2012 என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டு, கடினமான வேலைப்பழு மற்றும் சூழ்நிலைகளை கடந்து வந்து ஒரு நல்ல நிலையில் இருந்த வருடம். வருடக்கடைசியில் திருமணமும் ஆகி இந்த வருடத்தை நன்றாக்கியது. 2010இல் இருந்த காரை விற்கவேண்டிய காலகட்டம், பணரீதியாக கடினமான ஆண்டாக இருந்தி 2012ல் திருமணம் நிச்சயக்கப்பட்டவுடன் கண்டிப்பாக ஒரு கார் வேண்டும் என் முடிவெடுத்து வாங்கினது ஃபியட் பாலியோ. இரண்டாவது உரிமையாளராக வாங்கியது. திருமணத்துக்கு முன் சிலமுறை மட்டுமே உபயோகப்படுத்தினேன், வீடி கிரகப்பிரவேசத்துக்கு ஒரு வேலையாக போகும்போது பஞ்சர் ஆனதின் பின் என் மனைவி எடுத்த முடிவு புது கார் வாங்கவேண்டும் என்பது.
வீடு வாங்கிய செலவு, திருமண செலவு என கையைக்கடிக்கும் நேரத்தில் இந்த எண்ணமே வரவில்லை எனக்கு. ஆனால் இதை சொன்னதில் இருந்தே மணதில் ஒரு நெருடல், என்னவள் தெளிவாக இருந்தாள். ஆம் கார் வாங்கவில்லை என்றால் நான் சந்தோசமாக இருக்கமாட்டேன் என புரிந்து என்னை வற்புறுத்தி, முன்பணம் உதவி செய்து வாங்கவைக்க மெனக்கெட்டாள்.
எந்தகார் வாங்க எனும் குழப்பமே எனக்கில்லை, ஃபியட் ரசிகனான எனக்கு ஃபியட்டில் எங்க பட்ஜெட்டில் வாங்கி இருந்தது ஃபியட் புன்டோ மட்டுமே. எங்களுக்கிருந்த குழப்பம் எந்த மாடல் மற்றும் எந்த வண்ணம் மட்டுமே. பாலியோவில் ஏபிஎஸ் இல்லாதது பெரும்குறை எனக்கு (அனுபவம் அப்படி). பாதுகாப்பே முதன்மை,அதனாலேயே ஃபியட் ரசிகனானேன். புன்டோவில் அதிகபட்ச வசதிகள் உள்ள மாடலை முடிவுசெய்தபோது இன்னொரு குழப்பம், ஒருவருடம் மந்தையா லீனியா அதிகபட்சஸ்மாடலுக்கு முந்தைய மாடல் தள்ளுபடியில் கிடைத்தது. எங்களின் மக கடினமான முடிவே இதல் எதை தேர்ந்தெடுப்பது என்பதே,கடைசியில் பாதுகாப்பு மற்றும் பைசா இரண்டின் முடிவால் புன்டோ என இறுதியாயிற்று.
முன்பணம் மற்றும் தவணை எல்லாம் பார்க்கும்போது அகளக்கால் வைப்பதாகவே தோன்றியது ஆனால் வைப்பது என முடிவெடுத்து வாங்கியது தான் என்னுடைய புன்டோ. நான் சிகப்பென்று சொல்ல,அவள் கருப்பென்று சொல்ல கடைசியில் வெள்ளைநிறம் மட்டுமே எங்களிருவருக்கும் ஆட்சேபனை இல்லாது இருந்தது. வேளச்சேரி கன்கார்ட் டாடா டிலரிடம் இருந்து 2012 அக்டோபர் 17ஆம் தேதி எங்கள் புன்டோவை பெற்றுக்கொண்டோம். அதே தினம்தான் எனக்குப்பிடித்த ஃபார்முலா ஒன் ரேசர் கிமி ராய்க்கினன் என்பவருக்கும் பிறந்தநாள்,என்னைப்போலவே அவரும் இடக்கை பழக்கமுள்ளவர் மேலும் ரசிகர்கள் அவரை ஐஸ்மேன் என்று அழைப்பதால் என்னுடைய காருக்கும் ஐஸ்மேன் எனி பெயரிட்டேன்.
அன்றிலிருந்து எங்களுடைய மகிழ்வான வாழ்க்கையில் ஒரு அங்கமானான் ஐஸ்மேன். எங்களின் இந்த ஏழு வருட வாழ்க்கையில் எல்லா மகிழ்வான நிகழ்விலும் ஐஸ்மான் பங்குள்ளது, எல்லா மோசமான,சோகமான நிகழ்வையும் மறக்க அல்லது மகிழ்வாக்கவும் உதவியாது ஐஸ்மேன் மட்டுமே. எங்க ரேசன்கார்டில் பெயர் மட்டுமே சேர்க்கவில்லை மற்றிபடி குடும்பத்தில் ஒன்னு. வாழ்க்கையே பயணமாகிடுமோ என்னும் நிலையை பயணமே வாழ்க்கை என்றாக்கியது ஐஸ்மேன். இந்தெ ஏழு வருடங்களில் 2.8 இலட்சம் கிலோமீட்டர் தூரத்தை பாதுகப்பாக கடக்க எங்களுடன் இருந்த ஐஸ்மேனுக்கு இன்று பிறந்தநாள். இதை மறந்ததாலேயே காலையில் ஒரு சிறிய விபத்தை ஏற்படுத்தி நியாபகப்படுத்தியுள்ளான். கடந்த வருடத்தில் சரியாக கவனிக்காமல் சில வேலைகளை தள்ளிவைத்துள்ளேன் அதை இனி விரைந்து முடிக்கவேண்டும்.
7 வருட நினைவுகளுடன்
No comments:
Post a Comment