Thursday, November 27, 2008

எங்கே போகின்றன நமது செய்தி ஊடகங்கள்

எங்கே போகின்றன நமது செய்தி ஊடகங்கள்,

நேற்று இரவு மும்பை பயங்கரவாதத்தை அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டினர், அப்போது ஒரு தொலைக்காட்சி நமது ராணுவ வீரர்கள் விடுதியின் உள்ளே செல்வதை காட்டினர், அப்போது நடந்த உரையாடல்
செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தில் இருந்து கேட்கிறார்கள், நீங்கள் எங்கு நின்று கொண்டு உள்ளீர்கள், விடுதியின் அருகில் செல்ல தடை விதிக்க படுகின்றதா?

பதில்: நாங்கள் விடுதியின் அருகில் இல்லை, எங்களை விலகி செல்லும்படி சொல்லிவிட்டனர் நாங்கள் ஒரு 500 மீடர் தள்ளி உள்ளோம்,
அலுவலகத்தில் இருந்து: ராணுவ வீரர்களை சிறுது அருகில் காட்டும்படி கேமராமேனிடம் கூறுங்கள்.

அவரும் காட்டுகிறார் அப்போது செய்தியாளர், எங்களை எந்த வீரர்களையும் வெளியே நடப்பதையும் நேரடியாக காட்டவேண்டாம் என்று இராணுவம் கேட்டுக்கொண்டு உள்ளது, விடுதியினுள்ளே தொலைக்காட்சி இருக்கலாம் தீவிரவாதிகள் அதிலிருந்து செய்திகளையும் காட்சிகளையும் பார்த்துக்கொண்டு இருந்தால் இருந்தால் நல்லது இல்லை என்று கூறுகிறார்
ஆனாலும் அந்த தொலைக்காட்சி அதையும் வீரர்கள் உள்ளே செல்வத்தையும் காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

இவர்களுக்கு இதனால் பெயர் மட்டும் பணம் சம்பாதிப்பது மட்டுமே இவர்களுக்கு வேண்டுமா??

5 comments:

குப்பன்.யாஹூ said...

நல்ல பதிவு,

ஆங்கில ஊடகங்கள் மக்கள், பொது நலம், சிறுவர்கள் பார்ப்பார்களே என்று எல்லாம் கவலை படுவது இல்லை.

நீங்கள் சொல்வது போலத் தான், டெல்லியில் இருந்து ஊடக தலைமை நிர்வாகி விரட்டுகிறார் செய்தியாளரை. இன்னும் முன்னே செல்லுங்கள், தீவிரவாதி எந்த இனம், எந்த நாடு அதை முதலில் சொல்லுங்கள், இறந்த போலீஸ் ஆபிசர் சிறு வயதில் ஆப்பிள் அல்லது வாழைப் பழம் சாபிடுவார.

புறக்கணிப்போம் இந்த ஊடகங்களை.

குப்பன்_யாஹூ

ச.பிரேம்குமார் said...

சரியா கேட்டீங்க தனா. இந்த சம்பவத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியதும் இவர்கள் தான் எனினும் சில சமயம் அவர்கள் செயல்கள் சங்கடப்படுத்துகின்றன. சமயத்தில் எரிச்சலுறவும் வைக்கின்றன

DHANS said...

நன்றி குப்பன்_யாஹூ மற்றும் பிரேம்குமார்

இப்போது வழக்கம் போல இது நமது காவல்துறையின் செயலிழந்த தன்மை, அவர்கள் சரியாக வேலை செய்ய வில்லை என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்கள் செய்வது எல்லாமே வெறும் பணத்திற்க்காக மட்டுமே என்று தோன்ற செய்கின்றது.

தராசு said...

ஊடகங்களுக்கு கடிவாளம் போட ராஜீவ் காந்தி ஒரு முறை முன்றார், உடனே அனைத்து ஊடகங்களும் தாம் தூம் என்று குதித்தன, ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று ஒப்பாரி வைத்தனர். அவரும் எக்கேடோ கெட்டுத் தொலையுங்கள் என்று விட்டு விட்டார்.

இவர்களின் அதிகப்பிரசங்கித்தனத்தை நினைத்தால் வேதனையாகத்தான் உள்ளது. உதாரணமாக, ஆக்ரா உச்சி மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தானிலிருந்து அப்போதைய அதிபர் முஷாரஃப் தனது பிரதிநிதிகளுடன் பேச வந்தார். வாஜ்பாய் மற்றும் இந்தியப் பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையை தொடங்கி இருந்தனர். ஒருவேளை ஒருவருக்கொருவர் குசலம் விசாரிப்பது கூட முடிந்திருக்காது என்று நினைக்கிறேன். இன்னும் இரு தரப்பு வாதங்களும் மேஜையின் மீது வைக்கப்படவேயில்லை. ஒரு சிறு இடைவளைக்குப்பின் மறுபடியும் சந்திப்போமென இரு தரப்பும் முடிவு செய்துவிட்டு கதவைத்திறந்து வெளியே வருகிறார்கள். துரதிஷ்டவசமாக சுஷ்மாஸ்வராஜ் நமது இந்திய ஊடகங்களின் கண்ணில் பட்டுத் தொலைத்து விட்டார். என்ன மேடம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்றா என்பது போன்ற கேள்விகளெல்லாம் கூட நாகூசாமல் கேட்கப்படுகிறது. அவர் இன்னும் பேச்சு ஆரம்பிக்கவே இல்லையே என்று கூற, இவர்கள் இல்லை மேடம் ஏதாவது சொல்லுங்கள் (நாங்கள் பரபரப்பு செய்திகளை முந்தித்தந்து டி ஆர் பி ரேட்டிங்கை உயர்த்த வேண்டுமே) என்ற ரீதியில் அவரை சுற்றி வளைக்க அவரும் ஏதோ ஒன்றை சொல்லிப்போக, இவர்கள் பாட்டுக்கு அடுத்த நிமிடத்திலிருந்து ஊகங்களை வெளிப்படுத்த ஆரம்பித்து, முழு மாநாட்டின் போக்கையே மாற்றி, முடிவில் பாகிஸ்தானியர்களை வெறுப்பேற்றி, மாநாட்டை வெற்றிகரமாக தோல்வியில் முடித்தார்கள்.

இந்திய ஊடகங்களைப் பொருத்தவரை ஒரு அருவருப்பான வர்த்தக காரணங்களுக்காக நாட்டில் எந்த ஒரு காரியத்தையும் செய்யத் துணியும் வேரொறு வகை தீவிரவாதிகள் தான் இவர்கள்.

DHANS said...

இவர்களை புறக்கணிப்பதுதான் இவர்களை ஒழிக்க நல்ல வழி, பேசாமல் செய்தித்தாள்களை மட்டுமே பார்ப்பது என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன்