Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Tuesday, May 20, 2008

கார் வாங்கப்போறேன்

இன்னிக்கு எதாவது எழுதனும்னு முடிவு பண்ணிட்டேன் ஆனா என்ன எழுதறது ???
இரண்டு நாளா மனசு சரி இல்லை நமக்கு என்ன வழக்கம் போல அலுவலகத்தில் மேலாளருடன் சண்டை. அத எழுத சொன்ன பெரிய மெகா தொடர் மாதிரி போய்டும்....
நாளைக்கு நான் ஊருக்கு செல்கிறேன், ஆமாம் இரண்டு மாதத்திற்கு பிறகு செல்கிறேன் அதும் சும்மா இல்லை பத்து நாட்கள் விடுமுறையில், நானும் அண்ணாவிற்கு கல்யாணம் பண்ணுவார்கள் விடுமுறையை அதற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து இருந்தால் நாட்கள் சென்றுகொண்டு இருக்கிறது ஏதும் நடக்க மாட்டேன் என்று இருக்கிறது அதான் கிளம்பிவிட்டேன்.எனது பள்ளி நண்பர்கள் வேறு ஞாயிரு அன்று சந்தித்து கொள்ளலாம் என மெயில் அனுப்பி இருந்தார்கள், சரி சின்ன வயசுல பார்த்து ஒர்குட் புண்ணியத்துல சில பேர கண்டு கொண்டாலும் எல்லோரையும் பாக்கிரதுனா சந்தோசம் இல்லையா? அதன் விடுமுறை அனுமதி வாங்கி நாளை கிளம்புகிறேன். நாளை பெரிய வேலை இருக்கிறது, எனது bike இனி அண்ணாவுடன் தனது காலத்தை கழிக்க போகிறது அதற்காக அதை எடுத்து செல்ல வேண்டும், தொடர் வண்டியில் இடம் தட்கால் முறையில் வாங்கியாயிற்று நாளை சென்று எனது bike ஐ pack செய்து அனுமதி வாங்கி எடுத்து செல்ல வேண்டும், நீண்ட நாள் ஆசையான அண்ணாவின் பழைய வண்டியை எடுத்துவர போகிறேன் என்று மனசு சந்தோஷ படுகிறது. என்னதான் இருந்தாலும் இந்த வண்டியை பிரிகிறோம் என்ற காரணத்தினால் மனசு சில நேரங்களில் யோசனை செய்யத்தான் செய்கிறது. மூன்று முறை என்னை விபத்திலிருந்து காப்பாற்றிய இந்த வண்டியை இன்னும் எனக்கு பிரிய மனசு இல்லை. சமிப காலமாக முதுகு வலி வரவே அது வண்டி ஒட்டுவதுனால் என்று முடிவு பண்ணி மருதுவரிடன் ஓப்புதல் வாங்கி இபோ இதை வீட்டுக்கு அனுப்புகிறேன்.இதெல்லாம் எனதுநீண்ட நாள் ஆசையான கார் வாங்குவதர்க்குதான் கடந்த ஒரு வருடமாக எனக்கு கார் வாங்குற கனவு. இப்போ அது மிகவும் அதிகம் ஆகிடுச்சு. அப்படி இப்படி சொல்லி இன்னும் இரண்டு மாதத்தில் வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து ஊருக்கு செல்கிறேன். பின்ன என்னங்க அலுவலகத்தில நிம்மதி இல்ல சரி நமக்கு பிடிச்சத செய்யலாம் என்றால் வீட்டில் இப்போதைக்கு என்ன அவசரம் அப்புறம் வாங்கலாம் என்று சொல்கிறார்கள், சம்பாதிப்பதே செலவு செய்யத்தான் அதும் மனசுக்கு புடிச்ச விஷயத்திற்காக, அதான் நானும் ரொம்ப நாள் ஆசையான கார் வாங்கலாம் என்றால் ராகு கேது னு சொல்றாங்க, அவங்கல்லாம் சம்பாதிச்சா நான் கார் வாங்கறேன், நான் தானா சம்பதிக்கறேன் அப்புறம் எதுக்குங்க ராகு கேது லாம் முடிவு பண்ணனும் நான் எப்ப கார் வாங்கறதுன்னு??? புரியல்ல அனாலும் பெரியவங்க மனச நோகடிக்க கூடாதுன்னு இரண்டு மாதம் காத்திருக்க முடிவு பண்ணிட்டேன்.