Friday, December 18, 2009

அரசு விரைவு பேருந்துகள் விபத்து

நம்ம சதீஸ் ராஜின் இந்த பதிவை படித்தவுடன் எழுத தோன்றியது


இரண்டு விபத்தை பற்றியும், அரசு விரைவுப்போக்குவரத்து பேருந்துகளை பற்றியும் எழுதிருந்தார்.


முதலில் விபத்தை பற்றி:
இந்த விபத்தில் முதல் தவறு: லாரி ஓட்டுனர் மீது, நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்துவது விபத்துக்கு வழிவகுக்கும். வாகனத்தை நிறுத்த அதற்க்குண்டான இடத்திலேயே நிறுத்த வண்டும், நாடு இரவில் சாலையில் ஒரு வாகனத்தை நிறுத்தினால் பின்னல் வரும் வாகனத்துக்கு தெரியும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும்.




வாகனத்தில் அபாய விளக்குகள் இருக்கும், அதை எரிய விட்டிருக்க வேண்டும், ஆபதுக்குரியான சிவப்பு முக்கோணத்தை நூறு மீட்டார் பின் தள்ளி வைத்திருக்க வேண்டும். இதை எதுவுமே பண்ணவில்லை.




நமது நெடுஞ்சாலைகள் மணிக்கு என்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணப்படும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன என சொல்கிறார்கள். என்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் பல டன் எடை உள்ள பேருந்தை நிறுத்த குறைந்தபட்சம் 20 மீட்டர் இடம் வேண்டும்.



ஆனால் விளக்குகளே இல்லாத லாரியை இரவில் பார்க்கும்போது இருபது மீட்டர் தூரமே இருக்கும், மிக சிறந்த பார்வை திறன் உள்ளவர்கள் கூட வாகன வெளிச்சத்தில் முப்பது மீட்டர் தூரம் தான் தெளிவாக பார்க்க முடியும். விபத்து நடக்க இதுவே போதுமான காரணம்.




இரண்டாவது தவறு: பேருந்து ஓட்டுனர் மீது, ஐவரும் அதே தவரைசெய்திருக்கிறார், வண்டி நின்றவுடன் ஆபத்து விளக்குகளை ஒளிர செய்து இருந்திருக்கலாம். அதற்கென்று தனி இணைப்பு இருக்கும் வண்டி அடிபட்டாலும் பாட்டரி இருக்கும் வரை எரியும்.



மூன்றாவது தவறு: பயணிகள் மீது, ஏற்கனவே அவர்கள் வந்த பேருந்து நின்ற வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கும்போது மறுபடியும் அதே வண்டியின் முன்னாள் நிற்பது ஏற்புடையது இல்லை. பெருதுக்கு பின்னல் வரும் வண்டி இதே போல வந்து இடித்தால் என்ன ஆகும் என யோசித்திருந்தால் இப்படி நடந்திருக்க வாயப்பு குறைவு.


நமது நெடுஞ்சாலை விபத்துகள் யாரோ ஒருவரின் அலட்சியத்தால் மட்டுமே நடக்கின்றன.


அரசு விரைவு பேருந்துகள் பற்றி வருவோம்



அரசு விரைவுப்பெருந்துகள் ஒரு காலத்தில் முறையாக பராமரிக்கப்பட்டு இருந்தன (எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்)  பின்னர் அவற்றின் பராமரிப்பு படிப்படியாக குறைந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது. இதற்க்கு காரணம் பல



எனக்கு தெரிந்து ஒரு பணிமனை மொத்தம் பதினைத்து பேருந்துகளை கொண்டிருந்தது, சென்னைக்கு மட்டும் எட்டு பேருந்துகள்,(காலையில் மூன்று இரவில் ஐந்து பேருந்துகள்) எல்லாமே தினமும் நிரம்பித்தான் கிளம்பும். 1996 இல் பணிமனை மூடப்பட்டது, காரணம் தெரியவில்லை, சென்னை பேருந்துகள் சென்னை பணிமனையுடன் இணைக்கப்பட்டன. இப்போது இரவில் மட்டும் இரண்டு பேருந்துகள் சென்று வருகின்றன, ஆனால் தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நான்காக மாறி பின்னர் மேலும் இரண்டுகூடியுள்ளது. மற்ற அரசு பேருந்துகள் நான்கு.


பேருந்துகளை குறைத்து பணிமனையை மூட பல கோடிகள் கொடுத்ததாக கேள்விப்பட்டேன். பேருந்துகள் குறைக்கப்பட்டாலும் அதிகாரிகள் அப்படியேதான் இருக்கிறார்கள், சம்பளம் கொடுக்க வேண்டாமா? வெறும் கலக்சன் பணத்தை வைத்து சம்பளம் மட்டுமே கொடுக்க முடிகிறது. எனக்கு தெரிந்து ஒருமுறை சம்பளம் பனிரெண்டாம் தேதி கொடுத்தார்கள், அதில் ஆயிரம் ரூபாய்க்கு ஐந்து ரூபாய் நாணயம் கொடுத்தனர் பணமுடிப்பாக.


வாகனங்களை பராமரிக்க என்று ஒதுக்கப்படும் தொகை  குறைவு, அப்படியே ஒதுக்கினாலும் அதை யாரை பராமரிக்க செலவு செய்கிறார்கள் என தெரியவில்லை. டீசல் சிக்கனம் செய்ய வேண்டும் என்று புது பேருந்துகளை கொடுப்பதற்கு முன்னை சொல்லி ஓட்டுனர்களை   வருத்தேடுத்தனர், இன்று வரை அரசு விரைவுப்பெருந்துகள் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் போகாது காரணம் டீசல் பம்ப்பை லாக் செய்து வைத்துள்ளனர். மற்ற பேருந்துகள் ஆறு மணி நேரத்தில் கடக்கும் தூரத்தை இவை ஒன்பது மணி நேரத்தில் கடக்கின்றன


ஒரு வருடத்திற்கு முன்னை அரசு விரைவ்வு பேருந்துகளை மூடிவிடலாம் என்று தீர்மானிக்கும்போது ADMK பக்கம் இருந்துகுரல் வந்தது உடனே திட்டம் கைவிடப்பட்டது ஆனால் அதற்கு முன்னாள் பூர்வாங்க வேலைகள் நடந்து முடிந்து ஒரு பணிமனையில் இருந்த இரண்டு ஏலக்ட்ரிசியனை வேறு பக்கம் மாற்றி விட்டனர், திட்டம்கைவிடப்பட்டவுடன் நான்கு மாதங்கள் வரை எலக்ட்ரிசியன் இல்லாமல் 800 பேருந்துகள் பராமரிக்கப்பட்டன.


பதினைந்து வருடம் பழைய பேருந்துகள் இன்னமும் ஓடிக்கொண்டு உள்ளன அவற்றில் இருந்து லிட்டருக்கு 5.5km கிடைக்கவைக்க ஓட்டுனருக்கு உத்தரவு. இப்படிப்பட்ட பேருந்தில் சென்று விபத்துக்குள்ளாவது பரவாயில்லை, சமீபத்தில் ஒரு பிரபல தனியார் பேருந்து விபத்துக்குளாகி 16 பேர் பலியாயினர் ஆனால் அது வெளிவரவில்லை, கிரிசனகிரியில் நடந்த விபத்து, பேருந்து ஓட்டுனர் சாலையை கடந்த லாரியை கவனிக்காமல் ஓட்டியுள்ளார் .


மற்ற அரசுப்பேருந்துகள் சுமாரான நிலையில் பராமரிக்கப்படுகின்றன காரணம் அவை லாபத்தில் இயங்குகின்றன, கடந்த இரு வருடத்தில் அரசு விரைவுப்போக்குவறது கழகத்திற்கு எத்தனை MD மாற்றப்பட்டனர் என்று பார்க்கவும். தனியார் பேருந்து முதலாளிகள் பணம் கொடுப்பதாகவும் அதனால் பேருந்துகள் பராமரிக்கப்படாமல் இருப்பதாகவும் பேச்சு









2 comments:

Romeoboy said...

நல்ல விரைவு பதிவு .. பார்த்து பாஸ் இத யாராவது படிச்சு உங்கமேல ஏத்தி புட போறாங்க ..

DHANS said...

nandri vijay and romeoboy :)

@ romeo boy i am always carefull when i hit ighroad but nothing is in our hand when it comes to driving in india