Monday, November 30, 2009

வார இறுதி

நானும் ஷாப்பிங்கும் ரொம்ப தூரம் போல நேற்று அக்காவுடன் டி நகருக்கு சென்றேன், ஷாப்பிங் தான், சென்னையில் இவ்வளவு வருசமா இருக்க டி நகருக்கு வந்தது இல்ல என்று சொல்றியே என முதல் அடி விழுந்தது எனக்கு, ஆமாம் நான் டி நகருக்கு போனதே இது வரை ஒரு மூன்று முறை இருக்கும்.


பார்க்கிங் தேட ரொம்ப கஷ்டமாய் போய்விட்டது, பனகல் பார்க் பகுதியை ஒரு நான்கு முறை ரவுண்டு அடித்தும் கரை நிறுத்த இடம் கிடைக்கவில்லை. ஆரம்பமே மோசமாய் இருகுதேட என நனைத்து, எல்லோரையும் இறக்கி விட்டு பின்னர் என் நண்பன் வீட்டிற்க்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றேன்.

அதென்னங்க நானா தனிய எங்க போனாலும் ஒரு பொண்ணு எதிர்த்த மாதிரி வரதில்ல, நம்ம பாக்கறது இல்ல ஆனா அக்கா, அம்மா கூட போனா மட்டும் நிறைய பொண்ணுங்க வராங்க , சில சமயம் நம்மை குறு குறு என்று பாக்குறாங்க???

 ஆர் எம் கே வீ , எஸ் கே சி, மற்றும் பல பல குட்டி கடைகள் என முடிக்க நான்கு மணி நேரம் ஆனது. ஆனாலும் மனதிற்கு பிடித்த மாதிரி பொருட்கள் வாங்கினோம்.


டி நகரில் எதுவும் பண்ண முடியாது, முக்கியமாய் ஷாப்பிங். வீட்டில் பொண்ணு பாகரங்க முதல் கண்டிஷன் : பொண்ணு ஷாப்பிங் கூடி போக சொல்ல கூடாது, அதுலயும் டி நகர் பக்கம் கூட்டி போக சொல்ல கூடாது.அடுத்த ஞாயிறு காலை சென்னையில் ஒரு குரூப் மீட் இருக்கு. சென்னையில் உள்ள பியட் பாலியோ ( FIAT PALIO USERS) உபயோகிப்பாளர்கள் எல்லோரும் மீட் பண்ணுகிறோம். yahoo groups ல இதற்கென்று ஒரு குரூப் இருக்கு. இந்தியாவில் கார் உபயோகிப்பாளர் என்று ஒரு குறிப்பிட மாடலுக்கு ஆரம்பிக்க பட்ட முதல் குரூப். மிகவும் உபயோகமான குரூப். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களுடன் புது நண்பர்களும் கிடைப்பார்கள்.

பதிவுலகில் யாரேனும் பியட் பாலியோ உபயோகிப்பாளர்கள் இருந்தால் பயனடையலாம். பியட் கார்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அணுகலாம். என்னவோ தெரியவில்லை எனக்கு தெரிந்து எத்தனையோ கார்கள் இப்பொது இருக்கின்றன ஆனாலும் அதை வாங்க நிறைய ஆட்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் காரின் மீது ஒரு விதமான emotional attachment வைத்திருப்பது இல்லை. எனக்கு தெரிந்து பியட் கார் உபயோகிப்பாளர்கள் இதில் விதிவிலக்கு.
இந்த வாரமும் எந்த படமும் பார்க்கவில்லை, நண்பன் பாவமாய் யோகி பார்க்க போயுள்ளான். பாவம் புள்ளை தப்பிச்சோம் என்று வந்துள்ளது.
 
நண்பர் பிரேம் குமார் மறுபடியும் பதிவுலகிற்கு வந்துள்ளார் மேலும் டிவிட்டருக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளார் அவருக்கு இந்த வார வரவேற்பு
 
மேலும் ஒரு வரவேற்ப்பு, நமது ரூம்மேட் நண்பர் செண்பக ராஜன். பதிவுலகில் புதிதாக அடி எடுத்து வைத்துள்ளார், அவரின் பதிவுகளை இங்கு காணலாம் . இவரை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.


வார இறுதி இவ்வளவு வேகமாய் சென்றது கஷ்டமாய் உள்ளது. காலையில் நெகு நேரம் தூங்க முடியவில்லை, சனிக்கிழமை கலையில் அண்ணா வருவதை இருந்ததால் ஐந்து மணிக்கு எழுந்து கத்திபாரா சென்று கூட்டி வந்தேன், ஞாயிறு காலை நண்பன் பெங்களூரில் இருந்து வந்தான், நான்கு மணிக்கு சென்று அழைத்து வந்து, எனதுகாலை தூக்கம் எங்கோ சென்றது.

Wednesday, November 18, 2009

இதோ வந்துவிட்டேன்

வழக்கம் போல நம்ம ஊரு ரயில்வே இணைய தளம் சண்டித்தனம் பண்ணுகிறது. மூணு மாசம் முன்னாடி டிக்கெட் முன்பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை. இவங்களே கொள்ளை அடிக்க பயன் படுத்தும் தத்கால் வசதி கூட கிடைப்பதில்லை. கடந்த ஆறு மாதத்தில் நான் முயற்சி செய்த ஒரு முறை கூட சரியாக வேலை செய்தது இல்லை. அதிக பயனாளிகள் வருகிறார்கள் என்றால் அதற்கு தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டாமா? சர்வீஸ் கட்டணம் மட்டும் வாங்குகிறார்களே? இது இந்தியா இப்படித்தான் எல்லாமே.

கடந்த மாதத்தில் பத்து நாட்கள் வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பயணம் செய்தேன். தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. ரயில் பயணம் அலுத்து விட்டது.

பதிவு உலகத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆறு மாதம் ஆகின்றது இப்போதுதான் கவனித்தேன் நூறு பதிவுகளை என்றோ தாண்டிவிட்டேன். எனக்கே தெரியாமல் இருந்து இருகின்றது. சமீப கலங்கலாக பதிவு எழுத முடியாமல் பல தடங்கல்கள், சோம்பேறித்தனம் எல்லாவற்றையும் முறியடித்து மறுபடியும் எழுத துவங்கி உள்ளேன். உங்கள் ஆதரவு தேவை.

சச்சின் டெண்டுல்கர் மீது மறுபடியும் ஒரு சர்ச்சை, இந்த முறை அனைவரும் சச்சின் பக்கம். ஏன் ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியே சிலர் இருக்கிறார்கள். வெறுப்பாக இருக்கிறது.

சமீப காலமாக பதிவுலகத்தில் சுவாரசியமான பதிவுகள் குறைந்து வருகின்றன, ஏன் என்று தெரியவில்லை, என்னை போலவே எல்லோரும் எழுதுவதை நிறுத்தி விட்டனரா தெரியவில்லை.

இந்த பதிவுலகத்தை பத்தி கொஞ்சம் எழுதலாம் என்று நினைக்கிறன். நான் பதிவு உலகத்திற்கு வந்தது ஒரு விபத்து எதையோ தேடி கூகுளில் துலாவியபோது சில பதிவுகள் வந்தன, அதில் ஒன்று கிட்டத்தட்ட என்னுடைய பள்ளி பருவத்து நினைவுகள் போலவே இருக்க எழுதியது யார் என்று பார்த்தேன். கடைசியாக நம்ம அருட்பெருங்கோ, என்னுடன் பள்ளியில் படித்த நண்பர். பின்னர் தேன்கூடு தமிழ்மணம் அறிமுகம் எல்லாம் கிடைத்து பல பதிவுகளை படித்து நாமும் எழுதலாம் என்ற எண்ணம் வந்தது.

நமக்கு என்று வலைபூ துவங்கி எழுதவும் ஆரம்பித்து ஒரு வருடம் மேல் ஆகின்றது. ஆனாலும் நமக்கு இந்த பதிவுலகம் புடிபடவே மாட்டேன் என்கிறது. சில பல சந்தேகங்கள். சில நண்பர்கள் என்று வாழ்க்கை ஓடுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பு பதிவர்கள் சந்திப்பு என்று சொல்கிறார்கள் ஆனால் அது எப்போது நடக்கிறது எங்கு நடக்கிறது என்று ஒன்றும் தெரியவில்லை. வார வாரம் யாராவது இதை பற்றி எழுதுகிறார்கள். சில சமயம் என்னடா நாமும் எழுதுகிறோம் ஆனால் நமக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேன் என்கிறதே என்று இருக்கும்.

அப்புறம் இந்த வலைப்பூவை அழகு படுத்துவது. template மாற்றுவது எதனை பேர் நம்மை பார்க்கின்றனர் என்று பார்ப்பது என்று நானும் பலவற்றை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் ஆனால் பலன் மட்டும் ஹி ஹி ஹி.

நமக்கும் பலர் பின்தொடர்வது சந்தோசத்தை கொடுத்தாலும் என்னதான் எழுதினாலும் பின்னூட்டம் வருவது மட்டும் ஏன் இல்லை என்று தெரியவில்லை.

பதிவர்களில் பலர் புதிதாக பதிவுலகத்திற்கு வந்தாலும் விரைவில் பெரிய லெவலில் தங்கள் வலைப்பூவை மாற்றிவிடுகின்றனர், மிக அழகாக வைத்திருக்கின்றனர். நமக்கு மட்டும் ஒன்னும் வேலைக்கு ஆகமாட்டேன் என்கிறது.

இதையும் மீறி பதிவுலகில் நான் கற்றுகொண்டது ஏராளம், புது முயற்சிகள், புது நம்பிக்கைகள்,புது நண்பர்கள் என்று என்னை வாழ்வில் ஒரு படி மேலேற்றி விட்டுள்ளது என்று கூறலாம்.

அன்றொருநாள் யோசிக்கையில் நிறைய தோன்றியது பதிவுலகத்தை பற்றி எழுத ஆனால் இன்று எல்லாம் மறந்துவிட்டது. மறுபடியும் தோன்றும்போது எழுதுகிறேன்.

Tuesday, November 17, 2009

மறுபடியும் நான்ஆமாம் நேரமிலாவிடிலும் எப்படியும் எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன். எழுதுகிறேன்.