Tuesday, December 29, 2009

மாலை நேரத்து உளறல்கள்


ஏன்இந்த கேள்வி ஒருவனை துளைக்கவும் செய்யும்  துணிச்சலை  அளிக்கவும் செய்யும்எனக்கு எதைக்கொண்டு வந்தது என தெரியவில்லைனால் ஏன் என்றகேள்விமட்டும் மனதில் வந்துகொண்டே  இருக்கின்றது...


ஏன் நான் இப்படி இருக்கின்றேன்விடை தெரியா கேள்விக்கு விடையை கண்டு பிடிக்க தேடலை துவக்கிய நான் இப்போது அந்த தேடலையே தேடுகிறேன்.

தொலைந்து போனவை காலத்தால் மறக்கப்பட்ட மகிழ்ச்சி மட்டும் அல்ல மகிழ்ச்சியை கொணர்ந்த காரணிகளான முயற்சியையும்.

உங்களுக்கு தெரியாது என்னை எது ஆள்கிறது என்று ஆனால் என்னால் சொல்ல முடியும் என்னிடம் எது இல்லை என்று இல்லை என்று சொன்னால்சிரிக்கிறீர்கள்இருக்கு என்று சொன்னால் மகிழ்கிறீர்கள் ஆனால் இல்லாததை இல்லை என்று சொல்லாமல் இருக்கு என சொல்லி இருவரையும் ஏமாற்றவிரும்பவில்லை நான்.

உங்களுக்காக வாழும் என் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாய் பார்க்கலாம் ஆனால் என்னையும் பார்க்க சொன்னால் எப்படி   பார்ப்பதுஎப்படி சொல்வது என் மகிழ்ச்சிஎன்பது உங்கள் வருத்தம் என்று?


குழப்பத்தில் தானே மீன் பிடிக்க முடியும் என என்னுள் பிடிக்க ஏதும் இல்லைஇது பயமாமுயலாமையாமுயற்சியின்மையாஅயர்ச்சியாஇல்லை என்னவென்றுதெரியாத ஒரு சூனியமா?  புள்ளி இல்லாத ஒரு முற்றுப்புள்ளி  போல இருக்கிறது வாழ்க்கை,  உடனடித்தேவை ஒரு முற்றுப்புள்ளி ஆனால்  அதைச்சுற்றி கோலம்போட வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.


சுயமா நலமா என வருகையில் சுயம் என தெரிந்தும் நலம் என சொல்ல அனுமதிக்கப்பட்டேன்என்ன சொல்ல என் சுயத்தை விட மற்றவர் நலம் முக்கியமாயிற்றே.சமூகம் எதை வைத்து அவர்களை தீமாணிக்கிறது?  ஆயிரம் பேர் சொல்லலாம் சமூகத்திற்காக வாழ்வை மாற்றாதே என்று ஆனால் ஆயிரம் பேர்சொன்னால்அவர்களும் சமூகம் தானேஆனால் ஒருவரும் சொல்லவில்லையே வாழ்வை  இழந்துவிடு  என்று அதற்காக அவர்கள் சமூகம் இல்லையா?

கேள்விகள் துளைத்தாலும் கேள்விகளை மட்டுமே சுமந்து  செல்கிறேன் உங்களை போலவே குழப்பத்துடன்.
பதில் கிடைத்தால் கண்டிப்பாக முற்றுப்புள்ளியுடன்  மட்டுமே கிடைக்கும் என நம்பிக்கையோடு!

3 comments:

Romeoboy said...

கேள்விக்கு விடை என்பதே இல்லை தலைவரே. எல்லாத்துக்கும் ஒரு கேள்வி குறி போட்டு பாருங்க அதுவே கேள்வியாக இருக்கும். பதிவு நல்ல இருக்கு.

நீங்க கரூரா ?? நான் நாளை காலை கரூரில் இருப்பேன்.

DHANS said...

nandri romeo boy, i am from karur thaan... ana karur la IRUNTHU NETHU THAAN VANTHEN

Karthik said...

onnum puriyala thala.. anyway happy new year, have a rocking year ahead! :)