எழுத வேண்டும் என்று மனம் வேண்டுகிறது இதயம் தடுக்கிறது. என்னவென்று தெரியாத இந்த குழப்பம், நாளை மேற்கொள்ள வேண்டிய நெடுந்தூர பயணத்திற்கு மனதை தயாரிக்காமல் அதனை அதன் போக்கில் விட்டு எதையோ யோசிக்கிறேன். என்றுமே எந்த பயணத்திற்கும் இந்த அளவிற்கு யோசித்தது இல்லை.
ஒரு விதமான எதிர்பார்ப்போடு கிளம்பும் நான் இன்று மட்டும் ஏனென்று தெரியாமல் தடுமாற்றத்துடன் தயாராகிறேன். தனிமையை இப்பொழுதெல்லாம் அனுபவிப்பது இல்லை, மனம் தயாராக இருந்தாலும் ஏனோ தெரியவிலை தனிமை கசக்கிறது, அந்த கசப்பும் எனக்கு இனிக்கிறது.
ஒரு விதமான கழிவிரக்கம் இருந்தாலும் இன்னும் எங்கோ நான் நானாக இருந்து வருகிறேன். புது முயற்சி, புது மாற்றம், புது நட்பு என்று எதிலும் புதிதாய் தேடும் நான் புது பயணத்திற்கு மட்டும் ஏன் யோசிக்கிறேன்?? யோசனை எல்லாம் யோசனையாகவே போய்விட மட்டுமே முடியும்.
நாளை மேற்க்கொள்ள போகும் புது பயணத்தில் வரப்போகும் சவால்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள மனது தயாராகிறது.
இந்த நாட்களில் உன்னை எண்ணாமல் என்னையே எண்ணிக்கொள்ள வில்லை, எதையும் எண்ணாமல் இல்லத்தை இல்லாததாய் நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கிறேன்.
மனதின் உள்ளே ஒரு வித வலி இருப்பது தெரிந்தாலும் அதை மறந்து இருக்க முயற்சி செய்வது எல்லோரையும் போல நானும் செய்வேனென்று நினைத்தாயா?
எதையோ எழுத வேண்டி வந்து எதையோ எழுதியுள்ளேன். குழப்பத்தில் எப்போதும் தெளிவு பிறக்கும் இப்போதும் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வடநாடு புறப்படுகிறேன்.
No comments:
Post a Comment