Saturday, January 30, 2010

இன்றும் ஒரு பதிவு

சனிக்கிழமை வந்து ஆபிசில் ஆணி புடுங்கலாம் என்றால் நம்ம நேரம் எதுவுமே வேலை செய்ய மாட்டேன்குது. வந்தது தான் வந்துட்டோம் ஒரு பதிவு போட்டு போய்டலாம் என்று இந்த பதிவை எழுதுகிறேன்.


ஆபிசில் யாருமே இல்லை, தனியா உட்கார்ந்து இருக்க கொஞ்சம் பயமாய் இருக்கிறது, நண்பர்கள் போய்வந்த கோவா மற்றும் தமிழ் படம்பற்றிய விமர்சனங்கள் பலர் எழுதிவிடுவதால் நான் அதை ஒதுக்கிவிடுகிறேன்.


வார இறுதி எப்ப வரும் என இருக்கிறது வந்தால் உடனே முடிந்து விடுகிறது, என்னைய நியாயம் இது, அஞ்சு நாள் வேலை செஞ்ச ரெண்டு நாள் தான் லீவு தராங்க, இத கேட்க மட்டேன்கரான்கப்பா


இப்பலாம் சினிமாக்கு போகவே புடிக்கல, போன எல்லாம் ஜோடி ஜோடிய வராங்க நமக்கு உள்ள ஒருத்தன் கேட்கறான் ஏண்டா நீ இப்படி தனிய வந்து வயிறு எரிச்சல் பட்டு போற என்று. இனி எங்க நம்ம போய் பொண்ணு பார்த்து தேடி காதலிச்சு, எல்லாம் வேலைக்கு ஆகாது, வீட்ல பாக்கற பொண்ண கட்டிக்கிட்டு ஜோடிய வர வேண்டியதான். நிச்சியம் பாணின ஒரு ஆறு மாசம் இடைவெளி கொடுத்தாங்கன நாமளும் லவ் பண்லாம்.


வேளச்சேரி பக்கம் வந்தா புதுசா ஆரம்பிச்சு இருக்க ஹோட்சிப்ஸ் கடைதான் எல்லோருக்கும் தெரியும் போல, எப்ப பர்தாளும்கூடமவே இருக்கு, வேளச்சேரில எந்த கடை ஆரம்பித்தாலும் கூடமைடுது, பசங்க எத பத்தியும்கவலபடாம ஜோடிய வந்து சாப்பிடறாங்க. குடுபத்தோட கூட வராங்க. ஏங்க நான் கேட்கறேன் நீங்க யாருமே வீட்ல சமைக்க மாட்டீங்களா ?, எப்ப பார்த்தாலும் ஹோட்டல்க்கு போன கூட்டம் வெயிட் பண்ணி சாப்பிடவேண்டி இருக்கு, எங்கள மாதிரி பாச்சலர்ஸ் எங்க போறது??


நண்பர்கள் எனக்கு அறிவுரை வேற சொல்றாங்க நீ கார்க்கு நிறைய செலவு பண்ற என்று, அவங்க தன காதலிக்கு செலவு பண்றதும், குடிக்கு செலவு பண்றதும் விட நன் குறைவாதான் பண்றேன், இத ஏலம் சொல்ல முடியல, சில மதங்களுகுமுன்னடி எதுக்கோ பார்ட்டி என அயிந்து பேர் சென்று ரூபாய் 6000க்கு குடித்துவிட்டு வந்தனர், ஆனால் நான் 2000 செலவு செஞ்சு ஊருக்கு போனால் எனக்கு அட்வைஸ். நன் என் காரை காதலிக்கறேன் அதற்கு செலவு பண்றேன் அட்லீஸ்ட் அதாவது நான் சொல்றத கேட்குதே :)


நண்பர் பிரேம்குமார் பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகுது ஏன்னு தெர்ல, யாரது சொல்லி எழுதவச்ச நல்லா இருக்கும்.


விட்டு போன தொடர்களை எல்லாம் மறுபடியும் எழுதலாம் எனநினைக்கிறேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் மறுபடியும்

Thursday, January 28, 2010

திருமணத்தில் முடிந்த பயணக்கட்டுரை- எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது ??


புது வருடம் முடிந்தது பொங்கலும் முடிந்தது ஆயிரத்தில் ஒருவன் படமும் முடிந்தது ஆனால்  இந்த வருடத்தின் முதல் அதிவே ஒரு வரி பதிவாக போய்விட்டபடியால் இன்று நிறைய எழுதலாம் என்று இருக்கிறேன்.

நேற்று இரவு கிளம்பி காலை கரூர் வந்து சேர்ந்தேன் ஏற்கனவே முடிவு செய்தபடி காரில் தான் வந்தேன், வரும்போது நண்பனை அழைத்து வந்தேன். சென்னையில் இருந்து வேலூர்  கிரிஷ்ணகிரி தொப்பூர், மேட்டூர் வழியாக ஈரோடு  வந்து  நண்பனை விட்டுவிட்டு கரூர் வந்தேன். எதிர்பார்த்ததை போல இல்லாமல் நெடுஞ்சாலையில் அதிக வாகனங்கள் . ஸ்ரீபெரும்புதூர் தாண்டி  வருவதற்கே 3 மணிநேரம் ஆகிவிட்டது. முன்தினம் சரியாக தூங்கததாலும் அலுவலக வேலையாலும் கொஞ்சம் கவனமாக ஓட்ட வேண்டி இருந்தது.



இரவு நெடுந்தூரம் வண்டி ஓட்ட எப்போதும் ஆசை தான் இந்த தடவை நண்பனுடன் இன்னொருவர் வந்தார் மூன்று பேராக இருந்தாலும் அவர்கள் இருவரும் தூங்கி விட்டனர். வழக்கம் போல ஒரு சில லாரி ஓட்டுனர்கள் கண்டபடி ஓட்டினர் , வேகமாக வரும் வாகனங்களுக்கு வழி  விடவில்லை.



காலையில்  6 மணிக்கு  ஈரோட்டில் இருந்து கரூர் வந்தேன், பணிமூட்டதுக்கு  இடையில் வயல்வெளி, சிவப்பாக மேலெழும் சூரியன். இவை எல்லாம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு? இந்த இயற்கை எல்லாம் எவ்வளவு நாளைக்கோ??


இப்பவே எல்லா இடத்தையும் மனை போட்டு விற்றுக்கொண்டு இருகிறார்கள்.


நாளை நாமக்கல் பக்கம் உள்ள புன்னி மரத்து சாமி கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொல்லியுள்ளனர்.  


வேண்டினது எல்லாம் நடக்குமாம், போயிட்டு வேண்டுதல் எல்லாம் முடிச்சுட்டு வந்துருக்கேன் வந்த அடுத்த நாளே நம்ம வேண்டினது நடக்கறதுக்கு ரொம்ப தூரம் என்று புரிஞ்சு போச்சு. நமக்கு மட்டும் ஏன் எந்த சாமியும் துணை நிக்க மாட்டேன்குது (ஆமா பின்ன எப்பவும் நம்பிக்கை இல்லாம வேண்டும்போது மட்டும் வந்து உன்ன யார் கண்டுப்பா என்று  மனசு சொல்லுது )

ரொம்ப நாலா யோசித்து நாமளும் இனி குதிசுடலாம் என முடிவு பண்ணிட்டேன் வீட்லயும் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தாங்க, நானும் கல்யாணத்துக்கு சரி என்று சொலிட்டு கனவு காண ஆரம்பிச்ச அடுத்த நாளே நம்ம விதி ஜோசியக்காரன் ரூபத்துல விளையாடுது.




போனமாசம் பார்த்த இடத்துல ஒரு ஜோசியர் பையனுக்கு தை மாசத்துல இருந்து பொண்ணு பாருங்க என சொல்லி ஒரு அமௌண்ட வாங்கிட்டு . அனுப்பி இருக்கிறார் , போன வார இறுதில இன்னொருத்தன் பையனுக்கு அது இருக்கு இது இருக்குனு சொல்லி மே மாசம் பாருங்க அது வரை வேணாம்  சொலிட்டு இவனும் ஒரு அமௌண்ட புடுங்கிட்டு அம்மாவ அனுப்பி அனுப்பி இருக்கான். இவங்க குழப்பராங்கனு இன்னொருத்தன் கிட்ட போய் இந்த வாரம் கேக்கிறேன் என சொல்றாங்க. என் கல்யாணத்த  எவனோ முடிவு பண்றாங்க பாருங்க.

 ஆனா வஞ்சன  இல்லாம பேருமே பெரிய லிஸ்ட குடுத்து பையனுக்கு இது பண்ணுங்க அந்த கோவில்ல அத பண்ணுங்க என சொல்லி அனுப்பி உள்ளனர். என்னங்கடா நெனசுகிற்றுகீங்க? ?


ஊருக்கு போன காரியம் ஓரளவுக்கு முடிஞ்சுது, இபோதைக்கு சொந்தம் சுற்றம் நண்பர்கள் என தெரிந்த வட்டார தகவல் மூலம் தேடலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நான் சரி சொல்லவில்லை என்றாலும் அவங்க தேடப்போவது உறுதி என நம்பக்கூடிய வட்டாரத்துல தகவல் வந்ததால் சரி சொல்லி என் மரியாதையை நானே காப்பாற்றிக்கொண்டேன்.

திரும்பி வரும்போது கொஞ்சம் வேகமாகவே வந்தேன், சாலை காலியாக இருந்தது, நானும் நண்பன் மட்டுமே. வழக்கம் போல கிரிஷ்ணகிரி தாண்டினவுடன் இரண்டு கார்கள் துணைக்கு வந்தன, வேகமான பயணம், உடன் வந்த wagon -R கார் ஓட்டுனர் கண்டபடி ஊட்டினார் , 120 கி மீ வேகத்தில் தான் வந்தார்,இடப்புறம் முந்துவது, ஆபத்தான வளைவுகளில் வேகமாக முந்துவது என என்னை பயமுறுத்தினார், நீண்ட சாலைகளில் நான் அவரை முந்தினால் உடனே அவரது ஈகோ அவரை விடவில்லை போல, உடனே வேகத்தை கூட்டி எங்கு குறைக்க வேண்டுமோ அங்கே குறைக்காமல், ஆபத்தான நேரத்தில் என்னை முந்தினார்.

 அவருடன் போட்டி போட விருப்பம் இல்லாததால் சிறிது நேரத்தில் முன்னே சென்று விட்டேன். மறுபடியும் பின்னால் வந்து தன வேலையை காட்டினார். எங்கு வளைந்து நெளிந்து செல்லும் சாலை வருமென காத்திருந்து இரண்டு காரையும் முந்தி சென்றேன், ஒரு வளைவில் வலது ஓரத்தில் இருந்த lane இல் சென்ற அவர் இடது ஓரத்துக்கு சென்று விட்டார் control இல்லாமல். அந்த வளைவில் எளிதாக நான் முன்னே சென்றுவிட, ஒரு உணவகத்தில் சாப்பிட நிற்கும்போது வந்து நிறுத்தினார். என்னை பார்த்து ஒரு முறைப்பு வேற, இதுக்கு நான் சிரிக்காமலே இருந்து இருக்கலாம்.


எப்படியோ இந்த ஆரோக்கியமான போட்டி எளிதாக எங்களை சென்னை கொண்டு வந்து சேர்த்தது, ஆனால் அவர் உடன் நண்பர்கள் வந்து இருந்தனர், என் கணிப்புப்படி போதையில் இருந்து இருக்கலாம் இல்லை என்றால் புதிதாக கார் வாங்கி புதிதாக நெடுஞ்சாலையில் ஊட்டி இருக்கலாம், அனுபவம் இன்னும் தேவை அவர்க்கு. மற்றொரு கார் honda city நன்றாக ஓட்டினார். தேவைப்படும் இடத்தில எனக்கு வழி விட்டு தேவையான இடத்தில அவர் முன்னே சென்று கண்டிப்பாக நெடுஞ்சாலையில் அதிக அனுபவமிருக்க வேண்டும்.

இந்த பயணத்துடன் எனது நெடுஞ்சாலை அனுபவம் 20000 கிமீ ஆனது. அதைக்கொண்டாட வேண்டும். இந்த 20000 கிமீ தூரத்தில் நான் கற்றுகொண்டது நிறைய, முக்கியமாக பொறுமையை, தேவையான நிதானத்தை, அடுத்த வாகன ஓட்டி என்ன செஈயலாம் என கணிக்கும் வித்தையை. நெடுஞ்சாலை வாகனம் ஓடுவது என்பது அவ்வளவு எளிதல்ல, சிறிது கவனம் பிசகினாலும் ஆபதுநிச்சயம் ஆனால் நகரத்தை போல இடையில் வந்து சொருகும் இரு சக்கர வாகனங்கள், எரிச்சலை தூண்டும் வாகன ஓட்டிகள் அதிகமில்லாமல் இருக்கும் . நான் பெரும்பாலும் இரவில் பயணிப்பதால் இரு சக்கர வாகன தொல்லை இருக்காது. குறுகிய தூரம் ஓடும் லாரி ஓட்டுனர்கள் தான்னேடுஞ்சாலையில் ஆபத்தை விளைவிப்பவர்கள், பொதுவான விதிகளை கடைபிடிக்க மாட்டார்கள், வேகமாக வரும் வாகனங்கள் அவர்களை முந்த முற்படும்போது அவர்கள் முன்னே செல்லும் லாரியை முந்த முயற்சிப்பார்கள்.பத்து நிமிடம் அவர்கள் நேரம் எடுத்து முந்தி பின்னர் நாம் வழி பார்த்து அவர்களை முந்த வேண்டும். பலமுறை அவர்களை திட்டி சென்றுள்ளேன், ஆனால் நெடுந்தூரம் செல்லும் ஓட்டுனர்கள் இவ்வாறு செய்வது இல்லை. எதிலும் விதிவிலக்கு உண்டு அதை ஒத்துக்கொள்ள வேண்டும் .



சென்னை வந்து அலுவலகம் சேர்ந்து வழக்கமான வேலைகளை செய்ய துவங்கியாயிற்று. பயணத்தில் எடுத்த புகைப்படங்களை பிறகு இணைக்கிறேன்.
 
பின்குறிப்பு: ஈரோடு பதிவர்களை சந்திக்கலாம் என நினைத்து அவர்கள் தொலைபேசி எங்களை குறித்து வைத்திருந்தேன் ஆனால் முடியவில்லை. நான் இதுவரை பதிவர்கள் யாரையும் சந்தித்தது இல்லை. நண்பர் தராசு அவர்களை தவிர, பார்ப்போம் எப்போது சந்தர்ப்பம் அமைகிறது என்று.
 
கரூரில் இருந்து அருட்பெருங்கோவை தவிர யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா? நண்பன் அருட்பெருங்கோ கல்யாணம் பண்ணுகிறான் வாழ்த்துக்கள்.


அப்பா தலைப்புக்கு சம்பந்தமா ஒரு விசயத்த எழுதியாச்சு :)

Wednesday, January 20, 2010

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் என்னை ஆனால் ஏதும் பாதிக்காமல் போகுமா?