எல்லா போட்டிகளுமே கண்டிப்பாக பத்தொன்பதாவது அல்லது இருபதாவது ஓவரில் மட்டும் முடியும்.
எந்த அணியும் தொடர்ச்சியாக பல போட்டிகளை வெல்லாது, அப்படி வென்று கொண்டு வந்தால் பின்னர் பல போட்டிகளை தோற்கும்.
எந்த அணியும் இறுதிப்போட்டிக்கு எளிதில் தகுதி பெறாது, கடைசி லீக் போட்டிவரை யார் இறுதிப்போட்டிக்கு போவார்கள் என்று முடிவு தெரியாது.
போட்டியின் முதல் நாள் திடிரென்று ஏதும் ஒரு வீரர் காயம் அடைவார்கள், அதைப்பற்றிய காரசார விவாதம் நடைபெறும்.
வோடபோனின் புதிய ஜூ ஜூ விளம்பரம் வெளிவரும்.
புது புது வகையில் டிவி திரையை விளம்பரங்கள் மறைக்கும்.
விமான கம்பனிகள், மதுபான கம்பனிகள் இரண்டு மாதத்துக்கு நல்லா கல்லா கட்டும்.
புது சினிமா இரண்டு மதத்துக்கு பெருசா ஏதும் வெளிவராது.
ஏதும் ஒரு கிரிக்கெட் வீரருடன் புதுநடிகை போட்டிகளுக்கு பின்னால் கிசு கிசுக்கப்படுவார். அனேகமாக இந்த லிஸ்டில் இந்தியாவில் இருந்து கோலி இடம்பெறலாம்.
காலையில் இருந்து தூங்கும் வரை ஐபிஎல் பற்றியே அனைவரும் பேசுவார்கள். ஐபிஎல் போட்டியை திரையில் காட்டி பாரில் கல்லா கட்டுவார்கள்.
நல்லா விளையாடும் வீரர்களின் பார்ம் பறிபோகும், மொக்கையை விளையாடிய ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர் மறுபடியும் பார்ம் கிடைத்து அடுத்த ஒரு வருடத்துக்கு இந்திய அணியில் இரத்தை பிடிப்பார்கள்.
ஓய்வு பெற்ற வீரகளுக்கு டிவி சானலில் கிராக்கி ஏற்படும், 12th man க்கு தண்ணி கொண்டு வந்து கொடுத்தவன் எல்லாம் கிரிக்கெட்டை அலசி ஆராய்வான்.
துளிகள் தொடரும்....
2 comments:
செம நக்கல் ஆனாலும் அனைத்தும் உண்மை
நன்றி பாலா, இது போன்ற பல நக்கல்களை இனி இரண்டு மாதத்துக்கு
பார்க்கலாம்
Post a Comment