Monday, November 30, 2009

வார இறுதி

நானும் ஷாப்பிங்கும் ரொம்ப தூரம் போல நேற்று அக்காவுடன் டி நகருக்கு சென்றேன், ஷாப்பிங் தான், சென்னையில் இவ்வளவு வருசமா இருக்க டி நகருக்கு வந்தது இல்ல என்று சொல்றியே என முதல் அடி விழுந்தது எனக்கு, ஆமாம் நான் டி நகருக்கு போனதே இது வரை ஒரு மூன்று முறை இருக்கும்.


பார்க்கிங் தேட ரொம்ப கஷ்டமாய் போய்விட்டது, பனகல் பார்க் பகுதியை ஒரு நான்கு முறை ரவுண்டு அடித்தும் கரை நிறுத்த இடம் கிடைக்கவில்லை. ஆரம்பமே மோசமாய் இருகுதேட என நனைத்து, எல்லோரையும் இறக்கி விட்டு பின்னர் என் நண்பன் வீட்டிற்க்கு அருகில் நிறுத்தி விட்டு சென்றேன்.

அதென்னங்க நானா தனிய எங்க போனாலும் ஒரு பொண்ணு எதிர்த்த மாதிரி வரதில்ல, நம்ம பாக்கறது இல்ல ஆனா அக்கா, அம்மா கூட போனா மட்டும் நிறைய பொண்ணுங்க வராங்க , சில சமயம் நம்மை குறு குறு என்று பாக்குறாங்க???

 ஆர் எம் கே வீ , எஸ் கே சி, மற்றும் பல பல குட்டி கடைகள் என முடிக்க நான்கு மணி நேரம் ஆனது. ஆனாலும் மனதிற்கு பிடித்த மாதிரி பொருட்கள் வாங்கினோம்.


டி நகரில் எதுவும் பண்ண முடியாது, முக்கியமாய் ஷாப்பிங். வீட்டில் பொண்ணு பாகரங்க முதல் கண்டிஷன் : பொண்ணு ஷாப்பிங் கூடி போக சொல்ல கூடாது, அதுலயும் டி நகர் பக்கம் கூட்டி போக சொல்ல கூடாது.



அடுத்த ஞாயிறு காலை சென்னையில் ஒரு குரூப் மீட் இருக்கு. சென்னையில் உள்ள பியட் பாலியோ ( FIAT PALIO USERS) உபயோகிப்பாளர்கள் எல்லோரும் மீட் பண்ணுகிறோம். yahoo groups ல இதற்கென்று ஒரு குரூப் இருக்கு. இந்தியாவில் கார் உபயோகிப்பாளர் என்று ஒரு குறிப்பிட மாடலுக்கு ஆரம்பிக்க பட்ட முதல் குரூப். மிகவும் உபயோகமான குரூப். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களுடன் புது நண்பர்களும் கிடைப்பார்கள்.

பதிவுலகில் யாரேனும் பியட் பாலியோ உபயோகிப்பாளர்கள் இருந்தால் பயனடையலாம். பியட் கார்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அணுகலாம். என்னவோ தெரியவில்லை எனக்கு தெரிந்து எத்தனையோ கார்கள் இப்பொது இருக்கின்றன ஆனாலும் அதை வாங்க நிறைய ஆட்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் காரின் மீது ஒரு விதமான emotional attachment வைத்திருப்பது இல்லை. எனக்கு தெரிந்து பியட் கார் உபயோகிப்பாளர்கள் இதில் விதிவிலக்கு.
இந்த வாரமும் எந்த படமும் பார்க்கவில்லை, நண்பன் பாவமாய் யோகி பார்க்க போயுள்ளான். பாவம் புள்ளை தப்பிச்சோம் என்று வந்துள்ளது.
 
நண்பர் பிரேம் குமார் மறுபடியும் பதிவுலகிற்கு வந்துள்ளார் மேலும் டிவிட்டருக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளார் அவருக்கு இந்த வார வரவேற்பு
 
மேலும் ஒரு வரவேற்ப்பு, நமது ரூம்மேட் நண்பர் செண்பக ராஜன். பதிவுலகில் புதிதாக அடி எடுத்து வைத்துள்ளார், அவரின் பதிவுகளை இங்கு காணலாம் . இவரை பற்றி விரிவாக அடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.


வார இறுதி இவ்வளவு வேகமாய் சென்றது கஷ்டமாய் உள்ளது. காலையில் நெகு நேரம் தூங்க முடியவில்லை, சனிக்கிழமை கலையில் அண்ணா வருவதை இருந்ததால் ஐந்து மணிக்கு எழுந்து கத்திபாரா சென்று கூட்டி வந்தேன், ஞாயிறு காலை நண்பன் பெங்களூரில் இருந்து வந்தான், நான்கு மணிக்கு சென்று அழைத்து வந்து, எனதுகாலை தூக்கம் எங்கோ சென்றது.

9 comments:

தண்டோரா ...... said...

நல்லா எழுதறீங்க பாஸ்..எழுத்துப் பிழை சரி பண்ணுங்க(கரை,கலை)

ச.பிரேம்குமார் said...

வரவேற்புக்கு நன்றி தனா :-)

ச.பிரேம்குமார் said...

//பொண்ணு பாகரங்க முதல் கண்டிஷன் : பொண்ணு ஷாப்பிங் கூடி போக சொல்ல கூடாது, அதுலயும் டி நகர் பக்கம் கூட்டி போக சொல்ல கூடாது.//

தி.நகர் இல்லேன்னா வேளச்சேரி, அடையார், சிட்டி செண்டர் அப்படின்னு சுத்தலாம்..... ஆனா ஷாப்பிங்கே செய்யாத பொண்ணு?!!! OMG

Karthik said...

ஹையா தல பதிவெல்லாம் போட்டிருக்கீங்க?! வாழ்த்துக்கள்! ;))

சிஸ்டர்ஸால இருக்கற ஒரே யூஸ் அதானே! ;))

DHANS said...

@ தண்டோரா

நன்றி பாசு, அவசரத்தில் எழுதியதால் இவ்வாறு நேர்ந்துவிட்டது, பிழை இல்லாமல் எழுதுகிறேன்

DHANS said...

//ஆனா ஷாப்பிங்கே செய்யாத பொண்ணு?!!! OMG //

நான் என்ன மணல் கயிறு மாதிரி பத்து கண்டிசனா போடறேன், ஷாப்பிங் போக கூடாது எவ்ளோதான், சின்ன கண்டிசன்.

DHANS said...

கார்த்திக்
இப்ப உன்னவிட அதிகமா பதிவு போடறேன் நான் :)

BADRINATH said...

நண்பரே… ஒரு சிறிய சந்தேகம்…
சமபதத்ில் கார் வாங்கயிிருக்கிறேன்..
tubelesss டயர் பற்றி விசாரித்தேன்..
அவர்கள கூறுவது.. வேண்டாம் காரணம்.. tubless tireகள் பஞ்சர் எளிதில் ஆகாது ஆனாலும் கொஞ்ச துாரம் ஒட்டிச் செல்லலாம்.. பிறகு அதை துார எறிந்து போட வேண்டியிருக்கும் என்கிறார்கள்… அத்தனை விலை கொடுத்து அப்படி பஞ்சர் ஆனால் துாற எறியத்தான் வேண்டுமா.. ,இல்லை வேறு வழியிருக்கிறதா… அதாவது அதை பஞ்சர் ஒட்ட முடியுமா…?

DHANS said...

dear badrinath

you can go for tubeless tyre. punctures can be repaired.just like normal tyre but they will use special tool so each punture can cause you 100 rupees.

tubeless tyres are safe as the chances of burst is very less. you have to through the tyre only if you have got deep cut in sidewall but you need to do the same if you use tube tyres.

so go for tubeless,