இன்னிக்கு வாழ்த்து சொல்லவில்லை என்றால் என்னிக்கு சொல்வது. என்ன தமிழ் புத்தாண்டா இல்லை விடுமுறை நாள் வாழ்த்துக்களா என குழம்பி ஐந்து வருசம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் ஆட்சி மாறினா விடுமுறை நாள் வாழ்த்துக்களும் கூற தமிழனை பழக்கிட்டாங்க.
எனக்கு தமிழ் புத்தாண்டு பிடிக்கும். நீங்க நள்ளிரவு 12மணிக்கு வெளியே சென்றாலும் ரோட்டில் குடிச்சுட்டு வண்டி ஓட்டுபவர்கள் மிக குறைவாக இருப்பார்கள், ஏன் புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்பவர்கள அதைவிட குறைவாக இருப்பார்கள். மாதக்கணக்கில் செய்தித்தாள்களில் பார்ட்டிக்கு விளம்பரம் இருக்காது, கொலைவெறி வண்டி ஓட்டுதல், காட்டுக்கத்தல் வாழ்த்துக்கள் இருக்காது, அட் ஏங்க போலியான வாழ்த்துக்கள் இருக்காது. வாழ்த்துக்களும், பெருமைகளும் குறைவாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கும்.
ஐ.பி.எல்க்கு நடுவில் தமிழ் புத்தாண்டு நசுக்கி சின்னாபின்னமாக்கப்பட்டாலும் உண்மையான சில வாழ்த்துக்களில் கம்பீரத்துக்கு குறைவில்லாமலே இருக்கிறது. அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் பெயர் மன்மத வருடமாம், நன்றாகவே இருக்கிறது.
2 comments:
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
nandri , belated wishes
Post a Comment