தீபாவளிக்கு ஊருக்கு போக வேண்டாம் என்று நேற்று முடிவு செய்துவிட்டேன், பல காரணங்கள்.
முதலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை, கடைசி நாளில் கண்டிப்பாக பேருந்திலோ இல்லை ரயிலிலோ கிடைக்காது என்பது தம்மாதூண்டு போடுசுக்கு கூட தெரியும். நமக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பேருந்தில் டிக்கெட் வாங்கலாம் அனால் அன்று பேருந்தில் செல்வது போல பெரிய கொடுமை இருக்காது. இருக்கைக்குமேல பலரை ஏற்றுவார்கள் அவர்கள் அனைவரும் காலுக்கு அடியில் அமர்ந்து பயணம் செய்வார்கள், நமக்கும் தொந்தரவு மற்றவர்க்கும் தொந்தரவு.
இரண்டாவது காரணம் மின்சாரம் துண்டிப்பு, கரூரில் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் மின்சாரம் தடைபடுகிறது, இதுல ஊருக்கு போய் என்ன செய்வது, நிம்மதியாக தூங்க முடியாது, சிறப்பு திரைப்படம் பார்க்க முடியாது, வெட்டியா உட்கார்ந்து இருக்க இங்கயே இருக்கலாம்ல.
இப்போது ஊர்பக்கம் ஒரே பேச்சு உங்க வீட்ல யு பி எஸ் போட்டாச்சா? என்பதுதான், ஒரு மதத்திற்கு முன்புவரை இல்லை என்றால் இளக்காரமான பார்வை பதிலாக கிடைத்தது அனா இப்போ 15000 ரூபாய் போட்டு அதை மாட்டியவர்கள் இப்போது அதை சார்ஜ் செய்ய மின்சாரம் இல்லாமல் தடுமாறுகிறார்கள். இப்போதைக்கு சூரிய ஒளியில் மின்சார விளக்கு பற்றி யோசித்து கொண்டு உள்ளேன். அதுக்கு கொஞ்சம் அதிக செலவு பிடிக்கும் என்று நினைக்கிறேன் அனாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
தீபாவளி விடுமுறையிலாவது நிம்மதியாக வீட்டில் தூங்கலாம் என்று நினைத்தால் மாமாவிடம் தொலைபேசி அழைப்பு வந்தது, திருப்பதிக்கு செல்லலாம் தீபாவளி விடுமுறைக்கு என்று; மறுக்கவும் முடியாது அனாலும் நமக்கு கூட்டம் என்றால் ஒத்துக்கொள்ளாது, என்ன செய்ய ஏதோ தலை ஆட்டி வைத்திருக்கிறேன். அக்காவிடம் பேசும்போது நல்ல மாட்டிகொண்டாயா என்று சிரிக்கிறார் பின்ன, அவர்கள் கூபிடும்போது எனக்கும் கூட்டத்திற்கும் ஒத்துகொள்ளது என்று பலமுறை தவிர்த்திருக்கிறேன். இப்போது அதற்க்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமாம், கடவுளை தரிசிக்க கூட முன்பதிவா? அங்கும் இடமில்லை என்று சொல்கிறார்கள்.
இனி இன்னும் இரண்டுமாதத்திற்கு விடுமுறையே கிடையாது, ரொம்ப கொடுமை.
2 comments:
8 மணி நேரம் இல்லை... 5 மணி நேரம்தான்
நன்றி கூடுதுறை அவர்களே,
அறிவித்தது என்னமோ 5 மணி நேரமாக இருப்பினும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தடைபடுகிறது
நள்ளிரவு 12 முதல் 3 வரை
காலை 10 முதல் 2 வரை
மாலை 8 முதல் 9 வரை மொத்தமாக 8 மணிநேரம் தடை படுகிறது, சென்ற வார கரூர் நிலைமை.
Post a Comment