இந்திய கால்பந்தாட்ட அணிக்கு எனது வாழ்த்துக்கள்
நேற்று நடந்த AFC challenge கோப்பைக்கான இறுதி போட்டியில் கஜகிஸ்தானை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்திய கால்பந்தாட்ட அணி. எப்போதும் கிரிக்கெட் கிரிகெட் என்று அதை மட்டுமே பார்க்கும் நாம் ஏன் நமது கால்பந்தாட்ட அணியை ஆதரித்து வாழ்த்தக்கூடாது?. இந்த ஆட்டம் கடந்த வருடத்தின் மிக சிறந்த ஆட்டத்தில் ஒன்று என்று கூறப்படுகின்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய கால்பந்தாட்ட அணி. 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசியக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் பெற்ற நேரு கோப்பை வெற்றிக்கு பிறகு மிகப்பாரிய வெற்றி இது, வெற்றி பெற்ற அணிக்கு எனது வாழ்த்துக்கள்
3 comments:
பரவாயில்லையே!நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள்.கால்பந்தாட்ட திகிலில் கால்பங்குதான் கிரிக்கெட்.எனவே நமது விளையாட்டுப் பார்வை கால்பந்தாட்டம் போவது கண்ணுக்கும் இந்தியாவுக்கும் விருந்து விருது அளிக்கும்.
நல்ல செய்திதான், சமீப காலமாக கால்பந்தாட்ட அணி அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. நமது ஆதரவு மட்டுமிருந்தாளின்னும் நன்றாக செய்வார்கள். முடிந்த வரை என்னாலான முயற்சிகளை செய்கிறேன்.
ரொம்ப நல்ல செய்தி...ஆனால் யூரோப், லத்தீன் அமெரிக்கன் டீம்களோடு போட்டியிடும் அளவு 'புரபஷனாலாக' மாற்ற வேண்டும்.
:)
Post a Comment