Friday, August 21, 2009

ஈரம் மற்றும் ஆதவன் பாடல்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஈரம் படத்தின் பாடல்கள் கேட்டேன். நண்பனிடமிருந்து குறுந்தட்டை வாங்கி ஒரு வாரம் கழித்து ஒரு நேரத்தில் சும்மாகேட்டு பார்ப்போமே என்று கேட்டேன்.முதல் பாட்டு சுசித்ரா பாடி இருக்கிறார் ஆனால் அவர் குரல் சிறிது மாற்றத்துடன் இருக்கிறது. " தரை இறங்கிய பறவை போலவே " என்று ஆரம்பிக்கும் பாடல் ..
சொன்னால் நம்ப மாட்டீர்கள் கேட்ட நிமிடத்திலேயே பிடித்து விட்டது
இன்னொரு பாட்டு மழை மழை என்று, அதுவும் மிக அருமையாக இருந்தது. மொத்தம் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு theme மியூசிக்.
மொத்தத்தில் அருமையான இசை மற்றும் பாடல்கள்.


நேற்று ஆதவன் பாடல்கள் கேட்டேன். சிறிது நேரமே கேட்டாலும் அப்படி ஒன்றும் உடனே பிடிக்க வில்லை, வழக்கம் போல ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் என்று கேட்ட உடனே கண்டு பிடித்து விட முடிகிறது.
பாடல்கள் என்னை பொறுத்தவரை என்னை impress பண்ணவில்லை. கார்கி சொன்னதற்காக மறுபடியும் காரில் கேட்டு பார்க்கிறேன்.


அடுத்த மாதத்தில் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்காவது செல்லலாம் எங்கு இருக்கிறேன். ஆனால் எங்கு செல்வது?? நீண்ட பயணம் மேற்க்கொள்ளலாம் என்று முடிவு பதிவர்கள் யாருக்கேனும் யோசனை இருந்தால் கூறவும்.

மனதில் திடீரென்று எண்ணம், நாம் ஏன் ஒரு நாள் எந்த இலக்கு ம் இல்லாமல் கிளம்பி ஒரு வாரம் பயணித்து வரக்கூடாது என்று, பார்ப்போம் என்னமுடிவு எடுக்கிறேன் என்று.

இன்று கந்தசாமி பார்க்கலாம் என்று இருக்கிறேன், பார்ப்போம் இரவு காட்சி மாயஜாலில் கிடைத்தால் செல்லலாம். படம் நன்றாக இருப்பதாக நண்பன் கூறுகிறான். வடிவேலு வரும் காட்சிகள் கொஞ்சம் இல்லை ரொம்பவே bore அடிக்குதாம். சற்று முன் கிடைத்த தகவல் படி.

Thursday, August 20, 2009

மறுபடியும் நான்

வெகு நாளாக பதிவுலகில் இருந்து விலகி இருந்தேன்.. காரணம் எல்லாம் தெரியவில்லை ஒரு விதமான சோம்பேறித்தனம் என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இனி மறுபடியும் துவங்கலாம் என்று இருக்கிறேன். என்னையும் ஒரு பதினோரு பேர் follow பண்ணுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் நான் யாரென்று மறந்து போய் பல நாட்கள் இருக்கும்.

எனவே இது ஒன்றும் comeback இல்லை... இத்தனை நாளாய் அதிகம் பதிவுகளை படிக்கவும் இல்லை சில சில பதிவுகளை படித்தேன். என்னை போலவே பலரும்பதிவுலகில் தற்காலிக விடுமுறை எடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன், கூடிய செய்கிறம் அனைவரும் திரும்புவார்கள் என்று எண்ணுகிறேன்.

எழுதுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் எதையாவது எழுத வேண்டும் என்று தோன்றியது எழுதுகிறேன்.

வாழ்க்கை எத்தனை வேகமாய் நகருகிறது பாருங்கள், அனால் எத்தனை பேர் இதனை வருடம் அதை தங்களுக்குரியதாய் வாழ்ந்து அனுபவித்திருக்கிறீர்கள், ஏதோவொரு நிமிடத்தில் ஏன் நாம் இதை செய்கிறோம் இதனால் நமக்கு வருத்தம் வந்தாலும் எதற்கு செய்கிறோம் என்று எண்ணியது உண்டா? நான் எண்ணியிருக்கிறேன், என் வாழ்க்கை அதன் போக்கில் போகின்றது, பலர் அதை கடிவாளம் போட்டு இழுக்கின்றனர், முரண்டு பிடிக்கும் குதிரையாக சண்டித்தனம் பணிக்கொண்டு இருக்கிறேன் நான்.

பார்ப்போம் வரும் நாளில் என்ன வருதிறது என்று.