Thursday, August 14, 2008

குழப்பம்

எல்லோருக்கும் வணக்கம்,

வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.

நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.

நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.

சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்

3 comments:

துரை said...

//"நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது"//
மிகவும் சரியாக சொன்னிர்கள்

துரை said...

//"நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது"//
மிகவும் சரியாக சொன்னிர்கள்

Karthik said...

நீங்கள் படிக்கிற பையனாக கூட இருக்க வேண்டியதில்லை. என்னை மாதிரி PCM ஸ்டுடன்டாக ஆக இருந்தால் போதும்.

"என்ன விளையாட்டு..விளையாட்டு? நீ என்ன ஆர்ட்ஸ் ஸ்டுடென்ட்டா?"