Thursday, September 16, 2010

புல் மீல்ஸ்

எல்லோரையும் போல கலந்து கட்டி அடிக்கறதுக்கு நானும் ஒரு பெயர் வைத்து விட்டேன் -புல் மீல்ஸ்
ஊரெல்லாம் எந்திரனைப்பற்றிய பேச்சு, ஆம் இது ஒரு பெரிய படம் தான், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆனால் ஷங்கர் ஒரு பெரிய இயக்குனர் அப்படி இப்படி என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைஇந்தியன் முதல்வன் வரை அவரைப்பற்றிய பிம்பம் என்னுள் வேறு ஆனால் அவர் matrix  படத்து சண்டைக்காட்சிகளை அப்படியே சுட்டு (சரி inspiration ) தனது அந்நியனில் நுழைத்தாரோ அப்போதே அவர் மீதிருந்த அபிப்ராயம் மாறிவிட்டது. 
ஒரு technologyயை பார்த்து அது போல எடுக்க வேண்டும் என்றால் அதை உபயோகப்படுத்து வேறு மாதிரி எடுக்க வேண்டியதானே அதை விட்டுவிட்டு அப்படியே அதை எடுத்தால்?

அத விடுங்க எந்திரன்  ட்ரைலர் நல்லாத்தான் இருக்கு ஆனா  mask மற்றும் i-Robot  படம் நியாபகம் வருவதை மாற்ற முடியவில்லை.
நல்லா இருந்த சரிதான்.

சென்னை மாநகராட்சி மழை முடியும் வரை சாலைகளை தோண்ட வேண்டாம் என முடிவெடுத்து உள்ளதாக கேள்வி, சரி அதுக்காக தோண்டிய  சாலைகளையும் மூட வேண்டாம் என்று நினைத்து விட்டார்களா? நிறைய இடத்தில தோண்டியது தொண்டியவாறே உள்ளது.
வேளச்சேரி தரமணி சாலையில் திடிரென்று நடுவில் divider  கட்டினர், எதுக்கு என்னனு தெரியவில்லை ஆனால் பாதி  கட்டி முடிக்காமலே அப்படியே விட்டுவிட்டனர். ஒரு பகுதி சாலை பயனில்லாமல் போய்விட்டது, அந்த பகுதியில் சாலையை கடப்பது எவ்வளவு கடினம் என்று தினமும் என்னை மாதிரி யாராவது கடந்து பார்த்தால் தெரியும். அய்யா ஒன்ன செஞ்சா உருப்படியா செய்ங்க இல்லாட்டி செய்யாதீங்க இப்படி நாய் வாய் வச்ச மாதிரி பதிலா விட்டு போனா எப்படி??

பழைய மகாபலிபுரம் சாலையில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் கண்ணைக்கட்டுகிறது, இதில் போக்குவரத்து காவல்துறை நாடு நடுவில் திடீர் barigadeகளை வைத்து உள்ளனர், இரவில் வேகத்தை குறைக்க வைக்கலாம் ஆனால் பகலில் காலை நேரத்து முக்கிய நேரங்களில் அதுவே போக்குவரத்து நெரிசல்களை உண்டு பண்ணுகிறது, ஒன்றரை லேன் மட்டுமே உள்ள ரோட்டுக்கு சுங்க வரி வேறு, வாயில அசிங்கமா வருது, ஏண்டா ரெண்டு வருசமாவாடா சாலைய  போட்டு முடிக்கறீங்க? ஓரளவுக்கு போடுங்க போட்டு முடிச்ச காச வாங்க ஆரம்பிக்கலாம் என்று சொன்ன ஆறே மாசத்துல இந்த ஒன்றரை சாலையை போட்டீங்க இப்ப?? ஓட்டு  கேட்டு வாங்க பேசிக்கறேன்.....

நண்பேன் டா! இது ரொம்ப பாப்புலர் ஆகிடுச்சு, அடுத்து ஏதும் வரும் வரை இனி அடிக்கடி பலரிடம் இதை கேட்கலாம்.

பெண்ணினம் அவர்கள் சுதந்திரம் என்று பேசறாங்க அதுக்கு எதிர்ப்பு கொடுக்கறாங்க, ரெண்டு பக்கமும் நியாயம் இருக்க மாதிரி இருக்கும் அதான் உண்மையும் கூட, இப்படி ரெண்டுமே இல்லனா வாழ்க்க போர் அடிக்கும்ங்க, அதனால சண்ட போட்டுகிட்டே வாழுங்க.

முரளி இறப்பும். சொர்ணலதா இறப்பும் மனதை பாதித்த விஷயம், எவனோ ஒருவன் யாசிக்கிறான் என அலைபாயுதேவில் வரும் அந்த பாடலை  வேறு யார் பாடி இருந்தாலும் நான் இந்த அளவுக்கு ரசித்து இருப்பேனா தெரியவில்லை, அதே போல காலமெல்லாம் காதல் வாழ்க படம், முரளி நடித்து எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்னு. 

இந்த வீனா போன S.M.S  அனுப்பற வித்தைய  எவன் கண்டுபுடிசான்னு தெர்ல ஆனா கைல கெடச்சான் செத்தான், நாதாரி நைட்டு பகல்னு தெரியாம அனுப்பி தள்றாங்க, வேலை வேணுமா, கரண்டி வாங்கனுமா அது இதுன்னு, டேய்  பொறம்போக்குங்களா எல்லாத்துக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும் நீங்க. 

கடந்த வாரம் ஊருக்கு செல்ல எங்கயும் டிக்கெட் இல்ல அதனால நண்பர்களுடன் காரில் செல்லலாம் என முடிவு எடுத்து சென்றேன், வீட்டில் பயங்கர திட்டு, எதுக்கு காரில் வந்த பஸ் ல வரவேண்டியது தான என்று. கடந்த மூணு தடவை பேருந்தில் வந்த பொது, மயிரிழையில் பேருந்து விபத்தில் இருந்து தப்பி இருக்கிறது, ரயிலில் தண்டவாளத ஒடைக்கறாங்க  என்று அடிகடி பேப்பர்ல போடறாங்க, எவரையோ நம்பி வானு சொல்றாங்க ஆனா  என்ன நம்பி நான் காரில் வந்த திட்டரங்க. 

கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அதை எதிர்ப்பதனால் வீட்டில் உள்ளவர்களை பிடிக்காமல் போகின்றது, எப்பவும் மிக மிக பிடித்து நமக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்  ஒன்றை செய்யும்போது ஏன் அனைவரும் எதிர்க்கிறார்களோ, ஆனால் என்னால் அவர்களைப்போல இருக்க முடியாது.  அது அவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் நம்மை கஷ்டப்படுத்தி பார்க்கறதுல அவங்களுக்கு சந்தோசம்.

கஜினி முகமதுவை விட அதிகம் படையெடுத்து விட்டேன் ஆனாலும் வெற்றி கிட்டவில்லை, இப்போது இந்த பழம் புளிக்கும் என முடிவெடுக்காமல் கண்டிப்பா புளிக்கும் என தெரிந்து முயற்சியை கைவிட்டுவிட்டேன். எல்லாம் இந்த www.team-bhp.com  என்ற ஒரு வலைத்தளத்தில் சேரத்தான், இது ஒரு வாகனப்பிரியர்களுக்கான தளம் ஆனால் ஏகப்பட்ட விதிகளுடன் உள்ளது, இதில் சேர "நான் ஏன் இதில் சேர விருப்பப்படுகிறேன்" என எழுதவேண்டும், எத்தனை முறை எழுதினாலும் என்னுடைய ஆங்கில அறிவு கம்மி என சொல்லி துரத்தி விட்டு உள்ளனர், ஆனால் எனக்குமட்டும் இப்படியல்ல, நிறைய பேருக்கு இப்படித்தான், என்ன சொல்ல இவங்கள, இவங்க கிட்ட ஏற்கனவே உள்ளவ்னகள் எல்லாம் எழுதும் செய்திகளை பார்க்கும்போது நமக்கு ஆங்கில அறிவே இல்லாம இருந்தாலும் பரவாயில்ல என்று தோன்றுகிறது. யாகூ க்ரூபில் உள்ள Palio users group  ஒன்றே எனக்கு போதுமானது. என்னைப்போலவே பலரையும் சேர்த்துக்க மாட்டேன் என்று சொல்லியது இங்குதான் எனக்கு தெரிந்தது. 

இன்னிக்கு இது போதும், இதிலும் நிறைய பிழை இருக்கும், மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் 

நான் எழுதினத என்னாலேயே படிக்க முடியல அவ்வளவு எழுத்துப்பிழைகள், எல்லோருக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன் 

Tuesday, September 14, 2010

வாழ்க்கை

என்ன எழுத 
நமக்கான வாழ்க்கையை என்றுமே நாம் தேர்வு செய்வதில்லை 
நாம் தேர்வு செய்யும்போது அது நமக்கானதாக இருபதில்லை
சிலரின் சுயநலத்தில் தொர்ப்பதும் ஜெயிப்பதும் நம் கையில் என்றுமே இல்லை
ஒன்று மட்டும் உறுதி ஒன்னை பெற வேண்டும் என்றால் பலவற்றை இழக்க வேண்டும்
ஒன்றை இழப்பதனால் எதையும் பெறப்போவதில்லை 
வாழ்க பாரதம், பெருமை போற்ற வீணடிக்கும் வாழ்க்கைகள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன இங்கு