வழக்கமாக நான் ரயிலில் பயணம் செய்வதை தவிர்ப்பேன் ஏனென்றால் எனக்கு சின்ன வயதில் இருந்தே ரயில் பயணம் பிடிப்பதில்லை ஆனால் அலுவலக பயணங்களில் ரயிலைத்தவிர்த்து வேறு வழி இல்லாததால் ரயில் பயணம் தவிர்க்க முடியாத இன்பமாகிற்று.
நம்ம ஊர் ரயில் பயணங்களில் பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை, வழக்கமாக ரயிலில் வட இந்திய நகரங்களுக்கும், மேற்கு வங்காள இல்லை இல்லை பச்சிம் பங்கா ( என்னங்கடா இது ) மாநிலத்துக்கும் போவதென்றால் சிறிது கிலி ஏறப்படுத்தும். ஒன்னு நமக்கு பஞ்சு மிட்டாய் விக்க தெரியாது (அதாங்க ஏக் காவுமே ஏக் கிசான் ரகு தாத்தா, ரக ரக..... இந்தி ) அப்புறம் அவங்க என்னமோ அவங்க சொந்த வீட்டு ரயில் மாதிரி நினைப்பானுங்க. அதும் நடு இரவில் எங்கயாவது ரயிலில் நீங்க ஏறி செல்ல வேண்டும் என்றால் போதும் உங்க பயணம் இனிதே நடக்கும். கண்டிப்பா எவனோ இல்லை எந்த பெண்மணியோ உங்களுடைய இருக்கையில் கால் நீட்டி படுத்து செத்த பொணம் போல தூங்குவாங்க, நீங்க எழுப்பினா எழுதிரிக்க மாட்டாங்க, எழுந்தாலும் கொஞ்ச நேரம் பஞ்சுமிட்டாய் வித்துட்டு படுத்துடுவாங்க, நமக்கு ஒன்னும் புரியாது. சேட்டையா செட்டம்மா எழுந்திரிங் என பெனாத்திட்டு அப்புறம் கருப்பு கோட் போட்டவர் வரவரைக்கும் திரு திருன்னு நின்னுகிட்டோ இல்லை பக்கத்து இடத்தில உக்கார்ந்தோ இருக்க வேண்டியதான். உங்க ராசி எபவாவது ஒரு தடவ இங்கிலிபீசு பேசற கருப்பு கோட் வரும் வந்தா நல்லது இலாட்டி எப்படியோ ஒரு வழியா உங்களுக்கு இருக்கை வாங்கி அமரும்போது நீங்க இறங்க வேண்டிய இடம் பக்கத்தில் வந்துவிடும்.
நம்ம பச்சிம் பங்கா மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றால் முதலில் நான் தேடுவது பகல் ரயில்களை மட்டுமே. அந்த மாநிலத்தில் இரவில் ரயில் ஓடாது, வெகு சொற்பமான ரயில்களே ஓடும் அதும் மிக தாமதமாக ஓடும். நீங்க எங்காது இறங்கி வேறு ரயிலை பிடிக்க நினைத்து டிக்கெட் பதிவு செய்தால் தயவு செய்து பகல் ரயில்களில் செய்யுங்கள் மேலும் அங்கு எல்லா ரயில்களும் குறைந்தது இரண்டு மணிநேரம் தாமதமாக மட்டுமே வரும். இதையெல்லாம் மனதில் வைத்து இரண்டு அல்லது அதற்கு மேற்கொண்ட வகைகளில் டிக்கெட் பதிவு செய்யுங்கள். ஆனால் ரயில் ஏறும் முன் முந்தகைய ரயில் டிக்கெட்டை கான்செல் செய்வது உத்தமம் இல்லாவிட்டால் உங்கள் பணம் அம்பேல்.
நான் கொல்கத்தா சென்று அங்கிருந்து துர்காப்பூர் செல்ல வேண்டி இருந்தது, ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில் ஆதலால் நேரத்துக்கு கிளம்பியது. செல்லும்போது ஒன்னும் பிரச்னை இல்லை திரும்பி வரும்போது காலையில் ஏழு மணி ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை பதிவு செய்து இருந்தேன், மேலும் ஒன்பது மணி ராஜதானியில் குளிர்சாதன வகுப்பு இருக்கையும் பதிவு செய்து இருந்தேன். வழக்கம் போல ஏழு மணி வண்டிக்கு ஏழரைக்கு ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன், எதிர்பார்த்த மாதிரியே ரயில் தாமதம், ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் மேலும் ஒரு அரைமணி நேர தாமதம் அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக பதினோரு மணிக்கு ரயில் வந்தது. அதிர்ஷ்டவசமாக ராஜதானியும் குறைந்த தாமதத்தில் பதினொன்றே கால் மணிக்கு வரும் என்று அறிவித்தார்கள். நான் என் அதிர்ஷ்டத்தை நம்பி ராஜதானிக்கு காத்திருந்தால் எனக்கு அன்று மிகப்பெரிய அதிர்ஷ்டம் சரியாக சொன்ன நேரத்தில் ராஜதானி வந்தது. ஒரு வழியாக அதில் ஏறி கொல்கத்தா வந்தடைந்து அங்கிருந்து டாக்ஸி பிடித்து ஏர்போர்ட் சென்று சரியான நேரத்துக்கு விமானத்தை பிடித்தேன். இதுலே எங்க ரயில்வே திருடியது என்கிறீர்களா?
சென்னை வந்து பயணம் செய்யாத ஏழு மணி டிக்கெட்டை ITR பதிவு பண்ணி மீதி காசை வாங்கி விடலாம் என பதிவு செய்தேன். அப்போதே அவர்கள் சொல்லிய டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் பயமுறுத்தியது. ஆமாம் அவர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகுமாம் பணத்தை திருப்பித்தர ஆனால் அதிகபட்ச நாட்களை கூறவில்லை. சரி வரும்போது வரட்டும் என பதிவு செய்து விட்டு இன்னொரு டிக்கெட்டுக்கும் இதேபோல பதிவு செய்தேன். நான் பதிவு செய்தது நவம்பர் 2010 இல். இந்த மாதம் முதல் வாரத்தில் அவர்களிடம் இருந்து ஒரு ஈமெயில், நான் பொய்யான காரணத்தை கூறி மீதிபணத்தை கேட்பதாகவும், நான் அந்த ரயிலில் பயணம் செய்ததற்கு சான்று உள்ளதாகவும் கூறியிருந்தனர். நானும் மறுபடியும் நான் பயணம் செய்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து (நல்ல வேலை அலுவலகத்தில் சமர்பிக்கும் முன் ஸ்கேன் செய்தது நல்லதா போச்சு ) இப்படி இப்படி நான் அடுத்த கால் மணி நேரத்துல வந்த ரயிலில் பயணம் செய்தேன் அப்படி இருக்கும் போது நீங்க சொல்வது நியாயமாகாது என பதில் அனுப்பினேன். மேலும் அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு மூன்று வாரமாக தொடர்பு கொள்கிறேன் ஆனால் எவரும் எடுப்பது இல்லை.
அடுத்த செய்தி, மேலும் ஒரு மெயில் ஆமாம் இன்னொரு டிக்கெட்டுக்கு அவர்களின் பதில் "நீங்கள் கூறிய காரணம் ஏற்ப்புடையது அல்ல, ரயில் தாமதமாக வரவில்லை அதனால் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது". அதிலேயே நான் பயணம் செய்யாத காரணத்தால் பணத்தை திருப்பி கேட்டிருக்கிறேன் என எழுதியுள்ளது அதற்கு பதில் ரயில் தாமதமாக வரவில்லையாம் அதனால் கொடுக்க முடியாதாம். இதற்கும் பதில் எழுதி அனுப்பியுள்ளேன் ஆனால் அவர்களிடம் இருந்து ஒரு பதிலும் இல்லை. ஏன்யா இப்படி திருடுறது சரி அதக்கூட சரியான நேரத்துல சொல்லிருக்கலாம்ல, இப்படி இப்படி நான் திருடிட்டேன் அதனால் நீ கேட்காதனு சொல்லி இருந்தா விற்றுகலாம்.
இதே மாதிரி நம்ம தென்னிந்திய ரயில்வே கிட்டயும் ஒரு டிக்கெட்ட பதிவு செய்தேன் ஒரே வாரத்துல பணத்த கொடுத்தும் இல்லாம பணம் அனுப்பப்பட்டது என மெயில் வேற வந்தது. அப்போ நம்ம மம்தா ஊர்காரங்க எல்லோரும் திருடன்கள் என நினைக்க தோன்றுகிறது. இதே நேரத்துல ராஜஸ்தானில் மட்டுமே அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் எல்லா பொருட்களையும் விக்கறாங்க அத கேட்ட நாம கேட்கறது அவனக்கு புரிஞ்சாலும் புரியாத பாசைல திட்டறான இல்லையான்னு தெரியாம சொல்றாங்க.
இந்த ரயில்வேயின் அட்டகசதுக்காக எங்க உ புகார் அளிப்பது என தெரியவில்லை, சரியாக ஒரு மாதம் காத்திருந்து பிறகு நுகர்வோர் கோர்டில் வழக்கு பதிவு செய்யலாம் என நினைத்து உள்ளேன். தகுந்த வக்கீலை பிடிக்க வேண்டும். இதை சும்மா விடக்கூடாது.எவன் காசை எவன் திங்கறது?