Thursday, August 11, 2011

வருசத்துக்கு நாலு தான்


சமீபகாலமாக பெட்ரோலியப் பொருட்களுக்கு மானியத்தை நிறுத்தப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இவர்கள் மானியம் கொடுக்கிறோம் என்பதே ஒரு கேலிக்கூத்து, அதை விடுங்க, ஏற்கனவே இருக்க விலைவாசில பெட்ரோல் விலைய தாறுமாறா ஏத்தி அப்பர் மிடில் கிளாஸ் மக்களைக்கூட மிடில் கிளாஸ் மக்களாக மாற்றி வைத்துள்ளனர். டீசல் விலைய கூட்டி விலைவாசிய ஏத்தி வச்சு இருக்காங்க, சரி இதெல்லாம் சொன்னா பலர் ஆதரவாகவும் சிலர் எதிப்பாகவும் வருவாங்க. சமையல் எரிவாயுவ ஒரு பத்து ஆண்டுக்கு முன்னாடிதான் அரசு அதிகமா முன்னிறுத்தியது, மக்கள் சமையல் ஏரிவாயுவ பயன்படுத்தணும் என கேட்டுக்கொண்டது, பின்னர் அவர்களே மக்களுக்கு அதிகம் சென்றடையும்படி பார்த்துக்கொண்டனர் எல்லாம் மிகச்சரி ஆனால் இப்போது மானியத்தை குறைக்கணும் விலையைக்கூட்டனும் என்றால் எப்படி?


இப்போது ஒரு யோசனையை கொண்டு வந்துள்ளனர், அதாவது நாலு சிலிண்டர்க்கு மேல் மானிய விலை கிடையாதாம், எந்த கணக்குல நாலு சிலிண்டர் என சொல்றாங்க? ஒரு குடும்பத்துல இருவர் மட்டும் இருந்தால் வருடதுக்கு நாலு சிலிண்டர் போதும், அதுவே குழந்தைகள் இருந்தால் அதிகம் தேவைப்படும், எப்படியும் கொஞ்சம் சிக்கனமாக இருந்தால் முடிந்த வரை சமாளித்து விடலாம், இதெல்லாம் தனிக்குடித்தனம் பண்ணும் ஒருவர்க்குத்தான் பொருந்தும். ஆனால் இதே நிலையில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் கூட்டுக்குடும்பத்தில் எப்படி? அப்பா அம்மா மனைவி குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக தேவை அதிகரிக்கும் அப்போது இந்த நாலு சிலிண்டர் கணக்கு எப்படி ஒத்துவரும்?


ஒரு குடும்பத்துக்கு ஒரு குடும்ப அட்டை மட்டுமே வாங்க முடியும், குடும்ப அட்டை இருந்தால் மட்டுமே சமையல் சிலிண்டர் வாங்க முடியும் இப்போது ஒருவர் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால் அவரது செலவை அரசே அதிகரிக்க முடிவு செய்துள்ளது போல உள்ளது. அரசு இதுபோல மக்களின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்ட எரிபொருட்களை கண்ணா பின்னாவென விலை ஏற்றாமல் அதை வேறு வழிகளில் சமாளிக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

ஒரு சிறிய உதாரணம், பெட்ரோல் விலையை ஏற்றாமல் அதற்குப்பதில் மதுபானத்தின் விலையை அதிகமாக்கலாம் கூடவே புகையிலைப் பொருட்களின் விலையை அதிகமாக்கலாம். இதனால் மதுபான உபயோகம் குறைந்தாலும் லாபம் தான்.


பொதுப்போக்குவரத்தை இன்னும் வசத்திப்படுத்தி மக்களுக்கு அளிக்கலாம், நல்ல பேருந்தும் ரயிலும் எளிதில் டிக்கெட் கிடைத்து எங்கு சென்றாலும் தடையின்றி கிடைத்தால் ஏன் மக்கள் உபயோகப்படுத்த தயங்குவார்கள்?

நாளுக்குநாள் வெளிவரும் ஊழல் செய்திகளைப்பார்க்கும்போது இன்னும் இரு வருடத்தில் தமிழக தேர்தலில் வந்த முடிவுகள் இந்தியா முழுவதும் வர வாய்ப்புள்ளது போல தோன்றுகிறது. ஆப்பு வைக்க நான் ரெடி

1 comment:

தராசு said...

ரைட்டு,

சிங்கம் கிளம்பிடுச்சுடோய். எல்லாரும் ஓடுங்க