Tuesday, May 20, 2008

கார் வாங்கப்போறேன்

இன்னிக்கு எதாவது எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன் ஆனா என்ன எழுதறது ???
இரண்டு நாளா மனசு சரி இல்லை நமக்கு என்ன வழக்கம் போல அலுவலகத்தில் மேலாளருடன் சண்டை. அத எழுத சொன்ன பெரிய மெகா தொடர் மாதிரி போய்டும்....
நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன், ஆமாம் இரண்டு மாதத்திற்கு பிறகு செல்கிறேன் அதும் சும்மா இல்லை பத்து நாட்கள் விடுமுறையில், நானும் அண்ணாவிற்கு கல்யாணம் பண்ணுவார்கள் விடுமுறையை அதற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருந்தால் நாட்கள் சென்றுகொண்டு இருக்கிறது ஏதும் நடக்க மாட்டேன் என்று இருக்கிறது அதான் கிளம்பிவிட்டேன்.எனது பள்ளி நண்பர்கள் வேறு ஞாயிரு அன்று சந்தித்து கொள்ளலாம் என மெயில் அனுப்பி இருந்தார்கள், சரி சின்ன வயசுல பார்த்து ஒர்குட் புண்ணியத்துல சில பேர கண்டு கொண்டாலும் எல்லோரையும் பாக்கிரதுனா சந்தோசம் இல்லையா? அதன் விடுமுறை அனுமதி வாங்கி நாளை கிளம்புகிறேன். நாளை பெரிய வேலை இருக்கிறது, எனது bike இனி அண்ணாவுடன் தனது காலத்தை கழிக்க போகிறது அதற்காக அதை எடுத்து செல்ல வேண்டும், தொடர் வண்டியில் இடம் தட்கால் முறையில் வாங்கியாயிற்று நாளை சென்று எனது bike ஐ pack செய்து அனுமதி வாங்கி எடுத்து செல்ல வேண்டும், நீண்ட நாள் ஆசையான அண்ணாவின் பழைய வண்டியை எடுத்துவர போகிறேன் என்று மனசு சந்தோஷ படுகிறது. என்னதான் இருந்தாலும் இந்த வண்டியை பிரிகிறோம் என்ற காரணத்தினால் மனசு சில நேரங்களில் யோசனை செய்யத்தான் செய்கிறது. மூன்று முறை என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய இந்த வண்டியை இன்னும் எனக்கு பிரிய மனசு இல்லை. சமிப காலமாக முதுகு வலி வரவே அது வண்டி ஒட்டுவதுனால் என்று முடிவு பண்ணி மருதுவரிடன் ஓப்புதல் வாங்கி இபோ இதை வீட்டுக்கு அனுப்புகிறேன்.இதெல்லாம் எனதுநீண்ட நாள் ஆசையான கார் வாங்குவதர்க்குதான் கடந்த ஒரு வருடமாக எனக்கு கார் வாங்குற கனவு. இப்போ அது மிகவும் அதிகம் ஆகிடுச்சு. அப்படி இப்படி சொல்லி இன்னும் இரண்டு மாதத்தில் வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து ஊருக்கு செல்கிறேன். பின்ன என்னங்க அலுவலகத்தில நிம்மதி இல்ல சரி நமக்கு பிடிச்சத செய்யலாம் என்றால் வீட்டில் இப்போதைக்கு என்ன அவசரம் அப்புறம் வாங்கலாம் என்று சொல்கிறார்கள், சம்பாதிப்பதே செலவு செய்யத்தான் அதும் மனசுக்கு புடிச்ச விஷயத்திற்காக, அதான் நானும் ரொம்ப நாள் ஆசையான கார் வாங்கலாம் என்றால் ராகு கேது னு சொல்றாங்க, அவங்கல்லாம் சம்பாதிச்சா நான் கார் வாங்கறேன், நான் தானா சம்பதிக்கறேன் அப்புறம் எதுக்குங்க ராகு கேது லாம் முடிவு பண்ணனும் நான் எப்ப கார் வாங்கறதுன்னு??? புரியல்ல அனாலும் பெரியவங்க மனச நோகடிக்க கூடாதுன்னு இரண்டு மாதம் காத்திருக்க முடிவு பண்ணிட்டேன்.

Friday, May 16, 2008

Fountain head

நான் படிச்சா முதல் ஆங்கில நாவல் fountain head. நான் எழுதின review இது. கொஞ்ச நாள் முன்னாடி எழுதினது போஸ்ட் பண்ணினா நல்லார்க்கும்னு தோணிச்சு அதான்.

Fountain head is a novel by ayn rand। I have got this one from one of my friends।

It explores the life of an architect. He chooses to struggle his life rather than compromise his own vision in the Architectural field.

His vision, idea about the modern architecture is different from other students in the university. He is been expelled from the university for refuse to abide the outdated traditions.

He never wants to compromise anything which costs his egotism, his own life. He wants to live his life not to give up or compromise for any other.

He struggled to exist in his field of work even he has to close his office and finally he gets his reputation after having a long struggle.

There are five main characters in the novel, Howard Roark the hero, Keating student who studied with Roark in university and toohey who is a collectivist, Dominique the heroin and wynand the powerful newspaper emperor who rose from a very poor family like Roark.

Each and every one in the novel has different characters and they stood with it till the end.

The novel is trying to tell something which I later find it as objectivism. I don’t know much about objectivism but I am trying to know what objectivism is.

I wanted to give you a brief review about the book; but I don’t know what a review is. If I try to give more than this then it will be a bunch of lines trying to say something which you already know.

How ever this novel ignites something with me and I hope it must be continued further.

அறிவொளி இயக்கம் + பள்ளிக்கூடம்

நேத்து திடிர்னு ஒன்னு நியாபகம் வந்துச்சு ரொம்பநாள் முன்னாடி அறிவொளி இயக்கம் ஒன்னு இருந்துச்சு, படிச்சவங்க எல்லோரும் படிக்காதவங்களுக்கு படிப்பு சொல்லி குடுக்கிற திட்டம். அதுக்கு நோட் புக்லாம் அரசாங்கம் குடுக்கும். மக்களை ரொம்ப சென்றடைந்த திட்டம். இதுனால பயன் பெற்றவர் பலர், என் அம்மா உட்பட.
அப்புறம் முதியோர் கல்வி அந்த திட்டமும் ரொம்ப நல்ல மக்களை சென்றடைந்தது அனா அதுலாம் இப்ப என்ன ஆச்சு னு தெரியல. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல அத அப்படியே எல்லோரும் மறந்துடுவாங்க போல. ஆனா இப்ப அந்த திட்டம் லாம் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லன்னு நினைக்கிறேன் ஏன்னா இந்த தலைமுறைல எல்லோரும் ஆரம்ப கல்வி கத்துக்க ஆரம்பிச்சுடாங்க னு நினைக்கறேன். இந்த நிலைமை கிராமத்துல எப்படி இருக்கு தெரியல.
கிராம பள்ளி கூடம் பத்தி சொல்லும்போது என் அம்மா ஊருல இருக்க பள்ளி கூடத்துக்கு ஒரே ஒரு வாத்தியார் தான் வகுப்பு 1 முதல் 5 வரை அவர் மட்டுமே சொல்லி குடுக்கணும் இது வரை இருந்தவர் பற்றி எனக்கு அவ்வளவா தெரியல மற்றும் அவங்க பெருசா எதையும் செஞ்சுடல, மத்திய நேரத்துல வெப்பமரத்து நிழல்ல தூங்கறத தவிர்த்து.
ஆனா இப்ப இருகறவர் பற்றி கேள்விப்பட்டேன் பள்ளிய சுற்றி இருக்க ஊர்ல இருக்க குழந்தைகள இவரே பொய் அவங்க பெற்றோட்ட பேசி கல்வி கற்க வேண்டியத அறிவுறுத்தி பள்ளில சேர்த்து சொல்லி குடுக்கிறார். வசதி இல்லா குழந்தைகளுக்கு இவரே துணி செருப்பு உட்பட பல வாங்கி குடுத்து இதுல சில குழந்தைகள காலைல பள்ளிக்கு கூட்டி வந்து மாலைல வீட்டுக்கு கூட்டி கொண்டு பொய் விடறார். அந்த பள்ளிக்கு ஆசிரியரா வந்த யாருமே ஒரு வருடம் மேல வேலை செஞ்சது இல்லை ஆனா இவர் 2 வருடமாக இங்கு வேலை செய்யறார். நான் பார்த்த அசிரியர்ல சமூக அக்கறை கொண்ட ஒரே ஆசிரியர் இவர் தான். இவர் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். அவரிடம் பேசியது இல்லை இந்த முறை ஊருக்கு பொய் வரும்பொழுது கண்டிப்பா அவரிடம் பேசி அவரை உலகுக்கு அறிமுக படுத்த போகிறேன்.
இதே பள்ளிலதான் என்ன சேர்க்க சொல்லும்போது அந்த குண்டு வாத்தியார் வலது கையாள இடது காத தொட முடியல சொல்லி சேர்த்துக்க மாட்டேன்னுடார். ஒரு வருடம் வேஸ்ட். நான் இடது கையாள வலது காத தொட்டேன் (ஒரு இடது கை பழக்கம் உள்ளவன் வேற என்ன செய்வான் ) அதுக்கு ரெண்டு கையாலையும் தொடணும்னு புது சட்டம் போட்டு துரத்திவிட்டுட்டார் . இதுதான் பள்ளிக்கும் எனக்கும் முதல் உறவு.
அப்புறம் 4 வகுப்பு படிக்கற வரை இடது கையாள எழுதி வந்த என்னை திடிர்னு வந்த அந்த டீச்சர் என்ன கவனிச்சு வலது கைல எழுதனும்னு மாத்த சொல்லி torture குடுத்தாங்க. நானும் அவங்களுக்கு டிமிக்கி குடுத்து பாத்தேன் முடியல. முட்டி முட்டியா அடி விழும் ஒரு வழியா கஷ்டப்பட்டு மாத்தினாங்க ..இன்னமும் அந்த teacher பார்த்த கோல வெறி வரும். அழகா இருந்த கை எழுத்த மாதி பழக்கத்த மாத்தி சின்ன வயசிலேயே வச்சாங்க ஆப்பு. இது என் வீட்டுக்கு தெரியும்போது நான் படிச்சது 7 ம் வகுப்பு. ஒரு வழியா 12 ம் வகுப்பு வந்து இடது கைல மறுபடியும் எழுத பழகி இப்ப ரெண்டு கிளையும் எழுதுவேன்னு பெருமைய சொல்லி கிட்டு திரியறேன். இடது கை பழக்கம் உள்ளவர் சிலர் அதுலயும் ரெண்டு கைலயும் எழுத தெரிஞ்சவர் ரொம்ப சிலர் அதுல நானும் ஒருத்தன் னு சொல்லற தூக்கி விட்டுகாலாம் (ஆனா கையெழுத்து கேவலமா இருக்கும் னு எனக்கு மட்டும் தான் தெரியும்)
ஹ்ம்ம் நம்ம காமெடி இன்னும் நிறய இருக்கு அப்புறம் எழுதறோம் இப்ப ஜூட்.

Thursday, May 15, 2008

நாங்களும் எழுதிட்டோம்ல

முதல் ப்லாக் எழுதறதுனா சும்மா இல்ல போல, அமிதாப் அமீர் னு எல்லோரும் எழுதறாங்க, நம்ம அருட்பெருங்கோ ப்லாக் தன் நான் முதன் முதலா படிச்சது. யாருப்பா நம்ம பள்ளிகூடத்த பத்தி எழுதிருகறது னு பார்த்தா அட நம்ம கூட படிச்சவரு :) அப்புறம் அவரு ப்லாக் எல்லாத்தையும் படிச்சுட்டு ஒர்குட் ல அப்பப்ப கிறுக்கிட்டு நட்ப புதுபிசாச்சு, ஆறு மாசமா எல்லாத்தையும் படிச்சுட்டு இப்ப நாமளும் எழுத களம் இறங்கியாச்சு.

என்னத்த எழுத??? தெரியல அனா அரம்பிசுட்டம்ல எழுதிபுடலாம்னு தைரியம் தான். தமிழ் ல எழுதி 8 வருஷம் ஆச்சு, பல எழுத்துக்கள் மறந்து போச்சு இத்தனைக்கும் நம்ம basement அதாங்க அடித்தளம் தமிழ் மீடியம் தான். இனி அப்பப்ப எழுதி புதுபிச்சுகனும். இன்னிக்கு இது போதும் னு தோணுது மீதி நாளைக்கு பாத்துக்கலாம்.