Showing posts with label புல் மீல்ஸ். Show all posts
Showing posts with label புல் மீல்ஸ். Show all posts

Monday, December 6, 2010

புல் மீல்ஸ் -3

விக்கிலீக்ஸ் ஊரையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டு இருக்கிறது, அமெரிக்க  ட்ரவுசர்  கழண்டு போய் ரொம்ப நாள் ஆச்சு, அத இப்போ ஊருக்கே படம் புடிச்சு காட்டி இருக்கிறது விக்கிலீக்ஸ்.  இன்னும் பல ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
அப்படியே நம்ம 2G  ஊழல் பத்தியும் ஆவணங்களை வெளியிட்டா நல்ல இருக்கும். யாராவது அந்த விக்கிலீக்ஸ் ஓனருக்கு மெயில் அனுப்பி இந்த டாகுமென்ட் எல்லாம் லீக் பண்ண சொல்லுங்கப்பா.

ரத்த  சரித்திரம் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்த அளவுக்கு நான் எதிர்பார்த்தேனோ அதை பூர்த்தி  செய்துள்ளது என்று நினைக்கிறேன் ரத்த சரித்திரம் போகலாம் என நினைத்து சனிகிழமைமுடிவு  செய்து கடைசியில் சிக்கு புக்கு பார்த்தாயிற்று. படம் நல்லாத்தான் இருக்கு, ஜாலியா போகுது ஆனாலும் ஏனோ மனசுல நிக்கவில்லை.  அப்பா ஆர்யா நல்லா இருக்கார், பிளாஷ் பேக் காட்சிகள் நன்றாக இருந்தன. என்ன இருந்தாலும் ஜீவா படம் அளவுக்கு வரல... அது மாதிரியே கலர்புல் படமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர்.

மந்திரப்புன்னகை படம் பார்த்தேன், சொல்லத்தெரியல என்னை மிகவும் கவர்ந்துடுச்சு. படத்துல அந்த கதாநாயகன் பாத்திரம் என்னைக்கவர்ந்தது. இயக்குனருக்கு கண்டிப்பாக பலவற்றை தேடிப்படிக்கும் பழக்கம் உள்ளது. அவரின் கதாநாயகன் குணம் அவர் படித்த எதோ ஒன்றின் ஈர்ப்பு என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும் கண்டிப்பா. எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தா பலருக்கு படம் புடிக்காது அதனால் இந்தப்படத்தின் வெற்றி எப்படி என்று எனக்கு தெரியவில்லை. கடைசி இருபது நிமிடங்கள் எனக்கு பிடிக்கவில்லை.

எந்திரனுக்குப்பிறகு உருப்படியா ஒரு படமும் இன்னும் வெளிவரவில்லை, எல்லாம் மொக்கைப்படமாக வந்துகொண்டு இருக்கின்றது.யாராவது ஒரு நல்ல ஹிட் படத்த குடுங்க ப்ளீஸ்.  பார்க்க நாங்க ரெடி படம் வெளியிட நீங்க ரெடியா ?

ஈசன் படம் பாட்டு கேட்டேன், நன்றாக இருக்கின்றது, எனக்கு பிடித்த பாடல் "இந்த இரவுதான்" என்னும் பாடல் மற்றும் "ஜில்லா விட்டு"என்னும் கிராமியப்பாடல். நன்றாக இருக்கிறது, டிரைலர் கூட மிரட்டலாக இருக்கிறது. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன் சசிக்குமாரிடம் இருந்து பார்க்கலாம்.

"விடாமுயற்சி விஸ்பரூப வெற்றி" கண்டிப்பாக உண்மை, என் நண்பன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை IITயில்  Phd  சேர இறுதிக்கட்ட நேர்முக தேர்வை வெற்றிகொண்டுவிட்டான். என்ன  நண்பன் முனைவர் பட்டம் பெறுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதற்கெல்லாம் அவனது விட முயற்சியும் அவன் வாழ்வில் சந்தித்த சில கருப்பு நாட்களும் உந்து சக்தியாக இருந்தது எனக்கு தெரியும். வாழ்த்துகள்    நண்பா. 

லாரி ஓனர் எல்லோரும் போராட்டம் நடத்துறேன்னு சொன்னாங்க அப்பவே தெரியும் கண்டிப்பா இது நடக்காதுன்னு. அதுபோலவே உடன்படிக்கை ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. நல்லா விஷயம் தான் மறுபடியும் பெட்ரோல் தட்டுப்பாடு, காய்கறி விலை ஏற்றம் என நம்மளால தாங்க முடியாது சாமி.  

குடும்ப அட்டை பற்றி பேசும்போது நண்பர் சொன்னது, "நமக்கெல்லாம் எட்டு பக்கத்துல ரேசன் கார்டு இருக்கு ஆனா நம்ம ஊர் பெரிய தலைவர் ரேசன் கார்ட பாக்கணும் எப்படியும் அவர் ஒருத்தர்க்கு மட்டும்  எண்பது பக்க கட்டுரை நோட்டுல தான் ரேசன் கார்டு இருக்கும் போல" என்று.  நெனைக்கும்போதே கண்ணக்கட்டுதே...

மழை போட்டு உலுக்கிக்கொண்டு இருக்குது சென்னைல, பத்து நாளா ஊர்ல பெய்த மழையைப்பற்றி இந்த நம்ம ஊரு சில்வண்டு செய்தி சேனல்களுக்கு தெரியல மூணு நாளா பெய்த சென்னை மழைக்கு மைக்க,கேமராவ தூக்கிக்கிட்டு கிளம்பிட்டாங்க தெருத்தெருவா. சென்னைய விட்டு வெளிய போக போக உங்களுக்கு நிறைய விஷயம் கிடைக்கும் என்று நான் சொன்னால் மட்டும் புரியுமா உங்களுக்கு.  வழக்கம் போல வீட்டுக்கு வெளிய தண்ணி. ஒரு நாள் இரவுல ஊரே தண்ணியாகி வெளிய போக முடியல.பார்க்கலாம் நாளைக்கு வேலைக்கு போக முடியுமா என்று. 

நான் எடுத்ததில் சில படங்கள்.. வேளச்சேரியில் மிதக்கும் ஒரு தெரு 






Sunday, November 21, 2010

புல் மீல்ஸ் -2

இரண்டு வாரம் அலுவலக விசயமாக கிழக்கு இந்தியா பக்கம் போய்விட்டு வந்தாச்சு, பயணம் நல்லபடியாக முடிந்தது, பயணக்கட்டுரை கூடிய விரைவில். ( இதெல்லாம் தேவையான்னு நிறையப்பேர் கேட்கறது எனக்கு மைன்ட் வாய்சுல கேட்குது, இதுகேலாம் அசரமாடோம்ல)

இனிக்குதான் உத்தமபுத்திரன் படம் பார்த்தேன், கொய்யால மொக்க படம், அதுவும் கதாநாயகிய கூட்டிகிட்டு போகும்போது வில்லங்க தொரதுவாங்க, இவங்க கார் கதவு பிசுகிட்டு போய்டும், அனா அடுத்த சீன்லயே கதவோட கார் ஒரு பலத்துல இறங்கும், மறுபடியும் இறங்கி நின்ன உடனே கதவு காணாம போய்டும். 

தண்டபாணி என பொய் பெயர் சொல்லுவர் அதை உண்மைன்னு நெனச்சு கதாநாயகி பேசிகிட்டு இருப்பா ஆனா கடைசில அவளை தோழி வீட்டில் கொண்டு விடும்போது சிவா என சரியா பெயர் சொல்லி அழைப்பா, அதுவரை கதாநாயகன் உண்மைய சொல்லியிருக்க மாட்டார், அடுத்த சீன்ல தண்டபாணி என அழைத்துப்பேசுவார் 

கொய்யால இவங்க ஊத்துக்குளி கவுண்டனுங்க என்று வில்லன்களை லாட்டினாங்க ஆனா எனக்கு தெரிஞ்சு எந்த கவண்டனும் இப்படி இருந்தது இல்ல, யோவ் டைரக்டர் ஒரு படம் எடுத்தா அத பத்தி நல்லா ஸ்டடி பண்ணி எடுக்கணும், ஆந்திரால எடுத்த படத்த தமிழில் எடுத்தா ததமிழ்நாட்டுக்கு தகுந்த மாதிரி மாத்தனும், டைரக்டர் ஒரு தடவையாது ஊத்துக்குளி போயிருக்காரா தெரியல.

கொங்கு நாடு கட்சி எதிர்ப்பு தெரிவிததுல ஆச்சரியம் இல்லை, முஸ்லிம் கேரக்டர் என்றால் தொப்பி வைப்பது, அய்யர் என்றால் சட்டை இல்லாமல் குடுமி வைப்பது, கவுண்டர் என்றால் நாட்டாமை மாதிரி குடுமி வைப்பது, கணக்குப்பிள்ளை வைப்பது யோவ் திருந்துங்கப்பா. பாதிக்கும் மேல செம மொக்கை, விவேக் ஓரளவு பரவால்ல, இதுக்கு வ படம் கூட ஓகே. 

தீவாளிக்கு வந்ததுல எதுவும் சரி இல்ல, மைனாக்கு முதலிடம், வ இரண்டாம் இடம், வேற வழியே இல்லாம அன்னபோஸ்ட்டா உத்தமபுத்திரன் மூன்றாம் இடம்.

நாம ஊர்ல இல்லாத நாளில செம மழை சென்னைல, ஊருக்கு காலடி வைத்த அடுத்த நாள் வெயில் கொளுத்துது, வாரக்கடைசி ஆனா மழை பெய்யுது, முன்னாடி எல்லாம் செப்டம்பர் அக்டோபர் மாசத்துல மழை பெய்யும்  இப்போது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்கிறது, இதுதான் காலநிலை மாற்றமோ?

மேயர் என்று சொல்லிக்கிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒருத்தர் வேளச்சேரிக்கு வந்தார்.  மழை நீர் வடிகால் கலவை வெட்டுகிறோம் என்று தெரு பூரா கட்அவுட் வச்சு ஒரு புல்டோசர் கொண்டு வந்து குழி பறிச்சு அடுத்த நாள் பேப்பர்ல பெட்டி கொடுத்தார். பறித்த குழி இன்னும் அப்படியே இருக்கு மழை பெய்ததுல தெரு பூரா தண்ணி, சாக்கடை தண்ணி கலந்து நாறுது, கொய்யால ஏங்கடா பக்கத்து தெருவில ஒரு IAS  ஆபிசர் வீடுகட்டி வந்த உடனே அங்க மட்டும், அதுவும் அந்த ஆள் வீட்டுக்கு முன்னாடி மட்டும் ரெண்டு இன்ச் உயரமா ரோடு போடுறீங்க, ஒழுங்கா இருந்த ரோட்ட போன மழையில் தண்ணி தேங்கியது என்று பறித்து விட்டு அப்படியே விட்டுடீங்க. கடந்த 5  வருசமா மழை பெய்தால் கடசில வந்து தெருவ பறிச்சு மழை தண்ணிய ஒரு வாரம் கழிச்சு எடுத்து விடுவீங்க, அப்புறம் ரோட்ட தோண்டி அப்படியே விட்டுடறீங்க.  ஏதும் உருப்படியா செஞ்ச மாதிரி தெரியல. தேர்தல் வருதுங்க சார், இது வரை நான் வோட்டு போட்ட யாரும் டெபாசிட் வாங்கினது இல்ல பாத்துகங்க என் வோட்டு உங்களுக்கு வேணுமா வேண்டாமா என்று முடிவு செஞ்சுக்கங்க.

எஸ்.ஆர்.பி டூல்ஸ் ல இருந்து தரமணி வரும் சாலை (அப்படி ஒன்னு இருக்கா??) சாலையே இல்ல, நேத்து அந்த சாலையில் போகும்போது அய்யவையோ அம்மாவையோ ஒரு தடவ அந்த சாலைல பயணிக்க சொல்லணும் என்று மனசுல பயங்கரமா தோன்றியது. ஏன் இந்த கொலவெறி???

ராஜீவ் காந்தி சாலையில் (டைடல் பார்க்கில் இருந்து எஸ் ஆர் பி டூல்ஸ்) சென்று வலது புறம் திரும்பி தரமணி வழியாக வேளச்சேரி செல்லும்போது எஸ் ஆர் பி சிக்னலில் வலது புறம் திரும்பினேன். எனக்கு வலது புறம் ஒரு குட்டி யானை, இடது புறத்தில் இருந்து ஒரு பல்சர் சரலென உள்ளே புகுந்தது நான் எனது காரின் வேகத்தை குறைத்து வலப்புறம் சிறிது திருப்பியதால் பல்சர் தப்பியது. என்னால் குட்டியானை வலப்புறம் சாலை தடுப்பில் இடிக்குமாறு சென்று நின்றது, யாருக்கும் அடி இல்லை, சிறிது நேரத்தில் குட்டியானையில் வந்தவர் என்னிடம் "அறிவில்லையா என ஆரம்பித்து சண்டை போட,  நான் பல்சர்காரன் குறுக்கே வந்தான் அவன இடிச்சா  அவன் உயிருக்கு ஆபத்து ஆனால் உங்க வண்டிய இடிச்சா நம்ம ரெண்டு வண்டிக்குத்தான் அடிபடும் அதான்" என்று கூறினேன். அவர்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை, அவர்களுக்கு மனித உயிரை விட குட்டியானை அடிபடக்கூடாது என்றுதான் நினைப்பு. அடுத்து என்ன வண்டியில் பாட்டு சத்தத்தை அதிகம் வைத்து சன்னலை மூடினேன். இருந்தும் அந்த குட்டி யானை ஓட்டுனர் என்னை இடிக்குமாறு சென்று ஒதுக்கி விட்டு சென்றார், இதில் யாருக்கு அறிவில்லை என தெரியவில்லை. பல்சர் ஓட்டுனர் செஞ்ச தப்புக்கு யாரெலாம் டென்சன் ஆகாரங்க பாருங்க.

சாலையில் இரு சக்கரமவாகனம் ஓட்டுபவர்கள்  சிலர் மெதுவாக பாதுகாப்பாக செல்கின்றனர் ஆனால் அவர்கள் வலது ஓரமாகவோ இல்லை இடது ஓரமாகவோ சென்றால் மற்ற வண்டிகள் முன்னால் செல்லலாம்.  ஒரு சிலர் நாடு சாலையில் பின்னால் வரும் வாகனத்தை செல்ல விடாமல் ஒதுங்காமல் செல்கின்றனர்.  இருசக்கரவாகனம் ஓட்டிவிட்டு கார் ஓட்டும்போது மட்டுமே நாம் பைக்கில் செல்லும் போது செய்யும் தப்புகள் தெரிகின்றது.

அண்ணன் ஜாக்கி கண்டிப்பாக இத ஒத்துகொள்ள மாட்டார், ஒரு நாள் அவர்க்கு கண்டிப்பா தெரியும் :)

ராசா டிரெஸ்ஸ கழட்டிட்டு அடுத்து யார் டிரெஸ்ஸ கழட்டலாம் என்று எல்லோரும் கிளம்பிவிட்டனர், சொல்றதுக்கு ஒன்னும் இல்ல கூடிய விரைவில் இதை மறைக்க(மறக்க) தமிழ்நாட்டில் ஏதும் பெரிய சம்பவம் நடக்கலாம்,உள்மனசு சொல்லுது மக்களை திசை திருப்ப வேறு எதுவும் செய்து விடுவாங்களோ என பயமா இருக்கு.

Thursday, September 16, 2010

புல் மீல்ஸ்

எல்லோரையும் போல கலந்து கட்டி அடிக்கறதுக்கு நானும் ஒரு பெயர் வைத்து விட்டேன் -புல் மீல்ஸ்
ஊரெல்லாம் எந்திரனைப்பற்றிய பேச்சு, ஆம் இது ஒரு பெரிய படம் தான், அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் ஆனால் ஷங்கர் ஒரு பெரிய இயக்குனர் அப்படி இப்படி என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை



இந்தியன் முதல்வன் வரை அவரைப்பற்றிய பிம்பம் என்னுள் வேறு ஆனால் அவர் matrix  படத்து சண்டைக்காட்சிகளை அப்படியே சுட்டு (சரி inspiration ) தனது அந்நியனில் நுழைத்தாரோ அப்போதே அவர் மீதிருந்த அபிப்ராயம் மாறிவிட்டது. 
ஒரு technologyயை பார்த்து அது போல எடுக்க வேண்டும் என்றால் அதை உபயோகப்படுத்து வேறு மாதிரி எடுக்க வேண்டியதானே அதை விட்டுவிட்டு அப்படியே அதை எடுத்தால்?

அத விடுங்க எந்திரன்  ட்ரைலர் நல்லாத்தான் இருக்கு ஆனா  mask மற்றும் i-Robot  படம் நியாபகம் வருவதை மாற்ற முடியவில்லை.
நல்லா இருந்த சரிதான்.

சென்னை மாநகராட்சி மழை முடியும் வரை சாலைகளை தோண்ட வேண்டாம் என முடிவெடுத்து உள்ளதாக கேள்வி, சரி அதுக்காக தோண்டிய  சாலைகளையும் மூட வேண்டாம் என்று நினைத்து விட்டார்களா? நிறைய இடத்தில தோண்டியது தொண்டியவாறே உள்ளது.
வேளச்சேரி தரமணி சாலையில் திடிரென்று நடுவில் divider  கட்டினர், எதுக்கு என்னனு தெரியவில்லை ஆனால் பாதி  கட்டி முடிக்காமலே அப்படியே விட்டுவிட்டனர். ஒரு பகுதி சாலை பயனில்லாமல் போய்விட்டது, அந்த பகுதியில் சாலையை கடப்பது எவ்வளவு கடினம் என்று தினமும் என்னை மாதிரி யாராவது கடந்து பார்த்தால் தெரியும். அய்யா ஒன்ன செஞ்சா உருப்படியா செய்ங்க இல்லாட்டி செய்யாதீங்க இப்படி நாய் வாய் வச்ச மாதிரி பதிலா விட்டு போனா எப்படி??

பழைய மகாபலிபுரம் சாலையில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் கண்ணைக்கட்டுகிறது, இதில் போக்குவரத்து காவல்துறை நாடு நடுவில் திடீர் barigadeகளை வைத்து உள்ளனர், இரவில் வேகத்தை குறைக்க வைக்கலாம் ஆனால் பகலில் காலை நேரத்து முக்கிய நேரங்களில் அதுவே போக்குவரத்து நெரிசல்களை உண்டு பண்ணுகிறது, ஒன்றரை லேன் மட்டுமே உள்ள ரோட்டுக்கு சுங்க வரி வேறு, வாயில அசிங்கமா வருது, ஏண்டா ரெண்டு வருசமாவாடா சாலைய  போட்டு முடிக்கறீங்க? ஓரளவுக்கு போடுங்க போட்டு முடிச்ச காச வாங்க ஆரம்பிக்கலாம் என்று சொன்ன ஆறே மாசத்துல இந்த ஒன்றரை சாலையை போட்டீங்க இப்ப?? ஓட்டு  கேட்டு வாங்க பேசிக்கறேன்.....

நண்பேன் டா! இது ரொம்ப பாப்புலர் ஆகிடுச்சு, அடுத்து ஏதும் வரும் வரை இனி அடிக்கடி பலரிடம் இதை கேட்கலாம்.

பெண்ணினம் அவர்கள் சுதந்திரம் என்று பேசறாங்க அதுக்கு எதிர்ப்பு கொடுக்கறாங்க, ரெண்டு பக்கமும் நியாயம் இருக்க மாதிரி இருக்கும் அதான் உண்மையும் கூட, இப்படி ரெண்டுமே இல்லனா வாழ்க்க போர் அடிக்கும்ங்க, அதனால சண்ட போட்டுகிட்டே வாழுங்க.

முரளி இறப்பும். சொர்ணலதா இறப்பும் மனதை பாதித்த விஷயம், எவனோ ஒருவன் யாசிக்கிறான் என அலைபாயுதேவில் வரும் அந்த பாடலை  வேறு யார் பாடி இருந்தாலும் நான் இந்த அளவுக்கு ரசித்து இருப்பேனா தெரியவில்லை, அதே போல காலமெல்லாம் காதல் வாழ்க படம், முரளி நடித்து எனக்கு பிடித்த படங்களில் இதுவும் ஒன்னு. 

இந்த வீனா போன S.M.S  அனுப்பற வித்தைய  எவன் கண்டுபுடிசான்னு தெர்ல ஆனா கைல கெடச்சான் செத்தான், நாதாரி நைட்டு பகல்னு தெரியாம அனுப்பி தள்றாங்க, வேலை வேணுமா, கரண்டி வாங்கனுமா அது இதுன்னு, டேய்  பொறம்போக்குங்களா எல்லாத்துக்கும் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகணும் நீங்க. 

கடந்த வாரம் ஊருக்கு செல்ல எங்கயும் டிக்கெட் இல்ல அதனால நண்பர்களுடன் காரில் செல்லலாம் என முடிவு எடுத்து சென்றேன், வீட்டில் பயங்கர திட்டு, எதுக்கு காரில் வந்த பஸ் ல வரவேண்டியது தான என்று. கடந்த மூணு தடவை பேருந்தில் வந்த பொது, மயிரிழையில் பேருந்து விபத்தில் இருந்து தப்பி இருக்கிறது, ரயிலில் தண்டவாளத ஒடைக்கறாங்க  என்று அடிகடி பேப்பர்ல போடறாங்க, எவரையோ நம்பி வானு சொல்றாங்க ஆனா  என்ன நம்பி நான் காரில் வந்த திட்டரங்க. 

கார் ஓட்டுவது எனக்கு மிகவும் பிடிக்கும் அதை எதிர்ப்பதனால் வீட்டில் உள்ளவர்களை பிடிக்காமல் போகின்றது, எப்பவும் மிக மிக பிடித்து நமக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும்  ஒன்றை செய்யும்போது ஏன் அனைவரும் எதிர்க்கிறார்களோ, ஆனால் என்னால் அவர்களைப்போல இருக்க முடியாது.  அது அவங்களுக்கும் தெரியும் இருந்தாலும் நம்மை கஷ்டப்படுத்தி பார்க்கறதுல அவங்களுக்கு சந்தோசம்.

கஜினி முகமதுவை விட அதிகம் படையெடுத்து விட்டேன் ஆனாலும் வெற்றி கிட்டவில்லை, இப்போது இந்த பழம் புளிக்கும் என முடிவெடுக்காமல் கண்டிப்பா புளிக்கும் என தெரிந்து முயற்சியை கைவிட்டுவிட்டேன். எல்லாம் இந்த www.team-bhp.com  என்ற ஒரு வலைத்தளத்தில் சேரத்தான், இது ஒரு வாகனப்பிரியர்களுக்கான தளம் ஆனால் ஏகப்பட்ட விதிகளுடன் உள்ளது, இதில் சேர "நான் ஏன் இதில் சேர விருப்பப்படுகிறேன்" என எழுதவேண்டும், எத்தனை முறை எழுதினாலும் என்னுடைய ஆங்கில அறிவு கம்மி என சொல்லி துரத்தி விட்டு உள்ளனர், ஆனால் எனக்குமட்டும் இப்படியல்ல, நிறைய பேருக்கு இப்படித்தான், என்ன சொல்ல இவங்கள, இவங்க கிட்ட ஏற்கனவே உள்ளவ்னகள் எல்லாம் எழுதும் செய்திகளை பார்க்கும்போது நமக்கு ஆங்கில அறிவே இல்லாம இருந்தாலும் பரவாயில்ல என்று தோன்றுகிறது. யாகூ க்ரூபில் உள்ள Palio users group  ஒன்றே எனக்கு போதுமானது. என்னைப்போலவே பலரையும் சேர்த்துக்க மாட்டேன் என்று சொல்லியது இங்குதான் எனக்கு தெரிந்தது. 

இன்னிக்கு இது போதும், இதிலும் நிறைய பிழை இருக்கும், மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் 

நான் எழுதினத என்னாலேயே படிக்க முடியல அவ்வளவு எழுத்துப்பிழைகள், எல்லோருக்கும் மன்னிப்பு கேட்டுக்கறேன்