Monday, October 12, 2009

மறுபடியும் நான்

எதனை நாள் ஆகிறது என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன், வலைப்பதிவிற்கு வந்து பின்னர் சிறிது இடைவெளி விட்டு இப்போது பெரிய இடைவெளி விட்டிருக்கிறேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை, வேலைப்பளு என்று சொல்லலாம் ( ஆனால் அது பொய் என்று என்னாலேயே நிரூபிக்க முடியும்) எழுத மனம் இல்லை என்று சொல்லலாம் ஆனால் அதுவும் ஏற்க்கத்தக்கது அல்ல.. சோம்பேறித்தனம் என்றால் அது மிக சரியான பதில்.

என்று என்னை விட்டு இந்த சோம்பல் போகுமோ என்று தெரியவில்லை அன்று மறுபடியும் என்னை எழுத்து உலகில் பார்க்கலாம். பெருசா எதையும் எழுதி கிழிக்கவில்லை ஆனாலும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்த சில விசயங்களில் எழுத்தும் ஒன்று. சோகமாக இருக்கும் தருணங்களே நான் எழுத தூண்டும் தருணம், மீண்டும் ஒரு சோகம் என்னை தாக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்குகிறது

4 comments:

கணேஷ் said...

நீங்க கொடுத்த என்கரேஜ்மென்ட்ல தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன். நீங்களும் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது என் விருப்பம்!

Karthik said...

//கணேஷ் said...
நீங்க கொடுத்த என்கரேஜ்மென்ட்ல தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன். நீங்களும் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது என் விருப்பம்!

இதையே நானும் சொல்லலாம்.. தொடர்ந்து எழுதுங்க..

விக்னேஷ்வரி said...

எந்த சோகமும் உங்களைத் தாக்கமலே சீக்கிரம் சந்தோஷமான விஷயங்களையும் எழுத வாழ்த்துக்கள்.

DHANS said...

nandri ganesh, karthik matrum vigneswari

meendu varugiren, meendum varuven