இந்த முறை கொல்கத்தாவை நோக்கி, வழக்கம் போல அலுவலக பயணம், மிக நெருக்கமாக திட்டமிடப்பட்ட ஒரு பயணம், ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் எல்லா பகலும் அலுவலக வேலையாகவும் எல்லா இரவிலும் பயணமாகவும் இருக்கப்போகின்றது.
என்றுமே நான் பயணத்தை வெறுப்பது இல்லை அனால் சமீப காலமாக அலுவலகப்பயணம் என்றால் ஒரு வெறுமை வந்து ஒட்டிக்கொள்கிறது. ஆனாலும் ஒரு வித்தியாசமான பயணத்துக்கு என்னை தயார் படுத்திகொண்டு உள்ளேன். இந்தியும் தெரியாது, நாள்முழுக்க பயனப்படவேண்டும், ஒரு வாரத்துக்கு இணையம் கூட கிடையாது, பார்ப்போம் எப்படி போகின்றது என்று.
கடந்த இரண்டு வாரமாக சில பதிவுகளை எழுத வேண்டும் என்று நினைத்தாலும் சோம்பேறித்தனம் அதை அழித்துவிடுகிறது, இனியாது சோம்பேறியாய் இல்லாமல் அடிக்கடி பதிவெழுத முயற்சி செய்கிறேன்.
நாளை கொல்கத்தா சென்று நாளை மறுநாள் பர்கர் ( நீங்க  KFC  ல சாபிடுற பர்கர் இல்ல, இது  Bargarh  என்ற ஊர்) செல்ல வேண்டும். அன்று மாலையே கிளம்பி ஜம்செட்புர் செல்ல வேண்டும் இரண்டு நாளில் மறுபடியும் கொல்கத்தா, துர்காபூர் மறுபடியும் கொல்கத்தா நிறைவாய் சென்னை. எட்டுநாளில் ஏழு நாள் பயணப்பட வேண்டும்.
இன்னும் துணி காயவில்லை, அலுவகத்தில் எதையும் எடுத்து வைக்கவில்லை, பயணத்துக்கு வேண்டிய பெட்டி இல்லை, போதாதா காலத்துக்கு மொபைல் வேறு தண்ணியில் குதித்து தற்கொலை செய்துவிட்டதால் எல்லா தொலைபேசி எண்களும் தூக்கத்தில் உள்ளன. 
ஆரம்பமே அட்டகாசமாய் இருக்கிறதே, சூப்பர் பயணமாய் அமையும் என எதிர்பார்க்கிறேன்.
நண்பர்களே மறுபடியும் சந்திக்கிறேன் 
3 comments:
SHARE THE TRAVEL EXPERIENCE
SHARE THE TRAVEL EXPERIENCE
ஒரு தரமாவது, உருப்படியா, ஆற அமர ஒரு இடத்துக்கு போயிட்டு வந்தது உண்டா????
Post a Comment