Tuesday, December 15, 2009

பதிவு எழுதினாலே மொக்கை பதிவாகவே வருகிறது

இந்த வார கடைசி மற்றுமொரு வாரமாக இல்லாமல் கொஞ்சம் நன்றாக இருந்தது. வெள்ளிகிழமை இரவு எதாவது சினிமாவிற்கு போகலாம் என்று முடிவு செய்தோம் வழக்கம் போல பார்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் போகவில்லை. ஆர்யா 2 போகலாம் என்று நினைத்தோம் அனால் தியேட்டரில் எப்படியும் தெலுங்கு பையன்கள் தான் இருப்பார்கள் அங்கே  பார்க்க ஒரு சங்கடம்.



இந்த வாரத்தில் மூன்று படம் பார்த்தேன், சா பூ த்ரீ, சொல்ல சொல்ல இனிக்கும் மற்றும் the Tournament. முதல் இரண்டு படத்தையும் என் தோழர்கள் மொக்கை படம் என்று ஒதுக்கியதால் தனியாக பார்க்கும் பாக்கியம் பெற்றேன். அப்படி ஒன்றும் மொக்கை படம் இல்லை, எதையும் ரசித்து செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதற்கு இது ஒரு சான்று. இரண்டு படமும் ஜாலியா பார்க்கலாம். அடுத்த ஆங்கில படம் the tournament, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வந்த the condemed படம் போலவே இருந்தது. உலகில் உள்ள திறம் நிறைந்த கொலைகாரகளை கொண்டு ஒரு போட்டி ஆரம்பிக்கபடுகிறது. அதில் எல்லோரையும் கொன்று கடைசியாக உயிரோடு இருக்கும் ஒருவற்கு பத்து மில்லியன் டாலர் கொடுக்கிறார்களாம். இதில் தெரியாதனமாக ஒரு சர்ச் பாதர் வந்து மாட்டிக்கொள்கிறார். இதில் யார் ஜெயித்தார் என்பதுதான் கதை. வழக்கம் போல அடுத்து என்ன என்று எதிர்பார்த்தாலும் விறுவிறுப்பாக சென்றது. படம் முழுக்க ரத்தம் ரத்தம் ரத்தம்.




போன வாரம் ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்து எழுதி முடித்து அதை publish செய்யும் போது error வந்தது அதற்கு மேல் மறுபடியும் எழுத புடிக்காமல் விட்டுவிட்டேன்.



WWE: TLC நேற்று முடிந்து இருக்கும் இன்று இரவு எப்படியும் பார்த்து விட வேண்டும் சின்ன பையனாக இருந்த பொது பார்க்க ஆரம்பித்தது இடையில் சில நாட்கள் விட்டு மறுபடியும் பார்க்க ஆரம்பித்துள்ளேன்.







சென்னையில் OMR சாலையில் வாகனம் ஓடுவோர் தினமும் பாதுகாப்பாக வந்து சேருவது ஏதாவது கடவுளின் புண்ணியம் என்று சொல்லலாம். சென்னையில் வாகனம் ஓட்டி பாருங்கள், உயிர் பயம் என்றால் என்ன என்று தெரியும். காலையில் கிளம்பி அலுவலகதிரு வருவதற்குள் எத்தனை ம உரை கடவுளை வேண்டுவது. சாலையில் ஒழுங்காக வாகனம் ஓடுவது என்பது கொடுமையான விஷயம் போல உள்ளது. தனியார் அலுவலக பேருந்துகள் தொண்ணூறு சதவிகிதம் சாலை விதிகளைமதிப்பது இல்லை. சாலை அவனுக்கு மட்டுமே சொந்தம் என்பது போல வாகனத்தை ஓடுகின்றனர். மேலும் அழ்ரசாங்க பேருந்துகள் , இவங்கள சொல்லவே வேண்டாம் திட்ட முதலில் தயங்குவேன் இப்போதெலாம் மனதில் மிக மோசமான முறையில் திட்டுகிறேன். எனது தந்தையும் அரசுப்பேருந்து ஓட்டுனராக இருந்தவர் என்பதால் முதலில் திட்ட தயக்கமாக இருக்கும். இரு சக்கர வாகன ஓட்டிகள், எந்த பக்கம் வருகிறார்கள் என்றே தெரியாது இடது புறத்தில் முந்தி சென்று உடனே பிறகே போட்டு வலது புறம் வருவார்கள், அவர்கல்முந்தி சென்ற வாகனம் எந்த வேகத்தில் வருகிறது என்றெல்லாம் கவலை இல்லை. அடிபட்டால் இந்தியாவில் உள்ள விதிப்படி பெரிய வண்டி தான் தவறு. வண்டி எடுத்து பத்திரமாக திரும்பி வருவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது.


நாளுக்கு நாள் இந்த சமுதாயத்தின் மேல் கேள்விகளை விட கோவம் அதிகமாக வருகிறது. மிகப்பெரிய சுயநல வாதிகளாகி விட்டார்கள் அனைவரும் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். வீட்டை விட்டு வெளிவரும்போதே நான் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கின்றது. ஒரு பொருள் ஓசியில் கிடைக்கிறது என்றால் அதை நான் தான் முதலில் வாங்க வேண்டும் அதனால் மற்றவர்க்கு எந்த இடைஞ்சல் வந்தாலும் கவலை இல்லை போன்ற மனது. எதுவும் ஒருவித விளிம்பு எல்லைக்கு சென்று மறுபடியும் துவக்கத்தில் இருந்து ஆரம்பிக்கும், இந்த சமுதாயமும் விதிவிலக்கு இல்லை என்று தோன்றுகிறது.




நேற்று நண்பர்களுடன் விவாதித்துகொண்டிருந்தபோது தோன்றியது. தமிழ்நாடு நன்றாக வளர்ந்து வருகிறது, ஏகப்பட்ட அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று என நண்பன் கூற அனால் அங்கு தமிழர்கள் வேலை செய்வது மிக கம்மி என்றேன்நான். உதாரணத்திற்கு சென்னையில் இருக்கும் எனது எழுவலகத்தில் எனது குழுவில் கூட மிக குறைந்த சதவிகிதமே தமிழர்கள் உள்ளனர் என்றேன், மற்றொரு நண்பனும் அதை ஆமோதித்தான், ஆக இவ்வளவு தொழிற்சாலைகள் வந்தாலும் அலுவலகங்கள் வந்தாலும் ஏன் தமிழர்கள் வேலை செய்வது குறைந்து இருக்கிறது? எல்லோரும் எங்கு இருக்கின்றனர்? அண்டை மாநிலத்திலா?? வேறு நாடுகளிலா?? தெரியவில்லை, ஆனால் தமிழ் நாடு என்பது கூடிய விரைவில் பெயரளவில் தான் . இதை நான் எதிர்க்கவில்லை, அனைவருக்கும் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் வேலை செய்ய உரிமை உள்ளது.தமிழர்கள் எங்கே உள்ளனர் என்பதுதான் என் கேள்வி....


வேட்டைக்காரனை நினைத்தால் சிரிப்பு வராமல் வருத்தம் தான் வருகிறது இப்போதெலாம், பாவம் அவர் விட்ருங்க எல்லோரும் போட்டு ஏன் இப்படி ஓட்றீங்க??


வர வர பதிவு எழுதினாலே மொக்கை பதிவாகவே வருகிறது :(


6 comments:

Karthik said...

பதிவு நல்லாதானே இருக்கு. ஏன் மொக்கைங்கிறீங்க?

இந்த மாதிரி கலந்து கட்டி அடிக்கிற பதிவுகளுக்கு ஒரு பெயர் வெச்சிடுங்க. நானெல்லாம் 'ரெயின்போ தாட்ஸ்'னு ஃபீல் பண்றேன்ல? :)

டெம்ப்ளேட்ட மாத்துற ஐடியா இருந்தா மாத்திடுங்க.

Keddavan said...

தமிழ் சினிமா நக்கல் அடிக்கிறாங்க ஒருபடம் ஹிட்ஆச்சுதின்னா அதே மாதிரி 10 படம் எடுக்கிறாங்க என்று..ஆனா அவங்களும் அதையே தானே செய்கிறார்கள்..எந்தபடத்திட சாயலுமே இல்லமா கிட்டத்தி வந்த ஒரு ஹாலிவுட் படம் சொல்லுங்க பார்ப்பம்...

Prathap Kumar S. said...

நல்லாத்தானே பாஸ் இருக்கு பதிவு... இதெல்லாம் மொக்கைன்னு சொன்னா அப்பா நான் எழுதுறதெல்லாம்...அவ்வ்வ்வ்

DHANS said...

@ karthik //பதிவு நல்லாதானே இருக்கு. ஏன் மொக்கைங்கிறீங்க?//

எனக்கு மொக்கை என்று தோணிச்சு அதான்

//இந்த மாதிரி கலந்து கட்டி அடிக்கிற பதிவுகளுக்கு ஒரு பெயர் வெச்சிடுங்க. நானெல்லாம் 'ரெயின்போ தாட்ஸ்'னு ஃபீல் பண்றேன்ல? :) //
எல்லோரும் மாதிரி நாமளும் பேர் வச்ச அப்புறம் நமக்குன்னு ஒரு தனித்தன்மை வேணாமா? ஆனா இந்தடீல் எனக்கு புடிச்சுருக்கு

//டெம்ப்ளேட்ட மாத்துற ஐடியா இருந்தா மாத்திடுங்க//
எனக்கு அந்த அளவுக்கு அறிவுல்லாம் இல்லை கார்த்தி எது இருக்கறத வச்சு வண்டி ஓட்டிகிட்டுஇருக்கேன்

DHANS said...

//ஆனா அவங்களும் அதையே தானே செய்கிறார்கள்//

நானும் அதைத்தான் சொல்றேன் ஏற்கனவே வந்த படம் தான். வருகைக்கு நன்றி

DHANS said...

//நல்லாத்தானே பாஸ் இருக்கு பதிவு... இதெல்லாம் மொக்கைன்னு சொன்னா அப்பா நான் எழுதுறதெல்லாம்...அவ்வ்வ்வ்//

என்னமோ தெரியல நீங்க நல்லா இருக்குனு சொல்றது எல்லாம் எனக்கு மொக்கையா தெரியுது , என் ரசனை அப்படி மாறிவிட்டதா ?