Friday, May 16, 2008

அறிவொளி இயக்கம் + பள்ளிக்கூடம்

நேத்து திடிர்னு ஒன்னு நியாபகம் வந்துச்சு ரொம்பநாள் முன்னாடி அறிவொளி இயக்கம் ஒன்னு இருந்துச்சு, படிச்சவங்க எல்லோரும் படிக்காதவங்களுக்கு படிப்பு சொல்லி குடுக்கிற திட்டம். அதுக்கு நோட் புக்லாம் அரசாங்கம் குடுக்கும். மக்களை ரொம்ப சென்றடைந்த திட்டம். இதுனால பயன் பெற்றவர் பலர், என் அம்மா உட்பட.
அப்புறம் முதியோர் கல்வி அந்த திட்டமும் ரொம்ப நல்ல மக்களை சென்றடைந்தது அனா அதுலாம் இப்ப என்ன ஆச்சு னு தெரியல. ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல அத அப்படியே எல்லோரும் மறந்துடுவாங்க போல. ஆனா இப்ப அந்த திட்டம் லாம் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லன்னு நினைக்கிறேன் ஏன்னா இந்த தலைமுறைல எல்லோரும் ஆரம்ப கல்வி கத்துக்க ஆரம்பிச்சுடாங்க னு நினைக்கறேன். இந்த நிலைமை கிராமத்துல எப்படி இருக்கு தெரியல.
கிராம பள்ளி கூடம் பத்தி சொல்லும்போது என் அம்மா ஊருல இருக்க பள்ளி கூடத்துக்கு ஒரே ஒரு வாத்தியார் தான் வகுப்பு 1 முதல் 5 வரை அவர் மட்டுமே சொல்லி குடுக்கணும் இது வரை இருந்தவர் பற்றி எனக்கு அவ்வளவா தெரியல மற்றும் அவங்க பெருசா எதையும் செஞ்சுடல, மத்திய நேரத்துல வெப்பமரத்து நிழல்ல தூங்கறத தவிர்த்து.
ஆனா இப்ப இருகறவர் பற்றி கேள்விப்பட்டேன் பள்ளிய சுற்றி இருக்க ஊர்ல இருக்க குழந்தைகள இவரே பொய் அவங்க பெற்றோட்ட பேசி கல்வி கற்க வேண்டியத அறிவுறுத்தி பள்ளில சேர்த்து சொல்லி குடுக்கிறார். வசதி இல்லா குழந்தைகளுக்கு இவரே துணி செருப்பு உட்பட பல வாங்கி குடுத்து இதுல சில குழந்தைகள காலைல பள்ளிக்கு கூட்டி வந்து மாலைல வீட்டுக்கு கூட்டி கொண்டு பொய் விடறார். அந்த பள்ளிக்கு ஆசிரியரா வந்த யாருமே ஒரு வருடம் மேல வேலை செஞ்சது இல்லை ஆனா இவர் 2 வருடமாக இங்கு வேலை செய்யறார். நான் பார்த்த அசிரியர்ல சமூக அக்கறை கொண்ட ஒரே ஆசிரியர் இவர் தான். இவர் சேவைக்கு நான் தலை வணங்குகிறேன். அவரிடம் பேசியது இல்லை இந்த முறை ஊருக்கு பொய் வரும்பொழுது கண்டிப்பா அவரிடம் பேசி அவரை உலகுக்கு அறிமுக படுத்த போகிறேன்.
இதே பள்ளிலதான் என்ன சேர்க்க சொல்லும்போது அந்த குண்டு வாத்தியார் வலது கையாள இடது காத தொட முடியல சொல்லி சேர்த்துக்க மாட்டேன்னுடார். ஒரு வருடம் வேஸ்ட். நான் இடது கையாள வலது காத தொட்டேன் (ஒரு இடது கை பழக்கம் உள்ளவன் வேற என்ன செய்வான் ) அதுக்கு ரெண்டு கையாலையும் தொடணும்னு புது சட்டம் போட்டு துரத்திவிட்டுட்டார் . இதுதான் பள்ளிக்கும் எனக்கும் முதல் உறவு.
அப்புறம் 4 வகுப்பு படிக்கற வரை இடது கையாள எழுதி வந்த என்னை திடிர்னு வந்த அந்த டீச்சர் என்ன கவனிச்சு வலது கைல எழுதனும்னு மாத்த சொல்லி torture குடுத்தாங்க. நானும் அவங்களுக்கு டிமிக்கி குடுத்து பாத்தேன் முடியல. முட்டி முட்டியா அடி விழும் ஒரு வழியா கஷ்டப்பட்டு மாத்தினாங்க ..இன்னமும் அந்த teacher பார்த்த கோல வெறி வரும். அழகா இருந்த கை எழுத்த மாதி பழக்கத்த மாத்தி சின்ன வயசிலேயே வச்சாங்க ஆப்பு. இது என் வீட்டுக்கு தெரியும்போது நான் படிச்சது 7 ம் வகுப்பு. ஒரு வழியா 12 ம் வகுப்பு வந்து இடது கைல மறுபடியும் எழுத பழகி இப்ப ரெண்டு கிளையும் எழுதுவேன்னு பெருமைய சொல்லி கிட்டு திரியறேன். இடது கை பழக்கம் உள்ளவர் சிலர் அதுலயும் ரெண்டு கைலயும் எழுத தெரிஞ்சவர் ரொம்ப சிலர் அதுல நானும் ஒருத்தன் னு சொல்லற தூக்கி விட்டுகாலாம் (ஆனா கையெழுத்து கேவலமா இருக்கும் னு எனக்கு மட்டும் தான் தெரியும்)
ஹ்ம்ம் நம்ம காமெடி இன்னும் நிறய இருக்கு அப்புறம் எழுதறோம் இப்ப ஜூட்.

No comments: