Tuesday, April 27, 2010
தற்காலிக விடுமுறைக்கு-மன்னிப்பு
சில காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை, கூடிய விரைவில் மீண்டு வருவேன் என எதிர்பார்ப்பில் இருக்கிறேன்
Wednesday, April 14, 2010
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்னதான் தேதிய மாத்தினாலும் மனச மாத்த முடியாது லீவ் விடலான தமிழ்ப்புத்தாண்ட மறந்துடுவோமா?
Monday, April 12, 2010
எனக்குன்னு ஒரு பொண்ணு இனிமே பொறக்க போறது இல்லை-தொடர் பதிவு
எல்லோருக்கும் வணக்கம், பதிவுலகம் வந்து ரொம்ப நாள் ஆச்சு, ஆபிஸ்ல ஆணி கொஞ்சம் அதிகம் புடுங்க வேண்டியதால் வீட்டுக்கு வந்தா உடனே தூக்கம் வந்துடுச்சு, நம்மள அப்பாவி தங்கமணி ஒரு தொடர் பதிவு எழுத கூப்பிடிருந்தாங்க, நம்ம பதிவுலக இரண்டு வருட அனுபவத்துல தொடர் பதிவுக்கு கூப்பிட்டது இதான் முதல் தடவை, அதையும் ரணகலதுல ஆரம்பிக்கிறாங்க,
கட்டிக்கபோற பொண்ணு எப்படி இருக்கணும் என எழுதணுமாம், இது எல்லாம் நானே எனக்கு மரண ஓலை எழுதி கொடுதுகரதுகு சமம், நாளைக்கு நம்ம கட்டிக்கற பொண்ணு இத பார்த்து அட பாவி அவனா நீ என்று கேட்டுவிட்டால்?
இருந்தாலும் பரவால எதோ எழுதறேன், சம்பவம் நடந்த இடத்தில சம்பவம் நடந்த நேரத்தில் நான் அங்க இல்லை, இது முன்குறிப்பு.
நமக்கும் வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடாங்க, அதனால என்னனு கேட்கறீங்கள? அட நீங்க வேற பொண்ணு எப்படி வேணும்நு கேட்டா சொல்ல தெரியலங்க, அவங்க கேட்ட நாள்ல இருந்து நாம பாக்கற பொண்ணு எல்லாம் நமக்கு புடிச்சு இருக்குங்க.
ரொம்ப யோசிச்சு வீட்ல பொண்ணா இருந்தா போதும் என சொலிட்டு வந்துட்டேன், இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஒரு அளவுக்கு யோசிசுகிற்றுகேன். நம்ம எதிர்பார்ப்புகள் கீழ கொடுத்து இருக்கேன், இதுல கொஞ்சம் பிராக்டிகலா இருக்கும் கொஞ்சம் மொக்கையாகவும் இருக்கும் எல்லாம் சேர்த்து கலந்து கட்டி அடிச்சுருக்கேன்.
வழக்கமா சினிமா ஹீரோயின் உட்பட எனக்கு புடிச்ச பொண்ணுங்க எதையும் என் நண்பர்களுக்கு புடிக்காது, எனக்கு நினைவு தெரிஞ்ச முதல் இன்னை வரை என்னை ஒரு கேலி பேச்சோடுதான் ஓட்டுவார்கள், ஏண்டா அவள போய் உனக்கு ஏன் புடிச்சு இருக்குனு, எனக்கும் தெரியாது ஆனா புடிச்சு இருக்கும், உதாரணம் மஜ்னு ஹீரோயின் "ரிங்கி கண்ணா" அதன் பொண்ணுக்காக அந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன், ஆனா என் நண்பர்கள் யார்க்கும் புடிக்காது. இதிலிருந்து என்ன தெரிதுனா அழகுங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, எனக்கு புடிச்ச மாதிரி பொண்ணு வேணும், அத மத்தவங்களுக்கு புடிக்கலனா எனக்கு கவலையே இல்ல,
எனக்காக அவங்கள எதுக்கும் மாத்திக்க கூடாது, முக்கியமா அவங்க காரெக்டர மாத்திக்க கூடாது, எனக்கு தெரிஞ்ச சிலர் அவங்க கணவருக்கு புடிக்காது என்பதற்காக அவங்க அடிப்படை குணத்தை கூட மாத்திக்கொண்டு உள்ளனர், அது நமக்கு தேவை இல்லை.
முடிவெடுக்கறதுல என்னமாதிரி ஒரு ஆள் இருக்க முடியாது, எப்ப என்ன முடிவு எடுப்பேன் என தெரியாது அதனால நல்ல தீர்மானமா முடிவெடுக்க தெரிஞ்சு இருக்கனும்.
நம்ம சம்பளத்துல சென்னைல குடும்பம் நடத்தறது ரொம்ப கஷ்டம், நம்ம ஒருத்தனுக்கே இப்ப தண்ணி காட்டுது, இதுல இன்னொரு பொண்ணு வந்து ஐயோ நெனச்சு பார்த்தாலே மயக்கம் வருது அதனால பொண்ணு கண்டிப்பா வேலை செய்யணும். ( பெண்ணுரிமை, அது இதுன்னு என்கிட்டே சண்டைக்கு வந்துடாதீங்க, என் சொந்த அனுபவத்துல சொல்றேன் எல்லா பொண்ணுங்களுக்கும் கண்டிப்பா ஒரு பினான்சியல் சுதந்திரம் வேணும்)
நம்ம விட அதிகமாவோ கம்மியாவோ சம்பளம் வாங்கறது பிரச்சன இல்ல ஆனா ஒரு சாதாரண வேலை போதும் காலைல நேரமே போயிடு சக்கையா புழிஞ்சு எடுக்கற வேலை வேண்டாம்.
எல்லோரும் போல பொட்டி தட்டும் வேலையை விட, வித்தியாசமான வேலைய இருந்த நல்ல இருக்கும், ஹி ஹி
எனக்கு ரொம்ப ஆசை எல்லாம் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை ஆனா சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் அதன் லிங்க் கீழே கொடுத்து உள்ளேன் அதையும் இதிலே சேத்துக்கங்க.
எனக்கு கார், ஆட்டோமொபைல் மேல ரொம்பவே ஆசை, டிரைவிங் மேல ரொம்ப ரொம்ப ஆசை அதனால் அடிக்கடி ஊர் சுத்துவேன், அதனால அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகணும் என்று சொல்வது தப்பு இல்ல, போகலாம் ஆனா கார்ல தான் போகணும். சும்மா பஸ்ல போகலாம், ட்ரைன்ல போகலாம் என்று சொல்லிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. என்னுடைய passion இது.
பொண்ணுக்கு டிரைவிங் தெரிஞ்சு இருக்கனும்.
சென்னைல இன்னும் வீடு வாங்கல அது வாங்கணும் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பைக் வாங்க பணம் சேமிக்கிறேன் அதை எக்காரணம் கொண்டும் குறை சொல்ல கூடாது. (ஆமாம் இருபத்தி அயிந்து வருடம் பழைய பைக்க ஒன்னேகால் லட்சம் கொடுத்து வாங்கணும் என்றால்)
இதெல்லாம் எஸ் வி சேகர் ஒரு படத்துல பத்து கண்டிசன் போடுவாரே அதுமாதிரி ஹி ஹி ஹி
ஆதலால் அப்பாவி தங்கமணிக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், இது நான் சுயநினைவுடன் இருக்கும்போது எழுதிய மரண சாசனம், இதை எனக்கு எதிராக யாரும் பயன்படுத்தினால் அதற்கு தாங்கள் மட்டுமே பொறுப்பு.
எல்லா விதிகளும் தளர்த்திக்கொள்ளப்படும் தகுந்த பெண் கிடைத்தால் ஹி ஹி ஹி பொண்ணு கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்காம இப்ப.
Subscribe to:
Posts (Atom)