்தால் பந்து ஐந்து அடிகூட நகரவில்லை. அப்புறம்தான் தெரிந்தது நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன், இவர் சொல்லிகொடுத்தது வலதுகைப்பழக்கம் என்று.நான் அவரிடன் "சார் நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் எனக்கு இப்படி வரவில்லை, இடது கை மட்டைகுடுங்க நான் விளையாட" என்று சொல்ல. அவர் என்னை ஒரு மாதிரியாத்தான் பார்த்தார். இப்பதான் தெரியுது நம்ம கனாக்காணும் காலங்கள்ல வர பி.டி மாதிரியோ என்று...

அப்புறம் இப்படி விளையாண்டா விளையாடு இல்லாட்டி போ, நம்ம பள்ளியில அந்த மட்டை எல்லாம் இல்ல, நீ உண்மைலேயே விளையாடனும் என்று எண்ணம் இருந்தா நீயே சொந்த காசுல ஒரு மட்டை வாங்கி வந்து விளையாடு என்றார். எங்க நமக்கு குடுக்கற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்ல அப்ப எங்க ஹாக்கி மட்டை வாங்க, இருந்தாலும் மனச தளர விடாம ஊர்ல இருக்க எல்லா கடைலயும் போய் கேட்டேன், இடதுகை மட்டை எங்ககிட்ட இல்ல வேற பக்கம் இருக்கலாம் என்று சொன்னாங்க, நானும் நம்பி ஒரு மாசாம் தேடிட்டு அப்புறம் இந்த பழம் புளிக்கும் என்று நினைத்து ஹாக்கிக்கு முழுக்கு போட்டுட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு ஹாக்கில இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு என்று தனியாக மட்டை இல்லையாம். அவர்களும் வலது கை ஆட்டக்காரர் போல ஆட வேண்டுமாம். இடது கை மட்டை எங்குமே கிடைக்காதாம். இப்ப சொல்லுங்க அந்த பி. டி எப்படி பட்டவர் என்று, "ஐ வான்ட் டு சி யூர் ஒரிஜினல் சர்டிபிகட்" என்று அணிக்கு அவர்ட்ட கேட்க்க அங்க ஆள் இல்ல .

நம்ம ஊர்ல விளையாட்டு சம்பந்தப்பட்ட ஆட்களுக்கே இந்த அளவுக்குத்தான் தெரிஞ்சு இருக்கு அப்புறம் எங்க ஒலிம்பிக்ஸ்ல போய் தங்கம் வாங்கறது, அதெல்லாம் கனவோடு நிறுத்திக்கணும் போல.

இப்படித்தான் நான் ஹாக்கி விளையாண்டு, அப்படியே மாவட்ட அணி, மாநில அணி, அப்புறம் இந்திய அணி, அப்படியே நேரா ஒலிம்பிக்ஸ் தான் என்ற கனவு கலைந்து போனது. என்னடா வகுப்பறையில் ஒருநாள் என்று சொல்லி மைதானத்தில் ஒருநாள் என்று முடிச்சுட்டானே என்று பாக்காதீங்க, இதுவும் வகுப்பறையில்தான் ஆரம்பித்தது :))

எனது பள்ளி ஆசிரியர்கள்

எனது பள்ளி ஆசிரியர்கள்

எவருமே அவரது பள்ளி வாழ்க்கையில் அவர்கள் கடந்து வந்த ஆசிரியர்களை மறந்து இருக்க முடியாது. என்னை எந்த விதத்திலாவது கவர்ந்த அல்லது என்னால் மறக்க முடியாத, எனக்கு நினைவில் உள்ள ஆசிரியர்களை பற்றி எழுதப்போகிறேன்.(ஆசிரியர் மற்றும் ஆசிரியை அனைவரும் தான்)

கீழ் வகுப்பில் இருந்து வருவோம்,
எனக்கு எல்.கே.ஜி வகுப்பு எடுத்தவரெல்லாம் நியாபகம் இல்லை அனால் யு.கே.ஜி வகுப்பு ஆசிரியை முகம் மட்டும் இன்னும் நியாபகம் இருக்கிறது. கலையான அந்த முகம் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை, கடைசி வரை அவரின் பெயரை கேட்க மறந்துவிட்டேன், இப்போது அவர் அந்த பள்ளியில் இல்லை. எனக்கு பாட்டு சொல்லிக்கொடுத்தது, மதியம் தூங்க வைத்தது எல்லாம் இன்னும் நியாபகம் வருகின்றது. எனது கல்வி வாழ்வை துவக்க உறுதுணையாய் அமைந்த அந்த ஆசிரியைக்கு நன்றி.

அடுத்து எனது இரண்டாவது, மூன்றாவது வகுப்பு ஆசிரியை, கற்பகம் டீச்சர், அப்போதெல்லாம் இவரிடம் நிறைய பயம், அதிகம் அடிக்க மாட்டார்கள் அனால் முகத்தில் ஒருவித கோவம் மட்டும் எப்போதும் இருக்கும். பின்னர் என்னை வகுப்புத்தலைவன் ஆகியதில் இருந்து என்னிடம் சின்ன பாசம். ஆனால் இவங்கதான் என்னை ஒரு பெரிய மாற்றத்துக்கு "அடி" போட்டு தயார் பண்ணினாங்க. இடது கை பழக்கம் உள்ள என்னை அடித்து அடித்து வலதுகையில் எழுத வைத்த உலகப்பெருமை இவங்களையே சேரும். அன்றில் இருந்து இன்று வரை இவங்கள நெனச்சாலே ஒரு வித கோவம் எனக்குள் வருகின்றது. அனாலும் ஒரு நல்ல காரியம்,நான் இடது கையால் எழுதுவதை விடவில்லை.

ஆறாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் நான் அன்றில் இருந்து இன்று வரை என்னால் மறக்க முடியாத சில ஆசிரியரை சந்திப்பேன் என எதிர்பார்க்கவில்லை.ஆறாம் வகுப்பு படிக்க போகும் முதல் நாளில் எனது தந்தை எனது அண்ணாவின் துணையுடன் என்னை ஆங்கில வழி கல்விக்கு மாற்ற திட்டம் போட்டார், அப்போது நான் படித்த அதே பள்ளியில் இருந்த ஆங்கில வழித்திட்டத்தில் ( மெட்ரிகுலேசன் பள்ளி ) என்னை சேர்க்க திட்டமிட்டு படிவம் எல்லாம் நிரப்பியாயிற்று, திடீரென்று என்னைப்பார்த்த அந்த பள்ளி முதல்வர் என்னப்பா உன்னால ஜெய்க்க முடியும் என்று நான் நம்புகிறேன், நீ நம்புறியா? சேந்துகிரியா இல்லை வேணாமா என்றார். நான் வேணாம் என்று சொல்லியவுடன் பையனுக்கு நம்பிக்கை இல்லை அதனால் தமிழ் வழியிலே படிக்கட்டும் அடுத்த வகுப்பில் மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பினார், அதுமட்டுமில்லாது எனது வகுப்பு ஆங்கில ஆசிரியரை தனியாகச்சந்தித்து என்னைப்பற்றி சொல்லி தனி கவனம் எடுத்துக்கொள்ள கூறியுள்ளார். எனவே இவர்க்கும் என்னிடத்தில் தனி மரியாதை எப்போதும் உண்டு.

எனது ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் வைத்தியலிங்கம், மிக அமைதியான ஆசிரியர், அப்போது அவர்க்கு சின்ன வயசுதான் இருக்கும், வகுப்பில் என்னை வகுப்புத்தலைவன் ஆக்கியது மட்டுமில்லாமல், தினமும் வகுப்பில் ஆங்கில செய்திகளை வாசிக்க சொல்வது, ஆங்கிலத்தை நுணுக்கமாக சொல்லித்தருவது என்று என்னை ஒரு வழியாக தயார்ப்படுத்தினார் (அப்படியும் நான் கத்துகல என்பது வேறு விஷயம்).இருந்தாலும் ஆங்கிலத்தின் மேலுள்ள ஒரு பயம் போயிற்று. இப்பொது ஒரு அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் இவர்க்கு எனது நன்றிகள்.

அடுத்து அறிவியல் ஆசிரியர் பாபு அவர்கள், இவரும் ஆங்கில ஆசிரியரும் நண்பர்கள், குணத்தில் நேர் எதிர், கோவத்தில் எனக்கு அண்ணன். அடிபிரிச்சுடுவார், என்மீது கொஞ்சம் அக்கறை உண்டு இவர்க்கு. ஆனாலும் வகுப்புத்தலைவன், நன்றாக படிக்கிறேன் என்ற அகந்தையில் நான் ஏதும் சில சின்ன விஷயம் பண்ணினாலும் அடி பின்னி எடுத்துவிடுவார். இவர் கடைசிவரை என்னிடம் கற்றுக்கொள்ள சொல்லியது "கோவப்படு, நான் என்ற அகந்தையை எப்போதும் விட்டுவிடு, உனக்கு மட்டும்தான் வெற்றி நிரந்தரம் என்பதை மறந்துவிடு" இதுதான். இவரின் பண்புகள் எனக்குள் வந்ததை சமீபத்தில்தான் கண்டுகொண்டேன் (இன்னும் இந்த அகந்தை மேட்டர் நம்மகிட்ட வரல, அப்பப்ப தலை தூக்கும் அப்போதெல்லாம் இவர் நியாபகம் வந்து எட்டிப்பார்க்கும்)

எட்டாவது வரை இவர்கள் இரண்டு பேர்மட்டுமே எனக்கு நினைவில் நின்ற ஆசிரியர், ஒன்பதாவது போகும்போது என்னை ஒரு வழியாக மனதளவில் ஆங்கில வழிக்கல்விக்கு தயார் படுத்திக்கொண்டேன், அதே முதல்வர் இப்போது என்னப்பா தயாரா என்று சொல்லி சிரிக்கிறார். என்னை வகுப்பறையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அங்கிருந்த ஆசிரியையிடன் சொல்லிவிட்டுச்சென்றார். அந்த ஆசிரியை பெயரும் கற்பகம், இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், தமிழ் ஆசிரியை, இவர்க்கும் என்னை பிடிக்க ரொம்ப சில நாட்களே ஆகியது. எனக்கு மிக நல்ல அறிவுரைகளை சொல்லி, பயத்தை போக்கி, என்னை மற்ற மாணவர்களுடன் சகஜமாக பழக வைத்ததின் பெருமை இவரையே சேரும். இன்றும் நண்பர்களை சந்திக்கும்போது இவரைப்பற்றி பேசுவது உண்டு.

அடுத்து கணித ஆசிரியர் விஜயகுமார், நானும் பள்ளிக்கு புதிது இவரும் புதிது, அடி பின்னியெடுக்கும் ஆசிரியர்க்கு பதிலாக இவர்தான் உங்கள் கணித ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியதில் இருந்து பதினொன்றாம் வகுப்பு வரை இவருடன் தொடர்பு இருந்தது. எதோ ஒரு வேகத்தில் இவரிடம் சண்டை போட்டுக்கொண்டு பதினொன்றாம் வகுப்பில் தனிப்பாடதிலிருந்து வெளியேறினேன். இவரைப்பற்றி நிறைய எழுத வேண்டியதால் தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து புது முதல்வர், இவரும் விஜயக்குமாரின் பதிவில் வந்துவிடுவார், இவர்க்கும் மிகப்பெரிய பங்கு இல்லாவிடிலும் எனது எதிர்காலத்தை மாற்றிய ஆசிரியரில் மிக முக்கிய இடம் உண்டு.

அப்புறம் சமூக அறிவியல் ஆசிரியை சுலோக்சனா, தாவரவியல் ஆசிரியை அங்கையர்க்கன்னி இவங்கல்லாம் அங்கங்க வந்துட்டு போனாங்க. அங்கையர்க்கன்னி நான் புத்தகத்தைப்பார்த்து பரீட்சை எழுதும்போது கண்டுபிடித்து அடித்து,ஏண்டா என்கிட்டயே இப்படி மாட்டிகிட்டா நீ பிட் அடிக்கவே லாயக்கு இல்லை என்று சொல்லி என்னை நன்றாக வித விதமாக பிட் அடிக்கும் கலையில் தேர்ச்சி பெற தூண்டிவிட்டவர்.(இத இப்ப பார்த்தாங்கன்னா அவ்வளவுதான் )

பதினொன்றாம் வகுப்பு, பள்ளி மாறியாயிற்று.கோவிந்தராஜன் அய்யா தமிழாசிரியர், என்னால் மறக்க முடியாத ஆசிரியர்... தமிழை படிக்காத நீ, போதுமான அளவுக்கு ஏற்கனவீ படிச்சுட்ட அத தக்கவைத்துக்கொண்டாலே போதும், பொறியியல் அல்லது மருத்துவம் படிக்க தேவையானதை மட்டும் இப்போது செய் என்று அறிவுரைகூறியவர்.

பசுபதி -இயற்பியல் ஆசிரியர், பொதுவாக மற்றவரைப்போல இவரை எனக்கு கொஞ்சம் புடிக்காது ஆனால் இவரின்றி நான் இயற்பியலில் 185 மதிபெண்கள் எடுத்து இருக்க முடியாது, எனது தந்தையின் நண்பர், அதற்காக என்மீது தனி அக்கரை செலுத்தாமல் எல்லோரிடமும் அக்கறை செலுத்துவார். அவர் சொல்லிகொடுத்த அந்த cyclotran பாடம் இன்றும் என் நினைவில் நிற்கின்றது. இவர் கையெழுத்தை நான் செய்முறை அறிவியல் ஆய்வு புத்தகத்தில் போட ஆரம்பித்து வகுப்பில் பாதி பேர் அதை பின்பற்றினர்.

இதற்கு பிறகு எனக்கு மனதில் நிற்கும் ஆசிரியர்கள் அவ்வளவாக இல்லை... இன்னும் சிலர் இருந்து இருக்கலாம். ஆனால் எனது ஆசிரியர்கள் அனைவருக்கும் என்றுமே நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நண்பர் அருட்பெருங்கோ அவர்களுக்கு நேரமிருந்தால் அவரது ஆசிரியர் பற்றி எழுதலாம் இன்னும் விரிவாக சுவையாக. (முக்கியமாக கோவிந்தராஜ் அய்யாவைப்பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும்)

Thursday, June 26, 2008

எனது முதல் சென்னை பயணம்

எனது முதல் சென்னை பயணம்

உண்மைய சொல்லனும்னா இதன் என்னோட முதல் நெடுந்தூர பயணம். மூன்றாவது படித்துக்கொண்டு இருந்தேன், எனது அக்கா பனிரெண்டாம் வகுப்பு முடித்து நுழைவுத்தேர்வு எழுத சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு பள்ளி விடுமுறை வேறு, அப்பாவிற்கோ அவரது சலுகைகளான வருடத்திற்கு 4500 கிலோமீட்டர் குடும்ப இலவச பயணத்திட்டத்தை ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும் என்று ஆசை. எப்படியோ என்னையும் சென்னை கூடிப்போகிறேன் என்று சொல்லிவிட்டனர்.

அது என்ன கிழமை என்று தெரியவில்லை கரூரில் இருந்து சென்னைக்கு பேருந்துப்பயணம். அரசுப்பேருந்து, நீண்டதூரம் செல்ல வேண்டும், என் அப்பா விடுமுறையில் எங்களுடன் பயணம் மேற்கொண்டார், அவர் ஓட்டுனர் இருக்கையை விட்டு பயணியர் இருக்கையில் பயணிப்பதை அப்போதுதான் முதன் முதலாக பார்க்கிறேன். எனக்கு ஜன்னலோர இருக்கை.

அப்போதெல்லாம் பேருந்துக்கு திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் என்று பெயர், ஒவ்வொரு இருக்கைக்கு பின்னால் ஒரு திருக்குறள் எழுதப்பட்ட பட்டை ஒட்டப்பட்டிருக்கும். இப்போ அதை எல்லாம் மறந்து விட்டிருக்கின்றனர். ஒரே ஒரு குறள் ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் எழுதப்பட்டுள்ளது சில பேருந்துகளில். (காலம் மாறிபோச்சு போல)

விடிய விடிய தூங்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன், பேருந்து எத்தனை லாரிகளை முந்திக்கொண்டு சென்றது, எத்தனை பேருந்துகளை முந்திச்சென்றது என்று எண்ணிக்கொண்டு வந்தேன். இடையில் நிறுத்தி சாப்பிட சென்றபோது அங்க வந்த பேருந்துகள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த நாள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்தோம். அப்பாவின் நண்பர் பிரபு அண்ணா வந்து வீட்டுக்கு கூட்டிச்சென்றார்.

அன்று மாலை வரை ஓய்வு, எனக்கு சென்னையை பார்த்தாலே ஒரு மலைப்பு அப்போது, அன்று மாலை வழக்கம் போல அண்ணா சமாதி, M.G.R சமாதி எல்லாம் குட்டிச்சென்ற்ரார்கள், பின்னர் கடற்கரை (என்னடா எல்லாமே அங்கதான இருக்குன்னு சொல்லக்கூடாது, எனக்கு அப்போ அதெலாம் தெரியாது) முதல் முதலாக கடலைப்பார்த்தேன், நெஜமா ரொம்ப பயமா இருந்துச்சு, பெரிய பெரிய அலை, அப்பா கையா பிடிச்சுகிட்டு தண்ணில ஆடுனேன். கடற்கரைல சுண்டல் வாங்கித்தந்தாங்க, அதெல்லாம் எனக்குப்புதுசு, அதுவரை வெளி திண்பண்டங்களை (பள்ளிக்கு வெளியிலோ, இல்லை வேறு எங்கும் சாலையோரமாக உள்ள கடைகளிலோ வாங்கி திங்க அனுமதி இல்லை எனக்கு) சாப்பிட்டது இல்லாததால் ஆசையாய் நிறையா சாப்பிட்டேன்.

அக்காவிற்கு அடுத்த நாள் நுழைவுத்தேர்வு, ஏதோ ஒரு கல்லூரியில் எழுதினார்கள், எழுதி முடித்து விட்டு வந்த உடனே வீட்டுக்கு வந்தாயிற்று. அன்று எங்கும் கூட்டிச்செல்லவில்லை. எனக்கும் பெரிதாக ஏதும் தோணவில்லை வீட்டிலேயே விளையாட, தொலைக்காட்சி பார்க்கவே நேரமில்லை அப்ப எங்க வெளிய போறது. அடுத்த நாள் V.G.P கோல்டன் பீச் சென்றோம், அந்த அசையா மனிதன், அங்குள்ள ராட்டினங்கள், சிறு ரயில் வண்டிகள் எல்லாமே புதுசு எனக்கு. மாலை வரை அங்கு சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்துசேர்ந்தோம்.

அடுத்த நாள் இரவு கிளம்பி சென்னையில் இருந்து கரூர் வந்து சேரத்திட்டம். மறுபடியும் பேருந்துப்பயணம், நீண்ட பயணம், மறுபடியும் அதே லாரி, பேருந்து எண்ணிக்கை, வேடிக்கை என்று வந்து சேர்ந்தேன், இருந்தாலும் கரூர் வந்து சேர சேர மனதில் ஒரு சோகம், அவ்ளோதானா பேருந்துப்பயணம் என்று மனது எண்ணியது. இப்படித்தாங்க என் முதல் சென்னைப்பயணம் இருந்துச்சு. இன்றுவரை எனக்கு எங்கு செல்வதானாலும் சாலை வழியே செல்லவே இன்றும் மனதுக்குப்பிடிக்கிறது.

அதுக்கப்புறம் பள்ளியில் வகுப்பு தோழர்களிடம் சென்னை சென்றேன், அங்கு அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று ஒரு வாரம் முழுக்க சொல்லித்திரிந்தேன்.

இந்த ஒரு பயணம்தான் எனக்கு நான் என்ன குறிக்கோளில் படிக்கப்போகிறேன் என்பதை எடுத்துக்காட்டியது. ஆம் அக்கா மருத்துவக்கல்லுரியில் சேரப்போகிறார், நாமும் அது போலத்தான் என்று அப்போதே முடிவு எடுத்தாயிற்று. (நான் இல்லீங்க அப்பாதங்க)

சென்னையில் இருந்த அத்தனை நாளிலும் எங்களுக்கு விதவிதமாக சாப்பாடு போட்ட பிரபு அண்ணா தம்பதியர் மற்றும் அவர்கள் வீடு. இன்னைக்கும் அவர் வீடுக்குச்செல்வது என்றால் அவர்களின் உபசரிப்பும் சாப்பாடும் முதலில் மனதில் வரும்.

இலவச பயணத்திட்டம் பற்றி எழுதினேன் அல்லவா, நான் கல்லூரி வந்தவுடன் அதுவரை உபயோகிக்காமல் விட்ட அந்த திட்டத்தை நான் மட்டுமே காலி செய்தேன் நான்கு வருடமும்.

அந்த திருக்குறள் எழுதப்பட்ட பட்டையை நான் கோடு போட பயன்படுத்தி இருக்கிறேன். அப்பா ஒரு பத்து இருபது குறள் எடுத்து கொண்டு வந்து தந்தார்கள். தினமும் ஒரு குறளாக பயன்படுத்துவேன். வகுப்பு ஆசிரியர்க்கு அதனாலேயே என்மீது தனி பிரியம்.(வித்தியாசமா scale பயன்படுத்தறேன் என்று, எங்க வாங்கினது இது என்று கேட்டு வர வேறு சொல்லி இருகாங்க ஒரு தடவ என்கிட்ட).

அப்போதெல்லாம் கேமரா இல்லாததால் இந்த பயணங்களில் போட்டோ எடுக்கவே இல்லை :(

சென்னையில் எங்கு சென்றாலும் பல்லவன் பேருந்துகளையே உபயோகப்படுத்தினோம். அப்பா ஊழியர் என்பதால் உடன் வந்த குடும்பத்தினர்க்கு பயணசீட்டு வாங்கும்போது அனைத்து நடத்துனரும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதித்தனர் அப்போது.

Wednesday, June 25, 2008

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு

பெட்ரோல் விலை லிட்டர்க்கு 12 ரூபாய் உயர்வு


என்னங்க பாக்கறீங்க திடிர்ன்னு குண்ட தூக்கி போடுறேன்னா? உண்மை தாங்க, விலை ஏற்றம் செய்து ஒரு மாதம் ஆக போகின்ற நிலையில் இந்த நாட்களில் நான் கண்ட உண்மை.


சென்னையில் கடந்த ஒரு மாதமாக வழக்கமாக நான் பெட்ரோல் போடுகிற நிலையங்களில் ஆகட்டும், இல்லை மற்ற எல்லா நிலையங்களில் ஆகட்டும் பெட்ரோல் விலை 60 ரூபாய் ஒரு லிட்டர்க்கு.


ஒவ்வொரு முறையும் நான் பெட்ரோல் போடும்போது சாதரண பெட்ரோல் போடுவது வழக்கம், கடந்த மாதங்களில் அது எங்கேயும் கிடைப்பதில்லை. சாதரண பெட்ரோல் விலை 55 ரூபாய் அனால் சூப்பர் பெட்ரோல், எக்ஸ்ட்ரா பிரிமியம் பெட்ரோல் விலை 60 ரூபாய். எங்கேயும் சாதரண பெட்ரோல் கிடைப்பது இல்ல.


கூட்டி கழிச்சு பாருங்க விலை ஏற்றம் 5 ரூபாய் இல்லை 12 ரூபாய். எப்போதும் கிடைத்த சாதரண பெட்ரோல் இப்போ கிடைப்பதில்லை, 60 ரூபாய் போட்டு பெட்ரோல் போடும் நிலை. இரண்டு சக்கர வண்டிகளில் இந்த சூப்பர் பெட்ரோல் போடுவதால் எந்த பயனுமிருக்கப்போவது இல்லை. அப்படியே இருந்தாலும் 2 -3 கிலோமீட்டர் அதிகம் ஓடும் அதற்கு 5 ரூபாய் அதிகம் குடுக்க வேண்டும்.


அதும் என்னோட யமாஹா எல்லாம் லிட்டர்க்கு 30 கிலோமீட்டர் குடுத்தாலே அதிகம் அதையும் அடிச்சு பிடிச்சு கெஞ்சி ஓட்டி 40 கிலோமீட்டர் குடுக்க வைக்கறேன். முடியலப்பா சாமி. இதுல சூப்பர் பெட்ரோல் வேறயாம் அய்யா என் வண்டி எத போட்டாலும் 30 தான் குடுக்கும் என்று கெஞ்சியும் எவனும் மசிய மாட்டேங்கிறான்.


இதுல இவங்க சூப்பர்னு சொல்லி சாதரண பெட்ரோல்ல கலப்படம் செஞ்சு வித்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஏதும் இல்லை. ஏற்கனவே ஒரு நிலையத்தில சாதரண பெட்ரோல் போடும் இடத்தில் சூப்பர் என்று ஸ்டிக்கர் மட்டும் ஒட்டியிருந்தனர். அதான் டவுட்டு...


இதெல்லாம் மாறனும்னா ஒரே வலி (வழின்னு தான் டைப் பண்ணுனேன் அனா அதுவா இப்படி வலின்னு மாறிவிட்டது) நம்ம தலைவர் விஜயகாந்த் ஆட்சிக்கு வரணும். ( ஒரு காமெடி வேனாமாங்க....)


ஆட்சிய மாத்துங்க (மாத்துன மட்டும் குறைய போகுதா இல்லபா ஒரு சேஞ்க்குதான். மாத்தின நம்ம மக்கள் இதையெல்லாம் மறந்துடுவாங்க தான.)
அணையைப்போற விளக்கு இவ்ளோ நாள் பிரகாசமா எரிஞ்சுக்கிட்டு இருந்த மாதிரி இருக்கு.

Tuesday, June 24, 2008

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

பிஎஸ்என்எல் சேவை அற்புதம்

இது பழைய நிகழ்வு, சென்ற வருடம் தீபாவளியின் போது நான்கு நாட்கள் விடுமுறை வந்தது, விடுமுறைக்கு முதல் நாள் எனது தந்தையின் அலைபேசி தொலைந்து போனது. நாங்களும் தேடிப்பார்த்துவிட்டு கிடைக்காமல் போகவே சரி வாடிக்கையாளர் சேவை மையத்தில் சொல்லி விடலாம் என்று முடிவு செய்தோம்.

எதற்கும் தொலைந்த நம்பர்க்கு அழைத்து பார்ப்போம் என்று அழைத்தால் யாரோ எடுத்தார்கள், எங்களுக்கோ மகிழ்ச்சி, அவரிடம் அலைபேசி எங்களுடையது, தவற விட்டுவிட்டோம், நீங்கள் எங்கு உள்ளீர்கள் வந்து வாங்கிகொள்கிறோம் என்று கூறினோம். அவரோ நான் வெளியூரில் உள்ளேன் தர முடியாது என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். பின்னர் எங்களது நெருங்கிய நண்பர் ஒருவரது பெண்ணிற்கு என் தந்தை நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது, பேசியது வேறு யாரோ இருக்கவே அவர்கள் செய்ய என்னிடம் கேட்க அவர்களுக்கு அலைபேசி தொலைந்ததை சொன்னோம்.

இனிதான் ஆரம்பம் நம்ம பிஎஸ்என்எல் சேவை, வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்பு கொண்டு சொல்லலாம் என்று நினைத்தால் முதல் கேள்வி, வாடிக்கையாளர் சேவை மையம் உள்ளதா என்று, இருதால் என்ன நம்பர்? ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நம்பர் கண்டு பிடித்து அழைத்தோம், நம்பரை சரி பார்க்கவும் என்று வந்தது, பின்னர் பல முறை தொடர்பு கொண்டும் தங்கள் நம்பரை சரி பார்க்கவும் என்று மட்டுமே வந்தது, பின்னர் வேறு தொலைபேசியில் இருந்து அழைத்தால் அழைப்பு போயிற்று, யாரோ ஒரு பெண் எடுத்தார், தகவலை சொல்லி தந்தையின் நம்பரை துண்டிக்குமாறு வேண்டினோம். அவர் அதற்க்கு அசால்டாக இது தமிழ்நாடு சரக நம்பர் நீங்கள் அதற்க்கு தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி தொடர்பை துண்டித்தார் . அப்பா சென்னை தமிழ் நாட்டில் இல்லையா என்று மனதில் கேள்வி எழுந்ததுலாம் சொல்லனுமா??

கஷ்டப்பட்டு சேவை மைய நம்பரை கண்டுபிடித்தால் இப்படி சொல்றாங்க என்று நினைத்து மறுபடியும் அதே நம்பர்க்கு அழைக்க, அந்த பெண்ணுக்கு கோவம் வந்துவிட்டது, "இப்போது தான சொன்னேன் இங்க சொல்ல கூடாதுன்னு, ஏங்க மறுபடியும் பண்றீங்க" என்று கேட்டார், அம்மா எனக்கு தமிழ்நாடு சேவை நம்பர் தெரியாது நீங்க உதவி செஞ்சா நல்லார்க்கும் என்று கேட்டால் கடுகடுப்புடன் எப்படியோ ஒரு நம்பரை கூறினார்.. அவரிடம் ஏனிந்த நம்பர்க்கு வேறு தனியார் நம்பரில் இருந்து அழைத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கேட்டோம் அதற்க்கு அவர் இது எங்கள் சேவைக்கு மட்டும் மற்றவர் தொடர்பு கொண்டால் அப்படிதான் அடிக்கடி நடக்கும் என்று சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் :)

வேறு நம்பரை தொடர்பு கொண்டு விசயத்தை சொன்னால் அவர் அப்படிங்களா, சரிங்க நீங்க பக்கத்துல இருக்க ஆபிஸ் போய் ஒரு எழுத்துபூர்வமான புகார் குடுங்க தொடர்பை துண்டித்து விடுவார்கள் என்றார். எல்லாம் என் நேரம் என்று நினைத்து அருகில் இருக்கும் ஆபிஸ் தேடினால் கிண்டில இருந்தது, அங்கு சென்றால் தீபாவளி அரசாங்க விடுமுறை நான்கு நாட்கள் என்று சொல்லி மூடி இருந்தனர், பின்னர் சென்னையை அலசியதில் அனைத்து அலுவலகமும் விடுமுறை, மறுபடியும் சேவைமையம் , இந்த முறை வேறு அதிகாரி மறுபடியும் முதலில் இருந்து விளக்கி என்ன பண்ண என்று கேட்டோம், திங்கட்கிழமை சென்று புகார் குடுங்க என்றார். அய்யா அதில் மீத தொகை 3200 ரூபாய் இருக்கு, மற்றும் எடுத்த நபர் அதை தவறான முறையில் உபயோகிக்கறார் அதனால் தான் சொல்கிறோம் என்று சொல்ல, அப்படிலாம் தொடர்பை துண்டிக்கும் வசதி இல்லை என்றார். என்ன மறுபடியும் ஷாக் ஆகிட்டேன் :)

ஏர்டெல் நம்பரை பல முறை இப்படி பண்ணின அனுபவம் எனக்கு இருந்தும் நம்ம பிஎஸ் என் எல் ல ஒன்னும் பண்ண முடியல. அடுத்து அவரிடம் "அய்யா அதுவரை அவர் தவறான முறையில் அதை உபயோகித்து அதற்கு பின்னால் எங்களுக்கு பிரச்சனை வந்தால் என்ன பண்ண" என்று கேட்டோம். அதற்க்கு நாங்கள் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி விட்டார். சரி நாங்கள் அழைத்ததுக்கு பதிவு என் குடுங்க, பின்னால் நாங்கள் புகார் குடுக்கும்போது இதையும் சொல்லி விடுகிறோம் எங்களுக்கு ஒரு பாதுகாப்பா இருக்கட்டும் என்றால் அதெல்லாம் முடியாது என்று தொடர்புதுண்டித்தது.

இதற்கிடையில் அலைபேசியில் சேமித்து வைத்த நம்பர்களில் பலருக்கு அழைப்பு போயிருந்தது , பலர் அலறி அடித்து எங்களை தொடர்புகொள்ள விஷயம் மிக சீரியஸ் ஆனது. மறுபடியும் சேவை மையம்,இந்த முறை வேறு நபர் எடுத்தார், விசயத்தை மறுபடியும் சொல்லி புரிய வைத்து உதவி கேட்க அவர் இங்க அந்த வசதி ஏதும் இல்லை, நீங்கள் எழுத்து பூர்வ புகார் குடுக்க வேண்டும் என்றார்,சரி நீங்கள் நாங்கள் அழைத்து சொன்னதற்கு ஆதாரமாக பதிவு எண்குடுங்க என்றால் அதற்கும் வழி இல்லை என்றார். பின்னர் அவரே ஒரு விஷயம் சொல்லி எங்களை ஓரளவிற்கு மகிழ்ச்சிபடுத்தினார். அது நீங்கள் பேசியது ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆகையால் பயப்பட வேண்டாம் ஏதும் பிரச்சனை ஆகும் பட்சத்தில் இது உதவும் என்று கூறினார்.

அடுத்து என்ன செய்ய என்று யோசித்து நண்பர் ஒருவரின் உறவினர் ஒருத்தர் காவல் அதிகாரி, அவரிடம் உதவி கேட்டோம். அவரும் எண் தந்தை நம்பர்க்கு அழைக்கவே அவரிடமும் ஏகதாளம் பேசி உள்ளான் அலைபேசியை வைத்திருந்தவன். பின்னர் அவரே ஒரு யோசனை சொன்னார், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் குடுத்து நகல் எடுத்து வைத்து கொள்ளுங்கள், திங்கள் கிழமை அலுவலகம் திறந்தவுடன் அவன் எங்குள்ளான் என்று கண்டு பிடித்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அதன் படியே செய்தோம்.

திங்கட் கிழமை, புகார் குடுத்து ஆளை தேடினால் அதற்க்கு நிறைய நேரம் ஆகும் என்று செய்தி... சரி மீதம் உள்ள தொகை எவ்வளவு என்று பார்த்தால் 1200 ரூபாய். அதாவது மிஞ்சட்டும் என்று தொடர்பை துண்டித்து வேறு சிம் வாங்கினோம். இதற்க்கு இடையில் பிஎஸ்என்எல் இணைய சேவை மூலம் புகார் குடுக்கலாம் என்று முயற்சித்து பார்த்தேன், அதை எழுதினால் இன்னும் ஒரு பதிவுவரும்.

இவர்கள் சேவை இப்படி இருக்க இவர்கள் நாங்கள் முதல் இடத்தில் இருந்தூம் இப்போ ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்படும் என்று புலம்புகிறார்கள் .

ஏங்க நான் கேட்கறேன், இந்த நான்கு நாட்களில் இதே அலைபேசி வேறு எதாவது தேசவிரோத, சமூகவிரோத கூட்டத்திடம் சிக்கி இருந்து அவர்கள் தவறான முறையில் பயன்படுத்தி இருந்தால் என்ன ஆவது??

அலைபேசி இணைப்பு குடுப்பதில் அக்கறை காட்டும் இவர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை பலப்படுத்தினால் நன்றாக இருக்கும். சமீபத்தில் வேறு ஒரு பிரச்சனைக்காக இணையத்தில் குடுத்த சேவை மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டால் LIC ஆபிஸ் என்று தொடர்பை துண்டித்தனர். ~!!! ஒண்ணுமே புரியல.

நண்பர்களே நீகள் பிஎஸ்என்எல் அலைபேசி வைத்திருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.