Sunday, November 21, 2010

புல் மீல்ஸ் -2

இரண்டு வாரம் அலுவலக விசயமாக கிழக்கு இந்தியா பக்கம் போய்விட்டு வந்தாச்சு, பயணம் நல்லபடியாக முடிந்தது, பயணக்கட்டுரை கூடிய விரைவில். ( இதெல்லாம் தேவையான்னு நிறையப்பேர் கேட்கறது எனக்கு மைன்ட் வாய்சுல கேட்குது, இதுகேலாம் அசரமாடோம்ல)

இனிக்குதான் உத்தமபுத்திரன் படம் பார்த்தேன், கொய்யால மொக்க படம், அதுவும் கதாநாயகிய கூட்டிகிட்டு போகும்போது வில்லங்க தொரதுவாங்க, இவங்க கார் கதவு பிசுகிட்டு போய்டும், அனா அடுத்த சீன்லயே கதவோட கார் ஒரு பலத்துல இறங்கும், மறுபடியும் இறங்கி நின்ன உடனே கதவு காணாம போய்டும். 

தண்டபாணி என பொய் பெயர் சொல்லுவர் அதை உண்மைன்னு நெனச்சு கதாநாயகி பேசிகிட்டு இருப்பா ஆனா கடைசில அவளை தோழி வீட்டில் கொண்டு விடும்போது சிவா என சரியா பெயர் சொல்லி அழைப்பா, அதுவரை கதாநாயகன் உண்மைய சொல்லியிருக்க மாட்டார், அடுத்த சீன்ல தண்டபாணி என அழைத்துப்பேசுவார் 

கொய்யால இவங்க ஊத்துக்குளி கவுண்டனுங்க என்று வில்லன்களை லாட்டினாங்க ஆனா எனக்கு தெரிஞ்சு எந்த கவண்டனும் இப்படி இருந்தது இல்ல, யோவ் டைரக்டர் ஒரு படம் எடுத்தா அத பத்தி நல்லா ஸ்டடி பண்ணி எடுக்கணும், ஆந்திரால எடுத்த படத்த தமிழில் எடுத்தா ததமிழ்நாட்டுக்கு தகுந்த மாதிரி மாத்தனும், டைரக்டர் ஒரு தடவையாது ஊத்துக்குளி போயிருக்காரா தெரியல.

கொங்கு நாடு கட்சி எதிர்ப்பு தெரிவிததுல ஆச்சரியம் இல்லை, முஸ்லிம் கேரக்டர் என்றால் தொப்பி வைப்பது, அய்யர் என்றால் சட்டை இல்லாமல் குடுமி வைப்பது, கவுண்டர் என்றால் நாட்டாமை மாதிரி குடுமி வைப்பது, கணக்குப்பிள்ளை வைப்பது யோவ் திருந்துங்கப்பா. பாதிக்கும் மேல செம மொக்கை, விவேக் ஓரளவு பரவால்ல, இதுக்கு வ படம் கூட ஓகே. 

தீவாளிக்கு வந்ததுல எதுவும் சரி இல்ல, மைனாக்கு முதலிடம், வ இரண்டாம் இடம், வேற வழியே இல்லாம அன்னபோஸ்ட்டா உத்தமபுத்திரன் மூன்றாம் இடம்.

நாம ஊர்ல இல்லாத நாளில செம மழை சென்னைல, ஊருக்கு காலடி வைத்த அடுத்த நாள் வெயில் கொளுத்துது, வாரக்கடைசி ஆனா மழை பெய்யுது, முன்னாடி எல்லாம் செப்டம்பர் அக்டோபர் மாசத்துல மழை பெய்யும்  இப்போது நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்கிறது, இதுதான் காலநிலை மாற்றமோ?

மேயர் என்று சொல்லிக்கிட்டு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒருத்தர் வேளச்சேரிக்கு வந்தார்.  மழை நீர் வடிகால் கலவை வெட்டுகிறோம் என்று தெரு பூரா கட்அவுட் வச்சு ஒரு புல்டோசர் கொண்டு வந்து குழி பறிச்சு அடுத்த நாள் பேப்பர்ல பெட்டி கொடுத்தார். பறித்த குழி இன்னும் அப்படியே இருக்கு மழை பெய்ததுல தெரு பூரா தண்ணி, சாக்கடை தண்ணி கலந்து நாறுது, கொய்யால ஏங்கடா பக்கத்து தெருவில ஒரு IAS  ஆபிசர் வீடுகட்டி வந்த உடனே அங்க மட்டும், அதுவும் அந்த ஆள் வீட்டுக்கு முன்னாடி மட்டும் ரெண்டு இன்ச் உயரமா ரோடு போடுறீங்க, ஒழுங்கா இருந்த ரோட்ட போன மழையில் தண்ணி தேங்கியது என்று பறித்து விட்டு அப்படியே விட்டுடீங்க. கடந்த 5  வருசமா மழை பெய்தால் கடசில வந்து தெருவ பறிச்சு மழை தண்ணிய ஒரு வாரம் கழிச்சு எடுத்து விடுவீங்க, அப்புறம் ரோட்ட தோண்டி அப்படியே விட்டுடறீங்க.  ஏதும் உருப்படியா செஞ்ச மாதிரி தெரியல. தேர்தல் வருதுங்க சார், இது வரை நான் வோட்டு போட்ட யாரும் டெபாசிட் வாங்கினது இல்ல பாத்துகங்க என் வோட்டு உங்களுக்கு வேணுமா வேண்டாமா என்று முடிவு செஞ்சுக்கங்க.

எஸ்.ஆர்.பி டூல்ஸ் ல இருந்து தரமணி வரும் சாலை (அப்படி ஒன்னு இருக்கா??) சாலையே இல்ல, நேத்து அந்த சாலையில் போகும்போது அய்யவையோ அம்மாவையோ ஒரு தடவ அந்த சாலைல பயணிக்க சொல்லணும் என்று மனசுல பயங்கரமா தோன்றியது. ஏன் இந்த கொலவெறி???

ராஜீவ் காந்தி சாலையில் (டைடல் பார்க்கில் இருந்து எஸ் ஆர் பி டூல்ஸ்) சென்று வலது புறம் திரும்பி தரமணி வழியாக வேளச்சேரி செல்லும்போது எஸ் ஆர் பி சிக்னலில் வலது புறம் திரும்பினேன். எனக்கு வலது புறம் ஒரு குட்டி யானை, இடது புறத்தில் இருந்து ஒரு பல்சர் சரலென உள்ளே புகுந்தது நான் எனது காரின் வேகத்தை குறைத்து வலப்புறம் சிறிது திருப்பியதால் பல்சர் தப்பியது. என்னால் குட்டியானை வலப்புறம் சாலை தடுப்பில் இடிக்குமாறு சென்று நின்றது, யாருக்கும் அடி இல்லை, சிறிது நேரத்தில் குட்டியானையில் வந்தவர் என்னிடம் "அறிவில்லையா என ஆரம்பித்து சண்டை போட,  நான் பல்சர்காரன் குறுக்கே வந்தான் அவன இடிச்சா  அவன் உயிருக்கு ஆபத்து ஆனால் உங்க வண்டிய இடிச்சா நம்ம ரெண்டு வண்டிக்குத்தான் அடிபடும் அதான்" என்று கூறினேன். அவர்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை, அவர்களுக்கு மனித உயிரை விட குட்டியானை அடிபடக்கூடாது என்றுதான் நினைப்பு. அடுத்து என்ன வண்டியில் பாட்டு சத்தத்தை அதிகம் வைத்து சன்னலை மூடினேன். இருந்தும் அந்த குட்டி யானை ஓட்டுனர் என்னை இடிக்குமாறு சென்று ஒதுக்கி விட்டு சென்றார், இதில் யாருக்கு அறிவில்லை என தெரியவில்லை. பல்சர் ஓட்டுனர் செஞ்ச தப்புக்கு யாரெலாம் டென்சன் ஆகாரங்க பாருங்க.

சாலையில் இரு சக்கரமவாகனம் ஓட்டுபவர்கள்  சிலர் மெதுவாக பாதுகாப்பாக செல்கின்றனர் ஆனால் அவர்கள் வலது ஓரமாகவோ இல்லை இடது ஓரமாகவோ சென்றால் மற்ற வண்டிகள் முன்னால் செல்லலாம்.  ஒரு சிலர் நாடு சாலையில் பின்னால் வரும் வாகனத்தை செல்ல விடாமல் ஒதுங்காமல் செல்கின்றனர்.  இருசக்கரவாகனம் ஓட்டிவிட்டு கார் ஓட்டும்போது மட்டுமே நாம் பைக்கில் செல்லும் போது செய்யும் தப்புகள் தெரிகின்றது.

அண்ணன் ஜாக்கி கண்டிப்பாக இத ஒத்துகொள்ள மாட்டார், ஒரு நாள் அவர்க்கு கண்டிப்பா தெரியும் :)

ராசா டிரெஸ்ஸ கழட்டிட்டு அடுத்து யார் டிரெஸ்ஸ கழட்டலாம் என்று எல்லோரும் கிளம்பிவிட்டனர், சொல்றதுக்கு ஒன்னும் இல்ல கூடிய விரைவில் இதை மறைக்க(மறக்க) தமிழ்நாட்டில் ஏதும் பெரிய சம்பவம் நடக்கலாம்,உள்மனசு சொல்லுது மக்களை திசை திருப்ப வேறு எதுவும் செய்து விடுவாங்களோ என பயமா இருக்கு.

17 comments:

Yoga.s.FR said...

இப்படி ஒரு தமிழ்க் கொலையை இன்று தான் தமிழ்மணத்தில் பார்த்தேன்!இதில் பயணக்கட்டுரை வேறு எழுதப்போகிறீர்களா?விளங்கிடும்!!!!!!!!!!!!!!!!!

DHANS said...

மன்னிக்கவும் சிறிது பிழைகள் இருக்கலாம் அதற்காக கொலைகாரன் பட்டம் எல்லாம் எதுக்கு அதெல்லாம் பெரியவங்க செய்யறது
நமக்கு எதோ தமிழ் அடிதடி, வெட்டுகுத்து என பட்டம் கொடுங்கள் போதும்... கண்டிப்பாக பயணக்கட்டுரை வரும்.

Yoga.s.FR said...

தாரளமாக எழுதுங்கள்!யார் வேண்டாமென்று சொல்லப் போகிறார்கள்?உங்கள்"ப்ளாக்"!எழுதப்போவது நீங்கள்!யாரும் இந்த "விளைச்சலை"யே படித்ததாகத் தெரியவில்லை!இதில் "பயணக் காட்டுரை" எழுதினால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

DHANS said...

//தாரளமாக எழுதுங்கள்!யார் வேண்டாமென்று சொல்லப் போகிறார்கள்?// என்னமோ நீங்க வேண்டாம் என்று சொன்னால் நான் எழுதாமல் விடுவது போல நான் எழுதுவது எனக்காக இதை பலமுறை தெரிவித்தாயிற்று


//உங்கள்"ப்ளாக்"!எழுதப்போவது நீங்கள்!யாரும் இந்த "விளைச்சலை"யே படித்ததாகத் தெரியவில்லை!// நான் எழுதுவதையும் எதோ ஒரு முப்பதுபேர் படிக்கிறாங்க என்று நினைக்கிறேன், அட நீங்க கூட இப படிச்சுட்டு தான வந்துருக்கீங்க.... யாரும் படிப்பாங்க இல்லை படிக்க மாட்டாங்க, சில பேர் தப்பு சொல்வாங்க சிலபேர் கிண்டல் செய்வாங்க என்று நினைத்து நான் எழுதவில்லை, நான் எழுதுவது எனக்காக மற்றவர்களை நான் வற்புறுத்தி படிக்க சொல்வதில்லை, எழுத்துப்பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன, முடிந்த வரை தவிக்க முயற்சி செய்கிறேன்.


//இதில் "பயணக் காட்டுரை" எழுதினால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! // அய்யா மன்னிச்சுக்குங்க, நமக்கு தமிழ் ஓரளவுக்கு தெரியும் நீங்க தப்பு தப்ப சொல்லிக்குடுக்காதீங்க

தராசு said...

பயணக் கட்டுரையா???? கலக்கு தம்பி.

இந்த சினிமாவெல்லாம் பார்த்துட்டு எதுக்கு டென்ஷன் ஆகற, எல்லாம் சும்மா லுல்லூலாயிக்குப்பா, அதையெல்லாம் பெரிசா எடுத்துகிட்டு, நீங்களே அவிங்கள பெரிய மனுஷன் ஆக்கீருவீங்க போலிருக்குதே.....

//நாம ஊர்ல இல்லாத நாளில செம மழை சென்னைல//

ஆமா, நல்லவங்க இருக்கற எடத்துலதான் மழை பெய்யும். நீங்க வெளீல போயிட்டீங்க, உடனே மழை...

தராசு said...

யாருப்பா அது யோகா,

எந்தப் பாட்டையும் படிச்சவுடன் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் பரிசுத் தொகையை குறைச்சுக்கணும். ஆதுக்குன்னு சொல் குத்தம், பொருள் குத்தம்னு லிஸ்ட் எல்லாம் போடக் கூடாது.

DHANS said...

//பயணக் கட்டுரையா???? கலக்கு தம்பி.// மக்கள் ஆசைப்படறாங்க

இந்த சினிமாவெல்லாம் பார்த்துட்டு எதுக்கு டென்ஷன் ஆகற, எல்லாம் சும்மா லுல்லூலாயிக்குப்பா, அதையெல்லாம் பெரிசா எடுத்துகிட்டு, நீங்களே அவிங்கள பெரிய மனுஷன் ஆக்கீருவீங்க போலிருக்குதே.....// டென்சன் ஆக்கிடறாங்க, நல்ல படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு, களவாணி படம் தான் கடைசியா பார்த்த நல்ல படம். இவங்க பண்ற கூத்துக்கு ஆளாளுக்கு ஒரு டிவி ல வந்து பேசறது மட்டும் கொறையல

//ஆமா, நல்லவங்க இருக்கற எடத்துலதான் மழை பெய்யும். நீங்க வெளீல போயிட்டீங்க, உடனே மழை...// அப்ப ஊர்ல என்னைத்தவிர எல்லோரும் நல்லவங்களா?

DHANS said...

//எந்தப் பாட்டையும் படிச்சவுடன் எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் பரிசுத் தொகையை குறைச்சுக்கணும். //எதோ பார்த்து கொஞ்சம் போட்டு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்

Yoga.s.FR said...

உங்க ப்ளாக்கு இன்னிக்குத் தான் கண்ணுல பட்டுச்சு!புல் மீல் அப்பிடீன்னு இருந்திச்சா?சரி என்ன தான் எழுதியிருக்காங்களோ பாத்துடலாம்னுட்டு படிச்சேன்!அப்போ தான் தெரிஞ்சிச்சு,இது ஒண்ணும் "அது"இல்லேன்னு!(அதாங்க "புல் மீலு")ரொம்பத்தான் டென்சன் ஆவுறீங்க!அதுல வேற ஜாக்கி அண்ணனை இழுக்குறீங்க!அவரும் ஒங்கள மாதிரி தானே?தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்காரு!நீங்க ஒங்களுக்கெ எழுதி நீங்களே படிச்சுக்குங்க!மழை பத்தி நான் எதுவும் சொல்லல!மழைக்கு அப்புறமா எதுவோ மொளைக்குமாமே,உண்மைங்களா???????(காளான்?)

DHANS said...

// அப்போ தான் தெரிஞ்சிச்சு,இது ஒண்ணும் "அது"இல்லேன்னு!(அதாங்க "புல் மீலு")ரொம்பத்தான் டென்சன் ஆவுறீங்க!//
"ஓ" நீங்க அத எதிர்பார்த்து வந்துதான் ஏமாந்து டென்சன் ஆனீங்களா?? என்னங்க பண்ண நான் ஒன்னும் புத்தனோ காந்தியோ இல்ல, எதுக்கும் டென்சன் ஆகாம இருக்க. விடுங்க அரசியல இதெல்லாம் சாதாரணம்.

//அதுல வேற ஜாக்கி அண்ணனை இழுக்குறீங்க!அவரும் ஒங்கள மாதிரி தானே?தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்காரு//

நம்ம ஜாக்கி அண்ணன் நிறைய தடவ பைக் ஓடும்போது நடந்தத எழுதுவார், அதுல கார் ஓடுறவங்க மட்டும் செய்யும் தப்பு எல்லாத்தையும் சொல்லுவார், நானும் பின்னூடத்துல அதுக்கு பதில்கொடுப்பேன். இது வழக்கமா நடக்கறது தான், நான் கார் ஓட்டுபவர்களை ஆதரிப்பேன், அவர் பைக் ஓட்டுபவர்களை ஆதரிப்பார், இதுல அவர இழுக்க ஏதும் இல்லை. நானும் கூட அவர் ரசிகன் தான். அவரே டென்சன் அகல நீங்க ஏங்க??

அய்யா நானே எழுதி நானே படிக்கறேன் இல்ல யாரோ படிக்கரறாங்க விடுங்க, அதுக்கப்புறம் நமக்கு இந்த காளான் பத்தியெல்லாம் ரொம்ப தெரியாதுங்க, மழை சமயத்துல காளான் முளைக்கும்ங்க, நம்மூர்ல கூட சொல்வாங்க "நேத்து பெஞ்ச மழைக்கு இனிக்கு முளைச்ச காளான்" என்று. நீங்க நிறைய காளான் பாத்து இருப்பீங்க என்று நெனைக்கறேன். உங்களுக்கு தெரியாததா?

Yoga.s.FR said...

இங்கயெல்லாம் காளான் பாக்குறது ரொம்ப அபூர்வங்க!சூப்பர் மார்க்கட்டில பாக் பண்னி வச்சிருப்பாங்க!இல்லேன்னா டின்னுல(டின்னு கட்டுறது இல்லீங்க!)அடச்சு விப்பாங்க!அது கூட வேற நாட்டிலையிருந்து தாங்க வரும்!மத்தப்படி காளான் ஊரில பாத்ததோட சரி!மத்தப்படி புல் மீலுன்னா இன்னாங்க?"அதை" எதிர்பாத்து வந்தீங்களோன்னு நக்கலா வேற கேக்குறீங்க?ஜெண்டில்மேன்னு நெனைச்சேன்!இப்புடிக் கவுத்துட்டீங்களே?சும்மா ஜாலியா சண்ட போடலாம்னு வந்தா "அந்த"மாதிரியான ஆளுன்னு எட போட்டூட்டீங்களே,தல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!(பி.கு:நான் வெளி நாட்டில் வாழும் ஒரு ஈழத்து உறவு!யாருப்பா அது யோகா?என்று ஒரு அன்பர் 'தராசு' கேட்டிருந்தார்.அவருக்காக இந்த விளக்கம்)

DHANS said...

//இங்கயெல்லாம் காளான் பாக்குறது ரொம்ப அபூர்வங்க!சூப்பர் மார்க்கட்டில பாக் பண்னி வச்சிருப்பாங்க!இல்லேன்னா டின்னுல(டின்னு கட்டுறது இல்லீங்க!)//
ஓ நான் கூட பார்த்துருக்கேன், அதில் ருசியே இருக்காது :)
டின்னுலாம் கட்டிடாதீங்க நான் அவ்ளோ பெரிய ஆள் இல்லீங்கோ

மத்தப்படி புல் மீலுன்னா இன்னாங்க?"அதை" எதிர்பாத்து வந்தீங்களோன்னு நக்கலா வேற கேக்குறீங்க?ஜெண்டில்மேன்னு நெனைச்சேன்!இப்புடிக் கவுத்துட்டீங்களே?
நீங்க சாப்பாடு குறிப்பு எதிர்பார்த்து வந்தீங்கன்னு நான் நெனச்சேன், அட நீங்க வேற நானும் ஜெண்டில்மேன் ஆக இருக்க முயற்சி செய்யறேன் ஆனா என்னால இந்த வாய கட்டுப்படுத்த முடியல, கவுதுடலாம் இலீங்கோ....

//சும்மா ஜாலியா சண்ட போடலாம்னு வந்தா "அந்த"மாதிரியான ஆளுன்னு எட போட்டூட்டீங்களே,தல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!( //

ஐயோ சத்தியமா நான் அப்படியெல்லாம் நினைக்கல, நிசமா நீங்க சாப்பாடு குறிப்புன்னு சொல்ல வந்தீங்க என்று நினைத்தேன் , எதுன்ன தப்புன மன்னிச்சுக்குங்க.... நானும் விளையாடத்தான் செய்தேன். விடுங்க தல எல்லாம் சகஜம்

Yoga.s.FR said...

சரிங்க புரிஞ்சுக்கினேன்!சின்னதா ஒரு அட்வைசு!ரொம்பவும் பொறுமையா விசப்பலகேல தட்டுங்க,சில சமயம் காலு வேற அதிகமா வந்துடுது!மத்தப்படி பெரிசா ஒண்ணும் கெடயாது!

DHANS said...

சொல்லிட்டீங்கல்ல செஞ்சுட்டாப்போகுது, நம்ம விசைப்பலகைக்கு கொஞ்சம் வயசு ஆகிடுச்சு, இனி பார்த்துக்கொள்கிறேன் :)

Unknown said...

குற்றம் கண்டே பெயர் வாங்கும் புலவர்களும் பலர் இருக்கிறார்கள். நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதும் அவர்களுக்கு புரியும் என்றாலும் அந்த மாமியார் மனப்பான்மை(பெருந்தன்மை) அவர்களை விடுவதில்லை.என்றாலும் வாழ்க அவர்கள். உங்களுடைய எழுத்து நடை நன்றாக இருக்கிறது

DHANS said...

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இனியவன். தவறுகளை சொன்னால்தான் திருத்த முடியும் அதனால் இனி முடிந்தவரை தவறு இல்லாமல் எழுதப்பழகி வருகிறேன்.

bandhu said...

நீங்கள் எழுதியதில் தமிழில் தவறு ஏதும் தெரியவில்லை. இருந்தாலும் எழுத எழுத பக்குவப்பட போகிறது. நன்றாக - இலக்கண பிழை இல்லாமல் எழுத தெரிந்தவர்கள் தான் எழுதவேண்டும் என்றால் பலர் எழுத முடியாது. போக போக பிழைகள் மறைந்து போகும். நிறைகள் நிறைந்தும் போகும்.

சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். அது தான் தேவை என்று நினைக்கிறேன். தொடருங்கள், பயண கட்டுரை உள்பட!