எனது முதல் வடநாட்டு பயணம்
அலுவலக விசயமாக ராஜஸ்தானில் 10 நாட்கள் சுற்று பயணம் மேற்கொள்ள போகிறேன். எனது வாழ்நாளில் முதல் வடநாட்டு பயணம். அமாம் இதுவ அரை நான் தமிழ் நாடு தாண்டி சென்றது கடந்த வருடம் ஆந்திர மனாநிலம் தான் அதுவும் அலுவலக நண்பருடன். அவர் எல்லா விதமான திட்டத்துடன் வந்ததால் நான் சும்மா கூட செண்டு வந்தேன்.
இந்த முறை நான் தனியாக பயணப்பட வேண்டி உள்ளது. நாளை காலை சென்னையில் இருந்து தில்லிக்கு ரயில் பயணம். அங்கிருந்து கோட்டான் என்ற ஊருக்கு மறுபடியும் ரயில்.
ஒரு நாளில் அலுவலக வேலை முடித்து விட்டு அடுத்த நாள் ஜோத்பூர் செல்கிறேன். அங்கிருந்து sirohi. இரண்டு நாட்கள் அங்கு வேலை முடித்து விட்டு சிட்டுர்கர் சென்று பின்னர் beawar அங்கிருந்து மறுபடியும் தில்லி, சென்னை. பத்து நாட்கள் சென்னையை விட்டு செல்ல வேண்டும் மொழி தெரியாத ஊரில் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.
வெளிநாடு சென்ற போது கூட இந்த பதட்டம் இல்லை, இந்தி தெரியாததால் வந்த வினை இது, இந்தி தெரியாதது ஏளனமாக பார்க்கப்படுவதால் இந்த பதட்டம் என்று நினைக்கிறேன்.
பார்ப்போம் நாளை நமக்கு என்ன கொண்டு வரப்போகிறது என்று. கூடவே ரிலையன்ஸ் netconnect எடுத்து செல்வதால் இடையிடையே பதிவிட முடியும் என்று தோன்றுகிறது.
மீண்டும் சிந்திப்போம்
3 comments:
ஹேய், வாழ்த்துக்கள். :)
i miss u!!!
துணிந்து செல்லுங்கள்.
Post a Comment