திடீரென வரும் வெள்ளி அன்று ஊட்டி செல்லலாம் என முடிவெடுத்துள்ளோம்,வழக்கம் போல் எல்லோரும் செல்லும் இடங்களுக்கு செல்லாமல் இந்த முறை சிறிது வேறு இடங்களுக்கும் செல்லலாம் என நினைத்துள்ளோம்,
அவலாஞ்சி, சென்று அங்கிருந்து அப்பர் பவானி வரை சென்று மறுபடியும் திரும்ப முடிவெடுத்துள்ளோம் இதற்கு வன இலாகாவிடம் அனுமதி பெற வேண்டும், ஊட்டி சென்று அனுமதி கூறலாம் என நினைக்கிறோம், பதிவர்கள் எவரும் இதற்கு முன்னால் இங்கு சென்று வந்திருந்தால், அவர்களது ஆலோசனை தேவைப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த இடத்திற்கு நண்பன் ஒருவன் துணையுடன் சென்று வந்தோம் அப்போது அவன் அனுமதி பெற்றுதந்தான். தற்போது அவன் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அவனிடம் உடனடியாக உதவி கேட்க முடியவில்லை. ஊட்டியில் வேறேதும் வித்தியாசமான அனைவரும் போகாத நல்ல இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
சென்னையில் இருந்து காரில் வியாழன் காலை கிளம்புகிறோம், வெள்ளி சனி இரண்டு நாளும் ஊட்டியில் இருக்க திட்டமிட்டுள்ளோம்.
வன இலாகா அனுமதிக்கு வேறு எதுவும் செய்ய வேண்டுமா என தெரியவில்லை, எங்கள் விருப்பம் இயற்க்கை காட்சிகளை பார்த்துவிட்டு திரும்பி விடுதல் மட்டுமே. வேறு எதுவும் ஆலோசனை இருந்தாலும் தெரிவிக்கவும். ஆலோசனை அளிக்க விரும்புபவர்கள் என்னை 9940685415 என்ற எண்ணிலும் dhans4all@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment