Showing posts with label குழப்பம். Show all posts
Showing posts with label குழப்பம். Show all posts

Sunday, October 25, 2009

மாலை நேரத்து குழப்பங்கள் (மயக்கங்கள்)

எழுத வேண்டும் என்று மனம் வேண்டுகிறது இதயம் தடுக்கிறது. என்னவென்று தெரியாத இந்த குழப்பம், நாளை மேற்கொள்ள வேண்டிய நெடுந்தூர பயணத்திற்கு மனதை தயாரிக்காமல் அதனை அதன் போக்கில் விட்டு எதையோ யோசிக்கிறேன். என்றுமே எந்த பயணத்திற்கும் இந்த அளவிற்கு யோசித்தது இல்லை.

ஒரு விதமான எதிர்பார்ப்போடு கிளம்பும் நான் இன்று மட்டும் ஏனென்று தெரியாமல் தடுமாற்றத்துடன் தயாராகிறேன். தனிமையை இப்பொழுதெல்லாம் அனுபவிப்பது இல்லை, மனம் தயாராக இருந்தாலும் ஏனோ தெரியவிலை தனிமை கசக்கிறது, அந்த கசப்பும் எனக்கு இனிக்கிறது.


ஒரு விதமான கழிவிரக்கம் இருந்தாலும் இன்னும் எங்கோ நான் நானாக இருந்து வருகிறேன். புது முயற்சி, புது மாற்றம், புது நட்பு என்று எதிலும் புதிதாய் தேடும் நான் புது பயணத்திற்கு மட்டும் ஏன் யோசிக்கிறேன்?? யோசனை எல்லாம் யோசனையாகவே போய்விட மட்டுமே முடியும்.
நாளை மேற்க்கொள்ள போகும் புது பயணத்தில் வரப்போகும் சவால்களையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள மனது தயாராகிறது.


இந்த நாட்களில் உன்னை எண்ணாமல் என்னையே எண்ணிக்கொள்ள வில்லை, எதையும் எண்ணாமல் இல்லத்தை இல்லாததாய் நினைத்து குழப்பிக்கொண்டு இருக்கிறேன்.

மனதின் உள்ளே ஒரு வித வலி இருப்பது தெரிந்தாலும் அதை மறந்து இருக்க முயற்சி செய்வது எல்லோரையும் போல நானும் செய்வேனென்று நினைத்தாயா?
எதையோ எழுத வேண்டி வந்து எதையோ எழுதியுள்ளேன். குழப்பத்தில் எப்போதும் தெளிவு பிறக்கும் இப்போதும் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் வடநாடு புறப்படுகிறேன்.

Friday, January 9, 2009

வாழ்க்கையே போராட்டம்தான்...

பெட்ரோல் டிசல் கிடைக்காமல் வண்டிகளை ஓடாமல் இருக்க செய்து சுற்று சூழலை பாதுகாத்த ஊழியர்களுக்கு மிக நன்றி.

உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் நாட்டில் ஒரு சாமானியனும் உங்களைப்பற்றி நினைக்க வைத்த பெருமை உங்களையே சாரும்.

தனது தாயரை மருத்துவமனை கொண்டு செல்லும்போது எரிபொருள் தீர்ந்து அதை பெற முடியாயாமல் வேதனைப்பட்ட ஒருவர் விட்ட சாபம் உங்களை பாதிக்காதுதான்.

ஏற்கனவே எரிகின்ற தீயில் பெட்ரோலையும் டிசலையும் விட்டு மக்களை மீண்டும் சங்கடப்படுத்திய நீங்கள் மிக நல்லவர்கள்.

உங்களுக்கு குறை இருந்தால் அதனை வேறு முறையில் எதிர்ப்பு காட்டி வெளிப்படுத்தி இருக்கலாம், ஏன் வழக்கத்தை விட அதிக உற்பத்தியை அளித்து அதை என்ன செய்ய வேண்டும் என்று அரசு யோசிக்கும் நிலைமைக்கு கொண்டுவந்து கூட வெளிப்படுத்தி இருக்கலாம்.

காய்கறி விலை அதிகம் காரணம் லாரி போராட்டம்

எரிவாயு இல்லை காரணம் அதிகாரிகள் போராட்டம்

இராணுவம் வரவழைக்கப்படுகிறது எரிபொருள் சேவையை நிர்மாணிக்க,

ஏனுங்க தீவிரவாதி புகுந்த இராணுவம்,

தேர்தல் என்றால் இராணுவம்,

எரிபொருள் சேவைக்கு இராணுவம்,

பெரியவங்க பாதுகாப்புக்கு இராணுவம்.

இன்னும் எத்தனைக்குத்தான் அவர்கள் ??

அட போங்கப்பா இனிக்கு ஆபிசுல இருந்து வீட்டுக்கு போக அலுவலக பேருந்துக்கு எரிபொருள் தட்டுபாடாம், சிறிது தடங்கல் ஏற்பட்டால் மன்னிக்கனு சொல்லிடாங்க, வீடு பொய் சேருவமான்னு தெரியல இதுல ஊருக்கு போக ஏழு மணி பஸ்க்கு டிக்கெட் வாங்கியாச்சு.

Thursday, August 14, 2008

குழப்பம்

எல்லோருக்கும் வணக்கம்,

வேலைப்பளு காரணமாக கடந்த இரண்டு வாரமா பதிவுலகுக்கு அப்பப்ப வந்துதான் எட்டிப்பார்க்க முடிந்தது, இன்று எப்படியாவது ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று முடிவு செய்து எழுதுகிறேன்.என்ன எழுவது, கடந்த நாட்களில் என்னை பெரிதாக பதித்த எந்த நிகழ்வுகளும் இல்லை. இரண்டு வாரங்களில் அலுவலகத்தில் நிம்மதியாக வேலை பார்த்தேன், பழைய குழிபறிக்கும் வேலைகள், பழிவாங்கும் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் புது குழுவில் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு உள்ளது.

மூன்று நாட்கள் விடுமுறை நாளை முதல், ஊருக்கு செல்லவில்லை, இங்கிருந்து என்ன செய்ய என்று தெரியவில்லை, அனாலும் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இந்த வார விடுமுறையை நல்லபடியாக கழிக்க எதுவும் அறிவுரை அல்லது வழிமுறை யாராவது கூறினால் நல்லபடியாக இருக்கும்.

நம் நாடு ஒலிம்பிக்கில் இந்திய தங்கம் வாங்கிவிட்டது அதற்காக எல்லோரும் சந்தோசப்படுகிறார்கள், எனக்கும் உள்ளூர சந்தோசமே அனாலும் இவ்வளவு மக்கள் இருந்தும் ஒரு தங்கபதக்கதிற்க்காக இப்படி அல்ப சந்தோசம் கொள்வது அருவருக்க செய்கிறது. விளையாடிற்கு அரசு என்ன செய்தது என்று கேள்வி எழும்போது அதேநேரம் நானும் என்ன செய்தோம் என்று கேள்வி வருகிறது. பள்ளியில் மாணவன் படிக்கும்போது விளையாட செல்கிறேன் என்று சொன்னால் எத்தனை பெற்றோர் அதை அனுமதிக்கின்றனர்? ஏனென்றால் விளையாட்டில் சென்றால் அதற்க்கான உள்கட்டமைப்பு வசதிகளில்லை. இப்போதெல்லாம் பள்ளியில் விளையாட்டு வகுப்பு எல்லாம் எப்படி உள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து எனது உறவினர் பிள்ளைகள் எவரும் சிறு விளையாட்டில் கூட ஆர்வம் இல்லாமல், கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் நேரம் செலவழிக்கின்றனர். சரியான கட்டமைப்பு வசதிகள், விளையாட்டுக்கு முன்னுரிமை, விளம்பரம் போன்றவற்றை அரசு செய்து, நாமும் அதில் பங்கு கொண்டல் இனும் இருபது வருடங்களில் பெயர் சொல்லும் அளவு முன்னேறலாம் என்று நினைக்கிறேன்.

நேரம் தவறாமை,என்னவோ தெரியவில்லை சிறிய வயதில் பள்ளியில் சொல்லிகொடுத்த நேரம் தவறாமை என்ற ஒன்றை இன்றும் கடைபிடிப்பதால் எனக்கு இன்று வரை நேரம் சரி இல்லாமல் போகின்றது. பல நட்புகளை இழக்க வேண்டி உளது. நான் மட்டுமே ஒழுங்கு என்று நான் நினைப்பதாக மற்றவர் நினைத்துக்கொளும் அளவிற்கு இருக்கின்றது. சுய ஒழுக்கம் என்ற ஒன்று நம் மக்களிடம் மக குறைந்து இருப்பதாக தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் நான் மட்டும் சென்றால் போதும்,நன்றாக இருந்தால் போதும், நான் மட்டும் என்று இருக்கின்றனர்.

சமீப காலமாக சமூகத்தில் பல குறைகளை காணுகின்றேன், இதனால் இது சமொகத்தின் குறைகள இல்லை எனக்குள் உள்ள குறைகள என்ற சந்தேகம் எழுகின்றது.

எதையோ எழுத வந்து எதையோ எழுதிவிட்டேன்... மறுபடியும் அடுத்த பதிவில் சந்திக்கின்றேன்

Wednesday, July 16, 2008

குழப்பம்

கடிவாளம் இல்லாத குதிரை போல கண்டபடி ஓடுகிறது மனம், எல்லாம் நல்ல படியாக நடக்கும் போது குதூகலிக்கும் மனம் சிறிது தாமதத்திற்கும் கோபப்படுவது ஏனோ? சிறு வயதிலிருந்தே இந்த தாமதம் என்ற ஒன்று மட்டும் எப்போதும் என்னை கோபப்பட செய்கின்றது. முன்கோபி என்ற பெயரை எனக்கு சூட்ட இந்த தாமதம் ஒரு காரணி.

வாக்குறுதியை மீறும்போது தாமதம் ஏற்ப்படுகிறது, அதனால் ஒருவர் அவரது பணியில் அலட்சியமாக இருக்கிறார் இதை எதிர்ப்பவன் முன்கோபி கூலாக இருக்க கத்துக்கொள் என்றெல்லாம் எனக்கு அறிவுரை. எவனும் அலட்சியக்காரனுக்கு புத்தி சொல்ல தயாராக இல்லை, எப்படி சொல்வான் அவனும் ஒரு அலட்சியக்காரனாக இருக்கும் பட்சத்தில்.

தெரியவில்லை மகிழ்ச்சி காலங்கள் மறுபடியும் வருமோ இல்லை புயலுக்கு முன் அமைதி என்றபடி புயலடிக்குமோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை செல்கிறது. கூடவே நானும்....

இன்றிரவு என்ன செய்யலாம் என்ற கருத்திலிருந்து அடுத்த பத்து ஆண்டுகளில் என்ன செய்யலாம் என்பது வரை இந்த பத்து நிமிடத்தில் ஓடி மறைந்துள்ளது.

பிரச்சனைகளை ஆலோசிக்க துணை தேடினால் அதை அவர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர் பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்.

கடந்த வருடங்களை பார்க்கும்போது காலம் என்னுள் ஏற்ப்படுத்திய மாற்றங்கள் திகைப்பை ஏற்ப்படுத்துகின்றன, இன்பத்தை தேடி வாழ்க்கையில் இன்னும் சென்று கொண்டிருக்கும் நான் இதுவரை என்னுள் இருந்த மகிழ்ச்சியை மறந்து விட்டேன் என்று யோசிக்கவே இல்லை.

இப்போது எனக்கு என்ன தேவை???? உண்மை நேர்மை என்று கிடைக்காத பல தேவைப்படுகின்றது.... கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டுள்ளேன்.