Friday, March 12, 2010

பசி

பசி வந்தால் பத்தும் பறந்து போகும், உண்மைதான் 

இருபத்து ஏழு வருட அனுபவம் இருந்தும் உபயோகமில்லை...........எப்போது கற்றுக்கொள்வது வாழ்க்கையை?

ஆட்கள் தேவை:கொளப்பாக்கம் அருகே புதிதாய் கட்டப்பட்டுள்ள வீடு திறப்பு விழாவிற்கு செல்ல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அண்ணன் ஜாக்கி அவர்கள் புது வீட்டுக்கு ஓபனிங் ஷோவிற்கு ஓசில டிக்கெட் குடுத்து இருக்கிறார், டிபன் வேற தரேன்னு சொல்லிருக்கார் அதனால ஞாயிற்று கிழமை சென்று வருவது என முடிவு செய்துவிட்டேன். (ஓசி சாப்பாடுனா எப்படி ஓடறான் பாருன்னு நீங்க சொல்றது காதுல கேக்குது) சென்னைல பாச்சுலரா இருந்து பாருங்க அப்ப தெரியும் ஓசி சாப்பாட்டின் அருமை.


வேளச்சேரில இருந்து நம்ம வண்டி கிளம்புது அதனால அக்கம் பக்கம் உள்ள பதிவர் யாரவது வரீங்க என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.  dhans4all@gmail.com  எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வண்டி விஜய நகரில் இருந்து சென்று மறுபடியும் விஜய நகர்க்கு வருது. ஆனா அங்க  போயிட்டு கடைசி நேரத்துல எந்த திட்டமும் இல்லை, ஆனா நீங்க எந்த திட்டமாது போட்டாலும் அதுல ஐக்கியம் ஆகிடலாம் என ஒரு திட்டம் உண்டு.

இதுவரை தராசு அய்யாவை தவிர எந்த பதிவரையும் சந்திக்கவில்லை, கண்டிப்பாக இந்த விழாவை முன்னிட்டு சிலரை சந்திக்க முடிவு செய்துள்ளேன்.


இப்படிக்கு 
தனியா போய் தர்ம அடி வாங்க விருப்பமில்லாமல் கும்பலாக சேர்ந்து வாங்கலாம் என நினைக்கும் பதிவர். 

சென்னை முதல் சென்னை வரை கொல்லம், திருவனந்தபுரம் வழியாக இரண்டு நாளில்....

சில வாரங்களுக்கு முன்பு அலுவலக நண்பர்களுடன் கேரளா சென்று வந்தேன். சென்னையில் இருந்து திருச்சி மதுரை ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றோம்.
வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி காரிலேயே சென்றுவிட்டு வருவதாக ஏற்பாடு. இதுவரை நெடுந்தூரம் காரில் சென்று இருந்தாலும் 760km  செல்வது இது தான் முதன் முறையாக அதுவும் நான் மட்டுமே கார் ஓட்ட வேண்டும். ஆனால் ஓட்டிவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம். வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு கிளம்புவதாக திட்டம். வழக்கம் போல நண்பர்கள் சொதப்பியதால் எட்டு மணிக்கு கிளம்பி சென்றோம்.  தாம்பரம் தாண்டி சென்று எல்லோரும் ஒரு கோவிலில் சாமிகும்பிடுவார்களே அங்கு நிறுத்தி கடவுள இ கும்பிட்டு வண்டியை கிளப்பினோம். சிறிது நேரத்திலேயே டாஸ்மாக் போர்டை பார்த்து வண்டியை ஓரம் கட்டினர். 

சரக்கும் சைடு டிஷும் வாங்கிக்கொண்டு வண்டி கிளம்பு ஒரு மணி நேரம் ஆனது. மதுராந்தகம் சென்ற உடன் வண்டி நிறுத்தப்பட்டது,சரக்கு கிளம்ப ஆரம்பித்தது, மூன்று மணிக்கு திருச்சி தாண்டி வண்டி சென்றது, அங்கிருந்த ஒரு கடையில்  வண்டியை நிறுத்தி நான் தூங்க ஆரம்பித்தேன் ஆறு மணி வரை தூங்கி எழுந்திருக்கும் போது எனக்கு மட்டும் மோசமாக விடிந்தது. நண்பன் ஒருவன் மப்பு அதிகமாக ஏறி ரொம்ப அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருந்தான். எப்படியோ ஏற்றிக்கொண்டு கிளம்பி பாதி தூரம் கடப்பதற்குள் வாந்தி...
மதுரையை தாண்டி செல்லும் போது இடையில் இரண்டு முறை வண்டி நிறுத்தப்பட்டது. எப்படியோ கொல்லம் சென்று சேர மதியம் 11.45 ஆனது. இயற்கையை ரசித்து வண்டி ஓட்ட முடியவில்லை, கேரளாவின் இயற்கையை ரசிப்பதற்கு பதில் எப்படி மறுபடியும் சென்னை சென்று சேருவது என யோசித்து மனதை குழப்பிக்கொண்டு இருந்தேன்.

இரண்டு நாட்கள் நன்றாக சென்றன, கேரளா பச்சை பச்சையாய் இருந்தது ஆனால் குளு குளு என இல்லை, வெயில் காட்டு காட்டு என காட்டியது.  நன்றாக என்ஜாய் செய்தோம். எனது கார் கப்பலில் போனது, இதெல்லாம் இங்கு மட்டுமே சாத்தியம். ஞாயிறு அன்று காலை திருவனத்தபுரம் சென்றோம், அங்கு சென்றுவிட்டு மாலை நானும் இரண்டு நண்பர்களும் சென்னை கிளம்புவதாக பிளான். பத்மநாப கோவிலுக்கு சென்று விட்டு நண்பரின் அண்ணன் வீட்டுக்கு செல்லுவதாக திட்டம், தோழி ஒருத்தி அங்கு இருப்பதால் அவ்வளவு தூரம் வந்து அவளிடம் பேசாமல் கூட சென்றால் நன்றாக இருக்காது என்பதால் தொலை பேசினேன், அதுதான் தப்பு, வீட்டிற்கு வரவில்லை என கோவம் அவருக்கு.

நண்பர்கள் இருவர் கோவளம் செல்வதாக திட்டம் போகும் வழியில் அவர்களை இறக்கி விட்டு செல்லலாம் என சென்றால் இன்னொரு காரில் என்னுடன் வர வேண்டிய ஒருவர், அந்த சார் நேராக கடற்கரை சென்றது, எனக்கோ மாலை மணி 3  ஆகிவிட்டது இப்போ கிளம்பினாத்தான் காலை 4 மணிக்கு சென்னை செல்ல முடியும் என கவலை. கடைசியில் யாவரும் அங்கு தங்கவில்லை. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பி அங்கிருந்து நகர் கோவில் திருநெல்வேலி மதுரை திருச்சி வழியாக சென்னை வரவேண்டும். நான்கு மணிக்கு கிளம்பினோம், நண்பர் வேறு சரக்கு கேட்டுக்கொண்டே வந்தார், வண்டியில் இருந்த ஹாப் பாட்டிலை எடுத்து குடுத்தோம், நாகர்கோவில் தாண்டி ஒரு கோட்டரை முடித்து விட்டார்.

நாகர் கோவில் தாண்டி திருநெல்வேலி செலும்போது சாலைகள் நன்றாக இருந்தன, ஆனால் ஒரு இடத்தில  take diversion  போட்டு ஒரு போர்ட் இருந்தது, அதை கடந்து மறுபடியும் சாலைக்கு வந்தோம் கொஞ்ச தூரம் வந்தால் தன தெரிந்தது சாலையில் எங்களை தவிர யாருமில்லை, ஒரு பாலத்தில் ஏறிக்கொண்டு இருந்தோம் உச்சிக்கு சென்றபோது பார்த்தல் பலத்தை நடுவில் காணூம். நல்லவேளை மெதுவாக சென்றேன் இல்லாவிடில் ஐந்து பெரும் அரோகரா தான். நெடுஞ்சாலை துறை நன்றாக வேலை செய்கின்றனர், அந்த புறவழிச்சாலை முடியவில்லை ஆனால் அதற்கு ஒரு அறிவிப்பும் இல்லை, எப்படியோ கஷ்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வந்து சேர்ந்தோம். பின்னர் வண்டி நிற்காமல் கிளம்பியது. நண்பர் மட்டும் சரக்கு கேட்டார், வண்டியை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தார் நான் நிறுத்தவில்லை. 

கலையில் ஐந்து மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம், பயனத்தி ரசிக்காமல் வெறுத்து வந்து சேர்ந்தேன், என்னைத்தவிர நான்கு பெரும் நன்றாக ரசித்தனர். இப்பொது தெரிகிறது சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று.


பயணத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்கள் அடுத்த பதிவில்


சில புகைப்படங்கள் உங்களுக்காக 


Thursday, March 11, 2010

ஆச்சரியம்

உனக்காக நானும்



எனக்காக நீயும்


காத்திருக்கையில் இல்லா ஆச்சரியம்


நமக்காக காத்திருக்கும் காதலில் உள்ளதோ?

பட்டப்பெயர்கள்


பட்டப்பெயர்கள் இதைப்பற்றி நினைத்தாலே மனதில் எல்லோருக்கும் கோவமும் சிரிப்பும் சேர்ந்து வரும். தன்னை அழைக்கும்போது வந்த கோவம் காலப்போக்கில் சிரிப்பாகவும் மாறிவிடும்.ஒருவரது இயலாமையை வைத்து அழைக்கப்படும் பட்டப்பெயர்கள் கண்டிப்பா அவங்கள காலம் முழுவதும் வருத்திக்கொண்டே இருக்கும், ஆனால் அவர்களது திறமையையோ அல்லது தனிதன்மையையோ வைத்து அழைக்கப்படும்போது ஒரு பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வார்கள்.

என்னைப்போல சிலர் இரண்டையும் அனுபவித்திருப்பார்கள், சின்ன வயதில் இருந்து எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களை இங்கு பார்க்கலாம்.



எனக்கு வைக்கப்பட்ட பட்டபெயர்களையும் நான் வைத்த பெயர்களையும் பற்றி எழுதலாம் என தோன்றியது, தோன்றினால் உடனே செயல்படுத்த வேண்டுமே, அதான் இந்த பதிவு, நேத்து கொஞ்சம் சீரியஸ் பதிவு எழுதியதால் இன்று ஒரு மொக்கை, 

எனக்கு பட்டப்பெயரை பெற்றோரே முதன் முதலில் துவக்கி வைத்தனர், 

சின்னத்தம்பி :
தனராஜ் என பெயர் வைத்து ஆனால் அந்தப்பெயரில் கூப்பிடாமல் சின்னத்தம்பி என அழைக்க ஆரம்பித்து ஊரில் சொந்தக்காரர்கள் எல்லோரும் அவ்வாறே இன்று வரை அழைக்கின்றனர். எனது அண்ணன் பெரிய தம்பி நான் சின்னத்தம்பி. சின்னத்தம்பி பெரிய தம்பி படம் பார்க்கும்போது அதில் பிரபு தான் சின்னத்தம்பி, அவர்தான் நதியாவை கல்யாணம் பண்ணுவார், அதை வைத்து ஊரில் சிலர் ஓட்டியபோது அந்தப்பெயர் பிடிக்காமல் போனது.

சின்னவா:
அப்பாவின் நண்பர் வீட்டில் எனக்கு வைத்த பெயர், அவர்கள் வீட்டில் இன்று வரை சின்னவா என்றுதான் அழைக்கின்றனர், அவர்கள் வீட்டில் இந்த பெயரை வைத்தது யாரென்று தெரியவில்லை ஆனால் சிறுவயதிலேயே வைத்துவிட்டனர், அண்ணாவை வழக்கம் போல பெரியவன் என அழைத்தனர். பிடிக்காமல் போக காரணம் இல்லை பிடிக்கவும் காரணம் இல்லை என்பதால் ஏற்றுக்கொண்டேன்.

தன்ராஜ்:
எனக்கு விவரம் தேஞ்ச நாளில் இருந்து அரசு பதிவேடு, பள்ளி பதிவேடு என எல்லா இடத்திலும் எனது பெயர் தனராஜ் ஆனால் என்னை யாருமே தனராஜ் என அழைப்பது இல்லை, தன்ராஜ் என்றே அனைவரும் அழைத்தனர், இதுவும் பிடித்திருந்ததால் அப்படியே இன்று வரை தொடர்கிறது.

தன்ஸ்:
எனக்கு விவரம் தெரிஞ்சு எனக்கு வைக்கப்பட்ட முதல் பட்டப்பெயர். எனது நண்பன் பிரபாகரன் மற்றும் அவனது தம்பிகள் சேர்ந்து எனக்கு என்று பட்டபெயர் என்று ஒன்றும் இல்லாததால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது "தன்ஸ்" என வைத்தனர், அதுவே இன்று வரை நிலைத்து நிற்கும் பெயராகவும், வித்தியாசமாக என்னையும் புண்படுத்தாமல் இருப்பதால் நானும் அதையே பின்பற்றுகிறேன். பள்ளி கல்லூரியில் ஒரே தன்ஸ் அதுவும் நானே. சில தனசேகர்கள் தன்ஸ் என்ற பெயருக்கு முதலில் முயற்சித்தனர் ஆனால் என்னுடைய பெயரே நிலைத்தது. இன்றும் எனக்கு பிடிக்கிறது, என்னுடைய லுவலக நண்பர்கள் இன்றும் என்னை தன்ஸ் என்றே அழைக்கின்றனர், உலகம் முழுக்க 
பரவிவிட்டதால் இதையே நானும் தொடர்கிறேன்.

லொட்டை:
என் வாழ்வில் வைக்கப்பட்ட இன்னுமொரு பட்டபெயர், வைக்கப்பட்டபோது எனக்கு பிடிக்காமல் நிறைய முறை சண்டைபோட்டுள்ளேன் ஆனால் இப்போது அப்படி இல்லை. என் தனித்தனிமை காரணமாக வைக்கப்பட்ட பெயர், பள்ளி நண்பன் பூபதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வைத்த பெயர். நான் இடதுகைப்பழக்கம் உள்ளவன் என்பதால் என்னை ஓட்டுவதற்காக வைத்தான், இடதுகை என்றாலே ஒரு வித கெட்ட எண்ணத்தை நமது சமுதாயம் எல்லோரிடமும் ஊட்டி வளர்த்து இருப்பதால் முதலில் எனக்கு பிடிக்காமல் போனது, ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்து பதினொன்றாம் வகுப்பிலேயே மறைந்து பனிரெண்டாம் வகுப்போடு முடிந்தது  இந்தப்பெயர். கல்லூரி முடித்து வேலையில் சேர்ந்து ஒரு நாள் கல்லூரியில் எல்லோரும் எழுதிக்கொடுத்த ஆடோகிராப் நோட்டை புரட்டுகையில் எல்லோருக்கும் வித்தியாசமான பட்டப்பெயர்கள் இருக்க நமக்கு மட்டும் 'தன்ஸ்' என்று ஒன்று மட்டுமே இருக்கே என யோசித்து, இந்த பெயரும் போர் அடிக்க துவங்கி விட்டது என்று தோன்றியது,  அப்போது தான் எனக்கு வைக்கப்பட்ட "லொட்டை" என்ற   பெயர் மறுபடியும் நியாபகம் வந்தது, அந்த பெயரையும் வைத்து என்னை ஒரு சிலராவது இன்றும் கூப்பிட்டு இருக்கலாமோ எனவும் தோன்றி இனி யாரும் அவ்வாறு அழைக்கப்போவது  இல்லை என்று முடிவு செய்தேன். வெகு சமீபத்தில் எனது அலுவலகத்தில் உடன் பணிபுரியும் தோழியால் ஒரு நாள் லொட்டை என அழைக்கப்பட்டேன், மனதில் ஒரே சந்தோசம் ஆனால் அவரும் ஓரிரு முறைக்கு பிறகு அவ்வாறு அழைப்பதை விட்டுவிட்டார்.

கண்ணாடி, சோடாபுட்டி:
 கண் குறைபாடு உள்ளவர்கள் பலருக்கும் இருக்கின்ற இந்த பெயர், இதை எவரும் ரசிப்பது இல்லை அழைப்பவரை தவிர ஆனாலும் தவிர்க்க முடியாத பெயராகிவிட்டது. ஆசிரியர் துவங்கி நண்பர்கள் முதல் எதிரிகள் வரை அனைவரும் இந்த பெயரை வைத்து அழைப்பார்கள். கடந்த வாரம் கூட நண்பர் ஒருவர் விளையாட்டுக்காக இவ்வாறு அழைத்து என் மனதை புண்படுத்தினார், இவ்வாறு அழைப்பவர்களிடம் உடனே சொல்லிவிடுவேன் இது எனக்கு புடிக்காது என்று மரோப்டியும் நான் விளையாட்டுக்கு தான சொனேன் அதுக்கு ஏன் கோவப்படுகிறாய் என்று கூறினால் அவ்வளவுதான் அவர்கள் முகம் சுருங்க ஏதும் சொல்லிவிடுவேன். சிறுவயதிலேயே கோவக்காரனாக வளர்ந்த நான் இந்த பெயரால் இன்னும் அதிகமாக கோவப்பட்டேன். சிறுவயதிலேயே ஒருவனை தாழ்வுமனப்பான்மைக்கு தள்ளிவிடும் இப்படிப்பட்ட பெயர்களை துளியும் சங்கடம் இல்லாமல் அழைக்கும் மக்களை என்னவென்று சொல்ல, நாளை அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இதில் அவதிப்பட்டு புண்படும்போது தெரியக்கூடும்.  என் வாழ்வில் மிகப்பிடிக்காத பட்டப்பெயர்.


அணில் :
எனது கல்லூரியில் உடன் படித்த தோழிகள் எனக்கு வைத்த பெயர், பெயர்க்காரணம் தெரியவில்லை ஆனால் அவர்கள் அவ்வாறே அழைத்தனர். அலுவலகத்திலும் இருவர் எனக்கு இந்த பெயரை வைத்திருந்தனர். இந்த பெயரும் பிடிக்காமல் இருக்க காரணம் இல்லை பிடிக்கவும் இல்லை. யாரும் இந்த பெயரில் அழைப்பதும் இல்லை.

விஜய்:
எங்கள் கல்லூரி பெண்கள் விடுதியில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் என்று எனக்கு என் தோழி கூறினாள். அப்போது சந்தோசமாக இருதது, நல்ல வேலை இன்று ஒருவரை தவிர மற்றவர் மறந்துவிட்டனரா இல்லை எனக்கு யாரிடமும் தொடர்பு இல்லாததாலோ இந்த பெயர் மறைந்து விட்டது.  




பார்ட்னர்:
மூன்றாம் வருடம் படிக்கும்போது நண்பர்கள் நான்குபேர் நாம் படிப்பு முடித்துவிட்டு ஒருவேளையில் செட்டில் ஆகி நன்றாக தோழி கத்துக்கொண்டு கம்பனி ஆரம்பிப்போம் என பேச ஆரம்பித்து, அலுவலகத்துக்கு பெயர் வைத்து அன்றே நாங்கள் பார்ட்னர் ஆகிவிட்டோம் இன்றும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ட்னர் என்றே அழைத்துக்கொள்கிறோம். இந்த பெயர் என்னுள் ஒரு தன்னம்பிக்கையை வளர்த்ததால் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கடலை மன்னன்:
சென்னை வந்து செட்டில் ஆனதுக்கபுறம் எனது அறைத்தோழன் அண்ணன் சாலைக்குமார் அவர்கள் வைத்த பெயர், நான் அவருக்கு வைக்கும் முன் அவர் முந்திக்கொண்டு எனக்கு வைத்துவிட்டார், உண்மையில் அவருக்கு வைக்க வேண்டிய பெயர், ரிங் டோன் வைத்து பிகர் மடக்கும் வித்தை தெரிந்தவர், கல்யாணம் ஆனாலும் கடலையை விடாதவர். 


நான் வைத்த பெயர்கள்:

நான் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே ஆருக்காவது பட்டப்பெயர் வைக்கணும் என்று முடிவு செய்தேன், சில முயற்சிகள் தோற்றாலும் கல்லூரி முதல் வருடத்தில் என் முதல் வெற்றி கிட்டியது.

குழந்தை: 
என் நண்பன் பாலகுரு இன்று கல்லூரி நண்பர்கள் முழுக்க குழந்தை என அழைக்கப்படுவதற்கு நானே காரணம். சில மதங்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்காக தேனி சென்று அவன் வீட்டிற்கு சென்றபோது அவன் பெற்றோரிடன் எனக்கு குழந்தை என பெயர் வைத்தவன் யார் என கேட்டீர்களே அது இவன்தான் என அறிமுகப்படுத்தினான்.  எனக்கு சந்தோசமாக இருந்தது, அவர்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன், நல்ல வேலை அவர்கள் என்னை திட்டவில்லை மாறாக பொருத்தமான பெயர்தான் என அங்கீகரித்தனர். 

ஐஸ்வர்யா:
கல்லூரி முதல் வருட விடுதியில் இருத்த ஒரு நாய்க்குட்டிக்கு நான் வைத்த பெயர், அழகாக இருந்ததால் அப்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைவாக வைத்தேன். இதெல்லாம் அவங்களுக்கு தெரியாது, யாரது சொல்லிடாதீங்க. வேறு எந்த பெயரில் அழைத்தாலும் திரும்பாத அந்த குட்டி இந்த பெயருக்கு மட்டுமே திரும்பும். 



பார்ட்னர்:
இந்த பெயரையும் நானே தேர்ந்தெடுத்து அழைத்ததால் இதற்கும் கிரெடிட் நானே எடுத்துக்கொள்கிறேன், எங்களைப்பின்பற்றி சிலரும் இவ்வாறே அழைத்துக்கொனனர் ஆனால் நிலைக்கவில்லை. 


அதுக்கப்புறம் சில ஆசிரியர்கள் பட்டப்பெயரால் அழைக்கப்படுவார்கள், எல்லோரையும் போல நானும் அவர்களை அந்த பெயரிலேயே நண்பர்களுடன் பேசுகையில் குறிப்பிடுவேன். தவறு என்றாலும் அப்போது அதெல்லாம் நமக்கு எங்க புரியப்போகுது.

இவ்ளோ நேரம் இந்த மொக்கையை படித்திருந்த உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்...... 

Tuesday, March 9, 2010

கதையல்ல நிசமா?? கற்பனையா ??




நிஜ முகம்-

இதை நான் கொஞ்ச நாட்களாகவே எழுதலாம் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன், நாம் எழுதுவதால் என்ன பயன் என நினைத்து எழுதாமல் இருந்தேன். 
என்வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி,  இதைப்பற்றி ஏற்க்கனவே ஒரு நெடிய பதிவு எழுதி பதியும்போது கணினி பழுதடைந்து எல்லாமே அழிந்துவிட்டது.

எல்லோரும் மீடியா மீடியா என்றால் ஓடியா ஓடியா என்று ஓடி வருகிறார்கள் காரணம் எளிதில் பிரபலம் ஆகிவிடலாம் மீடியா தயவிருந்தால். விளம்பரம் என்பது ஒவ்வொரு மனிதனையும் எதோ ஒரு வகையில் கவர்ந்து விடுகிறது. நானும் அப்படிப்பட்ட ஒரு எண்ணத்தில் இருந்த காலத்தில், மீடியா சொல்வதெலாம் உண்மை என்று மனசார அறிந்த காலத்தில் நடந்த நிகழ்வு இது.

2003 ஆம் வருடம், தமிழகத்தில் புதிய டிவி ஒன்று ஓரளவுக்கு பெயரெடுக்க நல்ல நிகழ்ச்சிகளை அளிக்க ஆரம்பித்த காலகட்டம், அப்போது ஒருநிகழ்ச்சி பிரபல நடிகை அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு தமிழக மக்களுக்கு பல உண்மைகளை சொல்லி வந்தது. அதில் பலருக்கு நடந்த கொடுமைகள் அதில் போலீஸ், ஆளும் கட்சியினர் செய்த அக்கிரமங்கள் போன்றவற்றை காட்டி மக்களுக்கு உண்மைகளை தெரியவைத்தனர்.  நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முடித்திருந்தேன். இந்த நிகழ்ச்சியை நானும் பார்ப்பேன். மனது பதைபதைக்கும் கோவம் வரும் நடந்ததை கேள்விப்பட்டால். டி ஆர் பி என்றும் ஒன்றை குறிவைத்து நடக்கும் நாடகமாக இல்லாமல் உண்மையான நாட்டு நடப்பை பேசவந்த நிகழ்ச்சி.

இதே நிகழ்ச்சி உண்மைக்கு புறம்பான தவறான தகவலை உண்மை என நம்பவைக்கும் அளவுக்கு ஒரு நிகழ்வை அளிக்கும் என்று கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை

எங்கள் கல்லூரியில் நடந்த ஒருநிகழ்வு தவறாக ஒளிபரப்பப்பட்டது, நான் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கும் போது எங்களுடன் படித்த ஒரு மாணவன் விடுதியில் உடன் படிக்கும் மாணவர்களின் பணத்தை நெடு நாட்களாக திருடி வந்து இருந்தான். ஒரு மாணவர் கூட்டம் அவன் மேல் சந்தேகம் கொண்டு அவனை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். அவனும் எடுத்ததை ஒத்துக்கொண்டான். இதுநடந்தது ஒரு மாலை நேரம், அடுத்த நாள் கலையில் கல்லூரி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் அவன் இரவோடு இரவாக விடுதியை விட்டு ஓடி விட்டான். சிறு வயதில் எல்லோரும் பெரிய அறிவாளி போல அவனிடம் எழுதி வாங்குவது, விசாரணை மேற்கொள்வது என இருந்தனர்.

அடுத்த நாள் காலையில் ஆளைக்காணாமல் பிடித்த குழு முழித்தது, கல்லூரியில் தெரிவிக்கப்பட்டது, பையனின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது, காவல் துறையிலும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை ஆரம்பம் ஆனது காவல் துறையினர் எல்லோரிடமும் விசாரணையினை மேற்கொண்டனர். அவன் ஓடிப்போனதாகவே விசாரணை மேற்கொண்டு இருந்தது. திடிரென்று ஒருநாள் காவல் துறையினரின் பார்வை மாறியது, மாணவர்கள் அவனை பிடித்து அடித்து கொலை செய்து எங்கோ புதைத்து விட்டது போல ஒருகோணம் கொண்டு வரப்பட்டது. கண்டிப்பாக இது நடக்கவில்லை. ஆனால் அந்த மாணவனின் தந்தை மேலிடத்து உதவியுடன் விசாரணையை இந்த விதத்தில் மேற்கொள்ள வைத்தார்.

இதில் மாட்டிக்கொண்டது அவனுடன் படித்த, உடன் இருந்து பணத்தையும் இழந்த நண்பர்கள், அவனை பிடித்த மாணவர் குழு வெகுவாக கழண்டு கொள்ள இவர்கள் அவனுடன் பழகிய காரணத்துக்காக விசாரணையினை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.கிட்டத்தட்ட ஒரு வருடம் விசாரணை நடந்து மாணவர்கள் பாசமாக, ஆபாசமாக, அசிங்கமாக, மிரட்டி என்று எல்லா விதத்திலும் விசாரிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் எல்லோரும் சலித்துப்போன ஒரு நாளில் இந்த விஷயம் கதையல்ல நிஜத்தில் வந்தது.

மாணவனின் தந்தை இதை அங்கு கொண்டு வந்துள்ளார் என நினைக்கிறேன், நிகழ்ச்சி முழுக்க மாணவனை மற்ற மாணவர்கள் சேர்ந்து கொன்று விட்டனர், அதை மறைத்து நாடகம் ஆடுகின்றனர் என்ற கோணத்திலேயே கொண்டு செல்லப்பட்டது. நாணயத்துக்கு கூட இரண்டு பக்கம் உண்டு ஆனால் இந்த நிகழ்ச்சியில் மறுபக்கத்தை அவர்கள் தொடக்கூட இல்லை அதாவது உண்மையின் பக்கத்தை. அவன் ஓடிப்போனது அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் உறுதியாய் தெரிந்த நிலையில், தொலைபேசியில் அதை தெரிவித்தும் நிகழ்ச்சியை அவர்கள் கோணமாகிய கொலை என்றே கொண்டு சென்று முடித்தனர்.

அந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரும் இன்று வரை அந்த மாணவனை அடித்து கொன்று அல்லது எதோ செய்து மறைத்துவிட்டனர் என்றே நினைத்துக்கொண்டு உள்ளனர். ஆனால் நடந்த உண்மை அந்தநிகழ்ச்சி முடிந்த சில வாரங்களில் ஓடிப்போன அந்த மாணவன் விசாரணையில் இருந்த அவன் அறைத் தோழனுக்கு கடிதம் போட, விசாரணை மறுபடியும் முழு வீச்சில் ஆரம்பித்தது, கடிதத்தில் அவன் கல்லூரியின் தொலைபேசிக்கு ஒரு ஞாயிறு மாலையில் பேசுவதாக தெரிவிக்க, இதற்கு இடையில் கல்லூரி தொலைபேசி எண்கள் மாற்றப்பட்டிருந்தது. தொலைப்பேசி நிறுவனத்தின் உதவியுடன் பழைய எண்கள் உபயோகத்தில் வைக்கப்பட்டு,அவனிடம் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அவன் பேசுகையில் எங்கிருந்து பேசுகிறான் என கண்டு பிடித்து அடுத்த இரண்டு நாளில் அவனை காவல்துறை பிடித்துவிட்டனர். ஒரு மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளான். கிட்டத்தட்ட ஒரு வருடம் எல்லோருக்கும் தண்ணி காட்டி இருந்தான்.

இரண்டுநாளில் கோர்டில் ஒப்படைக்கப்பட்டு கல்லூரிக்கு வந்து தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டான், அவனால் வாழ்க்கை பாதிக்கப்பட்டது கிட்டத்தட்ட பத்து மாணவர்கள். இதுநடந்து முடிந்ததும் சம்பந்தப்பட்ட டிவிக்கு தெரியப்படுத்தினால் நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அது ஒரு தயாரிப்பாளர் நிகழ்ச்சி நாங்கள் இப்பொது ஏதும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். உண்மை வெளியே தெரியாமல் பொய் மட்டுமே மக்களிடம் கண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருவன் செய்த தப்பினால் அவனைத்தவிர பலர் அவனது ஆசிரியர் நண்பர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். அந்த மாணவன் இன்று சென்னையிலோ இல்லை வேறு எங்க இருக்கலாம், இந்தப்பதிவை படித்துக்கொண்டும் இருக்கலாம் ஆனால் அவனும் அவன் தந்தையும் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. இதுதான் உலகமோ? 


கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒரு த்ரில்லர் கிரைம் படம் போல நடந்த நிகழ்வுகள் இது, இதை வைத்து ஒரு சினிமா கண்டிப்பா எடுக்கலாம், அந்த அளவுக்கு நடந்தது. அந்த மாணவர்களுக்கு எவ்வளவு அவமானங்கள், உடன் படித்தவர்களே, அவனை பிடித்த மாணவர் குழுவே அவர்களை உங்களுக்கு என்னடா ஜாலியா விசாரணை ன்று வகுப்பை கட் அடித்துவிட்டு செல்கிறீர்கள் என கேலி செய்தனர்.  பிடித்தவர் ஒருவர் அகப்பட்டவர் ஒருவர், காவல்துறை மேல்டத்தின் பிரசர் காரணமாக கோணத்தை எப்படி எல்லாம் மாற்ற வேண்டி இருந்தது, விசாரணையில் காவல்துறையின் சில நல்லவர்களையும்  கண்டுகொண்டனர். ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து அவர்கள் படிப்பை முடித்து இன்று நல்ல நிலையில் தானுள்ளனர் ஆனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நிகழ்வுடன்உடன் படித்த மாணவ மாணவிகளே இவர்களை தவறாக, விசாரணைக்கு போகும்போது இகழ்ச்சியாக படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியினால் பிரிந்து இருந்த அந்த ஓடிப்போன மாணவனின் தந்தையும் தாயும் சேர்ந்தனர் இது மட்டுமே ஒரு நல்ல நிகழ்வு. கெட்டதிலும் ஒரு நல்லது போல.


இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது இல்லை, சில உண்மைகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது.

Monday, March 8, 2010

கார்த்திக் காலிங் கார்த்திக்-திரை விமர்சனம்








நெடு நாட்களுக்கு பிறகு திரையரங்கில் பார்த்த இந்திப்படம்.  படம் Farhan Akhtar  நடித்த படம் என்பதாலேயே பார்க்க  சென்றேன். கடைசியாய் பார்த்த இந்தி படமும் இவர் படமே,  Rock On, மனதுக்கு பிடித்ததால் இன்றும் சென்றேன். 





தாழ்வு மனப்பான்மையும், தனிமையும் ஒருவனை எப்படிவேண்டும் என்றாலும் மாற்றி விடலாம், அவனுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை அதைக்காதால் வெற்றி நிச்சயம் என அவனுக்கு தெரிந்து கூட  கடக்க முடியவில்லை என்றால்??  இல்லை அதைக்கடந்தால் ?? எல்லாவற்றுக்கும் இந்த படத்தில் பதில் உண்டு.ரொமாண்டிக் காமெடி என்று ஒரு வகைப்படம் உண்டு ஆனால் இது ரொமாண்டிக் திரில்லர் வகையை சார்ந்தது.

கார்த்திக் வாழ்வில் நன்றாக படித்தாலும் நல்ல வேளையில் இருந்தாலும் மேலே வர முடியவில்லை பிடித்ததை செய்ய முடியவில்லை, ஒரு தாழ்வு மனப்பான்மையுடன், சுய நம்பிக்கை இல்லாமல் எதிலும் பிடித்தம் இல்லாமல் இருந்து தாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என நினைக்கும் வாழ்க்கை ஒரு போன் காலில் மாறுகிறது. எப்படி என்பதுதான் படம்.காத்திக் இப்படி இருக்க காரணம் சிறுவயதில் இழந்த தனது அண்ணன், தனது அண்ணனின் இழப்புக்கு தான் தான் காரணம் என நினைப்பது அவன் தாழ்வு மனப்பான்மைக்கு அடித்தளம். இறுதியில் வரும் அவன் அன்னனைப்பற்றிய நிகழ்ச்சி ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.

கார்த்திக்( தமிழ் இந்தி என எந்த மொழிப்படத்திலும் ஏன் கதாநாயகன் பெயர் கார்த்திக் என்று இருக்கிறது? ) ஐ ஐ எமில்  படித்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறான், அவன் மேலதிகாரி ஒரு நாள் அவனிடம் ஒரு வேலையை சொல்லி செய்ய சொல்கிறார், இரவு நேரமானாலும் முடித்துவிட்டு செல்ல சொல்கிறார், இவனும் அவ்வாறே செய்துவிட்டு வருகிறான், ஆனால் இரவே அவனுக்கு ஒரு போன் வருகிறது, மேலதிகாரி கண்ட படி திட்டி நான் செய்ய சொன்ன வேலை இது இல்லை நீ என்ன செய்துள்ளாய், நாளை காலை இந்த வேலைகளை முடித்து 1  மணிக்குள்ளாக எனக்கு கொடு என சொல்கிறார். மேலதிகாரி மேல் உள்ள கோவத்தை போன் மீது காட்டுகிறான், போன் சுக்கு நூறாகிறது. அதன் பிறகு  வேலையை முடித்து கடுக்க அவனை அவர் காரிலேயே வரச்சொல்லி கொடுத்த கோப்புகளை சரி பார்க்கிறார் பிறகு வாடிக்கையாளர் ஒருவரிடம் தவறான வாக்குறுதி கொடுக்கிறார், எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு அவனை நாடு ரோட்டில் இறக்கிவிட்டு செல்கிறார். இறங்கி என்ன செய்வது என தெரியாமல் நிற்கும் அவன் சரி என பக்கத்தில் உள்ள கடையில் உடைந்த போனுக்கு பதில் புதுசு வாங்குகிறான், அப்போதுதான் உடன் வேலை செய்யும் சோனாலியை பார்க்கிறார் வேறு ஒருவனுடன்.பின்னர் மேலதிகாரி செய்யும் சிறு  தவறை சுட்டிக்காட்டுவதால் எரிச்சல் அடையும் அவர் இவனை அவமானப்படுத்தி வேலையை விட்டு தூக்குகிறார்.



அதற்க்கு பிறகு இரண்டு மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளிவராமல் இருக்கும் அவன் பின்னர் தற்கொலைக்கு முயலும் போது அவனுக்கு ஒரு போன் கால் வருகிறது. எடுத்து பேசினால் மருமோயில் பேசுபவர் கார்த்திக். அவனுக்கு இவனைப்பற்றி எல்லாம் தெரியும் எனவும் தான் ச்ன்னபடி கேட்டால் இவன் வாழ்க்கை மாறிவிடும் என்றும் சொல்கிறான்.  ஒரு கட்டத்தில் அதை நம்பும் ஹீரோ கார்த்திக் அவன் சொல்படி கேட்க எல்லாம் மாறுகிறது. ஆனால் இந்த விஷத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என போன் கார்த்திக் விதித்த நிபந்தனையை மதிக்காமல் தன காதலி சோனாலி கிட்ட சொல்லிவிட நடப்பவை எல்லாம் தலை கீழ். அதன் பின்னர் நடந்தது என்ன, காதலியுடன் சேர்ந்தானா? போன் பண்ணிய  கார்த்திக் யார்?  மேலதிகாரியை என்ன செய்தான் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்க. 

Rock on  படம் பார்த்த பிறகு தமிழில் இந்த மாதிரி படம் எப்போது வரும் என நினைத்தேன், அறைத்தோழன் அறிமுகப்படுத்தும் படம் எல்லாம் நன்றாக இருக்கவே அவன் சொல்லிய படி Farhan Akhtar  படமும் பார்க்க ஆரம்பித்தேன். இதுவும் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை.  ஒரு motivational  படம் போல ஆரம்பித்து அதில் பலவற்றை தொட்டு சென்றுள்ளது. ஆனால் எல்லாவற்றிலும் மிகையாகாமல் மெல்ல தொட்டு சென்றுள்ளது. இதில் மோடிவேசன், திரில்லர், காதல்,  இயலாமை எல்லாமே உள்ளது. கடைசி வரை அந்த போனை பண்ணுவது யாரை இருக்கும் என நம்மை யோசிக்க வாய்த்த இயக்குனர் Vijay Lalwani க்கு நமது பாராட்டுக்கள்.

இசை வழக்கம் போல  Shankar Ehsaan Loy கூட்டணி, மிகப்பொருத்தமான இசை.  கதாநாயகி தீபிகா படுகோன், என்னமோ தெரியல இவரை எனக்கு முதலில் இருந்தே புடிக்காது, தம் அடித்து பப்பில் தண்ணி அடித்து டான்ஸ் ஆடும் நகரத்து இளம்பெண்.  இந்த காரக்டரில் இவரை பார்த்தது இன்னும் புடிக்கவில்லை ஆனால் நிறைவாக செய்துள்ளார்.  

கார்த்திக்காக Farhan Akhtar  மிகப்பொருந்தியுள்ளார், தாழ்வு மனபான்மையுடன் இயலாமையால் பொருமுவதாகட்டும், மிடுக்குடன் தான் IIM இல் படித்து வெளிவந்து தன்னை மிரட்டிய மேலதிகாரியை எளிதில்  மடக்கும் ஆளாகட்டும் எளிதாய் செய்துள்ளார். உண்மையாக படம் பார்க்கும்போது நாளை நாமும் இப்படி இருக்க வேண்டும் என நினைத்தேன். தயக்கத்துடன் நிறைய வேலைகளை நானும் இது போல செய்துள்ளேன், மனதில் இப்படி இருக்க வேண்டும் என நினைத்து இருக்காமல் நமக்கு அதெல்லாம் வராது என நினைத்ததுண்டு, எப்படி இருக்க வேண்டும் என நினைத்தேனோ இனி அப்படி இருந்து பார்ப்போம் என தோன்ற வைத்துள்ளது இந்த படம். அழைத்து சென்ற  cinema addict க்கு நன்றி. இவர் எழுதும் வலைப்பூவில் கண்டிப்பாக இந்த படத்தின் நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்கலாம்.

படம் நெடுக டெலிபோனும் அவன் மனநிலையை காமிக்கும் வண்ணம் காட்டப்படும் cube  அருமை 

படத்தில் காட்டப்படும் காதல் காட்சிகள் சுவை, வீட்டுக்கு வெள்ளை அடிக்கும் காட்சியில் ஹீரோ முழிக்கும் குழப்பமான முழி எனக்கு புடித்தது 

இவ்வளவு சொல்லியும் படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, இரண்டு மூன்று நாட்களாக வீட்டில் இருந்து வெளிவராமல் இருக்கும் கார்த்திக் அப்படியே மொழு மொழு கன்னத்தில் இருப்பது உறுத்துகிறது, மூன்று நாள் தாடி வைத்திருக்கலாம்.

கதை நடப்பது தற்காலத்தில், காய்கறி விக்கும் பெண்மணி எல்லாம் செல் போன் வைத்திருக்கும் நேரத்தில் கதாநாயகன் அதைப்பற்றி தெரிந்தும் அதை உபயோகிக்காமல் இருப்பது நெருடுகிறது.

காதல் வந்தப்புறம் கூட காதலியுடன் sweet nothings  பேசாமல் இருப்பதும், ஒரு sms  கூட அனுப்பாமல் இருப்பது அட போங்க செல்போன் வாங்காமல் இருப்பது டூ மச்.

அமெரிக்கா என்ன உலகில், இல்லை இல்லை நிலவுக்கு போன கூட ரெண்டு மலையாளி சந்திச்சா மலையலதுல தான் பேசிப்பாங்க, ஒரு மலையாளி யார சந்திச்சாலும் மலையாளம் கலந்த அந்த ஊர் மொழியை பேசுவாங்க ஆனா கேரளால இவர் பாக்கற எல்லா மலையாளியும் தெளிவான இந்தி பேசறது ஒத்துக்கவே முடியாது.

ஆனா இந்த குறை எல்லாம் தெரியாம படத்தை கடைசி வரை கொண்டு போன இயக்குனர்  மற்றும் அனைத்து குழுவினருக்கும் பாராட்டுக்கள்.


மறுபடியும் தமிழில் இந்த மாதிரி படம் வருமா? வரலாம், தல அஜித் நடிச்சா இந்த படம் கண்டிப்பா சூப்பர் ஹிட். தல எங்க ப்ளாக் படிக்கும தெர்ல ஆனா படிச்சு இதுல தமிழா நடிச்சா கண்டிப்பா சூப்பர் ஹிட்.

எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னிக்கவும், எனது மடிக்கணினி விசைப்பலகை என்னை திட்ட வேறு வழி தெரியாமல் தனது எதிர்ப்பை இப்படி காட்டுகிறது. அதனுடன் போராடியே பதிவெழுத வேண்டி உள்ளது. கொஞ்சம் மன்னியுங்கள்  

முதல் முறையாக திரை விமர்சனம் எழுதுகிறேன் அதனால் தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும்.








படம் பார்த்தது புதுப்பிக்கப்பட்ட தேவி திரை அரங்கில், டிக்கெட் வாங்க நண்பன் சென்றிருக்கும் போதே தற்காலிக பைக் பார்க்கிங்கில் இருவர் அடித்த கமெண்ட், " மச்சி சத்தியத்துக்கும் தேவிக்கும் இதாண்டா வித்தியாசம் "  காரணம் அப்போதுதான் திரையரங்கு ஊழியர் சொல்லிய வாக்கியம் " டெம்ப்ரவரி பார்கிங் எல்லாம் புல்லு போயிட்டு ஏழு மணிக்கு வா போ, சொல்லிட்டே இருக்கேன்ல எல்லாம் புல்லுனா மறுபடியும் வந்துகிட்டே இருந்த, ஏன்யா நிக்கற போயா"

ஜாக்கி சேகர் சொலியபடி புதுபிக்கப்பட்ட தேவி சூப்பர் ஆனா சத்யம் அளவுக்கு வராது, நான் என்னதான் மிடில் கிளாஸ் ஆளா இருந்தாலும் கண்டிப்பா படம் பார்க்க போகும்போதும் வரும்போதும் மன நிறைவுடன் வர வேணும் என நினைப்பவன். காசையும் கொடுத்து கண்டவன் கிட்ட எல்லாம் திட்டு வாங்கிட்டு அசிங்கப்பட்டு வரணும் என்றால் அதுக்கு இருபது ரூபாய் அதிகம் கொடுத்து சத்யம்கே போய்விடுவேன். தேவி சத்யம் கிட்டக்கூட வர முடியாது ஆனாலும் சத்யம்க்கு போட்டி கொடுக்க யாராவது வரணும். போட்டி அதிகம் ஆனாத்தான் விலை குறையும் தரம் அதிகமாகும் 

Wednesday, March 3, 2010

கடந்த வாரம்

பத்து நாட்களாக அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு இவு எடுத்தேன், ஓயவே வேணாம் எனும் அளவுக்கு ஓய்வு எடுத்தாயிற்று மறுபடியும் நாளை முதல் அலுவலகம். நினைக்கும்போதே சிறிது சந்தோசமாக உள்ளது.

என்னடா கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் பரபப்பான செய்திகளே வரலையே என்று நினைத்தேன், நினைத்து ஒரு நாளில் நம்ம நித்தியானந்த சுவாமிகள் திருவிளையாடல். எனக்கு ஒன்னு மட்டும் புரியல, சன் டிவி ஏன் இப்படி எல்லாம் காட்றாங்க? அண்ணாமலை பல்கலை கழகத்தில நான்கு மாணவர் பலி, மற்றும் பென்னாகரம் இடை தேர்தல் பிரச்சனை என்று நிறைய வரும்போது இந்த செய்தி வந்ததால் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.
அவர் படுக்கை அறையில் அவர் யாரிடமோ சந்தூசம இருக்கிறார் என்னவோ பண்ணுகிறார், அதை பாம் பிடித்து காட்ட இவர்கள் யார்? சாமியார் என்றால் இப்படிதான் இருக்கணுமோ? அவர் சொல்லும் உபதேசமோ என்னமோ நல்ல இருந்த கேட்டுகோங்க அதுக்காக அவரை நீங்க உங்க வரையறைக்குள் வாழ் என்று சொல்லாதீங்க.  சாமியார் என்றாலே பிரச்சனை தான்.

சச்சின்  200 அடிச்சாலும்  அடிச்சார்  பாவம் விட்ருங்க என்று அவரே கேட்டாலும் விடாத அளவுக்கு அவர் புகழ் பாடுகின்றனர் இந்த மீடியா. இதே மீடியா தான் கொஞ்ச நாளைக்கு முன்பு சச்சின் எதுக்கு இன்னும் இருக்கிறார் கிளம்பு வேண்டியது தான என்று கேட்டன. இவர்களுக்கு பணம் பண்ண எந்த செய்திய இருந்தாலும் போடுவார். பத்திரிக்கை தர்மம் என்று எல்லாம் நாம் மட்டும் நினைத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

கொஞ்ச நாள் முன்னாடி திருநெல்வேலில போலீஸ் காரர் ஒருத்தர் செத்தாரே அத மீடியா என்ன பணிச்சு, அப்படியே மறந்துட்டாங்க இப்படிதான் எல்லாமே. 

மாருதி இந்தியா மற்றும் ஆட்டோ கார் பத்திரிகை இணைத்து நடத்தும்  young driver  எனும் பூட்டி ஆரம்பம் ஆகிவிட்டது. சும்மா எழுதுவம் என ஆன்லைன் தேர்வு எழுதினால் நீ தேர்வாகிவிட்டாய் என்று சொல்லிடாங்க, இனிக்கு பொய் அடுத்த கட்ட தேர்வையும் முடித்தாயிற்று. சிமுலதியன் முறையிலும், நேரடி வாகனம் ஓட்டும்   முறையிலும் தேர்வு . சிமுலதியன்  சரியாய் பணிட்டாலும்  நேரடி ஒட்டுதலில் சிறிய தவறு செய்துவிட்டேன். பியட் வாகனம் ஓட்டிவிட்டு மாருதி எடுக்கையில் வரும் வித்தியாசம் காலை வாரிவிட்டது.  பக்கத்துல வேற ஒரு பொண்ணு என்னடா இப்படி தடுமாறுகிறாய் என்று  பாத்து கேலியா சிரிச்சுடுச்சு. ( ஆனா நான் ஸ்கார்பியோ ஓட்டிக்கிட்டு இருக்கேன்  என பீலா விட்டு பயங்கர காமெடி பண்ணியது அது ஓட்டும்போது).பார்போம் இதில் ஜெயித்தால் டெல்லியில் இறுதி போட்டி. நமக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, போட்டி முடித்துவிட்டு என் காரை எடுத்தால் எனக்கே வித்தியாசமா இருக்கு.

கடந்த பதினைந்து நாட்களில் எப்படியும் ஒரு இருபது படங்கள் பாத்திருப்பேன், எல்லாவற்றையும் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனா பதிவுலகில் படித்து தேர்வு செய்த படங்கள் தான் ஏற்கனவே எல்லோரும் எழுதிட்டாங்க. விண்ணைத்தாண்டி வருவாயா, எல்லோரும் எழுதி கிழித்து தோரணம் கட்டிடாங்க ஆனா எனக்கு படம் புடிக்கல, ஒரு பழைய படத்துல மோகன் மட்டும் ஒரு நடிகை நடித்து இதே கதை வரும் அதில் கூட இருவரும் செத்து ஒன்னு சேருவாங்க. வருண் சொன்னது போல முப்பது வருடத்தில் நாம் ஜாதிக்காக காதலை விட்டுகொடுக்கும் அளவுக்கு மாறியுள்ளோம். கவலை அளிக்கும் போக்கு. ஆனால் படத்தை ரகுமான் இல்லாமல் நினைத்து  பார்த்தால்  தேறுவது ரொம்ப கஷ்டம். கவுதம் மேனன் சார் அடுத்த தலை படத்தையாது  ஒழுங்கா எடுங்க.


நியாபகம் இருகிறதா டயனோரா??

ஒரு காலத்தில் கிரிகெட் விளையாட்டின் நடுவே இந்த விளம்பரத்தை பார்த்தாலே கோவம் வரும் ஆனால் இன்று? 

எங்கள் ஊரிலேயே ஒரு வீட்டில் தான் டிவி இருந்தது அப்போது, நான் மிக சின்ன பையன், ஒன்றாம் வகுப்போ, யு கே ஜியோ  படித்துக்கொண்டு இருந்தேன். நாங்கள் அந்த வீட்டில் போய் டிவி பார்க்கிறோம் என எங்க அப்பா ஒரு டிவி வாங்கிக்கொண்டு வந்தார். ஊரின் இரண்டாவது டிவி ஆனால் அதை கொண்டு போய் எங்க பாட்டி ஊரில் வைத்துவிட்டு வந்துவிட்டார். அக்காவும் அண்ணாவும் படிக்கிறார்களாம் டிவி பார்த்து படிப்பை கோட்டை விட்டுடுவாங்க என்று. 

அப்போது வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை படமும் தான் நிகழ்ச்சி இந்த ரெண்டு நிகழ்ச்சில படிப்ப கோட்டை விடுவாங்க என்றால் இன்று?? இன்றைய தொலைக்காட்சி யுத்தத்தை எங்க அப்பாவெல்லாம் கனவுல கூட நெனச்சு பார்த்து இருக்க மாட்டார்.

எனக்கு ஓரளவுக்கு சந்தோசம், பின்ன நான் மட்டும் தான் பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு அடிக்கடி போவேன். நம்ம டிவி ராஜ்யம் அங்கதான் ஆரம்பம் ஆயிற்று. அந்த ஊரில் முதல் டிவி எங்களுடையது.  வாங்கிய சிறிது நாளில் அந்த ஊரில் இருத்த பெரிய வீட்டில் டிவி வாங்கினார்கள் (இதுக்கெல்லாம் ஒரு ஈகோ யுத்தம் ). ஆனால் அதுவரை என்னுடைய யுத்தம் பெரிதாக நடந்தது.

என்ன அநியாயம் பண்ணுவேன் டிவி பார்க்க வருவோரிடம். நான் தான் முன்னாடி உட்க்காருவேன், அடிக்கடி ஆப் பண்ணி வைத்து விடுவேன், கொஞ்ச காலம் எல்லோரும் டிவி பார்க்க வருவது பெருமையா இருந்தாலும் என்னுடைய தனிமை (  privacy)  கெடுவது  அப்பட்டமாக தெரிந்தது. தெரிய தெரிய கோவம் அதிகமானது, டிவி பார்ப்பதற்காகவே ஊரில் எனக்கு நண்பர்கள் ஆனவர் நிறைய. என்னுடைய விளையாட்டை டிவி பறித்தது, ஊருக்கு பள்ளி விடுமுறையில் மட்டுமே போவேன் அதிலும் விளையாட மட்டுமே நான் ஊருக்கு போவது. ஆனாலும் அந்த நாட்கள் மறக்க  முடியாதவை. மாநில  மொழி திரைப்படம், சித்ரகார், அளிப் லைலா, ஜன்கில்  புக் மோக்ளி, இன்னும் நிறைய. டிவி வர வர பக்கத்துக்கு வீட்டு திண்ணையில் உட்கார்ந்து கதை பேசும் நேரம் குறைந்தது, எனக்கு பிடித்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக குறைந்து இன்று ஊருக்கு போகலாம் என்றாலே வெறுப்பை இருக்கிறது. ஒரு கிராமத்து வாழ்வின் இயல்பை குலைத்த வருத்தம் துளியும் இல்லாமல் புன்னகைத்துக்கோடு இருக்கிறது அந்த டிவி. 

என்ன இருந்தாலும் முதன் முதலில் வாங்கிய டயனோரா டிவி மறக்க முடியாதது.இந்த விளம்பரத்தை தேடி கண்டுபுடிக்கையில் மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்வு. அந்த விளம்பரத்தில் வரும் பாடலை தானாக பிரித்து வைத்து கேட்க வேண்டும் பல இருக்கிறது.  இதில் பார்த்த படங்கள், நாடகங்கள்,கிரிக்கெட் மாட்சுகள் எல்லாமே மனதை வருடி செல்கின்றன. 

எனக்காக நானே

இன்று எழுதுவதாக முடிவு இல்லை ஆனால் இன்றுடன் என்னில் எதோ ஒரு மாற்றம், இதை பதிவு  செய்யவே ஒரு பதிவு. பதினைந்து நாட்கள் விடுமுறையில் நாளை கடைசி நாள், எதுவும் செய்யாமலேயே கழிந்துவிடுமோ என்று அஞ்சிய எனக்கு கடைசி நாளில் எதோ ஒரு மாற்றம் ஆனால் நல்லதொரு மாற்றம் என மனது சொல்கிறது.

காலையில் இருந்து பல வித எண்ணங்கள் மனதில், எல்லாவற்றிலும் எனது தோல்விகளே நினைவில் நின்றாலும் வெற்றி என்பது வெகு தூரம் இல்லை என தோன்றியது அல்லது தோன்ற வைத்தது.  

நாளை ( எழுதும்போது இன்று ) எடுத்துள்ள முடிவுகளை செயல்படுத்துவேனா  என்பதை விரைவில் தெரிவிக்கிறேன்.  என்னுடைய சோம்பேறித்தனத்தை இன்றுடன் முடித்து வைத்து மாற்றத்தை துவக்கிவைத்த விடுமுறையை வாழ்த்துகிறேன்.

எனக்காக நானே