Friday, August 21, 2009

ஈரம் மற்றும் ஆதவன் பாடல்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஈரம் படத்தின் பாடல்கள் கேட்டேன். நண்பனிடமிருந்து குறுந்தட்டை வாங்கி ஒரு வாரம் கழித்து ஒரு நேரத்தில் சும்மாகேட்டு பார்ப்போமே என்று கேட்டேன்.முதல் பாட்டு சுசித்ரா பாடி இருக்கிறார் ஆனால் அவர் குரல் சிறிது மாற்றத்துடன் இருக்கிறது. " தரை இறங்கிய பறவை போலவே " என்று ஆரம்பிக்கும் பாடல் ..
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கேட்ட நிமிடத்திலேயே பிடித்து விட்டது
இன்னொரு பாட்டு மழை மழை என்று, அதுவும் மிக அருமையாக இருந்தது. மொத்தம் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு theme மியூசிக்.
மொத்தத்தில் அருமையான இசை மற்றும் பாடல்கள்.


நேற்று ஆதவன் பாடல்கள் கேட்டேன். சிறிது நேரமே கேட்டாலும் அப்படி ஒன்றும் உடனே பிடிக்க வில்லை, வழக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கேட்ட உடனே கண்டு பிடித்து விட முடிகிறது.
பாடல்கள் என்னை பொறுத்தவரை என்னை impress பண்ணவில்லை. கார்கி சொன்னதற்காக மறுபடியும் காரில் கேட்டு பார்க்கிறேன்.


அடுத்த மாதத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்காவது செல்லலாம் எங்கு இருக்கிறேன். ஆனால் எங்கு செல்வது?? நீண்ட பயணம் மேற்க்கொள்ளலாம் என்று முடிவு பதிவர்கள் யாருக்கேனும் யோசனை இருந்தால் கூறவும்.

மனதில் திடீரென்று எண்ணம், நாம் ஏன் ஒரு நாள் எந்த இலக்கு ம் இல்லாமல் கிளம்பி ஒரு வாரம் பயணித்து வரக்கூடாது என்று, பார்ப்போம் என்னமுடிவு எடுக்கிறேன் என்று.

இன்று கந்தசாமி பார்க்கலாம் என்று இருக்கிறேன், பார்ப்போம் இரவு காட்சி மாயஜாலில் கிடைத்தால் செல்லலாம். படம் நன்றாக இருப்பதாக நண்பன் கூறுகிறான். வடிவேலு வரும் காட்சிகள் கொஞ்சம் இல்லை ரொம்பவே bore அடிக்குதாம். சற்று முன் கிடைத்த தகவல் படி.

2 comments:

Karthik said...

என்னையும் ஆதவன் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. நான் ஓசி கார் தேட வேண்டும். ஈரம் பாடல்கள் கேட்கவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

கந்தசாமி பார்த்தால் எப்படி இருக்கிறது என்று நாலு வரி சொல்லவும். :)

Hindu Marriages In India said...

கேளுங்கள்