Friday, June 26, 2009

நடுநிசி நியாபகங்கள்

நீ சொல்லும்போது காயப்பட்டது என் நெஞ்சம் மட்டும் அல்ல நம் காதலும் தான்,

இறப்புக்கு பின் வலி என்பது காதலில் மட்டுமே சாத்தியம் என்பதை அனுபவித்தேன்
அனுபவம் என்பது வழியில் ஆரம்பித்து வலியில் முடியுமோ?

Wednesday, June 24, 2009

இது ஒரு காதல் கதை, அப்படியும் வச்சுக்கலாம் நீங்க நெனைக்கற மாதிரியும் வச்சுக்கலாம்-5

பகுதி-4

காலையில் எழும்போதே பரபரப்பாக இருந்தது எனத் வேலையுமில்லை அனால் ஆறு மணிக்கே எழுந்து விட்டான். திடிரென்று கிளம்பினான் நேராக நண்பர்களது வீடிற்கு சென்றான், அங்கு அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தனர், இவங்களை எழுப்பி கிளம்பவைக்க நேரமாகும் என்பதால் நேராக வண்டியை ECR திருப்பினான், முட்டுக்காடு வரை சென்று திரும்பினான், வீடிற்கு வந்து பார்க்கையில் செல போனில் மூன்று missed calls. எதற்கோ சைலன்டில் வைத்தவன் மாற்ற மறந்து விட்டிருந்தான்.

அழைத்து பேசலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு உரிமையில் அழைத்தான்.. இரண்டாவது முறை அழைத்தபோது எடுக்கப்பட்டது. எங்க இருகிறாய் என்ற கேள்விக்கு வீட்டில் தான் என்று பதில் வந்தது,தூங்கிற்றுந்தியா என்றாள், இல்லை ஒரு வேலையை வெளியே சென்று இப்போதுதான் வந்தேன், சைலன்டில் வைத்ததால் உன் call பார்க்கல என்றான்.
சரி பரவாயில்லை எனக்கு ஒரு பூட்டு வாங்கணும் எங்கே வாங்கறதுன்னு தெரியலை அதான் உங்கிட்ட கேட்டா தெரியும் என்று கால் பண்ணினேன் என்றால். பின்னர் ஆனா நானே என்னோட பழைய பூட்ட கண்டுபிடிச்சுட்டேன் so no problem என்றாள்.

ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு பிறகு அவள் அவளது தோழியை காண செல்வதாக கூறியதால் வைத்தான். ஏன் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி? விடை தெரிந்தும் அதை புரியாமல் விழித்தான். எதோ புரிந்தும் புரியாமல் ஒரு விதமான நிலைமையில் இருந்தது.

ஆகா மனதில் சுதா நியாபகம் வந்தது. காலையிலேயே missed call வந்து இருந்தது, வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். பேசினான். எல்லாம் நன்றாக இருப்பதாகவும் திங்கள் வந்துவிடுவதாகவும் கூறினால். thanks என்று சம்பந்தம் இல்லாமல் அவளிடம் சொல்லிவிட்டு போனை வைத்தான். எதற்கு எனக்கு thanks சொல்றான் இவன், என்ன ஆச்சு என்று குழம்பியபடியே போனை வைத்தாள் சுதா.

வாரக்கடைசியும் ஓடியது, எப்பவும் sms அவ்வப்போது phone call என்று பேசிக்கொண்டு இருந்தான். அலுவலகத்தில் சில நாட்களில் நேரம்கடந்து வேலை செய்வது உண்டு. அன்று ஒரு நாள் அப்படி வேலை செய்து கொண்டு இருக்கும்போது போன் வந்தது அவளிடமிருந்து. என்னவென்று தெரியவில்லை மிக சோகமான நிமையில் பேசினாள், அவனுக்கோ நேரில்பார்க்க வேண்டும் போல இருந்தது அனால் கேட்க்க தயக்கம். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "சரி எப்ப கிளம்புவ" என்று கேட்டான். தெரியல என்று பதில் வந்தது. சரி கிளம்பும்போது சொல்லு என்று கூறினான்.

பத்து நிமிடத்தில் sms " i am leaving " உடனே பதில் அனுப்பினான் " wait am on d way" உடனே போன் வந்தது, "எங்க இருக்க? ஏன் வர நீ? நான் ஆட்டோல போய்க்கிறேன் என்று, இல்லை பக்கத்துலதான் இருக்கேன் இரண்டு நிமிடத்தில் அங்க இருப்பேன் என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடத்திலேயே அங்கு இருந்தான். . வண்டியில் அமர்ந்தாள், நேராக அந்த ரெஸ்டாரன்ட்சென்றது. அவளிடம் கேட்க்காமலேயே ஆர்டர் பண்ணினான். அவளுக்கு நான் ஆர்டர் பண்ணி வரவைத்தான். சாப்பிட்டு முடிக்கும்போது அவள் மாறி இருந்தாள், வழக்கம் போல உற்சாகத்துடன்.

அவளை விட்டுவிட்டு வீட்டிற்க்கு வந்தான். செல்போனில் இருந்த ஒரே பாட்டு " சுட்டும் விழி சுடரே" திரும்ப திரும்ப ஓடியது வீடு வரும் வரை. சொல்லவும் வேண்டுமா வீட்டிற்க்கு வந்தவுடன் ஆரம்பித்த sms பின்னர் phone call ஆக மாறி நெடுநேரம் பேசியது பற்றி.

தொடரும்

Monday, June 22, 2009

வாரக்கடைசி- நானும் எழுதுவேன்ல

வாரக்கடைசி எப்பவும் போல இல்லாமல் கொஞ்சம் புதுசாகவும் பழைய நிலைமைக்கு திரும்பியது போலவும் இருந்தது எனக்கு.

வெள்ளிக்கிழமை நண்பனது திருமண வரவேற்ப்பு பல்லாவரத்தில், வர வர பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களது திருமண நிகழ்ச்சியில் உடன் படித்தவர்கள் கலந்து கொள்வது மிக குறைந்து விட்டது. கண்டிப்பாக எனது நிகழ்ச்சியில் இருவர் வருவதே அதிசயம் என்று நினைக்கிறேன்.


நண்பனின் மனைவி எனது அலுவலக ஊழியரின் தங்கை என்பதால் அலுவலகத்தில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் என்னை கண்டு கொண்டதாக தெரியவில்லை பின்ன அவர்கள் அனைவரும் அலுவலகத்தில் உள்ள கணிப்பொறி துறையை சேர்ந்தவர்கள் கண்டிப்பாக என்னை தெரிந்திருக்க வாய்ப்பு இல்ல.


மணப்பெண் அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண் என்னையே பார்ப்பது போல தோன்றியது, அட ஆமாம் என்னைக்கூட ஒரு பெண் பார்க்கிறதே, ஒரு மணிநேரம் இந்த பார்வைகள் சந்தித்துக்கொண்டன, மின்னலே படத்தில் வருவது போல நண்பனிடம் மேடையில் சென்று விசாரித்தேன், அவன் மனைவியின் தங்கையின் தோழியாம், பின்னர் விசாரித்து சொல்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளான். இவனல்லவோ நண்பன். அதுவரைக்கும் மனசுக்குள் பட்டாம்பூசி பறக்கட்டும். நெஜமா பட்டாம்பூச்சி பறக்கற பீலிங்க்ஸ் நல்லாத்தான் இருக்கு :)


சனிக்கிழமை மெதுவாக விடிந்தது, எழுந்து கலையில் நண்பர் ஒருவருடன் ஸ்ரீபெரும்புதூர் போவதாக ஏற்ப்பாடு. போய்விட்டு வந்தோம். எனது மாமா எப்போதோ வாங்கிய நிலத்தை எங்கே இருக்கிறது என்று பார்க்க சென்று வந்தோம். வல்லகொட்டை முருகன் கோவிலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அடுத்த முறை பார்க்க போகும்போது முருகன் கோவிலுக்கு போக வேண்டும்.


போய்விட்டு வந்து மதியம் வழக்கம் போல காருக்கு சிறிய வேலைகளை செய்ய நண்பரது வொர்க் ஷாப் சென்றேன். பாவம் அவர் எனது கார் அவரை பாடாய் படுத்துகிறது. பின்னர் அவரது அடகு வைக்கப்பட்ட நகையை மீட்க அடையாறு KVB பாங்க்குக்கு சென்றோம். போகும்போதே தொலைபேசியில் அழைத்து வரலாமா என்று உறுதி செய்துவிட்டே சென்றேன், போனவுடன் கணக்கை சரி பார்த்து எல்லாம் செட்டில் செய்ய சொல்லி பணம் காட்ட சென்றால் இன்று உங்களை யார் வர சொன்னா என்று பணம் வாங்கும் இடத்தில அமர்ந்து இருந்தவர் கூறினார். இவனுக இன்னும் திருந்தவே இல்ல போல, எனக்கு KVB பங்கில் இரண்டாவது மோசமான அனுபவம், கண்டிப்பாக இனி இவர்களுடன் எந்த விதமான உறவும் வைக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். பேனாவை மறந்து காரில் வைத்து விட்டு வந்ததால் ஒரு பேனாவை கேட்டோம், எழுதிக்கொண்டு இருக்கும்போது அருகில் இருந்த பெண் என்னங்க பேனாவை கேட்க்காமலே எடுக்கறீங்க என்றார், பாவம் அவர் விளையாட்டாய் கேட்டார், காசாளரிடம் இருந்த கோவத்தை அவரிடம் காட்டிவிட்டேன்.


சனிகிழமை இப்படியே போனது, இரவு வீடிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்தோம், அடுத்தநாள் காலை 9.30, ௦ எழுந்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நண்பன் தேனிர் குடிக்கலாம் என்று அழைத்தான். சென்று குடித்துவிட்டு வரும்போது வீடிற்கு அருகில் வரும்போது துணி துவைக்கும் மிஷன் வாங்கலாம் என்று யோசித்தோம், உடனே வண்டியை திருப்பு, நேராக வேளச்சேரி வசந்த் & கோ சென்றோம், கடைகுஉள்ளே நுழைந்து 5 நிமிடம் வரை ஒருவரும் வரவில்லை,அவரவர் அவரவர் வேளையில் இருந்தனர், சரி இது எதோ சூப்பர் மார்க்கெட் போல, நமக்கு வேனும்கரத செலேக்ட் பண்ணி சொன்னா குடுதுவிடுவாங்க என்று நெனைச்சு, அப்புறம் ஒருத்தரை கூப்பிட்டு கேட்டால் மேல முதல் மாடி போங்க என்றார்.


இவர்களிடம் போராடி விபரம் கேட்டு பின்னர் வேண்டாம் என்று முடிவு பண்ணி அருகில் உள்ள கடையில் விசாரித்தோம், சின்ன கடை, வாடிக்கையாளர் சேவை நன்றாக இருந்தது அனால் விலை மற்றும் விரும்பிய வகை அங்கு இல்லை, வீட்டிற்கு திரும்புகையில் நாம் ஏன் திநகர் செல்லக்கூடாது என்று யோசித்து வண்டியை திருப்பினோம். போகும்போதே நண்பன் அவனது நண்பர்கள் சமீபத்தில் வாசின் மிஷன் வாங்கினதால் எங்கு வாங்கினார்கள் என்று விசாரித்தான், புது சரவணா ஸ்டோர் என்றுபதில் வந்தது.


நேராக வண்டி அங்கு சென்று நின்றது, பார்க்கிங் செய்ய இருபது ரூபாய் வாங்கினார்கள், கடைக்குஉள்ளே செல்லும்போது முன்னாலேயே ஒரு பத்து பெண்கள் கையில் தட்டை வைத்துக்கொண்டு நின்றுகொண்டு இருந்தனர், யாரையோ எதிர்பார்த்து வரவேற்க நின்றுகொண்டு இருக்கின்றனர் போல. அடுத்த வரிசையிஇல் ஒரு பத்து ஆண்கள் நின்று கொண்டு இருந்தனர், கையில் எந்த எந்த பொருட்கள் எங்கு உள்ளன என்று அட்டை வைத்திருந்தனர், நாங்கள் சென்று அவர்கள் கையிலிருந்து புடுங்காத அளவிற்கு கேட்ட உடன்கொடுத்தனர், ஒருவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. அப்பவே திரும்பலாம் என்றேன் நண்பனின் நச்சரிப்பால் ஏழாவது மாடி சென்றோம். எப்படி?? லிபிட்க்கு காத்திருந்த கூடத்தில் சென்று ஒரு வழியாய் லிபிட்க்குள் நுழைந்தோம்.


ஏங்கம்மா பெண்களே உங்களுக்கு ரோட்டில் நடக்கும் பொது தெரியாமல் இடிசுட்டாலும் , பேருந்தில் தெரியாமல் மோதினாலும் வரும் கோவம் ஏனுங்க நீங்க shopping செய்யும்போது மட்டும் எந்த நசுங்கு நசுங்கினாலும் வர மாட்டேன் என்கிறது. பாவம் அவர்கள் ...


கடைசியாய் ஏழாவது மாடியில் சென்று விசாரித்தால் அங்கு வாசின் மெசின் எல்லாம் இல்லையாம். கடுப்புடன் நண்பனை பார்க்க அவன் போனை எடுத்து விசாரித்த நண்பனை கடுப்படித்தான், பைக்குக்கு கொடுத்த இருபது ரூபாவை இரண்டு டம்ளர் வாங்கிக்கொண்டு வந்தால் இந்த பக்கம் போ அந்த பக்கம் போ என்று சிலர் விரட்டுகின்றனர். ஒரு வழியாக பில்போட்டுகொண்டு வந்தால் பொருளை பாலிதீன் பேப்பரில் தான் தருவேன் என்று சொல்கின்றனர். வேண்டாம் கையில் எடுத்து செல்கிறோம் என்றாலும் கேட்க்கவில்லை, ஒரு வழியாக அவர்களிடம் சண்டை போட்டுவிட்டு அவர்கள் கொடுத்த பையை அவர்களிடம் கொடுத்துவிட்டு கீழே இறங்க கடைசி மாடியில்பையை கொடுத்து அனுப்பினர். நா பாலிதீன் பை உபயோகப்படுத்துவது இல்லை என்று கூறினாலும் கேட்பதாய் இல்லை. கீழே வரும்போது அந்தபையை வெளியே நின்றுகொண்டு இருந்த ஒரு ஊழியரிடம்கொடுத்துவிட்டு வந்தேன். சரவணா ஸ்டோர் அவர்கள் பங்குக்கு சுற்று சூழலை பேணி காக்கின்றனர். நண்பர்களே இதுதான் சொந்த செலவில் சூனியம் வைப்பது.


எப்படியோ ஒரு வழியா எல்லாம் வாங்கி முடிச்சாச்சு. டீ குடிக்க போலாம் என்று தி நகர் சென்று டம்ளர் வங்கி குடித்திருக்கிறோம் .


மதியம் தோழி வீட்டில் சாப்பாடு. நண்டு மீன் என்று வெளுத்து கட்டினேன். இரவு behind the enemy lines 2 படம்பார்த்தேன், நல்ல படம் ஆனால் முதல் பகுதி போல் இல்லை, திரைக்கதையில் ஒரு வேகம் இருந்தது ஆனால் பரபரப்பு இல்லை.

இதற்க்கு இடையில் சில பல வேலைகளை செய்திருந்ததால் நன்றாக சென்றது வாரக்கடைசி... சென்ற பதிவில் கூறியது போல Fiat punto பற்றி பதிவு எழுத முடியவில்லை காரணம் என்னால் test drive செய்ய முடியவில்லை.

Wednesday, June 17, 2009

ஏன் இந்த இடைவெளி?

சில காலம் இடைவெளிக்கு பிறகு மறுபடியும் வலையுலகத்தில் நான் ..

ஏன் எதற்கு என்று தெரியாத இடைவெளி, பதிவு எழுதலாம் என்று நினைத்து எழுத துவங்கி முடியாமல் போன சில நாட்கள், எழுதி பாதி வரும்போது சில தடங்கல், எழுதனும் என்ற யோசனையிலேயே சில நாட்கள் என்று பல நாட்கள் கடந்து விட்டது. இன்று கூட எழுத தோன்றவில்லை ஆனாலும் ஏன் மறுபடியும் இன்று எழுத வேண்டும் என்று நினைத்தேன் எழுதுகிறேன்.

கடந்த வாரம் பற்றி எழுதலாமா? என்ன எழுத என்று யோசிக்கையில் இன்று வரை என்ன எழுத் என்று யோசித்து எழுதினால் அரை பக்கம் கூட தாண்டுவதுஇல்லை. எழுத வேண்டும் என்று நினைப்பு மட்டுமே கடைசியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக எதுவுமே மந்தமாகவும் மோசமாகவும் இருக்கின்றது. சிலபல காரணங்களுக்காக தனிமையில் இருந்து விடுதலை கொடுத்து நட்புக்கூட்டுக்குள் புகுந்து செல்ல முயற்சித்தேன், ஆனால் எல்லா முயற்சியும் தோல்வியில் முடியும் போல இருக்கின்றது. எதையும் எதிர்ப்பார்க்காமல் செய்த சில உதவிகள் நமக்கே தர்மசங்கடத்தை கொண்டு வந்து கொடுக்கும்போது மனதை ரணப்படுத்த செய்யும். மீண்டு வர காலமும், மனதும் வழி செய்ய வேண்டும்.

தனிமையில் இருந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் நட்புக்கூட்டத்தில் இல்லை, சகஜமாய் பழகு என்ற தோழியின் அறவுரையை இன்றாவது கேட்போம் என்று முயற்சித்தேன் ஆனால் இன்னும் சில காலம் நன்கு பழக்கப்பட வேண்டும் போல. சமூகத்தில் சூழ்நிலையோடு ஒன்றி வாழ. அது என்னவோ தெரியவில்லை நான் சமூகத்தில் தனிமையை ரசிக்கும்போது அனைவருக்கும் ஏன் இப்படி இருக்கிறாய் நாங்க எல்லோரும் இருக்கிறோம், ஏன் தனியாக இருக்கிறாய் என்று ஒருபோலி அக்கறையை என் மீது செலுத்த, அதை நம்பி சமூகத்துடன் ஒன்றி செல்லும்போது தெரிகிறது எல்லோரும் ஒரு விதமான போலி நட்புக்கூட்டத்தில் வாழ்ந்து அவர்கள் தனித்தன்மையை, தன் தனிமை சுகத்தை இழந்து தனக்காக மகிழ்ச்சியை சுமந்து அனுபவிக்காமல் எவருக்க்காகவோ வரவழைக்கப்பட்ட மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்று.

எனக்காக வாழ்வதை விட நானாகவே வாழ்வது மேலானது என்று தோன்றுகிறது... இனி எனக்காக வாழ்ந்த நான் இனி நானாக வாழலாம் என்று முயற்சி செய்கிறேன்.
இடைவெளி விட்ட நாளில் உடனிருந்து அவ்வப்போது விசாரித்த சில நண்பர்களுக்கு நன்றி முக்கியமாய் யூத்து மாதிரி- பிரேம்குமார் மற்றும் யூத்து கார்த்திக்.

போதுமடா மொக்கை என்று நோந்தவருக்கு இனி நம்ம இன்னிங்க்ஸ் ஆரம்பம்.
இனிக்கு fiat grande punto வெளிவருகிறது. அதை பற்றிய ஒரு கண்ணோட்டம் அடுத்த பதிவில்.
கண்டிப்பாக Honda Jazz and i 20 இரண்டுக்கும் கடும் சவால் விடும் வகையில் இருக்கும்.