Monday, August 9, 2010

மறுபடியும் நான்......

மறுபடியும் நான்...... 

கொஞ்சம் அதிகம் இடைவெளி இருந்தாலும் மறுபடியும் நான் வந்துவிட்டேன்.

ரகளை நாளை முதல் ஆரம்பம் 

Wednesday, June 23, 2010

முதல் நாள் இன்று

இன்று சத்னா வந்து சேர்ந்தேன், ஒரு வழியாக முப்பது  மணி நேரம் பயணம் செய்து  இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன், இறங்கியவுடன் வெயில் என்னை ஊர் போய் சேர் என விரட்டியது, ஒரு வழியாக ஹோட்டல் வந்து சேந்து சபாட மூச்சு ஒரு தூக்கமும் போட்டு எழுந்தாச்சு.

ரயிலில் கூட வந்தது ஒரு தமிழ் குடும்பம், அந்த குட்டி பையன் போட்ட சாதத்துல எப்பட இறங்கலாம் என தோன்றியது,  எனக்கு பசங்க 
சத்தம் போட்ட புடிக்கும் ஆனா இந்த மாதிரி சதம் போதுமடா சாமி. ரயில் பயணம் என்றாலே புடிப்பது இல்லை, ரயில் என்றாலே எனக்கு புடிக்காதது நாதம் புடிச்ச கழிவறை. எந்த வகுப்பு என்றாலும் கழிவறை நிலை ஒரே  மாதிரி தான். லல்லு முதல் மம்தா வரை வந்தாலும் இந்த நிலை மாறாது. 

CNN IBN  ல இப்ப தமிழ் இந்தி என ஒரு கலந்துரையால் நடந்துகொண்டு இருக்கிறது இவங்க பேசறது எல்லாம் என்னமோ தமிழ் ஏலம் ஒரு மொழியே இல, இந்திதான் எல்லாம் பேசறாங்க. கடுப்பா வருது ஆனாலும் இந்தி தெரியாம இப நான் படர கசடத நினைக்கும் பூத்து என்ன பண்ண தெர்ல. 

இராவணன் படம் முதல் நாளே மாயாஜாலில் 220  ரூபாய் கௌது பார்த்தேன், மணி சார் உங்களுக்கு சொந்தமா கதை பண்ண தெரியாதா? ராமாயணம் எடுத்தா பரவால ஆனா   அதுக்காக எல்லா கதாபாத்திரத்தையும் இவங்க தான் இவங்கன்னு சப் டைட்டில் போட்டு சொல்லி இருக்கலாம் அதவிட கேவலமா இருதது நீங்க வச்சுருந்த சீன்ஸ்.

இரண்டு நாள் பயணத்தில் பாக்காம  வச்சு இருந்த பாம் ஏலம் பார்த்தேன்,  The saint  படம், ஜாக்கி அண்ணன் எழுதிருந்தார் இத பத்தி, பார்க்க நல்ல தான் இருந்துச்சு, ஆனா அண்ணன் சொன்ன மாதிரி அந்த லவ் எபிசொட் ஒன்னும் எனக்கு புடிக்கல.

அப்புறம் தி identity படம், நாம பலமுறை பார்த்த மல்டிபிள் பர்சனாலிட்டி படம் தான் ஆனா நல்ல தான் இருந்துச்சு, நம்ம தமிழ் படம் சிந்தனை செய், இது கூட நல்ல வந்திருக்க வேண்டிய படம் ஆனா ஹீரோவ ஏன் ஆண்மை இல்லாதவனு காடனும் நு தெர்ல.  படம் பார்க்கலாம், அந்த பார் பையனா நடிக்கும் தம்பிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.

 வேற என்ன எழுத என்று தெரியவில்லை , இந்தி தெரியாம முதல் இரண்டு நாளை கழித்து விட்டேன், நாளை அலுவலக வேலை பார்ப்போம். 

Monday, June 14, 2010

இதோ வந்துட்டேன் மறுபடியும் வலையுலகத்துக்கு

இதோ வந்துட்டேன் மறுபடியும் வலையுலகத்துக்கு

அப்பப்ப கொஞ்சம் இடைவெளி விட வேண்டியது போய்டுது காரணம் எதுவும் இல்லீங்கோ எல்லாம் ஒரு சோம்பேறித்தனம்.  இவளவு நாள்ல பெருசா எதையும் பண்ணிடல, சில பல  நட்புகள் சில பல பிரிவுகள் கொஞ்சம் வேலை நிறைய செலவு என  வாழ்க்கை போய்கிட்டு இருந்துச்சு.

இனிக்கும் பெருசா எழுதி கிழிக்க போறது இல்லை சும்மா அள்ளி தெளிச்ச மாதிரி தோன்றாத எழுதறேன்.

இந்த வாரம் ஜாக்கி நடிச்ச (நம்ம ஜாக்கி இல்ல நம்ம ஜாக்கியோட தலை ஜாக்கி சான்) நடிச்ச கராத்தே கிட் படம் போனேன். தேவி தியேட்டர் கு பல நாள் கழிச்சு போனேன். தியேட்டர் மாறிடுச்சு ஆனாலும் நமக்கு செட் ஆகாது போல. படம் கொஞ்சம் மெதுவா போன மாதிரி இருந்தாலும் சூப்பரா இருந்துச்சு. வான் டாம் நடிச்ச ஒரு படம் நியாபகம் வந்துச்சு. பையன் அப்பன போலவே பின்னி பெடலெடுத்து இருக்கான்.
அந்த  attitude  சீன் ல ஒரு சிரிப்பு சிரிப்பான் பாருங்க சூப்பர். கதாநாயகிக்கு ஒரு கிச் கொடுத்துபுட்டு அப்புறம் பிரண்ட் என்று சொல்லிடறான். இதுவே தமிழ் படமா இருந்த ஒரு குத்து சாங் போட்டு  கடசில அவன் அம்மாவையும் ஜாகியையும் சேர்த்து வச்சுருபாங்க.

படம் முடிச்சு வேலைய வந்த ஒரு தம்மாதூண்டு  சந்துல வெளிய அனுபிச்சுடாங்க அங்க இருந்து வெளிய வரதுக்குள்ள போதும் போதும் என  ஆகிபோச்சு

இனிக்கு இது போதும் மீண்டும் நாளை பார்க்கலாம்

Tuesday, April 27, 2010

தற்காலிக விடுமுறைக்கு-மன்னிப்பு

சில காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை, கூடிய விரைவில் மீண்டு வருவேன் என எதிர்பார்ப்பில் இருக்கிறேன் 


Wednesday, April 14, 2010

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 

என்னதான் தேதிய மாத்தினாலும் மனச மாத்த முடியாது லீவ் விடலான தமிழ்ப்புத்தாண்ட மறந்துடுவோமா? 

Monday, April 12, 2010

எனக்குன்னு ஒரு பொண்ணு இனிமே பொறக்க போறது இல்லை-தொடர் பதிவு


எல்லோருக்கும் வணக்கம், பதிவுலகம் வந்து ரொம்ப நாள் ஆச்சு, ஆபிஸ்ல ஆணி கொஞ்சம் அதிகம் புடுங்க வேண்டியதால் வீட்டுக்கு வந்தா உடனே தூக்கம் வந்துடுச்சு, நம்மள அப்பாவி தங்கமணி ஒரு தொடர் பதிவு எழுத கூப்பிடிருந்தாங்க, நம்ம பதிவுலக இரண்டு வருட அனுபவத்துல தொடர் பதிவுக்கு கூப்பிட்டது இதான் முதல் தடவை, அதையும் ரணகலதுல ஆரம்பிக்கிறாங்க

//இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க //

கட்டிக்கபோற பொண்ணு எப்படி இருக்கணும் என எழுதணுமாம், இது எல்லாம் நானே எனக்கு மரண ஓலை எழுதி கொடுதுகரதுகு சமம், நாளைக்கு நம்ம கட்டிக்கற பொண்ணு இத பார்த்து அட பாவி அவனா நீ என்று கேட்டுவிட்டால்? 

இருந்தாலும் பரவால எதோ எழுதறேன், சம்பவம் நடந்த இடத்தில சம்பவம் நடந்த நேரத்தில் நான் அங்க இல்லை, இது முன்குறிப்பு.

நமக்கும் வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடாங்க, அதனால என்னனு கேட்கறீங்கள?  அட நீங்க வேற பொண்ணு எப்படி வேணும்நு கேட்டா சொல்ல தெரியலங்க, அவங்க கேட்ட நாள்ல இருந்து நாம பாக்கற பொண்ணு எல்லாம் நமக்கு புடிச்சு இருக்குங்க. 

ரொம்ப யோசிச்சு வீட்ல பொண்ணா  இருந்தா போதும் என சொலிட்டு வந்துட்டேன், இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஒரு அளவுக்கு யோசிசுகிற்றுகேன். நம்ம எதிர்பார்ப்புகள் கீழ கொடுத்து இருக்கேன், இதுல கொஞ்சம் பிராக்டிகலா இருக்கும் கொஞ்சம் மொக்கையாகவும் இருக்கும் எல்லாம் சேர்த்து கலந்து கட்டி அடிச்சுருக்கேன்.

வழக்கமா சினிமா ஹீரோயின் உட்பட எனக்கு புடிச்ச பொண்ணுங்க எதையும் என் நண்பர்களுக்கு புடிக்காது, எனக்கு நினைவு தெரிஞ்ச முதல் இன்னை வரை என்னை ஒரு கேலி பேச்சோடுதான் ஓட்டுவார்கள், ஏண்டா அவள போய் உனக்கு ஏன் புடிச்சு இருக்குனு, எனக்கும் தெரியாது ஆனா புடிச்சு இருக்கும், உதாரணம் மஜ்னு ஹீரோயின் "ரிங்கி கண்ணா"  அதன் பொண்ணுக்காக அந்த படத்தை  அடிக்கடி பார்ப்பேன், ஆனா என் நண்பர்கள் யார்க்கும் புடிக்காது. இதிலிருந்து என்ன தெரிதுனா அழகுங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, எனக்கு புடிச்ச மாதிரி பொண்ணு வேணும், அத மத்தவங்களுக்கு புடிக்கலனா எனக்கு கவலையே இல்ல,

எனக்காக அவங்கள எதுக்கும் மாத்திக்க கூடாது, முக்கியமா அவங்க  காரெக்டர மாத்திக்க கூடாது, எனக்கு தெரிஞ்ச சிலர் அவங்க கணவருக்கு புடிக்காது என்பதற்காக அவங்க அடிப்படை குணத்தை கூட மாத்திக்கொண்டு உள்ளனர், அது நமக்கு தேவை இல்லை.

முடிவெடுக்கறதுல என்னமாதிரி ஒரு ஆள் இருக்க முடியாது, எப்ப என்ன முடிவு எடுப்பேன் என தெரியாது அதனால நல்ல தீர்மானமா முடிவெடுக்க தெரிஞ்சு இருக்கனும்.

நம்ம சம்பளத்துல சென்னைல குடும்பம் நடத்தறது ரொம்ப கஷ்டம், நம்ம ஒருத்தனுக்கே இப்ப தண்ணி காட்டுது, இதுல இன்னொரு பொண்ணு வந்து ஐயோ நெனச்சு பார்த்தாலே மயக்கம் வருது அதனால பொண்ணு கண்டிப்பா வேலை செய்யணும். ( பெண்ணுரிமை, அது இதுன்னு என்கிட்டே சண்டைக்கு வந்துடாதீங்க, என் சொந்த அனுபவத்துல சொல்றேன் எல்லா பொண்ணுங்களுக்கும் கண்டிப்பா ஒரு பினான்சியல் சுதந்திரம் வேணும்)

நம்ம விட அதிகமாவோ  கம்மியாவோ சம்பளம் வாங்கறது பிரச்சன இல்ல ஆனா ஒரு சாதாரண வேலை போதும் காலைல நேரமே போயிடு சக்கையா புழிஞ்சு எடுக்கற வேலை வேண்டாம்.

எல்லோரும் போல பொட்டி தட்டும் வேலையை விட, வித்தியாசமான வேலைய இருந்த நல்ல இருக்கும், ஹி ஹி 

எனக்கு ரொம்ப ஆசை எல்லாம் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை ஆனா சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் அதன் லிங்க் கீழே கொடுத்து உள்ளேன் அதையும் இதிலே சேத்துக்கங்க.


எனக்கு கார், ஆட்டோமொபைல் மேல ரொம்பவே ஆசை, டிரைவிங் மேல ரொம்ப ரொம்ப ஆசை அதனால் அடிக்கடி ஊர் சுத்துவேன், அதனால அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகணும் என்று சொல்வது தப்பு இல்ல, போகலாம் ஆனா கார்ல தான் போகணும். சும்மா பஸ்ல போகலாம், ட்ரைன்ல போகலாம் என்று சொல்லிக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. என்னுடைய passion  இது.

பொண்ணுக்கு டிரைவிங் தெரிஞ்சு இருக்கனும்.

சென்னைல இன்னும் வீடு வாங்கல அது வாங்கணும் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பைக் வாங்க பணம் சேமிக்கிறேன் அதை எக்காரணம் கொண்டும் குறை சொல்ல கூடாது. (ஆமாம் இருபத்தி அயிந்து வருடம் பழைய பைக்க ஒன்னேகால் லட்சம் கொடுத்து வாங்கணும் என்றால்)

இதெல்லாம் எஸ் வி சேகர் ஒரு படத்துல பத்து கண்டிசன் போடுவாரே அதுமாதிரி ஹி ஹி ஹி 

ஆதலால் அப்பாவி தங்கமணிக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், இது நான் சுயநினைவுடன் இருக்கும்போது எழுதிய மரண சாசனம், இதை எனக்கு எதிராக யாரும் பயன்படுத்தினால் அதற்கு தாங்கள் மட்டுமே பொறுப்பு.

எல்லா விதிகளும் தளர்த்திக்கொள்ளப்படும் தகுந்த பெண் கிடைத்தால் ஹி ஹி ஹி பொண்ணு கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்காம இப்ப.

Friday, March 12, 2010

பசி

பசி வந்தால் பத்தும் பறந்து போகும், உண்மைதான் 

இருபத்து ஏழு வருட அனுபவம் இருந்தும் உபயோகமில்லை...........எப்போது கற்றுக்கொள்வது வாழ்க்கையை?