Monday, December 6, 2010

புல் மீல்ஸ் -3

விக்கிலீக்ஸ் ஊரையே ஒரு உலுக்கு உலுக்கிக்கொண்டு இருக்கிறது, அமெரிக்க  ட்ரவுசர்  கழண்டு போய் ரொம்ப நாள் ஆச்சு, அத இப்போ ஊருக்கே படம் புடிச்சு காட்டி இருக்கிறது விக்கிலீக்ஸ்.  இன்னும் பல ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 
அப்படியே நம்ம 2G  ஊழல் பத்தியும் ஆவணங்களை வெளியிட்டா நல்ல இருக்கும். யாராவது அந்த விக்கிலீக்ஸ் ஓனருக்கு மெயில் அனுப்பி இந்த டாகுமென்ட் எல்லாம் லீக் பண்ண சொல்லுங்கப்பா.

ரத்த  சரித்திரம் எதிர்பார்க்கப்பட்ட படம் எந்த அளவுக்கு நான் எதிர்பார்த்தேனோ அதை பூர்த்தி  செய்துள்ளது என்று நினைக்கிறேன் ரத்த சரித்திரம் போகலாம் என நினைத்து சனிகிழமைமுடிவு  செய்து கடைசியில் சிக்கு புக்கு பார்த்தாயிற்று. படம் நல்லாத்தான் இருக்கு, ஜாலியா போகுது ஆனாலும் ஏனோ மனசுல நிக்கவில்லை.  அப்பா ஆர்யா நல்லா இருக்கார், பிளாஷ் பேக் காட்சிகள் நன்றாக இருந்தன. என்ன இருந்தாலும் ஜீவா படம் அளவுக்கு வரல... அது மாதிரியே கலர்புல் படமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர்.

மந்திரப்புன்னகை படம் பார்த்தேன், சொல்லத்தெரியல என்னை மிகவும் கவர்ந்துடுச்சு. படத்துல அந்த கதாநாயகன் பாத்திரம் என்னைக்கவர்ந்தது. இயக்குனருக்கு கண்டிப்பாக பலவற்றை தேடிப்படிக்கும் பழக்கம் உள்ளது. அவரின் கதாநாயகன் குணம் அவர் படித்த எதோ ஒன்றின் ஈர்ப்பு என்று என்னால் நிச்சயம் சொல்ல முடியும் கண்டிப்பா. எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தா பலருக்கு படம் புடிக்காது அதனால் இந்தப்படத்தின் வெற்றி எப்படி என்று எனக்கு தெரியவில்லை. கடைசி இருபது நிமிடங்கள் எனக்கு பிடிக்கவில்லை.

எந்திரனுக்குப்பிறகு உருப்படியா ஒரு படமும் இன்னும் வெளிவரவில்லை, எல்லாம் மொக்கைப்படமாக வந்துகொண்டு இருக்கின்றது.யாராவது ஒரு நல்ல ஹிட் படத்த குடுங்க ப்ளீஸ்.  பார்க்க நாங்க ரெடி படம் வெளியிட நீங்க ரெடியா ?

ஈசன் படம் பாட்டு கேட்டேன், நன்றாக இருக்கின்றது, எனக்கு பிடித்த பாடல் "இந்த இரவுதான்" என்னும் பாடல் மற்றும் "ஜில்லா விட்டு"என்னும் கிராமியப்பாடல். நன்றாக இருக்கிறது, டிரைலர் கூட மிரட்டலாக இருக்கிறது. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன் சசிக்குமாரிடம் இருந்து பார்க்கலாம்.

"விடாமுயற்சி விஸ்பரூப வெற்றி" கண்டிப்பாக உண்மை, என் நண்பன் ஒருவன் கடந்த வெள்ளிக்கிழமை IITயில்  Phd  சேர இறுதிக்கட்ட நேர்முக தேர்வை வெற்றிகொண்டுவிட்டான். என்ன  நண்பன் முனைவர் பட்டம் பெறுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதற்கெல்லாம் அவனது விட முயற்சியும் அவன் வாழ்வில் சந்தித்த சில கருப்பு நாட்களும் உந்து சக்தியாக இருந்தது எனக்கு தெரியும். வாழ்த்துகள்    நண்பா. 

லாரி ஓனர் எல்லோரும் போராட்டம் நடத்துறேன்னு சொன்னாங்க அப்பவே தெரியும் கண்டிப்பா இது நடக்காதுன்னு. அதுபோலவே உடன்படிக்கை ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. நல்லா விஷயம் தான் மறுபடியும் பெட்ரோல் தட்டுப்பாடு, காய்கறி விலை ஏற்றம் என நம்மளால தாங்க முடியாது சாமி.  

குடும்ப அட்டை பற்றி பேசும்போது நண்பர் சொன்னது, "நமக்கெல்லாம் எட்டு பக்கத்துல ரேசன் கார்டு இருக்கு ஆனா நம்ம ஊர் பெரிய தலைவர் ரேசன் கார்ட பாக்கணும் எப்படியும் அவர் ஒருத்தர்க்கு மட்டும்  எண்பது பக்க கட்டுரை நோட்டுல தான் ரேசன் கார்டு இருக்கும் போல" என்று.  நெனைக்கும்போதே கண்ணக்கட்டுதே...

மழை போட்டு உலுக்கிக்கொண்டு இருக்குது சென்னைல, பத்து நாளா ஊர்ல பெய்த மழையைப்பற்றி இந்த நம்ம ஊரு சில்வண்டு செய்தி சேனல்களுக்கு தெரியல மூணு நாளா பெய்த சென்னை மழைக்கு மைக்க,கேமராவ தூக்கிக்கிட்டு கிளம்பிட்டாங்க தெருத்தெருவா. சென்னைய விட்டு வெளிய போக போக உங்களுக்கு நிறைய விஷயம் கிடைக்கும் என்று நான் சொன்னால் மட்டும் புரியுமா உங்களுக்கு.  வழக்கம் போல வீட்டுக்கு வெளிய தண்ணி. ஒரு நாள் இரவுல ஊரே தண்ணியாகி வெளிய போக முடியல.பார்க்கலாம் நாளைக்கு வேலைக்கு போக முடியுமா என்று. 

நான் எடுத்ததில் சில படங்கள்.. வேளச்சேரியில் மிதக்கும் ஒரு தெரு 


2 comments:

தராசு said...

ஏன்யா, நந்தலாலான்னு ஒரு படம் வந்து அதை எல்லாரும் புகழ்ந்து தள்ளி,.....ம்ஹூம், நீங்கெல்லாம் எந்த லோகத்துல இருக்கீங்களோ தெரியல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

நன்றி!