நம்ம மக்கள் வாழ்க்கைல ஒரு நாளாது இத நெனச்சு கோவப்படாம இருந்தது இல்ல. சமீப காலமாக எனக்கு ஒரு சந்தேகம், ஆமா சந்தேகமெல்லாம் நமக்கு எப்ப வரும்? நாம ஏதாது ஒன்னுன்னால பாதிக்கப்பட்டா மட்டும் தான் வரும்.
அது ஏன்னு தெர்ல நம்ம ஊர் ஆளுங்க மட்டும் தொட்டதுக்கெல்லாம் ஏன் ஜாதகம் பாக்கறாங்கன்னு தெரியல. பிறக்கும் போதில் இருந்து இறக்கும்போது வரை நம்ம ஊர் மக்கள் வாழ்க்கைல அழுகையுடன் ஜாதகமும் கூடவே வருகிறது. ஆனா அதனால எந்த ஒரு நன்மையாவது நடந்து இருக்கா என்று தான் தெரியவில்லை.
குழந்தை பிறந்து பெயர் வைப்பதில் இருந்து ஆரம்பித்து விடுகிறது, இந்த எழுத்தில் தான் வைக்க வேண்டும் என ஆரம்பித்து இத்தனை எழுத்து தான் இருக்கணும், இத்தனை நம்பர் தான் இருக்கணும் என்று எல்லாம் கண்டிசன் போட்டு ஒரு வழிய நல்ல வாயில நுழையற வாழைப்பழம் என்னும் பெயரையே vaazhaaippaahaam என்று வைத்துக்கூப்பிடும் அளவுக்கு ஆகிப்போச்சு. கொழந்தைக்கு பேர் வைக்கணுமா? மொட்டை போடணுமா?? பள்ளிக்கூடம் சேர்க்கனுமா? அட நீங்க வேற பள்ளிக்கூடம் சேர்க்க பையனுக்கு ஜாதகம் பார்த்தா பரவால்ல பள்ளிக்கூடத்துக்கே ஜாதகம் பார்க்கறவங்க எல்லாம் இருக்காங்க. இப்படி எல்லாம் பார்த்து கொழந்தைய படிக்க வச்சா, அது படிப்புல கொஞ்சம் கம்மியாகிட்டா போதும் அவனுக்கு ஜாதகத்துல கிரகம் சரி இல்ல ரெண்டு வருசத்துக்கு அப்படித்தான்னு சொல்லி எல்லா தப்பையும் ஜாதகத்து மேல போட்டு சமாதானம் ஆகிடுவாங்க. நான் ஒன்னு கேட்க்கிறேன், இது வரைஜாதகம் பார்த்து எந்த ஜாதகக்காரனாது நாம எடுக்க முடிவ ஆமாம் இதான் சரின்னு சொல்லி இருக்கானா??. நீங்க ஒரு முடிவெடுத்து வீடு கட்டலாம்னு போனா கிரகம் சரியா இல்ல ரெண்டு வருசத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது அப்படிம்பான்.
சின்ன முடிவு பெரிய முடிவு ரெண்டையும் நம்ம மேல நம்பிக்க வச்சு எடுக்கறத விட்டுட்டு எவனோ ஒருத்தன் ஜாதகம் பாக்கறான்னு சொல்லி அவன்கிட்ட போய் முடிவெடுக்க அலைஞ்சு தன்னம்பிக்கையே இல்லாத தமிழனா நம்மை நாமே மாத்திக்கிட்டோம்.
கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பாக்கரவன்கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கைல ஜாதகம் பார்த்து என்ன வளமா இருந்து இருக்கு, ஜாதகம் பார்க்காம இருந்து என்னதான் நடக்கல?? எல்லாத்துக்கும் மனசுதான் காரணம் ஆனா இத யாரும் புரிஞ்சுக்கற நிலைமைல இல்ல.
இளைய தலைமுறைகூட ஒரு வயசுக்கப்புறம் ஜாதகத்துமேல ரொம்ப நம்பிக்க வச்சு அலையுதுங்க. சமீபத்துல எனது நண்பர் ஒருவர் கூட ஒரு பெரிய பிரச்சனைல இருந்து மீண்டு வர போராடிக்கிட்டு இருக்கார், ஆனா அவர் அதுக்கு பதிலா இன்னொரு பிரச்சனையான ஜாதகத்துல மூழ்கிவிட்டார். ஜாதகத்த ரொம்ப நம்பி தான் அதுல நிறைய தெரிஞ்சுகிட்டதாகவும் மேலும் அவரை விட யாருக்கும் பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றும் சொல்லி எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். உனக்கு தைரியம்னா என்னனு கூட தெரியலை என்று எனக்கு தலை சுத்தற அளவுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டார். நான் ஒன்னு கேட்கறேன், தைரியம்னா என்னன்னு எல்லோருக்கும் அவரவர் அகராதில ஒரு அர்த்தம் இருக்கும், நீங்க ஏன் உங்களோட அகராதில இருக்க அர்த்தத்தையே எல்லோரும் படிக்கணும் என்று நெனைக்கறீங்க??
மொத்ததுல ஜாதகத்தை நம்பினோர் எலோரும் தங்களோட தைரியத்தை, தெளிவான சிந்தனையை கைவிட்டுவிடுகின்றனர். அப்படி ஜாதகம் எல்லோருக்கும் இருக்கு என்றால் நம்ம ஊரைத்தாண்டி ஏன் வெளிநாட்டில் எல்லாம் என்ன இருக்கா? இல்லை ஜாதகத்தைபார்த்து சொல்லும் எல்லோரும் ஒரே மாதிரியாத்தான் சொல்றாங்களா? படிச்சவன் படிக்காதவன் என்று விதிவிலக்கு இல்லாம ஏன் போய் இதில் விழறாங்கன்னு எனக்கு தெரியல.
நான்கூட ஒரு காலத்துல ஜாதகத்தை நம்பிக்கிட்டு இருந்தவன்தான் ஆனா இப்ப எல்லாம் அதுல நம்பிக்க சுத்தமா இல்லாம போய்டுச்சு. கஷ்டம் வரும்போதுதான் மறுபடியும் ஜாதகத்தை எடுக்கணும் என்று தோணும் போல ஆனா இனி முடிவெடுத்துவிட்டேன், கஷ்டம் வந்தா ஜாதகத்தை நம்பாம என்னை நம்புவது என்று... என் ஜாதகம் எழுதியவர் இனிமேல் ஜாதகம் பார்ப்பது இல்லை என்ற முடிவில் உள்ளாராம்.
பின்குறிப்பு: நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதுவதால் பிழை இருந்தாலும் மன்னிக்கவும்
4 comments:
Hi dhans
அருமையான வரிகள்
"கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பார்க்கிறவன் கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல."
ஜாதகம் எத்தனை சதவிதம் தீர்வை தரும்னு எனக்கு தெரியாது ஆனால் என்னை பொறுத்த வரை சொந்தமா முடிவு எடுக்க தெரியாதவங்க தான் ஜாதகத்து மேல நம்பிக்கை வைப்பாங்க, அது அவங்களுக்கு மனசளவுல தன்னம்பிக்கை தருவதென்னவோ உண்மைதான்.
//"கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தா பொண்ண புடிச்சுருக்கானு பையன்கிட்ட கேட்க்காம ஜாதகம் பார்க்கிறவன் கிட்ட கேட்கறது எந்த விதத்துல நியாயம்னு எனக்கு தெரியல." //
சொம்பு ரொம்ப அடி வாங்கியிருக்குதே,
கவலைப்படாதீங்க, எது எது எப்ப எப்ப நடக்கணுமோ அது அது அப்ப அப்ப நடக்கும்.
எல்லாத்துக்கும் ஒரு காலமும் நேரமும் கூடி வரவேண்டாமா????
இப்படிக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவோர் சங்கம்
எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றினால் கூட பரவாயில்லை மண்ணெண்ணெய் ஊற்றினால்?
Post a Comment