சில காலம் இடைவெளிக்கு பிறகு மறுபடியும் வலையுலகத்தில் நான் ..
ஏன் எதற்கு என்று தெரியாத இடைவெளி, பதிவு எழுதலாம் என்று நினைத்து எழுத துவங்கி முடியாமல் போன சில நாட்கள், எழுதி பாதி வரும்போது சில தடங்கல், எழுதனும் என்ற யோசனையிலேயே சில நாட்கள் என்று பல நாட்கள் கடந்து விட்டது. இன்று கூட எழுத தோன்றவில்லை ஆனாலும் ஏன் மறுபடியும் இன்று எழுத வேண்டும் என்று நினைத்தேன் எழுதுகிறேன்.
கடந்த வாரம் பற்றி எழுதலாமா? என்ன எழுத என்று யோசிக்கையில் இன்று வரை என்ன எழுத் என்று யோசித்து எழுதினால் அரை பக்கம் கூட தாண்டுவதுஇல்லை. எழுத வேண்டும் என்று நினைப்பு மட்டுமே கடைசியாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக எதுவுமே மந்தமாகவும் மோசமாகவும் இருக்கின்றது. சிலபல காரணங்களுக்காக தனிமையில் இருந்து விடுதலை கொடுத்து நட்புக்கூட்டுக்குள் புகுந்து செல்ல முயற்சித்தேன், ஆனால் எல்லா முயற்சியும் தோல்வியில் முடியும் போல இருக்கின்றது. எதையும் எதிர்ப்பார்க்காமல் செய்த சில உதவிகள் நமக்கே தர்மசங்கடத்தை கொண்டு வந்து கொடுக்கும்போது மனதை ரணப்படுத்த செய்யும். மீண்டு வர காலமும், மனதும் வழி செய்ய வேண்டும்.
தனிமையில் இருந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் நட்புக்கூட்டத்தில் இல்லை, சகஜமாய் பழகு என்ற தோழியின் அறவுரையை இன்றாவது கேட்போம் என்று முயற்சித்தேன் ஆனால் இன்னும் சில காலம் நன்கு பழக்கப்பட வேண்டும் போல. சமூகத்தில் சூழ்நிலையோடு ஒன்றி வாழ. அது என்னவோ தெரியவில்லை நான் சமூகத்தில் தனிமையை ரசிக்கும்போது அனைவருக்கும் ஏன் இப்படி இருக்கிறாய் நாங்க எல்லோரும் இருக்கிறோம், ஏன் தனியாக இருக்கிறாய் என்று ஒருபோலி அக்கறையை என் மீது செலுத்த, அதை நம்பி சமூகத்துடன் ஒன்றி செல்லும்போது தெரிகிறது எல்லோரும் ஒரு விதமான போலி நட்புக்கூட்டத்தில் வாழ்ந்து அவர்கள் தனித்தன்மையை, தன் தனிமை சுகத்தை இழந்து தனக்காக மகிழ்ச்சியை சுமந்து அனுபவிக்காமல் எவருக்க்காகவோ வரவழைக்கப்பட்ட மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்று.
எனக்காக வாழ்வதை விட நானாகவே வாழ்வது மேலானது என்று தோன்றுகிறது... இனி எனக்காக வாழ்ந்த நான் இனி நானாக வாழலாம் என்று முயற்சி செய்கிறேன்.
இடைவெளி விட்ட நாளில் உடனிருந்து அவ்வப்போது விசாரித்த சில நண்பர்களுக்கு நன்றி முக்கியமாய் யூத்து மாதிரி- பிரேம்குமார் மற்றும் யூத்து கார்த்திக்.
போதுமடா மொக்கை என்று நோந்தவருக்கு இனி நம்ம இன்னிங்க்ஸ் ஆரம்பம்.
இனிக்கு fiat grande punto வெளிவருகிறது. அதை பற்றிய ஒரு கண்ணோட்டம் அடுத்த பதிவில்.
கண்டிப்பாக Honda Jazz and i 20 இரண்டுக்கும் கடும் சவால் விடும் வகையில் இருக்கும்.
5 comments:
தல, உம்ம போதைக்கு ஏன் என்னைய ஊறுகாய் ஆக்கிறீங்க???? என்ன கொடும சார் இது??
நீங்க நினைப்பதெல்லாம் நடக்கட்டும். நல்லதாவே அமையட்டும்
என் போதைக்கு மட்டும் அல்ல எல்லோர் போதைக்கும் நீங்க தான் ஊறுகாய் :)
என்சாய் தல...
என்ன நினைக்கறது என்ன நடக்கறது.. நினைப்பது எல்லாமே நல்லவை தான் நடப்பவை தான் எனக்கு நல்லவையாக தெரிய மாட்டேன் என்கிறது
welcome back! :)
writing without anything to write is such a easy thing if u really want.. :))
am doing that for ages.. :)
i am back karthik
started doing the same what you have mentioned :0
Post a Comment