Wednesday, February 18, 2009

காதலர் தினம் எனக்கு மட்டும் ஏன் இப்படியே கழிகிறது?

காலையில் எழுந்தேன் எழுந்தவுடன் நண்பர்களுக்கு பேசினால் அனைவரும் பிசி, சரி என்று வழக்கம் பல நண்பரின் கார் மெக்கானிக் சென்டர்க்கு காரை செலுத்தினேன், அவரிடம் பேசிவிட்டு அன்று காருக்கு சில வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைத்து மதியம் புதுபேட்டைக்கு சென்றோம். வழக்கமாக கார் நிறுத்த உடனே இடம் கிடைக்கும் ஆனால் அன்று அரைமணிநேரமாக தேடியும் இடம்கிடைக்காமல் திண்டாடி மிகவும் டென்சன் ஆகி ஒரு வழியாக சென்று வண்டிக்கு அல்லாய் சக்கரம் விசாரித்தால் புது சக்கரம் விலையில் கூறினார்.

மனது சரி இல்லாமல் திரும்பி வந்து வரும்போது திடீரென்று முடிவெடுத்து புது டயரை மாற்றுவ்ம் என்று முடிவெடுத்து வாங்கி மாறிவிட்டோம். பேபி நகரில் இருந்து வேளச்சேரி நூறடி சாலைக்கு செல்ல மிக நெரிசல் மிகுந்த இரவு ஏழு மணிக்கு கிளம்பினோம். எல்லா வண்டிகளும் நின்றிருக்க ஒருவர் மட்டும் எதிர் திசையில் சென்றார்,ஒரு வழியாக சாலையின் வலது புறம் உள்ள சர்வீஸ் சாலையில் சென்று icici வங்கிக்கு அருகில் வலது புறம் திரும்புகையில் எதிரில் L போர்டு மாடி ஒரு வண்டி. அவசரமாக என் வண்டியை நிறுத்தினால் பின்னால் வேறொரு வண்டி லேசாக மோதியது.அந்த எதிர் திசையில் சென்றவர்தான் மோதியது. பெரிய அடி இல்லை வண்டிக்கு அதனால் வண்டி னரிடம் இந்த ஊடுனரை வைத்திருந்தாள் இரண்டு மதத்தில் உங்களை காலி பண்ணிடுவான் என்று எச்சரித்து வந்தேன்


இன்னிக்கு என்னடா இப்படி எல்லாம் நடக்குது என்று நினைத்து அவரிடம் சிறிது சண்டை போட்டு வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்து கிளம்பினோம். சரியான தலைவலி.வீட்டுக்கு வந்து தங்கினேன். என் காதலர் தினம் இப்படியாக கழிந்தது.

இந்த வருடமும் யாரையும் காதலிக்க வில்லையே என்று எந்த தொந்தரவும் இல்லாமல் எனக்கு தோன்றுவதை செய்யும் சுதந்திரமிருப்பதால் மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறேன்.

1 comment:

லேகா பக்க்ஷே said...

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.