Wednesday, August 10, 2011

மங்காத்தா

பொதுவாக நான் எந்த நடிகருக்கும் ரசிகன் இல்லை, படம் நல்லா இருந்தா எல்லா நடிகர்களின் படத்தையும் பார்ப்பேன். பிரபலமானவர்கள் எந்த துறையில் பிரபலம் ஆனார்களோ அந்த துறையை விட அவர்களின் பொது வாழ்க்கைமுறையால் அவர்களை எனக்கு பிடிக்கும். உதாரணம் சச்சின், ஏ ஆர் ரகுமான் மற்றும் அஜித்.

கில்லி படத்துக்கு பிறகு விஜய் சில வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் அந்த படங்களைப்பிடித்தாலும் அவர் அஜித்தை சில படங்களில் ஓட்டியது எனக்கு பிடிக்காது, குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து ஆடியிருப்பார். அஜித்கூட உனக்கென்ன என்று ஒரு பாடலை பாடி இருந்தாலும் அந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் ஆகியது. ஆனால் சாஜகான் படம் வரையிலும் விஜய்யின் காஸ்டியும் எனக்கு பிடிக்கும், மிக நேர்த்தியாக அவர் உடை இருக்கும்.


அஜித் படங்கள் என்னை பெரிதாக கவரவில்லை என்றாலும் அஜித்தை எனக்கு புடிக்கும், அவரின் வாழ்க்கைமுறை அவரது பேச்சு எல்லாமே என்னை கவர்ந்தவை, ஹீராவுடன் காதலாக இருக்கட்டும், பைக் பிரியமாக இருக்கட்டும், அவரது பழைய பேட்டிகளாக இருக்கட்டும் அவரது உதவும் குணங்களாக இருக்கட்டும் பின்னர் அவரது காதல் வாழ்க்கையாக இருக்கட்டும், கார் ரேஸ், பில்லா படத்தின்போது வந்த அவர் பேட்டி, பொது நிகழ்சிகளில் கலந்துகொள்ளாமை, கருணாநிதி முன் அவர் பேசிய பேச்சு, எல்லாமே எனக்கு பிடித்தவை.


நானே அவரைப்பார்த்து அவரை முன்னோடியாக வைத்து சில விசயங்களை செய்திருக்கிறேன். சின்ன வயதில் இருந்து உங்களுக்கு எதுவோ ஒன்னு ரொம்ப பிடிக்கும் ஆனால் பணமில்லாததால் அதை செய்ய முடியவில்லை, பின்னாளில் பணம் வந்தபோது அந்த ரொம்ப பிடித்த விசயங்களை நாம் செய்யாமல் விடுவோம் ஏனென்றால் அதில் ஒரு பயனும் இல்லை என நினைத்து. அஜித் அப்படி இல்லை,சினிமா நடிப்பது அவர் தொழில் அதில் பணம் சம்பாதித்து அவர்க்கு பிடித்த செயல்களை செய்யும்போது அவரின் மீது இருந்த அபிப்ராயம் பெருகியது. பணம் சம்பாதித்து அவர் கார் ரேசில் செல்வதாக இருக்கட்டும், ரிமோட் விமானம் இயக்குவதாக இருக்கட்டும் அவர் அவரேதான்.

ஆனால் எனக்கு அவர் படங்கள் அவ்வளவாக பிடித்ததில்லை, தீனா பிடித்து இருந்தது பின்னர் அட்டகாசம் பிடித்து இருந்தது. பில்லா எனக்கு பிடிக்கவில்லை அதில் ஸ்டைல் இருந்த அளவுக்கு அவர்க்கு நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. அந்தப்படத்தில் அவரிடம் ஒரு செயற்கைத்தனம் தெரியும், பின்னர் வந்த ஏகனில் நீண்ட நாளைக்குபிறகு பழைய பிரெஷ் ஆன அஜித் தெரித்தார், இதே பிரெஷ் ஆனா நிலையில் தீனா மாதிரி ஒரு படம் கொடுத்தால் நல்லா இருக்கும் என தோன்றியது.

கவுதம் மேனன் கூட படம் செய்கிறார் என்று கேள்விப்பட்டபோது படம் ஓடும் அனா தீனா மாதிரி இருக்காது என நினைத்தேன், பிறகு மங்காத்தா என சொல்லிய பின்னர் கொஞ்சம் பயந்தேன், வெங்கட்பிரபு எந்த அளவுக்கு செட் அவார் என யோசித்து, நாள் நெருங்க நெருங்க வந்த செய்திகள், படங்கள் எல்லாம் படத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகம் ஏற்றின. அதிலும் டீசர் ட்ரைலர் மற்றும் ஒரு பாடல் இரண்டும் அட்டகாசம். ஆனாலும் ஒரு பயம் இருந்தவந்தது, நேற்று இரவு திடிரென்று ஒரு நண்பன் தனது பேஸ்புக் தளத்தில் படத்தின் ட்ரைலரை சேர்த்து இருந்தார், எதோ பொய்யான ட்ரைலர் என நினைத்து பார்த்தேன் ஆனால் உண்மையான ட்ரைலர் தான்.


முழுவதும் பார்த்தேன் அட்டகாசம், ஆமாம் நீண்ட நாட்களுக்குப்பிறகு பழைய அஜித்தை பார்க்க முடிந்தது



"500 குரோர்ஸ்.... அம்மோவ்" "இட்ஸ் மை fa.....ங் கேம்" "கிவ் மீ மோர்" என படத்தின் ட்ரைலர் தூள். நிறைய தடவை பார்த்திருப்பேன் அந்த ட்ரைலரை, ஒரு ஸ்டைலான குறும்பான அஜித், நீண்ட நாட்களுக்கு பின்னர் பழைய அஜித். படமும் தீனா மாதிரி இருந்தா ரொம்ப நல்லா இருக்கும். இன்னமும் தீனா படத்தில் கத்தி, அருவ, செயின் என எல்லா ஆயுதத்தையும் லைலாவிடம் குடுக்கும் காட்சி நினைவில் நிற்கிறது. ட்ரைலர் ஒன்றே படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகமாக்கிவிட்டது. வெங்கட் பிரபு சொதப்பாமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த பதிவை எழுத வேண்டுமா என யோசித்தேன் பின்னர் எழுதினால் என்ன தப்பு என முடிவெடுத்து முதன் முதலாக ஒரு நடிகனை ரசித்ததற்காக பதிவெழுதுகிறேன்.

No comments: