Tuesday, October 26, 2010

ஒரு நட்பு, ஒரு ஷாப்பிங், ஒரு டின்னர், ஒரு காதல் (?) பின்னர் ஒரு விபத்து

ஞாயிறு நல்லாத்தான் போச்சு சோம்பேரித்தனமா, மாலை தோழியிடம் தொலைபேசினேன்,  அவர் மற்றும் ஒரு நண்பர் வருவதால் அவருக்கு ஷாப்பிங் செய்ய போவதாக சொல்ல, நானும் சோம்பேறி என்ற அவப்பெயரை துடைக்க கிளம்பிபோவதாக முடிவு.

அவர்களுக்கு சொல்லாமல் நண்பன் பைக்கை எடுத்துக்கொண்டு சென்றேன். அடையாரில் உள்ள style one  என்ற கடைக்கு. ஏற்கனவே அங்கு சென்ற அனுபவம் இருப்பதால் நன் எதையும் வாங்கும் எண்ணத்துடன் போகவில்லை. நண்பன் மட்டும் ஷாப்பிங் செய்ய நான் சும்மா வேடிக்கை பார்த்தேன்.

எல்லாமே விலை அதிகம் மேலும் அங்கு தோழி வாடிக்கையாளர் சலுகை அட்டை வைத்திருந்தாலும் அதில் இரண்டு சதவிகிதம் மட்டுமே தள்ளுபடி, என்னிடம் உள்ள rex  வாடிக்கையாள அட்டையில் பத்து சதவிகிதம் தள்ளுபடி. மேலும் விலையும் இதைவிட குறைவு.  ஷாப்பிங் முடித்து கிளம்பும்போது பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த ஒரு பெண்மணி எங்களை கேவலமாக பார்த்தார். ஆமா நாங்க அடித்த கமெண்ட் ஏலத்தையும் கேட்ட அவர்  இதுங்கல்லாம் எங்க உருப்பட போகுது என்று நினைத்திருக்கலாம். அதும் குறிப்பாக ஒரு செர்வானி ஒன்றை பார்த்து அதன் விலையை கேட்டவுடன் நான் இதை வாங்கணும் என்றால் நல்ல வசதியான மாமனாரத்தான் தேடனும் என்று சொல்லியபோது அவர் பார்வை கேவலமாய் இருந்தது. ( அவர் என்னைத்தான் கேவலமாய் பார்த்தார் என சொலவும் வேண்டுமா? அவர்க்கு கண்டிப்பாய் ஒரு பெண் இருக்க வேண்டும்.)


கடையை விட்டு வெளியே வந்து KFC யில் கொஞ்சம் கொறித்துவிட்டு கிளம்பலாம் என்று சென்றோம். அங்கு ஒரு பையன் அஞ்சு பொண்ணுங்களுடன் சும்மா வறுத்துகிட்டு இருந்தான். பின்னர் தெரிந்தது அவன் பெயர் சதீசாம், மானாட மயிலாடல டான்ஸ் ஆடி இருக்கானாம். நடத்துப்பா நடத்து.

தோழியை விட்டுவிட்டு மத்திய கைலாசில் இருந்து டைடல் பார்க் வழியாக வேளச்சேரி செல்லலாம் என்று இடப்புறம் திரும்பினேன். சாலை காலியாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள், இரவு நேரம், மெல்லிய சில்லென்ற காத்து, அனுபவித்து வண்டியை விரட்ட. 


கொஞ்ச தூரத்தில் என்னை விட அதிகமா ரசிக்க வேண்டிய, ரசித்துக்கொண்டு இருந்த ஒரு ஜோடி பைக்கில் எனக்கு முன்னாடி. வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும், கண்டிப்பா ஒருநாள் நாமும் இப்படி செல்ல வேண்டும் என நினைத்துகொண்டு அவர்களை முந்தி செல்ல முயன்றேன்.

அவர்களை கடக்கும்போது அந்தப்பெண் திடிரென்று தனது ரசனை அதிகமாக, இரண்டு கையையும் விரித்து லேசாக எழுந்து நின்று ரசிக்க முயல, நான் அவர்களை முந்த முயல. அவரின் கை என் கழுத்தை பதம் பார்த்தது. அனிச்சையாக நான் வலப்புறம் உடம்பை நெளித்து வண்டியை திருப்ப, ஒரு வழியாக பாலன்ஸ் செய்து நிறுத்தும்போது பின்னால் வந்த காரைப்பற்றி நினைத்தேன். நினைத்துகொண்டு திரும்பி பார்த்தால், பின்னால் வந்த கார் பிரேக் போட்டு வழுக்கிக்கொண்டு எனக்கு பின்னல் வேகமாக வந்தது. உயிர் பயம் இரண்டாவதுமுறையாக வந்தது எனக்கு.(முதன்முறை வேறொரு இடத்தில் வேறொரு ரோபத்தில் அதை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்) இன்றுகதை முடிந்தது என நினைத்து கண்ணை மூடும் முன்னர் அந்த கார் வலப்புறம் திரும்பி நடுவில் இருந்த தடுப்பு சுவற்றில் முட்டியது.

என்ன செய்ய என நான் திகைத்து நிறைக்க, அந்த ஜோடியும் வண்டியை நிறுத்தி என்னை பார்க்க, கார் அப்படியே நிற்க. என் பின்னால் வந்தவர் அந்த ஜோடியை திட்டினார், நன் அவர்களை பார்த்து நிற்க சொல்லும் முன் அவர்கள் கிளம்பி விட்டனர். நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு காரை நெருங்கி பார்த்தேன். ஓட்டுனர் இருக்கையில் ஒருவர் திகைத்து பயந்து அமர்ந்திருந்தார். அவர்க்கு அடி இல்லை என உறுதி செய்துகொண்டு மெல்ல வண்டியை ஓரங்கட்டினோம். எனது நன்றியை அவர்க்கு தெரிவித்தேன். அவர் மட்டும் வண்டியை நிறுத்த வில்லை எனில் இன்று இந்தப்பதிவு இல்லை. அவர் வருத்ததுடன் என்னைப்பார்த்து "நல்ல வேலைங்க நான் பயந்துட்டேன் இனி வண்டிய வேகமா ஓட்ட மாட்டேன்" என கூறினார்.
 
காருக்கு சேதம் அதிகம், பம்பர், ஹெட் லைட், வலது புறம் கொஞ்சம் என அடி அதிகம். எனது தொலைபேசி எண்ணைக்கொடுத்து, எனது கார் இன்சூரன்சில் கிளைம் செய்துகொள்ள சொன்னேன் அவரிடம். அவர் மறுத்து விட்டார், ஏதும் உதவி வேண்டும் எனில் என்னை தொடர்பு கொள்வதாகவும், எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறிவிட்டார்.

அந்த பன்னாடை ஜோடி இளம்பி சென்று விட்டனர், அவள் மட்டும் நின்று இருந்தா அவ்வளவுதான், அம்மா உங்க காதலுக்கு எவன் சாவது? காதலுக்கு கண் இல்லை,  காதல் ஒரு உயிர்க்கொல்லி என இப்பொது தெரிந்தது. அசிங்க அசிங்கமாய் வருது,இதுக்கு மேல எழுதினா அப்புறம் அண்ணன் ஜாக்கி போல கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியதுதான் நமக்கும் வேலை வெட்டி இருக்குதுல்ல. (எப்படி பதிவுலக அரசியல கோர்த்துட்டோமல) 

பைக் வாங்கும் கனவில் இருந்தேன் இதற்குப்பிறகு பைக்கை எடுக்கவே கூடாது என முடிவு செய்துவிட்டேன். கடந்த இரு மாதத்தில் அலுவலக நண்பர்கள் இருவரை விபத்தில் ஏற்கனவே இழந்தாயிற்று, இன்னொரு எண்ணிக்கை கூட வேண்டியது எப்படியோ தப்பி விட்டது. எப்போதும் காரில் போவதால் அன்றைக்கு பைக்கில் போகலாம் என சென்றேன், இனி எவ்வளவு செலவானாலும் கார் மட்டுமே.

நண்பர்களே தயவு செய்து பைக்கில் செல்லும்போது மெதுவாக கவனமுடன் செல்லவும், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

Wednesday, October 20, 2010

முடிவு

பெங்களூர் அழைக்கிறது செல்லலாமா வேண்டாமா 

இன்னும் முடிவெடுக்க முடியவில்லை. பேருந்தில் சென்று பழக்கம் இருந்தாலும் பிடிக்கவில்லை 

காரில் செல்ல நிதி நிலைமை சரி இல்லை செல்லாமல் இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை.

என்னதான் செய்வது குழப்பத்தின் உச்சகட்டத்தில் எந்த முடிவும் உறுதியாக வராது என்பது முடிவேடுக்கத்தெரிந்த எவனும் சொல்வான்.

எந்த முடிவும் தீர யோசித்தாலும் திடீரென்று மட்டுமே எடுக்கப்படும் இதுவும்
பார்ப்போம் இரு நாட்களில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் 

வாரக்கடைசி திரைப்படங்கள்

.இந்த வார இறுதியில் நான் பார்த்த திரைப்படங்கள் இரண்டு அவை i, robot  மற்றும் Ta Ra Rum Pum 

இதில் i robot  பற்றி முதலில் எழுதலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் பின்னர் வேண்டாம் என்று நினைத்து விட்டுவிட்டேன் 

த ர ரம் பம் இந்திப்படம், இந்தப்படம் 2007 இல்  வெளிவந்தது  என்று நினைக்கிறேன், ஒரு நாள் மாயாஜாலில் படம் பார்த்துவிட்டு வெளிவரும்போது இந்தப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்ட தட்டி வைத்திருந்தனர். கார் ரேஸ் ஓடும் உடை, நாஸ் கார் எல்லாம் இருந்ததால் கண்டிப்பாக கார் ரேஸ் பற்றிய படம் என்று நினைத்தேன். கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், இந்தியாவில் இதுபோன்ற முழுக்க முழுக்க கார் ரேஸ் கார்கள் பற்றிய படம் எதுவும் வந்தது இல்லை 

ஆனால் சிறிதுகாலம் கழித்து படம் வெளிவந்தபோது வேலைப்பளு அதிகமான காரணத்தால் படத்தை பார்க்க முடியவில்லை, சில இணைய தளங்களில் வேறு படத்தைப்பற்றிய விமர்சனங்களும் அவ்வளவாக இல்லாததால் பார்க்காமல் விட்டுவிட்டேன் ஆனால் ஏனோ அந்த படத்தைப்பார்க்க வேண்டும் என தோன்றிக்கொண்டே  இருந்தது 

ஒரு வழியாக இன்று கலையில் பார்த்து முடித்தேன், கதைப்படி பெரியதாக ஒன்றும் இல்லை, வழக்கமான ஆங்கிலத்திரைப்படக்கதை தான். ஆனால் இந்திய நடிகர்கள் வசனம் இந்தியில் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்டது சுருக்கமா சொல்லணும் என்றால் முழுக்க முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்தியத்திரைப்படம்.

நாயகனின் மகள் கதை சொல்லுவது போல அமைக்கப்பட்ட கதை, அக ஆரம்பிக்கும்போதே நமக்கு முடிவு நல்ல பொசிடிவ் முடிவு என்று தெரிந்து விடுகிறது அதனால் ஒரு சந்தூசத்துடன் படம் பார்க்க முடிகிறது. நாயகன் அமெரிக்காவில் ஒரு கார் ரேஸ் டீமில் ரசுக்கு நடுவில் வண்டிக்கு டயர் மாற்றும் ஆளாக அறிமுகம் ஆகிறார்.  எதைப்பற்றியும் , நாளை ஏன்டா ஒரு பயமும் இல்லாமல் வாழும் ஒரு இளைஞர். ஒரு நாள் அவசரமாக ஒரு இடத்துக்கு போக வடகைக்கரில் ஏறுகிறார், அவர் என்றுமே அவசரமாக போக வேண்டும் என்றால் அதிக பணம் கொடுத்து வடகைக்கரை தானே ஓட்டி செல்வார். அன்று அது போல செல்லும்போது நாயகி பின்னர் ஏறிவிடுகிறார். அவ்வளவு வேகமாகவும் அதே போல விவேகமாகவும் கார் ஓட்டுபவனை பார்த்து வாடகைக்கார் ஓட்டுனர் ஆச்சரியப்படுகிறார். 

அதன் பின்னர் படம் ஆரம்பம் இடைவேளைகுல்லாக ஹீரோ பெரிய கார் ரேஸ் வீரனாக மாறிவிடுகிறார். 

இடைவேளையில் ஹீரோ ஒரு விபத்தில் சிக்கி அடிபட்டுவிடுகிறார், விபத்துக்கு காரணம் இன்னொரு போட்டியாளர். விபத்தில் இருந்து ஒரு வருடத்தில் மீண்டு வந்தாலும் அடுத்தடுத்த ரேசில் ஜெயிக்க முடியவில்லை. விபத்தின் பாதிப்பு அவரை மனதளவில் நெருக்குகிறது, இதனிடையில் அவரின் ரேஸ் டீம் அவரை வேளையில் இருந்து தூக்கிவிட்டு அந்த போட்டியாளரை நியமிக்கிறது. 

பலவித இடையூறுகளுக்கிடையில் பலவித வேலைகள் செய்தி தன காதல் மனைவியையும் குழந்தைகளையும் காப்பாற்றுகிறார், இதற்கிடையில் கஷ்டம் வந்தால் என்ன என்ன விசயங்களை விட்டுகொடுக்க தோன்றும் என்பது தெளிவாகத்தெரிய சில காட்சிகள்.

இறுதியில் ஒரு ரேசில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் அதுபோல ஜெயித்துவிடுகிறார். இது வழக்கம் போல  இந்திய மசாலாப்படம் போல இருந்தாலும் கண்டிப்பாக ஒரு படி மேல். ஆங்கிலப்படங்களுக்கு இணையாக எடுத்துள்ளனர் ஆனாலும் வழக்கமான இந்தியப்படத்தின் காதல் செண்டிமெண்ட் எல்லாம் கலந்ததனால் நல்ல ஒரு motivational  படம் கொஞ்சம் சிதைக்கப்பட்டுள்ளது.

பார்க்கலாம் இயக்குனரின் முயற்சிக்கு கண்டிப்பாக ஒரு சபாஸ். இது போன்ற முயற்சிகள் தமிழில் துவங்கவே இல்லை, ஒரு கார் ரேஸ் அல்லது இது போன்ற வித்தியாசமான முயற்சி எப்போது வருமோ. இது தக்க சமயம் என்று நினைக்கிறேன் ஆனால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும் என தெரியாததால் யாரும் முயலவில்லை.

இதை அஜித் தமிழில் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் பின்னர் கைவிடப்பட்டது, எடுத்திருந்தால் கண்டிப்பாக நன்றாக இருந்து இருக்கும்   

Saturday, October 16, 2010

எதுவும் சொல்லத்தேவை இல்லை

சிலருக்கு சொல்லாமலே புரியும்
சிலருக்கு சொன்னால் புரியும்
சிலருக்கு பார்த்தல் புரியும் 




எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல

எந்திரன் எந்திரன் எந்திரன்

ஊரெல்லாம் ஒரே பேச்சு, இந்தப்படம் அவ்ளோ செலவு பண்ணி எடுத்த படம் அது இது என சொன்னாங்க, அவ்ளோ செலவு செஞ்சவன் சும்மா இருப்பா?னா  செஞ்ச செலவ எப்படியும் கறக்க என்ன வேணா பண்ணுவான்.

எனக்கென்னமோ மனசுல ஒரு பயம் வருது, இப்பத்தான் i-Robot  படம் பார்த்தேன், எந்திரன் பார்கறதுக்கு இத பாக்கலாம், இதிலும் சில லாஜிக் மீறல் இருந்தாலும் படம் முடியும்போது நம்ம பயமுறுத்தாம விடல.

 ரோபோட் அதும் சிந்திக்கும் அறிவோட இருந்தா என்ன ஆகும்?  i-robot  படம் பாருங்க, கண்டிப்பா எனக்கு தெரிஞ்சு ஐஸ்வரியா பின்னாடி போகாது, ஆனா நம்ம ஊர் ரோபோட் போனாலும் ஆச்சரியம் படறதுக்கு இல்ல.

ஏன் ரோபோட் போகிறது? என்னிக்கு நம்ம எல்லாம் பொண்ண பார்த்து அவ பின்னாடி போகாம இருந்து இருக்கோம் ? அப்புறம் நம்ம கண்டு புடிச்சு இருக்க ரோபோட் மட்டும் போகாம இருக்கனுமா?


இப்படி பட்ட நூறு மனுஷன் அளவுக்கு திறமை இருக்க ரோபோட் கண்டிப்பா ஐஸ்வர்யாக்கு எத்தன வயசுன்னு கண்டு புடிக்காத?  ரத்தத்த பார்த்த உடனே அது என்ன குரூப் நு சொல்ற ரோபோட் அந்த அம்மா ஆன்ட்டி என்று கண்டுபிடிக்க எவ்ளோ நேரம் ஆகும், கருமம் இது கூட ஆண்டி பண்டாரமா இருக்கு? நம்ம தோனி கல்யாணம் செஞ்ச  பொண்ண தன்னோட பள்ளித்தோழி என்று சொன்னாரே அப்படியா? அவர்க்கு 28  வயசு அந்த பொண்ணுக்கு 21  ஆம் அப்படின்னா பண்ணண்டாவது படிக்கும்போது அஞ்சாங்கிளாஸ் படிச்ச சின்ன பொண்ண ரூட் விட்ருக்கான்.

அந்த மாதிரி இந்த ரோபோட்கூட அப்படித்தான் போல (டாபிக் விட்டு எங்கயோ போய்டேன்ல?) அத விடுங்க, ஆமா நம்ம ரோபோட் இப்படிப்பட்ட அறிவோட இருக்கும் போது ஏன் அந்த ஐஸ்வர்யா பொண்ண போய் தேடனும்? அத விட அழகா இளமையா இருக்க பொண்ண பார்த்து தேடலாம், சரி அத விடுங்க இதகேட்டா நம்மள எதாவது சொல்லி திட்டுவாங்க. காதல் தெய்வீகமானது எந்த வயசுலயும் வரும் அப்படி இப்படி சொல்வாங்க.

நானும் பார்க்கறேன் எந்திரன் பார்க்காதவன எதோ கொலை பண்ணிட்ட மாதிரி பார்க்கறாங்க? நமக்கு இப்ப திடிர்னு ஒரு பாலிசி தோணிச்சு, இத முப்பெரும் வீரர்கள் எடுக்கும் எந்த படத்தையும் திரை அரங்கில் சென்று பார்க்க கூடாது என்று. இத எப்படியோ தெரிஞ்சுகிட்ட எங்க ஊர் திரை அரங்கு உரிமையாளர்கள் என்கூட சேர்ந்துகிட்டாங்க   

அட ஆமாங்க எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல, நெசமாத்தான் சொல்றேங்க எங்க ஊர்ல எந்திரன் ரிலீஸ் ஆகல. எங்க ஊர் எங்க ஊர் ன்னு சொல்றியே எந்த ஊர்டான்னு கேட்கறது எனக்கும் கேட்க்குது. கரூர்ல தாங்க,  விநியோகிப்பாளர்க்கும் திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் சண்டை. ஆமா பின்ன இந்த படத்துக்கு ஒன்றரைக் கோடி  கேட்ட தேட்டர்காரங்க நோட்டடிச்சா கொண்டுவந்து கொடுக்க?   அதுவும் நாலு திரை அரங்கில் வெளியிடனுமாம். அப்படி வெளியிட்ட போட்ட பணத்த எடுக்கு கண்டிப்பா அதிக விலைக்கு டிக்கெட் விக்கணும் அப்படி வித்தா ஆள் வராது அப்படி வந்தாலும் இடைவேளைல ஏதும் வாங்க மாட்டாங்க.இப்படி பல பிரச்சன இதனால எங்க ஊர்ல படம் ரிலீஸ் அகல.

நம்ம கேபிள் அண்ணன் இத விசாரிச்சு ஊருக்கு உண்மை என்னனு வெளியிட்ட நல்லார்க்கும். எனக்கு காத்துவாக்குல வந்த சேதி சொல்லிட்டேன் உண்மை என்னான்னு அண்ணன் சொன்னா சரிதான்.

அமெரிகால ரிலேசு ஆப்ரிக்கால ரிலீசு ஆனா நம்ம ஊர்ல இல்லியா??? அப்ப பணம் ரொம்ப இருக்கவன் மட்டும் படம் பார்த்தா போதுமா?

இன்னொரு விஷயம் பல பதிவுல பார்த்துட்டேன் நிறையப்பேர் சுஜாதாவோட கதைய சங்கர் சூப்பரா எடுத்துருக்கார், கதை சுஜாதா அப்படினு எழுதி இருந்தாங்க ஆமா எனக்கு ஒரு டவுட் படத்துலயும் கதை சங்கர்னு போட்ருந்தாங்க சுஜாதவ மறந்துட்டாங்க அது நம்ம ஊர் மனித இயல்பு ஆனா கதை சங்கர் தானா, பாத்து வருசமா உருவாகின கதை டிரீம் பிராஜக்ட் அப்படின்னு எல்லாம் சொல்லிருந்தாரே அப்ப விமர்சனம் எழுதிய பதிவர்கள் எல்லோரும் உண்மையே தெரியாம எழுதிடாங்களா?  இல்ல உண்மைய மறைச்சு எழுதிட்டாங்களா? எனக்கு தெரியல ஆனா இப்படி எழுதிய பதிவர்கள் விமர்சனம் எந்த அளவுக்கு தரமானதா இருக்கும் ?? 

இந்த கதை சுஜாதாவோட கதையா இருந்தா கண்டிப்பா கத இப்படி இருந்து இருக்காது, பத்து வருஷம் முன்னாடியே இப்ப இருக்க  எந்திரன் கத மாதிரி எழுதினவரு அதாங்க ஜினோ, பாத்து வருஷம் கழிச்சு இந்த காலத்துல எப்படி எழுதி இருப்பார், தயவு செஞ்சு கதை சுஜாதாவோடது என்று சொல்லி அவர கேவலப்படுத்தாதீங்க. 

எனக்கொரு டவுட்டு ஆமா எந்திரன் அந்த தீப்புடிச்ச கட்டடத்துக்குள்ள  ஓடும்போது அதன் தோல் எல்லாம் எரிஞ்சு எலும்புக்கூட போயிரும் அந்த மெட்டல்  heat resistant  மெட்டல் அப்படின்னா அது  தூக்கிட்டு  ஓடும்போது மனுசங்க மட்டும் எரிய மாட்டாங்கள? இல்ல மெட்டல் மண்டையன் தோள்ல தூக்கிபோட்டு ஓடும்போது அந்த மெட்டல் மண்டையன் சுட மாட்டானா? ஏன் என்றால் இரும்பு தீக்குள்ள போட்டா  ஒரு அளவுக்கு வரை ஹீட் தாங்கும் அப்புறம் உருகிடும் அது உருகும் முன்னாடி அத தொட்ட கை பழுத்துடும், அது போல இருந்த அது தோள்ல தூக்கி பொத்துக்கொண்டு வரும்போதே மனுசங்க சாவ மாட்டாங்களா? எனக்கு அறிவியல் அறிவு கொஞ்சம் கம்மி அதான் கேட்கறேன், 

இன்னும் நிறைய கேள்விங்க ஆனா   படத்த பார்த்தா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது , நம்ம ஆள் உலகத்தரத்துல ஒரு படம் எடுத்திருக்கார் அவர பாராட்டாம பொறாமைல பேசாத என்று சொல்லலி விடுவார்கள்.

உண்மைலேயே ரோபோட் எல்லாம் இந்த அறிவோடயும் நூருபெர்க்கான பலம் கொண்டதாகவும் இருந்திருந்த அது கண்டிப்பா ஐஸ்வர்யா பின்னாடி போயிருக்காது இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்க முயற்சி செஞ்சு இருக்கும்.

விடுங்க எல்லாம் ஒரு காமெடி தான், I-ROBOT  பார்த்துட்டு இத பார்த்தா ஒண்ணு சிரிப்பாவும் அதே நேரம் எரிச்சலாவும் வருது.

எங்க ஊர்ல எதிரான் ரிலீஸ் ஆகல




Friday, October 8, 2010

வீடியோ கேம்

கடந்த 5  நாட்களாக கண்ணில் வலி வந்தமையால் எதையும் பார்க்க முடியாமல் இருந்தேன், ஓரளவுக்கு சரியான உடனே கணினிப்பக்கம் வந்தாச்சு (எங்க போய் முடியுமோ) 

வீடியோ கேம்:

கண்டிப்பா இந்த வார்த்தைகள் எல்லோருடைய வாழ்விலும் என்றாவது எட்டிப்பார்திருக்கும், நம்மில் பலருக்கு ரொம்ப பிடித்தவையாகவும் சிலருக்கு ஒரு காலத்தில் பிடித்தவையாகவும் மேலும் சிலருக்கு ஒரு காலத்தில் ஏக்கம் கொடுத்தவையாகவும் இருந்து இருக்கும்.


எனக்கு வீடியோ கேம் அறிமுகம் ஆனது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்கையில் வெளியே கடை போட்டிருக்கும் ஒருவர் அப்போது வீடியோ கேம் வாங்கி வாடகைக்கு விட்டுக்கொண்டு இருந்தார். அப்போதே அதன்மேல் ஆர்வம் ஆனால் அதை வாடகைக்கு எடுத்து வந்து வீட்டில் வைத்து விளையாடுவது என்பது முடியாது காலம் அது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்லலாம் என முடிவெடுத்து நண்பன் ஒருவனுடன் ஒரு இடத்தில சேர்ந்தேன்.  அப்போது நமக்கு கம்ப்யூட்டர் மேல் ஒரு விதமான காதல், மேலும் கம்ப்யூட்டர் என்றால் கண்டிப்பாக கேம்ஸ் இருக்கும். வகுப்பு சேர்ந்து முதலில் basic programming  சொல்லிக்கொடுத்தார்கள். அப்போது ஞாயிற்று கிழமைகளில் சென்டர் காலியாய் இருக்கும் மதியத்துக்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள். சேர்ந்த உடன் அங்கு சொல்லிக்கொடுக்கும் இருவரை நட்பு பிடித்தாயிற்று, அவர்களுக்கு பிடித்தவனாகி இரண்டாவது வாரமே கேம்ஸ் போட்டுக்கொடுக்க சொல்லியாயிற்று.

நான் முதன் முதலில் விளையாடிய கேம் Dave.  அந்த குள்ள மனிதனை பலவித தடைகளைத்தாண்டி இறுதிப்பக்கம் எடுத்து செல்ல வேண்டும். எனக்கு தெரிந்து நம்மில் பலர் முதன்முதலில் விளையாடிய கேம் இதுவாகத்தான் இருக்கும். அதுவும் அதில் இருக்கும் பல குறுக்கு வழிகளைகண்டு பிடித்து செல்வது மிகவும் ஆச்சரியமாய் இருக்கும். அப்போதெலாம் கம்ப்யூட்டர் மானிட்டர் எல்லாம் கருப்பு வெள்ளை மட்டுமே அந்த சென்டரில் ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே கலர் மானிட்டர் கொண்டது அதில் விளையாட பசங்க சண்டைபோட்டுக்கொண்டு இருப்பாங்க.

இந்த dangerous dave  போரடிக்க ஆரம்பிச்சப்ப மற்றொரு  கேம் அறிமுகம் ஆச்சு அதான் "பிரின்ஸ் ஒப் பெர்சியா"  எனக்கு அது அறிமுகம் ஆனது 1998 ஆம் ஆண்டு அன்றில் இருந்து இன்று வரை சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு புடிக்கவில்லை இந்த கேம். இருந்தும் foxpro வில் cheat code  போட்டு அடுத்த லெவல் போவது எல்லாம்  அப்போதே கண்டுபிடித்தாயிற்று.

அடுத்த் அறிமுகம் ஆனது "hocus pogus"   என்ற கேம், நான் முதன் முதலில் கலர் மானிட்டரில் விளையாடிய கேம், அதனாலேயோ என்னவோ மிகவும் பிடித்து போய்விட்டது. அந்த மூன்று மாதங்கள் நான் படித்த basic programming, Forpro, Dos  விட இந்த கம்ப்யூட்டர் கேம் தான் நன்றாக நினைவில் உள்ளது.

அதன் பிறகு டிவியில் இணைத்து விளையாடும் வீடியோ கேம், ஒரு வழிய காசு சேர்த்து அத வாடகைக்கு எடுத்து நண்பன் வீட்டில் டிவியில் இணைத்து விளையாடினோம். அப்போது "contra"   கேம் பிரபலம், அதில் இரண்டுபேர் விளையாடலாம் ஆனால் ஒருவர் வேகமாய் விளையாண்டாலும் மற்றவர் காலி அதனால்  சொல்லி வைத்துகொண்டு விளையாட வேண்டும். பலவித லெவல் எல்லாம் உண்டு இந்த கேமை இரண்டாவது வாடகையில் முடித்துவிட்டோம் 

மரியோ கேம் அடுத்து, குதித்து குதித்து விளையாடும் அந்த கேம் எல்லோருக்கும் பிடிக்கையில் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை ஆனாலும் அதையும் முடித்துவிட்டேன். அதை அடுத்து பல கேம் விளையாண்டோம், கார் ரேஸ் உட்பட. இருந்தாலும் கிராபிக்ஸ் எல்லாம் கொஞ்சம் மொக்கையாய் இருந்ததால் கொஞ்ச காலத்திலேயே அதன் மேல் இருந்த விருப்பம் குறைய துவங்கியது. இந்த காலத்தில் எங்கள் ஊரில் அறிமுகமாகி இருந்த வீடியோ கேம் கடையில் குடி இருந்தேன். "titanic Video Games"  என்ற கடை, பெயர் பலகை வைக்கும் காலத்துக்கு முன்பிருந்தே அங்கு சென்று விளையாடியதால் மிகப்பழக்கம், அந்த பழக்கமே    பின்னாளில் பல நாட்களில் கடையை திறந்து நடத்தி காசு வங்கி வைக்கும் அளவுக்கு வளர்ந்து, அதே கடை கால ஓட்டத்தில் வீடியோ லைப்ரரி அக உருவெடுத்து அதிலும் காலை முதல் இரவு வரை பழியாய் கிடந்தது எல்லாம் இன்னமும் மலரும் நினைவுகள். அங்கு கிடைத்த நண்பன் ஹரி பின்னாளில் அந்த நடப்பு  எங்களுக்குள் மிகப்பெரிய நட்பாக உருவான பொது பெருமிதம் அடைந்தேன். 

 Turtles  கேம் விளையாடும்போது இன்று வரை அவனை என்னால் ஜெயிக்க முடியவில்லை, எனக்கு பிடித்த Leo  எடுத்து நன் விளையாண்டால் அவன் எந்த ஆளை வைத்தும் ஜெயித்துவிடுவான். வீடியோ கேமில் ஆரம்பித்து வீடியோ கடை வரை வளர்ந்தது எங்கள் நட்பு.

பின்னர் இன்டர்நெட் அறிமுகம் ஆனது (1999-2000)   கரூரில் இன்னும் இருக்கும் galaxy  இன்டர்நெட் சென்டர் தான் அப்போது எங்களுக்கு அடுத்த புகலிடம். சாட், இன்டர்நெட், யாஹூ மெயில், MIRC chat, Desibaba  என்று இன்னும் பல அறிமுகம் ஆகியது, அப்போது அங்கும் நட்பு வட்டம் பெருக நாளடைவில் காலையில் கடை தொறந்து இரவில் மூடும் வரை உடன் இருக்க ஆரம்பித்தேன். நெட் கனக்ட் பண்ணுவது, மோடம் இன்ஸ்டால் பண்ணுவது சின்ன சின்ன trouble shoot  என்று கத்துகொண்டது அங்குதான். அந்த சென்டரில் வேலை பார்த்த பையன்( பெயர் மறந்துவிட்டது, பின்னாளில் மஞ்சள் கமலையில் இறந்துவிட்டான், பக்கத்துக்கு கடை அக்கா, தையல் கடை சேகர், கம்ப்யூட்டர் வேர்ல்ட் கடை அண்ணன் எல்லோரும் இன்னும் மனதில் இருக்கிறார்கள்)

இப்படி போகும்போது எதேட்சையாக ஒரு சிஸ்டத்தில் கமாண்டோ என்று ஒரு கேம் கண்டுபுடிதேன். யாரோ இன்ஸ்டால் செய்துவிட்டு போயிருக்க  நான் விளையாட ஆரம்பித்தேன். எதோ ஒரு லெவெலில் இருந்து ஆரம்பிக்கும், ஒரு ரயில்வே ஸ்டேசனில் தீவிரவாதிகளை சுட்டு புடிக்க வேண்டும். அப்போது தான் கம்ப்யூட்டர் கேம் மற்றும் அதன் கிராபிக்ஸ் பிடிக்க ஆரம்பித்தது. பின்னர் F1 ரேஸ், MOTO GP  ரேஸ் என்று களை  கட்டியது கொஞ்ச நாள்.  அதுவும் கொஞ்ச நாள் தான். ஆனால் கம்ப்யூட்டர், இன்டர்நெட், கேம் எல்லாம் நன்றாக கற்றுக்கொண்ட நேரம் அது. (Mirc சாட்டில் நட்பான அந்த ஜப்பான் பொண்ணும் அது அனுப்பிய பின்னால் பனி படர்ந்த போட்டோவும்   இன்னும் மறக்க முடியாதது).


கல்லூரி ஆரம்பித்தது, முதலில் மொக்கையாய் போனது இரண்டு மாதங்களில் சீனியர் பழக்கத்தில் மறுபடியும் கம்ப்யூட்டர் அறிமுகம் மற்றும் கேம். நண்பன் கணேஷ் வாங்கிய சிஸ்டத்தில் நானும் பழனிசாமியும் தூங்காமல்  இரண்டு நாட்கள் விளையாண்ட Project IGI  கேம் மற்றும் NFS2 என சுருக்கமா கூறப்படும் need for speed 2  கேம் மறக்க முடியாதது, இன்றும் need for speed pro street, hot persuit, under cover  என பல முன்னேற்றம் வந்தாலும் என்னால் மறக்க முடிய கேம் NFS2.  அதிலும் அதில் வரும் மகளாரன் கார். நானும் நண்பன் சிவராம கிருஸ்ணனும் அதில் பெரிய ஆட்கள். பின்னாளில் நான் கம்ப்யூட்டர் வாங்கிய பின்னர் என் சிஸ்டத்தில் கேம் மற்றும் படம் மட்டுமே இருக்கும்.     கேமுக்காக autocad ஐ கணினியில் இருந்து அழித்தவன் நான் 

கல்லூரி முடித்த நாட்களில் பிளே ஸ்டேஷன் 2 அறிமுகம் அதில் அதிகம் விளையாண்டது இல்லை ஆனால் நண்பன் ஹரி ஆரம்பித்த கேம் கடையில் கொஞ்சம் விளையாண்டு மறுபடியும் கேம் ஆட ஆரம்பித்தவன், எல்லோரும் வீடியோ கேம் விளையாண்ட சின்ன பையன் என்று சொல்கிறார்கள் ஆனால் எனக்கு நன் சின்ன பையனாகவே இருக்க விரும்புகிறேன், வயசு ஆனாலும் எனக்கு வீடியோ கேம் மேல் உள்ள பிடிப்பு குறைய வில்லை.

நான் லேப்டாப் வாங்கும்போது கிராபிக் கார்டு இருக்கும் மடிக்கணிணியை  வாங்கினேன் காரணம் அப்போதுதான் கேம் விளையாட முடியும் இப்படி ஆரம்பித்த கேம் பைத்தியம் பிளே ஸ்டேஷன் 3 யில் வந்து  நிற்கிறது. நமது பதிவுலக நண்பர்களில் எதனை பேர் என்னைப்போல் வீடியோ கேம் பிரியர்கள் என தெரியவில்லை